மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.5.10

பாடல்களுக்கு உயிரூட்டியவர்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடல்களுக்கு உயிரூட்டியவர்!

பக்திப் பாடல்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கண்களில் காணுவதைப் போன்று எழுதப் பெற்றவை மற்றும் கதாபாத்திரமாக மாறி, கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றபடி எழுதப்பெற்றவை என அவைகள் இரண்டு விதப்படும்!.

"ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்"

என்று கவியரசர் எழுதியது கண் காணும் காட்சி வடிவில் எழுதப் பெற்ற பாடலாகும்.

"கண்ணன்முகத் தோற்றம் கண்டேன்
.....கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
......கன்னி சிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ
.......தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே......ஓ...

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்
.......கைஇரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
.......பூச்சரங்கள் சூடித் தந்தான்
கண் திறந்து பார்த்தேன்
........கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே!"

என்று கவியரசர் எழுதியது , கதாபாத்திரமாக மாறி பாத்திர உணர்வு மேலோங்க எழுதிய பக்திப் பாடலாகும்.

மற்றுமொரு பாடலைக் கொடுத்துள்ளேன். இதுவும் கதாபாத்திரமாக மாறி பாத்திர உணர்வு மேலோங்க எழுதப் பெற்ற பாடல் என்றாலும் இதில் வேறு ஒரு சிறப்பும் உள்ளது!

அது, இறைவனே கதாபாத்திரமாகப் படத்தில் வந்து பாடுவது. அதாவது திருவிளையாடல் என்ற படத்தில் சிவபெருமானே விறகு வெட்டி வேடத்தில் வந்து பாகவதர் வீட்டின் முன் அமர்ந்து பாடும் பாடல்.

இறைவன் தன் திருவாய் மலர்ந்து பாடுவதுபோல எழுதுவதென்றால் சும்மாவா?

அந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் அதில் வரும் வரிகளில் உள்ள கம்பீரமும், தொனியும், கருத்தும், பாகவதரை மட்டுமல்ல பாடலைக் கேட்கும், படத்தைப் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடும்..

அது போன்ற பாடலை எழுதுவதற்கு கவியரசரால் மட்டும்தான் முடிந்திருக்கிறது! பாடலைப் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!

"என்ன நினைத்தாய்?"

பாட்டும் நான்தான், பாவமும் நான்தான்
எல்லோரையும் பாடவைப்பவனும் நான்தான்
கூட்டும் இசையும் நான்தான்,
கூத்தின் வடிவமும் நான்தான்
அசையும் பொருள்களின் இசையும் நான்தான்
ஆடும் கலையின் நாயகம் நான்தான்
எதிலும் இயங்கும் இயக்கமும் நான்தான்
என்னிசை நின்றால் என்ன ஆகும் தெரியுமா?
உலகே அடங்கிவிடும்!
அறிவாயா மனிதனே?"

என்று பொருள் பட சிவபெருமான் பாடுவதாக
எழுதப்பெற்ற அற்புதமான பாடல் அது!

சிவனாக நடித்த நடிகர் திலகம், இசை அமைத்த திரு.கே.வி. மகாதேவன் அவர்கள், பாட்டைப் பாடிய திரு.டி.எம்.செளந்தரராஜன் அவர்கள், காட்சியை அற்புதமாக வடிவமைத்த இயக்குனர் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள், ஆகியோரின் கூட்டு முயற்சிதான் அந்தப் பாடல் படத்தில் சிறப்பாக அமைந்ததற்குக் காரணம்

என்றாலும், எல்லாவற்ற்றையும் மீறி கவியரசரின் வரிகள் அதற்கு மெருகூட்டியது / உயிரூட்டியது என்றால் அது மிகையல்ல!

முழுப்பாடலையும். கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------

"பாட்டும் நானே பாவமும் நானே -
.....பாடும் உனை நான் பாட வைத்தேனே!
கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம்
......கதை சொல்ல வந்தாயோ?

(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
.......ஆடும் கலையின் நாயகம் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
......என்னிசை நின்றால் அடங்கும் உலகே!

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
.......அறிவாய் மனிதா - உன் ஆணவம் பெரிதா?

ஆலவாய னோடுபாட வந்தவனின்
.......பாடும் வாயை இனி மூட வந்ததொரு....."

(பாட்டும்)

படம்: திருவிளையாடல் (வருடம் - 1965)
------------------------------------------------------------------------------
பாடும் வாயை இனி மூட வந்தவன் என்ற இறைச் செயலை வெளிப்ப்டுத்தும் முத்தாய்ப்பான வரியையும் பாருங்கள்! அதுதான் கவியரசர்!!!!!

(தொடரும்)
--------------------------------------------------------------------------
தனிச் செய்தி!

இந்தப் படம் வந்த போது அடியேன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். தெரிந்த திரையரங்கில் படம் வெளிவந்திருந்ததால் பல முறைகள் திரும்பத் திரும்பப் படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போயிருந்தேன்.

படத்தின் அததனை பாடல்களும், காட்சிகளும், குறிப்பாக தருமி வரும் காட்சிகள் எல்லாம் மனப்பாடம்.

எப்படியும் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. உடனே நிறைவேறவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்துத்தான் அது நிறைவேறியது.

இந்தப்படம் வந்து சக்கைபோடு போட்ட கையோடு தன்னுடைய அடுத்த படமான் "திருவருட்செல்வர்" படத்தை எடுப்பதில் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, அவரைப் படப்பிடிப்பு தளம் ஒன்றில் (Saradha Studio, Chennai) சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

அது பெறும் பேறு!

அவரைச் சந்தித்து விடைபெற்றபோது அவர் என்னுடைய ஆட்டோகிராஃப் புத்தகத்தில் "வாழ்க கலை" என்று கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

அதை இன்றுவரை அந்த மேதையின் நினைவாகப் பத்திரமாகப் போற்றி வைத்துள்ளேன்.
======================================================







பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியது கவி.கா.மு.செரிஃப் என்று இரண்டு அன்பர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனக்குத் தெரிந்து திருவிளையாடல் படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியது கவியரசர் கண்ணதாசனே. அவர் ஏ.பி.என்னின் ஆஸ்தானக் கவிஞர். இணையத்தில் அப்படத்தின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளவர்களும் அதைத்தான் குறிபிட்டுள்ளார்கள். உங்கள் பார்வைக்காக அதை ஸ்கிரீன் ஷாட்டாகத் தந்துள்ளேன். இருந்தாலும் என்வசம் உள்ள நூல்களில் தேடி ஆதாரம் கிடைப்பின் மீண்டும் வருகிறேன்.
படத்தைக் கிளிக் செய்து பாருங்கள் பெரிதாகத் தெரியும்!

அன்புடன்,
வாத்தியார்




26 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று.

    நல்ல பல விசயங்களின் பகிர்வு!
    நன்றி!

    ReplyDelete
  2. Dear Sir

    Vazhga Kalai
    Valarga Asiryar Nilai
    Neengal Ezhudhum Eluthu atthanayum Uli patta s(Ch)ilai
    Neengal Kavi Paadum Mazhai
    Ungal Ezhuthu Mellisai
    Koncham Unippaga Padithal Thenisai
    Vathiyarukku nadapadho sani dasai
    enakku ippodhu Guru dasai
    Vathiyarin Padangal ellam ramiyamana Isai
    ----
    Paadam Nandru Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  3. கவிஞரின் கை வண்ணத்தால் எத்தனையோ தமிழர்கள் ஆன்மீகத்தின் பக்கம் திசை திரும்பியிருக்கிறார்கள்..!

    உண்மையில் அவர் மிகப் பெரும் ஞானி..!

    ReplyDelete
  4. ஏ பி நாகராஜன் அவர்களே நக்கீரராக வந்து தம் நடிப்புத் திற‌மையையும் வெளிப்படுத்திய படம் அது.ந‌மக்கெல்லாம் pடித்திருந்தது.'சுர்ருங்குது'காலத்தில்
    'அறுவமச்சி' என்பார்கள்."சங்க‌றுப்பது எங்கள் குலம்;சங்கரனே உனக்கேது குலம்?" என்றவசன வரிகளை மறக்க முடியுமா?

    ReplyDelete
  5. ஐயா!

    வணக்கம்.

    பட்டையை கிளப்புவது நல்லது தான?

    ReplyDelete
  6. திரு.APN அவர்களுடன் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையா?..இருந்தால் அதையும் வெளியிட்டிருக்கலாமே!...அந்தப் பாடல் இன்னும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  7. Dear Sir,

    Back to class, went to holland for 10 days training however read all the missed lessons. Thanks

    Pandian

    ReplyDelete
  8. அய்யா,
    இந்த இரு பாடலை நானும் ரசிச்சி ருசிச்சதுண்டு...
    என்ன கடவுள முதல்ல நம்பனும்....
    what to do, "படைத்தவன் மேல் தவுறும் இல்லை, பசித்தவன் மேல்..."
    -TSN

    ReplyDelete
  9. பாட்டும் நானே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் க.மு. ஷெரிப் அவர்கள் என்று படித்திருக்கிறேன். எங்கே படித்தேன் என்று சுட்டியையும் கீழே கொடுத்திருக்கிறேன்.
    http://athikkadai-athikkadai.blogspot.com/2010/04/blog-post.html

    http://nagoori.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/

    ஒரு பழைய பாடல் புத்தகத்திலும் அப்படித்தான் என்று படித்தேன். எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  10. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கவியரசர் எழுதிய பக்தி பாடல்களில் என்றென்றும் மறக்க முடியாத பாடல்கள்.இவற்றிற்கு தாங்கள் தரும் விளக்கம், கருத்துரை,ஒப்பீடுகள் மேலும் மேலும் சிறப்பூட்டுகிறது.
    மிக்க நன்றி!
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-2010

    ReplyDelete
  11. thanks for bringing up this song and I just listened to it one more time in my life.
    It is one of my top favorite songs. TMS's voice is matchless and the song is composed in mystic and charming Gowri Manohari ragam. TMS was nominated for National Award for this song. But Balamurali Krishna also sang a super hit 'Oru Naal Pothuma' in the same movie and it was in a ragamalika and he won the National Award that year.

    ReplyDelete
  12. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று.
    நல்ல பல விசயங்களின் பகிர்வு!
    நன்றி!////

    நல்லது நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Vazhga Kalai Valarga Asiryar Nilai
    Neengal Ezhudhum Eluthu atthanayum Uli patta s(Ch)ilai
    Neengal Kavi Paadum Mazhai
    Ungal Ezhuthu Mellisai
    Koncham Unippaga Padithal Thenisai
    Vathiyarukku nadapadho sani dasai
    enakku ippodhu Guru dasai
    Vathiyarin Padangal ellam ramiyamana Isai
    ----
    Paadam Nandru Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  14. ///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    கவிஞரின் கை வண்ணத்தால் எத்தனையோ தமிழர்கள் ஆன்மீகத்தின் பக்கம் திசை திரும்பியிருக்கிறார்கள்..!
    உண்மையில் அவர் மிகப் பெரும் ஞானி..!/////

    ஆமாம். அது நிதர்சனமான உண்மை! நன்றி ஊனா தானா!

    ReplyDelete
  15. ////kmr.krishnan said...
    ஏ பி நாகராஜன் அவர்களே நக்கீரராக வந்து தம் நடிப்புத் திற‌மையையும் வெளிப்படுத்திய படம் அது.ந‌மக்கெல்லாம் பிடித்திருந்தது.'சுர்ருங்குது' காலத்தில் 'அறுவமச்சி' என்பார்கள்."சங்க‌றுப்பது எங்கள் குலம்;சங்கரனே உனக்கேது குலம்?" என்றவசன வரிகளை மறக்க முடியுமா?///////

    திருவிளையாடல் & தில்லானா மோகனாம்பாள், இரண்டு படங்களுமே மறக்க முடியாத படங்கள்!

    ReplyDelete
  16. ////Mayakanna said...
    ஐயா!
    வணக்கம்.
    பட்டையை கிளப்புவது நல்லது தான?/////

    தில் இருந்தால் கிளப்புவது நல்லதுதான்!

    ReplyDelete
  17. ////நேசன்..., said...
    திரு.APN அவர்களுடன் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையா?..இருந்தால் அதையும் வெளியிட்டிருக்கலாமே!...அந்தப் பாடல் இன்னும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது!/////

    செல்போன் காமெரா, டிஜிட்டல் காமெராக்கள் இல்லாத காலம் அது!

    ReplyDelete
  18. /////Loga said...
    Dear Sir,
    Back to class, went to holland for 10 days training however read all the missed lessons. Thanks
    Pandian////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  19. //////Sabarinathan TA said...
    அய்யா,
    இந்த இரு பாடலை நானும் ரசிச்சி ருசிச்சதுண்டு...
    என்ன கடவுள முதல்ல நம்பனும்....
    what to do, "படைத்தவன் மேல் தவுறும் இல்லை, பசித்தவன் மேல்..."
    -TSN/////

    அங்கேதான் முதல் பிரச்சினை!

    ReplyDelete
  20. ////ananth said...
    பாட்டும் நானே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் க.மு. ஷெரிப் அவர்கள் என்று படித்திருக்கிறேன். எங்கே படித்தேன் என்று சுட்டியையும் கீழே கொடுத்திருக்கிறேன்.
    http://athikkadai-athikkadai.blogspot.com/2010/04/blog-post.html
    http://nagoori.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/
    ஒரு பழைய பாடல் புத்தகத்திலும் அப்படித்தான் என்று படித்தேன். எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!. உங்களுக்காகப் பதிவில் படத்துடன் விளக்கம் வெளியிட்டுள்ளேன். அதைப் படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தவறு.. இந்தப் பாடலய் தான் தான் எழுதியதாக கண்ணதாசன் தனது கண்ணதாசன் மாத இதழில் சொல்லி இருக்கிறார்

      Delete
  21. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கவியரசர் எழுதிய பக்தி பாடல்களில் என்றென்றும் மறக்க முடியாத பாடல்கள்.இவற்றிற்கு தாங்கள் தரும் விளக்கம், கருத்துரை,ஒப்பீடுகள் மேலும் மேலும் சிறப்பூட்டுகிறது.
    மிக்க நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    எல்லாப் புகழும், பாராட்டுக்களும் கவியரசருக்கே! நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  22. ////GKS said...
    thanks for bringing up this song and I just listened to it one more time in my life.
    It is one of my top favorite songs. TMS's voice is matchless and the song is composed in mystic and charming Gowri Manohari ragam. TMS was nominated for National Award for this song. But Balamurali Krishna also sang a super hit 'Oru Naal Pothuma' in the same movie and it was in a ragamalika and he won the National Award that year./////

    மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. நேற்று கூட திரு ஏ பி என் அவர்களைப் பற்றித்தான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்
    இன்று அவரைப் பற்றி தங்களின் குறிப்பைக் கண்டு வியந்தேன்.
    அவரது கலை யார்வத்திற்கு அளவே இல்லை.
    ஒவ்வொரு படத்திற்கும்
    என்ன ஒரு செட்டிங் போடுவார் அதுவும் அந்த காலத்திலேயே
    இப்போது இருக்கும் கிராஃபிக்ஸ் முறையில் அவர் மட்டும் இருந்தால் விளையாடி இருப்பார்
    ஆனால் இப்போது பக்தி படங்கள் என்ற பெயரில்
    பேய் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நான் கைந்து படங்களென்றாலும் நச்சென்று கொடுத்திருக்கிறார்.
    நான் கூட முன்பெல்லாம் வருத்தப் படுவதுண்டு. சிவாஜி கணேசனைப் பயன் படுத்தி இன்னும் ஒரு நான்கு படங்களாவது கொடுத்திருக்கலாமே என்று.
    வேறு யாரும் நடிக்கவும் முடியாது வேறு யாரும் எடுக்கவும் முடியாது.

    நிச்சயமாக அவருக்கு இதுவே கடைசி ஜென்மமாக இருக்கும்.
    எத்தனைப் பேரை பக்தி வெள்ளத்தில் அழைத்து சென்றிருக்கின்றார்.

    என் தந்தையும் இப்படித்தான் மிகுந்த கலையுணர்வு கொண்டவர்.
    கடவுளை எண்ணி எண்ணி எதையாவது செய்து கொண்டே இருப்பார்.
    என் வீட்டிலேயே ஒரு அறை முழுதும் வசந்த‌ மாளிகை போன்ற கண்ணாடி அமைத்து நடுவேகிருஷ்ணரின் சிலையை வைத்து ரசித்துக்கொண்டிருப்பார்
    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வந்து திறந்து வைத்தார்.
    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்வந்து பாடுவது வழக்கம். இருவரும் என் இல்லத்திற்கு
    வருடந்தோறும் வருவது உண்டு
    92 வயது நிரம்பிய என் தந்தை இப்போது இல்லை
    தங்களின் இந்த இடுகை எனக்கு பழைய இனிய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது
    நன்றி
    தங்களின் அடுத்த சென்னை வருகையின் போது என் வீட்டிற்கு வருகைத் தந்து செல்லவும்

    கர்ணன் படம் கூட பெரிய கூட்டு முயற்சி தான்
    அதைப் பற்றியும் அடுத்த முறை சற்று எழுதவும்

    நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  24. /////இனியன் பாலாஜி said...
    நேற்று கூட திரு ஏ பி என் அவர்களைப் பற்றித்தான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்
    இன்று அவரைப் பற்றி தங்களின் குறிப்பைக் கண்டு வியந்தேன்.
    அவரது கலை யார்வத்திற்கு அளவே இல்லை.
    ஒவ்வொரு படத்திற்கும் என்ன ஒரு செட்டிங் போடுவார் அதுவும் அந்த காலத்திலேயே
    இப்போது இருக்கும் கிராஃபிக்ஸ் முறையில் அவர் மட்டும் இருந்தால் விளையாடி இருப்பார்
    ஆனால் இப்போது பக்தி படங்கள் என்ற பெயரில் பேய் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    நான் கைந்து படங்களென்றாலும் நச்சென்று கொடுத்திருக்கிறார்.
    நான் கூட முன்பெல்லாம் வருத்தப் படுவதுண்டு. சிவாஜி கணேசனைப் பயன் படுத்தி இன்னும் ஒரு நான்கு படங்களாவது கொடுத்திருக்கலாமே என்று. வேறு யாரும் நடிக்கவும் முடியாது வேறு யாரும் எடுக்கவும் முடியாது.
    நிச்சயமாக அவருக்கு இதுவே கடைசி ஜென்மமாக இருக்கும்.
    எத்தனைப் பேரை பக்தி வெள்ளத்தில் அழைத்து சென்றிருக்கின்றார்.
    என் தந்தையும் இப்படித்தான் மிகுந்த கலையுணர்வு கொண்டவர்.
    கடவுளை எண்ணி எண்ணி எதையாவது செய்து கொண்டே இருப்பார்.
    என் வீட்டிலேயே ஒரு அறை முழுதும் வசந்த‌ மாளிகை போன்ற கண்ணாடி அமைத்து நடுவேகிருஷ்ணரின் சிலையை வைத்து ரசித்துக்கொண்டிருப்பார்
    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வந்து திறந்து வைத்தார்.
    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்வந்து பாடுவது வழக்கம். இருவரும் என் இல்லத்திற்கு
    வருடந்தோறும் வருவது உண்டு
    92 வயது நிரம்பிய என் தந்தை இப்போது இல்லை
    தங்களின் இந்த இடுகை எனக்கு பழைய இனிய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது
    நன்றி தங்களின் அடுத்த சென்னை வருகையின் போது என் வீட்டிற்கு வருகைத் தந்து செல்லவும்
    கர்ணன் படம் கூட பெரிய கூட்டு முயற்சி தான்
    அதைப் பற்றியும் அடுத்த முறை சற்று எழுதவும்
    நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்
    இனியன் பாலாஜி//////////

    உங்கள் அன்பிற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி இனியன் பாலாஜி! உங்கள் முகவரி + தொலைபேசி எண்ணை எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம்!

    ReplyDelete
  25. பாட்டும் நானே பாவமும் நானே பாடலை நான் தான் எழுதினேன்,என்று கண்ணதாசன் தனது கண்ணதாசன் மாத இதழில் (1978 ஜூலை ) சொல்லி இருக்கிறார் .ஜெயகாந்தனையும் ஷெரிப்பையும் பற்றி காட்டமாக சொல்லி இருக்கிறார். அந்தப் பாடலை தான் எழுதிய போது உடன் இருந்தவர்கள் யார் யார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com