+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கரும்பலகையில் வாத்தியார் கிறுக்கி வைத்தவை!
தலைப்பு: இருளும் ஒளியும்
ஒளி நிலைக்கும் சூரியன் இருக்கும்வரை
இருள் நிலைக்கும் ஒளி வரும்வரை
கற்றது நிலைக்கும் நினைவில் இருக்கும்வரை
பெற்றது நிலைக்கும் பேணிக் காக்கும்வரை
அன்பு நிலைக்கும் உள்ளம் உள்ளவரை
ஆசை நிலைக்கும் ஞானம் வரும்வரை
உரிமை நிலைக்கும் கடமையைச் செய்யும்வரை
உறவு நிலைக்கும் அன்பு இருக்கும்வரை
வறுமை நிலைக்கும் சோம்பி இருக்கும்வரை
பெருமை நிலைக்கும் பதவி இருக்கும்வரை
செல்வம் நிலைக்கும் அருமை தெரியும்வரை
செறுக்கு நிலைக்கும் தனிமை வரும்வரை
சிந்தனை சிறக்கும் எண்ணம் சிறக்கும்வரை
செயல் சிறக்கும் சிந்தனை சிறக்கும்வரை
விளைவு சிறக்கும் செயல் சிறக்கும்வரை
வாழ்வு சிறக்கும் விளைவு சிறக்கும்வரை
பண்பு நிலைக்கும் ஒழுக்கம் இருக்கும்வரை
பெயர் நிலைக்கும் நேர்மை இருக்கும்வரை
மகிழ்ச்சி நிலைக்கும் நிம்மதி இருக்கும்வரை
நிம்மதி நிலைக்கும் ஆசை இல்லாதவரை
பற்றுதல் நிலைக்கும் ஒற்றுமை உள்ளவரை
பயணம் தொடரும் பாதை முடியும்வரை
ஒற்றுமை நிலைக்கும் சொத்து இல்லாதவரை
உலகம் நிலைக்கும் உயிர் உள்ளவரை!
---------ஆக்கம்: SP.VR.சுப்பையா
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
8.5.10
Subscribe to:
Post Comments (Atom)
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDelete( கரும்பலகையில் வாத்தியார் கிறுக்கி
வைத்தவை! --அல்ல.
சபை அடக்கம்,தன்னடக்கம் என்று கூறுவார்களே அவ்வாறு
குறிப்பிட்டு ள்ளீர்கள்.)
"இருளும் ஒளியும்",-----கவிதை மிக மிக சிறப்பாக உள்ளது.
வரிகள் ஆரம்பிக்கும் சொற்களில்,வாழ்க்கையில் சிந்தித்து செயல்படுவதற்கு வேண்டிய அனைத்தும்
உள்ளது.மிகச்சரியான தேவையான அறிவுறைகள் நிறைந்துள்ளன.
* * ** * * * * * * * * * *"* *
ஒளி,இருள்,கற்றது,பெற்றது--
அன்பு,ஆசை,உரிமை,உறவு--
வறுமை,பெருமை,செல்வம்,செருக்கு--
சிந்தனை,செயல்,விளைவு,வாழ்வு--
பண்பு,பெயர்,மகிழ்ச்சி,நிம்மதி--
பற்றுதல்,பயணம்,ஒற்றுமை,உலகம்",--
--என்ற சொற்களுடன் வரிகள் ஆரம்பித்து,
"வரை" என எல்லா வரிகளும் முடிகிறது.
* * * * * * * * * * * * * * * * * *
தாங்கள் முயன்றால்,நல்ல கவிதைகளும்,
பாடல்களும் தருவதற்கு இயலும்.
கவிஞர் கண்ணதாசனின் கவிதை மற்றும் பாடல்களில் மிக
அதிகமான ஈர்ப்பும், ஈடுபாடுமுள்ள தாங்கள் கவிஞர் கண்ணதாசன்
அவர்களை மானசீக குருவாக ஏற்று கவிதை மற்றும்
பாடல்களை எழுதத் துவங்குங்கள்.வெற்றிகள் உண்டு.
தாங்கள் மேலும் பல பாடல்கள்,கவிதைகள் எங்களுக்குத் தருவதற்கு ஆசிகள் வழங்குமாறு தமிழ்க் கடவுளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-05-08
"பலே, பாண்டியா! பிள்ளை!நீர் ஓர் புலவன் ஐயமில்லை.." என்று மஹாகவி பாரதியார் நாமக்கல் கவிஞரைப் பாராட்டினாராம்.தாங்களும் ஓரு கவிஞரே!
ReplyDeleteDear Sir!
ReplyDeleteVanakkam.
Vanakam sir,
ReplyDeletevery nice writing with good meanings...neegna vanthu eluthinathu nalla iruku sir~
thanks
thanuja
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
( கரும்பலகையில் வாத்தியார் கிறுக்கி வைத்தவை! --அல்ல. சபை அடக்கம்,தன்னடக்கம் என்று கூறுவார்களே அவ்வாறு குறிப்பிட்டுள்ளீர்கள்.)
"இருளும் ஒளியும்",-----கவிதை மிக மிக சிறப்பாக உள்ளது.
வரிகள் ஆரம்பிக்கும் சொற்களில்,வாழ்க்கையில் சிந்தித்து செயல்படுவதற்கு வேண்டிய அனைத்தும்
உள்ளது.மிகச்சரியான தேவையான அறிவுறைகள் நிறைந்துள்ளன.
* * ** * * * * * * * * * *"* *
ஒளி,இருள்,கற்றது,பெற்றது-- அன்பு,ஆசை,உரிமை,உறவு-- வறுமை,பெருமை,செல்வம்,செருக்கு--
சிந்தனை,செயல்,விளைவு,வாழ்வு-- பண்பு,பெயர்,மகிழ்ச்சி,நிம்மதி-- பற்றுதல்,பயணம்,ஒற்றுமை,உலகம்",--
--என்ற சொற்களுடன் வரிகள் ஆரம்பித்து, "வரை" என எல்லா வரிகளும் முடிகிறது.
* * * * * * * * * * * * * * * * * *
தாங்கள் முயன்றால்,நல்ல கவிதைகளும், பாடல்களும் தருவதற்கு இயலும். கவிஞர் கண்ணதாசனின் கவிதை மற்றும் பாடல்களில் மிக அதிகமான ஈர்ப்பும், ஈடுபாடுமுள்ள தாங்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களை மானசீக குருவாக ஏற்று கவிதை மற்றும் பாடல்களை எழுதத் துவங்குங்கள்.வெற்றிகள் உண்டு.
தாங்கள் மேலும் பல பாடல்கள்,கவிதைகள் எங்களுக்குத் தருவதற்கு ஆசிகள் வழங்குமாறு தமிழ்க் கடவுளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! பிரார்த்தனைக்கும் நன்றி உரித்தாகுக!
//////kmr.krishnan said...
ReplyDelete"பலே, பாண்டியா! பிள்ளை!நீர் ஓர் புலவன் ஐயமில்லை.." என்று மஹாகவி பாரதியார் நாமக்கல் கவிஞரைப் பாராட்டினாராம்.தாங்களும் ஓரு கவிஞரே!/////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார். முதலில் நன் ஒரு தீவிர வாசகன். அது மட்டுமே என்னுடைய தகுதி!
/////Mayakanna said...
ReplyDeleteDear Sir!
Vanakkam.////////
நல்லது. நன்றி மாயக்கண்ணா!
ஆசிரியர் அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துகள். சுவாமி ஓம்காரின் Blog யில் தாய் மரம் நடுவதை பற்றி செய்தி வந்துள்ளது தாங்களும் உதவி செய்யுங்கள்.
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅற்புதமான வரிகள் அத்தனையும்
அனுபவ நெறிகள்.
அணுக்களின் சேர்க்கையே இந்த பிரபஞ்சம் என்பது போல்
கருத்தாழமிக்க இந்த வரிகள் கூறும் அத்துனை
நெறிகளின் சேர்க்கையே மனித வாழ்க்கை என்று
அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
நன்றி குருவே!
nice one
ReplyDeleteநல்லதொரு சிந்தனை வளம் மிக்க படைப்பு!!!
ReplyDeleteநன்றி ஐயா...
//////Thanuja said...
ReplyDeleteVanakam sir,
very nice writing with good meanings...neegna vanthu eluthinathu nalla iruku sir~
thanks
thanuja/////
நல்லது. நன்றி சகோதரி!
/////rajesh said...
ReplyDeleteஆசிரியர் அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துகள். சுவாமி ஓம்காரின் Blog யில் தாய் மரம் நடுவதை பற்றி செய்தி வந்துள்ளது தாங்களும் உதவி செய்யுங்கள்.//////
நல்லது. பார்க்கிறேன்.
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
அற்புதமான வரிகள் அத்தனையும்
அனுபவ நெறிகள்.
அணுக்களின் சேர்க்கையே இந்த பிரபஞ்சம் என்பது போல்
கருத்தாழமிக்க இந்த வரிகள் கூறும் அத்துனை
நெறிகளின் சேர்க்கையே மனித வாழ்க்கை என்று
அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
நன்றி குருவே!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!
//////ramakrishnan said...
ReplyDeletenice one/////
நல்லது நன்றி!
////Blogger Arul said...
ReplyDeleteநல்லதொரு சிந்தனை வளம் மிக்க படைப்பு!!!
நன்றி ஐயா...////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
அருமை . . .
ReplyDeleteகண்ணதாசனின் . .
இரவும் வரும் பகலும் வரும்
பாடலைத்தான் சொல்லப்போறீங்கன்னு நெனைச்சேன் . . .
இன்னொரு கண்ணதாசன கண் முன்னாடி பாக்கறாப்பல இருந்துச்சு . .
சும்மா அசத்திட்டீங்க போங்க . .
எதெல்லாம் நிலைக்காதுன்னு நெகடிவ்வா சொல்லாம
பாசிடிவ்வாவே பல நெகடிவ் விஷயங்களை சொல்லி . . .
உணர வைச்சுட்டீங்க . . .
அய்யான்னா அய்யா தான் . .
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஎல்லா கிரகங்களுக்கும் 3, 6, 8 , 12 மறைவு இடங்கள் இல்லை என்று ஒரு இடத்தில் படித்தேன். எந்த கிரகங்களுக்கு எந்த இடங்கள் மறைவு இடங்கள் என்று தெலிவு படுத்துங்கள்
நன்றி
என் குருநாதருக்கு இந்த ஏகலைவனின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் பல....
ReplyDeleteஐயா...!
கண்ணதாசன் இறக்கவில்லை... அவர் படைப்புக்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்...
அவர்தம் படைப்புக்களில் மட்டுமல்ல.. தங்கள் (எங்கள்) உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்...
உலகம் நிலைக்கும் உயிர் உள்ளவரை...
தங்கள் பெயர் நிலைக்கும் இந்த உலகம் உள்ளவரை...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
ஷிம்லா, ஹி. பி.
Dear Sir
ReplyDeleteKarumpalagayil Asiriyar Kirukkinalum,
Vellai Ullathil Neengamal Irukkum Sir..
Nandri Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
கருத்தாழமும் நடையும் அசத்தல் !
ReplyDelete