மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.5.10

அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"

ஜோதிடம் என்ன செய்யும்?

மனதை நெறிப்படுத்தும்!

Your mind will become like a seasoned wood!

இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச் சமமானவை தான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார். அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும் அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்) என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு
அல்லல் படுவான்

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

"விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை" என்று வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்தார்.

வள்ளுவர் எழுதியதில் விருப்பு வெறுப்பு இல்லதவர் இறைவன் என்ற முதல்வரி முக்கியம். இறைவன் விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதர்ளையும் சமமாகப் படைத்தார்.

நீங்கள் கேட்கலாம் - அப்படியென்றால் வாழ்க்கையில் ஏன் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்?

ஒரு குழந்தை ஏன் செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை ஏன் அன்றாடம் வயிற்றுப்பசிக்கு அல்லல் படும் ஏழைவீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை பார்ப்பவர்கள் மகிழும் விதமாக அழாகாக பிறக்கையில், ஒரு குழந்தை ஏன் உடல் ஊனத்துடன் பிறக்கிறது?

அதைத்தான் நம் முன்னோர்கள் வாங்கி வந்த வரம் என்று ஒரே வரியில் சொல்லியுள்ளார்கள். நாம் முன் ஜென்மத்தில் செய்த நல் விணைகள், தீவிணைகளுக்குத் தகுந்த மாதிரி இந்தப் பிறவி அமைகிறது.

முன் பிறவியில் தான தர்மங்கள், சேவைகள் செய்தவனுக்கு இந்தப்பிறவி அற்புதமாக அமைகிறது.

அல்லாதவனுக்கு வாழ்க்கை அல்லல் படும் விதமாக அமைகிறது.

பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால் குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால், முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப் பாவத்தைக் கழிக்க அதனுடைய
பிறப்பு அப்படி அமையும்.

எல்லாமே முன் ஜென்மப் பாவ புண்ணியங்களின்படிதான் என்றால், இங்கே - அதாவது இந்தப் பிறவியில் இறைவனின் பங்காற்றல் என்ன?

He will give you standing power to face any situation

இறைவனின் பங்காற்றல் இல்லையென்றால் ஒருவன் மனிதனாகவே பிறந்திருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதைத்தாங்கும் விதமாக நஷ்ட ஈட்டைக் கொடுத்துத்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார்

அந்த நஷ்ட ஈடும் சேரும் போதுதான் அனைவருக்கும் 337 பரல்கள் என்ற சம நிலைப்பாடு கிடைத்திருக்கிறது.

ஒருவனுக்குப் பத்தாம் வீட்டில் - அதாவது ஜீவன ஸ்தானத்தில் தேவையான பரல்கள் இன்றி அந்தவீடு அடிபட்டுபோய் இருந்தால், நல்ல உத்தி யோகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பான். அதே நேரத்தில் அவனுக்கு நான்காம் வீடு (சுக ஸ்தானம்) நன்றாக அமைந்திருக்கும் அவனுக்கு ஒரு ஊறவினர்களோ அல்லது நண்பர்களோ உதவி செய்து அடிப்படைத் தேவைகளுக்கு கேடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்

ஆகவே அஷ்டகவர்க்கம் கற்றுக்கொண்டபின் உங்களுக்குத் தெரியவரும் - யாருக்கும் நீங்கள் தாழ்ந்தவரில்லை - அதேபோல யாருக்கும் நீங்கள் உயர்ந்தவருமில்லை

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாகவேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஜாதகத்தின் 12 வீடுகளும், 36 பாக்கியங்களும் மிக நன்றாக அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. சரி பாதி நன்றாக அமையும். இருப்பதை வைத்துத்
திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Health இருக்கும் இடத்தி;ல் Wealth இருக்காது. Wealth இருக்கும் இடத்தில் Health இருக்காது. இரண்டும் நன்றாக இருக்க வேண்டு மென்றால் 1, 2, 6, 8, 9, 11, 12
ஆகிய வீடுகளில் 30 பரல்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் கோடியில் ஒருவருக்குக்கூட அமையாது!

கைவண்டி இழுப்பவன், இரண்டாள் சாப்பாட்டைக் கொடுத்தால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கட்டாந்தரையில் படுத்து நன்றாகத் தூங்குவான்.அதே சாப்பாட்டில் கால் பகுதியைக் கூட ஒரு செல்வந்தனால் ரசித்துச் சாப்பிடமுடியாது. கேட்டால் Blood Pressure, Sugar, என்று தனக்கிருக்கும் வியாதிகளின் பெயர்
களையும், விழுங்கும் மாத்திரைகளின் பெயர்களையும் அடுக்கிச் சொல்வான்.

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சுருக்கிச் சொன்னார்.

"அது இருந்தால் இது இல்லை,
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்,
அவனுக்கு இங்கே இடமில்லை!"

ஆமாம் எல்லாம் செர்ந்து கிடைக்கப் பெற்றவனுக்கு ஆயுள் அதிகம் இருக்காது.மேலே போய்விடுவான்.

இதையெல்லாம் உணர்ந்து நம்மை நாமே சமதானப் படுத்திக் கொண்டு சந்தோசமாகவும் நிம்மதியாகவும்

வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை!

கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள், " டேய் சோற்றைக் கீழே சிந்தாதே - சிந்தினால் அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"

ஈயாகப் பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும் சிறுவன் நிச்சயாமாக அடுத்து சோற்றைச் சிந்தாமல் உண்ணப் பழகிவிடுவான்.

"டேய் சாமி இல்லேன்னு சொல்லாதே - சொன்னா, இப்போ வெள்ளி, சனிக்கிழமைகள்ல கோவில் வாசல்ல தாட்டோட உக்காந்திருக்கானுங்கள்ல அவனுங்க மாதிரி அடுத்த பிறவியில் நீயும் தட்டோட உக்கார வேண்டிய திருக்கும்" இப்படியும் சொல்லிக் கிராமத்துப் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை
நெறிப்படுத்துவார்கள்.

அந்த நெறிப்படும் மனது தான் முக்கியம். அது எத்தனை வயதில் உங்களுக்கு நெறிப்படுகிறது என்பது அதை விட முக்கியம்.

முப்பது அல்லது நாற்பது வயதிற்குள் மனது நெறிப்பட வேண்டும். எழுபதுவயதில் நெறிப்படுவதால் ஒன்றும் பயனில்லை!

இருபது வயதில் நண்பன் சொல்கிறான் என்பதற்காக இரண்டு பெக் சீவாஸ் ரீகல் விஸ்கி அடித்துப் பார்ப்பது இயற்கை. அதையே எழுபது வயது வரை செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நல்லது என்று எடுத்துக் கொள்ளமுடியும்? எல்லாவற்றிற்கும் ஒரு காலகட்டம், வரைமுறை உண்டல்லவா?

சரி, மனது எதற்காக நெறிப்பட வேண்டும்?

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை, பெறுமை, சிறுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் அல்லவா வாழ்க்கை
சீராக இருக்கும். மனது எந்த்ச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கும். அதைவிட முக்கியமாக நிம்மதியாக இருக்கும். அதற்குத்தான் நெறிப்படுத்தப் பெற்ற மனது வேண்டும் Like a seasoned wood!

அதைச் சொல்லித்தருவதுதான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்
--------------------------------------------------------------.

சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அஷ்டகவர்க்கம் என்பது உங்களுடைய பிறப்பின் மதிப்பெண் சான்றிதழ் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

அந்தச் சான்றிதழ் பிறந்த ஷணத்திலேயே உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதை மாற்றி எழுத யாரலும் முடியாது. எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உங்களுடைய ஜாதகத்தின் 12 பாவங்களுக்கும் அல்லது வீடுகளுக்கும் அந்த வீடுகளுக்கு அதிபதிகளான 7 கிரகங்களுக்கும், அவை அமைந்துள்ள அமைப்பின்படி கணக்கிட்டு வருவதாகும். அதன் முக்கியமான
சிறப்பு யாராயிருந்தாலும் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.

அதாவது எல்லோருக்குமே 337/337 தான். கூடுதல் குறைச்சலுக்கெல்லாம் இடமில்லை.

337 வகுத்தல் 12 என்னும்போது ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும். அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக இருக்கும்.

அது தன்னுடைய கோச்சாரத் திலும் (Transit) தசா புக்தியிலும் நல்ல பலன்
களைத் தரும். இல்லை யென்றால் தீமையான பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கு இந்த அஷ்டவர்க்கம் பயன்படும் தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய பலன்கள் சாதகமாக இருக்காது.

2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

3. 30 பரல்களுக்கு மெலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்

4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப்போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நல்ல கணவன் கிடைப்பான். அவளைப் போற்றி வைத்துக்கொள்ளக்கூடிய கணவன் கிடைப்பான். உரிய காலத்தில் திருமணமாகும்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், தலைவனாகி விடுவான். அவனுக்குத் தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப் போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா? மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம் பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து விட்டு தேசம, தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

குறைந்த அளவு ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பரல்கள் இருக்க வேண்டும்?

அட்டவனையைப் பாருங்கள்.

செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும்

அல்லது நல்ல தொழில் அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே பதிவிட்டிருக்கிறேன். பழைய பாடங்களைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

44 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி

Alasiam G said...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

பாடத்திற்கு நன்றிகள் குருவே!

ananth said...

எனக்கு லக்கினத்தைத் தவிர்த்து 3,6,12 இடங்களில்தான் 30க்கு மேற்பட்ட பரல்கள் இருக்கின்றன. அதிலும் 6ல் 38 பரல்கள். அங்கே எந்த கிரகமும் இல்லாதது இன்னொரு குறை. நிறை AL, HL, SL போன்ற special லக்கினங்கள் அவற்றில்தான் இருக்கின்றன.

snkm said...

வணக்கம் ஐயா!

ravi said...

I have 40 parals in 10th house but I couldn't achieve in my profession. If here (10th house)40 means where will be less parals (In house)approximately?

Arulkumar Rajaraman said...

Dear Sir

Paadam Arumai Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

chennainewfriend said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

எல்லா வீடுகளிலும் 25 பரல்கள் மேலே இருந்தால் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ?

ராஜ் said...

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசங்கள் ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா!

------------------

பந்த பாஸம் எல்லாம் பணத்தின் மீதே கவனம் இருக்கும் பொது நாமும் அதையெ பின்பற்றுதல் நலம்.

Heard from my father once

கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டலும் தாய்
சீர் கொண்டு வந்தால் தங்கை
கொலையும் செய்வாள் பத்தினி

Seen the first 3 &
Time to see the last one for complete enlightenment.

சீனு said...

உள்ளேன் ஐயா!!!

satya said...

Sir
According to ashtakavarage, 337 points are common to everyone.. If one place has more, the other will have less.

But we also say that sins of previous birth also plays key role in current birth.

How both are to be correlated.

thanks
Satya

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
அஷ்டவர்க்கம்,பரல்கள் எண்ணிக்கையின் அடிப்படையில்
பலன்கள்--தகுந்த விளக்கம் மற்றும் உதாரணங்களுடன்
சுலபமாக புரியும்படி உள்ளது.
மிக்க நன்றி!
வணக்கம்.

தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-05-18

ARASU said...

வணக்கம் அய்யா,
அஷ்டவர்கப் பரல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பலன்களை அறியும்
குறுக்கு வழி சிறப்பாக உள்ளது. ஆனால் அஷ்டவர்கம் கணிக்கும் முறையை
இதுவரை வந்த எந்த பாடத்திலும் தாங்கள் சொல்லிக்கொடுக்க வில்லையே அய்யா. பழைய பாடங்களிலும் காணப்படவில்லை,எனவே அஷ்டவர்கக்
கணிதத்தை விளக்கமாக ஜாதக உதாரணத்துடன் தாங்கள் வலையேற்றம் செய்யும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் தங்கள் மாணவர்களில் ஒருவன்,
அரசு,

karthik said...

Hello ,

Sir For thula lagna, 11th lord is considered as inauspicious. what happens if it contains maximum paralas(example 36 parals) compared to other houses. Is it good or bad ?

kannan said...

ஐயா வணக்கம்.

படைத்தவனுக்கு இல்லாத அக்கறை நமக்கு என்ன வந்தது,

மரத்தை வைத்தவன் தண்ணீர் விடாமலா போகிவிடுவான்.

முயற்ச்சி செய்யாமல் இருந்து விட்டு அல்லது இருந்து கொண்டு இருந்தால் தானே நமது தவறு.


3 கோடி உயிர் அணுவில் போராடி வெற்றிவாகை சூடி உண்டான உயிர் அல்லவா! இது

மனிதனின் முதல் போராட்டத்தின் வெற்றி அல்லவா!

அப்படி இருக்க படைக்கப்பட்டதின் கர்மபலனை (கடமையை) செய்யாமல் சென்றால் இறைவன் கூட எவ்வாறு ஏற்றுகொல்வான்.

ஆனால் காலம் நேரம் நன்கு கூடி வரும் வரைக்கும் அமைதியாக ஆமைபோல் இருக்க வேண்டும்.

வாய்ப்பை கிட்டிய உடன் நல்ல படியாக வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வள்ளுவ பெரும் தகை சொன்னது போல்

கொக்கு ஆனது சிறிய மீன்களை விட்டு விட்டு பெரிய மீனுக்காக காத்து இருப்பது போல்

தக்க தருணம் வந்த உடன் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

முப்பது வருடம் தாள்தவரும் இல்லை!

முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை!

என்று சொல்லி சென்றவர்கள் சும்மாவா சொன்னார்கள் ஐயா.

கிணறு வெட்டுபவன் தண்ணீர் கிடைக்கும் தருவாயில் வெட்டுவதை விட்டு சென்றால் அது படைத்தவனின் தவறா என்ன|?

வெட்டுவதிர்க்கு வேண்டிய அனைத்து தகுதியும் (போராடும் சக்தி) தந்து அல்லவா ஆண்டவன் கிணறு வெட்ட
சொல்லு கின்றான்.

சரிதானே வாத்தி (யார்) ஐயா!********************************

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

வள்ளுவப் பெருந்தகை.

Anonymous said...

I have 45 paral in 6th huse .Is it good or bad?? In which aspect it will help me?

சூர்யநிலா said...

அய்யா

எனக்கு பத்தாம் இடத்தில் 43 பரல்கள் வருகிறது. பெரும் தொழிலதிபர் ஆகும் வாய்ப்பு உண்டா ?

நன்றி

தனி காட்டு ராஜா said...

//உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாகவேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.//

பிரபஞ்ச படைப்பே அவ்வாறு தான் .......ஒவ்வொரு உயிரும் தனிதன்மையானது .....மனம் தான் உயர்வு தாழ்வு பார்க்கிறது ...........

இனியன் பாலாஜி said...

எல்லோருக்கும் 337 என்பது தான் உண்மை நண்பரே.மேலும் மனித பிறவி என்பது
கிடைப்பதே கடினம் .ஒருமனிதன் தனது கர்மாக்களைக் கழிப்பதற்காக பிறப்பது
கூட மிகவும் கடினம் . அங்கும் கூட போட்டி இருக்கிறது. தகுந்த நேரம் ,தகுந்த சூழ் நிலை
பொறுத்து தான் பிறக்கமுடியும். எனவேதான் மனித ஜென்மம் கிடைப்பதற்கே நாம்
கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதோடு அவரது அருளால் அதை அனுபவிக்க‌
நமக்கு மனோதைரியமும் கிடைக்கும். மற்றபடி கடவுள் நமக்கு வேலைக்காரன்
போல ஒரு கருத்து உருவாகி விட்டது.அவர் ஏன் செய்யவில்லை. அவருக்கு
கண்ணில்லையா போன்ற கேள்விகள் உருவாகின்றன.உண்மையில் தாங்கள் சொன்னது
போல் நாத்திகனுக்கு அதைப் பேச வார்த்தைகள் தருவது கூட அவர்தான்.

ஒஷோ கூறுகிறார்
"WHEN ALL THE ACCOUNTS ARE CLOSED YOU NEED NOT BE REBORN"

எல்லோருக்கும்
337 என்பது உண்மைதான் . இது ஒன்றைப் புரிந்து கொண்டால் போதும். இருப்பதை கொண்டு
சந்தோஷத்துடன் வாழ்க்கையில் வருவதை எதிர் கொள்ளும் திறமையும் ஆனந்தமும்
கிடைத்துவிடும்
நன்றி வாத்தியார் அவர்களே
இனியன் பாலாஜி

kmr.krishnan said...

இந்த ஜன்மத்தில் பை நிறைய சம்பளமும் கை நிறைய கிம்பளமும் வாங்கிக்கொண்டு வேலையில் நெளிவு எடுப்பவன் அடுத்த ஜன்மாவில்
க‌ழுதையாகப் பிறப்பான்.

SP.VR. SUBBAIYA said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி/////

உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Alasiam G said...
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
பாடத்திற்கு நன்றிகள் குருவே!/////

நல்லது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
எனக்கு லக்கினத்தைத் தவிர்த்து 3,6,12 இடங்களில்தான் 30க்கு மேற்பட்ட பரல்கள் இருக்கின்றன. அதிலும் 6ல் 38 பரல்கள். அங்கே எந்த கிரகமும் இல்லாதது இன்னொரு குறை. நிறை AL, HL, SL போன்ற special லக்கினங்கள் அவற்றில்தான் இருக்கின்றன.////

ஆறாம் வீட்டில் 38 பரல்கள் என்பது ஒருவகையில் பாக்கியம்தான். என்ன பாக்கியம் என்பதை யோசித்துச் சொல்லுங்கள்

SP.VR. SUBBAIYA said...

//////snkm said...
வணக்கம் ஐயா!/////

உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////ravi said...
I have 40 parals in 10th house but I couldn't achieve in my profession. If here (10th house)40 means where will be less parals (In house)approximately?///////

அந்த இடத்து நாதனின் தசாபுத்தியில், அதற்கு உரிய பலன்கள் கிடைக்கும். ஒரு வீட்டில் அதிகபரல்கள் எனும்போது, எங்கே குறையும் என்பதற்கு விதிகள் கிடையாது. அமைப்பும் கிடையாது. ஜாதகத்திற்கு ஜாதகம் அது மாறுபடும்!

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Paadam Arumai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நல்லது நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

////chennainewfriend said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
எல்லா வீடுகளிலும் 25 பரல்கள் மேலே இருந்தால் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?//////

நல்லதும் கெட்டதும் கலந்ததாகவே இருக்கும். 28 என்பதுதான் அளவுகோல் சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

///////ராஜ் said...
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசங்கள் ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா!
------------------
பந்த பாசம் எல்லாம் பணத்தின் மீதே கவனம் இருக்கும் பொது நாமும் அதையே பின்பற்றுதல் நலம்.
Heard from my father once
கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டலும் தாய்
சீர் கொண்டு வந்தால் தங்கை
கொலையும் செய்வாள் பத்தினி
Seen the first 3 &
Time to see the last one for complete enlightenment.///////

ஆகா, அப்படியே செய்யுங்கள். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று ஒரு நாள் காலதேவன் உணர்த்துவான்.
அப்படி உணரவைக்காமல் அவன் எவனுக்குமே போர்டிங் பாஸ் தருவதில்லை!

SP.VR. SUBBAIYA said...

/////சீனு said...
உள்ளேன் ஐயா!!!//////

உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

///////satya said...
Sir
According to ashtakavarage, 337 points are common to everyone.. If one place has more, the other will have less.
But we also say that sins of previous birth also plays key role in current birth.
How both are to be correlated.
thanks
Satya//////

ஆடு, மாடு, மான், யானை, புலி, சிங்கம், குதிரை, கழுதை என்று எத்தனையோ நான்கு கால் பிராணிகள் உள்ளன.
எல்லாமே 4 கால் பிராணிகள்தான். வலிமையும் வாழ்க்கை முறையும் வேறுபடும். கர்மவினைப்பயன்களும், பூர்வ புண்ணியமும் அப்படித்தான். 4 கால்களோடு (337 பரல்களோடு) பிறப்பீர்கள். பிறவி, எந்தவகையான 4 கால் பிராணி என்பது மட்டும் வேறு படும். விளக்கம் போதுமா? பத்தாது என்றால் மீண்டும் வாருங்கள்.

SP.VR. SUBBAIYA said...

////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
அஷ்டவர்க்கம்,பரல்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பலன்கள்--தகுந்த விளக்கம் மற்றும் உதாரணங்களுடன் சுலபமாக புரியும்படி உள்ளது.
மிக்க நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////ARASU said...
வணக்கம் அய்யா,
அஷ்டவர்கப் பரல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பலன்களை அறியும்
குறுக்கு வழி சிறப்பாக உள்ளது. ஆனால் அஷ்டவர்கம் கணிக்கும் முறையை
இதுவரை வந்த எந்த பாடத்திலும் தாங்கள் சொல்லிக்கொடுக்க வில்லையே அய்யா. பழைய பாடங்களிலும் காணப்படவில்லை,எனவே அஷ்டவர்கக்கணிதத்தை விளக்கமாக ஜாதக உதாரணத்துடன் தாங்கள் வலையேற்றம் செய்யும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் தங்கள் மாணவர்களில் ஒருவன்,
அரசு,////

கணினியில் சுலபமாகக் கணிக்க முடியும் என்பதால் அதை விரிவாக எழுதவில்லை. நேரம் இருக்கும்போது அதை உங்களைப்போன்றோருக்காக எழுதுகிறேன்!

SP.VR. SUBBAIYA said...

/////karthik said... Hello ,
Sir For thula lagna, 11th lord is considered as inauspicious. what happens if it contains maximum paralas(example 36 parals) compared to other houses. Is it good or bad ?///////

கேள்வியே தவறு! 36 பரல்கள் இருக்கும்போது அது எப்படிக் கெட்டதாக (bad) இருக்கும்?

SP.VR. SUBBAIYA said...

////////kannan said...
ஐயா வணக்கம்.
படைத்தவனுக்கு இல்லாத அக்கறை நமக்கு என்ன வந்தது,
மரத்தை வைத்தவன் தண்ணீர் விடாமலா போகிவிடுவான்.
முயற்சி செய்யாமல் இருந்து விட்டு அல்லது இருந்து கொண்டு இருந்தால் தானே நமது தவறு.
3 கோடி உயிர் அணுவில் போராடி வெற்றிவாகை சூடி உண்டான உயிர் அல்லவா! இது
மனிதனின் முதல் போராட்டத்தின் வெற்றி அல்லவா!
அப்படி இருக்க படைக்கப்பட்டதின் கர்மபலனை (கடமையை) செய்யாமல் சென்றால் இறைவன் கூட எவ்வாறு ஏற்றுகொல்வான். ஆனால் காலம் நேரம் நன்கு கூடி வரும் வரைக்கும் அமைதியாக ஆமைபோல் இருக்க வேண்டும். வாய்ப்பை கிட்டிய உடன் நல்ல படியாக வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வள்ளுவ பெரும் தகை சொன்னது போல் கொக்கு ஆனது சிறிய மீன்களை விட்டு விட்டு பெரிய மீனுக்காக காத்து இருப்பது போல் தக்க தருணம் வந்த உடன் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை! முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை!
என்று சொல்லி சென்றவர்கள் சும்மாவா சொன்னார்கள் ஐயா.
கிணறு வெட்டுபவன் தண்ணீர் கிடைக்கும் தருவாயில் வெட்டுவதை விட்டு சென்றால் அது படைத்தவனின் தவறா என்ன|?
வெட்டுவதற்கு வேண்டிய அனைத்து தகுதியும் (போராடும் சக்தி) தந்து அல்லவா ஆண்டவன் கிணறு வெட்ட
சொல்லுகின்றான்.
சரிதானே வாத்தி (யார்) ஐயா!
********************************
"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
வள்ளுவப் பெருந்தகை.//////

சரிதான் சுவாமி! சரிதான் சுவாமி! மிகச் சரிதான் சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

//////Ashok said...
I have 45 paral in 6th huse .Is it good or bad?? In which aspect it will help me?/////

ஆறாம் வீட்டில் 45 பரல்கள் என்பது ஒருவகையில் பாக்கியம்தான். என்ன பாக்கியம் என்பதை நமது நண்பர் ஆனந்த் சொல்வார். ஒரு நாள் பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////சூர்யநிலா said...
அய்யா
எனக்கு பத்தாம் இடத்தில் 43 பரல்கள் வருகிறது. பெரும் தொழிலதிபர் ஆகும் வாய்ப்பு உண்டா ?
நன்றி////////

நல்ல தொழில் அமையும் வாய்ப்பு உண்டு. அந்த இடத்திற்குக் கோச்சாரச் சனி வரும்போது நிறையப் பொருள்வரவு இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

///தனி காட்டு ராஜா said...
//உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாகவேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.//
பிரபஞ்ச படைப்பே அவ்வாறு தான் .......ஒவ்வொரு உயிரும் தனிதன்மையானது .....மனம் தான் உயர்வு தாழ்வு பார்க்கிறது ...........////////

உங்களின் புரிதலுக்கும் மறுமொழிக்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////இனியன் பாலாஜி said...
எல்லோருக்கும் 337 என்பது தான் உண்மை நண்பரே.மேலும் மனித பிறவி என்பது
கிடைப்பதே கடினம் .ஒருமனிதன் தனது கர்மாக்களைக் கழிப்பதற்காக பிறப்பது
கூட மிகவும் கடினம் . அங்கும் கூட போட்டி இருக்கிறது. தகுந்த நேரம் ,தகுந்த சூழ் நிலை
பொறுத்து தான் பிறக்கமுடியும். எனவேதான் மனித ஜென்மம் கிடைப்பதற்கே நாம்
கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதோடு அவரது அருளால் அதை அனுபவிக்க‌
நமக்கு மனோதைரியமும் கிடைக்கும். மற்றபடி கடவுள் நமக்கு வேலைக்காரன்
போல ஒரு கருத்து உருவாகி விட்டது.அவர் ஏன் செய்யவில்லை. அவருக்கு
கண்ணில்லையா போன்ற கேள்விகள் உருவாகின்றன.உண்மையில் தாங்கள் சொன்னது
போல் நாத்திகனுக்கு அதைப் பேச வார்த்தைகள் தருவது கூட அவர்தான்.
ஒஷோ கூறுகிறார்
"WHEN ALL THE ACCOUNTS ARE CLOSED YOU NEED NOT BE REBORN"
எல்லோருக்கும்
337 என்பது உண்மைதான் . இது ஒன்றைப் புரிந்து கொண்டால் போதும். இருப்பதை கொண்டு
சந்தோஷத்துடன் வாழ்க்கையில் வருவதை எதிர் கொள்ளும் திறமையும் ஆனந்தமும்
கிடைத்துவிடும்
நன்றி வாத்தியார் அவர்களே
இனியன் பாலாஜி////////

அதானால்தான் 337ஐ வலியுறுத்தி அல்லது நினைவுறுத்தி அடிக்கடி எழுதுகிறேன்!

Rathinavel.C said...

sir,you have mentioned here when kotchara sani comes to 10th place,it will bring money and prosperous.In my case 10th place and raasi are sami,more importantly for me Janma Sani.....what can we expect?

Thanks
Rathinavel.C

SP.VR. SUBBAIYA said...

///kmr.krishnan said...
இந்த ஜன்மத்தில் பை நிறைய சம்பளமும் கை நிறைய கிம்பளமும் வாங்கிக்கொண்டு வேலையில் நெளிவு எடுப்பவன் அடுத்த ஜன்மாவில் க‌ழுதையாகப் பிறப்பான்.///////

பொதிசுமக்கும் கழுதையாகப் பிறப்பான்; குட்டிச்சுவர் கழுதையாக அல்லாமல்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Rathinavel.C said...
sir,you have mentioned here when kotchara sani comes to 10th place,it will bring money and prosperous.In my case 10th place and raasi are same, more importantly for me Janma Sani.....what can we expect?
Thanks
Rathinavel.C/////

ஏற்றம் உண்டு. அதீதப் பொருள் வரவு என்பது அங்கே உள்ள அஷ்டகவர்க்கத்தை வைத்து வேறுபடும்!

hamaragana said...

அன்புடன் வணக்கம் பெற்றோரை உதாசீனபடுதுபவர்கள் அடுத்த பிறவியல் கை விடபடுவார்கள். அதற்கு துணை போனவர்களுக்கு என்னமாதிரி பிறவி கிடைக்கும்...இந்த பிறவிலே தண்டனை ஏதும் கிடையாதா??? இது தெரிந்தால் நிறைய முதியோர் இல்லம் வராது!

SP.VR. SUBBAIYA said...

////hamaragana said...
அன்புடன் வணக்கம் பெற்றோரை உதாசீனபடுதுபவர்கள் அடுத்த பிறவியல் கை விடபடுவார்கள். அதற்கு துணை போனவர்களுக்கு என்னமாதிரி பிறவி கிடைக்கும்...இந்த பிறவிலே தண்டனை ஏதும் கிடையாதா??? இது தெரிந்தால் நிறைய முதியோர் இல்லம் வராது!////

ஏன் இல்லை? பச்சை இலைகள் எத்தனை நாட்களுக்குப் பச்சை இலைகளாகவே இருக்கும்? எல்லாம் ஒரு நாளைக்கு பழுத்த இலையாகவும், உதிர்ந்த சருகாகவும் மாறாதா? அப்போது கலாதேவன் அவர்களின் கணக்கைத் தீர்ப்பான்!

Thanuja said...

Vanakam sir,

Ashtavarga paral for my 4th house is only 24 sir, but if the suya varga only 5 how much will it be benefical sir?

Naalam veedu is the house of happiness endu iruku sir so with 24paralsa mattum vachukondu in that house naan vanthu santhoshama iruka mudiuyuma sir?

But my fourth house budhan is in 10th house with 5 parals and in 10th house 30 parals, irunthum naan perusa vanthu santhosha pattathila ethukumai or even if I am happy it won't last long, athu thaan kerkiran sir?

Thanks
Thanuja

SP.VR. SUBBAIYA said...

/////Thanuja said...
Vanakam sir,
Ashtavarga paral for my 4th house is only 24 sir, but if the suya varga only 5 how much will it be benefical sir?
Naalam veedu is the house of happiness endu iruku sir so with 24paralsa mattum vachukondu in that house naan vanthu santhoshama iruka mudiuyuma sir?
But my fourth house budhan is in 10th house with 5 parals and in 10th house 30 parals, irunthum naan perusa vanthu santhosha pattathila ethukumai or even if I am happy it won't last long, athu thaan kerkiran sir?
Thanks
Thanuja/////

சந்தோஷம் என்பது மனநிலை. ஜாதகத்தில் சந்திரன் அல்லது குரு நன்றாக இருந்தாலும் ஜாதகன் மகிழ்ச்சியாக இருப்பான். ஆகவே அதையும் பாருங்கள் சகோதரி! எல்லாவற்ரையும் விட இன்னும் ஒரு வழி இருக்கிறது. இறைவனிடம் உங்கள் பாரத்தைக் கொடுத்துவிட்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!