மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.4.13

அழுக்காகிப்போன சமுதாயம்!


அழுக்காகிப்போன சமுதாயம்!
கவிதை நயம்:

படித்தால், மனதை நிறைக்க வேண்டும். அட என்று சொல்ல வைக்க வேண்டும். அப்படிப்பட்ட நறுக்குத் தெறித்த், நயம் மிக்க கவிதைகள் இப்பகுதியில் தொடர்ந்து வரும்!

உணவில் மட்டும்தான் வெரைட்டி வேண்டுமா? வாசிப்பிலும் வெரைட்டி வேண்டுமல்லவா?

பிடித்திருந்தால் ஒரு வார்த்தை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------------------
அழுக்குள்ள சமுதாயம்!

“கனவுகள் கண்டு கண்டு
கண்களும் சலித்துப் போச்சு!
தினம் தினம் சபையில் நின்று
தேகமும் அலுத்துப்போச்சு!
உணவினில் ருசி பேதங்கள்
உணர்வதும் மறந்து போச்சு!
இனியென்ன, இளமைக் காலம்
இருட்டுக்கே பலியாய் ஆச்சு

                  **********
அரசாங்க வேலைக்காரர்
‘அரைல்ட்சம் கொண்டா’ என்றார்
மருத்துவ நிபுனர் வந்து
‘மாடி வீடு உண்டா’ என்றார்
பொறியியல் பட்டதாரி
புதிய ‘கார்’ போதுமென்றார்
அறிவியல் வளர்ந்து என்ன?
அழுக்குள்ள சமுதாயத்தில்!

                  **********
ஜாதகம் பொருந்தினாலோ
ஜாதிகள் பொருந்தவில்லை!
ஜாதியில் பொருத்தமென்றால்
சம்மதம் பணத்தில் இல்லை!
தேதிகள் கிழிந்தாற் போல
தினசரி கிழிந்தாயிற்று!
வீதியில் ஒளி வெள்ளங்கள்
வீட்டில்தான் வெளிச்சம் இல்லை!

                  -- ஆக்கம்: குமரி அமுதன்
(முப்ப்து ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் படித்தது. என் சேகரிப்பில் இருந்து தந்துள்ளேன்)

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. 30 ஆண்டுகளுக்கு முன்னரே வரதட்சணைக் கொடுமை பற்றி எழுதப்பட்ட சமூக பிரக்ஞை உள்ள ஒரு கவிதை.நன்றாக உள்ளது.

    வரதட்சணை(டவுரி) என்பது ஆங்கிலேய வழக்கம். நம் நாட்டில் 'கன்யா சுல்கம்' என்ற பெண் வீட்டாருக்கு பொருள் கொடுத்து வாங்கும் வழக்கமே இருந்துள்ளது. இப்போதும் பரிசம் போடுதல் என்ற வழக்கம் சும்மா பேருக்கு உள்ளது.நான் படித்தவரை 1850களில் கூட கன்யாசுல்கம்தான் நடைமுறை.

    ReplyDelete
  2. ஆம் அழுக்காகிப் போன சமூகம்
    இங்கு அதுவே நாறிடும் அசிங்கம்

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கங்கள்,
    கவிதை அருமை. மிக்க நன்றி.
    தங்கள் மாணவன், ரெங்கா

    ReplyDelete
  4. வரதட்சனைக் கொடுமைதான்
    வாய்விட்டு சிரிக்கிறது -இந்த
    வலியும் வேதனையும் இங்கு
    எத்தனை பேருக்கு புரியுது.

    என்று தனது இதயக் குமுறலை, கவிதை என்னும் கத்தியைக் கொண்டு இந்த சமுதாயத்தை நாரு நாராய் கிழித்து இருக்கிறார் கவிஞர்.

    அருமையானக் கவிதை! பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. அழுக்குகள் இருந்தால் தான்
    அந்த சோப்புகளுக்கு வேலை..

    ஆதாயம் தேடும் இந்த
    சமுதாயத்தில் யாருக்கில்லை ஆசை

    ஜாதகமும் ஜாதியும் நல்ல
    ஜதி சேர்க்கும் பணத்தில்

    மதத்தில் முறிவுகளுமுண்டு
    சம்மதத்தில (நீதி)மன்றங்கள் தருவதுண்டு (divorce)

    வெளிச்சம் உண்டு அதனை
    பளிச்சிட நல்ல மனமில்லை..

    வழக்கம் போல் பாடல்
    வலமாக வருகிறது
    .....

    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை

    காதலென்னும் ஆசையில்லா
    பொம்மையும் இல்லை ..

    காட்டு மானை
    வேட்டையாட தயங்கவில்லையே

    இந்த வீட்டு மானின் உள்ளம்
    ஏனோ விளங்கவில்லையே,

    கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே....

    ReplyDelete
  6. நல்ல கவிதை. இதைப்போல் வாரம் ஒன்று வெளியிடுங்கள். அந்தக்காலத்து கவிதைகள் படிக்க ஒரு வாய்ப்பாச்சு.


    நாத்தனார்
    மாமியார்
    மாமனார்
    இவர்களுக்கு
    புதுக்கவிதை பிடிப்பதில்லை.

    இவர்கள் அந்த காலத்து ஆட்கள்
    ஆதலால் என்கிறீர்களா...

    இல்லை இல்லை...
    இந்த
    புதுக்கவிதையில்
    'சீர்" வருவதில்லை
    அதனால்.

    ReplyDelete
  7. வரதட்சிணை என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த பெரும் பிரச்சினை.கவிஞர் குமரி முத்து அவர்களின் தொகுப்பை முப்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியொட்டுள்ள தங்கள் பணி சிறக்க வணங்குகின்றோம்.
    இன்றைய தினத்தில் மக்கள் இந்த பிரச்சினைகள் வரும் என தெரிந்துதான் அப்போதே தீர்வு காண எண்ணி,பெண் சிசு கொலைமுறையை செயல்படுத்தினர் போலும்.அதிலும் தப்பித்து இருக்கும் பெண் குழந்தைகளை வரதட்சிணை கொடுமைக்கு ஆளாக்கக் கூடாது என்பதால் தானோ,கயவர்கள் இளம் பிஞ்சுகளையும் நாசம் செய்ய துணிந்துவிட்டனர்.(கலி முத்திப் போச்சுடா சாமி!)
    இன்னமும் ம.பி.,ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் “கன்யா சுல்கம்” என்னும் பெண் வீட்டாருக்கு பொருள் கொடுத்து திருமணம் முடிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
    வாத்தியாரின் அஸ்ட்ராலஜி/ அலசல் பாடங்களை எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.(வெகு நாட்களாகி விட்டது).

    ReplyDelete
  8. நறுக்கென்று சொல்லப்பட்ட வரிகள், கவிதையின் சுவையும் கூடி இதுபோன்ற மனதில் தைக்கக்கூடிய வகையில் கவிதைகள் இப்போது அமையாதா என்ற ஏக்கத்தைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  9. கவியரசர் அதே காலகட்டத்தில் இப்படிக் கூறினார் - காலம் ஒரு நாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்..என்று. ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இன்னும் தீரவில்லை. யாருக்கும் தீர்க்க மனமில்லை.

    ReplyDelete
  10. குருவிற்கு வணக்கம்

    பேனா எண்ணும் சாட்டை கொண்டு ஒரு போடு போட்டு புத்தி சொன்ன கவிஞர்க்கு நன்றி, அதை உணராமல் இன்றளவும் தவறுசெய்யும் வீனர்க்கு இக்கவிதை ஓர் நல்ல் பாடம்

    இந்த அருமையான கவிதை தேடிபிடித்து கொடுத்தற்கு குருவிற்கு நன்றி

    ReplyDelete
  11. வணக்கம்
    குமரிமுத்துகவியூற்றுபெற்றோரின்பெருமூச்சு வாத்தியாரின்கருவூலமோஅனந்தபுரம்7ம்அறை 

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    30 ஆண்டுகளுக்கு முன்னரே வரதட்சணைக் கொடுமை பற்றி எழுதப்பட்ட சமூக பிரக்ஞை உள்ள ஒரு கவிதை.நன்றாக உள்ளது.
    வரதட்சணை(டவுரி) என்பது ஆங்கிலேய வழக்கம். நம் நாட்டில் 'கன்யா சுல்கம்' என்ற பெண் வீட்டாருக்கு பொருள் கொடுத்து வாங்கும் வழக்கமே இருந்துள்ளது. இப்போதும் பரிசம் போடுதல் என்ற வழக்கம் சும்மா பேருக்கு உள்ளது.நான் படித்தவரை 1850களில் கூட கன்யாசுல்கம்தான் நடைமுறை.////

    இன்றைய திருமணச் ச்ந்தையில் பெண்ணின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆண்கள் பெண் வீட்டாருக்கு பொருள் கொடுத்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய காலம் வரப்போகிறது. நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger கவியாழி கண்ணதாசன் said...
    ஆம் அழுக்காகிப் போன சமூகம்
    இங்கு அதுவே நாறிடும் அசிங்கம்////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    கவிதை அருமை. மிக்க நன்றி.
    தங்கள் மாணவன், ரெங்கா////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரெங்கா!

    ReplyDelete
  15. ///Blogger ஜி ஆலாசியம் said...
    வரதட்சனைக் கொடுமைதான்
    வாய்விட்டு சிரிக்கிறது -இந்த
    வலியும் வேதனையும் இங்கு
    எத்தனை பேருக்கு புரியுது.
    என்று தனது இதயக் குமுறலை, கவிதை என்னும் கத்தியைக் கொண்டு இந்த சமுதாயத்தை நாரு நாராய் கிழித்து இருக்கிறார் கவிஞர்.
    அருமையானக் கவிதை! பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் மனம் நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////Blogger அய்யர் said...
    அழுக்குகள் இருந்தால் தான்
    அந்த சோப்புகளுக்கு வேலை..
    ஆதாயம் தேடும் இந்த
    சமுதாயத்தில் யாருக்கில்லை ஆசை
    ஜாதகமும் ஜாதியும் நல்ல
    ஜதி சேர்க்கும் பணத்தில்
    மதத்தில் முறிவுகளுமுண்டு
    சம்மதத்தில (நீதி)மன்றங்கள் தருவதுண்டு (divorce)
    வெளிச்சம் உண்டு அதனை
    பளிச்சிட நல்ல மனமில்லை..

    உங்களின் பின்னூட்டத்திற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  17. ////Blogger thanusu said...
    நல்ல கவிதை. இதைப்போல் வாரம் ஒன்று வெளியிடுங்கள். அந்தக்காலத்து கவிதைகள் படிக்க ஒரு வாய்ப்பாச்சு.
    நாத்தனார்
    மாமியார்
    மாமனார்
    இவர்களுக்கு
    புதுக்கவிதை பிடிப்பதில்லை.
    இவர்கள் அந்த காலத்து ஆட்கள்
    ஆதலால் என்கிறீர்களா...
    இல்லை இல்லை...
    இந்த
    புதுக்கவிதையில்
    'சீர்" வருவதில்லை
    அதனால்.////

    முடிந்தவரை வாரம் ஒன்றைத் தருகிறேன் தனுசு! நன்றி!

    ReplyDelete

  18. /////Blogger GOWDA PONNUSAMY said...
    வரதட்சிணை என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த பெரும் பிரச்சினை.கவிஞர் குமரி முத்து அவர்களின் தொகுப்பை முப்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியொட்டுள்ள தங்கள் பணி சிறக்க வணங்குகின்றோம்.
    இன்றைய தினத்தில் மக்கள் இந்த பிரச்சினைகள் வரும் என தெரிந்துதான் அப்போதே தீர்வு காண எண்ணி,பெண் சிசு கொலைமுறையை செயல்படுத்தினர் போலும்.அதிலும் தப்பித்து இருக்கும் பெண் குழந்தைகளை வரதட்சிணை கொடுமைக்கு ஆளாக்கக் கூடாது என்பதால் தானோ,கயவர்கள் இளம் பிஞ்சுகளையும் நாசம் செய்ய துணிந்துவிட்டனர்.(கலி முத்திப் போச்சுடா சாமி!)
    இன்னமும் ம.பி.,ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் “கன்யா சுல்கம்” என்னும் பெண் வீட்டாருக்கு பொருள் கொடுத்து திருமணம் முடிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
    வாத்தியாரின் அஸ்ட்ராலஜி/ அலசல் பாடங்களை எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.(வெகு நாட்களாகி விட்டது).////

    அடுத்த வாரம் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஜோதிடப் பாடங்கள் உண்டு பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  19. ///Blogger Thanjavooraan said...
    நறுக்கென்று சொல்லப்பட்ட வரிகள், கவிதையின் சுவையும் கூடி இதுபோன்ற மனதில் தைக்கக்கூடிய வகையில் கவிதைகள் இப்போது அமையாதா என்ற ஏக்கத்தைத் தூண்டுகிறது./////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  20. /////Blogger துரை செல்வராஜூ said...
    கவியரசர் அதே காலகட்டத்தில் இப்படிக் கூறினார் - காலம் ஒரு நாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்..என்று. ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இன்னும் தீரவில்லை. யாருக்கும் தீர்க்க மனமில்லை./////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  21. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    பேனா எண்ணும் சாட்டை கொண்டு ஒரு போடு போட்டு புத்தி சொன்ன கவிஞர்க்கு நன்றி, அதை உணராமல் இன்றளவும் தவறுசெய்யும் வீனர்க்கு இக்கவிதை ஓர் நல்ல் பாடம்
    இந்த அருமையான கவிதை தேடிபிடித்து கொடுத்தற்கு குருவிற்கு நன்றி////

    நல்லது. நெகிழ்ச்சியான உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்1

    ReplyDelete
  22. ///Blogger vprasana kumar said...

    அருமை ஐயா./////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  23. ////Blogger somasundara iyer Mahesasarma said...
    வணக்கம்
    குமரிமுத்து கவியூற்று பெற்றோரின் பெருமூச்சு வாத்தியாரின் கருவூலமோ அனந்தபுரம்7ம்அறை /////

    வாத்தியாரின் கருவூலத்தில் (வெற்றுக்) காகிதங்கள் மட்டுமே உள்ளன சுவாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com