மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

2.5.13

Astrology.Popcorn Post திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

 

Astrology.Popcorn Post திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

Popcorn Post No.43

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண், பெண் இருபாலருமே திருமணத்தைத் தள்ளிக்கொண்டே போகிறார்கள். ஒரு கால கட்டத்தில் அவர்கள் விரும்பினாலும் கூட திருமணம் அவர்களை விட்டுத் தள்ளியே நிற்கிறது.

என்ன காரணம்? எல்லாம் கிரகக் கோளாறுகள்தான்!

முன் காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்தார்கள். இப்போது படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு அதாவது பணம் சேர்த்து செட்டிலாக வேண்டும் என்ற நினைப்பு போன்றவற்றால் பலருக்கும் முப்பது வயதைக் கடந்தும்கூடத் திருமணங்கள் கூடி வரவில்லை.

யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் ஆக வேண்டாமா?

ஜாதகப்படி தாமதமான திருமணங்களுக்கு என்ன காரணம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் பலவீனமாக (வீக்காக) இருந்தால் திருமணம் தாமதமாகும். பலவீனம் என்பது நீசமாகி நிற்பதைக் குறிக்கும்.உதாரணத்திற்கு துலா லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய். அவன் அந்த ஜாதகத்தில் நீசம் பெற்றுக் கடக ராசியில் அமர்ந்திருப்பது, தீமையானது. திருமணம் தாமதமாகும்.

2. அதுபோல களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகள் இரண்டை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

பாப்கார்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் கண்மணிகளா!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

24 comments:

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
பாப்கார்ன் நன்றாக உள்ளது. மேலதிக விவரங்களுக்காக காத்திருக்கிறேன், நன்றியுடன் தங்கள் மாணவன், ரெங்கா.

kmr.krishnan said...

என் விஷயத்தில் இரண்டு விதிகளும் பலிக்கவில்லை. 7ம் அதிபன் சனைச்சரன்
அஸ்தங்கதம். சுக்கிரன் நீசமாகி கேதுவுடன் கூட்டணி.திருமண்ம் 25 வயதில்!
என்ன காரணம்? குருபகவான் நீசமானாலும் 7ல் அமர்ந்து தன் நேர்பார்வையில்
லக்னம்,ராசி இரண்டையும் வைத்து இருந்ததுதான். மேலும் நீச சுக்கிரனுக்கு நீச குருவின் பார்வை. நீசனை நீசன் பாப்பது நன்மையாம்! மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் ஆனார்!எப்படியோ நல்ல மனைவி காலாகாலத்தில் அமைந்து
குடும்பம் நன்றாக நடந்து விட்டது.நன்றி ஐயா!

சர்மா said...

சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி ஒயிலாக வந்தாளாம்
முகமாற்றம் வகுப்பறைக்கு வந்ததே
மகிழ்வுடன்
மனமாற்றம் வந்தவர்க்கு தந்ததே

Sattur Karthi said...

காலை வணக்கம், தங்கள் பதிவுக்கு நன்றி !

வேப்பிலை said...

வகுப்பறையில் நிற்பது யார்?
தனுசுவா?..

உட்கார்ந்து எழுதுவது
கணபதி அய்யா வா?

வாத்தியை கூர்ந்து கவணிப்பது
நமது லால்குடியார் தானே..

சின்ன பிள்ளைகள் இப்போ
சிறிது பெரிசாகியிருக்கிறார்கள்

மகளிர் அணி தனியாக வருமோ
மாற்றங்கள் வந்தால் சரிதான்

வகுப்பறை மாற்றத்திற்கு
வாழ்த்துக்கள்

Gowda Ponnusamy said...

நன்றி

சர்மா said...

ஆசிரியருக்கு வணக்கம்
லக்னத்தில் குரு+சந்திர

eswari sekar said...

vanakam .sir..7m..athipathi..pavakartri...yoguthil.erunthlam.lateaguma...

V Dhakshanamoorthy said...

.நன்றி!!

Unknown said...

வணக்கம் ஐயா,பாப்கார்ன் பொட்டலம் சிறியதாக இருந்தாலும்,அதில் உள்ள பாப்கார்ன் சுவையாகவே உள்ளது. நன்றி ஐயா.

J.PARANTHAMAN said...

7th house lord afflicted by malefic planet like rahu or ketu, saturn may be the reason for delayed marriage.

paulsam said...

6 மற்றும் 8 ம் அதிபதிகள் கடக லக்னத்திற்கு 3 ல் அமர்ந்தால் விபரித ராஜ யோகமா? அய்யா?.

Subbiah Veerappan said...

////Blogger renga said...
குருவிற்கு வணக்கங்கள்,
பாப்கார்ன் நன்றாக உள்ளது. மேலதிக விவரங்களுக்காக காத்திருக்கிறேன், நன்றியுடன் தங்கள் மாணவன், ரெங்கா.////

மேலதிக விவரங்கள் பின்னொரு நாள் பதிவாகும். நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
என் விஷயத்தில் இரண்டு விதிகளும் பலிக்கவில்லை. 7ம் அதிபன் சனைச்சரன்
அஸ்தங்கதம். சுக்கிரன் நீசமாகி கேதுவுடன் கூட்டணி.திருமண்ம் 25 வயதில்!
என்ன காரணம்? குருபகவான் நீசமானாலும் 7ல் அமர்ந்து தன் நேர்பார்வையில்
லக்னம்,ராசி இரண்டையும் வைத்து இருந்ததுதான். மேலும் நீச சுக்கிரனுக்கு நீச குருவின் பார்வை. நீசனை நீசன் பாப்பது நன்மையாம்! மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் ஆனார்!எப்படியோ நல்ல மனைவி காலாகாலத்தில் அமைந்து
குடும்பம் நன்றாக நடந்து விட்டது.நன்றி ஐயா!////

குரு பகவானின் பார்வை லக்கினத்தின் மீது விழுந்ததால், எல்லா நலன்களையும் உரிய காலத்தில் அவர் பெற்றுத்தந்துள்ளார். அவரை வணங்குங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger சர்மா said...
சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி ஒயிலாக வந்தாளாம்
முகமாற்றம் வகுப்பறைக்கு வந்ததே
மகிழ்வுடன்
மனமாற்றம் வந்தவர்க்கு தந்ததே////

வகுப்பறையின் புதிய பேனர் உங்கள் கண்ணில்தான் முதலில் பட்டுள்ளது. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger Sattur Karthi said...
காலை வணக்கம், தங்கள் பதிவுக்கு நன்றி !////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger அய்யர் said...
வகுப்பறையில் நிற்பது யார்?
தனுசுவா?..
உட்கார்ந்து எழுதுவது
கணபதி அய்யா வா?
வாத்தியை கூர்ந்து கவணிப்பது
நமது லால்குடியார் தானே..
சின்ன பிள்ளைகள் இப்போ
சிறிது பெரிசாகியிருக்கிறார்கள்
மகளிர் அணி தனியாக வருமோ
மாற்றங்கள் வந்தால் சரிதான்
வகுப்பறை மாற்றத்திற்கு
வாழ்த்துக்கள்////

மற்றவர்களை விடுங்கள். அந்தப் படத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் விசுவநாதன்!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

///Blogger சர்மா said...
ஆசிரியருக்கு வணக்கம்
லக்னத்தில் குரு+சந்திர////

இரண்டு சுபக்கிரகங்கள் லக்கினத்தில் உள்ளதே நன்மையானதுதான்!

Subbiah Veerappan said...

/////Blogger eswari sekar said...
vanakam .sir..7m..athipathi..pavakartri...yoguthil.erunthlam.lateaguma.../////

ஆமாம்! ஆமாம்!

Subbiah Veerappan said...

/////Blogger V Dhakshanamoorthy said...
.நன்றி!!/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா,பாப்கார்ன் பொட்டலம் சிறியதாக இருந்தாலும்,அதில் உள்ள பாப்கார்ன் சுவையாகவே உள்ளது. நன்றி ஐயா////.

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...


/////Blogger J.PARANTHAMAN said...
7th house lord afflicted by malefic planet like rahu or ketu, saturn may be the reason for delayed marriage/////.

ஆமாம் இது போன்று வேறு சில காரணங்களூம் உள்ளன. பிற்கு ஒரு நாள் விரிவாகப் பார்ப்போம். நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger paulsam said...
6 மற்றும் 8 ம் அதிபதிகள் கடக லக்னத்திற்கு 3 ல் அமர்ந்தால் விபரித ராஜ யோகமா? அய்யா?./////

3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.