மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.5.10

Short cut - குறுக்கு வழி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short cut - குறுக்கு வழி!

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
எங்கே மனிதன் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
---கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------
Short cut route to know the outcome of Dasa/Bukthi periods
தசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி

எப்போது தீரும் என் கஷ்டம்?

எல்லோருடைய மனதிலும் உள்ள கேள்வி அதுதான்.

அந்தஸ்து, பொருளாதார மேன்மை, அன்பான குடும்பச்சூழ்நிலை என்று எல்லாவற்றையும் தாண்டி எல்லோருடைய மனதிலும் ஒரு கவலை அல்லது கஷ்டம் இருக்கத்தான் செய்யும்.

உதாரணத்திற்குச் சிலருக்குத் தன் குழந்தைகளை வைத்துக் கவலை; சிலருக்குச்
குழந்தை இல்லாத கவலை.

சிலருக்கு வயதாகியும், இன்னும் திருமணமாகவில்லையே எனும் கவலை. சிலருக்கு இளம் வயதிலேயே திருமணமாகியும், கனவு கண்டபடி அல்லது எதிர்பார்த்தபடி மனைவி அமையவில்லையே எனும் கவலை. அல்லது கணவன் அமையவில்லையே எனும் கவலை

சிலருக்கு நல்ல வேலை கிடைத்தும், எதிர்பார்த்த ஏற்றம் இல்லையே எனும் கவலை. சிலருக்கு சரியான/ தகுதியான வேலை கிடைக்காத கவலை.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

காலதேவன் 700 கோடி மக்களுக்கும், அதைவிட அதிக எண்ணிக்கையில் பிரச்சினைகளை உருவாக்கி வைத்துள்ளான். எந்த சூப்பர் கணினி அல்லது சர்வரில் வைத்துக்கொண்டு அதைச் செயல்படுத்துகிறான் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் பல வைரஸ்களை உருவாக்கி அல்லது ஸ்பைவேர்களை உருவாக்கி அதை முடக்க இந்நேரம் முயற்சித்திருக்க மாட்டோமா ?:-))))
--------------------------------------------------------------------------------
பாடத்தின் முதல் பகுதி இங்கே உள்ளது. அதைப் படித்திராதவர்கள், படித்துவிட்டு வந்து, இதைப் படிக்கவும். அதன் தொடர்ச்சிதான் இது!

இரவு, பகல் போல,இன்பமும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியவையாகும்.

எப்போது இன்பம் வரும், எப்போது துன்பம் வரும் என்பதை அறிந்து கொள்ள
ஜாதகத்தில் ஒரு வழியிருக்கிறது. சுலபமான வழி அது.

அடுத்த பாடம் அதுதான் என்று வகுப்பறையில் கூறியிருந்தேன். அதை இப்போது
தருகிறேன்.
---------------------------------------------------------------------------------------
பலன்களைத் தருவதில் தசா/புத்தியின் பங்கு முக்கியமானது.

கோச்சாரப் பலன்களவிட தசாபுத்திப் பலன்களே முக்கியமானது. முதன்மையானது.

தசாபுத்தி வலுவாக இருந்தால், கோச்சாரம் வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்.

தெருவில் வி.வி.ஐ.பியின் வாகனங்கள் பைலட் வண்டியின் சைரன் ஒலிக்க
வரும்போது நாம் ஒதுங்கிக் கொள்கிறோம் இல்லையா? அப்படி கோச்சாரமும்
ஒதுங்கி வழிவிட்டுவிடும்
-----------------------------------------------------------------------------------
தசாபுத்தி பலன்களைப் பற்றி முன்பு எழுதியுள்ளேன். புலிப்பாணியின் பாடல்கள்
அசத்தலாக இருக்கும். அதை வைத்து, தற்சமயம் நடக்கும் தசா புத்தி, வரப் போகும் தசா புத்தி, அவை எத்தனை காலத்திற்கு இருக்கும், எப்படி இருக்கும் என்று விவரம் அறிந்து கொள்ளலாம். அது நம்பகமானது.

ஒருவருக்கு ராகு தசை நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ராகு திசையின் காலம் 18 ஆண்டுகள். அந்தப் பதினெட்டு ஆண்டுகளுமே துயரமானதா? இல்லை.
சனிதிசையின் கால அளவு 19 ஆண்டுகள்.அந்தப் பத்தொன்பது ஆண்டுகளுமே துயரமானதா? இல்லை.

ஒரு திசையைக் கையில் எடுத்துக்கொண்டு விரிவாகப் பார்ப்போம்.

சனி தசை - 19 ஆண்டுகள்
ராகு தசை - 18 ஆண்டுகள்
கேது தசை - 7 ஆண்டுகள்
இம்மூன்றும் தீய கிரகங்களின் தசை/புத்திகள் ஆகும்.
இந்த மூன்றில் ஒன்றையாவது மனிதன் தன் வாழ்வில் கடந்துதான் ஆகவேண்டும்
சிலருக்கு இரண்டைக் கடக்கும்படி அமைந்துவிடும்.

மாதிரிக்கு சனி தசையையே கையில் எடுத்துக்கொள்வோம்
அதன் கால அளவு 19 ஆண்டுகள்.
அதில் உட்பிரிவான புக்திகள், மற்றும் புக்திகளின் உட்பிரிவான அந்தரங்கள் உண்டு
Majaor Dasa > Sub period > Divisions in the sub - period > Total 81 different antara periods
இந்த 81 (9X9) அந்தரகாலமும் நமது ஜாதகத்தில் உள்ள அதனதன் நாதனின் வலுவை
வைத்து மாறுபட்ட பலன்களை உடையதாக இருக்கும்.
கிரகங்களின் வலுவை அதனதன் சுயவர்க்கப்பரல்களை வைத்து எழுதிக்கொள்ளூங்கள்.
எழுதிக்கொண்டீர்களா?
இப்போது பாருங்கள்
பரல்கள் 5ம் அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால் அந்த காலகட்டம் (That period)
நன்றாக இருக்கும். 4 இருந்தால் சராசரியாக இருக்கும். 3 அல்லது அதற்குக் கீழாக இருந்தால்
நன்றாக இருக்காது. உங்கள் மொழியில் சொன்னால் மோசமான விளைவுகளை உடையதாக இருக்கும்

7 or 8 Paralkal -Excellent
6. Better
5. Good
4. Medium
3. Bad
2 & 1 Worst
என்று வைத்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
இந்த அந்தர காலத்தை வைத்து துல்லியமாக உங்களுக்கு நல்ல நேரம் எப்போது? கெட்ட நேரம் எப்போது என்று யாரையும் கேட்காமலேயே உங்களுக்கு நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? சனி தசையின் 19 ஆண்டு காலமும் ஒரே மாதிரி இருக்காது. அதன் உட் பிரிவிற்குத் தகுந்தது போல மாறுதல்களான பலன்களைத் தரக்கூடியது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.மற்ற தசைகளுக்கும் இந்தக் கணக்கின்படியே அல்லது இந்த methodன் படியே பலன்களை அறிந்து கொள்ளுங்கள்

நன்றாகப் புரிந்ததா?
நன்றாகப் பிடிபட்டதா?
ஓக்கேயா?

அன்புடன்
வாத்தியார்

.
நான் எனது சொந்த மற்றும் வியாபார அலுவல்களுக்கு இடையே பாடங்களை நடத்திக்கொண்டிருக்கிறேன். அதை மனதில் கொள்க!நான் முழுநேர ஜோதிடனுமல்ல; முழு நேர எழுத்தாளனுமல்ல. அதையும் மனதில் கொள்க!
----------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

இது மீள் பதிவா? என்று இரண்டொருவர் கேட்டுள்ளனர். மீள் பதிவல்ல! மின்னஞ்சல் பாடங்களில் நடத்தியதைத் தொடர்ந்து வகுப்பறையில் பதிவிட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி ஆறு பாடங்களைப்
பதிவிட்டுள்ளேன். இது 7வது பாடம். இன்னும் ஆறு பாடங்கள் இருக்கின்றன.

வகுப்பறையில், மின்னஞ்சல் வகுப்பில் உள்ளதைப்போல இரண்டு மடங்கு எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டுத்தான் இதை வகுப்பறையில் பதிவிட்டுவருகிறேன். இனி மின்னஞ்சல் வகுப்பு என்று தனி வகுப்பு இருக்காது. காரணம் நேரமின்மை. இனி பதிவுகள் அனைத்தும் வகுப்பறையிலேயே வரும்.

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. பொன்காலை பொழுது வணக்கம் ஐயா!

    அருமை! அருமையோ அருமை

    ReplyDelete
  2. Dear Sir

    Padam Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,

    மீள், தாள், வாள் எதுவானாலும் தூள் பதிவு.
    அறுபதிலும் இத்தனை வேகம் அதிசய வைக்கும்
    ஆறுமுகன் அருளோடு தங்களின் இந்த சீரியப் பணி.

    தட்டச்சின் தனங்கள் தடிக்க,
    தட்டும், தட்டச்சு கிளப்பும் சத்தம்
    விண்ணை பிளக்க,
    நித்திரை கேட்டது ஆம்
    விடிவெள்ளியின் நித்திரை கேட்டது.

    நித்திரை கெடுத்த வாத்தியாரின் மீது
    தனது நித்திரை கெடுத்ததாய் மித்திரர்
    காயத்தை திரியாக்கிய விஸ்வாமித்திரர்
    வழக்கொன்று தொடுத்துள்ளார்
    வானோர் மன்றத்தில்.

    ஆதங்கம் எதற்கு ஆசிரியரே!
    ஆரியப்பட்டரே!! ஆஜராகி
    தங்களின் வழக்கை ஏற்று, வாதிடும் போது,
    ஆகட்டும் உங்கள் பணி ஆண்டாண்டு காலம்
    தொடரட்டும் உங்கள் சிறந்த இப்பணி!

    அன்புடன்,
    ஆலாசியம்.கோ.

    ReplyDelete
  4. /////Mayakanna said...
    பொன்காலை பொழுது வணக்கம் ஐயா! அருமை! அருமையோ அருமை!/////

    பழைய மாயக்கண்ணனா அல்லது புதியமாயக்கண்ணனா சுவாமி நீர்?

    ReplyDelete
  5. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Padam Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  6. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    மீள், தாள், வாள் எதுவானாலும் தூள் பதிவு.அறுபதிலும் இத்தனை வேகம் அதிசய வைக்கும்
    ஆறுமுகன் அருளோடு தங்களின் இந்த சீரியப் பணி.
    தட்டச்சின் தனங்கள் தடிக்க, தட்டும், தட்டச்சு கிளப்பும் சத்தம்
    விண்ணை பிளக்க, நித்திரை கேட்டது ஆம்
    விடிவெள்ளியின் நித்திரை கேட்டது.
    நித்திரை கெடுத்த வாத்தியாரின் மீது தனது நித்திரை கெடுத்ததாய் மித்திரர்
    காயத்தை திரியாக்கிய விஸ்வாமித்திரர் வழக்கொன்று தொடுத்துள்ளார்
    வானோர் மன்றத்தில்.
    ஆதங்கம் எதற்கு ஆசிரியரே!ஆரியப்பட்டரே!! ஆஜராகி
    தங்களின் வழக்கை ஏற்று, வாதிடும் போது, ஆகட்டும் உங்கள் பணி ஆண்டாண்டு காலம்
    தொடரட்டும் உங்கள் சிறந்த இப்பணி!
    அன்புடன்,
    ஆலாசியம்.கோ./////

    உங்களைப்போன்ற வாசகர்கள் இருக்கும்வரை இப்பணி தொடரும்! தொடரும்! தொடரும்!
    நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்

    இன்றைய பதிவின் மூலம் short cut எளிதாக புரிந்தது. ஒரு சந்தேகம். ராகு, கேதுவிற்கு பரல்கள் இல்லை. அந்த திசைகளின் பலன்களை எவ்வாறு அறிந்து கொள்வது ???

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.

    ஏர்கெனவே படித்த பாடங்களானாலும் திரும்பவும் படிப்பதில் பாடங்கள்
    நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.மிக்க நன்றி அய்யா.

    அரசு.

    ReplyDelete
  9. தசா புக்தியின் பங்கு மகத்தானது.சந்தேகமில்லை. அஷ்டவர்க்கத்தில் கிரஹங்களுக்கான சுயவர்க பரல்களைக்கொண்டு அதன் பலத்தைக் கணக்கிட்டுக்கொண்டு அதனை அந்தரத்திற்க்குப் பயன்படுத்துவது என்பது வாத்தியாரின் தனி முத்திரை என்று தோன்றுகிறது.ரீமிக்ஸ் பாட்டு கேட்பது போல உள்ளது.நீசமடைந்த கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 பெறுவதும்,உச்சம் அடைந்த கிரஹங்கள் 2,3 பெறுவதும் அஷ்டவர்கத்தில் சஹஜ‌மாக நடை பெறுகின்றன.

    ReplyDelete
  10. அய்யா வணக்கம். தாய் மண்ணை மிதித்து சில வாரங்கள்..அதனாலே ரொம்ப பிஸி..தங்களை சந்திக்க முடியுமா? நானும் முடிந்த வரை முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
  11. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    இன்றைய பதிவின் மூலம் short cut எளிதாக புரிந்தது. ஒரு சந்தேகம். ராகு, கேதுவிற்கு பரல்கள் இல்லை. அந்த திசைகளின் பலன்களை எவ்வாறு அறிந்து கொள்வது ???
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    ராகு & கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. அதனால் பரல்களும் கிடையாது. அவைகளுக்கு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் நிலைமையை வைத்துத்தான் பலன்கள்!

    ReplyDelete
  12. /////ARASU said...
    ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
    ஏற்கெனவே படித்த பாடங்களானாலும் திரும்பவும் படிப்பதில் பாடங்கள்
    நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.மிக்க நன்றி அய்யா.
    அரசு./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////kmr.krishnan said...
    தசா புக்தியின் பங்கு மகத்தானது.சந்தேகமில்லை. அஷ்டவர்க்கத்தில் கிரஹங்களுக்கான சுயவர்க பரல்களைக்கொண்டு அதன் பலத்தைக் கணக்கிட்டுக்கொண்டு அதனை அந்தரத்திற்க்குப் பயன்படுத்துவது என்பது வாத்தியாரின் தனி முத்திரை என்று தோன்றுகிறது.ரீமிக்ஸ் பாட்டு கேட்பது போல உள்ளது.நீசமடைந்த கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 பெறுவதும்,உச்சம் அடைந்த கிரஹங்கள் 2,3 பெறுவதும் அஷ்டவர்கத்தில் சஹஜ‌மாக நடை பெறுகின்றன./////

    நல்லது. உங்கள் அனுபவத்தையும் சொல்லுங்கள். அனைவரும் பயனடையட்டும் கிருஷ்ணன்சார்

    ReplyDelete
  14. //இனி மின்னஞ்சல் வகுப்பு என்று தனி வகுப்பு இருக்காது. காரணம் நேரமின்மை.//

    ஆமாம் ஐயா, தங்களுக்கும் மற்றவர்களைப் போல் வீடு, மனைவி, மக்கள் என்று இருக்கும். அவர்களையும் கவணிக்க வேண்டும். அதோடு தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவணித்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  15. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    தசா,புத்தியில் , அந்தரம் நடக்கும் காலத்தினை கணக்கிட்டு அந்த நாட்களுக்கான
    சரியான பலன்களைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் நன்கு புரியும்படி உள்ளது.
    நன்றி!
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-04

    ReplyDelete
  16. "இனி எல்லாம் வகுபரயில மட்டும் " - மிக்க நன்றிகள் அய்யா... நாங்களும் தன்யனானோம்.
    அப்புறம் சிறு குழப்பம், சனி தசை ராகு புக்தி (2 இல் ராகு 33 paral, 4 il GURU & Sat -28) கும்பம் ராசி, மிதுன லக்ஹ்னம், 30/04/1981, thursday

    //ராகு & கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. அதனால் பரல்களும் கிடையாது. அவைகளுக்கு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் நிலைமையை வைத்துத்தான் பலன்கள்!//
    எனில், ராகு எங்கு(2இல்) உள்ள முந்தய பாடமா? பணம் கையில் தங்காது, ஜாக்ரதயா நடந்துகனும்.. athuvaa?
    வகுப்பில் ரொம்ப பேசுறேன்போல... :-)))
    பழைய lesson எல்லாம் படித்து முடிக்கல இன்னும் பாதிக்கும் மேல் உள்ளது அதுதான் over doubt.

    சத்ததிற்கு மன்னிக்கவும் அய்யா. (including to all seniors)

    பணிவுடன் மக்கு மாணவன்,

    ReplyDelete
  17. ஆமாம் சார், ஆனந்தன் சார் சொன்ன மாதரி...உங்கள நினைச்சா பெருமையா (ஆச்சரியமாவும்) இருக்கு. Truely Sir...உண்மையில் தாங்கள் பெரிய மனிதர்... (mean ur Char.)

    நான் மட்டும் சித்தரகுப்தனாக இருந்தால், பிற்காலத்தில உங்க சேவையை கருதி தர்ம தேவனிடம் மொஹ்ட்சம் போக Request பண்ணுவேன்.

    I pray the God to give you a very good health & wealth to you and your family.

    Best Regards,
    TSN

    ReplyDelete
  18. /////minorwall said...
    அய்யா வணக்கம். தாய் மண்ணை மிதித்து சில வாரங்கள்..அதனாலே ரொம்ப பிஸி..தங்களை சந்திக்க முடியுமா? நானும் முடிந்த வரை முயற்சிக்கிறேன்.. கிருஷ்ணன்சார்/////


    ”சின்னச் சின்ன ஆசை
    சிற கடிக்க ஆசை
    மைலை வர ஆசை
    மைனர்முகம் பார்க்க ஆசை!

    தாய் மண்ணை மிதித்து சிலவாரங்கள் ஆகிவிட்டதா? இன்னும் எத்தனை வாரங்கள் இங்கே இருப்பீர்கள் மைனர்? அதைச் சொல்லுங்கள். சந்திப்போம். மின்னஞ்சலில் உங்கள் அலைபேசி எண்ணைத் தெரியப்படுத்துங்கள்.

    ReplyDelete
  19. ///////ananth said...
    //இனி மின்னஞ்சல் வகுப்பு என்று தனி வகுப்பு இருக்காது. காரணம் நேரமின்மை.//
    ஆமாம் ஐயா, தங்களுக்கும் மற்றவர்களைப் போல் வீடு, மனைவி, மக்கள் என்று இருக்கும். அவர்களையும் கவனிக்க வேண்டும். அதோடு தங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.///////

    புரிதலான பதிலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    தசா,புத்தியில் , அந்தரம் நடக்கும் காலத்தினை கணக்கிட்டு அந்த நாட்களுக்கான சரியான பலன்களைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் நன்கு புரியும்படி உள்ளது.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /////Sabarinathan TA said...
    "இனி எல்லாம் வகுப்பறையில் மட்டும் " - மிக்க நன்றிகள் அய்யா... நாங்களும் தன்யனானோம்.
    அப்புறம் சிறு குழப்பம், சனி தசை ராகு புக்தி (2 இல் ராகு 33 paral, 4 il GURU & Sat -28) கும்பம் ராசி, மிதுன லக்ஹ்னம், 30/04/1981, thursday
    //ராகு & கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. அதனால் பரல்களும் கிடையாது. அவைகளுக்கு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் நிலைமையை வைத்துத்தான் பலன்கள்!//
    எனில், ராகு எங்கு(2இல்) உள்ள முந்தய பாடமா? பணம் கையில் தங்காது, ஜாக்ரதயா நடந்துகனும்.. athuvaa?
    வகுப்பில் ரொம்ப பேசுறேன்போல... :-)))
    பழைய lesson எல்லாம் படித்து முடிக்கல இன்னும் பாதிக்கும் மேல் உள்ளது அதுதான் over doubt.
    சத்ததிற்கு மன்னிக்கவும் அய்யா. (including to all seniors)
    பணிவுடன் மக்கு மாணவன்,/////

    அதற்குத்தான் முன்னரே ஒரு ஃபார்முலா கொடுத்துள்ளேனே சுவாமி. தசா நாதனும் புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனிலும், 1/12 பொஸினலிலும் இருக்கக்கூகூடாது. அப்படி இல்லாவிட்டால் கெடு பலன்கள் அதிகம் இருக்காது. இதை உபயோகித்துப்பாருங்கள்

    ReplyDelete
  22. /////Sabarinathan TA said...
    ஆமாம் சார், ஆனந்தன் சார் சொன்ன மாதரி...உங்கள நினைச்சா பெருமையா (ஆச்சரியமாவும்) இருக்கு. Truely Sir...உண்மையில் தாங்கள் பெரிய மனிதர்... (mean ur Char.)
    நான் மட்டும் சித்தரகுப்தனாக இருந்தால், பிற்காலத்தில உங்க சேவையை கருதி தர்ம தேவனிடம் மொட்சம் போக Request பண்ணுவேன்.
    I pray the God to give you a very good health & wealth to you and your family.
    Best Regards,
    TSN/////

    மோட்சம் எல்லாம் வேண்டாம் சுவாமி! என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எங்கே இடம் கிடைக்கப்போகிறதோ, அங்கே இடம் கிடைத்தால் போதும்.

    ReplyDelete
  23. சனி தசை 4வதாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்று படித்திருக்கிறேன். அதே போல் சனி தசை சுய புத்தியில் மாரகத்திற்கு சமமான கண்டங்கள் ஏற்பட்டன. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சுய வர்கத்தில் 2 பரலுடன் இருந்தாலும் ஒரு கோணாதிபரான அவர் இன்னொரு கோணத்தில் இருக்கிறார். அதனால் நிலைமை மோசமாகாமல் இருக்கிறது.

    சுப கிரகங்கள் குறைந்த பரல் பெற்று அவர்களுடைய தசா புத்தி நடந்தால் பரவாயில்லை. பாப கிரகங்கள் அப்படியிந்தால் ஆண்டவனை வேண்டிக் கொள்ள வேண்டியதுதான். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று. சந்திர காவியம் என்னும் ஜோதிட நூலில் படித்தது. பாப கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் பெற்றால் அதிக நன்மையும் தீய ஆதிபத்தியம் பெற்றால் அதிக தீமையையும் செய்வார்களாம். சுப கிரகங்கள் நன்மையோ தீமையோ எது செய்தாலும் மிதமாகவே இருக்குமாம்.

    ReplyDelete
  24. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .,

    நிசபங்கதிற்கான விதிகளை பற்றி தாங்கள் எழுதினால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

    மேலும் அஸ்தங்க பங்கதிர்க்கான விதிகள் ஏதேனும் உண்டா.

    நன்றி
    குபேந்திரன்

    ReplyDelete
  25. ////ananth said...
    சனி தசை 4வதாக வந்தால் அது மாரக தசையாக அமையும் என்று படித்திருக்கிறேன். அதே போல் சனி தசை சுய புத்தியில் மாரகத்திற்கு சமமான கண்டங்கள் ஏற்பட்டன. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சுய வர்கத்தில் 2 பரலுடன் இருந்தாலும் ஒரு கோணாதிபரான அவர் இன்னொரு கோணத்தில் இருக்கிறார். அதனால் நிலைமை மோசமாகாமல் இருக்கிறது.
    சுப கிரகங்கள் குறைந்த பரல் பெற்று அவர்களுடைய தசா புத்தி நடந்தால் பரவாயில்லை. பாப கிரகங்கள் அப்படியிந்தால் ஆண்டவனை வேண்டிக் கொள்ள வேண்டியதுதான். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று. சந்திர காவியம் என்னும் ஜோதிட நூலில் படித்தது. பாப கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் பெற்றால் அதிக நன்மையும் தீய ஆதிபத்தியம் பெற்றால் அதிக தீமையையும் செய்வார்களாம். சுப கிரகங்கள் நன்மையோ தீமையோ எது செய்தாலும் மிதமாகவே இருக்குமாம்.////

    மேலதிகத்தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  26. /////kubendiran said...
    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .,
    நிசபங்கதிற்கான விதிகளை பற்றி தாங்கள் எழுதினால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
    மேலும் அஸ்தங்க பங்கதிர்க்கான விதிகள் ஏதேனும் உண்டா.
    நன்றி
    குபேந்திரன்/////

    எல்லாம் முன்பே எழுதியிருக்கிறேனே சுவாமி. பழைய பாடங்களைப் படியுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com