மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.13

Astrology: வீட்டில் யாருக்குத் தலைமைப் பதவி, உங்களுக்கா அல்லது உங்கள் மனைவிக்கா?


Astrology: வீட்டில் யாருக்குத் தலைமைப் பதவி, உங்களுக்கா அல்லது உங்கள் மனைவிக்கா?

அலசல் பாடம்

தலைப்பு: தலைமைப் பதவி!

எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான மனக்குறை உண்டு! எவ்வளவு தான் உழைத்தாலும் அல்லது பாடுபட்டாலும் நாம் நினைத்த அளவிற்கு முன்னுக்குவர முடியவில்லையே என்பதுதான் அந்தக்குறை!

இங்கே முன்னுக்கு என்பது பணத்தைமட்டும் வைத்து அல்ல!

தலைமைப் பதவிக்கு வந்து அமர்வது. செல்வாக்கு, மற்றும் புகழோடு இருப்பது. பதவி, பட்டங்களைப் பெறுவது. அதை மனதில் வையுங்கள்

சிலர் வெளியே சொல்வார்கள். சிலர் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.அது இல்லாமல் இருப்பவர்கள் அபூர்வம்! அது இயற்கையானதுதான்.

”கடுமையாக உழைக்கிறேன் என்று சொல்லி பதினெட்டு மணி நேரம் தினமும் மண் வெட்டுவதால் ஒரு பிரயோ ஜனமுமில்லை. உழைப்போடு அறிவும்
சேரும்போதுதான் முன்னுக்கு வரமுடியும்!” என்று ஒரு சிந்தனையாளன் சொன்னான்.

சிலர் அறிவோடும், திறமையோடும் வேலை செய்வார்கள். ஆனால் எப்போதுமே இரண்டாம் நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய உழைப்பால் விளைந்தவற்றையெல்லாம், அவனுக்கு மேலே உள்ளவன் சமர்ப்பித்து தான் வேலை பார்க்கும்  நிறுவனத்தில் நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு செல்வதுடன், அதனால் கிடைக்கும் உயர்வையும் அவனே அனுபவிப்பான். நம்ம ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது.

இது ஒருவகை!

சிலர் இப்படிச் சொல்வார்கள், “நான் வீட்டிற்கு முத்தவன். பெரிய குடும்பதைச் சேர்ந்தவன். வீட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுகிறேன். ஆனால் ஒரு
பிரயோஜனமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள இரண்டாவது மகனுக்கு எல்லாம் போய்விடுகிறது. எனக்கு வீட்டில் உரிய மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை”

அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் குறைகுறைதான். இது இரண்டாவது வகை!

ஊருக்காகப் பாடுபடுபவர்களுக்கும் இதே கதிதான். உண்மையாக உழைப்பவன் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குத் தலைவனாக வரமாட்டான். ஒன்றும் இல்லாத டகால்டி ஆசாமி தலைமைப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டு விடுவான்.
மாங்கு மாங்கு என்று அருமையாக எழுதிக்குவித்தவனுக்கு விருது கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் ஒரே ஒரு புத்தகத்தை எழுதியவன், விருதை வாங்கிக் கொண்டு  போய்விடுவான்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு  ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில்லை.

அதைவிட அருமையான உதாரணம் ஒன்று சொல்லலாம்.

மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். 1869ஆம் ஆண்டு பிறந்த காந்திஜி சுமார் 50  ஆண்டுகாலத்திற்கு மேல் (அவருடைய இளமைக் காலத்தைக் கழித்து  விடுங்கள்) இந்த நாட்டிற்காகப் பாடுபட்டிருக்கிறார். பல துன்பங்களை அனுபவித் திருக்கிறார். அவர்  கடைபிடித்த அஹிம்சைப் போராட்டம்தான் நமக்கு  சுதந்திரத் தைப் பெற்றுத் தந்தது. அனால் அவருக்குக் கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் - தேசத்தந்தை என்ற பெயர் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்தது.

ஒரு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அத்தனை பேர்களுமே, போராட்டத்தின் முடிவில் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் காந்திஜி
அமரவில்லை. இந்தியாவின்  முதல் பிரதமராக அவர் மர்ந்திருக்க வேண்டுமா இல்லையா?

அவருக்கு மனம் இல்லை, அதனால் அமரவில்லை. அதனால் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியில்
அமர்ந்தார் என்று சொல்லலாம்.

சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு ஏன் மனம் வரவில்லை?

அவருடைய ஜாதகப்பலன் அதுதான்.

அவருடைய ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.

அவருடைய ஜாதகத்தில், லக்கினத்தில் உள்ள பரல்கள் வெறும் 22 மட்டுமே. அதாவது  சராசரிக்கும் 6 பரல்கள் குறைவாக உள்ளது. அதனால்தான் அவர்
பதவியில் அமர முடியவில்லை. அதற்கான சூழ்நிலை உண்டாகவில்லை.

நேருஜியின் ஜாதகத்தில் 30 பரல்கள் உள்ளன அதைக் கவனியுங்கள்.

சீரியஸாகி அரசியல் பேச வேண்டாம். எனது நோக்கம் அதுவல்ல! இருவருடைய ஜாதகத்தையும் வைத்து உங்களுக்கு ஒரு முக்கியமான குறிப்பைத் தர விரும்புகிறேன். லக்கினத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வரமுடியும். புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

337 வகுத்தல் 12 = 28 பரல்கள் என்பது சராசரி.

இந்த சராசரி அல்லது சராசரிக்கும் கீழே உள்ளவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். என்னதான் முக்கி வேலை செய்தாலும் தலைமைப் பதவி அல்லது தலைமை இடம்  என்பது கனவாகத்தான் இருக்கும்.

அது பொதுவாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை என்று  எதுவாக இருந்தாலும் இரண்டாம் இடம்தான் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை என்றால் உங்கள் மனைவியின் கை ஓங்கியிருக்கலாம்  (அவருக்கு சராசரிக்கும் மேலான பரல்கள் அல்லது உங்களைவிட அதிகமான பரல்கள்
இருக்கும்போது):-))))) குழந்தைகளின் மத்தியில் உங்களைவிட அவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கலாம்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். 28ற்கும் அதிகமாக இருந்தால் சந்தோஷப் படுங்கள். இல்லையென்றல் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். லக்கினத்தை  அலசும் குறுக்குவழி இதுதான்.

இது மேல்நிலை வகுப்பில் வந்த பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!



பாடம் புரியும்படியாக உள்ளதா?

ஒருவரி எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

44 comments:

  1. குருவிற்கு வணக்கங்கள்,
    பாடம் அருமை. நன்றிகள்.தங்கள் மாணவன், ரெங்கா

    ReplyDelete
  2. உள்ளம் இரண்டும் ஒன்றாக இல்லாவிட்டால்... உருவங்கள் இரண்டு தான்...

    ReplyDelete
  3. ஜோதிட பாடத்தில் இதைவிட எளியதொரு விளக்கம்..மீண்டும் நமது வாத்தியார் அய்யாவால் மட்டுமே தர முடியும் ! மிக்கநன்றி !

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,
    நேருஜியின் ஜாதகம் பதிவில் வரவில்லை.
    மேல் நிலைப்பாடம் மிகவும் நன்று.
    எனது மனைவி ஜாதகத்தில் மீன‌ லக்னத்தில் 41 பரல்கள் இருக்கின்றன.வீட்டுத்தலைவிதான் ஆயினும் வேறு எதிலும் அவரால் முன்னிலை வகிக்கமுடியவில்லை.
    இதற்கு விளக்கம் தரமுடியுமா
    நன்றி.

    ReplyDelete
  5. ஐயா, நேருவின் ஜாதகம் எங்கே?

    ReplyDelete
  6. அருமையான பாடம்
    எனக்கு லக்னத்தில் 42 பரல்கள் ....
    இது வரை ஒன்றும் பெரிய பதவி கிடைக்கவில்லை ..பொறுத்திருந்து பார்ப்போம்

    "பதவி வரும் போது பணிவு வர வேண்டும் துணிவும் வர வேண்டும் தோழா பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா ..."

    ReplyDelete
  7. திரை மறைவில் பணியாற்றும் பல
    திறமைசாலிகளால் தான்

    திரைக்கு முன் தோன்றும் சிலருக்கே
    திரைஉலகம் தரும் கலை மாமணி

    வேர் பூமிக்கடியில் இல்லாமல்
    வேறாக இருந்தால் எப்படி

    வெற்றிக்கனி கிடைக்கும் பதவி
    வெறிபிடித்தலைபவருக்கு சரியான

    பாடம் சொன்னது இன்றையவகுப்பின்
    பாடம்.. நன்றிகள்..

    வலமாக சுழல விடுகிறோம்
    வகுப்பில் சுவைக்க, ரசிக்க..

    படிப்பும் தேவை அதோடு
    உழைப்பும் தேவை

    உண்மை தெரியும்
    உலகம் தெரியும் படிப்பாலே

    நம் உடலும் வளரும்
    தொழிலும் வளரும் உழைப்பாலே

    பாடுபட்டதால் உயர்ந்த நாடுகள்
    பல பல உண்டு

    மன பக்குவம் கொண்டு
    மக்கள் முன்னேற காரணம் இரண்டு

    வீரத் தலைவன் நெப்போலியனும்
    வீடுகட்டும் தொழிலாளி

    விஞ்ஞான மேதை ஜிடி நாயுடு
    காரு ஓட்டும் தொழிலாளி

    ReplyDelete
  8. padam arumai. oru vishayam, avar indiavin thesiya thalaivaraka matrum india thesiya congressin thalaivaraka irunthar. athu entha vakayil enralum athu avarukku kodukkukappata siru mariyathai

    ReplyDelete
  9. என் ஜாதகத்தில் லக்கினத்தில் 33 பரல்கள். அதை விடுத்துப் பார்த்தால் துர்ஸ்தானங்களில்தான் 30 பரல்களுக்கும் மேல் இருக்கின்றன. கேந்திர கோணங்களில் 30 பரல்களுக்கும் மேல் இருந்திருந்தால் எனக்கு ஜோதிடம், வகுப்பறை இவற்றைப் பற்றியெல்லாம் நினைப்பதற்கு மனமோ, நேரமோ அல்லது இரண்டுமோ இருந்திருக்காதோ என்னவோ.

    ReplyDelete
  10. Sir,
    You have not posted the jathagam

    ReplyDelete
  11. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.பாடம் மிக எளிதாக இருந்தது.புரியும்படியாகவும் இருந்தது. நன்றிகள்.இது மேல் நிலைப் பாடம் பதிவில் ஏற்றியதால் ஜாதக இணைப்பு விட்டுப் போயுள்ளது.ஆயினும் பழைய பாடங்களில் உள்ள ஜாதகம் உதவியது.லக்கினத்தில் 30 பரல்களுக்கு மேல் இருப்பினும்,லக்கினாதிபதியின் தசா புத்தி காலங்களிலே நடைமுறைக்கு வரும்.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  12. வகுப்பில் சேராத மாணவன்.

    ஒரு ஜாதகத்தில் 38 பரல் களுடன் லக்ன அதிபதி கன்னியில் நீச்சமாகியருக்கிறார் .

    இதை பற்றி ஒரு வரி.

    ReplyDelete
  13. குருவிற்கு வணக்கம்
    லக்கினத்தை பற்றிய் பாடம் அருமை
    நன்றி

    ReplyDelete
  14. Guriji namaskar, your lessons are really great.Thanks for your valuable lessions. I have one doubt. please clarify. if the lagnathibathi is in combust stage but the lagna has 30 and above house and the lagnathipathi has 5 and above parals in own, how to justify the horoscope. In general, if the palnet is combust but as per astavarga the planet is strong means, how to judge the situation?

    ReplyDelete
  15. அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  16. //வகுப்பில் சேராத மாணவன்.
    ஒரு ஜாதகத்தில் 38 பரல் களுடன் லக்ன அதிபதி கன்னியில் நீச்சமாகியருக்கிறார்
    இதை பற்றி ஒரு வரி.//
    கன்னியில் நீசம் எனில் சுகிரன்தான் அக்கிரஹம்.அப்போ லக்கினம் ஒன்று ரிஷபம் அல்லது துலாம். நீங்கள் 38 என்று குறிப்பிடுவது ரிஷபத்திலா,கன்னியிலா அல்லது துலாத்திலா என்று தெரியவில்லை.

    ரிஷபம் லக்கினம் எனில் சுக்கிரன் 5ல் நட்பு இடத்தில் என்பது +. நீசம் என்பது
    மைனஸ். அவருடைய சுய வர்க பரல் 5க்கு மேல் இருந்தால் தேவலை.

    துலா லக்கினம் என்றால் லக்கினாதிபதி 12 ல் மறைந்தது அவ்வளவு சரியில்லை.கன்னியில் 38 என்றால் அது 12ம் இடம் என்றால் ஜாதகர் கையில் கால் காசு தங்காது. மேலும் ஒழுக்கத்தில் கொஞ்சம் 'முன்னப்பின்ன'தான்.

    ReplyDelete
  17. ////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    பாடம் அருமை. நன்றிகள்.தங்கள் மாணவன், ரெங்கா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger arul said...
    arumayana paadam ayya////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    உள்ளம் இரண்டும் ஒன்றாக இல்லாவிட்டால்... உருவங்கள் இரண்டு தான்...////

    இரண்டு கையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை!

    ReplyDelete
  20. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஜோதிட பாடத்தில் இதைவிட எளியதொரு விளக்கம்..மீண்டும் நமது வாத்தியார் அய்யாவால் மட்டுமே தர முடியும் ! மிக்கநன்றி !////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /////Blogger சர்மா said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    நேருஜியின் ஜாதகம் பதிவில் வரவில்லை.
    மேல் நிலைப்பாடம் மிகவும் நன்று.
    எனது மனைவி ஜாதகத்தில் மீன‌ லக்னத்தில் 41 பரல்கள் இருக்கின்றன.வீட்டுத்தலைவிதான் ஆயினும் வேறு எதிலும் அவரால் முன்னிலை வகிக்கமுடியவில்லை.
    இதற்கு விளக்கம் தரமுடியுமா
    நன்றி./////

    பதிவை சேமித்து வைத்ததில், அது (நேருவின் ஜாதகம்) விடுபட்டிருக்கிறது. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பதிவிடுகிறேன். அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கணித்துப் பதிவிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்.
    உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாது! முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

    ReplyDelete
  22. ////Blogger eswari sekar said...
    vanakamsir////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  23. Blogger kmr.krishnan said...
    THANK YOU,SIR!

    நல்லது. நன்றி நண்பரே1

    ReplyDelete
  24. ////Blogger Megalabala said...
    ஐயா, நேருவின் ஜாதகம் எங்கே?////

    பதிவை சேமித்து வைத்ததில், அது (நேருவின் ஜாதகம்) விடுபட்டிருக்கிறது. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பதிவிடுகிறேன். அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கணித்துப் பதிவிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  25. ////Blogger dubai saravanan said...
    அருமையான பாடம்
    எனக்கு லக்னத்தில் 42 பரல்கள் ....
    இது வரை ஒன்றும் பெரிய பதவி கிடைக்கவில்லை ..பொறுத்திருந்து பார்ப்போம்
    "பதவி வரும் போது பணிவு வர வேண்டும் துணிவும் வர வேண்டும் தோழா பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா ..."///

    ஆஹா, கிடைத்த பிறகு தெரியப்படுத்துங்கள்!

    ReplyDelete
  26. ////Blogger அய்யர் said...
    திரை மறைவில் பணியாற்றும் பல
    திறமைசாலிகளால் தான்
    திரைக்கு முன் தோன்றும் சிலருக்கே
    திரைஉலகம் தரும் கலை மாமணி
    வேர் பூமிக்கடியில் இல்லாமல்
    வேறாக இருந்தால் எப்படி
    வெற்றிக்கனி கிடைக்கும் பதவி
    வெறிபிடித்தலைபவருக்கு சரியான
    பாடம் சொன்னது இன்றையவகுப்பின்
    பாடம்.. நன்றிகள்..

    வலமாக சுழல விடுகிறோம்
    வகுப்பில் சுவைக்க, ரசிக்க..
    படிப்பும் தேவை அதோடு
    உழைப்பும் தேவை
    உண்மை தெரியும்
    உலகம் தெரியும் படிப்பாலே
    நம் உடலும் வளரும்
    தொழிலும் வளரும் உழைப்பாலே
    பாடுபட்டதால் உயர்ந்த நாடுகள்
    பல பல உண்டு
    மன பக்குவம் கொண்டு
    மக்கள் முன்னேற காரணம் இரண்டு
    வீரத் தலைவன் நெப்போலியனும்
    வீடுகட்டும் தொழிலாளி
    விஞ்ஞான மேதை ஜிடி நாயுடு
    காரு ஓட்டும் தொழிலாளி////

    நல்லது. உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  27. ////Blogger raja said...
    padam arumai. oru vishayam, avar indiavin thesiya thalaivaraka matrum india thesiya congressin thalaivaraka irunthar. athu entha vakayil enralum athu avarukku kodukkukappata siru mariyathai////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  28. /////Blogger Ak Ananth said...
    என் ஜாதகத்தில் லக்கினத்தில் 33 பரல்கள். அதை விடுத்துப் பார்த்தால் துர்ஸ்தானங்களில்தான் 30 பரல்களுக்கும் மேல் இருக்கின்றன. கேந்திர கோணங்களில் 30 பரல்களுக்கும் மேல் இருந்திருந்தால் எனக்கு ஜோதிடம், வகுப்பறை இவற்றைப் பற்றியெல்லாம் நினைப்பதற்கு மனமோ, நேரமோ அல்லது இரண்டுமோ இருந்திருக்காதோ என்னவோ./////

    ஆர்வம்தான் காரணம். உங்கள் ஜாதகத்தில் உள்ள புதன் அதற்குக் காரணமாக இருக்கும். ஒரு முறை புதனின் நிலையை ஆராய்ந்து பாருங்கள்!


    ReplyDelete
  29. /////Blogger PS said...
    Sir,
    You have not posted the jathagam////

    பதிவை சேமித்து வைத்ததில், அது (நேருவின் ஜாதகம்) விடுபட்டிருக்கிறது. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பதிவிடுகிறேன். அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கணித்துப் பதிவிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  30. ////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.பாடம் மிக எளிதாக இருந்தது.புரியும்படியாகவும் இருந்தது. நன்றிகள்.இது மேல் நிலைப் பாடம் பதிவில் ஏற்றியதால் ஜாதக இணைப்பு விட்டுப் போயுள்ளது.ஆயினும் பழைய பாடங்களில் உள்ள ஜாதகம் உதவியது.லக்கினத்தில் 30 பரல்களுக்கு மேல் இருப்பினும்,லக்கினாதிபதியின் தசா புத்தி காலங்களிலே நடைமுறைக்கு வரும்.
    நன்றியுடன்,
    -Peeyes./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. /////Blogger உணர்ந்தவை! said...
    வகுப்பில் சேராத மாணவன்.
    ஒரு ஜாதகத்தில் 38 பரல் களுடன் லக்ன அதிபதி கன்னியில் நீச்சமாகியருக்கிறார்
    இதை பற்றி ஒரு வரி./////

    வகுப்பில் எத்றகு சேராமல் இருக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில்!

    ReplyDelete
  32. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    லக்கினத்தை பற்றிய் பாடம் அருமை
    நன்றி/////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  33. ////Blogger Ramkumar KG said...
    Guriji namaskar, your lessons are really great.Thanks for your valuable lessions. I have one doubt. please clarify. if the lagnathibathi is in combust stage but the lagna has 30 and above house and the lagnathipathi has 5 and above parals in own, how to justify the horoscope. In general, if the palnet is combust but as per astavarga the planet is strong means, how to judge the situation?/////

    அஸ்தமனம் ஆகியருந்தாலும், 5 பரல்களுடன் இருக்கிறார் அல்லவா? அது எப்படிக் கிடைத்தது? ஆகவே அவரால் அவருடைய தசாபுத்தியில் நன்மைகள் உண்டு!

    ReplyDelete
  34. /////Blogger kmr.krishnan said...
    //வகுப்பில் சேராத மாணவன்.
    ஒரு ஜாதகத்தில் 38 பரல் களுடன் லக்ன அதிபதி கன்னியில் நீச்சமாகியருக்கிறார்
    இதை பற்றி ஒரு வரி.//
    கன்னியில் நீசம் எனில் சுகிரன்தான் அக்கிரஹம்.அப்போ லக்கினம் ஒன்று ரிஷபம் அல்லது துலாம். நீங்கள் 38 என்று குறிப்பிடுவது ரிஷபத்திலா,கன்னியிலா அல்லது துலாத்திலா என்று தெரியவில்லை.
    ரிஷபம் லக்கினம் எனில் சுக்கிரன் 5ல் நட்பு இடத்தில் என்பது +. நீசம் என்பது
    மைனஸ். அவருடைய சுய வர்க பரல் 5க்கு மேல் இருந்தால் தேவலை.
    துலா லக்கினம் என்றால் லக்கினாதிபதி 12 ல் மறைந்தது அவ்வளவு சரியில்லை.கன்னியில் 38 என்றால் அது 12ம் இடம் என்றால் ஜாதகர் கையில் கால் காசு தங்காது. மேலும் ஒழுக்கத்தில் கொஞ்சம் 'முன்னப்பின்ன'தான்./////

    உங்களின் கருத்துப் பகிர்வு சரிதான். நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  35. உங்களுடைய பதிலுக்கு நன்றி அய்யா!

    வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை திரும்பவும் அனுப்புகிறேன் !

    ReplyDelete
  36. ரிசப லக்ன அதிபதி கன்னியில் 6 பரல்களுடன் நீசமாகிருக்கிறார் . இவர் இதே போன்று உச்சமாகி இருந்தால் எப்படி பலன்களை தருவார். கொஞ்சம் சரியிலைஎன்று தெரிகிறது, ஆனால் எப்படிஎல்லாம் என்று தெரியவில்லை.

    Thanks Satya

    ReplyDelete
  37. Ayya,

    Laknam mattum 30 paralkal petru irunthaal thalami padhavi , Nalla vaalkai Amainthu viduma?

    ReplyDelete
  38. Ayya,

    Laknam mattum 30 paralkal petral podhuma?
    thalamai padhavikku vathu vidalama?

    Matra idangal sumaaraga irunthal podhuma?

    ReplyDelete
  39. /////Blogger SP.VR. SUBBAIYA said...

    /////Blogger Ak Ananth said...
    என் ஜாதகத்தில் லக்கினத்தில் 33 பரல்கள். அதை விடுத்துப் பார்த்தால் துர்ஸ்தானங்களில்தான் 30 பரல்களுக்கும் மேல் இருக்கின்றன. கேந்திர கோணங்களில் 30 பரல்களுக்கும் மேல் இருந்திருந்தால் எனக்கு ஜோதிடம், வகுப்பறை இவற்றைப் பற்றியெல்லாம் நினைப்பதற்கு மனமோ, நேரமோ அல்லது இரண்டுமோ இருந்திருக்காதோ என்னவோ./////

    ஆர்வம்தான் காரணம். உங்கள் ஜாதகத்தில் உள்ள புதன் அதற்குக் காரணமாக இருக்கும். ஒரு முறை புதனின் நிலையை ஆராய்ந்து பாருங்கள்!/////

    புதன் 7 சுயபரலுடன் 8ல் (house of occult studies) இருக்கிறார். நவாம்சத்தில் உச்சம். இதுவும் காரணம் என்பது உண்மைதான். நவாம்சத்தில் தேவ குருவுடனும், ராசி சக்கரத்தில் அசுர குருவுடனும் இருக்கிறார். புதன் தனித்திருப்பதை விட இந்த இருவரில் ஒருவருடன் இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  40. Dear Guruji
    I am a new students for your class
    Your lessons are very useful .
    Thank you very much .
    KANNAN .G CHENNAI .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com