மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.3.13

Astrology எப்போது பெற்றோர்களை இழக்க நேரிடும்?


Astrology எப்போது பெற்றோர்களை இழக்க நேரிடும்?


அலசல் பாடம்!

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும்  ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.

2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs)
குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்

3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.

4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.

5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.

6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.

7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.

8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.

10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)

11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.

12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி  எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

இது மேல்நிலை வகுப்பில் வெளிவந்த பாடம். அனைவருக்கும் பயன் படட்ட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலைப் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

ரமேஷ் வெங்கடபதி said...

பாப கர்த்தாரி அவயோகத்தின் தன்மைகளை..12 வீடுகளுக்கும், தனித்தனியே..பட்டியலிட்டு அய்யா அவர்கள் கொடுத்தது..பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது..மிக்கநன்றி வாத்தியர் அய்யா அவர்களுக்கு !

Sanjai said...

ஆம், பயனுள்ளதாக இருந்தது :)

arul said...

arumayana padam

அய்யர் said...

பாவிகள் இல்லாத உலகமா..
பாபிகள் இல்லாத ஜாதகமா...

எங்கே யார் இருந்தால்
என்ன ஆகும் என விளக்கிய பாடம்

பார்த்து வைத்த பழைய ஜாதககங்களை
பார்க்க வைத்தது.. பயனுள்ள பாடம்

நலமுடன்.. வாழ்க..
நன்மையுடன் வளர்க..

வழக்கம் போல்
வலமாய் வரும் பாடல் ..

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்

கூடி வரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா?

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்

Ramki said...

Dear Sir

Not only this post, what ever you are sharing with us is very informative, very useful and able to understand easily by a common man like me...Thanks.

Regards
Ramki

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
பாப கர்த்தாரி அவயோகத்தின் தன்மைகளை..12 வீடுகளுக்கும், தனித்தனியே..பட்டியலிட்டு அய்யா அவர்கள் கொடுத்தது..பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது..மிக்கநன்றி வாத்தியர் அய்யா அவர்களுக்கு !/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Sanjai said...
ஆம், பயனுள்ளதாக இருந்தது :)////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
arumayana padam/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said...
பாவிகள் இல்லாத உலகமா..
பாபிகள் இல்லாத ஜாதகமா...
எங்கே யார் இருந்தால்
என்ன ஆகும் என விளக்கிய பாடம்
பார்த்து வைத்த பழைய ஜாதககங்களை
பார்க்க வைத்தது.. பயனுள்ள பாடம்
நலமுடன்.. வாழ்க..
நன்மையுடன் வளர்க..

வழக்கம் போல்
வலமாய் வரும் பாடல்
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா?
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்/////

உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ramki said...
Dear Sir
Not only this post, what ever you are sharing with us is very informative, very useful and able to understand easily by a common man like me...Thanks.
Regards
Ramki/////

உங்களின் மனம் நிறைந்த/திறந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Arul said...

Useful lesson sir.Thank you.

eswari sekar said...

vanakam sir book eppothzu sir varum....

sundari said...

Good evening sir,
Present sir.

manikandan said...

Good Lesson sir, Waiting for Your Astrology Book's, Pls inform about the Book Release sir (approx time)

kmr.krishnan said...

நல்ல அல‌சல் பாடம். படித்துப் பயன் பெற்றேன்.நன்றி ஐயா!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Arul said...
Useful lesson sir.Thank you./////

நல்லது. நன்றி நண்பரே1

SP.VR. SUBBAIYA said...

//////Blogger eswari sekar said...
vanakam sir book eppothzu sir varum....//////

இரண்டு மாதங்களில் வரும் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger sundari said...
Good evening sir,
Present sir.////

உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger manikandan said...
Good Lesson sir, Waiting for Your Astrology Book's, Pls inform about the Book Release sir (approx time)/////

இரண்டு மாதங்களில் வரும். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
நல்ல அல‌சல் பாடம். படித்துப் பயன் பெற்றேன்.நன்றி ஐயா!////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!