மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

15.5.10

எப்போது பாரதமாதாவை எழுப்பிக் கேட்போம்?

உணவிற்காகும் காய்கறிகள் நடைபாதையில்

உள்ளாடைகள் குளிரூட்டப்பெற்ற ஷோரூம்களில்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்போது பாரதமாதாவை எழுப்பிக் கேட்போம்?

நமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்!

1
அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2
பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3
வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4
பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5
ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6
நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7
நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

8
மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9
கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள்.
கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10
பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

12
அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!

இந்த நிலை மாறுவது எப்போது?

தூங்கும் பாரதமாதவைத்தான் எழுப்பிக் கேட்க வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

52 comments:

Alasiam G said...

அடியேன்னு கூப்பிட ஆம்புள இல்லையாம் வெங்கட்டுன்னு பேரு வைக்கணுமாம், யாரு எக்கேடு கேட்டா எனக்கென்ன? நாடு எக்கேடு கேட்ட என்ன? நான் மட்டும் நல்ல இருந்தா போதும் என்ற போக்கே எங்கும் நிறைத்து இருக்கிறது. ஏதாவது நல்ல விசயத்தைப் பற்றி பேசுங்கள் கூட்டம் எதுவும் வராது, அதேநேரம் எதாவது ஒரு வழியில உனக்கு எதாவது பணம் வரும், அதிர்ஷடம் வரும் என்று சொல்லுங்கள் கூட்டம் " ஈயாக" மொய்க்கும். சமையலின் ருசியை பார்க்காத கூட்டம் தோசைக் கோணல், மாவை கல்லில் இட்டவருக்கு விரலே கோணல் என்று குதர்க்கமான கோணல் புத்தியோடு தான் முன் வந்து நிற்கும். காய்த்த மரம் கல்லடி படும் உண்மை அந்த கல் காயை நோக்கி வந்து தவறிப்போய் மரத்தில் பட்டால்.... ஆனால் மரமே குறியாகிறது.... சரி விசயத்திற்கு வருகிறேன்.....
"அனைத்திற்கும் சேவை வரி உண்டு ஆனால் மனைவிக்கு மட்டும் அது இல்லை!!!!" உணர வேண்டியதும், உணர்த்த வேண்டியதும்.
சென்ற வாரம் வானொலியில் கேட்ட விஷயம் இது அன்னையர் தினம் முடிவுற்ற நிலையில், உலகில் சௌகரியமாகவும், சந்தோசமாகவும் இருக்கும் அன்னையர்கள் (இவர்களும் மனைவிகள் தானே) கொண்ட நாடு என்று வரிசை படுத்துகையில் பாரத மாதாவிற்கு 73 - வது இடமாம். "எல்லாத்துக்குமே வேணும் அம்மா (பெற்ற) ஆனால் அவள் நமக்கு என்றுமே சும்மா??????"...... ஆணுக்கு வேலை ஓய்வு 56, பெண்ணுக்கு சொல்வதாறு????
மிக நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கணும்.
நன்றிகள் குருவே!

Alasiam G said...

அச்சோ தலைப்பை மீண்டும் படித்தேன்!! அவள்தான் தூங்கிக் கொண்டிருக்கிறாளே??? அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.... ஆமாம் அவள் என்றைக்குத் தான் தனக்கு உடம்புக்கு சுகம் இல்லை என்று கூறியிருக்கிறாள்.

ananth said...

//இந்த நிலை மாறுவது எப்போது?//

தாங்கள் சமயங்களில் சொல்வீர்களே. இந்தியா விரைவில் வல்லரசாகி விடும் என்று. அப்போதாக இருக்கலாம். He he he. First world facility இருந்தும் third world mentality மாறாத வரைக்கும்....

Alasiam G said...

மறுபடியும் வந்துவிட்டேன் மன்னிக்கணும்! நான் இல்லை என்னை வாசித்த முதல் புதுக் கவிதை!!!
புதுக்கோட்டையில் இருக்கும் போது எனது 12 அகவையில் கலை இலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினன் ஆனேன்! அப்போது அங்கு அந்த சபையில் ஒரு கவிஞர் எங்கள் மண்ணின் மைந்தர் கந்தர்வன் இருந்தார், அவர் வாசித்த நான் ரசித்த முதல் புதுக்கவிதையை, என்னை சமூகத்தை பற்றி யோசிக்கச் செய்த அந்த வரிகளை இந்த மன்றத்திலே கூற விரும்புகிறேன்! "ஆரியப்பட்டா வானத்தைக் கிழித்தது அணுகுண்டுச் சோதனை பூமியைக் கிழித்தது ஆனால் நமக்கு கைச் சட்டை கிழிந்தது மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது"....
இன்றையப் பதிவு என்னுள் வேதிவினை நடத்துகிறது போலும்...

GKS said...

nenju porukkuthillaiye intha nilai ketta mantharai ninaithu vittal....

astroadhi said...

good morning sir....

very good punch vathiyareeeeeeee.......but most of them never think about this ....

thanking you sirrr......

நிகழ்காலத்தில்... said...

நிதர்சனமான உண்மைகள் :((

Success said...

வணக்கம் ஐயா...

நலம் நலம் காண ஆவழ் நீண்ட விடுப்பு....சில தனிப்பட்ட காரணங்களால் வகுப்பறைக்கு வர முடியவில்லை...

”எப்போது பாரத மாதாவை எழுப்பிக் கேட்போம்”

போராட தெரியாதவன் கடவுள் பின்னால் சென்றால் தவறில்லை. ஆனால் போராடாமல் கடவுள் பின்னால் செல்வது தான் தவறு.

ஒரு பிரச்சனை என்று வந்தால் அதன் பின்னணியை ஆராயாமல் வாய்க்கு வந்தபடி திட்டுவது, பின் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே தவறை செய்வது அதைவிட மேலாக அதை ஞாய படுத்தி பேசுவது. இது மக்கள் செய்யும் தவறு. இதற்கு அடிப்படை காரணம் சரியான புரிதல் இல்லாமை. அதனை சரி செய்தால் போதும்.

எனக்கு நம் அரசியல் வாதிகள் மீதுள்ள கோவத்தினை விட நம் நம் மீது தான் கோவம் அதிகம், நாம் தட்டிக்கேட்க துணிந்துவிட்டோம் என்று தெரிந்தாலே...நல்ல தொரு எதிர்காலம் பிறந்துவிடும்...

வாழ்க வளமுடன்

Prabhu said...

அய்யா, வணக்கம்,
வீகெண்டில் அருமையான பாடம்,

//மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.//

வேதனையான உண்மை, இந்தியாவின் நிலைமை மாற ஆண்டவனை பிரார்த்திப்பதை விட வேறு வழியில்லை.

CJeevanantham said...

Dear sir,
All are super.
No.8 is very super.

Mayakkanna said...

அறியான்மை என்னும் இருள் கொண்டு,
அறிவை பெற வந்த அன்புமாணவனின்
அருமையான அதிகாலை வணக்கம் வாத்தியார் பெருமானே!

புதியதோர் அகவையில் அடியெடுத்து வைக்கும்அடியவனுக்கு

உற்ற தாயுமாகி தந்தையுமாகி
மாமனும் மாமியும் ஆகி
குருவும் ஆகி நல் ஆசிர்வாதம் கூற வேண்டும் ஆசானே!

மற்றும் வகுப்பறைக்கு வரும் நல்ல உள்ளங்கள் படைத்த சான்றோர்களே!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Indraya Paadam Desathin Avalanilayai Unarthum.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

sri said...

Very True:( Interesting post that I have ever seen!!!!

iyer said...

வேண்டாம் வாத்தியாரே. . .

பாரத மாதவை எழுப்ப வேண்டாம் . .

அவள் வடிக்கும் கண்ணீரையும் நாம் சேர்க்க வேண்டாம் . .

இது தான் வாழ்க்கையின் எதார்த்தம் என்ற நி(வி)லை வந்த உடன் எதற்காக அவளை எழுப்பி நியாயம் கேட்க வேண்டும் . .

படித்துவிட்டு ரசிக்கும் மாணவர்களின் நெஞ்சிலாவது தைக்கட்டும் என கூறும் உங்கள் எழுது கோல் போல எனக்கும் தெரியும்

அதையே சொல்லி என்ன பயன் . .
இந்த சூழலில் வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான் . .

மாற்றங்கள் வரும்போது . . .
மாற்றங்களும் மாறும் . .

மாறி வரும் நாகரீக உலகினிலே நாங்கள் மாற வில்லை தெய்வ பக்தியிலே என்ற வீர முழக்கத்தோடு

மாறும் மனங்களிடையே . .
மாறாத நட்புடன் . .
என்றும்
உங்கள் மாணவனாக . . .

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
அவலங்களின் பட்டியலை படிக்கும்போதே
நமது தேசத்தில் நடக்கும் இத்தகைய செயல்கள் மிகவும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவைகளாக உள்ளன.
இந்த அவலங்களில் சேர்க்க வேண்டியவைகளில் மற்றொன்று,பால் குறைந்த விலையாகவும் ,மினரல் வாட்டர் அதைவிட கூடுதல் விலையாக விற்கப்படுவதும் ஆகும்..
பட்டியல் நன்றாக தயாரிக்கப்பட்டுள்ளது.

நன்றி!
வணக்கம்.

தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-05-15

Loga said...

Ayya, padithu migavum vethanai Pattean.......

T K Arumugam said...

ஐயா வணக்கம்

இன்றைய பதிவை சில நாட்கள் முன்பு ஒரு SMS வாயிலாக அறிந்தேன். வெகு நிதர்சனமான உண்மை. பால் கறந்து விற்கும் விவசாயிக்கு கிடைக்கும் பாலின் விலையை விட ஒரு லிட்டர் தண்ணீர் விலை அதிகம். விவசாயியை விட அவன் விலை பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரியும், இடைத் தரகர்களும் அதிகம் சம்பாரிக்கிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் வைக்க கூடாது என்னும் அரசாங்கம், பெரிய தலைவர்களை வரவேற்பதற்கு குழந்தைகளை வெயிலில் நிறுத்தி வைக்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஊர்வலத்தில் அதிக குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்றார்கள். பார்க்க வேதனையாக இருந்தது. இப்படி நிறைய வருத்தங்கள் உண்டு. என்ன செய்வது ? ??

நன்றி

வாழ்த்துக்கள்

kmr.krishnan said...

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:"ஜாதி பேதம் அற்ற சமுதாயம் அமைப்போம்.இந்தத் தொகுதியில் எந்த ஜாதி மக்கள் அதிகம்?"

SP.VR. SUBBAIYA said...

///////Alasiam G said...
அடியேன்னு கூப்பிட ஆம்புள இல்லையாம் வெங்கட்டுன்னு பேரு வைக்கணுமாம், யாரு எக்கேடு கேட்டா எனக்கென்ன? நாடு எக்கேடு கேட்ட என்ன? நான் மட்டும் நல்ல இருந்தா போதும் என்ற போக்கே எங்கும் நிறைத்து இருக்கிறது. ஏதாவது நல்ல விசயத்தைப் பற்றி பேசுங்கள் கூட்டம் எதுவும் வராது, அதேநேரம் எதாவது ஒரு வழியில உனக்கு எதாவது பணம் வரும், அதிர்ஷடம் வரும் என்று சொல்லுங்கள் கூட்டம் " ஈயாக" மொய்க்கும். சமையலின் ருசியை பார்க்காத கூட்டம் தோசைக் கோணல், மாவை கல்லில் இட்டவருக்கு விரலே கோணல் என்று குதர்க்கமான கோணல் புத்தியோடு தான் முன் வந்து நிற்கும். காய்த்த மரம் கல்லடி படும் உண்மை அந்த கல் காயை நோக்கி வந்து தவறிப்போய் மரத்தில் பட்டால்.... ஆனால் மரமே குறியாகிறது.... சரி விசயத்திற்கு வருகிறேன்.....
"அனைத்திற்கும் சேவை வரி உண்டு ஆனால் மனைவிக்கு மட்டும் அது இல்லை!!!!" உணர வேண்டியதும், உணர்த்த வேண்டியதும்.
சென்ற வாரம் வானொலியில் கேட்ட விஷயம் இது அன்னையர் தினம் முடிவுற்ற நிலையில், உலகில் சௌகரியமாகவும், சந்தோசமாகவும் இருக்கும் அன்னையர்கள் (இவர்களும் மனைவிகள் தானே) கொண்ட நாடு என்று வரிசை படுத்துகையில் பாரத மாதாவிற்கு 73 - வது இடமாம். "எல்லாத்துக்குமே வேணும் அம்மா (பெற்ற) ஆனால் அவள் நமக்கு என்றுமே சும்மா??????"...... ஆணுக்கு வேலை ஓய்வு 56, பெண்ணுக்கு சொல்வதாறு????
மிக நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கணும்.
நன்றிகள் குருவே!//////

சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

///Alasiam G said...
அச்சோ தலைப்பை மீண்டும் படித்தேன்!! அவள்தான் தூங்கிக் கொண்டிருக்கிறாளே??? அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.... ஆமாம் அவள் என்றைக்குத் தான் தனக்கு உடம்புக்கு சுகம் இல்லை என்று கூறியிருக்கிறாள்./////

ஆமாம். மிகுந்த சகிப்புத்தன்மையுடையவள் பாராதமாதா - தன் மக்களைப்போலவே!

SP.VR. SUBBAIYA said...

//////ananth said...
//இந்த நிலை மாறுவது எப்போது?//
தாங்கள் சமயங்களில் சொல்வீர்களே. இந்தியா விரைவில் வல்லரசாகி விடும் என்று. அப்போதாக இருக்கலாம். He he he. First world facility இருந்தும் third world mentality மாறாத வரைக்கும்....//////

ஆமாம். வல்லரசாகும்போது. சவுக்கோடு ஒரு தலைமை வர உள்ளதாகச் சொல்வார்கள். அப்போது நடக்கலாம் நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
மறுபடியும் வந்துவிட்டேன் மன்னிக்கணும்! நான் இல்லை என்னை வாசித்த முதல் புதுக் கவிதை!!!
புதுக்கோட்டையில் இருக்கும் போது எனது 12 அகவையில் கலை இலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினன் ஆனேன்! அப்போது அங்கு அந்த சபையில் ஒரு கவிஞர் எங்கள் மண்ணின் மைந்தர் கந்தர்வன் இருந்தார், அவர் வாசித்த நான் ரசித்த முதல் புதுக்கவிதையை, என்னை சமூகத்தை பற்றி யோசிக்கச் செய்த அந்த வரிகளை இந்த மன்றத்திலே கூற விரும்புகிறேன்! "ஆரியப்பட்டா வானத்தைக் கிழித்தது அணுகுண்டுச் சோதனை பூமியைக் கிழித்தது ஆனால் நமக்கு கைச் சட்டை கிழிந்தது மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது"....
இன்றையப் பதிவு என்னுள் வேதிவினை நடத்துகிறது போலும்.../////

இன்னும் ஒன்றும் உள்ளது. “இரவிலே வாங்கினோம்; இன்னும் விடியவில்லை” என்று நமது சுதந்திரத்தைப் பற்றி ஒரு கவிஞன் அற்புதமாகச் சொன்னது, இன்னும் பலரது காதுகளில் ரீங்காரம் செய்துகொண்டுதான் உள்ளது!

SP.VR. SUBBAIYA said...

///////GKS said...
nenju porukkuthillaiye intha nilai ketta mantharai ninaithu vittal....///////

”காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்” - கவியரசர் கண்ணதாசன்.
பொறுமையாக இருப்போம். நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

SP.VR. SUBBAIYA said...

/////astroadhi said...
good morning sir....
very good punch vathiyareeeeeeee.......but most of them never think about this ....
thanking you sirrr.....///////

அனைவருக்கும் இது தெரியும் ஆதிராஜ்! பூனைக்கு யார் மணிகட்டுவது என்னும் நிலைமை!

SP.VR. SUBBAIYA said...

///////நிகழ்காலத்தில்... said...
நிதர்சனமான உண்மைகள் :((/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Success said...
வணக்கம் ஐயா...
நலம் நலம் காண ஆவழ் நீண்ட விடுப்பு....சில தனிப்பட்ட காரணங்களால் வகுப்பறைக்கு வர முடியவில்லை...
”எப்போது பாரத மாதாவை எழுப்பிக் கேட்போம்”
போராட தெரியாதவன் கடவுள் பின்னால் சென்றால் தவறில்லை. ஆனால் போராடாமல் கடவுள் பின்னால் செல்வது தான் தவறு.
ஒரு பிரச்சனை என்று வந்தால் அதன் பின்னணியை ஆராயாமல் வாய்க்கு வந்தபடி திட்டுவது, பின் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே தவறை செய்வது அதைவிட மேலாக அதை ஞாய படுத்தி பேசுவது. இது மக்கள் செய்யும் தவறு. இதற்கு அடிப்படை காரணம் சரியான புரிதல் இல்லாமை. அதனை சரி செய்தால் போதும்.
எனக்கு நம் அரசியல் வாதிகள் மீதுள்ள கோவத்தினை விட நம் நம் மீது தான் கோவம் அதிகம், நாம் தட்டிக்கேட்க துணிந்துவிட்டோம் என்று தெரிந்தாலே...நல்ல தொரு எதிர்காலம் பிறந்துவிடும்...
வாழ்க வளமுடன்//////

ஆமாம். நாம்தான் (மக்கள்) சரியாக இல்லை!

SP.VR. SUBBAIYA said...

/////Prabhu said...
அய்யா, வணக்கம்,
வீகெண்டில் அருமையான பாடம்,
//மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.//
வேதனையான உண்மை, இந்தியாவின் நிலைமை மாற ஆண்டவனை பிரார்த்திப்பதை விட வேறு வழியில்லை./////

மாறும்! மாறும்! ஒரு நாள் அத்தனையும் மாறும்! பொறுத்திருப்போம்!

SP.VR. SUBBAIYA said...

///////CJeevanantham said...
Dear sir,
All are super.
No.8 is very super.//////

ஆமாம். எனக்கும் பிடித்ததும் அதுதான்!

SP.VR. SUBBAIYA said...

Mayakkanna said...
அறியான்மை என்னும் இருள் கொண்டு,
அறிவை பெற வந்த அன்புமாணவனின்
அருமையான அதிகாலை வணக்கம் வாத்தியார் பெருமானே!
புதியதோர் அகவையில் அடியெடுத்து வைக்கும்அடியவனுக்கு
உற்ற தாயுமாகி தந்தையுமாகி மாமனும் மாமியும் ஆகி
குருவும் ஆகி நல் ஆசிர்வாதம் கூற வேண்டும் ஆசானே!
மற்றும் வகுப்பறைக்கு வரும் நல்ல உள்ளங்கள் படைத்த சான்றோர்களே!//////

ஆகா, எங்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு. அத்துடன் பழநியம்பதியில் உறையும் பழநியப்பனின் ஆசீர்வாதம் நம் வகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் உண்டு!

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Indraya Paadam Desathin Avalanilayai Unarthum.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நல்லது நன்றி ராஜாராம்!

SP.VR. SUBBAIYA said...

/////sri said...
Very True:(Interesting post that I have ever seen!!!!//////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
வேண்டாம் வாத்தியாரே. . .
பாரத மாதவை எழுப்ப வேண்டாம் . .
அவள் வடிக்கும் கண்ணீரையும் நாம் சேர்க்க வேண்டாம் . .
இது தான் வாழ்க்கையின் எதார்த்தம் என்ற நி(வி)லை வந்த உடன் எதற்காக அவளை எழுப்பி நியாயம் கேட்க வேண்டும் . .
படித்துவிட்டு ரசிக்கும் மாணவர்களின் நெஞ்சிலாவது தைக்கட்டும் என கூறும் உங்கள் எழுது கோல் போல எனக்கும் தெரியும்
அதையே சொல்லி என்ன பயன் . .
இந்த சூழலில் வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான் . .
மாற்றங்கள் வரும்போது . . .
மாற்றங்களும் மாறும் . .
மாறி வரும் நாகரீக உலகினிலே நாங்கள் மாற வில்லை தெய்வ பக்தியிலே என்ற வீர முழக்கத்தோடு
மாறும் மனங்களிடையே . .
மாறாத நட்புடன் . .
என்றும்
உங்கள் மாணவனாக . . ./////

வாழப்பழகிக்கொண்டதினாலேதான் சுவாமி வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
அவலங்களின் பட்டியலை படிக்கும்போதே
நமது தேசத்தில் நடக்கும் இத்தகைய செயல்கள் மிகவும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவைகளாக உள்ளன.
இந்த அவலங்களில் சேர்க்க வேண்டியவைகளில் மற்றொன்று,பால் குறைந்த விலையாகவும் ,மினரல் வாட்டர் அதைவிட கூடுதல் விலையாக விற்கப்படுவதும் ஆகும்..
பட்டியல் நன்றாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////

ஆமாம்.அதுவும் சந்தையில் இருக்கும் மினரல் வாட்டர்களில் சில போலியானவை. கண்டுபிடிக்க முடியாத அளவு அலங்காரத்துடன் இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

/////Loga said...
Ayya, padithu migavum vethanai Pattean......//////.

நல்ல காலம் வரும். நம்பிக்கையுடன் இருப்போம். நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////T K Arumugam said...
ஐயா வணக்கம்
இன்றைய பதிவை சில நாட்கள் முன்பு ஒரு SMS வாயிலாக அறிந்தேன். வெகு நிதர்சனமான உண்மை. பால் கறந்து விற்கும் விவசாயிக்கு கிடைக்கும் பாலின் விலையை விட ஒரு லிட்டர் தண்ணீர் விலை அதிகம். விவசாயியை விட அவன் விலை பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரியும், இடைத் தரகர்களும் அதிகம் சம்பாரிக்கிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் வைக்க கூடாது என்னும் அரசாங்கம், பெரிய தலைவர்களை வரவேற்பதற்கு குழந்தைகளை வெயிலில் நிறுத்தி வைக்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஊர்வலத்தில் அதிக குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்றார்கள். பார்க்க வேதனையாக இருந்தது. இப்படி நிறைய வருத்தங்கள் உண்டு. என்ன செய்வது?
நன்றி
வாழ்த்துக்கள்//////

உண்மைதான் நண்பரே! உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!

minorwall said...

ம்ம்ம்..ம்ஹும்..ஒண்ணும் சொல்றாப்போலே இல்லை...mundane astrology கிளாஸ் எடுக்கிறாப்போலே ஏதும் ஐடியா இருக்கா?

kmr.krishnan said...

13வதாக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
மேடைப்பேச்சு:"சாதிபேதம் அற்ற சமுதாயம் அமைப்போம்"
தனிமையில்:"இந்தத்தொகுதியில் எந்தசாதி ஜனத்தொகை கணக்கில் அதிகம்?"

krish said...

வேகமான பொருளாதார வளர்ச்சியின் பின் விளைவு இது. சீனாவும் இதை எதிர்கொள்கிறது. வளர்ந்த நாடுகள் மக்கள் பொருளாதார எற்ற தாழ்வுகளால் அவதிப்படுகிறார்கள். இந்த காலத்தின் கட்டாயம் இது. மாற்றங்கள் தானே எற்படும்.

R.DEVARAJAN said...

நாட்டு நலனில் கவலை கொள்ளும் நீங்கள் 5ம் தூண் உறுப்பினர்
ஆகலாமே ?

www.5thpillar.org

தேவ்

கூடுதுறை said...

உஅய்யா அற்புதம்...தூள் கிளப்பிவிட்டீர்கள்

satchitanand said...

நல்லது ஐயா, நாம் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

Sabarinathan TA said...

அய்யா, சமீபத்தில் நண்பன் சொன்ன ஒரு விஷயம் நியாபகத்தில் வந்தது, தங்களுடன் அதை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஒரு சில கூட்டம் ஓர் அணியாக செயல்பட்டு இல்லாதவர்களுக்கு கல்வி, உணவு, உடை என்று கூறி பலரிடமிறந்து பணம் பறிப்பதாகவும் அதற்கு அவர்கள் உபாயோக்ஹிக்கும் வழிகளும், அவர்கள் தரும் அனைத்து சான்றுகளும் நம்பத் தகுந்த விதத்தில் இறுப்பதாகவும், ஆனால் அவர்கள் இதே தொழிலாகவும் அப்பணத்தை வைத்து சுகப்ஹோகமாகவும் வாழ்வதாகவும் கூறினான். இது அந்த கூட்டம் பிடி பட்ட பிறகே அனைவருக்கும் தெரியவந்தது என்றும் அதனாலே அவன் நன்கு அறிந்த சில நல்ல குழுவிற்கு மட்டும் தன்னால் இயன்ற உதவியை செய்து வருவதாகவும் கூறினான். இதை கேட்டதும் திடுக்கிட்டேன், இப்படியும் சிலர் செயும் தவறால் பல நல்ல இயக்கங்களும் பாதிக்கப்படுகின்றனர், சில உதவ முன்வரும் இதயங்களும் தன்னை முடக்கிகொல்கின்றனர். எல்லோரும் தனகென்ன என்று இருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் மனதில் எப்போது கேட்போம் யென்ற தங்களின் கேள்வி மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. தாங்கள் கேள்வியுடன் நில்லாமல்,
தங்களுக்கு எதாவது நன்கு அறிந்த உண்மையான உதவி குழு இருந்தால் அதை தாங்கள் தங்கள் பதிவில் ஒருநாள் பதிவிட வேண்டுகின்றேன். தங்களின் மேல் நல்ல நம்பிக்கை உள்ள சில முடங்கிய உதவும் உள்ளங்களும் உதவிட முன்வருமே. இது எனது தாழ்மையான வேண்டுகோள். தவறாக பெசியிருந்தால் மன்னிக்கவும் வேண்டுகின்றேன்.

நன்றி அய்யா.

SP.VR. SUBBAIYA said...

////minorwall said...
ம்ம்ம்..ம்ஹும்..ஒண்ணும் சொல்றாப்போலே இல்லை...mundane astrology கிளாஸ் எடுக்கிறாப்போலே ஏதும் ஐடியா இருக்கா?//////

உங்களை விடுவதாக இல்லை. ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளைப் பற்றிய பாடங்களும் வரிசையாக வரும் மைனர்!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
13வதாக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
மேடைப்பேச்சு:"சாதிபேதம் அற்ற சமுதாயம் அமைப்போம்"
தனிமையில்:"இந்தத்தொகுதியில் எந்தசாதி ஜனத்தொகை கணக்கில் அதிகம்?"////

அரசியல்வாதிகளின் இரட்டைவேடம்தான் அறிந்ததாயிற்றே கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

//krish said...
வேகமான பொருளாதார வளர்ச்சியின் பின் விளைவு இது. சீனாவும் இதை எதிர்கொள்கிறது. வளர்ந்த நாடுகள் மக்கள் பொருளாதார எற்ற தாழ்வுகளால் அவதிப்படுகிறார்கள். இந்த காலத்தின் கட்டாயம் இது. மாற்றங்கள் தானே எற்படும்./////

மாற்றங்கள் ஏற்பட்டால் சரிதான்! நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBAIYA said...

/////R.DEVARAJAN said...
நாட்டு நலனில் கவலை கொள்ளும் நீங்கள் 5ம் தூண் உறுப்பினர்
ஆகலாமே?
www.5thpillar.org
தேவ்/////

உங்கள் அழைப்பிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////கூடுதுறை said...
அய்யா அற்புதம்...தூள் கிளப்பிவிட்டீர்கள்//////

தூள் கிளப்பியதில் தூசி சேராமல் இருந்தால் சரி!:-))))

SP.VR. SUBBAIYA said...

/////கூடுதுறை said...
அய்யா அற்புதம்...தூள் கிளப்பிவிட்டீர்கள்//////

தூள் கிளப்பியதில் தூசி சேராமல் இருந்தால் சரி!:-))))

SP.VR. SUBBAIYA said...

satchitanand said...
நல்லது ஐயா, நாம் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.//////

நன்றி, நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Sabarinathan TA said...
அய்யா, சமீபத்தில் நண்பன் சொன்ன ஒரு விஷயம் நியாபகத்தில் வந்தது, தங்களுடன் அதை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஒரு சில கூட்டம் ஓர் அணியாக செயல்பட்டு இல்லாதவர்களுக்கு கல்வி, உணவு, உடை என்று கூறி பலரிடமிறந்து பணம் பறிப்பதாகவும் அதற்கு அவர்கள் உபாயோகிக்கும் வழிகளும், அவர்கள் தரும் அனைத்து சான்றுகளும் நம்பத் தகுந்த விதத்தில் இறுப்பதாகவும், ஆனால் அவர்கள் இதே தொழிலாகவும் அப்பணத்தை வைத்து சுகபோகமாகவும் வாழ்வதாகவும் கூறினான். இது அந்த கூட்டம் பிடிபட்ட பிறகே அனைவருக்கும் தெரியவந்தது என்றும் அதனாலே அவன் நன்கு அறிந்த சில நல்ல குழுவிற்கு மட்டும் தன்னால் இயன்ற உதவியை செய்து வருவதாகவும் கூறினான். இதை கேட்டதும் திடுக்கிட்டேன், இப்படியும் சிலர் செயும் தவறால் பல நல்ல இயக்கங்களும் பாதிக்கப்படுகின்றனர், சில உதவ முன்வரும் இதயங்களும் தன்னை முடக்கிகொல்கின்றனர். எல்லோரும் தனகென்ன என்று இருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் மனதில் எப்போது கேட்போம் யென்ற தங்களின் கேள்வி மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. தாங்கள் கேள்வியுடன் நில்லாமல்,
தங்களுக்கு எதாவது நன்கு அறிந்த உண்மையான உதவி குழு இருந்தால் அதை தாங்கள் தங்கள் பதிவில் ஒருநாள் பதிவிட வேண்டுகின்றேன். தங்களின் மேல் நல்ல நம்பிக்கை உள்ள சில முடங்கிய உதவும் உள்ளங்களும் உதவிட முன்வருமே. இது எனது தாழ்மையான வேண்டுகோள். தவறாக பெசியிருந்தால் மன்னிக்கவும் வேண்டுகின்றேன்.
நன்றி அய்யா.////////

எனக்குத் தெரிந்த அறக்கட்டளைகள் சில உள்ளன. அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தைமட்டுமே அதற்குப் பயன்படுத்துகிறார்கள். யாரிடமும் வாங்குவதில்லை! நன்றி!

media said...

ellam palagiduchu anna.....

SP.VR. SUBBAIYA said...

/////media said...
ellam palagiduchu anna.....///

என்ன பழகினாலும் மனதில் ஒரு நெருடல் இருக்காதாதானே செய்கிறது தம்பி!