மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.3.13

Astrology: சேர்ந்து வாழ்ந்தவர்கள் ஏன்டா சேர்ந்து போவதில்லை?

 Astrology: சேர்ந்து வாழ்ந்தவர்கள் ஏன்டா சேர்ந்து போவதில்லை?

பயிற்சிப் பாடம்

பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!

- கவியரசர் கண்ணதாசன்

சேர்ந்து போவது தம்பதிகளின் கைகளில் இல்லை! சேர்ந்து போவதற்கு சனீஷ்வரனின் அனுக்கிரகம் வேண்டும். இருவருக்கும் போர்டிங் பாஸை ஒரே நேரத்தில் ஆயுள்காரகன் சனீஷ்வரன் கொடுத்தால் மட்டுமே சேர்ந்து போக முடியும்!

பல சிக்கல்கள் நிறைந்தது வாழ்க்கை. சிக்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது. இருந்தால் காட்டுங்கள். சந்தோசமடைவேன்!

மற்ற சிக்கல்கள் நாம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதனால் மனத் துணிச்சலையும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்து, சிக்கலுக்கான முடிவை அல்லது தீர்வை எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுக்கலாம்

ஆனால், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல், இன்னொருவர் (கணவன் அல்லது மனைவி) சம்பந்தப்படுவதால் அப்படி எடுக்க முடியாது.

அத்துடன் நாம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், விதி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்கும்.

நம் வாழ்க்கை, அல்லது நம் குழந்தைகளின் வாழ்க்கை அல்லது நம் உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் திருமணத்தை வைத்து ஏதாவது சிக்கல் உண்டாகுமா என்று பார்ப்பதற்கான பயிர்சி வகுப்பு பாடங்களை இன்று உங்களுக்கு அளிக்கிறேன்.  பொறுமையாகப் படித்து, அத்தனை விதிகளையும் மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்
----------------------------------------------------------------------------
Chances of Multiple marriages: ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் எப்போது நடைபெறும்?

முதல் திருமணம் கெட்டுவிட்டால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்.

மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டால், அல்லது கருத்து வேற்றுமையால் தம்பதிகள் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நேரிடும்

உயர்கல்வி, அதீத வருமானம், பொருளாதார சுதந்திரம், பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை போன்ற காரணங்களால், இப்போது அதிக அளவில் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. அதையும் மனதில் கொள்க!

In this lesson an attempt has been made to discuss a few planetary combinations indicating re marriage due to divorce, separation or death of wife

The rules are based on Brihat Parashar Hora Shastra:


1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.

3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)

5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.

6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.

7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.

10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.

11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.

இது எல்லாம் பொதுவிதிகள்.

திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!

அன்புடன்
வாத்தியார்!

-----------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

arul said...

superb post

Gnanam Sekar said...

அய்யா காலைவணக்கம் . பாடம் அருமை

thanusu said...

இன்றைய பாடம் பயன் உள்ள பல தகவல்கள் கொண்டுள்ளது.

என்ன ஒன்று நமக்குத்தான் நம் ஜாதகத்தில் இந்த அமைப்புகள் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது, இல்லையென்றால் இன்னுமொரு திருமணம் செய்து பார்த்திருக்கலாம்.

Arul said...

Thank you for the detailed lesson sir.

eswari sekar said...

vanakam sir

பூபதியின் நிழல் said...

அய்யா வணக்கம் பெண்கள் மறுமணத்திற்கும் இந்த விதிகள் பொருந்துமா

manikandan said...

Good Lesson, Thank U very Much sir

அய்யர் said...

முன்பெல்லாம் காதலில் தோல்வியா
முகத்தில் தாடி.. ஒரு ஜோல்னா பை

அப்புறம்..
காதலில் தோல்வியா..
கட்டாய தற்கொலைகள்..

பிறகு..
காதலில் தோல்வியா..
கவலையை விடு வேறு கல்யாணம் தான்

இப்போ..
காதலில் தோல்வியா..
காத்திருக்கிறேன் உன் டைவர்ஸ்க்கு

நாளை...
உங்களின் சிந்தனைக்கு

saravanan said...

vannakkam sir,

today's lesson was very usefull.

for second marriage do we have to check only 7 th place or we need to check 11th place also?SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
superb post/////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

////Blogger Gnanam Sekar said...
அய்யா காலைவணக்கம் . பாடம் அருமை////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
இன்றைய பாடம் பயன் உள்ள பல தகவல்கள் கொண்டுள்ளது.
என்ன ஒன்று நமக்குத்தான் நம் ஜாதகத்தில் இந்த அமைப்புகள் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது, இல்லையென்றால் இன்னுமொரு திருமணம் செய்து பார்த்திருக்கலாம்./////

இன்றுள்ள விலைவாசி நிலைமையில் ஒரு குடும்பத்திற்கே திணறுகிறது ராசா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Arul said...
Thank you for the detailed lesson sir.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger eswari sekar said...
vanakam sir/////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger பூபதியின் நிழல் said...
அய்யா வணக்கம் பெண்கள் மறுமணத்திற்கும் இந்த விதிகள் பொருந்துமா////

ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் என்று தலைப்பிலேயே சொல்லிவிட்டேன். பெண்ணை மட்டும் ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger manikandan said...
Good Lesson, Thank U very Much sir////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
முன்பெல்லாம் காதலில் தோல்வியா
முகத்தில் தாடி.. ஒரு ஜோல்னா பை
அப்புறம்..
காதலில் தோல்வியா..
கட்டாய தற்கொலைகள்..
பிறகு..
காதலில் தோல்வியா..
கவலையை விடு வேறு கல்யாணம் தான்
இப்போ..
காதலில் தோல்வியா..
காத்திருக்கிறேன் உன் டைவர்ஸ்க்கு
நாளை...
உங்களின் சிந்தனைக்கு////

பிஸ்சா, பேல்பூரி காலம். அப்படித்தான் இருக்கும் சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger saravanan said...
vannakkam sir,
today's lesson was very usefull.
for second marriage do we have to check only 7 th place or we need to check 11th place also?/////

For second marriage or first marriage first check your bank balance!:-)))