மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.10.11

பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி மூன்று

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)

-----------------------------------------------------------------------------------
over to table


பாஸந்தி கிண்ணம் ஒன்று



ஆனைக்கா அகிலாவும் திருவரங்கம் வாலியும்!

பேசும் படம் பிறந்த 1931ஆம் ஆண்டில்தான் கவிஞர் வாலியும் பிறந்தார். இயற்பெயர் திரு.ரங்கராஜன்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவரங்க மண்ணில்தான். சிறு வயதில் குடித்ததெல்லாம் காவிரி ஆற்றுத் தண்ணீர்! படித்ததெல்லாம் பாசுரங்கள்!

திருவரங்கத்தில் பிறந்திருந்தாலும் கொண்ட காதலெல்லாம் அருகில் இருந்த ஆனைக்காமேல்தான். ஆமாம் திருவானைக்கோவில் மீதுதான்.

காளமேகத்துக்குப் பிறகு ஆனைக்கா அகிலாண்டேஷ்வரியின் பார்வை இவரின் மேல் விழுந்தது. தினமும் சுற்றி வருகிறானே பையன் என்று
தமிழை வசப்படுத்திக் கொடுத்தாள்.

அதை வாலி அவர்களும் மறக்காமல் மனதில் வைத்திருந்து, பின்னொரு நாளில் பாட்டரங்கம் ஒன்றில் கவிதை வரிகளால் அகிலாண்டேஷ்வரிக்குத் தன் நன்றியைச் சமர்ப்பித்தார்.

“ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?”


எப்படியிருக்கிறது பாட்டு....?
---------------------------------------------------------
பாஸந்தி கிண்ணம் 2


கவியரசர் கண்ணதாசனிடம் ஒரு சோகப் பாடல் எழுதிக் கொண்டுபோக வந்திருந்தார் அந்தத் திரைப் படத்தயாரிப்பாளர்.கதாநாயகியின் சோகத்தை அப்படியே பிழிந்து பாடலாக வடித்துக் கொடுத்துவிட்டார் கவியரசர்.

பாடலைப் பாருங்கள்:

“தேரேது, சிலையேது, திருநாளேது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது
பூவேது, கொடியேது, வாசனையேது
புன்னகையே கண்ணீராய் மாறும்போது”

பதினைந்து தினங்கள் கழித்து அதே தயாரிப்பாளர். கிளைமாக்ஸில் தன் துயரங்கள் எல்லாம் தீர்ந்து கதாநாயகி மகிழ்ச்சியின் எல்லைக்குப் போய்விடுவதாகப் படத்தை முடிக்க உள்ளோம். அதற்கு ஒரு பாட்டு வேண்டும் என்றார்.

கவியரசர் சொன்னார், முன்பு எழுதிய பாட்டையே இரண்டொரு வார்த்தைகள் மாற்றிக் கொடுத்துவிடுகிறேன். பாடல் தொடர்பும் சுவையாக இருக்கும் என்ற போது தயாரிப்பாளர், "அது முழுவதும் சோகமயமான பாடல் ஆயிற்றே, அதை எப்படி மாற்ற முடியும்? " என்று கேட்டார்

கவியரசர், அவர் வியக்கும் வண்ணம் அதைச் சில வார்த்தை மாற்றங்களுடன் அதே பாடலை சந்தோஷப் பாடலாக மாற்றிக்கொடுத்தார்.

இப்போது பாடலைப் பாருங்கள்:

தேரேது, சிலையேது, திருநாளேது
தெய்வம்போல் மனிதரெல்லாம் இருக்கும்போது
பூவேது, கொடியேது, வாசனையேது
புன்னகையே பூவாக மலரும்போது!
-------------------------------------------------------------------------------------
பக்கோடா ப்ளேட் 1

மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றபோது இறந்துவிட்ட தன் கணவனைப் பற்றி மீனவப் பெண் பொங்கிவந்த அழுகையோடு இப்படிச் சொன்னாள்:

“அலையொடு போன மச்சான்
அலையை மட்டும் அனுப்பி வச்சான்”


பக்கோடா ப்ளேட் 2

“வாய்மூடி
மெளனமாய் இருங்கள்
என்று ஆனியிடுவது
நூலக
அறிவிப்பு மட்டுமல்ல
எங்கள் கேன்டீன்
அல்வாவும்தான்!

- ஒரு கல்லுரி மாணவி
------------------------------------------
 ஓமப்பொடி



அந்தக் காலத்தில், கர்நாடக இசை மற்றும் மெல்லிசையில் அற்புதமாகப் பல பாடல்களைப் பாடியவர். டி.ஆர்.மஹாலிங்கம் அவர்கள்
“இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” என்னும் ஜீவனுள்ள பாடலைப் பாடி (படம் திருவிளையாடல்) பல உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் அவர். அவர் பாடிய சில சிறந்த பாடல்களைப் பட்டியல் இட்டுள்ளேன்

1. ஆடைகட்டி வந்த நிலவோ, படம்: அமுதவல்லி, உடன்படியவர் பி.சுசீலா
2. ஆண்டவன் தரிசனமே - படம்: அகத்தியர்
3. எங்கள் திராவிட பொன்னாடே - படம்: மாலையிட்ட மங்கை
4. இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - படம்: திருவிளையாடல்
5. செந்தமிழ் தேன்மொழியாள் - படம்: மாலையிட்ட மங்கை
6. சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு படம்: ஆடவந்த தெய்வம்
7. விடுதலை விடுதலை படம்: நாம் இருவர்
8. நமச்சிவாய எனச் சொல்வோமே - படம்: திருவருட்செல்வர்
9. பாட்டு வேணுமா: படம்: மோகனசுந்தரம்
10. திங்கள் முடி சூடும்: படம்: மாலையிட்ட மங்கை
--------------------------------------------------------------------------------------

ஃபில்டர் காஃபி

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறானே  பாச்சாவோ, யாரோ அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.

‘‘நேத்திக்குதான்.’’

‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’

‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’

‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’

‘‘ஏர்போர்ட்ல.’’

‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’

‘‘ரங்கா பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு  விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’

‘‘ரெண்டும் ஒண்ணுதானே.’’

‘‘இல்லை.’’

‘‘பின்ன ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’

‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது - அவன்கூட பைலட் இல்லை.’’

‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’

‘‘மாட்டா!!’’

‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’

‘‘ஏர்போர்ட்,  ஏர்போர்ட்!’’

‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’

‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’

‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தானே  இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’

நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.

அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.

‘‘ரங்கு, இது யாரு?’’

‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி-னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’

‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’

யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.

‘‘உஞ்சவிருத்தி.’’

‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’

‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’

‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’

‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திரமங்கலத்தில் நெலம் எல்லாம் இருக்கு.’’

‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’

‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே - அவ்ளவுதான்!’’

‘‘புரியலை ரங்கு.’’

‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’

ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சிக்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்

‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’

‘‘கண்ணு வேற தெரியலை.’’

‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’

‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’

‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க

‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதானே? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’

‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’

‘‘ஜி.பி கிட்ட சொல்றதுதா&ன?’’

‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’

‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’

‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’

ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘‘நீ யாரு கோதை பேரன்தானே?’’ என்றார் என்னைப் பார்த்து.

‘‘ஆமாம் மாமா!’’

‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’

‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில்தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’

‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’

‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாதவாளுக்கு!’’

‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு - அந்த நாராயணனே மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’

‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக்காகவா?’’

‘‘ஆமா, வேறென்ன..?’’

‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’

‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’

‘‘இல்லை மாமா உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’

‘‘அதனால?’’

‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னுதானே  நினைச்சுப்பா?’’

‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’

ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.

‘‘ஓய் உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி  குஞ்சவிருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’

‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’

அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி-யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கப்பா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’

‘‘தனியா இருந்து பாருமேன்.’’

‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’

‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’

‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நானே பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’

‘‘பிள்ளை?’’

‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’

‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’

‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள் பார்க்கலாம். நான் செத்துப் போனேன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’

‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத்தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’

அவர் மறுபடி வீதி பிரதட்சிணத்துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச், வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.
- எழுத்தாளர் திருவாளர் சுஜாதா அவர்கள் எழுதிய உஞ்சவிருத்தி என்ற கதையின் ஒரு பகுதி. முழுப்பகுதியையும் படிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே சென்று படிக்கலாம். முடிவு சூப்பராக இருக்கும் http://balhanuman.wordpress.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
புதிர் 1

அதை அளக்க முடியும்.ஆனால் அதற்கு நீள - அகல - உயரம் கிடையாது. அது என்ன?

புதிர் 2
படத்தில் இருக்கும் பெண்மணி யார்? க்ளூ: பிரபலமான நடிகை

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவர்ச்சிப்படம் - அது இல்லாமலா?
ஸ்க்ரோல் டவுன் செய்து படத்தைப் பாருங்கள்:
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

என்ன எதிர்பார்த்து வந்த படம் எதுவும் இல்லையா? 
பதிவிற்கு வரும் மங்கையர் திலங்களுக்காக படம் மாறியுள்ளது. அவர்களின் சாபத்திற்கு ஆளாகக்கூடாது இல்லையா? 
வாராவாரம் அம்மணிகளின் படத்தையோ போட்டுக்கொண்டிருந்தால் எப்படி என்று அவர்கள் கேட்கக்கூடாது.
அதனால் இந்தவாரக் கவர்ச்சிப் படத்தை இவர் அலங்கரிக்கின்றார்!
--------------------------------------------------------------------------------------
நட்புடன்
வாத்தி (யார்)



வாழ்க வளமுடன்!

33 comments:

  1. இவர் மனோகராவின் அம்மா, பசுபுலேட்டி கண்ணாம்பா...
    வாழ்க இணையம்
    வளர்க வகுப்பறை...

    ReplyDelete
  2. கண்ணதாசன்(பாஸந்தி 2 அருமை. ஒரே பாட்டை சந்தோச சூழலுக்கும், சோக சூழலுக்குக் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த பாடல் தான் முன்னோடியாக இருக்க கூடும்(விக்கிரமன், S.A ராஜ்குமார்) பாடல்கள்)

    ReplyDelete
  3. அதை அளக்க முடியும்.ஆனால் அதற்கு நீள - அகல - உயரம் கிடையாது. அது என்ன?
    பதில்: நேரம்

    ReplyDelete
  4. கவர்ச்சிப் படத்தில்தான் கவுத்துப்ப்பூட்டீங்க‌ சார்.போகட்டும்.
    Time?
    அது செளகாரா?

    சுஜாதாவின் கதைகளிலெயே அவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள்தான் அருமை.
    அதிலிருந்துதான் இது என்று நினைக்கிறேன்.

    நண்பர் ஒருவரின் தகப்பனார், பொது மைதானத்தில் இறந்து கிடப்பது போல காலை 9 மணியில் இருந்து 10.30 வரை படுத்துக்கிடப்பார்.அந்த சமயத்த்ல்தான் நண்பரின் எல்லா அலுவலக நண்பர்களும் அவரை பார்க்க முடியும்.அலுவலகம் முழுவதும் இந்தப் பேச்சாகவே இருக்கும். இது பல நாட்கள் தொடர்ந்தவுடன்
    நண்பரின் மேல் எல்லோருக்கும் பரிதாப உணர்ச்சி வந்துவிட்டது. அவருடைய அப்பாவின் போக்கை அனைவரும் கண்டிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    ReplyDelete
  5. ////Blogger Nila said...
    கண்ணதாசன்(பாஸந்தி 2 அருமை. ஒரே பாட்டை சந்தோச சூழலுக்கும், சோக சூழலுக்குக் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த பாடல் தான் முன்னோடியாக இருக்க கூடும்(விக்கிரமன், S.A ராஜ்குமார்) பாடல்கள்)/////

    அதிகாலையிலேயே வந்து முதல் பின்னூட்டம் இட்டு கணக்கைத் துவங்கியமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. Blogger தேமொழி said...
    அதை அளக்க முடியும்.ஆனால் அதற்கு நீள - அகல - உயரம் கிடையாது. அது என்ன?
    பதில்: நேரம்/////

    சரியான விடை இதுவல்ல!

    ReplyDelete
  7. Blogger kmr.krishnan said...
    கவர்ச்சிப் படத்தில்தான் கவுத்துப்ப்பூட்டீங்க‌ சார்.போகட்டும்.
    Time?
    அது செளகாரா?///////

    அது செளகார் இல்லை!
    அடுத்த (வார) கவர்ச்சிப்படம் உங்களை மகிழ்விக்கும் விதமாக இருக்கும். சரிதானே?
    ------------------------------------------------------------------
    சுஜாதாவின் கதைகளிலெயே அவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள்தான் அருமை.
    அதிலிருந்துதான் இது என்று நினைக்கிறேன்.
    நண்பர் ஒருவரின் தகப்பனார், பொது மைதானத்தில் இறந்து கிடப்பது போல காலை 9 மணியில் இருந்து 10.30 வரை படுத்துக்கிடப்பார்.அந்த சமயத்த்ல்தான் நண்பரின் எல்லா அலுவலக நண்பர்களும் அவரை பார்க்க முடியும்.அலுவலகம் முழுவதும் இந்தப் பேச்சாகவே இருக்கும். இது பல நாட்கள் தொடர்ந்தவுடன்
    நண்பரின் மேல் எல்லோருக்கும் பரிதாப உணர்ச்சி வந்துவிட்டது. அவருடைய அப்பாவின் போக்கை அனைவரும் கண்டிக்க ஆரம்பித்துவிட்டனர்./////

    கரெக்ட். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. அன்புள்ள சுப்பையா ஸார்,

    எனது தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. உங்கள் தேவகோட்டை தளம் மூலம் நீங்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயம். உங்களது சுஜாதா பற்றிய ஒரு பதிவைக் கூட எனது தளத்தில் கடந்த ஆண்டு மறு-பதிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  9. குரு வணக்கம்,

    வழக்கம் போல் பாஸந்தி மலர் அருமை.

    புதிர் ‍ ‍அறீவு ‍

    ReplyDelete
  10. பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி மூன்றுமே அருமை.

    ReplyDelete
  11. Ayya,

    All three are super today except kavarchi...:)-

    Sincere Student,
    Trichy Ravu

    ReplyDelete
  12. புதிர் 1க்கான விடை
    புரியும்படியே சொல்கிறோம் -"அறிவு"

    புதிர் 2க்கான விடை
    புரியவில்லை தேடிக்கொண்டிருக்கிறோம்

    கவிஞர் வரிசையில் 'அவர்' எப்போ என
    காத்திருக்கின்றோம்..உங்களைப்போல

    அறிஞர்தம் பொன்மொழியை
    அள்ளி தருகிறோம் சிந்தனைக்கு...

    "வெற்றியை நோக்கி போகவேண்டியதில்லை
    வெளிச்சத்தை நோக்கி போனால் போதும்
    வெற்றி எனும் நிழல் பின் தொடர்ந்து வரும்"-ஏபிஜே அப்துல்கலாம்

    ReplyDelete
  13. /////Blogger BalHanuman said...
    அன்புள்ள சுப்பையா ஸார்,
    எனது தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. உங்கள் தேவகோட்டை தளம் மூலம் நீங்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயம். உங்களது சுஜாதா பற்றிய ஒரு பதிவைக் கூட எனது தளத்தில் கடந்த ஆண்டு மறு-பதிவு செய்துள்ளேன்./////

    எனக்குப் பிடித்த சிறந்த எழுத்தாளர்களில் சுஜாதாவும் ஒருவர். அவர் எனக்கு நன்கு பரீட்சையமானவர். கோவை வந்திருந்த சமயம் எனக்கு அழைப்பு அனுப்பி, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தார். அந்த இனிய நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாகும். நன்றி பாலஹனுமான்

    ReplyDelete
  14. //////Blogger RAMADU Family said...
    குரு வணக்கம்,
    வழக்கம் போல் பாஸந்தி மலர் அருமை.
    புதிர் ‍ ‍அறிவு ‍/////

    இது சரியான விடை இல்லை

    ReplyDelete
  15. /////Blogger Karthikeyan said...
    பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி மூன்றுமே அருமை.//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Ravichandran said...
    Ayya,
    All three are super today except kavarchi...:)-
    Sincere Student,
    Trichy Ravu/////

    சரி விடுங்கள். அடுத்தமுறை அனைவரும் விரும்பும் படமாகப் போட்டு விடுவோம்!

    ReplyDelete
  17. /////Blogger iyer said...
    புதிர் 1க்கான விடை
    புரியும்படியே சொல்கிறோம் -"அறிவு"
    புதிர் 2க்கான விடை
    புரியவில்லை தேடிக்கொண்டிருக்கிறோம்
    கவிஞர் வரிசையில் 'அவர்' எப்போ என
    காத்திருக்கின்றோம்..உங்களைப்போல
    அறிஞர்தம் பொன்மொழியை
    அள்ளி தருகிறோம் சிந்தனைக்கு...
    "வெற்றியை நோக்கி போகவேண்டியதில்லை
    வெளிச்சத்தை நோக்கி போனால் போதும்
    வெற்றி எனும் நிழல் பின் தொடர்ந்து வரும்"-ஏபிஜே அப்துல்கலாம்/////

    அது சரியான விடை இல்லை விசுவநாதன். ஏன் ரஸ்கினை விட்டுவிட்டுக் கலாமிற்குத் தாவிவிட்டீர்கள்?

    ReplyDelete
  18. அய்யா வணக்கம்

    கவியரசுவின் பாசந்தி ,சுஜாதாவின் பில்ட்டர் காபி அருமை.

    ReplyDelete
  19. Vanakkam Ayya,
    Pakoda plate2 College Girl Joke was really nice...it reminded me abt my College life...Basandhi and pakoda fulfilled my stomach fully...Thanx for giving us Variety of Foods everyday,Sir.
    Ayya,
    My Guess for the Riddle is
    "Talk"(Vaai Pechu)...

    ReplyDelete
  20. வாலியின் வார்த்தைகளுக்கு வாலியின் பலம் உண்டு

    சுஜாதாவின் அறிவியல் விஷயங்கள் மிக பிரபலம் . .

    கவிபேரரசுவுக்கு நிகர் அவரே

    சோகமான பாடலை சந்தோஷமான பாடலாக மாற்றியது போல்.
    அந்த பாடலை படிக்கும் போது , எனக்கு சந்தோஷமான ஒன்று சோகமாக மாறிய ஒரு மாற்றல் சம்பவம் நினவு வந்தது .

    அது ஒரு மிகவும் பிரபலமான ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் கடை. அதற்கு ஒரு புதிய வேலை வந்தது .சிறிய வயது பாலகன் இயேசுவை வரைந்து கேட்டு வந்த வேலை . மாடல் களை வைத்து வரைந்து கொடுப்பார்கள் .கடை முதலாளிக்கு சந்தோசம் கலந்த கவலை .சந்தோஷத்திற்கு கரணம் இயேசுவை வரைந்து கேட்டது . கவலைக்கு காரணம் , இயேசு ஒரு தெய்வபிறவி. தெய்வாம்சம் நிரம்பிய முகம் கொண்ட மாடல் பாலகனை எங்கு போய் தேடுவது என்பது. ஒரு வழியாக நீண்ட தேடலுக்கு பிறகு ஏசுவே மீண்டும் வந்து பிறந்தது போல் ஒரு பாலகன் கிடைத்தான்

    அவனை படுக்க வைத்து , நிற்க வைத்து , உட்கார வைத்து பல கோணங்களில் வரைந்து கொடுத்தார் அந்த ஓவியர் .வாடிக்கையாலருக்கும் சந்தோசம் . அந்த ஓவியமும் பிரபலமானது , கடையும் பிரபலமானது .தன் கடையுலும் ஒன்றை மாட்டிவிட்டார் .

    ஆண்டுகள் பல கடந்தன . அதே கடைக்கு மீண்டும் ஒரு வேலை வந்தது.இப்போது வந்த வாடிக்கையாளர் , குஷ்டம் பிடித்து விகாரமாக தோறும் ஒரு மனிதனின் ஓவியம் கேட்டு வந்தார் . கடை முதலாளியும் நீண்ட தேடலுக்கு பின் உண்மையிலேயே குஷ்டம் பிடித்து உடம்பெல்லாம் புண்ணாகி பார்த்தாலே பயத்தை உண்டு பண்ண கூடிய தோற்றத்துடன் இருக்கும் வயதான ஒருவன் சாலை ஓரத்தில் படுத்து கொண்டுஇருந்தான் .அவனை கொண்டு வந்தார் . மாடலாக வைத்து ஓவியம் வரைந்து கொடுத்தார் .கச்சிதமாக இருந்தது. சொன்னதை விட அதிக கட்டணம் கொடுத்தார் வாடிக்கையாளர் .கடை முதலாளியும் அந்த மாடலுகு கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்து போய் வா என்றார் .ஆனால் அந்த குஷ்ட ரோகி போகாமல் அங்கிருந்த பாலகன் இயேசுவின் படத்தையே பார்த்து கொண்டு இருந்தான் .

    கடை முதலாளி கேட்டார் ,
    என்னப்பா ஏசுவையே பார்த்து கொண்டு இருக்கிறாய் ?
    அவனிடமிருந்து பதில் இல்லை ,
    உன் பேரனின் நினைவு வருகிறதா ?
    லேசாக சிரித்தான் .
    சரி சரி உடனே கிளம்பு , நீ இங்கு இருந்தால் கடைக்குள் யாரும் வரமாட்டார்கள் .
    பிடித்து தள்ளாத குறையாக விரட்டினான் , ஆனால் அவன் கண்கள் மட்டும் அந்த ஓவியத்தை பார்த்து கொண்டே இருந்தது .
    மீண்டும் கடைக்காரன் விரட்டினான் .
    இப்போது லேசாக கண் கலங்கினான் .

    "ஏன் அழுகிறாய் ", கடைகாரர் கேட்டார் .
    மௌனமாய் நடந்தான் .
    கடை காரனுக்கு தெரியாது சிறு வயது பாலகனும் அவனே என்று .
    அவன் மனதிற்குள் மட்டும் ஒலித்து கொண்டே இருந்தது , என் பெற்றோர் செய்த புண்ணியம் பாலகனாய் இருக்கும் பொது ஏசுவாக பார்த்தார்கள் .நான் செய்த பாவம் குஷ்ட ரோகியாக விரட்டுகிறார்கள் .

    ReplyDelete
  21. கமலின் சத்யா படத்தில் வாலி 'நகருனகரு' ன்னு ஒரு பாட்டில் நடித்திருப்பார்..நல்லா நடிச்சுருப்பார்..அந்தப் பாட்டு ஆரம்பத்திலேருந்து டெல்லி கணேஷ் கலக்கியிருப்பாரு..

    வாலி..ஒரே ஜாலி..

    ReplyDelete
  22. வழக்கம்போலே ஃபில்ட்டர் காஃபி அருமை..

    சுஜாதாவின் எழுத்தைப் படித்து ரொம்ப வருடங்கள் ஆகிறது..படிக்க வாய்ப்பு அமைத்தமைக்கு வாத்தியாருக்கு ஸ்பெஷல் நன்றி..

    சுஜாதாவுடன் பரிச்சயம் தங்களுக்கு இருந்தது என்பதும் ஒரு எதிர்பார்த்திராத விஷயம்..

    ReplyDelete
  23. பதிவு அருமை...
    ரெங்கராஜர்கள் முன்னும் பின்னும் இருக்க இடையிலே கவியரசு ஜொலிக்கிறார்...

    புதிருக்கான பதில்கள்....
    1 தட்ப வெப்பம்
    2 .நாவினால் உணரும் சுவை (பதிவு தலைப்பை ஒட்டி வருவதால் இந்த யூகம்)
    நன்றிகள் ஆசிரியரே!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  24. ////Blogger தேமொழி said...
    இவர் மனோகராவின் அம்மா, பசுபுலேட்டி கண்ணாம்பா...
    வாழ்க இணையம்
    வளர்க வகுப்பறை...
    தாவிவிட்டீர்கள்?/////

    முதல் பின்னூட்டம் உங்களுடையதுதான். சரியானவிடையைச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள். உங்களுடைய பின்னூட்டத்தை இன்று மாலை ஆறு மணி வரை நிறுத்தி வைத்திருந்தேன் - மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காக! வேறு ஒருவரும் அதற்கான விடையைச் சொல்லவில்லை!

    ReplyDelete
  25. /////Blogger sekar said...
    அய்யா வணக்கம்
    கவியரசுவின் பாசந்தி ,சுஜாதாவின் பில்ட்டர் காபி அருமை./////

    நல்லது. உங்களின் இரசனை உணர்விற்குப் பாராட்டுக்கள்! நன்றி!

    ReplyDelete
  26. /////Blogger R.Srishobana said...
    Vanakkam Ayya,
    Pakoda plate2 College Girl Joke was really nice...it reminded me abt my College life...Basandhi and pakoda fulfilled my stomach fully...Thanx for giving us Variety of Foods everyday,Sir.
    Ayya,
    My Guess for the Riddle is
    "Talk"(Vaai Pechu)..//////.

    நல்லது. நன்றி சகோதரி. நீங்கள் கூறியுள்ளது சரியான விடையல்ல! சரியான விடையை இப்போது சொல்கிறேன். அது “சீதோஷ்ணம்’

    ReplyDelete
  27. Blogger thanusu said...
    வாலியின் வார்த்தைகளுக்கு வாலியின் பலம் உண்டு சுஜாதாவின் அறிவியல் விஷயங்கள் மிக பிரபலம் . .
    கவிபேரரசுவுக்கு நிகர் அவரே
    சோகமான பாடலை சந்தோஷமான பாடலாக மாற்றியது போல்.
    அந்த பாடலை படிக்கும் போது , எனக்கு சந்தோஷமான ஒன்று சோகமாக மாறிய ஒரு மாற்றல் சம்பவம் நினவு வந்தது .
    அது ஒரு மிகவும் பிரபலமான ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் கடை. அதற்கு ஒரு புதிய வேலை வந்தது .சிறிய வயது பாலகன் இயேசுவை வரைந்து கேட்டு வந்த வேலை . மாடல் களை வைத்து வரைந்து கொடுப்பார்கள் .கடை முதலாளிக்கு சந்தோசம் கலந்த கவலை .சந்தோஷத்திற்கு கரணம் இயேசுவை வரைந்து கேட்டது . கவலைக்கு காரணம் , இயேசு ஒரு தெய்வபிறவி. தெய்வாம்சம் நிரம்பிய முகம் கொண்ட மாடல் பாலகனை எங்கு போய் தேடுவது என்பது. ஒரு வழியாக நீண்ட தேடலுக்கு பிறகு ஏசுவே மீண்டும் வந்து பிறந்தது போல் ஒரு பாலகன் கிடைத்தான்
    அவனை படுக்க வைத்து , நிற்க வைத்து , உட்கார வைத்து பல கோணங்களில் வரைந்து கொடுத்தார் அந்த ஓவியர் .வாடிக்கையாலருக்கும் சந்தோசம் . அந்த ஓவியமும் பிரபலமானது , கடையும் பிரபலமானது .தன் கடையுலும் ஒன்றை மாட்டிவிட்டார்
    ஆண்டுகள் பல கடந்தன . அதே கடைக்கு மீண்டும் ஒரு வேலை வந்தது.இப்போது வந்த வாடிக்கையாளர் , குஷ்டம் பிடித்து விகாரமாக தோறும் ஒரு மனிதனின் ஓவியம் கேட்டு வந்தார் . கடை முதலாளியும் நீண்ட தேடலுக்கு பின் உண்மையிலேயே குஷ்டம் பிடித்து உடம்பெல்லாம் புண்ணாகி பார்த்தாலே பயத்தை உண்டு பண்ண கூடிய தோற்றத்துடன் இருக்கும் வயதான ஒருவன் சாலை ஓரத்தில் படுத்து கொண்டுஇருந்தான் .அவனை கொண்டு வந்தார் . மாடலாக வைத்து ஓவியம் வரைந்து கொடுத்தார் .கச்சிதமாக இருந்தது. சொன்னதை விட அதிக கட்டணம் கொடுத்தார் வாடிக்கையாளர் .கடை முதலாளியும் அந்த மாடலுகு கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்து போய் வா என்றார் .ஆனால் அந்த குஷ்ட ரோகி போகாமல் அங்கிருந்த பாலகன் இயேசுவின் படத்தையே பார்த்து கொண்டு இருந்தான் .
    கடை முதலாளி கேட்டார் ,
    என்னப்பா ஏசுவையே பார்த்து கொண்டு இருக்கிறாய் ?
    அவனிடமிருந்து பதில் இல்லை ,
    உன் பேரனின் நினைவு வருகிறதா ?
    லேசாக சிரித்தான் .
    சரி சரி உடனே கிளம்பு , நீ இங்கு இருந்தால் கடைக்குள் யாரும் வரமாட்டார்கள் .
    பிடித்து தள்ளாத குறையாக விரட்டினான் , ஆனால் அவன் கண்கள் மட்டும் அந்த ஓவியத்தை பார்த்து கொண்டே இருந்தது .
    மீண்டும் கடைக்காரன் விரட்டினான் .
    இப்போது லேசாக கண் கலங்கினான் .
    "ஏன் அழுகிறாய் ", கடைகாரர் கேட்டார் .
    மௌனமாய் நடந்தான் .
    கடை காரனுக்கு தெரியாது சிறு வயது பாலகனும் அவனே என்று .
    அவன் மனதிற்குள் மட்டும் ஒலித்து கொண்டே இருந்தது , என் பெற்றோர் செய்த புண்ணியம் பாலகனாய் இருக்கும் பொது ஏசுவாக பார்த்தார்கள் .நான் செய்த பாவம் குஷ்ட ரோகியாக விரட்டுகிறார்கள்/////

    உங்களின் கதைப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே! .

    ReplyDelete
  28. /////Blogger minorwall said...
    கமலின் சத்யா படத்தில் வாலி 'நகருனகரு' ன்னு ஒரு பாட்டில் நடித்திருப்பார்..நல்லா நடிச்சுருப்பார்..அந்தப் பாட்டு ஆரம்பத்திலேருந்து டெல்லி கணேஷ் கலக்கியிருப்பாரு..
    வாலி..ஒரே ஜாலி../////

    ஸ்ரீரங்கத்துக்காரர்களே ஜாலியான ஆட்கள்தான். மண் வாசனையும், காவிரித் தண்ணீரும், அந்த ஊரைச் சேர்ந்த அ..தே....களும் காரணம்

    ReplyDelete
  29. /////Blogger minorwall said...
    வழக்கம்போலே ஃபில்ட்டர் காஃபி அருமை..
    சுஜாதாவின் எழுத்தைப் படித்து ரொம்ப வருடங்கள் ஆகிறது..படிக்க வாய்ப்பு அமைத்தமைக்கு வாத்தியாருக்கு ஸ்பெஷல் நன்றி..
    சுஜாதாவுடன் பரிச்சயம் தங்களுக்கு இருந்தது என்பதும் ஒரு எதிர்பார்த்திராத விஷயம்..//////

    நான் இளைஞனாக இருந்த காலத்தில், தீவிர வாசிப்பின் காரணமாக, பல எழுத்தாளர்களுடன், தேடிச் சென்று தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்/அறிமுகம் செய்து கொண்டேன். சுஜாதா, கண்ணதாசன், பாலகுமாரன், ராகி.ரங்கராஜன், புனிதன், ஜரா.சுந்தரேசன் (அப்புசாமி சீதாபாட்டி புகழ்) ஓவியர் ஜெயராஜ் என்று பட்டியல் நீளும். அதைப் பற்றி 4 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மணத்தில் ஸ்டார் பதிவாளராக பதிவுகளை ஏற்றிய சமயம் விவரமாக எழுதியிருக்கிறேன். ஒரே வாரத்தில் மொத்தம் 33 பதிவுகள். பேராதரவைப் பெற்ற பதிவுகள் அவை! அது என்னுடைய வேறு ஒரு பதிவில். அதை தற்சமயம் முடக்கி வைத்திருக்கிறேன். அதில் உள்ளவைகள் திருட்டுப்போகக்கூடாது என்பதற்காக!

    ReplyDelete
  30. வாத்தியார் ப்ரோபைல் என்னான்னு தெரியாமலே இருந்துட்டேன் இவ்ளோ நாளா..

    உங்களின் எழுத்துத் துறை சார்ந்த ஆர்வம் ஆச்சர்யத்தத் தூண்டுகிறது..

    நல்ல லிஸ்ட்..இதிலே கண்ணதாசனைப் படித்ததில்லை..கேட்டது மட்டும்தான்..சுஜாதா,பாலகுமாரன்,ரா.கி.ரங்கு என்று எழுத்தாளர்களின் கதைகள் படித்ததுண்டு..ஜரா.சுந்தரேசன் (அப்புசாமி சீதாபாட்டி புகழ்) யார் முதலில் படிப்பது என்று குமுதம் இதழுக்காக சண்டையிட்டுக்கொண்டு படித்த ஞாபகம் இப்போது வருகிறது..அப்புசாமி சீதாபாட்டி காமெடி பற்றித் தெரிந்துகொண்ட அளவுக்கு அப்போது எழுத்தாளர் முக்கியமாகப் பட்டதில்லை..கிட்டத்தட்ட 13 டு 15 வயதுக்குள்தான்..ஓவியர் ஜெயராஜ், மணியம் செல்வன், கோபன் என்று ரசித்துப் பிடித்த பாணிகளிலே என்ன காரணத்தாலோ பிடிக்காமல் போனது பவித்ரா வின் ஜோக்குகளுக்கான சித்திரங்கள்..

    கிட்டத்தட்ட சமீபகாலத்து விஜய் டான்ஸ் அதேபோலத் தோன்றும்..காலையும் கையையும் வித்தியாசமாக நெளித்து என்னவோ அவ்வளவாகப் எனக்குப் பிடிப்பதில்லை..

    .நேரிடையாக சந்தித்த உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது..கிரேட்..

    சாண்டில்யனை நான் நேரில் சந்திக்க வேண்டுமென்று மஞ்சளழகி படித்து முடித்த அன்று ரொம்ப ஆசைப்பட்டேன்..அந்தக்கதையில் அவளது முடிவுக்காக அன்று அந்த சோகத்தை போக்க காரைக்குடி மலர் ஹோட்டல் குறிஞ்சி பெர்மிட்ரூம் போகவேண்டியதாய்ப் போயிற்று..கல்லூரியிலே மூன்றாமாண்டு என்று ஞாபகம்..

    பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள்.. நன்றி.

    ReplyDelete
  31. //////Blogger தமிழ் விரும்பி said...
    பதிவு அருமை...
    ரெங்கராஜர்கள் முன்னும் பின்னும் இருக்க இடையிலே கவியரசு ஜொலிக்கிறார்...
    புதிருக்கான பதில்கள்....
    1 தட்ப வெப்பம்
    2 .நாவினால் உணரும் சுவை (பதிவு தலைப்பை ஒட்டி வருவதால் இந்த யூகம்)
    நன்றிகள் ஆசிரியரே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    தட்பவெட்பம் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  32. 1.வகுப்பறை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பணிவான விஜயதசமி தின வாழ்த்துக்கள்.

    2. சுஜாதா சிறுகதைகள் படிக்கும் இன்பமே அலாதியானது. நன்றி.
    நெடு நாட்கள் ரா.கி.ரங்கராஜனை சுஜாதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் சேலத்தில் இருந்த போது, சுஜாதா அவர்களை சந்தித்து உரையாடிது இன்றும் சிறந்த பாடமாக பசுமையாய் நினைவில் உள்ளது. அவர்களின் அண்ணன் டாக்டர் கிருஷ்ணமாச்சாரி சேலத்தில் மிகச் சிறந்த ரேடியாலாஜிஸ்ட் அப்போது. இரண்டாவது அக்ரஹாரத்தில் வீடு. அவரும் மிகச் சிறந்த அறிவாளி.

    thanks a lot

    ReplyDelete
  33. அனைத்துமே அருமை!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com