மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.3.13

Astrology: எப்போதுடா உருப்படுவான் இவன்?


Astrology: எப்போதுடா உருப்படுவான் இவன்?

அலசல் பாடம்

உருப்படுதல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? நல்ல நிலையை அடைதல் என்று பொருள். ஒரு ஜாதகத்தைப் பார்த்ததும், அந்த ஜாதகன் உருப்படுவானா அல்லது உருப்படாமல் போவானா என்பதைப் பார்த்துச் சொல்ல வேண்டும். ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் அதற்கு உதவும்.

ஒரு ஜாதகன் இருந்தான். சரியாகப் படிக்கவில்லை. ஸ்கூல் டிராப் அவுட். சீட்டைக் கொடுத்துப் பள்ளியை விட்டு அனுப்பிவிட்டார்கள். சேர்க்கை சரியில்லை. நண்பர்களுடன் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான். டீக்கடை பெஞ்சுகள், குட்டிச் சுவர்கள், என்று காலம் கரைந்து கொண்டிருந்தது. வயது இருபது. வேலைக்கும் செல்ல வில்லை.வீட்டில் பெற்றவகளுக்குக் கவலை. அவனைப் பார்க்கும்போதெல்லாம வருத்தம்.

இருக்காதா பின்னே?

அவனுடைய தாய்க்கு அதீதக் கவலை. அவனுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டுபோய் நல்ல ஜோதிடர் ஒருவரிடம் காட்டி. அவனுடைய எதிர்காலம் பற்றிக் கேட்டாள்.

“முப்பத்திரெண்டு வயது வரை அவன் அப்படித்தான் இருப்பான். அதற்குப் பிறகு அவனுடைய வாழ்க்கையில் தலைகீழான மாற்றம் இருக்கும். நன்றாகத் தொழில் செய்து நிறைய சம்பாதிப்பான். செல்வம் சேரும். எல்லாம் கூடிவரும். கவலையை விடுங்கள்” என்றார் ஜோதிடர்

எதை வைத்து அப்படிச் சொன்னார் அவர்? வாருங்கள் அவனுடைய ஜாதகத்தை அலசுவோம்
---------------------------------------------------------------------------------------------------------
சிம்ம லக்கின ஜாதகம். திருவோண நட்சத்திரம்

10 அக்டோபர் 1970ல் பிறந்த ஜாதகன. கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 6 வருடம் 5 மாதம் 8 நாட்கள். அதனுடன் அடுத்துள்ள செவ்வாய் திசை 7 ஆண்டுகளைக் கூட்டினால், 14 வயதில் ராகு திசை ஆரம்பம். அந்த வயதில் ராகு திசை அதவும் ஜாதகத்தில் 1-7 அச்சில் இருக்கும் அமைப்புடன் வந்தால் படுத்தி எடுத்துவிடும்.

முப்பத்தோரு வயதில் அவனுக்கு ராகு திசை முடிந்து குரு மகா திசை ஆரம்பமாகிறது. குரு இயற்கையிலேயே சுபக் கிரகம. அத்துடன் அவனுடைய ஜாதகத்தில் மூன்று மற்றும் பத்திற்குரிய சுக்கிரனுடன் சேர்ந்து நல்ல நிலையில் இருவரும் இருக்கிறார்கள். அத்துடன் கரமகாரகன் சனியின் பார்வையும் அவர்கள் மேல் விழுகிறது. ஆகவே  குரு திசை நல்ல வேலைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.

அத்துடன் லக்கினாதிபதி சூரியனும், 2 & 11ற்கு உரிய பதனும் கூட்டாக 2ல் இருப்பது. பொருள் வரவிற்கும், செல்வம் ச்ர்ர்வதற்கும் உத்திரவாதம் அளிக்கிறது. அதன்படிதான் எல்லாம் நடந்தது. 32 வயத்ற்கு மேல் ஜாதகன்,  நல்ல தொழில் ஒன்றைத் துவங்கி, பொருள் ஈட்டி, சகல செள்பாக்கியங் களூடன் ஷேமமாக இருந்தான். அதாவது  மேன்மையோடு இருந்தான்.

அது சரி, 31 வயதிற்கு முன்னால் ஏன் அப்படி இல்லை? 13 வயது முதல் 31 வயது வரை ராகு மகா திசை நடந்ததையும், ராகு ஏழாம் வீட்டில் அமர்ந்து லக்கினத்தைத் தன  பிடியில் (பார்வையில்) வைத்திருப்பதையும் பாருங்கள். அந்த அமைப்பு உருப்படாமல் அடிக்கும். அதுதான் நடந்தது.

சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் லக்கினத்தில் இருந்தாலும், ராகுவின் நேரடிக் கண்காணிப்பினாலும், கேதுவின் சேர்க்கையினாலும், அவரால முன்  காலகட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.

அடுத்த திசைக்கு உரிய கிரகம, தன் திசை வந்ததும், அதற்கு உரிய விதத்தில் ஜாதகனைப் புரட்டிப்போட்டு சரி செய்தது.

மகா திசைகள் எத்தனை முக்கியம் என்பதை உங்களுக்கு அறியத் தருவதற்காக இன்று இதை இங்கே பதிவிட்டிருக்கிறேன். திருட்டுப் போகும் என்று தெரிந்தும்  பதிவிட்டிருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

38 comments:

  1. திசா பலன்களைக் கணிப்பதில் இது மிகவும் முக்கியமான பாடம் ..! மிக்க நன்றி..வாத்தியார் அய்யா அவர்களுக்கு !

    ReplyDelete
  2. குருவுக்கு வணக்கம்..
    மிக நல்ல பாடம்.மகாதசைகளின் முக்கியத்துவத்தை நன்கு விளக்கியிருக்கிறீங்க.நன்றி.

    ReplyDelete
  3. படித்தவன் பள்ளியில்
    பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்

    படிக்காதவன் நகருக்கு வெளியே
    பள்ளிக் கூடம் நடத்திக் கொண்டிருக்கிறார்..

    அதிகம் படித்தவர்
    அவ்வளவாக சோபிப்பதில்லை..

    அறைகுறைகளே..
    அவர்களுக்கு தலைமை வகிக்கிறது

    பிள்ளைகள் படிக்கலையா
    பிடியுங்கள் 337 டானிக் என

    பரீட்சை நேரத்தில் சரியான
    பாடம் இந்த அலசல் பாடம்

    ReplyDelete
  4. மஹா தசையை வைத்து இன்று வந்த அலசல் பாடத்திற்கும் நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  5. அய்யா நல்ல அலசல் பாடம்,
    ////திருட்டுப் போகும் என்று தெரிந்தும் பதிவிட்டிருக்கிறேன்////
    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியது...மிகவும் வருத்தமளிக்கிரது அய்யா.

    ReplyDelete
  6. Respected Sir,

    Happy morning, wonderful analysis...

    Thank u so much much much sir.

    With kind regards,
    Ravi

    ReplyDelete
  7. அருமையான பாடம் .
    எனக்கொரு சந்தேகம் அய்யா

    ராகு 7 ல் இருந்தால் ,அந்த வீட்டுக்கு உரிய பலன்களை தானே கொடுக்க வேண்டும் .அப்போது நல்லது தானே செய்ய வேண்டும் ?

    ReplyDelete
  8. ayyaa, raagu 7il irundhum, kaaragar sani bagavaan meshathil neesamadainthum (suya paral 2)irunthathaal, raaghu thisayil thozhilil munnetram illai endru eduthukkollalaama.

    Thanks.

    ReplyDelete
  9. நல்ல பயிற்சி பாடம்...நன்றி ஐயா...

    ReplyDelete
  10. vanakam sir .rahu.desai nadukum.. pozthu .rahu engu.erunthulum. kastam thana..sir

    ReplyDelete
  11. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள். மஹா தசைகளின் முக்கியத்துவம் பற்றி தாங்கள் பழைய பாடங்களிலும் குறிப்பிட்டு காட்டியுள்ளீர்கள்.இன்றைய பதிவிலும் அதை உணர்த்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
    லக்கினத்தில் கேது மற்றும் 7ம் இடத்தில் உள்ள ராகு லக்கினத்தை தனது நேர்ப்பார்வையில் வைத்துள்ளார்.ஆயினும் குருவினுடைய 5ம் பார்வை ராகுவின் மீதும் 7ம் பார்வையாக காரகனான நீச்ச சனியின் மீதும் வைத்துள்ளார்.குருவின் பார்வை பெற்ற ராகு சிறிதளவாவது ஆறுதல் தந்து இருப்பாரல்லவா.இந்த நிலையில் 7ம் இடம் பாதிப்பு ஆனால் அவரது மண வாழ்வின் நிலை அறியவும் ஆவல்.(1/7 ல் கேது(+குரு)/ராகு என்னும் நிலை எனது ஜாதகத்திலும் உள்ளது)
    நல்ல பாடத்திற்கு/அலசலுக்கு நன்றிகள்.
    -Peeyes.

    ReplyDelete
  12. Dear Sir,
    Please validate my observations below:
    1)Association of lagnadhipathi with 2nd lord and 11th lord mercury in the 2nd house indicates that the native could have undertaken family business after the age of 32.
    2) Conjunction of guru, sukra in 3rd house indicates that the native had artistic talents. the native was very much interested in music,drama. Saturn's aspect puts a restriction on those interests.
    3) Another dimension of observation is, Association with bad friends can be seen from 11th house or 4th house (house of comforts, as friends are a source of comforts).In Rahu dasa, if Rahu gave the effect of its house lord,saturn throwing its third aspect to 11th house(house of friends). Another angle is Aspect of Mars(Yogakaraka for simha lagna and 4th house lord) on Rahu gave him friends association and spoiled him.
    Couldn't understand why Guru's 5th aspect on Rahu didn't help the native? Gurus aspect wasn't enough to conteract two malefic aspects of mars and ketu???

    ReplyDelete
  13. guru thulam raasiyil pagai allava?5aam sthanam ok . but
    athudan 8aam sthanathiRkum adhipadhi allava ? ungal karuththu

    ReplyDelete
  14. அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்.
    வழக்கம் போல, பாடம் மிக அருமை.
    இன்றைக்கு என்னவோ சொல்ல தோன்றியது, தங்கள் தமிழ் நடை மிக அருமை. எப்போதும் நினைப்பதுண்டு ஆனால் சொல்லியதில்லை. இன்று ஏதோ உந்துதல், சொல்ல வைத்தது ஐயா,
    தங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. அருமையான பாடம்.

    ReplyDelete
  16. ////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    திசா பலன்களைக் கணிப்பதில் இது மிகவும் முக்கியமான பாடம் ..! மிக்க நன்றி..வாத்தியார் அய்யா அவர்களுக்கு !/////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  17. /////Blogger Thava Kumaran said...
    குருவுக்கு வணக்கம்..
    மிக நல்ல பாடம்.மகாதசைகளின் முக்கியத்துவத்தை நன்கு விளக்கியிருக்கிறீங்க.நன்றி.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger அய்யர் said...
    படித்தவன் பள்ளியில்
    பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்
    படிக்காதவன் நகருக்கு வெளியே
    பள்ளிக் கூடம் நடத்திக் கொண்டிருக்கிறார்..
    அதிகம் படித்தவர்
    அவ்வளவாக சோபிப்பதில்லை..
    அறைகுறைகளே..
    அவர்களுக்கு தலைமை வகிக்கிறது
    பிள்ளைகள் படிக்கலையா
    பிடியுங்கள் 337 டானிக் என
    பரீட்சை நேரத்தில் சரியான
    பாடம் இந்த அலசல் பாடம்/////

    337 டானிக் தீர்ந்து விட்டால் சொல்லுங்கள் சுவாமி! அனுப்பி வைக்கிறேன்!

    ReplyDelete
  19. ////Blogger thanusu said...
    மஹா தசையை வைத்து இன்று வந்த அலசல் பாடத்திற்கும் நன்றிகள் அய்யா.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger manikandan said...
    அய்யா நல்ல அலசல் பாடம்,
    ////திருட்டுப் போகும் என்று தெரிந்தும் பதிவிட்டிருக்கிறேன்////
    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியது...மிகவும் வருத்தமளிக்கிரது அய்யா.////

    ஆமாம். நம்மால் வருந்த மட்டுமே முடியும். நாட்டின் நிலைமை அப்படி!

    ReplyDelete
  21. ////Blogger manikandan said...
    அய்யா நல்ல அலசல் பாடம்,
    ////திருட்டுப் போகும் என்று தெரிந்தும் பதிவிட்டிருக்கிறேன்////
    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியது...மிகவும் வருத்தமளிக்கிரது அய்யா.////

    ஆமாம். நம்மால் வருந்த மட்டுமே முடியும். நாட்டின் நிலைமை அப்படி!

    ReplyDelete
  22. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning, wonderful analysis...
    Thank u so much much much sir.
    With kind regards,
    Ravi/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

  23. ////Blogger dubai saravanan said...
    அருமையான பாடம் .
    எனக்கொரு சந்தேகம் அய்யா
    ராகு 7 ல் இருந்தால் ,அந்த வீட்டுக்கு உரிய பலன்களை தானே கொடுக்க வேண்டும் .அப்போது நல்லது தானே செய்ய வேண்டும் ?/////

    ராகு அமர்ந்த வீட்டுக்காரன் சனி நீசமாக உள்ளதைக் கவனியுங்கள்! ராகு எந்த வீட்டில் உள்ளானோ அந்த அதிபதியின் வேலையைச் செய்வான். இங்கே அதிபதி நீசமாகிவிட்டானே ராசா!

    ReplyDelete
  24. /////Blogger Muthukrishnan Prakash said...
    ayyaa, raagu 7il irundhum, kaaragar sani bagavaan meshathil neesamadainthum (suya paral 2)irunthathaal, raaghu thisayil thozhilil munnetram illai endru eduthukkollalaama.
    Thanks.////

    ஆகா, அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்! ராகு அமர்ந்த வீட்டுக்காரன் சனி நீசமாக உள்ளதைக் கவனித்திருக்கிறீர்கள்! ராகு எந்த வீட்டில் உள்ளானோ அந்த அதிபதியின் வேலையைச் செய்வான். இங்கே அதிபதி நீசமாகிவிட்டான் அல்லவா? அதுதான் கோளாறு!!

    ReplyDelete
  25. ////Blogger Arul said...
    நல்ல பயிற்சி பாடம்...நன்றி ஐயா...////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  26. /////Blogger eswari sekar said...
    vanakam sir .rahu.desai nadukum.. pozthu .rahu engu.erunthulum. kastam thana..sir////

    இல்லை. அதில் பல விஷயங்கள் கலந்துள்ளன, ராகு அமர்ந்த இடத்துக்காரன் நீசமாகக்கூடாது.

    ReplyDelete
  27. ////Blogger arul said...
    arumayana paadam ayya/////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  28. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள். மஹா தசைகளின் முக்கியத்துவம் பற்றி தாங்கள் பழைய பாடங்களிலும் குறிப்பிட்டு காட்டியுள்ளீர்கள்.இன்றைய பதிவிலும் அதை உணர்த்தியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
    லக்கினத்தில் கேது மற்றும் 7ம் இடத்தில் உள்ள ராகு லக்கினத்தை தனது நேர்ப்பார்வையில் வைத்துள்ளார்.ஆயினும் குருவினுடைய 5ம் பார்வை ராகுவின் மீதும் 7ம் பார்வையாக காரகனான நீச்ச சனியின் மீதும் வைத்துள்ளார்.குருவின் பார்வை பெற்ற ராகு சிறிதளவாவது ஆறுதல் தந்து இருப்பாரல்லவா.இந்த நிலையில் 7ம் இடம் பாதிப்பு ஆனால் அவரது மண வாழ்வின் நிலை அறியவும் ஆவல்.(1/7 ல் கேது(+குரு)/ராகு என்னும் நிலை எனது ஜாதகத்திலும் உள்ளது)
    நல்ல பாடத்திற்கு/அலசலுக்கு நன்றிகள்.
    -Peeyes./////

    ராகு அமர்ந்த இடத்துக்காரன் நீசம் பெற்றூள்ளான். அதுதான் இந்த ஜாதகத்தில் உள்ள கோளாறு! உங்களுக்குத்தான் மணிவிழா வரவுள்ளதே!!!! இப்போது போய் மண வாழ்வை பற்றி எதற்குக் கலக்கம்?

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. ////Blogger Sathyanarayanan said...
    Dear Sir,
    Please validate my observations below:
    1)Association of lagnadhipathi with 2nd lord and 11th lord mercury in the 2nd house indicates that the native could have undertaken family business after the age of 32.
    2) Conjunction of guru, sukra in 3rd house indicates that the native had artistic talents. the native was very much interested in music,drama. Saturn's aspect puts a restriction on those interests.
    3) Another dimension of observation is, Association with bad friends can be seen from 11th house or 4th house (house of comforts, as friends are a source of comforts).In Rahu dasa, if Rahu gave the effect of its house lord,saturn throwing its third aspect to 11th house(house of friends). Another angle is Aspect of Mars(Yogakaraka for simha lagna and 4th house lord) on Rahu gave him friends association and spoiled him.
    Couldn't understand why Guru's 5th aspect on Rahu didn't help the native? Gurus aspect wasn't enough to conteract two malefic aspects of mars and ketu???/////

    ராகு அமர்ந்த இடத்தின் அதிபதி சனி நீசம் பெற்றுள்ளதைப் பாருங்கள். அதுதான் முக்கியமான கோளாறு.

    ReplyDelete
  31. /////Blogger DevikaArul said...
    guru thulam raasiyil pagai allava?5aam sthanam ok . but
    athudan 8aam sthanathiRkum adhipadhi allava ? ungal karuththu/////

    குரு முதன்மை சுபக்கிரகம். அவர் என்ன நிலைமையில் இருந்தாலும் நன்மைகளயே செய்வார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

    ReplyDelete
  32. /////Blogger Bhuvaneshwar said...
    அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்.
    வழக்கம் போல, பாடம் மிக அருமை.
    இன்றைக்கு என்னவோ சொல்ல தோன்றியது, தங்கள் தமிழ் நடை மிக அருமை. எப்போதும் நினைப்பதுண்டு ஆனால் சொல்லியதில்லை. இன்று ஏதோ உந்துதல், சொல்ல வைத்தது ஐயா,
    தங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்./////

    நான் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் பக்தன். அதனால் எனது தமிழ் நடை அவர் அளித்த கொடை!

    ReplyDelete
  33. /////Blogger kimu said...
    அருமையான பாடம்./////

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  34. இந்த ஜாதகருக்கு குரு பகவான் தன் சுய புத்தியிலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

    எனக்கு குரு தசை சுய புத்தியில் பெரிதாக நன்மை/தீமை ஒன்றும் நடக்கவில்லை. சனி புத்தியில் நல்ல உத்தியோகத்தைக் கொடுத்து பிறந்த ஊர், குடும்பம் இவற்றைப் பிரிந்து 150 km தொலையில் உள்ள ஒரு ஊரில் பணியில் சேர நேர்ந்தது. சூரிய புத்தியில் பதவி உயர்வு என்ற பெயரில் இன்னும் தூரமாக உள்ள இடத்திற்கு பணி மாற்றம் கிடைத்து. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ராகு புத்தியில் இன்னும் தூரமாக (என் பிறந்த ஊரில் இருந்து 550 km) உள்ள இடத்திற்கு செல்ல நேர்ந்தது. எல்லாமே remote village என்பார்களே அது போன்ற இடங்கள். மீண்டும் சனி தசை சுய புத்தியில்தான் பிறந்த ஊருக்கு மிக அருகிலேயே வேலைக்கு வந்து சேர்ந்தேன். நான் கணக்கர் வேலை செய்தாலும் செய்த இடம் ரப்பர், செம்பனை தோட்டம் (Estate) போன்ற இடங்களில்தான்.

    ReplyDelete
  35. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களின் பின்னூட்டக் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.7ம் இடத்தில் அமர்ந்த ராகு செய்தது என்ன என்று அறியும் நோக்கமே எனது சந்தேகம்,அதுவும் ஜாதகருக்கே.எனக்கல்ல.
    குருவுடன் சேர்ந்த கேது தசை எனது வாழ்க்கையில் பல தொல்லைகளை(ராகு புத்தி, முடிவு 21-11-2013). சில தொல்லைகள் காரணமாக வேலையையும் ரிசைன் செய்து விட்டு,வேறு வேலைக்கு முயற்ச்சியுடனுள்ளேன்.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  36. /////Blogger Ak Ananth said...
    இந்த ஜாதகருக்கு குரு பகவான் தன் சுய புத்தியிலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்.
    எனக்கு குரு தசை சுய புத்தியில் பெரிதாக நன்மை/தீமை ஒன்றும் நடக்கவில்லை. சனி புத்தியில் நல்ல உத்தியோகத்தைக் கொடுத்து பிறந்த ஊர், குடும்பம் இவற்றைப் பிரிந்து 150 km தொலையில் உள்ள ஒரு ஊரில் பணியில் சேர நேர்ந்தது. சூரிய புத்தியில் பதவி உயர்வு என்ற பெயரில் இன்னும் தூரமாக உள்ள இடத்திற்கு பணி மாற்றம் கிடைத்து. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் ராகு புத்தியில் இன்னும் தூரமாக (என் பிறந்த ஊரில் இருந்து 550 km) உள்ள இடத்திற்கு செல்ல நேர்ந்தது. எல்லாமே remote village என்பார்களே அது போன்ற இடங்கள். மீண்டும் சனி தசை சுய புத்தியில்தான் பிறந்த ஊருக்கு மிக அருகிலேயே வேலைக்கு வந்து சேர்ந்தேன். நான் கணக்கர் வேலை செய்தாலும் செய்த இடம் ரப்பர், செம்பனை தோட்டம் (Estate) போன்ற இடங்களில்தான்.////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களின் பின்னூட்டக் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.7ம் இடத்தில் அமர்ந்த ராகு செய்தது என்ன என்று அறியும் நோக்கமே எனது சந்தேகம்,அதுவும் ஜாதகருக்கே.எனக்கல்ல.
    குருவுடன் சேர்ந்த கேது தசை எனது வாழ்க்கையில் பல தொல்லைகளை (ராகு புத்தி, முடிவு 21-11-2013). சில தொல்லைகள் காரணமாக வேலையையும் ரிசைன் செய்து விட்டு,வேறு வேலைக்கு முயற்ச்சியுடனுள்ளேன்.
    நன்றியுடன்,
    -Peeyes./////

    யாமிருக்கப் பயமேன்? என்று சொல்லி அணைக்கும் முருகப் பெருமானின் திருவடிகளை வணங்குகள். முயற்சி திருவினையாகும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com