மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.3.13

நவீன பாஞ்சாலி ரஜோ வர்மா!


பாண்டவர்களுடன் திரெளபதி





நவீன பாஞ்சாலி ரஜோ வர்மா!

ரஜோ வர்மா சரி, அதென்ன நவீன பாஞ்சாலி?

21 வயதாகும் ரஜோ வர்மா, ஐந்து சகோதரர்களை ஒன்றாக மணந்து கொண்டதோடு, அவர்களுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களும் ஒற்றுமையா இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் அந்த அம்மணியை நவீன பாஞ்சாலி என்று அழைப்பதில் என்ன தவறு?

அவர்கள் வசிக்கும் கிராமம் டேராடூன் அருகில் உள்ளது. வசதி உள்ளவரகள் சென்று பார்த்துவிட்டு வரலாம்.

ஒரே ஒரு கஷ்டம், அவளுக்கு ஒரு ஆண் மகவு உள்ளது. அந்த ஐந்து பேரில் அந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்பது மட்டும் அவளுக்குத் தெரியாது. ஒரு இரவுக்கு ஒரு சகோதரன் என்ற கணக்கில் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த கிராமத்திற்கு அது ஒன்றும் புதிதில்லை. கணவனின் சகோதரனையும் மணந்து கொள்வது அக்கிராமத்தில் வழக்கத்தில் உள்ளதாம்

மின்னஞ்சலில் வந்தது.

மேலதிகத் தகவல்:

Rajo Verma Married to Five Brothers

Rajo Verma, 21, lives in one room with the siblings, in Northern India, The young wife spends each night with a different brother in turn, She does not know which of siblings is the father of her young son, Fraternal polyandry is tradition in the small village near Dehradun.

A young Indian woman has spoken out about being married to five husbands, all of whom are brothers. Rajo Verma, 21, lives in one room with the siblings and they sleep on blankets on the floor. The mother-of-one, who sleeps each night with a different brother, does not know which of her five related husbands is the father of her 18-month-old son.


Five brothers (L-R) Sant Ram Verma, 28, Bajju Verma, 32, Gopal
Verma, 26, Guddu Verma, 21, and Dinesh Verma, 19, with their shared
wife Rajo Verma, 20, and their son Jay Verma.


The set-up may seem peculiar, but it is tradition in the small village near Dehradun, Northern India, for women to also marry the brothers of their first husband. She told 'Initially it felt a bit awkward. 'But I don’t favour one over the other.'

Rajo and first husband Guddu wed in an arranged Hindu marriage four years ago. Since then she has married Baiju, 32, Sant Ram, 28, Gopal, 26, and Dinesh, 19 - the latest in the line of husbands - who
married her as soon as he turned 18.


 அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22 comments:

  1. என்ன கொடும சார் இது !!

    ReplyDelete
  2. பல ஆண்களுடன் வாழ்வதற்கு 'பாலியாண்ட்ரி' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பெண்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆண்கள் எண்ணிக்கை
    அதிகமாகவும் உள்ள சில குழுக்களில் இப்படிப்பட்ட வழக்கங்கள் உலகெங்கிலும் உள்ளன.மேலும் பெண் வழியாகச் சொத்து செல்லும் என்னும் போது இப்படிப்பட்ட வழக்கங்கள் இருந்துள்ளன.

    மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள்+திரெளபதி வாழ்க்கை ஒரு 'எக்செப்ஷன்'தான்.எல்லோரும் அந்த நடைமுறையைக் கையாளவில்லை.

    கூட்டுக் குடும்பங்களில் கண‌வனின் உறவினர்களுடன் வீட்டுக்கு வந்த மருமகள்
    அட்ஜஸ்ட் செய்து கொள்ள‌ வேண்டும் என்ற அறிவுரையை புறக்கணித்து போர்க் கொடி தூக்கிய பெண்மணிகள் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்துள்ளோம்.

    " அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி "என்ற சொல்லடைவு சிந்திக்கத் தகுந்தது.

    பரபரப்பான ஒரு செய்தியினை வெளியிட்டதற்கு நன்றி. நானும் ஒரு பத்திரிகையில் சமீபத்தில் இதனை வாசித்தேன்.











    ReplyDelete
  3. We see Bhimasenan and Arjunan kneeling down in front of Paanchaali Devi. Now, she is their wife. How can a husband kneel down in front of his wife? Sastras do not permit. :) The painting is wrong.

    ReplyDelete
  4. இதனை சில நாள் முன்பு
    நானும் இனைய செய்தியில் பார்த்தேன். இதற்கும் அந்த பெண்ணின் ஜாதகத்தில் ஏதேனும் அமைப்பு இருக்குமா?மீண்டும் ஒரு மஹாபாரதம் நடக்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  5. பாஞ்சாலி அம்மையை குலதெய்வமாக கொண்ட வாசகர்களுக்கு இந்த பதிவு மிக்க மனவருத்தத்தை உண்டாக்கி உள்ளது என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    என்ன இருந்தாலும் பலராலும் தெய்வமாக வணங்கப்படும் ஒரு அம்மையாரை நீங்கள் இங்கே இழுத்திருக்க கூடாது என்று நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்.

    இந்த பதிவும் தலைப்பும் inappropriate என நினைக்கும் பலர் உள்ளனர்.

    அன்புடன்,
    காலகாலதாசன்
    புவனேஷ்

    ReplyDelete
  6. அய்யரின் பின் ஊட்டம்
    அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது

    வலமாக சுழல விடுகிறோம்
    வழக்கம் போல் வாத்தியார் பாடலை

    ......

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

    கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

    தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

    இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்

    எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி

    தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

    விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்

    வெந்திடும் தோட்டக் காரனிடம்
    மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்

    விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி

    தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

    அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்

    அழகைக் குலைக்க மேவும்
    கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து

    குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
    குணமும் இது போல் குறுகிப் போகும்
    கிறுக்கு உலகமடா - தம்பி

    தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

    ReplyDelete
  7. /////Blogger Sanjai said...
    என்ன கொடும சார் இது !!/////

    அவர்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளதை நாம் எப்படிக் கொடுமை என்று சொல்ல முடியும் ராசா?

    ReplyDelete
  8. /////Blogger C Jeevanantham said...
    Valha Pallandu Kaalam.////

    நல்லது. உங்கள் வாக்கு பலிக்கட்டும்!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    பல ஆண்களுடன் வாழ்வதற்கு 'பாலியாண்ட்ரி' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பெண்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆண்கள் எண்ணிக்கை
    அதிகமாகவும் உள்ள சில குழுக்களில் இப்படிப்பட்ட வழக்கங்கள் உலகெங்கிலும் உள்ளன.மேலும் பெண் வழியாகச் சொத்து செல்லும் என்னும் போது இப்படிப்பட்ட வழக்கங்கள் இருந்துள்ளன.
    மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள்+திரெளபதி வாழ்க்கை ஒரு 'எக்செப்ஷன்'தான்.எல்லோரும் அந்த நடைமுறையைக் கையாளவில்லை.
    கூட்டுக் குடும்பங்களில் கண‌வனின் உறவினர்களுடன் வீட்டுக்கு வந்த மருமகள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள‌ வேண்டும் என்ற அறிவுரையை புறக்கணித்து போர்க் கொடி தூக்கிய பெண்மணிகள் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்துள்ளோம்.
    " அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி "என்ற சொல்லடைவு சிந்திக்கத் தகுந்தது.
    பரபரப்பான ஒரு செய்தியினை வெளியிட்டதற்கு நன்றி. நானும் ஒரு பத்திரிகையில் சமீபத்தில் இதனை வாசித்தேன்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ////Blogger Bhuvaneshwar said...
    We see Bhimasenan and Arjunan kneeling down in front of Paanchaali Devi. Now, she is their wife. How can a husband kneel down in front of his wife? Sastras do not permit. :) The painting is wrong.////

    யாரங்கே? அந்தப் படத்தை வரைந்த ஓவியரையும், அதை வெளியிட்ட விக்கி மகாராஜாவையும் பிடித்துக் கொட்ண்டு வந்து நண்பர் புவனேஷ்வரரின் முன் நிறுத்துங்கள்!

    ReplyDelete
  11. /////Blogger thanusu said...
    இதனை சில நாள் முன்பு
    நானும் இனைய செய்தியில் பார்த்தேன். இதற்கும் அந்த பெண்ணின் ஜாதகத்தில் ஏதேனும் அமைப்பு இருக்குமா?மீண்டும் ஒரு மஹாபாரதம் நடக்காமல் இருந்தால் சரி./////

    கவலையை விடுங்கள். துரியோதனர்கள் இல்லை! ஆகவே இன்னொரு மகாபாரதத்திற்கு நோ சான்ஸ்!

    ReplyDelete
  12. ////Blogger Bhuvaneshwar said...
    பாஞ்சாலி அம்மையை குலதெய்வமாக கொண்ட வாசகர்களுக்கு இந்த பதிவு மிக்க மனவருத்தத்தை உண்டாக்கி உள்ளது என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
    என்ன இருந்தாலும் பலராலும் தெய்வமாக வணங்கப்படும் ஒரு அம்மையாரை நீங்கள் இங்கே இழுத்திருக்க கூடாது என்று நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்.
    இந்த பதிவும் தலைப்பும் inappropriate என நினைக்கும் பலர் உள்ளனர்.
    அன்புடன்,
    காலகாலதாசன்
    புவனேஷ்/////

    நான் புதிதாக ஒன்றும் எழுதவில்லையே ராசா! பல ஊடகங்களிலும் வந்த செய்தியைத்தான் பதிவிட்டுள்ளேன்! அடுத்த பின்னூட்டத்தைப் (அய்யரின்) படியுங்கள். அவர் அதிகாலையில் எழுதிய பின்னூட்டத்தை வெளியிடாதத்ற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். எல்லாப் பதிவுகளும், எல்லாப் பின்னூட்ட்டங்களும் எல்லோருக்கும் மகிச்ச்சியைத் தராது. அதை மனதில் கொள்க!

    ReplyDelete
  13. /////Blogger அய்யர் said...
    அய்யரின் பின் ஊட்டம்
    அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது/////

    இதற்கு முன் உள்ள பின்னூட்டத்திற்கான பதிலைப் படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  14. இந்த செய்தியைப் படித்தவுடன் தலையே சுற்றுவது போல் இருந்தது.

    பாஞ்சாலி அம்மையை தெய்வமாக கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் அவருக்கு 5 கணவர்கள் என்ற மகாபாரதக் கதையை மாற்ற முடியாதே.

    ReplyDelete
  15. ///எல்லாப் பதிவுகளும், எல்லாப் பின்னூட்ட்டங்களும் எல்லோருக்கும் மகிச்ச்சியைத் தராது.///

    எல்லாமும் எல்லாருகும்
    எப்போதும் மகிழ்ச்சி தராது

    எதையும் சொல்வதற்கு
    எல்லோருக்கம் உரிமையும் உண்டு

    உண்மை தான் ஆனால் ஊடகத்தில்
    உலா வந்ததை "உயர்த்தி" காட்டுவதேன்?

    பாஞ்சாலியை தெய்வம் என்பதல்ல
    பாரதத்தின் ஒழுக்கம் என்பது சரி..

    ReplyDelete
  16. இதை முதலில் நான் கூறிக் கொள்கிறேன்!
    நான் மகாபாரதத்தை முழுமையாக வாசிக்க / அறிந்திருக்க வில்லை.
    அறிந்த வரையில், பாஞ்சாலி பாண்டவர்களின் குல தெய்வமாகவே கருத போற்றப் பட்டாள் என்று அறிகிறேன்.

    பாண்டவ ஐவரின் ஒவ்வொருவரின் இல்லாளைப் பற்றிய பெயர் விவரம் அறிந்தவர்கள் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    ///பாஞ்சாலியை தெய்வம் என்பதல்ல
    பாரதத்தின் ஒழுக்கம் என்பது சரி..///
    :):)
    உண்மை தான்!
    பாஞ்சாலி மாத்திரம் அல்ல, சீதாதேவியோடு இன்னும் சாவித்திரி, அருந்ததி, மண்டோதரி என்று பட்டியல் நீளும் பல பெண்களையும் அப்படியே கூறலாம். தெய்வம், ஒழுக்கம். பத்னித் தன்மை யாவும் ஒன்று தானே! :)

    ReplyDelete
  17. ///தெய்வம், ஒழுக்கம். பத்னித் தன்மை யாவும் ஒன்று தானே! :)///

    இல்லை சிங்கையாரே
    இவற்றுக்கெல்லாம் பொருள் ஒன்றல்ல

    ஒழுக்கம் குறைந்தவர்கள்
    ஒருபோதும் தெய்வமாவதில்லை..

    ஒழுக்கமாய் இருப்பவர்களை
    ஒருவராவது தெய்வமாக்குவதுமிலை

    சொன்ன பட்டியலிலுள்ளவர்கள்
    ஒரே நிலையில் வைத்து பார்க்க இயலாது

    பட்டியலில் இல்லாத பலர்
    பாவம் செய்தனரோ தோழரே..



    ReplyDelete
  18. /////Blogger Ak Ananth said...
    இந்த செய்தியைப் படித்தவுடன் தலையே சுற்றுவது போல் இருந்தது.
    பாஞ்சாலி அம்மையை தெய்வமாக கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் அவருக்கு 5 கணவர்கள் என்ற மகாபாரதக் கதையை மாற்ற முடியாதே./////

    ஆமாம் மாற்றவும் முடியாது. நியாயப் படுத்தவும் முடியாது:-))))

    ReplyDelete
  19. ////Blogger அய்யர் said...
    ///எல்லாப் பதிவுகளும், எல்லாப் பின்னூட்ட்டங்களும் எல்லோருக்கும் மகிச்ச்சியைத் தராது.///
    எல்லாமும் எல்லாருகும்
    எப்போதும் மகிழ்ச்சி தராது
    எதையும் சொல்வதற்கு
    எல்லோருக்கம் உரிமையும் உண்டு
    உண்மை தான் ஆனால் ஊடகத்தில்
    உலா வந்ததை "உயர்த்தி" காட்டுவதேன்?
    பாஞ்சாலியை தெய்வம் என்பதல்ல
    பாரதத்தின் ஒழுக்கம் என்பது சரி../////

    ஊடகத்தில் வந்ததை அப்படியே மட்டும்தான் காட்டியுள்ளேன்! உய்ர்த்தி விடவில்லை சுவாமி!

    ReplyDelete
  20. ////Blogger ஜி ஆலாசியம் said...
    இதை முதலில் நான் கூறிக் கொள்கிறேன்!
    நான் மகாபாரதத்தை முழுமையாக வாசிக்க / அறிந்திருக்க வில்லை.
    அறிந்த வரையில், பாஞ்சாலி பாண்டவர்களின் குல தெய்வமாகவே கருத போற்றப் பட்டாள் என்று அறிகிறேன்.
    பாண்டவ ஐவரின் ஒவ்வொருவரின் இல்லாளைப் பற்றிய பெயர் விவரம் அறிந்தவர்கள் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
    ///பாஞ்சாலியை தெய்வம் என்பதல்ல
    பாரதத்தின் ஒழுக்கம் என்பது சரி..///
    :):)
    உண்மை தான்!
    பாஞ்சாலி மாத்திரம் அல்ல, சீதாதேவியோடு இன்னும் சாவித்திரி, அருந்ததி, மண்டோதரி என்று பட்டியல் நீளும் பல பெண்களையும் அப்படியே கூறலாம். தெய்வம், ஒழுக்கம். பத்னித் தன்மை யாவும் ஒன்று தானே! :)/////

    ஆமாம். அவையாவும் ஒன்றுதான். ஆனால் அது ஏற்றுக்கொள்பவர்களின் மனப்பாங்கை வைத்து மாறுபடும்போதுதான் இரண்டாவது கருத்து உண்டாகிறது.
    மாற்றுக் கருத்துக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நாம் நம் கருத்தில் நிலையாக இருந்தால், அதுவே போதும்!

    ReplyDelete
  21. /////Blogger அய்யர் said...
    ///தெய்வம், ஒழுக்கம். பத்னித் தன்மை யாவும் ஒன்று தானே! :)///
    இல்லை சிங்கையாரே
    இவற்றுக்கெல்லாம் பொருள் ஒன்றல்ல
    ஒழுக்கம் குறைந்தவர்கள்
    ஒருபோதும் தெய்வமாவதில்லை..
    ஒழுக்கமாய் இருப்பவர்களை
    ஒருவராவது தெய்வமாக்குவதுமிலை
    சொன்ன பட்டியலிலுள்ளவர்கள்
    ஒரே நிலையில் வைத்து பார்க்க இயலாது
    பட்டியலில் இல்லாத பலர்
    பாவம் செய்தனரோ தோழரே..//////

    தெய்வத்தையே ஏற்றுக்கொள்ளாதவர்கள் உள்ள தேசம் இது சுவாமி! அதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com