மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.4.13

Astrology: அவன் தூங்கவுமில்லை: நாம் அகப்படவுமில்லை!Astrology: அவன் தூங்கவுமில்லை: நாம் அகப்படவுமில்லை!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜோதிடத்தின் மேன்மையை நான் அறிந்து கொள்வதற்கு முன்பு கவியரசர் கண்ணதாசனின் வரிகளைத்தான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருப்பேன். இறைவன் மேல அப்படி ஒரு குறை என்னக்கிருந்தது.

“அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டது நான அல்லவா”


ஜோதிடத்தை ஓரளவு அறிந்த பிறகுதான் உண்மை தெரிந்தது.

“அவன் தூங்கவுமில்லை - நாம்
அகப்படவும் இல்லை!”


வாருங்கள், சற்று விரிவாக அதைப் பார்ப்போம்!
------------------------------------------------------
இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச்  சமமானவை தான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார். அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் அவர்  எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும் அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்) என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"


"விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை" என்று வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்தார்.

வள்ளுவர் எழுதியதில் விருப்பு வெறுப்பு இல்லதவர் இறைவன் என்ற முதல்வரி முக்கியம்

இறைவன் விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதர்ளையும் சமமாகப் படைத்தார்.

நீங்கள் கேட்கலாம் - அப்படியென்றால் வாழ்க்கையில் ஏன் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்?

ஒரு குழந்தை ஏன் செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை ஏன் அன்றாடம் வயிற்றுப்பசிக்கு அல்லல் படும் ஏழைவீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை பார்ப்பவர்கள் மகிழும் விதமாக அழாகாக பிறக்கிறது.
ஒரு குழந்தை ஏன் உடல் ஊனத்துடன் பிறக்கிறது

ஏன் அப்படி?

அதைத்தான் நம் முன்னோர்கள் வாங்கி வந்த வரம் என்று ஒரே வரியில் சொல்லியுள்ளார்கள். நாம் முன் ஜென்மத்தில் செய்த நல் வினைகள், தீவினைகளுக்குத் தகுந்த மாதிரி இந்தப் பிறவி அமைகிறது.

முன் பிறவியில் தான தர்மங்கள், சேவைகள் செய்தவனுக்கு இந்தப்பிறவி அற்புதமாக அமைகிறது. அல்லாதவனுக்கு வாழ்க்கை அல்லல் படும் விதமாக அமைகிறது.

பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால் குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால், முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப் பாவத்தைக் கழிக்க அதனுடைய பிறப்பு அப்படி அமையும்.

எல்லாமே முன் ஜென்மப் பாவ புண்ணியங்களின்படிதான் என்றால், இங்கே, அதாவது இந்தப் பிறவியில் இறைவனின் பங்காற்றல் என்ன?

He will give you standing power to face any situation
இறைவனின் பங்காற்றல் இல்லையென்றால் ஒருவன் மனிதனாகவே பிறந்திருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதைத்தாங்கும் விதமாக நஷ்ட ஈட்டைக் கொடுத்துத்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார்

அந்த நஷ்ட ஈடும் சேரும் போதுதான் அனைவருக்கும் 337 பரல்கள் என்ற சம நிலைப்பாடு கிடைத்திருக்கிறது.

எப்போதும் நான் சொல்வதைப்போல:

மன்மோகன் சிங்கிற்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய வாகன் ஒட்டிக்கும் 337 பரல்கள்தான்.
முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய உதவியாள்ருக்கும் 337பரல்கள்தான்
அனுஷ்கா சர்மாவிற்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய வீட்டில் பாத்திரம் கழுவும் முனியம்மாவிற்கும் 337 பரல்கள்தான்
மாவட்ட ஆட்சியாளருக்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய கார் கதவைத் திறந்துவிடும் டவாலிக்கும் 337 பரல்கள்தான்

ஒருவனுக்குப் பத்தாம் வீட்டில் - அதாவது ஜீவன ஸ்தானத்தில் தேவையான பரல்கள் இன்றி அந்தவீடு அடிபட்டுபோய் இருந்தால், நல்ல உத்தி யோகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பான். அதே நேரத்தில் அவனுக்கு நான்காம் வீடு (சுக ஸ்தானம்) நன்றாக அமைந்திருக்கும்  அவனுக்கு ஒரு ஊறவினர்களோ அல்லது நண்பர்களோ உதவி செய்து அடிப்படைத் தேவைகளுக்கு கேடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்

ஆகவே அஷ்டகவர்க்கம் கற்றுக்கொண்டபின் உங்களுக்குத் தெரியவரும் - யாருக்கும் நீங்கள் தாழ்ந்தவரில்லை - அதேபோல யாருக்கும் நீங்கள் உயர்ந்தவருமில்லை

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாகவேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஜாதகத்தின் 12 வீடுகளும், 36 பாக்கியங்களும் மிக நன்றாக அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. சரி பாதி நன்றாக அமையும். இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

கைவண்டி இழுப்பவன், இரண்டாள் சாப்பாட்டைக் கொடுத்தால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கட்டாந்தரையில் படுத்து நன்றாகத் தூங்குவான்.அதே சாப்பாட்டில் கால் பகுதியைக் கூட ஒரு செல்வந்தனால் ரசித்துச் சாப்பிடமுடியாது. கேட்டால் Blood Pressure, Sugar, என்று தனக்கிருக்கும் வியாதிகளின் பெயர்களையும், விழுங்கும் மாத்திரைகளின் பெயர்களையும் அடுக்கிச் சொல்வான்.

Health இருக்கும் இடத்தி;ல் Wealth இருக்காது. Wealth இருக்கும் இடத்தில் Health இருக்காது. இரண்டும் நன்றாக இருக்க வேண்டு மென்றால் 1, 2, 6, 8, 9, 11, 12 ஆகிய வீடுகளில் 30 பரல்களுக்கு  மேல் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் கோடியில் ஒருவருக்குக்கூட அமையாது!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சுருக்கிச் சொன்னார்.

"அது இருந்தால் இது இல்லை, இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்,அவனுக்கு இங்கே இடமில்லை!"


ஆமாம் எல்லாம் சேர்ந்து கிடைக்கப் பெற்றவனுக்கு ஆயுள் அதிகம் இருக்காது.மேலே போய்விடுவான்.

இதையெல்லாம் உணர்ந்து நம்மை நாமே சமதானப் படுத்திக் கொண்டு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை!

கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள், " டேய் சோற்றைக் கீழே சிந்தாதே - சிந்தினால் அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"

ஈயாகப் பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும்  சிறுவன் நிச்சயமாக அடுத்து சோற்றைச் சிந்தாமல் உண்ணப் பழகிவிடுவான்.

"டேய் சாமி இல்லேன்னு சொல்லாதே - சொன்னா, இப்போ வெள்ளி, சனிக்கிழமைகள்ல கோவில் வாசல்ல தாட்டோட உக்காந்திருக்கானுங்கள்ல அவனுங்க மாதிரி அடுத்த பிறவியில் நீயும் தட்டோட உக்கார வேண்டியதிருக்கும்" இப்படியும் சொல்லிக் கிராமத்துப் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை நெறிப்படுத்துவார்கள்.

அந்த நெறிப்படும் மனது தான் முக்கியம். அது எத்தனை வயதில் உங்களுக்கு நெறிப்படுகிறது என்பது அதை விட முக்கியம்.

முப்பது அல்லது நாற்பது வயதிற்குள் மனது நெறிப்பட வேண்டும். எழுபதுவயதில் நெறிப்படுவதால் ஒன்றும் பயனில்லை!

இருபது வயதில் நண்பன் சொல்கிறான் என்பதற்காக இரண்டு பெக் சீவாஸ் ரீகல் விஸ்கி அடித்துப் பார்ப்பது இயற்கை. அதையே எழுபது வயது வரை செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நல்லது என்று எடுத்துக் கொள்ளமுடியும்? எல்லாவற்றிற்கும் ஒரு காலகட்டம், வரைமுறை  உண்டல்லவா?

சரி, மனது எதற்காக நெறிப்பட வேண்டும்?

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை, பெறுமை, சிறுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் அல்லவா வாழ்க்கை சீராக இருக்கும். மனது எந்த்ச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கும். அதைவிட முக்கியமாக நிம்மதியாக இருக்கும். அதற்குத்தான் நெறிப்படுத்தப் பெற்ற மனது வேண்டும் Like a seasoned wood!

அதைச் சொல்லித்தருவதுதான் எனது வகுப்பறைப் பாடங்களின் முக்கிய நோக்கமாகும்
--------------------------------------------------------------.
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அஷ்டகவர்க்கம் என்பது உங்களுடைய பிறப்பின் மதிப்பெண் சான்றிதழ் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அந்தச் சான்றிதழ் பிறந்த ஷணத்திலேயே உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதை மாற்றி எழுத யாரலும் முடியாது. எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உங்களுடைய ஜாதகத்தின் 12 பாவங்களுக்கும் அல்லது வீடுகளுக்கும் அந்த வீடுகளுக்கு அதிபதிகளான 7 கிரகங்களுக்கும், அவை அமைந்துள்ள அமைப்பின்படி கணக்கிட்டு வருவதாகும். அதன் முக்கியமான சிறப்பு யாராயிருந்தாலும் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.

அதாவது எல்லோருக்குமே 337/337 தான். கூடுதல் குறைச்சலுக்கெல்லாம் இடமில்லை.

337 வகுத்தல் 12 என்னும்போது ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும். அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத் திலும் (Transit)  தசா புக்தியிலும் நல்ல பலன்களைத் தரும். இல்லை யென்றால் தீமையான பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கு இந்த அஷ்டவர்க்கம் பயன்படும் தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1. 25  பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய பலன்கள் சாதகமாக இருக்காது.

2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

3. 30 பரல்களுக்கு மெலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்

4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப்போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத்  தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நல்ல கணவன் கிடைப்பான். அவளைப் போற்றி வைத்துக்கொள்ளக்கூடிய கணவன் கிடைப்பான்.  உரிய காலத்தில் திருமணமாகும்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், தலைவனாகி விடுவான். அவனுக்குத் தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப் போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா? மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம் பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து  விட்டு தேசம, தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

குறைந்த அளவு ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பரல்கள் இருக்க வேண்டும்?

முன்பு அட்டவனையாக அதைக் கொடுத்துள்ளேன் அதைப் பாருங்கள்.

செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே பதிவிட்டிருக்கிறேன். பழைய பாடங்களைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேல்நிலைப் பாடங்களும், அஷ்டகவர்க்கப் பாடங்களும், பின்னால் புத்தகங்களாக வரவுள்ளன. அப்போது உங்களுக்கு ஜோதிடத்தின் மற்ற பகுதிகளும் தெரியவரும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++=

40 comments:

Gnanam Sekar said...

அய்யா காலை வணக்கம்

Bhuvaneshwar said...

காலை வணக்கம் ஐயா.

மீள்பதிவு!

வாஸ்தவத்தில் இந்த பதிவைத்தான் டாஸ்மாக் பதிவு என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் முபி எழுதியதையே கலக்கி ஊற்றி உள்ளீர்கள்.
:)

எதனை வாட்டி சொன்னாலும் உண்மை உண்மை தானே! அதனால் நோ ப்ராப்ளம்!

காலகாலதாசன்
புவனேஷ்

அய்யர் said...

அஷ்ட வர்கம் குறித்த பதிவு
அசத்தலானது தான் ... ஆனால்

அதற்கு முன் தந்த prelude
அதில் அநேக குறுக்கு முரண்கள்..

அதனை விரிவாக அவை உங்கள்
அனுமதியுடன் மின்னஞ்சலில்

உதாரணத்திற்கு ஒன்று மட்டும் இங்கே..

கண்ணதாசன் பாடல்களை சித்தாந்த
கண் கொண்டு ஆய்வு செய்ததுண்டு

தாங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடலும்
தருவது வேறு பொருளே..

//அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டது நான அல்லவா///

இதில் "அவன்" என்பது 'புத்தி'யை சொல்வது
"அகப்பட்டது" என்பது 'ஆணவ மல'த்தை சொல்வது

புத்தி உறங்கியதால் உயிர் ஆணவ மலத்திடம் மாட்டிக் கொண்டு விட்டது என பாடல் முழுவதிலும்
மூல கன்மத்தை தெளிவாக கவிஞர் வரைந்துள்ளார்..

உண்மை தான்
ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள்

ஆனால் preludeல் சொல்ல வந்த
கருத்தில் உள்ள முரணை மின்னஞ்சலில் பகிர்துள்ளோம்..

வாதமாக இதனை இங்கு
வருபவர்கள் எண்ணக் கூடாதல்லவா

manikandaprakash said...

astavarkangal kurainthiruntha pothilum ,athe visayathil oru kuraium illatha manitharhalai parka mudihirathe?

Kongu Saravanan TLC said...

Ayya Vanakkam,
Oru Giragathirkku 8 Paral Engirirgal,Saraasari 4 Paral Engirirgal Athu Enakku Puriyavillai......!
Melum Ovvoru Giragankalukkum Thani Thani Paral Mathippu Ullathaa......???
Ungal Pathivirkku Mikka Nandri....!

S Saravanan

thanusu said...

பழக்க தோஷத்தில் சனி அன்று வகுப்புக்கு வரவில்லை. இன்று வந்து பார்த்தால் வகுப்பு நடந்திருக்கிறது.

இன்று மிக நீண்ட பாடம். இப்படி நீண்ட பாடம் வாத்தியார் நடத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. நன்றிகள் அய்யா.

Kongu Saravanan TLC said...

Ayyyaaa Vanakkam,
Ovvoru Giragathirkkum 8 Parlgal,Saraasari 4 Paralgal Engirugirgal Athu Enakku Puriyavillai,Matrum 9 Giragangalukkum Thani Thani Paral Mathippu Ullathaaa.....???
Uthaaranamaaga Enathu Raasiyil 10m Idathil Bhudan+Guru+Sukkiran Ullaargal,Naan Ithai Eppadi Kanakkiduvathu??? 8+8+8=24 Paralgal Endru Kanakkiduvathu Sariyaaaa.....???
Thagavalukku Nandrigal Pala......!

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா

சர்மா said...

காலை வணக்கம் குருவே
இன்றைய பாடம் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் தங்கள் கவனத்துக்கு ஒரு ஐயம் தரப்படுகிறது.
கும்பலக்னம் 23 பரல்கள்.பத்தாம் வீடான விருச்சிகம் 37 பரல்கள் செவ்வாய் லக்னத்தில்சுயபரல் 2) பதினோராம் வீடான தனுசு 43 பரல்கள் குரு லக்னத்தில் 6 சுய பரல்கள்.ஆனாலும் வாழ்க்கை மிகவும் தோல்வியே.தங்களுக்கு தனிப்பட்ட‌ மின்மடல் விபரமாக அனுப்பியுள்ளேன். நேரம் வரும்போது பார்க்கவும்.

Ashok said...

Morning Sir,'
Great post !
Regards
Ashok

GOWDA PONNUSAMY said...

ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
பாடம் நன்றாக இருந்த போதிலும் இது மீள்பதிவு.ஆயினும் பதிவிற்கு நன்றிகள்.
-Peeyes.

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
டாஸ்மாக் பதிவின் பின்னூட்டத்தின் பதிலில் என்னை அண்ணா என குறிப்பிட்டுள்ளீர்கள். அண்ணா என்பது கோவையை பொருத்த மட்டில் மிக மரியாதைக்குறிய சொல்.அடியவனும் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவனே.
நன்றியுடன்,
-Peeyes.

C Jeevanantham said...

Thank you sir

Ak Ananth said...

மற்ற இடங்கள் சரி. எதற்கு துர்ஸ்தானங்களிலும் 30 பரல்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். முரண்பாடாக இருக்கிறது.

உணர்ந்தவை! said...

337 சட்டி யின்னா கிரகங்களின் பரல்கள் , தசா , கோசார பலன்கள் எல்லாம் கரண்டி சொன்னா சரியா அய்யா?

அப்படின்னா இது சாத்தியமா?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அய்யா காலை வணக்கம்////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Bhuvaneshwar said...
காலை வணக்கம் ஐயா. மீள்பதிவு!
வாஸ்தவத்தில் இந்த பதிவைத்தான் டாஸ்மாக் பதிவு என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் முபி எழுதியதையே கலக்கி ஊற்றி உள்ளீர்கள்.:)
எதனை வாட்டி சொன்னாலும் உண்மை உண்மை தானே! அதனால் நோ ப்ராப்ளம்!
காலகாலதாசன்
புவனேஷ்/////

ஆமாம். உண்மையை எத்தனை தடவை வேண்டுமென்றாலும் சொல்லலாம். வகுப்பறைக்கு நிறைய புதியவர்கள் வந்துள்ள்தால், அவர்களும் அறிந்து கொள்ளும்
பொருட்டு இந்த மீள்பதிவு. நன்றி புவனேஷ்!

SP.VR. SUBBAIYA said...

Blogger அய்யர் said...
அஷ்ட வர்கம் குறித்த பதிவு
அசத்தலானது தான் ... ஆனால்
அதற்கு முன் தந்த prelude
அதில் அநேக குறுக்கு முரண்கள்..
அதனை விரிவாக அவை உங்கள்
அனுமதியுடன் மின்னஞ்சலில்
உதாரணத்திற்கு ஒன்று மட்டும் இங்கே..

கண்ணதாசன் பாடல்களை சித்தாந்த
கண் கொண்டு ஆய்வு செய்ததுண்டு
தாங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடலும்
தருவது வேறு பொருளே..
//அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டது நான அல்லவா///
இதில் "அவன்" என்பது 'புத்தி'யை சொல்வது
"அகப்பட்டது" என்பது 'ஆணவ மல'த்தை சொல்வது
புத்தி உறங்கியதால் உயிர் ஆணவ மலத்திடம் மாட்டிக் கொண்டு விட்டது என பாடல் முழுவதிலும்
மூல கன்மத்தை தெளிவாக கவிஞர் வரைந்துள்ளார்..
உண்மை தான்
ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள்
ஆனால் preludeல் சொல்ல வந்த
கருத்தில் உள்ள முரணை மின்னஞ்சலில் பகிர்துள்ளோம்..
வாதமாக இதனை இங்கு
வருபவர்கள் எண்ணக் கூடாதல்லவா/////

முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன். பொறுமையாகப் படித்துப் பாருங்கள். கவியரசர் என்ன சொன்னார்? யாரைச் சொன்னார்? என்பது படிபடும்:

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

யானை இடம் நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான் ?
மனிதனுக்கு என்ன வைத்தான்
( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

படம : பெரிய இடத்து பெண்
இசை : M.S.V , ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
++++++++++++++++++++++++====

SP.VR. SUBBAIYA said...

////Blogger manikandaprakash said...
astavarkangal kurainthiruntha pothilum ,athe visayathil oru kuraium illatha manitharhalai parka mudihirathe?////

காரகன், அதிபதி என்று மற்ற ஆட்டக்காரர்களையும் பாருங்கள் சுவாமி! விஷயம் தெளிவாகும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Kongu Saravanan TLC said...
Ayya Vanakkam,
Oru Giragathirkku 8 Paral Engirirgal,Saraasari 4 Paral Engirirgal Athu Enakku Puriyavillai......!
Melum Ovvoru Giragankalukkum Thani Thani Paral Mathippu Ullathaa......???
Ungal Pathivirkku Mikka Nandri....!
S Saravanan/////

ஆமாம். அஷ்டகவர்க்கப் பாடத்தில் மொத்தம் 50 அத்தியாயங்களை எழுதியுள்ளேன். இதெல்லாம் விரிவாக விளக்கமாக அதில் வரும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
பழக்க தோஷத்தில் சனி அன்று வகுப்புக்கு வரவில்லை. இன்று வந்து பார்த்தால் வகுப்பு நடந்திருக்கிறது.
இன்று மிக நீண்ட பாடம். இப்படி நீண்ட பாடம் வாத்தியார் நடத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. நன்றிகள் அய்யா.////

நல்லது. பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி! அந்தக் குறும்படத்தைப் பார்த்தீர்களா?

SP.VR. SUBBAIYA said...

///Blogger Kongu Saravanan TLC said...
Ayyyaaa Vanakkam,
Ovvoru Giragathirkkum 8 Parlgal,Saraasari 4 Paralgal Engirugirgal Athu Enakku Puriyavillai,Matrum 9

Giragangalukkum Thani Thani Paral Mathippu Ullathaaa.....???
Uthaaranamaaga Enathu Raasiyil 10m Idathil Bhudan+Guru+Sukkiran Ullaargal,Naan Ithai Eppadi

Kanakkiduvathu??? 8+8+8=24 Paralgal Endru Kanakkiduvathu Sariyaaaa.....???
Thagavalukku Nandrigal Pala......!////

நீங்கள் குறிப்பிடும் கணக்கு தவறு 8+8+8=24
அஷ்டகவர்க்கப் பாடத்தில் மொத்தம் 50 அத்தியாயங்களை எழுதியுள்ளேன். இதெல்லாம் விரிவாக விளக்கமாக அதில் வரும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger சர்மா said...
காலை வணக்கம் குருவே
இன்றைய பாடம் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் தங்கள் கவனத்துக்கு ஒரு ஐயம் தரப்படுகிறது.
கும்பலக்னம் 23 பரல்கள்.பத்தாம் வீடான விருச்சிகம் 37 பரல்கள் செவ்வாய் லக்னத்தில்சுயபரல் 2) பதினோராம் வீடான தனுசு 43 பரல்கள் குரு லக்னத்தில் 6 சுய பரல்கள்.ஆனாலும் வாழ்க்கை மிகவும் தோல்வியே.தங்களுக்கு தனிப்பட்ட‌ மின்மடல் விபரமாக அனுப்பியுள்ளேன். நேரம் வரும்போது
பார்க்கவும்./////

சரி, பார்த்துச் சொல்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ashok said...
Morning Sir,'
Great post !
Regards
Ashok/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger GOWDA PONNUSAMY said...
ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
பாடம் நன்றாக இருந்த போதிலும் இது மீள்பதிவு.ஆயினும் பதிவிற்கு நன்றிகள்.
-Peeyes./////

வகுப்பறைக்குப் பல புதியவர்கள் வந்துள்ளார்கள். அவர்களுக்காக இந்த மீள்பதிவு!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
டாஸ்மாக் பதிவின் பின்னூட்டத்தின் பதிலில் என்னை அண்ணா என குறிப்பிட்டுள்ளீர்கள். அண்ணா என்பது கோவையை பொருத்த மட்டில் மிக மரியாதைக்குறிய சொல்.அடியவனும் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவனே.
நன்றியுடன்,
-Peeyes.////

நல்லதுங்க அண்ணா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger C Jeevanantham said...
Thank you sir/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ak Ananth said...
மற்ற இடங்கள் சரி. எதற்கு துர்ஸ்தானங்களிலும் 30 பரல்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். முரண்பாடாக இருக்கிறது./////

3, 6, 8, & 12ஆம் இடங்களும் வீடுகள்தானே சுவாமி! அதை விட்டுவிட முடியுமா? ஆறாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருக்கும்போது, ஜாதகனுக்கு கடன், நோய் எதிரிகளே இருக்காது! அந்தக் கணக்கில் பாருங்கள்

SP.VR. SUBBAIYA said...

////Blogger உணர்ந்தவை! said...
337 சட்டி யின்னா கிரகங்களின் பரல்கள் , தசா , கோசார பலன்கள் எல்லாம் கரண்டி சொன்னா சரியா அய்யா?
அப்படின்னா இது சாத்தியமா?/////

சட்டி, கரண்டி எல்லாம் சரியாக வராது.
Natal Chart (ஜாதகம்) என்பது கார்
தசா/ புத்திகள் என்பது சாலை
கோள்சாரம் என்பது ஓட்டுனர்
காரும் நன்றாக இருந்து, சாலையும் ஆறு வழிச்சாலை போல நன்றாக இருந்து, ஓட்டுனரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஓட்டுனர் என்றால் பயணம் எத்தனை இனிமையாக இருக்கும்? யோசித்துப் பாருங்கள். காருக்கு ஜாதகத்தில் வீடுகளுக்கு உள்ள அஷ்டகவர்க்கப் பரல்களையும் மற்ற இரண்டிற்கும் அதனதன் (கிரகத்தின்) சுயவர்க்கப் பரல்களையும் பார்க்க வேண்டும். அர்த்தமாயிந்தா சாமி?

அய்யர் said...

முழு பாடலினையும்
முழுமையாக படித்தோம்

பார்வை மேலோட்டமாகவோ
படத்தின் காட்சி கொண்டோ

பார்த்தால் அதன் பொருள்
பதிவில் சொன்னத போலாகலாம்

ஆனால்
அதில் பொதிந்து உள்ள

சித்தாந்த கருத்து இது தான்
சிறப்பாக சொல்ல அந்த பாடலுக்கு

முழு உரையும் எமது பார்வையில்
சித்தாந்த கண் கொண்டு வரைந்துள்ளோம்

"அவ்வளவில் அவன் மகிழ்க" என்ற
அப்பர் திருவாக்கை நினைந்து

அமைதிகொள்கிறோம்
அன்பு வணக்கங்களுடன்..

journey said...

42 பரல்கள் 6ஆம் வீட்டில். என்ன பலன் அய்யா ? Thanks!

journey said...

//ஆறாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருக்கும்போது, ஜாதகனுக்கு கடன், நோய் எதிரிகளே இருக்காது! அந்தக் கணக்கில் பாருங்கள்//
Not true in a case I know! Must be other factors at play!


Ak Ananth said...

எனக்கு 6ம் இடத்தில் 37 பரல்கள். கடன், எதிரிகள் தொல்லை இல்லை. நோய் தொல்லைதான். அதுவும் சனி தசையிலிருந்துதான்.

ஆறாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருக்கும்போது, ஜாதகனுக்கு கடன், நோய் எதிரிகளே இருக்காது என்று வாத்தியார் சொன்னது சரிதான். ஆனால் மற்ற கிரக நிலைகளும், நடப்பு தசா புத்திகளும் இதை உறுதி செய்ய வேண்டும். நண்பர் journeyயின் கருத்திற்கு பதிலாகதான் இதைச் சொல்கிறேன்.

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
முழு பாடலினையும்
முழுமையாக படித்தோம்
பார்வை மேலோட்டமாகவோ
படத்தின் காட்சி கொண்டோ
பார்த்தால் அதன் பொருள்
பதிவில் சொன்னத போலாகலாம்
ஆனால்
அதில் பொதிந்து உள்ள
சித்தாந்த கருத்து இது தான்
சிறப்பாக சொல்ல அந்த பாடலுக்கு
முழு உரையும் எமது பார்வையில்
சித்தாந்த கண் கொண்டு வரைந்துள்ளோம்
"அவ்வளவில் அவன் மகிழ்க" என்ற
அப்பர் திருவாக்கை நினைந்து
அமைதிகொள்கிறோம்
அன்பு வணக்கங்களுடன்..////

அமைதி கொண்டவரை மகிழ்ச்சிதான்! உங்களுடைய சித்தாந்த ஆராய்ச்சி வாழ்க! வளர்க!

SP.VR. SUBBAIYA said...

////Blogger journey said...
42 பரல்கள் 6ஆம் வீட்டில். என்ன பலன் அய்யா ? Thanks!////

அடுத்து உள்ள இரண்டு பின்னூட்டட்ங்களையும் முழுமையாகப் படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger journey said...
//ஆறாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருக்கும்போது, ஜாதகனுக்கு கடன், நோய் எதிரிகளே இருக்காது! அந்தக் கணக்கில் பாருங்கள்//
Not true in a case I know! Must be other factors at play!////

ஜாதகத்தில் உள்ள ஒரு வீட்டைப் பல கோணங்களிலும் பார்க்க வேண்டும். அஷ்டகவர்க்கம் ஒரு கோணம் மட்டுமே! அடுத்துள்ள (Blogger Ak Ananth அவர்களின்) பின்னூட்டத்தைப் படியுங்கள்

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
எனக்கு 6ம் இடத்தில் 37 பரல்கள். கடன், எதிரிகள் தொல்லை இல்லை. நோய் தொல்லைதான். அதுவும் சனி தசையிலிருந்துதான்.
ஆறாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருக்கும்போது, ஜாதகனுக்கு கடன், நோய் எதிரிகளே இருக்காது என்று வாத்தியார் சொன்னது சரிதான். ஆனால் மற்ற கிரக நிலைகளும், நடப்பு தசா புத்திகளும் இதை உறுதி செய்ய வேண்டும். நண்பர் journeyயின் கருத்திற்கு பதிலாகதான் இதைச் சொல்கிறேன்.////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!!

journey said...

//ஜாதகத்தில் உள்ள ஒரு வீட்டைப் பல கோணங்களிலும் பார்க்க வேண்டும். அஷ்டகவர்க்கம் ஒரு கோணம் மட்டுமே! அடுத்துள்ள (Blogger Ak Ananth அவர்களின்) பின்னூட்டத்தைப் படியுங்கள்//

படித்தேன். தெலளிவாகியது. நன்றி அய்யா.

journey said...

//ஆனால் மற்ற கிரக நிலைகளும், நடப்பு தசா புத்திகளும் இதை உறுதி செய்ய வேண்டும். நண்பர் journeyயின் கருத்திற்கு பதிலாகதான் இதைச் சொல்கிறேன்.//
உங்கள் விளக்கம் தெளிவாக்குகிறது.நன்றி