மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.3.13

Astrology: Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

Astrology: Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

யோகம் எண்.32


அலசல் பாடம்

’என்ன சார் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பது கூட யோகத்தில் வருமா?” என்று யாரும் கேட்க வேண்டாம். அது அவயோகக் கணக்கில் வரும். லட்சணமான பெண், லட்சணமில்லாத பெண் என்று இருவகையினர் இருப்பதைப்போல அல்லது அரவிந்தசாமி போன்ற தோற்றமுடைய ஆண்கள் அல்லது ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றமுடைய ஆண்கள் இருப்பதைப்போல யோகத்திலும் இரண்டு வகைகள் உண்டு. நல்ல யோகம். அவயோகம்.

அதற்கு உதாரணத்தைக் கவியரசர் பாடலில் இருந்து தருகிறேன்.

”இளமைவரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்”


இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் பயணம், வாழ்க்கைப் பயணம்!

நல்லது கெட்டது கலந்ததுதான் வாழ்க்கை - இரவு பகலைப் போல!

அதைப்போல, அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்ததுதான் வாழ்க்கை. அதிர்ஷ்டமாகட்டும் அல்லது துரதிர்ஷ்டமாகட்டும், சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா/புத்திகளில் மட்டுமே பலனைக் கொடுக்கும். உங்கள் மொழியில் சொன்னால் வேலையைக் காட்டும்.

ஒரேயடியாக வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டத்தோடு அல்லது துரதிர்ஷ்டத்தோடு இருந்தவன் இல்லை!

இந்தியாவின்மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், வாத நோயால் அவதிப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றால் இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அதீத கோடிஸ்வரர்கள் பலர் பய உணர்வோடுதன் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். தாங்கள் தாதாக்கூட்டங்களால் அல்லது தீவிரவாதக் கும்பல்களால் கடத்தப் பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு அவர்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும். அந்த பய உணர்வு, ப்ளாட்பாரத்தில் குடும்பம் நடத்துபவனுக்கு அல்லது அன்றாடம் காய்ச்சிக்குக் கிடையாது. அதை உணருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம்!

யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்:

அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும்.

தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
.....................................................................................
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords)

அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.

2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்

6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்

7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்

11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்

12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்

13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
----------------------------------------------
பலன்: ஒரே சொல்; துரதிர்ஷ்டம் (Misfortune)
----------------------------------------------
Duration of the misfortune: இந்த அமைப்பின் பலனால் அவதிப்பட வேண்டிய காலம்: சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புத்திக் காலம்.
-----------------------------------------------
பாடத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். யாரும் உடனே பலத்த கவலைக்கு ஆளாகிவிட வேண்டாம். பலத்த யோசனையில் மூழ்கிவிட வேண்டாம்.

ஜாதகத்தில் நஷ்டஈடு வழங்கப் பெற்றிருக்கும். அது என்ன என்று பார்த்து அல்லது பார்க்காமல் அமைதி கொள்ளுங்கள். அதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால் அனைவருக்கும் வாங்கி வந்த வரத்தின் மொத்த மதிப்பு (அதாவது ஜாதகத்தின் மதிப்பு) 337தான். அதை நினைவில் வையுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது மேல்நிலை வகுப்பில் வெளிவந்த பாடம். அனைவருக்கும் பயன் படட்ட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலைப் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா? ஒருவரி எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வேண்டுகோள்.
கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது.
எனக்கு நேரமின்மை இரண்டு மடங்காகி விட்டது
ஆகவே

1. தேவைப் பட்டால் மட்டுமே கேள்வி கேளுங்கள்.
2. பாடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்
3. உங்கள் ஜாதகத்தைவைத்து, கொக்கிக் கேள்விகளைக் கேட்காதீர்கள்

அன்புடன்
வாத்தியார்,

------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. Thank u Sir ji..!!

    I request to post another set of QUESTION-ANSWER session;
    inviting questions from STUDENTS!!

    ReplyDelete
  2. Arishta
    is the phrase used in Ayurvedha..
    here also..!!(but in different meaning..!)

    ReplyDelete
  3. யோக காலம் வகுப்பறை மாணவர்களுக்குத்தான். தொடர்ந்து பலமான பாடங்களாக பதிவிடும் வாத்தியாருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.அதிர்ஷ்டமிண்மைக்கான யோகம் பாடம் நல்ல பதிவு.பயனுள்ள பதிவாக இருந்தது.தங்களின் பின் குறிப்பு தங்களின் நேரமின்மையையும் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்னஞ்சல் எண்ணிக்கையும் சிரமப் படுத்தும் என்பது தெளிவாக புரிய வைக்கின்றது.ஆயினும் தங்களின் மாணவர்கள் தேனீக்களை போன்றவர்களல்லவா?.தேனீக்கள் பூக்களை நாடிச்செல்வதில் வியப்பும் இல்லை,மலர்கள் மறுப்பதும் இல்லை.
    நமது மதிப்பிற்குறிய அய்யர் அவர்கள் கருத்துப்படி இன்னுமொரு கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்தால் நல்லது. தங்களின் பல சிரமங்களுக்கு இடையே பெரும்பான்மையான மாணவர்கள் பயனடைய ஒரு சிறிய வாய்ப்பு அளித்தால் மிக்க சிறப்பாகும்.
    நன்றியுடன்,
    -peeyes.

    ReplyDelete
  5. அருமையான அலசல் பாடம்!!!. பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்
    அதிர்ஷ்டமிண்மைக்கான யோகம்
    அருமையான பாடம், பயன் பெற்றுயுள்ளேம்.
    நன்றி

    ReplyDelete
  7. Not an nice post..but we have to live with 337 ..:)

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  8. ////Blogger eswari sekar said...
    vanakam sir.////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. /////Blogger அய்யர் said...
    Thank u Sir ji..!!
    I request to post another set of QUESTION-ANSWER session;
    inviting questions from STUDENTS!!////

    பத்வில் 125ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 500ற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் உள்ளன) அவற்றில் உள்ள கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். அதைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்?

    ReplyDelete
  10. ////Blogger அய்யர் said...
    Arishta
    is the phrase used in Ayurvedha..
    here also..!!(but in different meaning..!)///

    உண்மைதான். நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger thanusu said...
    யோக காலம் வகுப்பறை மாணவர்களுக்குத்தான். தொடர்ந்து பலமான பாடங்களாக பதிவிடும் வாத்தியாருக்கு நன்றிகள்./////

    சின்னப் பாடங்களும் பலமுள்ளவைதான் சாமி!

    ReplyDelete
  12. //////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.அதிர்ஷ்டமிண்மைக்கான யோகம் பாடம் நல்ல பதிவு.பயனுள்ள பதிவாக இருந்தது.தங்களின் பின் குறிப்பு தங்களின் நேரமின்மையையும் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்னஞ்சல் எண்ணிக்கையும் சிரமப் படுத்தும் என்பது தெளிவாக புரிய வைக்கின்றது.ஆயினும் தங்களின் மாணவர்கள் தேனீக்களை போன்றவர்களல்லவா?.தேனீக்கள் பூக்களை நாடிச்செல்வதில் வியப்பும் இல்லை,மலர்கள் மறுப்பதும் இல்லை.
    நமது மதிப்பிற்குறிய அய்யர் அவர்கள் கருத்துப்படி இன்னுமொரு கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்தால் நல்லது. தங்களின் பல சிரமங்களுக்கு இடையே பெரும்பான்மையான மாணவர்கள் பயனடைய ஒரு சிறிய வாய்ப்பு அளித்தால் மிக்க சிறப்பாகும்.
    நன்றியுடன்,
    -peeyes./////

    இதே வேண்டுகோளை அய்யரும் மு வைத்துள்ளார்.. அவருக்கு அளித்துள்ள பதிலை நீங்களும் படித்துப்பாருங்கள் பொன்னுசாமி!

    ReplyDelete
  13. ////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
    அருமையான அலசல் பாடம்!!!. பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!! ஆமாம், நடுவில் உங்களைச் சில வாரங்களாக வகுப்பறைப் பக்கம் பார்க்க முடியவில்லையே?

    ReplyDelete
  14. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    அதிர்ஷ்டமிண்மைக்கான யோகம்
    அருமையான பாடம், பயன் பெற்றுயுள்ளேம்.
    நன்றி

    உங்களின் பாராட்டிற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  15. /////Blogger Ravichandran said...
    Not an nice post..but we have to live with 337 ..:)
    Your Student,
    Trichy Ravi////

    ஆமாம். வேறு வழியில்லை. 337 வைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அதுதான் புத்திசாலித்தனமும் கூட!



    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com