மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.13

Astrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது!

 

Astrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது!

உதாரண் ஜாதகம்

சிலருக்கு இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி அப்படியே தேமே என்று இருப்பார்கள். உடல் தோற்றத்தில் ஆரோக்கியத்தில் அப்படியே
இருந்தால் மார்க்கண்டேயன் என்று பெருமையாகச் சொல்லலாம். வேலை யில் அப்படியே இருந்தால், எப்படிப் பெருமையாகச் சொல்ல முடியும்? அல்லது மகிழ்ச்சி கொள்ள முடியும்?

ஒருவர் அவரது 24 வது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் அவருக்கு அவர் பார்த்த வேலையில் உயர்வு (promotion) எதுவும்
கிடைக்க வில்லை. அவர் பார்த்தது அரசாங்க வேலை. சட்டப் படியான உயர்வு கூட அவருக்குக் கிடைக்க வில்லை. கிரகங்களின் முன்னால் நமது சட்டங்கள்
என்ன செய்ய முடியும்?

அதற்கு என்ன காரணம்? அவருக்கு எப்போது உயர்வு கிடைத்தது என்பதை ஜாதக ரீதியாக அலசுவோம். உங்கள் பயிற்சிக்காக இந்தப் பாடத்தை
நடத்துகிறேன்.பாடத்தை மட்டும் படியுங்கள். நவாம்சம் எங்கே? அஷ்டகவர்க்கம் எங்கே என்று கேட்டு தொல்லை செய்ய வேண்டாம். அலசியதை மட்டும் பாருங்கள். இது மேல் நிலைப் பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன் பட்டட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்


கடக லக்கின ஜாதகம். பூர நட்சத்திரம்

1. பத்தாம் அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் போய் அமர்ந்துள்ளார்

2. அத்துடன் அவர் சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கி அவதியில் (பலவீனமாக) உள்ளார்

3. ஏழு மற்றும் எட்டாம் அதிபதி சனியின் சேர்க்கை வேலை உயர்விற்குத் தடையாக இருந்தது. ஜாதகனின் 43ம் வயதுவரை அதே நிலைமைதான்! (அதாவது 18 வருட காலம் ராகுதிசையின் பிடியிலும் இருந்தார்)

4. அதற்குப் பிறகு குரு திசை ஆரம்பமானவுடன். மாற்றங்கள் ஏற்பட்டன. குரு தன்னுடைய ஒன்பதாம் (விஷேச) பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால்,
அந்த மாறுதல் ஏற்பட்டது. நல்ல காலம் வந்தது

5. குருவுடன் லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்திருப்பதால், அதுவும் இரண்டாம் வீட்டில் அவர்கள் இருவரும் இருப்பதால், உத்தியோகம் மற்றும் பண வரவில்
ம்ற்றத்தை ஏற்படுத்தினார்கள். உயர்வைக் கொடுத்தார்கள்

6. சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கியிருந்த பத்தாம் அதிபதிக்கு, குரு பகவான் தன்னுடைய தசாபுத்தியில் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்

7. குருவின் விஷேசப் பார்வையால், அதன் பார்வை பெறும் வீட்டை வைத்து, அதன் திசையில் (குரு திசையில்) ஜாதகனுக்கு ந்ன்மையான பலன்கள்
உண்டாகும். அதை மனதில் கொள்க அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தப் பாடம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===

17 comments:

  1. குருவிற்கு வணக்கங்கள்,
    பாடம் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் அலசும் விதம் நுணுக்கமாகவும் வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது. மிக்க நன்றி. தங்கள் மாணவன், ரெங்கா

    ReplyDelete
  2. Respected Sir,

    Valka Valamudan... Excellant post.

    Thank you so much sir.

    With regards,
    Ravi

    ReplyDelete
  3. Good Analysis Sir, Thank U very much,
    Pls post Many Lessons like this(Analysis with Horoscope)

    ReplyDelete
  4. நல்ல பதிவு.நன்றி.

    ReplyDelete
  5. என்னவோ இட்சிணி வந்து காதில் சொன்னதைப்போல என் லக்னத்தையே அலசி இருக்கிறீர்கள். 10ம் அதிபதி அங்காரகன் 12ல் மறைந்ததால் உத்யோகத்தில் பெஞ்சு தேய்த்துதான் ஓய்வு பெற்றேன். ஆனால் ஒரே ஊரில் நீண்ட காலம் வாழ்ந்ததால் குழந்தைகள் படிப்புக் குறைவின்றி நடந்தது.என் மூத்த‌ அண்ணன் மறைவால் ஏற்பட்ட சிரமங்களை சமாளிக்க முடிந்தது.மனைவியும் வேலைக்குச் சென்ற‌தால் 10 டு 5 ஜாப் மிகவும் செள‌கரியமாக இருந்தது.சரியாக மாலை 5 மணிக்கு இருக்கையை விட்டு எழுந்துவிடுவேன். 5=10க்கு மனைவியை பிக் அப் செயதுகொண்டு 5=30க்குள் வீடு. கும்பகோணம் டிகிரி காப்பி, சூடான டிபன் என்று வாழ்க்கை என்னவோ ஆனந்தமாக இருந்தது. ஆனால் சமூகத்தில் ஆபிஸருக்குக் கிடைக்கும் மதிப்பு எனக்குக்கிட்டவில்லை. என் ஜூனியர்கள் எல்லாம் பிரமோஷன் வாங்கிய பின் என்னிடமிருந்து விலகி நின்றபோது மனம் வருந்தாமல் இல்லை. போகட்டும். சென்றதினி மீளாது!

    ReplyDelete
  6. vanakam sir rahu thasai ill..guru puthuil nallthu nadukma.. rahu.. mahrathil.guru.kadathil.. guru.vakram...

    ReplyDelete
  7. /////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    பாடம் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் அலசும் விதம் நுணுக்கமாகவும் வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது. மிக்க நன்றி. தங்கள் மாணவன், ரெங்கா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Valka Valamudan... Excellant post.
    Thank you so much sir.
    With regards,
    Ravi/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  9. //////Blogger manikandan said..
    Good Analysis Sir, Thank U very much,
    Pls post Many Lessons like this(Analysis with Horoscope)/////

    முடிந்தவரை செய்கிறேன். நன்றி!

    ReplyDelete
  10. ////Blogger arul said...
    good lesson////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger ponnusamy gowda said...
    நல்ல பதிவு.நன்றி./////

    நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    என்னவோ இட்சிணி வந்து காதில் சொன்னதைப்போல என் லக்னத்தையே அலசி இருக்கிறீர்கள். 10ம் அதிபதி அங்காரகன் 12ல் மறைந்ததால் உத்யோகத்தில் பெஞ்சு தேய்த்துதான் ஓய்வு பெற்றேன். ஆனால் ஒரே ஊரில் நீண்ட காலம் வாழ்ந்ததால் குழந்தைகள் படிப்புக் குறைவின்றி நடந்தது.என் மூத்த‌ அண்ணன் மறைவால் ஏற்பட்ட சிரமங்களை சமாளிக்க முடிந்தது.மனைவியும் வேலைக்குச் சென்ற‌தால் 10 டு 5 ஜாப் மிகவும் செள‌கரியமாக இருந்தது.சரியாக மாலை 5 மணிக்கு இருக்கையை விட்டு எழுந்துவிடுவேன். 5=10க்கு மனைவியை பிக் அப் செயதுகொண்டு 5=30க்குள் வீடு. கும்பகோணம் டிகிரி காப்பி, சூடான டிபன் என்று வாழ்க்கை என்னவோ ஆனந்தமாக இருந்தது. ஆனால் சமூகத்தில் ஆபிஸருக்குக் கிடைக்கும் மதிப்பு எனக்குக்கிட்டவில்லை. என் ஜூனியர்கள் எல்லாம் பிரமோஷன் வாங்கிய பின் என்னிடமிருந்து விலகி நின்றபோது மனம் வருந்தாமல் இல்லை. போகட்டும். சென்றதினி மீளாது!/////

    கடக் லக்கின அலசல் ஒரு coincidence அவ்வளவுதான். பிரமோஷன் கிடைக்காததும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு விடவேண்டியதுதான்!

    ReplyDelete
  13. ////Blogger eswari sekar said...
    vanakam sir rahu thasai ill..guru puthuil nallthu nadukma.. rahu.. mahrathil.guru.kadathil.. guru.vakram...////

    மொத்த ராகு திசையும் மோசமாக இருக்காது. அதில் வரும் சுபக்கிரகங்களின் (குரு, சுக்கிரன் போன்ற) புத்தி (sub period) நன்மையானதாக இருக்கும். ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் நன்மையாக இல்லாவிட்டாலும், தீமைகள் இல்லாமல் இருக்கும்!


    ReplyDelete
  14. Super post. Thanks.
    I am also Kadaga lakanam, 10 th lord(Sevvai) is sitting in lagna with buthan & suriyan.
    As like analysis, No increment, no good position and instable Job :(

    ReplyDelete
  15. இந்த ஜாதகத்தில் 10ல் எந்த கிரகமும் இல்லை. ஆகையால் தொழில் சம்பந்தமாக 10ம் அதிபதியும், அவருடன் சேர்ந்த கிரகம், மற்றும் 10ம் இடத்தைப் பார்த்த கிரகம் இவைதான் முடிவு செய்வதாக இருக்கும்.

    என் ஜாதகத்தில் 10ம் அதிபதி 8 இருக்கிறார். இருப்பினும் வளர்பிறைச் சந்திரன் 10ல் இருப்பதால் எனக்கு இது போன்ற நிலை ஏற்பட்டதில்லை. நான் வேண்டாம் என்றாலும், பதவியும் பதவி உயர்வும் என்னைத் தேடிக் கொண்டு வந்தன.

    ReplyDelete
  16. ////Blogger Udhayaganesh said...
    Super post. Thanks.
    I am also Kadaga lakanam, 10 th lord(Sevvai) is sitting in lagna with buthan & suriyan.
    As like analysis, No increment, no good position and instable Job :(/////

    இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்த மகா திசையில் எல்லாம் மாறும்!

    ReplyDelete
  17. ////Blogger Ak Ananth said...
    இந்த ஜாதகத்தில் 10ல் எந்த கிரகமும் இல்லை. ஆகையால் தொழில் சம்பந்தமாக 10ம் அதிபதியும், அவருடன் சேர்ந்த கிரகம், மற்றும் 10ம் இடத்தைப் பார்த்த கிரகம் இவைதான் முடிவு செய்வதாக இருக்கும்.
    என் ஜாதகத்தில் 10ம் அதிபதி 8 இருக்கிறார். இருப்பினும் வளர்பிறைச் சந்திரன் 10ல் இருப்பதால் எனக்கு இது போன்ற நிலை ஏற்பட்டதில்லை. நான் வேண்டாம் என்றாலும், பதவியும் பதவி உயர்வும் என்னைத் தேடிக் கொண்டு வந்தன.////

    நல்லது. நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com