மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.4.13

எத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்தான் போகிறார்கள்!எத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்தான் போகிறார்கள்!

மனவளக் கட்டுரை!

எனக்கு எத்தனை சொத்து இருக்கிறது தெரியுமா? என்று எகத்தாளம் பேசுகிறவர்களை நான் பார்த்திருக்கிறேன்

வாயைக் கிளறினால் விவரம் சொல்லுவார்கள்.

அண்ணா நகரில் ஐந்து கிரவுண்டில் வீடு. அம்பத்தூரில் 20 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகம். கோயம்பேடு அருகே ஒரு அடுக்குமாடி சொகுசுக் குடியிருப்பில் தலா இரண்டாயிரம் சதுர அடிகளைக் கொண்ட இரண்டு ப்ளாட்டுகள். வேளாச்சேரியில் இரண்டு வீடுகள். தி.நகர் பனகல் பார்க் அருகே ஒரு கமர்சியல் காம்ப்ளெக்ஸ். செள்கார் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஒரு கமர்சியல் காம்ப்ளெக்ஸ். கர்நாடகா மாநிலம் கூர்க்கில் 150 ஏக்கர் காஃபி எஸ்டேட். சேலத்தில் ஏற்காடு சாலையில் 25 ஏக்கரில் பெரிய மாந்தோப்பு....இப்படி அடுக்கிக் கொண்டே செல்வார்கள்.

எல்லாம் எப்படி வந்தன? பாதி பூர்வீகச் சொத்து. மீதி பலரை ஆட்டைபோட்டு சம்பாதித்தது. கலப்படம் செய்து கல்லாக் கட்டியது. ஊழல் செய்து உருவாக்கியது. கையூட்டு வாங்கிக் குவித்தது. கந்து வட்டியில் சேர்ந்த்து. அடுத்தவன் வயிற்றில் அடித்துச் சேர்த்தது. பங்குதாரனை படுக்கப்போட்டு ஏறிமிதித்து ஏற்றம் பாரத்தது என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்

கையில் ஆயிரக் கணக்கில் பணம் புரளும். உட்கார நேரம் இருக்காது. ஆசாமி பறந்து கொண்டே இருப்பார்.

நெப்போலியனைத் தெரியும். ஆனால் திருமூலரைத் தெரியாது. நெப்போலியன் என்பது பிரெஞ்சு மன்னனின் பெயர் அல்ல. ஆசாமி அனு தினமும் சாப்பிடும் சரக்கின் பெயர்.

திருமூலரின் ஒரு பாட்டை மட்டும் அவருக்கு விளங்கும்படி சொன்னால் போதும். ஆசாமி எகத்தாளம் பேசமாட்டார். ஆனால் சொல்வதற்கும் ஆள் இல்லை. சொன்னால் கேட்டுக் கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை

என்ன சொன்னார் திருமூலர்?

   "ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
        பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
   சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
        நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!"


ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு உடனே வைப்பது பெயர். அதே போல ஒருவன் இறந்து விட்டால் முதலில் நீக்கி விடுவது அவனுடைய பெயரைத்தான். வீட்டிற்குக் கேதம் கேட்க வருகிறவன், கதிரேசன் செட்டியாரை எப்பொழுது எடுக்கிறீர்ர்கள்? என்று கேட்க மாட்டான் - பாடியை (Body) எப்பொழுது எடுக்கிறீர்கள்? என்றுதான் கேட்பான். பிணத்தை எப்பொழுது எடுப்பீர்கள்? எங்கே கொண்டுபோய் எரிக்கப்போகிறீர்கள்? என்று பச்சையாகக் கேட்காமல், பாலீஷாக பாடியை எப்போது எடுக்கிறீர்கள் என்றுதான் கேட்பான். அதைத்தான் திருமூலர் பேரினை நீக்கிப் பிணமென்று கூப்பிடுவார்கள் என்று ‘நச்’ சென்று சொல்லியுள்ளார். சூரையங்காடு என்பது சுடுகாடு. அவனை எரிக்கும் இடம். இப்பொழுதெல்லாம் மின்மாயானங்கள் உள்ளன. சுடுகாட்டில் அஸ்தி வாங்குவதற்கு பத்து மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் மின்மாயனங்களில் இரண்டு மணி நேரத்தில் கொடுத்து விடுவார்கள்.

உற்றார், உறவினர் என்று கேதத்திற்கு வந்த சொந்தக்காரன் எல்லாம் உரக்க அழுதுவிட்டு என்ன செய்வானாம்? வீட்டிற்குத் திரும்பியவுடன், நான்கு வாளி தண்ணீரை தலைக்கு ஊற்றிக் குளித்து விட்டு அவனை மறக்க ஆரம்பித்துவிடுவானாம். அதைத்தான் நினைப்பு ஒழிந்தார்களே என்று சொல்கிறார் திருமூலர்

“நீரில் மூழ்கி என்று சொல்லியிருக்கிறாரே” அது என்ன என்கிறீர்களா? அந்தக் காலத்தில் பல ஊர்களில், சுடுகாட்டுக்குப் பக்கத்தில் நீர் நிலைகள், ஆறு, குளம், ஊருணி போன்றவை இருந்தன. இறந்தவனுக்கு இறுதிக் காரியம் பார்த்தபின் அங்கே மூழ்கிக் குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். அதைத்தான் அவர் அப்படிச் சொல்லியுள்ளார்.

யாக்கை நிலையாமை த்த்துவத்தைக் கவியரசர் கண்ணதாசன் இன்னும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்

“ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன??:”


எதுவுமே கூட வராது! வெறுங்கையுடன்தான் போக வேண்டும்!

வார்த்தைக்கு வார்த்தை ‘அய்த்தான்’ என்றோ அல்லது  ‘அத்தான்’ என்றோ அல்லது ‘என்னங்க... என்னங்க’ என்று அன்பொழுக அழைத்த மனைவி வரமாட்டாள். கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கிய பிள்ளைகள் வராது. முதலாளி, முதலாளி என்று வளைய வந்த வேலைக்காரன் வரமாட்டான். தலைவரே, தலைவரே என்று பணிவாக வந்த தொண்டன் வரமாட்டான். மாப்ளே அல்லது மச்சி என்று சொல்லி சரக்கடிக்கும் இடத்திற்கு ஒவ்வொரு முறையும் உடன் வந்த உற்ற நணப்னும் வரமாட்டான். மொத்தத்தில் யாருமே வரமாட்டார்கள். உன் ஆத்மா தனியாகத்தான் பயணிக்க வேண்டும்!

அதையும் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடலில் அழுத்தமாகப் பதிவு செய்தார்

“ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?”


வருகிறவன் சுடுகாடு வரைதான் வருவான். வாய்க்கரிசி போட்டவுடன், அங்கே வைக்கப்பெற்றிருக்கும் பானைக்குள் கயை நனைத்து சுத்த்ம் செய்து கொண்டுவிட்டுக் கிளம்பிப் போய்விடுவான். நம்ம கதிரேசன் தனியாகப் போகிறான்டா, அவன் எவ்வளவு நல்லவன். அவன் தனியாகப் போகக் கூடாது. துணைக்கு நானும் போகிறேன்டா என்று சொல்லி எரிகின்ற சிதையில் எவனும் ஏறிப் படுத்துக்கொள்ளமாட்டான்.

அதைத்தான் கவியரசர் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா என்று கேட்டார்

சரி, ஒன்றுமே வராதா?

நீ செய்த பாவ புண்ணியங்கள் வரும்! அதை வைத்துத்தான் உனக்கு அடுத்த பிறவிக்கான விசா கிடைக்கும். வரம் கிடைக்கும். அடுத்த பிறவியில் ஒரு வேளை மீண்டும் உனக்கு மனிதப் பிறவியே அமைந்தால், அந்தப் பிறவியில் உன் ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் அந்தக் கணக்கு பதிவாகி இருக்கும்!

அதைத்தான் “பற்றித்தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமுமே” என்று பட்டினத்தார் சொன்னார்

ஆகவே தெரிந்து பாவச் செயல்களைச் செய்யாதீர்கள். தெரியாமல் செய்வது நம் கையில் இல்லை. நம் காலில் ஒரு எறும்பு மிதி பட்டுச் செத்தால்கூட அது பாவம்தான்!  நாம் என்ன செய்ய முடியும்?

உங்களால் முடிந்த தர்மங்களை நிறையச் செய்யுங்கள்! பணம் இருப்பவர்கள் பணத்தால் தர்மங்களைச் செய்யுங்கள். பணம் இல்லாதவர்கள் மனதால், உடலால் தர்மங்களைச் செய்யுங்கள். சேவைகளைச் செய்யுங்கள். அப்போதுதான் எடுத்துள்ள பிறவி மேன்மையுறும்!

சரி, பதிவின் தலைப்பிற்கு வருகிறேன். எத்தனை சொத்துக்கள் இருந்தாலும், இறுதியில், செத்தவனை இருக்கின்ற சொத்துக்கள் ஒன்றில் வைத்துப் புதைக்க மாட்டார்கள். கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிலோ அல்லது பெஸ்ன்ட்நகர் மின் மாயானத்திலோ எரித்துவிடுவார்கள்.

பிறகு, செத்தவனின் நினைப்பைவிட வீட்டில் சொத்துச் சண்டைகள்தான் பெரிதாக இருக்கும். காப்பாற்றி வைத்துவிட்டுப் போன சொத்திற்காக செத்தவன் படத்தை வைத்து எவனும் பூப்போட்டுக் கும்பிடமாட்டான். ஏழைகள் வீட்டிலாவது, அதாவது ஒன்றும் இல்லாத வீட்டிலாவது கும்பிடுவார்கள். ஆனால் பணக்கார வீட்டில் அத்ற்கெல்லாம் நேரமிருக்காது.

அதுதான் வாழ்க்கை! அதனால் உங்களுடைய சொத்துக்களைப் பற்றி எகத்தாளம் கொள்ளாதீர்கள்.

நல்ல மனம் ஒன்றுதான் உண்மையான சொத்து. அதைப் பற்றி ஒன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------
18.4.2013ம் தேதியிட்ட பதிவிற்கு வந்த பின்னூட்டத்தை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்!

/////Blogger Ramkumar KG said...
    enadhu panivaana vendugol.
    punithamana paadamagiya jothidathil, idai sorugalaaga, asaiva jokugal vendame.
    Please don't publish sex jokes here guruji. this diminishes your fame which you have gained from 1000 good astrological lessons and devotional postings and devotional songs. this really hurts me sir.////


அன்பரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வகுப்பறையில் இனி, அசைவ நகைச்சுவைகள் வெளிவராது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

44 comments:

உணர்ந்தவை! said...

"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!"

நான்கே வரியில் என்ன ஒரு அழுத்தம் ! ஒன்று உங்களுக்கு சொல்ல வேண்டும்,
இந்த பாடலை நான் தனியாக படித்திருந்தால் அதனுடைய பொருளை மிக சரியாக உணர்ந்து கொள்வேனா என்று தெரியவில்லை, ஆனால் உங்களுடை நடையில் ஒன்றாக முடிகிறது !

உங்களுக்கும் விருப்பமிருந்தால் திருமூலரின் 3000 பாட்டுகளுக்கு உங்களின் நடையில் தெரிந்து கொள்ள ஆர்வம்.

திண்டுக்கல் தனபாலன் said...

திருமூலரின் வரிகளும், கவிஞர் கண்ணதாசன் அற்புதமான வரிகளையும் இணைத்துக் கொண்டது சிறப்பு... அவரவர் உணர வேண்டிய பல வரிகள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

eswari sekar said...

vanakam sir .. inrya mana valla katturai nanru ..

அய்யர் said...

ராம்குமாருக்கும் அதனை
ரம்மியமாக ஏற்ற வாத்திக்கும்

நன்றி..
நன்றி..

விருப்பமில்லாதவர்
வெளியேறுங்கள் என சொல்லாமைக்கு

தொடர்கிறது பதிவை
தொட்ட பின் ஊட்டம்

அய்யர் said...

பன்னிரு திருமுறையிலிருந்து
பதிவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி

///உங்களால் முடிந்த தர்மங்களை நிறையச் செய்யுங்கள்! சேவைகளைச் செய்யுங்கள்.///

இந்த கருத்துப்படி
இப்படி தர்மம் பெற வேண்டி

சிலர் இருக்க வேண்டுமா?
சிந்திக்க இப்படியும் இடமுண்டே

சேவை தருபவர் இருப்பதால்
சேமித்து விட்டு (உழைப்பை)

சோம்பேறியாக இருப்பவரை
சோதிக்க வேண்டி உள்ளதே..?

அடிப்படையை சொல்லிதாங்க
அதைத்தான் விரும்புகிறோம்

அழகுக்கு அலங்காரம் செய்வதைவிட
ஆரோக்கியத்திற்காக இருந்தால்

அழகு தானே வரும் கூடவே
ஆரோக்கியமும் வரும்

வழக்கம் போல் வரும்
வலமாக சுழலவிடும் பாடல்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்

மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்


பழனி. கந்தசாமி said...

ஐயையோ, என்னையும் எரிப்பார்களா? நான் அப்படியே சொர்க்கத்திற்குப் போகலாம் என்று இருக்கிறேனே, எதாச்சும் வழி இல்லீங்களா, பணம் எத்தனை வேண்டுமானாலும் கொடுத்திடறேன்.

துரை செல்வராஜூ said...
This comment has been removed by the author.
ஜி ஆலாசியம் said...

////எல்லாம் எப்படி வந்தன? பாதி பூர்வீகச் சொத்து. மீதி பலரை ஆட்டைபோட்டு சம்பாதித்தது. கலப்படம் செய்து கல்லாக் கட்டியது. ஊழல் செய்து உருவாக்கியது. கையூட்டு வாங்கிக் குவித்தது. கந்து வட்டியில் சேர்ந்த்து. அடுத்தவன் வயிற்றில் அடித்துச் சேர்த்தது. பங்குதாரனை படுக்கப்போட்டு ஏறிமிதித்து ஏற்றம் பாரத்தது /////

ஒருப் பொருளென கொள்ளத் தகாதவரை உலகமே பெரும் பொருட்டாக நினைக்கும் படிச் செய்யும் அந்தப் பொருளைத் தான் பெற்றிட எப்படியெல்லாம் மனிதன் பொய்யும் புரட்டும் கலந்து புதிது புதிதாகப் பணத்தை உண்டாக்குகிறான் என்பதை சும்மா "சுத்தி சுத்தி அடிச்சிட்டு" எத்தனை பணம் சம்பாதித்தாலும் பிணம் ஆனப் பின்பு அப்படி சம்பாதித்தப் பணம் எது வரப் போவதில்லை என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....

அருமையான மனவளக் கட்டுரை பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

துரை செல்வராஜூ said...

யதார்த்தம்... இப்படியெல்லாம் நல்ல வழிகாட்ட குருநாதர்கள் நமக்கு இருந்தும் வாய் ஒன்றைப் பேச, செவி ஒன்றை நாட, விழி ஒன்றைத் தேட - கருத்தழிந்து போகின்றதே!..

rajanblogs said...


என் போன்ற சிலரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கச் செய்த‌
திரு ராம்குமார் அவர்களுக்கும் , அதை பரிசீலித்து ஏற்றுக்
கொண்ட ஆசிரியருக்கும் நன்றிகள் பல...

Thanks a lot,

C Jeevanantham said...

Thank you sir,

சர்மா said...

வணக்கம் ஐயா,
அசைவ ப்பதிவுகளைப்பார்த்ததும் நான் மிகவும் மனவருத்த்மடைந்தேன்,ஆசிரியருக்கு மாணவன் திருத்தம் சொல்வது பாபம் என க்கருதி வாளாவிருந்தேன்,அதுமட்டுமல்லாது அந்தபதிவுகளைத்தவிர்த்தேன்.இன்றைய அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ராம்குமாருக்குப்பாராட்டும் ஆசிரியருக்கு அன்பான வணக்கமும்.
வாழ்க தங்கள் சேவை.

அண்ணாமலை..!! said...

"
கைநீட்டும் இல்லார்க் கிருந்துமே ஈயாதான்
பைநீட்டும் செல்வமெலாம் பாழ்!

என்றேனும் ஓர்நாளில் வீழும் உடல்நினைந்து
நன்றேனும் ஒன்றேனும் செய்!

பூசைசெய்தும் பூக்களினால் அர்ச்சித்தும் துன்பமா?கேள்!
ஆசைகளை நீக்கப் பழகு!

வீட்டிலே உள்ளவனைக் காணாமல் நீயுந்தான்
மேட்டிலே ஏறுவதும் ஏன்?

பணத்தினால் துன்பங்கள் நீங்குதல் இல்லை
மனத்தினால் என்றே உணர்!
"

__/\__

ponnusamy gowda said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.தாங்கள் வெளியிட்டிருந்த திரு.ராம்குமர் அவர்களது கருத்து,அதை ஏற்றுக்கொண்ட தங்களது மனப்பாங்கு போற்றத் தகுந்தது.பெருந்தண்மைக்கு நன்றி.திருமூலர் பாட்டும் அதன் விளக்க உரையும் அருமை.நடைமுறை வாழ்வின் உண்மை என்னவென்றால் நன்மை செய்யும் அனைவருமே ஏமாளிகளே.நண்மை செய்தவர்கள் நொந்து போகின்றனரே தவிர தன்னிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்,இப்பூவுலகில்?.....
அருமையான பதிவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.

Advocate P.R.Jayarajan said...

அழுத்தமான, யதார்த்தமான பதிவு...
நாம் செய்யும் நல்ல காரியங்களே உடன் வரும் சொத்துக்கள். அருமை. வாழ்த்துகள்...

kmr.krishnan said...

பன்னிரு திருமுறையில் திருமந்திரம் பத்தாம் திருமுறை. அதில் முதல் தந்திரத்தில் உபதேசம் என்ற 30 பாடல்களுக்கு அடுத்து யாக்கை நிலையாமை என்று 25 பாடல்களை வைத்தார். பின்னர் செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, உயிர் நிலையாமை என்று நிலையாமை பற்றி 4 தலைப்புக்கள்.
53 பாடல்கள் அனைத்தும் எழுத்தெண்ணிப் படித்து மனதில் பதிக்க வேண்டியவை.

"முன் போற சவத்துக்குப் பின்போற சவம்" என்பது எளிய சொல்லடை. சவ ஊர்வலத்திற்குப் பின்னர் போகும் சுற்றமூம் நண்பர்களும் ஒரு நாள் சவம் ஆகப் போகிறவர்களே.அதனை அவர்கள் உணராததுதான் பெரிய மாயை.

நல்ல கட்டுரை. நன்றி ஐயா!

arul said...

meaningful post

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
மானிடப்பிறவியில் கொண்டு வந்ததது ஒன்றுமில்லை, கொண்டு செல்வது ஏதுமில்லை இறைஅருள் ஒன்றே மறுபிறவியின் மகத்தான சொத்து,
அதுவும் பிறருக்கு தகக் தருனத்தில் செய்யும் உதவியே சிறந்த தருமம்
ஆகும்
நன்றி

அய்யர் said...

///ponnusamy gowda said...
நடைமுறை வாழ்வின் உண்மை என்னவென்றால் நன்மை செய்யும் அனைவருமே ஏமாளிகளே.நண்மை செய்தவர்கள் நொந்து போகின்றனரே தவிர தன்னிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்,இப்பூவுலகில்?//

ஆமாம் கோவையாரே..
அதைத்தான் சொன்னோம்

உதவி செய்பவர்கள் இருக்கும்வரை
உட்கார்ந்துபடி வாழ துடிப்பவருண்டு

வரிச் சலுகைக்காகவே
வங்கியில் அறக்கட்டளை கணக்கு
தொடங்கி நானும்
தொண்டாற்றுவதாக சொல்வதுண்டு

அதனால் தான் இந்த ஆண்டில்
அதனை கட்டுபடுத்திட

நிதியமைச்சகம் மாற்றம் செய்தது சரி
நிலைமை சீரடையுமா?

இரண்டு கால்களால் நடப்பது உண்மை
இரண்டும் ஒரே சமயத்தில் இல்லை

வலது கால் நடக்கும் போது
இடது கால் தாங்கும் அது போல்

மற்றது இதனை
மறப்பதால் மாற்றங்கள்..

சி(ப)லருக்கு ஏமாற்றங்கள்
சிந்திக்க சொல்லித் தரும் வரை

சிந்தனையில் மாற்றம் வராது
சில இடங்களில் வந்தாலும்

அது நிலைக்காது
அய்யர் சொல்வது புரிந்தால் சரி

உங்களுக்காக இந்த பாடலினை
உள்ளிருந்து எடுத்து தருகிறோம்

....
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்


நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

உலக யதார்த்தமான உண்மைகளை உள்ளது உள்ளபடி அழகாக மனதில் பதியுமாறு, உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

அய்யர் said...

இப்படி சொல்கிறார் ஒரு
இளைஞன்..

"எதையும் இறந்த பிறகு
எடுத்துச் செல்ல முடியாது"

"தெரியும்

அதனால் தான் இருக்கும் வரை
அனைத்தையும் அனுபவிக்கின்றேன்"

"அடுத்தவருக்கு கொடுத்தால் மட்டும்
அவர் எடுத்தா செல்லப் போகிறார்?"

சிந்திக்க சொல்லித்தராமல்
சிந்தனையை சரி செய்ய முடியாது

அப்படி செய்தாலும்
அது நிலைக்காதுSP.VR. SUBBAIYA said...

/////Blogger உணர்ந்தவை! said...
"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!"
நான்கே வரியில் என்ன ஒரு அழுத்தம் ! ஒன்று உங்களுக்கு சொல்ல வேண்டும்,
இந்த பாடலை நான் தனியாக படித்திருந்தால் அதனுடைய பொருளை மிக சரியாக உணர்ந்து கொள்வேனா என்று தெரியவில்லை, ஆனால் உங்களுடை நடையில் ஒன்றாக முடிகிறது
உங்களுக்கும் விருப்பமிருந்தால் திருமூலரின் 3000 பாட்டுகளுக்கு உங்களின் நடையில் தெரிந்து கொள்ள ஆர்வம்./////

உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி! உங்களின் ஆர்வத்திற்கும் நன்றி! அவ்வப்போது செய்து கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து செய்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
திருமூலரின் வரிகளும், கவிஞர் கண்ணதாசன் அற்புதமான வரிகளையும் இணைத்துக் கொண்டது சிறப்பு... அவரவர் உணர வேண்டிய பல வரிகள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி.../////

உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger eswari sekar said...
vanakam sir .. inrya mana valla katturai nanru ../////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
ராம்குமாருக்கும் அதனை
ரம்மியமாக ஏற்ற வாத்திக்கும்
நன்றி..
நன்றி..
விருப்பமில்லாதவர்
வெளியேறுங்கள் என சொல்லாமைக்கு
தொடர்கிறது பதிவை
தொட்ட பின் ஊட்டம்/////

நகைச்சுவைக்காக அப்படிச் சொல்வதை, சீரியசான மேட்டர்களுக்கும் எப்படிச் சொல்ல முடியும்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
பன்னிரு திருமுறையிலிருந்து
பதிவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி
///உங்களால் முடிந்த தர்மங்களை நிறையச் செய்யுங்கள்! சேவைகளைச் செய்யுங்கள்.///
இந்த கருத்துப்படி
இப்படி தர்மம் பெற வேண்டி
சிலர் இருக்க வேண்டுமா?
சிந்திக்க இப்படியும் இடமுண்டே
சேவை தருபவர் இருப்பதால்
சேமித்து விட்டு (உழைப்பை)
சோம்பேறியாக இருப்பவரை
சோதிக்க வேண்டி உள்ளதே..?
அடிப்படையை சொல்லிதாங்க
அதைத்தான் விரும்புகிறோம்
அழகுக்கு அலங்காரம் செய்வதைவிட
ஆரோக்கியத்திற்காக இருந்தால்
அழகு தானே வரும் கூடவே
ஆரோக்கியமும் வரும்/////

நீங்கள் சொல்வது வரவேண்டிய காலத்தில் வந்தால் சரிதான்! காலம் கடந்து வந்தால் பயன் இல்லையே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger பழனி. கந்தசாமி said...
ஐயையோ, என்னையும் எரிப்பார்களா? நான் அப்படியே சொர்க்கத்திற்குப் போகலாம் என்று இருக்கிறேனே, எதாச்சும் வழி இல்லீங்களா, பணம் எத்தனை வேண்டுமானாலும் கொடுத்திடறேன்./////

சொர்க்கம் நரகம் என்று எதுவும் கிடையாது. எல்லாம் சிவமயம்! இறைவனின் திருவடிகளைச் சேர்வதற்கு செய்யும் நற்செயல்கள் மட்டுமே வழிகாட்டும்! பணம் நேரடியாகப் பயன்படாது!

SP.VR. SUBBAIYA said...

///Blogger ஜி ஆலாசியம் said...
////எல்லாம் எப்படி வந்தன? பாதி பூர்வீகச் சொத்து. மீதி பலரை ஆட்டைபோட்டு சம்பாதித்தது. கலப்படம் செய்து கல்லாக் கட்டியது. ஊழல் செய்து உருவாக்கியது. கையூட்டு வாங்கிக் குவித்தது. கந்து வட்டியில் சேர்ந்த்து. அடுத்தவன் வயிற்றில் அடித்துச் சேர்த்தது. பங்குதாரனை படுக்கப்போட்டு ஏறிமிதித்து ஏற்றம் பாரத்தது /////
ஒருப் பொருளென கொள்ளத் தகாதவரை உலகமே பெரும் பொருட்டாக நினைக்கும் படிச் செய்யும் அந்தப் பொருளைத் தான் பெற்றிட எப்படியெல்லாம் மனிதன் பொய்யும் புரட்டும் கலந்து புதிது புதிதாகப் பணத்தை உண்டாக்குகிறான் என்பதை சும்மா "சுத்தி சுத்தி அடிச்சிட்டு" எத்தனை பணம் சம்பாதித்தாலும் பிணம் ஆனப் பின்பு அப்படி சம்பாதித்தப் பணம் எது வரப் போவதில்லை என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....
அருமையான மனவளக் கட்டுரை பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

உங்களுடைய நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger துரை செல்வராஜூ said...
யதார்த்தம்... இப்படியெல்லாம் நல்ல வழிகாட்ட குருநாதர்கள் நமக்கு இருந்தும் வாய் ஒன்றைப் பேச, செவி ஒன்றை நாட, விழி ஒன்றைத் தேட - கருத்தழிந்து போகின்றதே!..////

முற்றிலும் கருத்து ஒழிந்து போகக்கூடாது என்பதை வலியுறுத்ததான் இது போன்ற கட்டுரைகள். பத்திற்கு ஒருவர் உணர்ந்தாலும், எழுதியது பயன் பெறும். நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger rajanblogs said...
என் போன்ற சிலரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கச் செய்த‌
திரு ராம்குமார் அவர்களுக்கும் , அதை பரிசீலித்து ஏற்றுக்
கொண்ட ஆசிரியருக்கும் நன்றிகள் பல...
Thanks a lot,/////

மாணவர் ஆசிரியர் என்ற பாகுபாடு கிடையாது. ஏற்றுக்கொள்ள வேண்டியதைத் தவிர்ப்பதும் கிடையாது. நன்றி ராஜன்!

SP.VR. SUBBAIYA said...


////Blogger C Jeevanantham said...
Thank you sir,////

நல்லது. நன்றி ஜீவானந்தம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger சர்மா said...
வணக்கம் ஐயா,
அசைவ ப்பதிவுகளைப்பார்த்ததும் நான் மிகவும் மனவருத்த்மடைந்தேன்,ஆசிரியருக்கு மாணவன் திருத்தம் சொல்வது பாபம் என க்கருதி வாளாவிருந்தேன்,அதுமட்டுமல்லாது அந்தபதிவுகளைத்தவிர்த்தேன்.இன்றைய அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ராம்குமாருக்குப்பாராட்டும் ஆசிரியருக்கு அன்பான வணக்கமும்.
வாழ்க தங்கள் சேவை.////

உங்கள் அன்பிறகு நன்றிகள் பல!! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்? எப்போதுமே நல்ல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அண்ணாமலை..!! said...
" கைநீட்டும் இல்லார்க் கிருந்துமே ஈயாதான்
பைநீட்டும் செல்வமெலாம் பாழ்!
என்றேனும் ஓர்நாளில் வீழும் உடல்நினைந்து
நன்றேனும் ஒன்றேனும் செய்!
பூசைசெய்தும் பூக்களினால் அர்ச்சித்தும் துன்பமா?கேள்!
ஆசைகளை நீக்கப் பழகு!
வீட்டிலே உள்ளவனைக் காணாமல் நீயுந்தான்
மேட்டிலே ஏறுவதும் ஏன்?
பணத்தினால் துன்பங்கள் நீங்குதல் இல்லை
மனத்தினால் என்றே உணர்! "////

கவிதையைச் சொல்லி பின்னூட்டம் இட்ட மேன்மைக்கு நன்றி அண்ணாமலை!

SP.VR. SUBBAIYA said...


/////Blogger ponnusamy gowda said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.தாங்கள் வெளியிட்டிருந்த திரு.ராம்குமர் அவர்களது கருத்து,அதை ஏற்றுக்கொண்ட தங்களது மனப்பாங்கு போற்றத் தகுந்தது.பெருந்தண்மைக்கு நன்றி.திருமூலர் பாட்டும் அதன் விளக்க உரையும் அருமை.நடைமுறை வாழ்வின் உண்மை என்னவென்றால் நன்மை செய்யும் அனைவருமே ஏமாளிகளே.நண்மை செய்தவர்கள் நொந்து போகின்றனரே தவிர தன்னிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்,இப்பூவுலகில்?.....
அருமையான பதிவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்./////

எண்ணிக்கை முக்கியமில்ல!!!. நம்மால் ஒருவர் தன்னிறைவு பெற்றாலும் போதும் பொன்னுசாமி அண்ணா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Advocate P.R.Jayarajan said...
அழுத்தமான, யதார்த்தமான பதிவு...
நாம் செய்யும் நல்ல காரியங்களே உடன் வரும் சொத்துக்கள். அருமை. வாழ்த்துகள்./////..

உங்களுடைய மேலான பாராட்டுக்களுக்கு நன்றி வழக்குரைஞர் சார்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
பன்னிரு திருமுறையில் திருமந்திரம் பத்தாம் திருமுறை. அதில் முதல் தந்திரத்தில் உபதேசம் என்ற 30 பாடல்களுக்கு அடுத்து யாக்கை நிலையாமை என்று 25 பாடல்களை வைத்தார். பின்னர் செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, உயிர் நிலையாமை என்று நிலையாமை பற்றி 4 தலைப்புக்கள்.
53 பாடல்கள் அனைத்தும் எழுத்தெண்ணிப் படித்து மனதில் பதிக்க வேண்டியவை.
"முன் போற சவத்துக்குப் பின்போற சவம்" என்பது எளிய சொல்லடை. சவ ஊர்வலத்திற்குப் பின்னர் போகும் சுற்றமூம் நண்பர்களும் ஒரு நாள் சவம் ஆகப் போகிறவர்களே.அதனை அவர்கள் உணராததுதான் பெரிய மாயை.
நல்ல கட்டுரை. நன்றி ஐயா!/////

உங்களின் பாராட்டிற்கும், பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

Blogger arul said...
meaningful post

நல்லது. நன்றி அருள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
மானிடப்பிறவியில் கொண்டு வந்ததது ஒன்றுமில்லை, கொண்டு செல்வது ஏதுமில்லை இறைஅருள் ஒன்றே மறுபிறவியின் மகத்தான சொத்து,
அதுவும் பிறருக்கு தகக் தருனத்தில் செய்யும் உதவியே சிறந்த தருமம்
ஆகும்
நன்றி//////

நல்லது. நன்றி உதயகுமார்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
///ponnusamy gowda said...
நடைமுறை வாழ்வின் உண்மை என்னவென்றால் நன்மை செய்யும் அனைவருமே ஏமாளிகளே.நண்மை செய்தவர்கள் நொந்து போகின்றனரே தவிர தன்னிறைவு பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்,இப்பூவுலகில்?//
ஆமாம் கோவையாரே..
அதைத்தான் சொன்னோம்
உதவி செய்பவர்கள் இருக்கும்வரை
உட்கார்ந்துபடி வாழ துடிப்பவருண்டு
வரிச் சலுகைக்காகவே
வங்கியில் அறக்கட்டளை கணக்கு
தொடங்கி நானும்
தொண்டாற்றுவதாக சொல்வதுண்டு
அதனால் தான் இந்த ஆண்டில்
அதனை கட்டுபடுத்திட
நிதியமைச்சகம் மாற்றம் செய்தது சரி
நிலைமை சீரடையுமா?
இரண்டு கால்களால் நடப்பது உண்மை
இரண்டும் ஒரே சமயத்தில் இல்லை
வலது கால் நடக்கும் போது
இடது கால் தாங்கும் அது போல்
மற்றது இதனை
மறப்பதால் மாற்றங்கள்..
சி(ப)லருக்கு ஏமாற்றங்கள்
சிந்திக்க சொல்லித் தரும் வரை
சிந்தனையில் மாற்றம் வராது
சில இடங்களில் வந்தாலும்
அது நிலைக்காது
அய்யர் சொல்வது புரிந்தால் சரி/////

சிந்தனை என்பது ஊற்று! ஊற்று அதுவாகத்தான் வரமுடியும். உருவாக்க முடியாது விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger வை.கோபாலகிருஷ்ணன் said..
உலக யதார்த்தமான உண்மைகளை உள்ளது உள்ளபடி அழகாக மனதில் பதியுமாறு, உதாரணங்களுடன் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்./////

உங்களுடைய மனம் திறந்த மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
இப்படி சொல்கிறார் ஒரு
இளைஞன்..
"எதையும் இறந்த பிறகு
எடுத்துச் செல்ல முடியாது"
"தெரியும்
அதனால் தான் இருக்கும் வரை
அனைத்தையும் அனுபவிக்கின்றேன்"
"அடுத்தவருக்கு கொடுத்தால் மட்டும்
அவர் எடுத்தா செல்லப் போகிறார்?"
சிந்திக்க சொல்லித்தராமல்
சிந்தனையை சரி செய்ய முடியாது
அப்படி செய்தாலும்
அது நிலைக்காது/////

சிந்திக்கச் சொல்லலாம். எப்ப்டி சிந்திப்பது என்பதைச் சொல்லித் தரமுடியாது!:-))))
விதையை விதைக்கலாம். தண்ணிரும் ஊற்றலாம். முளைத்துச் செடியாவது விதையின் செயல் அல்லாவா?:-)))

ponnusamy gowda said...

///உங்களுக்காக இந்த பாடலினை
உள்ளிருந்து எடுத்து தருகிறோம்

....
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்


நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்///
அய்யர் அய்யா அவர்களுக்கு,
தங்களது சிந்தனைகளும் கவிதைகளும் மிகச் சிறப்பாக உள்ளன.என்னை மிகவும் கவர்ந்த பின்னூட்டங்களில் உங்களுடையவைகள் குறிப்பிடத்தக்கவைகள்.நன்றி.

padman said...

eng paarththalum vagrangal. 4-5 vayasu pengalai kood vidurathillai!! idhu entha giraha vagram?? ayya

SP.VR. SUBBAIYA said...

////Blogger padman said...
eng paarththalum vagrangal. 4-5 vayasu pengalai kood vidurathillai!! idhu entha giraha vagram?? ayya/////

இதற்கெல்லாம் காரணம் மனிதனின் மனம் வக்கிரமாகிப் போனதுதான். சம்பந்தப்பட்டவனின் ஜாதகக் கோளாறுதான்!