மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

26.3.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 20

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 20
ஜோதிடத் தொடர் - பகுதி 20

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சுவாதி நட்சத்திரம் (துலாம் ராசி)

இது ராகுவின் நட்சத்திரம்.

1. பரணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. உத்திரம்
10. கேட்டை
11. உத்திராடம்
12. உத்திரட்டாதி
13. ரேவதி

ஆகிய 13 நட்சத்திரங்கள் பொருத்தமான நட்சத்திரங்கள்

இவற்றுள் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் மீன ராசிக்கு உரியவை. மீன ராசி துலா ராசிக்கு ஆறாவது ராசி. மீன ரசிக்கு துலா ராசி எட்டாவது ராசி ஆகவே அஷ்டம சஷ்டம ஏற்படும். அவற்றை விலக்குவது நல்லது. மீதமுள்ள 11 நட்சத்திரங்களும் பொருத்தமானவைதான்!

ரோஹிணி, திருவாதிரை, ஹஸ்தம், திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை சுவாதி நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. அதையும் மனதில் கொள்ளவும்.

அஸ்விணி, சித்திரை, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள், மூலம், பூராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

அனுஷம் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10 comments:

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
தகவல் அருமை. நட்சத்திர பொருத்தங்கள் வரிசை உபயோகமாக உள்ளது.
தங்கள் மாணவன், ரெங்கா

அய்யர் said...

பங்குனி உத்திர சிறப்பாக வரும்
பதிவு என நினைத்தோம்..

உத்திர நாள் திருமணத்திற்கு
உகந்தது என மா பிள்ளை பதிவு

சிறப்பாக அமைந்தது என்றாலும்
சிந்திக்க ஒரு பாடல் சுழல விடுகிறோம்

...

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி

பொன்மணிக் கண்களில்
அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன்
கைவளை பூட்டி

தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி

DevikaArul said...

ஐய்யா வணக்கம்.

சில ஜோதிடர்கள் பொருத்தம் பார்க்கும் போது , ரஜ்ஜு தட்டிப் போனாலும் ஆரோஹணம் அவரோஹனம் என வந்தால் ஜாதகங்களை சேர்க்கலாம் எங்கிறார்களே. அங்கணம் வரும் போது , தசா சந்திப்பு வருவதில்லை. அப்படி 30 வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு தம்பதியினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு மிகவும் சந்தோஷமாக உள்ளனர். 2 மகன் கள் ஒரு மகள். மகள் வழி ஒரு பேர குட்டி .

பெண் நட்சட்திரம் : ரொஹினி(1 பாதம்)

ஆண் நட்சட்திரம் : சுவாதி ( 4 பாதம் )


in arranged marriages , lot of marriages are getting delayed because of small small issues in horoscopes and because of astrologers who do not know much about astrology and postpone a lot of marriages for the sake of money.

Dear sir , your answer to this doubt will help a lot of people . Thanking you in advance

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா

V Dhakshanamoorthy said...

பயனுள்ளபதிவு
நன்றி

kmr.krishnan said...

Thank you, Sir!

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்,
நன்றி.

Siva said...

வணக்கம்

சில சந்தேகங்கள் :

பொருத்தம் பார்க்கும் போது :

1) ஆணின் லக்னத்திற்கு பெண்ணின் லக்னம் 1,5,9 ல் இருப்பது சிறப்பான பொருத்தம் ஆக இருக்கும் என்பதாக படித்தேன் . இந்த முறை சரியானதா ?

2) ஆணின்/பெண் லக்னாதிபதி , குடும்பாதிபதி , களத்திர அதிபதி , பாக்கிய அதிபதி பெணின் /ஆணின் ஜாதகத்தில் கேந்திரா , திரிகோண நல்ல நிலையில் இருந்தால் நல்ல பொருத்தமாக கருதலாமா?

எதாவது தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்

அடைமழைக்காலம் said...

அய்யா... துலாம் ராசிக்கு, விருச்சிக ராசி 1ஆம் இடம். விருச்சிக ராசிக்கு, துலாம் ராசி 12ஆம் இடம். அப்படியானால் விருச்சிக ராசியும் தவிர்க்கப்பட வேண்டியதுதானே?

அடைமழைக்காலம் said...

அய்யா... துலாம் ராசிக்கு, விருச்சிக ராசி 1ஆம் இடம். விருச்சிக ராசிக்கு, துலாம் ராசி 12ஆம் இடம். அப்படியானால் விருச்சிக ராசியும் தவிர்க்கப்பட வேண்டியதுதானே?