மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.5.10

ஓசைக்கு மணியுண்டு, பூசைக்கு என்ன உண்டு?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓசைக்கு மணியுண்டு, பூசைக்கு என்ன உண்டு?

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 2

Òகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
-------------------------------------------------------------------------------

ஆலோலம் பாடுகிற வள்ளியம்மை கழுத்தில்
....... அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
....... ஆதாரமான பெருமான்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
....... மெய்யான வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
...... விளைவாக நின்ற பெருமான்
கோலாலம் பூரில்வளர் கோதண்ட பாணிஇவன்
....... கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடு நோயும் சேராது
....... குறையாத வாழ்வு மிகுமே!

“ஓம்” என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
....... உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மனமுண்டு
........உன்வாழ்வு கந்தன் வசமே
நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
....... நடக்காது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம்
....... நலம் யாவும் வீடுவருமே
கோமன்னன் வாழ்கின்ற கோலாலம் பூர்செந்தூர்
........கொடிகட்டி ஆளவிடுமே
கொண்டாடு கொண்டாடு தெண்டாயுதத்தானைக்
........குறையாத செல்வம் மிகுமே!
------- கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் மலேசிய மண்ணில் கோலாலம்பூரில் உறையும் குமரக்கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தபோது எழுதிக்கொடுத்த பாடல் இது!

எதுகை மோணை சந்தத்துடன் பாடல் அருமையாக இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27 comments:

Lakshmanan said...

வணக்கம் ஐயா

இன்றைய பதிவில் தமிழ்க் கடவுள் முருகன் குறித்த கவியரசரின் பாடல் அருமை.

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலை எழுதியது கவியரசர்தான். நான் திருவிளையாடல் படத்தின் முதல் பகுதியை வலையிறக்கிப் பார்த்தேன் அதில் ”பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் உதவி பஞ்சு அருணாசலம்” என்று போடப்பட்டிருந்தது. எனவே இதைவிடச் சிறந்த ஆதாரம் வேறு இருக்கமுடியாது. திரு ஆனந்த் அவர்கள் சொன்ன தகவல் தவறு.

இப்படிக்கு
தி. லெட்சுமணன்

புதுகைத் தென்றல் said...

அருமையான பாடல்.

பிள்ளையார்பட்டி திருவீசர் பற்றி கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடலையும் வெளியிட முடியுமா? அனைவருக்கும் உதவும்.

நன்றி

kmr.krishnan said...

தாயுமானவர் எழுதியபாடலோ என்று சொல்லும்படி அமைந்துள்ள‌து.
கோயில் மணி மயிலாடுதுரை அருகில் ஒரு கிராமத்தில் இன்றளவும் குலத்தொழிலாக செய்து வருகிறார்கள்.ரோமில் போப் விஜயம் செய்யும் தேவாலயத்தில் மயிலாடுதுரை மணியே ஒலித்துவருகிறது.எப்போதும் ஒரு ஆர்டராவது கிறிஸ்துவ சமூகத்திலிருந்து கைவசம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.சங்க காலத்திலேயே மணி பற்றிய குறிப்புக்கள் இலக்கியத்தில்
உள்ளன. சுமார் 4000 ஆண்டுகளுக்கு மேலாக மெடலர்ஜியில் சிறப்பாக இந்தியா விள‌ங்கி இருக்கிறது.

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
அருமையானதொறுப் பாடல்,
அப்படியே மலேசியா மூவார், தண்ணீர்மலை (பினாங்கு),
தைபிங், சிங்கபூர் அத்தனையும் ஆளும் ஆறுமுகனைப்
பாடிய அத்தனையும் இனிதாய் இனி வரும்.
நன்றிகள் குருவே!

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
சிவபூஜையில் கரடியாக ஒரு விண்ணப்பம்!!
கிரஹப்பிரவேசம், நாள், நட்சத்திரம்,திதி
இவைகளுடன் செய்பவர்களின் (கணவன், மனைவி)
நட்சத்திரத்திற்கு உள்ள தொடர்பும்,
செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததுமாக (Do's and Dont's) ஒரு
தகவல் பொக்கிசக் கட்டுரையை தாங்கள் எழுதினால்
என் போன்றோருக்கு (நாற்பதில் அறியவேண்டிய விசயங்களும் அதுதானே)
மிகவும் உபயோகமாக இருக்கும் .
நன்றிகள் குருவே!

SP.VR. SUBBAIYA said...

/////புதுகைத் தென்றல் said...
அருமையான பாடல்.
பிள்ளையார்பட்டி திருவீசர் பற்றி கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடலையும் வெளியிட முடியுமா? அனைவருக்கும் உதவும்.
நன்றி/////////

ஆகா, எழுதிவிட்டால் போகிறது. பொறுத்திருங்கள். அடுத்தவாரம் அதைச் செய்கிறேன் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Lakshmanan said...
வணக்கம் ஐயா
இன்றைய பதிவில் தமிழ்க் கடவுள் முருகன் குறித்த கவியரசரின் பாடல் அருமை.
சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலை எழுதியது கவியரசர்தான். நான் திருவிளையாடல் படத்தின் முதல் பகுதியை வலையிறக்கிப் பார்த்தேன் அதில் ”பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் உதவி பஞ்சு அருணாசலம்” என்று போடப்பட்டிருந்தது. எனவே இதைவிடச் சிறந்த ஆதாரம் வேறு இருக்கமுடியாது. திரு ஆனந்த் அவர்கள் சொன்ன தகவல் தவறு.
இப்படிக்கு
தி. லெட்சுமணன்//////

உங்களின் உதவிக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே! நானும் இணையத்தில் தேடிவிட்டேன். திருவிளையாடல் பாடல் ஆல்பத்தில், கவியரசரின் பெயர் மட்டும்தான் உள்ளது.

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
தாயுமானவர் எழுதியபாடலோ என்று சொல்லும்படி அமைந்துள்ள‌து.
கோயில் மணி மயிலாடுதுரை அருகில் ஒரு கிராமத்தில் இன்றளவும் குலத்தொழிலாக செய்து வருகிறார்கள்.ரோமில் போப் விஜயம் செய்யும் தேவாலயத்தில் மயிலாடுதுரை மணியே ஒலித்துவருகிறது.எப்போதும் ஒரு ஆர்டராவது கிறிஸ்துவ சமூகத்திலிருந்து கைவசம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.சங்க காலத்திலேயே மணி பற்றிய குறிப்புக்கள் இலக்கியத்தில்
உள்ளன. சுமார் 4000 ஆண்டுகளுக்கு மேலாக மெடலர்ஜியில் சிறப்பாக இந்தியா விள‌ங்கி இருக்கிறது./////

மணியைப் பற்றிய மணியான தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
அருமையானதொரு பாடல்,
அப்படியே மலேசியா மூவார், தண்ணீர்மலை (பினாங்கு), தைப்பிங், சிங்கபூர் அத்தனையும் ஆளும் ஆறுமுகனைப் பாடிய அத்தனையும் இனிதாய் இனி வரும்.
நன்றிகள் குருவே!//////////

ஆகா, தேடிப்பிடித்துப்போடுகிறேன். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
சிவபூஜையில் கரடியாக ஒரு விண்ணப்பம்!!
கிரஹப்பிரவேசம், நாள், நட்சத்திரம்,திதி
இவைகளுடன் செய்பவர்களின் (கணவன், மனைவி)
நட்சத்திரத்திற்கு உள்ள தொடர்பும்,
செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததுமாக (Do's and Dont's) ஒரு
தகவல் பொக்கிசக் கட்டுரையை தாங்கள் எழுதினால்
என் போன்றோருக்கு (நாற்பதில் அறியவேண்டிய விசயங்களும் அதுதானே)
மிகவும் உபயோகமாக இருக்கும் .
நன்றிகள் குருவே!//////

முகூர்த்த நாட்களில் கிரகப் பிரவேசம் செய்யலாம். அன்றைய தினம் கணவன்/மனைவியின் ஜென்ம நட்சத்திரமாக இல்லாமல் இருத்தல் நல்லது. அன்றைய தினம் உதயத்தில் between 4:00 AM to 6:00 AM புது மனையில் கணபதி ஹோமம் செய்வது நல்லது. விரிவான கட்டுரை ஒன்றைப் பின்னால் எழுதுகிறேன்!

Mayakanna said...

ஐயா வணக்கம்!

நிபுணத்துவம் யோகம் என்றால் என்ன?

இந்தவகையான யோக அமைப்பை பெற்றவர்கள் உயர்கல்வியில் நுண்ணிய பட்டம் பெறுவார்கள் என்று ஒரு ஜோதிட ஆசான் சொல்ல கேட்டதுண்டு

இது எந்த அளவுக்கு உண்மை ஐயா!

( ஆனா கல்வி கற்க மிகவும் போராடித்தான் முன்னிலைக்கு வர முடியுமா ?
ஒரு தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்ற ( என்னிடம் மரண படுக்கையில் கேட்டது நீ நன்றாக படிக்கணும் என்பதே!

நான் ஐயாவிற்கு செய்யும் கைமாரு பெரிய அளவில் பட்டம் வாங்கி சமர்பிக்க வேண்டும் என்பதே ஐயா அதற்க்கு அதாவது நன்றாக கல்வி வர என்ன வழிபாடு செய்யவேண்டும் ?
10 வருட கல்வி வீணாகி விட்டது ஐயா )

அன்புடன் மாணவன்

புதுகைத் தென்றல் said...

நன்றி ஐயா,

கற்பகப்பிள்ளையாரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
பாடல் அருமையாக உள்ளது.
நன்றி!
வணக்கம்.

தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-05-07

Loga said...

Dear Sir,

Kannadasan avargal eluthiya Arthumulla Indhumatham Books pathiyum kongam eluthalame...

Kind regards

Pandian

Jack Sparrow said...

kannadasan endral yaar endru few years back i dont know . but vazhvil sarukal,pallam,medu endru parkka parkka old songs ellam ennai ariyamal rasithein,en manduku marundu poduvadhu poll irunthathu. then i came to know that the songs which impressed me belonged to honourable kannadasan .Also i m only 26. kannadasan is really a great legend,whom he cant be compared with anyone. no words can express the feelings other than his songs. thank u sir. for posting more & more about kannadasan (gem).

thank u sir.

SP.VR. SUBBAIYA said...

/////////Mayakanna said...
ஐயா வணக்கம்!
நிபுணத்துவம் யோகம் என்றால் என்ன?
இந்தவகையான யோக அமைப்பை பெற்றவர்கள் உயர்கல்வியில் நுண்ணிய பட்டம் பெறுவார்கள் என்று ஒரு ஜோதிட ஆசான் சொல்ல கேட்டதுண்டு
இது எந்த அளவுக்கு உண்மை ஐயா!
( ஆனா கல்வி கற்க மிகவும் போராடித்தான் முன்னிலைக்கு வர முடியுமா ?
ஒரு தந்தையின் கல்வி ஆசையை நிறைவேற்ற ( என்னிடம் மரண படுக்கையில் கேட்டது நீ நன்றாக படிக்கணும் என்பதே!
நான் ஐயாவிற்கு செய்யும் கைமாறு பெரிய அளவில் பட்டம் வாங்கி சமர்பிக்க வேண்டும் என்பதே ஐயா அதற்க்கு அதாவது நன்றாக கல்வி வர என்ன வழிபாடு செய்யவேண்டும் ?
10 வருட கல்வி வீணாகி விட்டது ஐயா )
அன்புடன் மாணவன்///////

கல்விவர என்ன செய்ய வேண்டும்? ஜாதகத்தை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிடுங்கள். முயற்சி திருவினையாக்கும். இறைவனை வணங்கி விட்டு, வேலையில் இருந்தபடியே படிப்பைத் தொடருங்கள்.
எல்லாம் கூடி வரும். வாழ்த்துக்கள்!

SP.VR. SUBBAIYA said...

////////புதுகைத் தென்றல் said...
நன்றி ஐயா,
கற்பகப்பிள்ளையாரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்///////

நல்லது. நன்றி சகோதரி!

subburathinam said...

படித்துப் பார்ப்பதா !!!
பாடியும் விட்டேன். எனக்குத் தெரிந்த மெட்டில்.
கோலாலம்பூர் குமரன் கோவில் படம் போட்டிருக்ககூடாதா !!
தேடுகிறேன். தேடி முடித்த உடன், இப்பாடலை இடுகிறேன்.
சற்று நேரத்தில் எனது ப்ளாகில் .
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

SP.VR. SUBBAIYA said...

//////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
பாடல் அருமையாக உள்ளது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி///////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Loga said...
Dear Sir,
Kannadasan avargal eluthiya Arthumulla Indhumatham Books pathiyum kongam eluthalame...
Kind regards
Pandian////

அவைகள் காப்புரிமை பெற்றவை. தமிழ்நாடு அரசு கவியரசரின் புத்தகங்களை சமீபத்தில் தேசிய உடைமை ஆக்கியுள்ளது. அது பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு பின்னால் எழுதுகிறேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Jack Sparrow said...
kannadasan endral yaar endru few years back i dont know . but vazhvil sarukal,pallam,medu endru parkka parkka old songs ellam ennai ariyamal rasithein,en manduku marundu poduvadhu poll irunthathu. then i came to know that the songs which impressed me belonged to honourable kannadasan .Also i m only 26. kannadasan is really a great legend,whom he cant be compared with anyone. no words can express the feelings other than his songs. thank u sir. for posting more & more about kannadasan (gem).
thank u sir.////

கவியரசரின் புத்தகங்கள்தான் எனக்கு வேதம். உங்களுக்கும் அது வேதம் ஆகலாம். தொடர்ந்து படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////subburathinam said...
படித்துப் பார்ப்பதா !!!
பாடியும் விட்டேன். எனக்குத் தெரிந்த மெட்டில்.
கோலாலம்பூர் குமரன் கோவில் படம் போட்டிருக்ககூடாதா !!
தேடுகிறேன். தேடி முடித்த உடன், இப்பாடலை இடுகிறேன்.
சற்று நேரத்தில் எனது ப்ளாகில் .
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com/////

தேடிக்கிடைத்தால் படத்தைப் போடுங்கள். எனக்கும் தகவல் சொல்லுங்கள்! நன்றி!

ananth said...

பாட்டும் நானே பாடலை எழுதியது கா.மு. ஷெரிப்தான். அவருடன் என்ற பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒரு முறை சொல்லியிருந்தார். அதை வைத்துதான் நான் அப்படி சொன்னேன். நமக்கெல்லாம் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்றுதான் தெரியும். அதை எழுதியதாக சொல்லப்படும் கா.மு. ஷெரிப் அவர்களே உயிரோடு இருந்த வரை அதைபற்றி கவலைப் படாத போது எனக்கென்ன வந்தது. இந்த சர்ச்சைக்கு இதோடு முற்றுப் புள்ளி வைப்பதுதான் நல்லது. அப்படி தொடர்ந்தாலும் என் பெயரை இழுக்காமல் தொடருங்கள்.

SP.VR. SUBBAIYA said...

//////ananth said...
பாட்டும் நானே பாடலை எழுதியது கா.மு. ஷெரிப்தான். அவருடன் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒரு முறை சொல்லியிருந்தார். அதை வைத்துதான் நான் அப்படி சொன்னேன். நமக்கெல்லாம் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்றுதான் தெரியும். அதை எழுதியதாக சொல்லப்படும் கா.மு. ஷெரிப் அவர்களே உயிரோடு இருந்தவரை அதைபற்றி கவலைப்படாதபோது எனக்கென்ன வந்தது. இந்த சர்ச்சைக்கு இதோடு முற்றுப் புள்ளி வைப்பதுதான் நல்லது. அப்படி தொடர்ந்தாலும் என் பெயரை இழுக்காமல் தொடருங்கள்.////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

ananth said...

மேலே நான் சொன்னது எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ என்ற புத்தகத்தில் இருப்பது.

SP.VR. SUBBAIYA said...

//////ananth said...
மேலே நான் சொன்னது எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ என்ற புத்தகத்தில் இருப்பது./////

நல்லது. உங்களுடைய மேலதிகத்தகவலுக்கு நன்றி ஆனந்த்!

sury said...

please visit
http://vazhvuneri.blogspot.com
to listen to the song of
Kavi arasar kannadasar
published by you.
sung by me.
subbu rathinam.