மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.5.10

எதற்காகச் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதற்காகச் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும்!

தலைப்பு - நவாம்சம்

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை இன்று எழுதியிருக்கிறேன்.

நவாம்சத்தைப் பற்றிப் பலருக்கும் சில குழப்பங்கள் உள்ளன.

நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி.

Navamsa is the one by ninth divison of a rasi chart. It is the magnified version of a rasi chart

ஒரு திரைப் படத்தில் நாகேஷ் ஜோக்காகச் சொல்வார்.” மேலாக ஊற்றினால் ரசம்: கலக்கி ஊற்றினால் சாம்பார்”

அதைப்போல மேலாகப் பார்ப்பதற்கு ராசி, கலக்கிப் பார்ப்பதற்கு நவாம்சம் என்று சொல்லலாமா?

சொல்ல முடியாது. ஜோதிட விற்பன்னர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது.

வைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம்.

சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.

ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும்.

ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை, பாடத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்.

அதாவது ராசிச் சக்கரத்தின் உபயோகம் என்ன? நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன? என்பதை விவரமாக எழுதியிருக்கிறேன்.

அனைவரும் படித்துப் பயன்பெறுங்கள் அல்லது படித்து மகிழுங்கள். அது உங்கள் சாய்ஸ்!
-----------------------------------------------------------------
நவாம்சம் என்பதற்கு ஒன்பதாம் பகுதி என்று பொருள் கொள்ளலாம்.

Navamsa means "Ninth Division"

கிரகங்களின் வலிமையை அல்லது தன்மையைத் தெரிந்து கொள்வதற்கு நவாம்சச் சக்கரம் பயன்படும். கிரகங்களின் வலிமையை ராசி மற்றும் நவாம்சத்தை கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

இரண்டில் எது முக்கியம்?

இரண்டுமே முக்கியம்!

அப்பா, அம்மா - இருவரில் எவர் முக்கியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இருவருமே முக்கியம்!

ஒரு ஜாதகத்தின் வலிமையை அந்த இரண்டு சக்கரங்களையும் (Charts) வைத்தே தீர்மானிக்க வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
எண் ஜோதிடத்தில் ஒன்பதாம் எண் கடவுளைக் குறிக்கும் அதற்கு அகரங்கள், எழுத்துக்கள் கிடையாது.

அதுபோல ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் மிகவும் முக்கியமானது. அதன் அதிபதிதான் ஜாதகனுக்கு அதிகமான நன்மைகளைச் செய்யக்கூடியவர்.

The 9th house is the house of fortune, luck, and Dharma.

நவாம்சச் சக்கரம் ஜாதகன் வாங்கி வந்துள்ள அதிர்ஷ்டங்களைச் சொல்லும்.

ஒன்பதாம் இடமும், அதன் அதிபதியும், ஜாதகனுக்கு பல நல்ல வாய்ப்புக்களையும், பல அதிர்ஷ்டமான சூழ்நிலைகளையும், பல வெற்றிகளையும் உருவாக்கித் தரும்/தருவார்கள்.

ஜாதகனைத் தர்ம வழிகளில் நடக்க விடுவார்கள். உயர விடுவார்கள். பல உயர்ச்சிகளைத் தருவார்கள்

ஜாதகனுக்கு ஜாதகத்தில் உள்ள தீய கிரகங்களால் ஏற்படும், அவதிகளை எதிர்த்து நிற்பதற்கு ஒன்பதாம் அதிபதி பல உதவிகளைச் செய்வார்

ஒன்பதாம் வீட்டில் அமரும் கிரகத்திற்குச் சொந்தமான வீடும் நலம் பெறும். ஜாதகனுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆகவே நவாம்சச் சக்கரம், அதிர்ஷ்டத்தைச் சொல்லும் சக்கரம்.

ஜாதகன் ஓடி வேற்றி பெறுவானா அல்லது ஒடிந்துபோய் படுத்துக் கொள்வானா’ என்பதை நவாம்சச் சக்கரம் சொல்லும்

நல்ல மனைவி அமையும் கணவன் அல்லது நல்ல கணவன் அமையும் மனைவி என்று தம்பதிகள் அமைந்துள்ள ஒரு குடும்பம் மகிழ்ச்சியான சூழ்நிலையைப் பெறுவதைப்போல, நல்ல ராசிச் சக்கரத்தையும் நல்ல நவாம்சச் சக்கரத்தையும் பெற்ற ஜாதகன்தான் ஒரு நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணம் சொன்னால் ராசிச் சக்கரம் ஒரு அலைபேசி (cell phone) என்றால், நவாம்சம் அலைபேசிக்குச் சரியான சிக்னல்களை அனுப்பும் நெட் ஒர்க் எனலாம். ஒரு வீக்கான, அதிகம் டவர்கள் இல்லாத நெட் ஒர்க்குடன் உங்கள் தொலைபேசி இருந்தால், நீங்கள் பல நேரம் தொடர்பு எல்லைக்கு வேளியேதான் இருக்க நேரிடும். வீக்கான நவாம்சம் என்பது வீக்கான செல்போன் நெட் ஒர்க் என்று சொல்லலாம். உங்கள் செல் போன் - அதிக விலையுள்ள லேட்டஸ்ட் செல் போன் என்றாலும் பயன்படாது போய்விடும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராசிச் சக்கரம் = உங்கள் உடல் உருவ அமைப்பு, நீங்கள் செய்யும் செயல்கள், நீங்கள் வாழும் சூழ்நிலைகள் போன்றவற்றைக் காட்டும்

சந்திரனை வைத்து உங்களுடைய மன உலகம், வருவதை நீங்கள் எப்படி மன ரீதியாக ஏற்றுக்கொள்கிறீர்கள் எப்படி அதைக் கையாளுவீர்கள் என்பது தெரியும்

நவாம்சம் உங்களிடம் மறிந்துள்ள சக்திகள், உங்கள் முயற்சிகளுக்கு விதிப்படி என்ன பலன் கிடைக்கும் என்பதெல்லாம் தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவாம்சத்தைப் பயன்படுத்துவதற்கு உரிய எளிய விதிமுறைகள். கிரகங்களின் வலிமையை நவாம்சத்தை வைத்து அறிந்து கொள்ளும் வழிகள்.

1. லக்கினம் அல்லது கிரகங்கள் ராசியில் இருக்கும் இடத்திலேயே நவாம்சத்திலும் இருக்கிறதா என்று பாருங்கள். இரண்டிலும் அது ஒரே இடத்தில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். அப்படி வர்கோத்தம அந்தஸ்து பெறும் லக்கினமும், கிரகங்களும் அதீத வலிமை உடையதாக இருக்கும்.

அவைகள் அதிக வலிமை உடையதாக இருக்கும் They are extremely powerful
பலன்களும் சக்திவாய்ந்ததாக இருக்கும் The result will be extremely powerful
அவைகளுடைய தசா புத்திகளும் சிறப்பாக இருக்கும் Their Dasa/Bukthi periods will most definitely be eventful.
--------------------------------------------------------
2. அதேபோல (ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் உச்சமாகவோ அல்லது ஆட்சி வீட்டிலோ இருக்கும் கிரகமும் வலிமையானதாக இருக்கும். தாங்கள் சம்பந்தப்பட்டுள்ள வீடுகள் அல்லது தங்களுடைய காரகத்திற்கான பலன்களை அவைகள் சிறப்பாகக் கொடுக்கும்!

அதேபோல (ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அந்தக் கிரகம் வலிமையை இழந்து விடும். அது செல்லாத காசாகிவிடும். அதனால் ஜாதகனுக்கு எந்தப் பலனையும் தர இயலாது. அதே இடத்தில் நீசபங்கம் பெற்றிருந்தால், மேட்டர் தலை கீழாக மாறிவிடும். ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்
--------------------------------------------------------
3. (ராசியில் எப்படி இருந்தாலும்) நவாம்சத்தில் பரிவர்த்தனையாகியுள்ள கிரகங்கள் வலிமையுடையவையாக மாறிவிடும். ஜாதகனுக்கு நன்மையான பலன்களை அவைகள் கொடுக்கும்
---------------------------------------------------------
4.
ராசி அல்லது நவாம்சத்தில் ஒரு வீட்டின் அதிபதி, ஒரு காரகனின் சேர்க்கையையோ அல்லது பார்வையோ பெற்றால், நல்ல பலன்களைத் தருவார். உதாரனத்திற்கு ஏழாம் வீட்டதிபதி சுக்கிரனின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றால், நல்ல மனைவி அல்லது நல்ல கணவனைத் தருவார்கள். அந்த வழி உறவுகளும் மேன்மை உடையதாக இருக்கும்
------------------------------------------------------------
5.
குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களின் பார்வைகளுக்கும் நவாம்சத்தில் பலன் உண்டு. குருவிற்கு 5, 7,9ஆம் பார்வையும், செவ்வாய்க்கு 4, 7, 8ஆம் பார்வையும், சனிக்கு 3,7,10ஆம் பார்வையும் உண்டு என்பதை மனதில் கொள்ளவும்.
--------------------------------------------------------------
6.
ராகு, கேது போன்ற தீய கிரகங்களால் நவாம்சத்தில் மாறுபட்ட பலன்கள் உண்டாகும். உதாரணத்திற்கு, நவாம்சத்தில் குருவுடன் ராகு சேர்ந்திருந்தால்,
அது ஜாதகனின் குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால் ஜாதகன்
தன் குழந்தைகளுடன் கொண்டிருக்கும் அன்பான உறவில் பல கேடுகளை விளைவிக்கும் அல்லது தன் குழந்தைகளைப் பற்றி நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டான்.
-----------------------------------------------------------------
7. நவாம்சத்தின் முக்கிய நோக்கமே அது ஜாதகனின் திருமண வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்கு உள்ளதாகும். உரியதாகும். ஜாதகனின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். ராசியில் ஏழாம் வீட்டில் தீய கிரகம் இருந்தால் அது நல்லதல்ல. ஆனால் நவாம்சத்தில் ஏழில் தீய கிரகம் இருந்தால் அது மிகவும் தீமையானது. மோசமானது A malefic in 7th in Rasi is bad, but in Navamsa it is worse

நவாம்சத்தில் ஏழாம் அதிபதியோ அல்லது சுக்கிரனோ கெட்டிருந்தால், அது திருமண வாழ்விற்குக் கேடானது.ராசியில் அவைகளின் நிலைமை எப்படியிருந்தாலும், நவாம்சத்தில் மட்டும் கெடக்கூடாது.
-----------------------------------------------------------------
8.
நவாம்சத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெறாமல் இருக்கும் கிரகங்கள், அது நவாம்சத்தில் இருக்கும் இடத்தின் அதிபதியால் (Navamsa depositor) உத்வேகம் கொண்டு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும். உதாரணத்திற்கு ராசியின் பத்தாம் வீட்டு அதிபதி நவாம்சத்தில் புதனின் வீட்டில் இருந்தால், அது ஜாதகனுக்கு ஆடிட்டர், அல்லது வங்கிகள், அல்லது தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை வாங்கிக் கொடுக்கும் அதேபோல 10ஆம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் செவ்வாயின் வீட்டில் இருந்தால், ஜாதகன் பொறியியல் துறை அல்லது காவல்/ராணுவத்துறையில் வேலை வாங்கிக் கொடுத்து அவனைச் சிறப்படையச் செய்யும். இதே அமைப்புள்ள ஜாதகன் மருத்துவத்துறைக்குப் போனால் பெயர் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவராக விளங்குவான்.
------------------------------------------------------------------------------------------
9.
நவாம்சம்த்தில் ஒரு கிரகத்திற்கு சில சமயம், இரண்டு கிரகங்களின் பார்வைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு ஏழாம் பார்வையாக ஒரு கிரகமும், 3 அல்லது 10ஆம் பார்வையால் சனியோ, அல்லது 4ஆம் , 8ஆம் பார்வையாக செவ்வாயோ அல்லது 5ஆம் அல்லது 9ஆம் பார்வையாக குருவோ - அதாவது அவர்களில் ஒருவரோ பார்க்கக்கூடும். அவற்றில் 7ஆம் இடத்தில் இருந்து நேரடியாகப் பார்க்கும் கிரகத்தின் பார்வைதான், அதிக வலிமையுடையதாக சம்பந்தப் பட்ட கிரகத்திர்கு உதவி செய்யும்!

என்ன தலை சுற்றுகிறதா?
6 அல்லது 10 முறைகள் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். தலை சுற்றல் நின்று விடும்:-)))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவாம்சத்தை வைத்து சில பொதுப்பலன்கள் (கவனிக்கவும் பொதுவான பலன்கள்)

1
நவாம்சத்தில் செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். வயிற்றில் உபாதைகள் ஏற்படும்.
2.
நவாம்சத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், ஜாதகன் தன் இனத்தைவிட்டு, வேறு இனப்பெண்ணை மணந்து கொள்வான். சொந்த உறவுகளோடு அவனுக்குப் பிரச்சினைகள் உண்டாகும்
3.
நவாம்சத்தில் சனியுடன், சந்திரன் சேர்ந்திருந்தால், ஜாதகன் பணத்தின்மேல் மிகுந்த பற்று வைத்திருப்பான்.யாருக்காகவும் ஒரு பைசா செலவழிக்க மாட்டான்.
4.
நவாம்சத்தில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்திருந்தால், பெண்களுக்கு மாதவிடாய்,, மற்றும் கர்ப்பப்பைப் பிரச்சினைகள் உண்டாகும். ஆண்களுக்கு ரத்த சம்பந்தமான பபிரச்சினைகள், கோளாறுகள் வரும். கடகத்தில் அல்லது விருச்சிகத்தில் இந்த அமைப்பு இருந்தால், இந்தப் பிரச்சினை நிச்சயம் உண்டாகும்.
5.
நவாம்சத்தில் சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்கும் குரு, ஜாதகனுக்கு நல்ல, ஸ்திரமான செல்வத்தைக் கொடுக்கும். பணப்புழக்கத்தைக் கொடுக்கும். வயதாக வயதாகப் பண இருப்பு அதிகமாகிக் கொண்டே போகும்.
6.
நவாம்சத்தில் சிம்மத்தில் இருக்கும் சனியால் கேடுகள்தான் அதிகம். அந்த இடத்தில் வர்கோத்தமம் (ராசியிலும் சிம்மத்தில்) பெற்றிருந்தால் சனியால் கெடுதல்கள் இருக்காது.
7.
நவாம்சத்தில் மேஷ் ராசியில் சூரியன் இருக்குமானால், ஜாதகனின் தலை இளைமையிலேயே வழுக்கையாகிவிடும். (Sun in Aries Navamsa go bald sooner). சிலருக்கு அகலமான் நெற்றி இருக்கும்
8.
நவாம்சத்தில் சுக்கிரனின் வீட்டில் (ரிஷபம் அல்லது துலாம் ராசிகளில்) செவ்வாய் இருந்தால் ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து நல்ல முறையில் அனுபவிப்பவனாக இருப்பான். அங்கே இருக்கும் செவ்வாய் கெட்டிருந்தால், மோசமான ரசனைகளை உடையவானாக ஜாதகன் இருப்பான். தீய வழிகளில் வாழ்க்கையை அனுபவிப்பான்.

அதேபோல செவ்வாயின் நவாம்சத்தில் (மேஷம் அல்லது விருச்சிகத்தில்) இருக்கும் சுக்கிரன் ஜாதகனுக்கு அதீத கோபத்தையும், அதீத உணர்வுகளையும், மூர்க்கத்தனத்தையும் கொடுக்கும் Venus in Mars Navamsa gives an aggressive, emotional outlook to the native.

ராசியில் எப்படி இருந்தாலும், நவாம்சத்தில் செவ்வாயும், சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை பிரச்சினைக்கு உரியதாகிவிடும். அல்லது அந்த அமைப்பினால் ஜாதகன் தீவிர காதலில் ஈடுபட்டு, இறுதியில் தன் காதலில் தோல்வியச் சந்திப்பான். தேவதாசாக மாறி அலைவான். இந்த அமைப்பில் ஜாதகத்தை உடைய சிலர், தகாத உறவுகளினாலும், கள்ளக் காதல்களினாலும் அவதிப்படுவார்கள்.
-----------------------------------------------------
நவாம்சம் நமது வாங்கி வந்த வரத்தை அளக்கும் தராசு. வெறும் தராசுதான். நமது அதிர்ஷ்டத்தை, நமது விதியை, அளந்து பார்க்க உதவும் தராசு. அதை மனதில் வையுங்கள்

இல்லை இப்படிக் கொள்ளுங்கள் - நவாம்சம் என்பது ஒரு கருவி, ராசிச் சக்கரத்தைப் பிரித்துப் பார்க்க உதவும் கருவி என்று எடுத்துக் கொள்ளுங்கள்

ராசிச் சக்கரத்தை யாரும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அதுதான் வண்டி (car). நவாம்சம் அதைப் பிரித்துப் பார்க்க உதவும் Tool Box
+++++++++++++++++++++++++++++++++++++++++++
முடிந்தவரை கொடுத்திருக்கிறேன். போதுமா சாமிகளா?

இந்தப் பாடம் கிடைத்த மறு நிமிடம், தங்கள் ஜாதகத்தை வைத்து யாரும் கேள்விகள் கேட்டு எழுத வேண்டாம். மலைபோல வரும் கேள்விகளுக் கெல்லாம் பதில் எழுத எனக்கு நேரமில்லை. உங்களைப் போல எனக்கும் இருப்பது 24 மணி நேரம்தான்.

என் தொழில் ஜோதிடம் அல்ல! ஒரு ஆர்வத்தில் ஜோதிடத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் கற்றது பலருக்கும் பயன்படட்டும் எனும் நோக்கத்தில் எனது அரிய நேரத்தைச் செலவு செய்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் அதை உணர்ந்தால் நல்லது!

உணர்ந்தவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

49 comments:

 1. i am waiting for this lesson for a long time...but i am little confused about the predictions. anyway thanks sir!

  ReplyDelete
 2. neesamaana graham parivarthanai yogam adainthaal palan irukkuma? pls clarify my doubt

  ReplyDelete
 3. Dear Sir

  Navamsathil Uchham(Thula Sani) Petra Saniyudan chandran Amarthirukiran(Sima Lagnam-Navamsam).

  Rasiyil 3rd and 4th lord (saturn) 9il (Kadagathil - Poosham 3il(kalil))-viruchiga lagnam.

  Sani Dasai Eppadi Irukkum. Please Sir Kandipaga Indha Murai Padhil Sollunga Sir..Please explain sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 4. ஆசிரியருக்கு வணக்கம்,
  ஆஹா! அற்புதம்.
  பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்.
  நான் இப்படி புரிந்து வைத்திருந்தேன்.
  ராசியில் உள்ள கிரகம் சரியில்லாமல் இருந்தால் அது மேலோட்டப் பார்வைக்கு சரியில்லாமல் (ஜாதகன் அவசியமில்லாமல் சரியில்லையே என்று வருந்த தோன்றும்) தெரியும், அதே கிரகம் நவாம்சத்தில் நன்றாக இருந்தால் அதுதான் உண்மைநிலை (விதி என்றும் கூறலாம்) என்றும். இன்னும் சொல்லப் போனால் ராசி ஒரு மாளிகை என்று கொண்டால் அந்த மாளிகையில் உள்ள அறைகளை நவாம்சம் என்றுக் கொண்டு, கிரகங்கள் எந்த இடத்தில் (பூஜை அறையிலா, கூடத்திலா... முகப்பிலா.. கொல்லைபுரமா அல்லது தேவைற்ற பொருள்களின் கிடங்கிலா?....) இருக்கிறதோ அதன் படி நல்ல (அ) தீயப் பலன்களைத் தரும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். தாங்கள் தான் கூறவேண்டும் எனது புரிதலின் தன்மையை.
  நன்றிகள் குருவே!

  ReplyDelete
 5. Dear Sir

  Navamsathil Uchham(Thula Sani) Petra Saniyudan chandran Amarthirukiran(Sima Lagnam-Navamsam).

  Rasiyil 3rd and 4th lord (saturn) 9il (Kadagathil - Poosham 3il(kalil))-viruchiga lagnam.

  Sani Dasai Eppadi Irukkum. Please Sir Kandipaga Indha Murai Padhil Sollunga Sir..Please explain sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  நவாம்சத்தைப் பற்றிய பாடம் படிக்கும்போது புரிகிறது ,படித்து முடித்ததும் ஞாபகத்தில் முழுவதும் நிற்கவில்லை.தாங்கள் கூறியுள்ளது போல் திரும்பவும் பலமுறைகள் படித்து ஞாபகத்தில் வைக்க முயற்சிக்கிறேன்.பாடம் படிப்பதற்கு எளிமையாக கொடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றி.


  வணக்கம்.

  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-05-17

  ReplyDelete
 7. rasi chakrathil 2,7,8 suthamaga ulla boy/girl can be matched with same 2,7,8 suthamaga ulla boy/girl. aanal ade rasiyil 2,7,8 suthamaga irundu,navamsathil 7 & 8 malefics irundhal ...can it be matched?

  ReplyDelete
 8. அம்சமான பாடம் . . .
  நவாம்சம் பற்றியது . . .

  அது சரி . .
  எல்லா கிரகங்களும் ஒரே ராசியில் இருக்காது என முன்னர் கேள்விக்கு பதில் அளித்த ஆசிரியரே . . .

  இப்போ வந்த இப்படி ஒரு சிந்தனை..
  ஒரு ராசியில் ஒரே ஒரு கிரகம் மட்டும் இருக்கும் ஜாதகம் உண்டோ..?
  அதாவது 12 கட்டத்தில் 9 கட்டங்களில் 9 கிரகங்கள் தனித்தனியாக . .

  இது பற்றி யோகமோ . . தோஷமோ பார்த்தறியவில்லையே . .

  ReplyDelete
 9. Good Morning Sir,

  1.In Rasi a planet has 3/2 parals but in navamsha it is his own house . then what is the outcome sir.

  2.What is effect of mutual exchange between friendly planets? eg: guru with mars [naturally guru is considered as benefic and mars as malefic but they are friendly planets]

  ReplyDelete
 10. வாத்தியார் அவர்கலுக்கு,

  ஓரு ஆட்சி, உச்சம் பெட்ற கிரகத்துடன் ராகு/கேது சேரும் போது அல்லது பார்வையில் இருக்கும் போது, அந்த கிரகங்கள் எத்தகைய பலன்களை கொடுக்கும்?

  ந‌ன்றி

  ReplyDelete
 11. ஐயா!!!

  பாடம் தெள்ளத்தெளிவாக இருந்தது. மிக்க நன்றி...

  ReplyDelete
 12. அருமையான பாடம். நவாம்சம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது.

  இருந்தும் ஒரு ஐயம் .

  நவாம்சத்தில் மறைவு ஸ்தானங்களை (6,8,12) எப்படி கணக்கிட வேண்டும்? இராசி லக்கினத்தை எடுத்து கொள்ள வேண்டுமா? அல்லது நவாம்ச லக்கினத்தில் இருந்து எண்ண வேண்டுமா? For Example ராசியில் விருச்ஹக லக்கினம். அம்சத்தில் கும்ப லக்கினம். அம்சத்தில் கும்ப லக்கினத்திற்கு 6 -ல் (கடகத்தில்) குரு. இந்த அமைபிற்கு குரு மறைவு பெற்று உள்ளார?

  நன்றிகளுடன்
  S Manikandan

  ReplyDelete
 13. சார்.,
  நீங்கள் நவாம்சம் பற்றி எழுதியது .மிக மிக நன்றாக இருந்தது . எனது பொது கேள்விகள் .

  1 . வர்கோத்தமம் பெற்ற தீய கிரகங்கள் கூட நன்மை மட்டுமே செயுமா.

  2 . ராசியல் கிரகங்களின் பார்வை முக்கியமா நவாம்சத்தில் முக்கியமா, எந்த பார்வைக்கு முக்கியம் கொடுப்பது

  3 . பாவம் சக்கரம் பற்றி எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.

  நன்றி
  குபேந்திரன்

  ReplyDelete
 14. அருமையான பாடம். ரொம்ப நாட்களாய் வகுப்புக்கு வரவில்லை. மன்னிக்கவும். இனி கிடைக்கும் நேரத்தில் பழைய பாடங்களை முடிக்க முயல்கிறேன்.
  - அன்புடன்,
  லலித்

  ReplyDelete
 15. நான் தான் முதல் வருகை

  ReplyDelete
 16. Ayya,

  Padam nandraga purinthu, one general doubt

  Pengalukku 8th House Mangalya stahnamaga amaivathal anth idathai asupa stathnamage kollu mudiyuma...

  Nandri

  ReplyDelete
 17. I have a problem with my broadband connection and also with my computer.
  Reply to your comments will be posted tomorrow. Please bear with me!
  SP.VR.Subbaiya

  ReplyDelete
 18. மற்ற அம்சங்களுக்கு இல்லாத சிறப்பு நவாம்சத்திற்கு உண்டு. திருமண வாழ்க்கை மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களுக்கும் இது பயன்படுகிறது. என் ஜாதகத்தில் லக்னம் வர்கோத்தமமாக இருக்கிறது. இதை விட வேறு எதுவும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. லக்னம் வர்கோத்தமமாக இருந்தால் அது அந்த ஜாதகனை ம்ருத்யுஞ்ஜய மந்திரம் போல் காத்து வரும் என்று படித்திருக்கிறேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை பல இக்கட்டுகளிலும் ஆபத்துகளிலும் இருந்து காத்து வருகிறது. இதை பல முறை நான் உணர்ந்திருக்கிறேன்.

  ராசிக்கு நவாம்சம் என்பது வீட்டிற்கு extension போன்றதுதான். Extensionனே வீடாக முடியாது. இது என் கருத்து மட்டுமே. Extensionஇல் Ex எடுத்து விட்டு tension ஆகி விடப் போகிறீர்கள்.

  ReplyDelete
 19. நவாம்சம் நன்றாக இருந்தது. நன்றி.

  ReplyDelete
 20. நவாம்சத்தில் லக்னத்தில் இருந்து எண்ணுவது கிடையாது என்று சொன்னதாக ஞாபகம். அப்படியென்றால் நவாம்சத்தில் ஏழாம் அதிபதி என்று சொல்கிறீர்களே ராசியின் ஏழாம் அதிபதியே நவாம்சத்தில் ஏழாம் அதிபதி என்று அர்த்தமா? அப்படியென்றால் நவம்சத்தின் லக்னத்திற்கு என்ன அர்த்தம் அய்யா

  ReplyDelete
 21. Dear Sir

  Rasiyil viruchiga Lagnam- Guru 7il(Rishabam) and Navamsathil Simha Lagnam - Guru 7il(Kumbam)

  Rasiyil -10il Suriyan(Simam) and Navamsathil(Lagnadhibadhi)-10il Suiryan(Rishabam).

  What kind of effect sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 22. Dear Sir

  Rasiyil viruchiga Lagnam- Guru 7il(Rishabam) and Navamsathil Simha Lagnam - Guru 7il(Kumbam)

  Rasiyil -10il Suriyan(Simam) and Navamsathil(Lagnadhibadhi)-10il Suiryan(Rishabam).

  What kind of effect sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 23. நவாம்ச லக்னம் ராசி பற்றி விளக்க வேண்டும். அவ்ற்றை அப்படியே விட்டு
  விட்டு, ராசியின் லக்னத்தையே ,ராசியையே நவாம்சத்திற்கும் என்று எடுத்துக்கொண்டு வீடுகளை எண்ண வேண்டுமோ?அப்படியென்றால் நவாம்சத்தில் லக்னம் 9 மடங்காக ஆக்கப்பட்டு பரிசோதனை பெறுவதில்லையா?பாடம் மிக நன்றாக உள்ளது.

  ReplyDelete
 24. ///govind said...
  i am waiting for this lesson for a long time...but i am little confused about the predictions. anyway thanks sir!////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 25. //////govind said...
  neesamaana graham parivarthanai yogam adainthaal palan irukkuma? pls clarify my doubt////

  பரிவர்த்தனையில் இருந்து நீசத்தை எப்படித் தனியாகப் பிரிக்க முடியும்? பரிவர்த்தனைக்கு முன் நீசமானதா? நீசமானதற்குப் பிறகு பரிவர்த்தனையானதா? யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்!

  ReplyDelete
 26. /////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Navamsathil Uchham(Thula Sani) Petra Saniyudan chandran Amarthirukiran(Sima Lagnam-Navamsam).
  Rasiyil 3rd and 4th lord (saturn) 9il (Kadagathil - Poosham 3il(kalil))-viruchiga lagnam.
  Sani Dasai Eppadi Irukkum. Please Sir Kandipaga Indha Murai Padhil Sollunga Sir..Please explain sir.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman//////

  இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக் கொண்டு, உங்கள் மனதில் மறைத்து வைத்திருக்கும் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்? Birth Details with a specific questionஐக் கேளுங்கள். இங்கேயே கேளுங்கள். Only one straight question

  ReplyDelete
 27. /////Alasiam G said...
  ஆசிரியருக்கு வணக்கம்,
  ஆஹா! அற்புதம்.
  பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்.
  நான் இப்படி புரிந்து வைத்திருந்தேன்.
  ராசியில் உள்ள கிரகம் சரியில்லாமல் இருந்தால் அது மேலோட்டப் பார்வைக்கு சரியில்லாமல் (ஜாதகன் அவசியமில்லாமல் சரியில்லையே என்று வருந்த தோன்றும்) தெரியும், அதே கிரகம் நவாம்சத்தில் நன்றாக இருந்தால் அதுதான் உண்மைநிலை (விதி என்றும் கூறலாம்) என்றும். இன்னும் சொல்லப் போனால் ராசி ஒரு மாளிகை என்று கொண்டால் அந்த மாளிகையில் உள்ள அறைகளை நவாம்சம் என்றுக் கொண்டு, கிரகங்கள் எந்த இடத்தில் (பூஜை அறையிலா, கூடத்திலா... முகப்பிலா.. கொல்லைபுரமா அல்லது தேவைற்ற பொருள்களின் கிடங்கிலா?....) இருக்கிறதோ அதன் படி நல்ல (அ) தீயப் பலன்களைத் தரும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். தாங்கள் தான் கூறவேண்டும் எனது புரிதலின் தன்மையை.
  நன்றிகள் குருவே!/////

  உங்களின் புரிதல் சரிதான்!

  ReplyDelete
 28. /////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  நவாம்சத்தைப் பற்றிய பாடம் படிக்கும்போது புரிகிறது ,படித்து முடித்ததும் ஞாபகத்தில் முழுவதும் நிற்கவில்லை.தாங்கள் கூறியுள்ளது போல் திரும்பவும் பலமுறைகள் படித்து ஞாபகத்தில் வைக்க முயற்சிக்கிறேன்.பாடம் படிப்பதற்கு எளிமையாக கொடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றி.
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 29. /////Jack Sparrow said...
  rasi chakrathil 2,7,8 suthamaga ulla boy/girl can be matched with same 2,7,8 suthamaga ulla boy/girl. aanal ade rasiyil 2,7,8 suthamaga irundu,navamsathil 7 & 8 malefics irundhal ...can it be matched?/////

  ராசிக்கு ஒருமுறை சுத்தம் பார்ப்பேன். பிறகு நவாம்சத்தையும் வைத்து ஒருமுறை சுத்தம் பார்ப்பேன் என்று அடம் பிடிக்காமல், ராசியை மட்டும் வைத்துப்பாருங்கள். என்னைக்கேட்டால் தற்போது உள்ள நிலைமையில் பெண் கிடைப்பதே சிரமம். பெண்கிடைத்தால் ஆண்டவன்மேல் பாரத்தைப்போட்டுவிட்டு, ஜாதகம் பார்க்கமலேயே திருமணத்தை முடியுங்கள் - இளமைக் காலம் முடியும் முன்பாக!

  ReplyDelete
 30. ///iyer said..
  அம்சமான பாடம் . . .
  நவாம்சம் பற்றியது . . .
  அது சரி . .
  எல்லா கிரகங்களும் ஒரே ராசியில் இருக்காது என முன்னர் கேள்விக்கு பதில் அளித்த ஆசிரியரே . . .
  இப்போ வந்த இப்படி ஒரு சிந்தனை..
  ஒரு ராசியில் ஒரே ஒரு கிரகம் மட்டும் இருக்கும் ஜாதகம் உண்டோ..?
  அதாவது 12 கட்டத்தில் 9 கட்டங்களில் 9 கிரகங்கள் தனித்தனியாக .
  இது பற்றி யோகமோ . . தோஷமோ பார்த்தறியவில்லையே . /////.

  ராகு & கேதுவை மறந்துவிட்டீர்களே! அவர்களைத் தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் தனித்தனி வீடுகளில் நீங்கள் சொல்வதுபோல இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்து - அதுவும் தொடர்ந்து இருந்தால் அதற்குக் கிரக மாலை யோகம் என்று பெயர். நல்ல யோகம் அது. அதைப் பற்றி முன்பு எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது. தேடிப்பிடித்துப்படியுங்கள்

  ReplyDelete
 31. //////RameshVeluswami said...
  Good Morning Sir,
  1.In Rasi a planet has 3/2 parals but in navamsha it is his own house . then what is the outcome sir.//////

  பரல்களை வைத்து அலசும் பலன்கள் சரியாக இருக்கும். பரல்களையே கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  2.What is effect of mutual exchange between friendly planets? eg: guru with mars [naturally guru is considered as benefic and mars as malefic but they are friendly planets]

  பரிவர்த்தனை யோகம் பற்றிய பாடம் பதிவில் உள்ளது. தேடிப் பிடித்துப் படியுங்கள்!

  ReplyDelete
 32. //////Vaalga valamudan-Saravanan said...
  வாத்தியார் அவர்களுக்கு,
  ஓரு ஆட்சி, உச்சம் பெற்ற கிரகத்துடன் ராகு/கேது சேரும் போது அல்லது பார்வையில் இருக்கும் போது, அந்த கிரகங்கள் எத்தகைய பலன்களை கொடுக்கும்?
  ந‌ன்றி/////

  ஆட்சி அல்லது உச்சம் பெற்றதன் வலிமை குறையும் அல்லது அடிபட்டுப்போகும்!

  ReplyDelete
 33. /////Arul said...
  ஐயா!!!
  பாடம் தெள்ளத்தெளிவாக இருந்தது. மிக்க நன்றி.../////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 34. /////Manikandan said...
  அருமையான பாடம். நவாம்சம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது.
  இருந்தும் ஒரு ஐயம் .
  நவாம்சத்தில் மறைவு ஸ்தானங்களை (6,8,12) எப்படி கணக்கிட வேண்டும்? இராசி லக்கினத்தை எடுத்து கொள்ள வேண்டுமா? அல்லது நவாம்ச லக்கினத்தில் இருந்து எண்ண வேண்டுமா? For Example ராசியில் விருச்ஹக லக்கினம். அம்சத்தில் கும்ப லக்கினம். அம்சத்தில் கும்ப லக்கினத்திற்கு 6 -ல் (கடகத்தில்) குரு. இந்த அமைபிற்கு குரு மறைவு பெற்று உள்ளார?
  நன்றிகளுடன்
  S Manikandan/////

  நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். ராசியில் மறைவு ஸ்தானம், பிறகு அம்சத்திற்கு ஒருமுறை மறைவு ஸ்தானம் என்று ஏன் குழம்பிக்கொள்கிறீர்கள்?

  ReplyDelete
 35. ///////kubendiran said...
  சார்.,
  நீங்கள் நவாம்சம் பற்றி எழுதியது .மிக மிக நன்றாக இருந்தது . எனது பொது கேள்விகள் .
  1 . வர்கோத்தமம் பெற்ற தீய கிரகங்கள் கூட நன்மை மட்டுமே செய்யுமா.///////

  தீய கிரகங்கள் எப்படி நன்மை செய்யும்?
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  /////2 . ராசியல் கிரகங்களின் பார்வை முக்கியமா நவாம்சத்தில் முக்கியமா, எந்த பார்வைக்கு முக்கியம் கொடுப்பது//////

  ராசியில் மட்டுமே பார்வை முக்கியம்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  ///// 3 . பாவம் சக்கரம் பற்றி எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்./////

  Border Birthகளுக்கு பாவச் சக்கரம் உதவியாக இருக்கும்
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 36. ///////லலித் said...
  அருமையான பாடம். ரொம்ப நாட்களாய் வகுப்புக்கு வரவில்லை. மன்னிக்கவும். இனி கிடைக்கும் நேரத்தில் பழைய பாடங்களை முடிக்க முயல்கிறேன்.
  - அன்புடன்,
  லலித்/////

  நல்லது. அப்படியே செய்யுங்கள்!

  ReplyDelete
 37. ////Vinodh said...
  nice blog...cheers/////

  நல்லது நன்றி நண்பரே!

  ReplyDelete
 38. ///கூடுதுறை said...
  நான் தான் முதல் வருகை//////

  கூடுதுறையாரே நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்கு முதல் பெஞ்சில் இடமுண்டு!

  ReplyDelete
 39. /////Loga said...
  Ayya,
  Padam nandraga purinthu, one general doubt
  Pengalukku 8th House Mangalya stahnamaga amaivathal anth idathai asupa stathnamage kollu mudiyuma...
  Nandri/////

  பெண்கள் ஜாதகத்திற்குப் பல விதிவிலக்குகள் உள்ளன. அதுபற்றிப் பின்னால் ஒரு தொடர் எழுத உள்ளேன்.
  பெண்களுக்கு 4ஆம் இடம் கற்பு ஸ்தானம். 8ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம்! பொறுத்திருந்து படியுங்கள்!

  ReplyDelete
 40. /////ananth said...
  மற்ற அம்சங்களுக்கு இல்லாத சிறப்பு நவாம்சத்திற்கு உண்டு. திருமண வாழ்க்கை மட்டுமல்லாமல் வேறு சில

  விஷயங்களுக்கும் இது பயன்படுகிறது. என் ஜாதகத்தில் லக்னம் வர்கோத்தமமாக இருக்கிறது. இதை விட வேறு

  எதுவும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. லக்னம் வர்கோத்தமமாக இருந்தால் அது அந்த ஜாதகனை

  ம்ருத்யுஞ்ஜய மந்திரம் போல் காத்து வரும் என்று படித்திருக்கிறேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று

  தெரியாது. ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை பல இக்கட்டுகளிலும் ஆபத்துகளிலும் இருந்து காத்து வருகிறது.

  இதை பல முறை நான் உணர்ந்திருக்கிறேன்.
  ராசிக்கு நவாம்சம் என்பது வீட்டிற்கு extension போன்றதுதான். Extensionனே வீடாக முடியாது. இது என்

  கருத்து மட்டுமே. Extensionஇல் Ex எடுத்து விட்டு tension ஆகி விடப் போகிறீர்கள்./////

  ஆமாம் வால் தலையாகாது!:-)))
  நான் டென்சன் ஆகமாட்டேன். ஊர்வசி..ஊர்வசி...டேக் இட் ஈஸி ஊர்வசி......என்று பாட்டுப் பாடும் ஆசாமி நான்.
  வருத்தம், கோபம், டென்சன் என்று எதையுமே அண்ட விட மாட்டேன். உங்கள் மொழியில் சொன்னால் அடித்து விரட்டி விடுவேன். என் மொழியில் சொன்னால், அவைகளை ஜகா வாங்க வைத்துவிடுவேன். அந்த அளவிற்கு மனம் பக்குவப்பட்டுவிட்டது. எல்லாம் அந்த மயில்வாகனத்தானின் அருள்!

  ReplyDelete
 41. //////Mayakkanna said...
  Yes Sir!
  Thanks./////

  உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 42. //////Pugazhenthi said...
  நவாம்சம் நன்றாக இருந்தது. நன்றி.////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 43. /////Sekar said...
  நவாம்சத்தில் லக்னத்தில் இருந்து எண்ணுவது கிடையாது என்று சொன்னதாக ஞாபகம். அப்படியென்றால்

  நவாம்சத்தில் ஏழாம் அதிபதி என்று சொல்கிறீர்களே ராசியின் ஏழாம் அதிபதியே நவாம்சத்தில் ஏழாம் அதிபதி

  என்று அர்த்தமா? அப்படியென்றால் நவம்சத்தின் லக்னத்திற்கு என்ன அர்த்தம் அய்யா/////

  ராசிக்கென்று ஒரு ஏழாம் அதிபதி, நவாம்சத்திற்கென்று ஒரு ஏழாம் அதிபதி என்று இரண்டு ஏழாம் அதிபதிகள் இல்லை. ராசியில் உள்ள ஏழாம் அதிபதி நவாம்சத்தில் எப்படி இருக்கிறார் என்று மட்டும் பாருங்கள். அதாவது ராசியில் நீசமாக இருப்பவர், நவாம்சத்தில் உச்சமாக இருக்க வாய்ப்பு உண்டு. பலன் தலைகீழாக மாறி ஏற்றம்பெற வாய்ப்பு உண்டு.

  ReplyDelete
 44. /////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Rasiyil viruchiga Lagnam- Guru 7il(Rishabam) and Navamsathil Simha Lagnam - Guru 7il(Kumbam)
  Rasiyil -10il Suriyan(Simam) and Navamsathil(Lagnadhibadhi)-10il Suiryan(Rishabam).
  What kind of effect sir.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman////

  நவாம்சம் ராசியின் விரிவாக்கம். ராசியில் இருக்கும் கிரகம் நவாம்சத்தில் ராசியில் இருப்பதைவிட வலிமையாக உள்ளதா? அல்லது வலிமை குறைந்து உள்ளதா என்று மட்டும் பாருங்கள். இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு லக்கினம், வீடுகள் என்று குழப்பிக்கொள்ளாதீர்கள்

  ReplyDelete
 45. /////kmr.krishnan said...
  நவாம்ச லக்னம் ராசி பற்றி விளக்க வேண்டும். அவற்றை அப்படியே விட்டு
  விட்டு, ராசியின் லக்னத்தையே ,ராசியையே நவாம்சத்திற்கும் என்று எடுத்துக்கொண்டு வீடுகளை எண்ண

  வேண்டுமோ?அப்படியென்றால் நவாம்சத்தில் லக்னம் 9 மடங்காக ஆக்கப்பட்டு பரிசோதனை

  பெறுவதில்லையா?பாடம் மிக நன்றாக உள்ளது.////

  நவாம்சம் ராசியின் விரிவாக்கம். ராசியில் இருக்கும் கிரகம் நவாம்சத்தில் ராசியில் இருப்பதைவிட வலிமையாக உள்ளதா? அல்லது வலிமை குறைந்து உள்ளதா என்று மட்டும் பார்க்க வேண்டும்!
  ராசிக்கென்று ஒரு ஏழாம் அதிபதி, நவாம்சத்திற்கென்று ஒரு ஏழாம் அதிபதி என்று இரண்டு ஏழாம் அதிபதிகள் இல்லை. ராசியில் உள்ள ஏழாம் அதிபதி நவாம்சத்தில் எப்படி இருக்கிறார் என்று மட்டும் பாருங்கள். அதாவது ராசியில் நீசமாக இருப்பவர், நவாம்சத்தில் உச்சமாக இருக்க வாய்ப்பு உண்டு. பலன் தலைகீழாக மாறி விடும்

  ராசியில் சிம்ம லக்கின ஜாதகன், நவாம்சத்திலும் சிம்ம லக்கினமாக இருந்தால், சிங்கம்போல தனித்தன்மையுடன் வல்லவனாக இருப்பான். அதே ஜாதகன் ராசியில் சிம்ம லக்கினமாகவும், நவாம்சத்தில் கும்ப லக்கினமாகவும் இருந்தால், நிறைகுடமாகவும் எல்லோராலும் விரும்பப்படுபவனாகவும் இருப்பான். லக்கினத்தைப் fine tuning செய்து கிடைப்பது நவாம்ச லக்கினம். நவாம்ச லக்கினத்தைவைத்துத்தான் ஜாதகனின் உண்மையான குணம் தெரியும்! உங்கள் கேள்விக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 46. ஆகா, அருமையான பதிவு, நிறைய செய்திகள், சற்றே கடினமாக உள்ளது புரிந்துகொள்ள.. மேலும் ஒரு முறை படிகின்றேன், புரிந்துகொள்ள...

  ReplyDelete
 47. ////Sabarinathan TA said...
  ஆகா, அருமையான பதிவு, நிறைய செய்திகள், சற்றே கடினமாக உள்ளது புரிந்துகொள்ள.. மேலும் ஒரு முறை படிகின்றேன், புரிந்துகொள்ள...////

  வழக்கம்போல எனது நடையில் எளிமையாகத்தானே எழுதியிருக்கிறேன் சுவாமி! ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com