மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.4.13

Astrology: என்ன(டா) விஷேசம் இன்று?



Astrology: என்ன(டா) விஷேசம் இன்று?

என்ன(டா) விஷேசம் இன்று? அதாவது இன்றைய நாளின் சிறப்பு என்ன சாமி?

இன்று சித்ரா பெளர்ணமி! சூரியன் உச்சம் பெற்று மேஷராசியில் இருக்கும் நிலையில் ஏற்படும் பெள்ர்ணமி நாள் இன்று. திருவண்ணாமலை
அருணாசலேஷ்வரரை வண்ங்கும் நாள். கிரிவலம் வந்தால் மிகவும் நன்மை பயக்கும். இன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை சுமார் பத்து லட்சம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டு அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், அரசும் செய்துள்ளது

அத்துடன் இன்று சித்ரகுப்தனின் பிறந்த நாள். பார்வதி தேவி தன் திருக்கரங்களால் ஒரு குழந்தையின் படத்தை வரைய, அந்தச் சித்திரத்தைப் பார்த்து வியந்த சிவபெருமான, அச்சித்திரத்திற்கு உயிர் கொடுக்க அவதரித்த குழந்தைதான் சித்திரகுப்தன். பிறகு எமதர்மனின் வேண்டுகோளின்படி சித்ரகுப்தனுக்கு மனிதரகளின் பாவ புண்ணியக் கணக்கிடும் வேலை கிடைத்தது. அவர்தான் அந்த வேலைக்கு லீட் மானேஜர். பிரம்மாண்டமான சர்வர் எல்லாம் வைத்து அந்த வேலையை அவர் செய்வார் போலிருக்கிறது!:-)))

திருவண்ணாமலைக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்வதாம்?

உள்ளூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்கே உறையும் சிவனாரை வழிபட்டு வரலாம்!..அதற்கும் வழியில்லாமல் வெளிநாட்டில் வாழ்பவர்கள்
இருக்கும் இடத்தில் இருந்தே ஒரு ஐந்து நிமிடங்கள் இறை வழிபாட்டைச் செய்யலாம். அதற்காக அண்ணாமலையார் ஒன்றும் கோபித்துக் கொள்ளமாடார்.

கருணையின் வடிவானவர் அவர். அதனால்தான் அவரை நினைத்தாலே முக்தி என்று நம் முனோர்கள் சொல்லி வைத்தார்கள்

மாதம் ஒருமுறை பெள்ர்ணமி வருகிறது. ஒவ்வொரு பெளர்ணமியும் சிறப்பானதுதான். சித்ரா பெள்ர்ணமி ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரதத்தன்று வரும். அன்று சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பார்கள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரன்று வரும். ஆனி மாதம் மூல நட்சத்திரத்திலும், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்றும், தை மாதம் பூச நட்சத்திரத்தன்றும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் அந்த இனிய நாள் வரும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

பெளர்ணமியைப்போல அமாவாசைத் திதிகளும் முக்கியமானவைதான். பெள்ர்ணமி நாட்களில் இறைவனை வணங்க வேண்டும் அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களை வணங்க வேண்டும். அமாவசையில் முக்கியமான அமாவாசை தை அமாவாசை தினமாகும். அன்று இராமேஸ்வரத்திற்குச் சென்று கடலில் நீராடி, இராமநாதசாமியை வணங்கி வருவது மிக்க நன்மை பயக்கும்

தக்‌ஷினாயண புண்ணியகாலம் என்பது சூரிய்ன் தென் திசையில் பயணிக்கும் ஆறு மாதகாலத்தைக் குறிக்கும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் அது ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மார்கழி ஆகிய ஆறு மாத காலங்களே அவைகள். நமக்கு ஆங்கிலக் காலெண்டரின்படி சொன்னால்தான் புரியும். இந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் 13.1.2014 வரை என்று வைத்துக்கொள்ளுங்கள். கடக ராசியில் தனது பயணத்தைத் துவங்கி மகரராசியில் பொங்கலுக்கு முதல் நாள் வரை சூரியனின் பயணத்தை அது குறிக்கும். அதர்குப் பிறகு உள்ள ஆறு மாத காலம் உத்ராயண காலம் ஆகும்

இது ஒரு முக்கியமான தகவல் அதனால் அதை இன்று பதிவு செய்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. குருநாதர் அவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் சித்ரா பெளர்ணமி நல்வாழ்த்துக்கள்!...சூர்ய சந்த்ரர்களின் நல்லாசிகளினால் அனைவருக்கும் நன்மைகளே நடக்கட்டும்!.. உண்ணாமுலையாள் உடனாகிய அண்ணாமலையார் அண்டபகிரண்டத்தையும் வாழ்த்தியருளட்டும்!...அண்ணாமலைதொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!.. ஞானசம்பந்தர் திருவாக்கு நமக்கெல்லாம் உற்றதுணை!..

    ReplyDelete
  2. மஞ்சளில் குளித்து காண்போர் மயங்க
    விண்ணில் குங்குமம் தெளித்து எந்தன்
    நெஞ்சம் மகிழ நெடுபயணம் புறப்பட்ட
    வெண்ணிலவே வாழீ! நீவாழீ! நீவழீயவே!

    அனைவருக்கும் சித்ராப் பௌர்ணமி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ///சித்ரகுப்தனுக்கு மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கிடும் வேலை கிடைத்தது.///

    இதற்கு முன்னர்
    இந்த வேலையை செய்தது யார்?

    மனிதர்களே இல்லாத காலத்தில்
    மரண கணக்கு எழுதியவர் யார்?

    இன்றைய இளையவர் எண்ணபடி
    இது போன்ற கருத்து சொல்வது

    நமக்கும் நல்லது
    நம்மை பேணுபவருக்கும் நல்லது

    வழக்கம் போல்
    வலமாக வரும் பாடல்

    பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?
    பூங்காற்றே பிடிச்சிருக்கா?

    பௌர்ணமி வானம்பிடிச்சிருக்கா?
    பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

    சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?
    சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?

    அடி கிளியே நீ சொல்லு
    வெள்ளி நிலவே நீ சொல்லு

    ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற அந்த
    வெண்ணிலவை பிடிச்சிருக்கா?

    கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்
    என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?

    ReplyDelete

  4. சிறப்பானதருணத்தில்தந்த
    தகவலுக்குநன்றி.
    காலை வணக்கம் 

    ReplyDelete
  5. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    பவுர்ணமிகளிலேயே சிறந்தது சித்ரா பவுர்ணமி தான் என உணர்ந்துள்ளோம்.
    ஆனி திருமஞ்சனமும்,ஆரூத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தது சிதம்பரத்தில் தான்.இன்றைய பதிவில் நல்ல தகவல்களை அளித்தமைக்கு நன்றி.
    அனைவருக்கும் சித்ரா பவுர்ணமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்
    சித்ரா பவுர்ணமியின் பெருமைகளையும்,
    அம்மாவசையில் முன்னேர்களின் நினைவுகளை அறிவுரித்தியற்கு.
    நன்றி

    ReplyDelete
  7. இவ்வாண்டு சித்ராபவுர்ணமி மேஷ ராசியில் ஐந்து கிரக சேர்க்கையுடன் வந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.

    குருமட்டும் ரிஷ‌பத்தில் உள்ளார். ராகுவும் சனியும் துலாத்தில்;சந்திரன் கன்னியில் மீதமுள்ள ஐந்தும் மேஷத்தில்.
    நன்றி ஐயா!

    ReplyDelete
  8. Blogger துரை செல்வராஜூ said...
    குருநாதர் அவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் சித்ரா பெளர்ணமி நல்வாழ்த்துக்கள்!...சூர்ய சந்த்ரர்களின் நல்லாசிகளினால் அனைவருக்கும் நன்மைகளே நடக்கட்டும்!.. உண்ணாமுலையாள் உடனாகிய அண்ணாமலையார் அண்டபகிரண்டத்தையும் வாழ்த்தியருளட்டும்!...அண்ணாமலைதொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!.. ஞானசம்பந்தர் திருவாக்கு நமக்கெல்லாம் உற்றதுணை!..

    உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1!

    ReplyDelete
  9. //////Blogger ஜி ஆலாசியம் said...
    மஞ்சளில் குளித்து காண்போர் மயங்க
    விண்ணில் குங்குமம் தெளித்து எந்தன்
    நெஞ்சம் மகிழ நெடுபயணம் புறப்பட்ட
    வெண்ணிலவே வாழீ! நீவாழீ! நீவழீயவே!
    அனைவருக்கும் சித்ராப் பௌர்ணமி வாழ்த்துக்கள்!/////

    நல்லது. உங்களின் சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்களுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. ////Blogger அய்யர் said...
    ///சித்ரகுப்தனுக்கு மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கிடும் வேலை கிடைத்தது.///
    இதற்கு முன்னர்
    இந்த வேலையை செய்தது யார்?//////

    அடடே இது தெரியாதா உங்களுக்கு? அதற்கு முன்னர் (எம) தர்மராஜனே அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய இலாகா பெரிதானவுடன் அதைத் தனிப் பிரிவாகப் பிரித்து சித்திரகுப்தன் கையில் கொடுத்தார்கள். இப்போது அது தனி டிவிஷன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////மனிதர்களே இல்லாத காலத்தில்
    மரண கணக்கு எழுதியவர் யார்?/////

    மனிதர்களே இல்லாத காலமா (யுகமா?) அது எந்த யுகம் என்று முதலில் நீங்கள் சொல்லுங்கள். அதற்கான பதிலை நான் சொல்கிறேன்!

    ReplyDelete
  11. ////Blogger சர்மா said...
    சிறப்பானதருணத்தில்தந்த
    தகவலுக்குநன்றி.
    காலை வணக்கம்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    பவுர்ணமிகளிலேயே சிறந்தது சித்ரா பவுர்ணமி தான் என உணர்ந்துள்ளோம்.
    ஆனி திருமஞ்சனமும்,ஆரூத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தது சிதம்பரத்தில் தான்.இன்றைய பதிவில் நல்ல தகவல்களை அளித்தமைக்கு நன்றி.
    அனைவருக்கும் சித்ரா பவுர்ணமி வாழ்த்துக்கள்/////.

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  13. /////Blogger eswari sekar said...
    vanakamsir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    சித்ரா பவுர்ணமியின் பெருமைகளையும்,
    அம்மாவசையில் முன்னேர்களின் நினைவுகளை அறிவுரித்தியற்கு.
    நன்றி/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  15. /////Blogger kmr.krishnan said...
    இவ்வாண்டு சித்ராபவுர்ணமி மேஷ ராசியில் ஐந்து கிரக சேர்க்கையுடன் வந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.
    குருமட்டும் ரிஷ‌பத்தில் உள்ளார். ராகுவும் சனியும் துலாத்தில்;சந்திரன் கன்னியில் மீதமுள்ள ஐந்தும் மேஷத்தில்.
    நன்றி ஐயா!/////

    சந்திரன் கன்னியில் இருந்தால் எப்படி பெள்ர்ணமி கணக்கு வரும்?
    ஜாதகம் கணிக்கும் மென்பொருளில் கணித்துப் பாருங்கள். நான்கு கிரகங்கள்தான் இன்று மேஷ ராசியில் உள்ளன. சூரியன் சுக்கிரன் செவ்வாய், கேது ஆகிய 4 கிரகங்கள் மட்டுமே மேஷத்தில் உள்ளன. குரு ரிஷபத்தில் உள்ளார். சனி, ராகு, சந்திரன் ஆகிய 3 கிரகங்களும் துலாராசியில் உள்ளன. புதன் மீனத்தில் உள்ளார்
    நல்லது. என்னையும் ஒருமுறை பார்க்க வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  16. information about amavasai tithi and pournami tithi is very useful thank you sir

    ReplyDelete
  17. /////Blogger arul said...
    information about amavasai tithi and pournami tithi is very useful thank you sir/////

    அடுத்தடுத்துள்ள உங்களுடைய இரண்டு பின்னூட்டங்களுக்கும் நன்றி அருள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com