மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.5.10

கண்ணதாசனும் கற்பகமூர்த்தியும்!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனும் கற்பகமூர்த்தியும்!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 3

Òகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
--------------------------------------------------------------------------------
அற்புத கீர்த்தி வேண்டின்
...ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
...நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
...களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
...பொய்யில்லை கண்ட உண்மை!


பிள்ளையார் பட்டி என்னும்
...பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
...உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
...திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில் பக்தர் தந்தை
...கற்பக மூர்த்தி போற்றி!
- கவியரசர் கண்ணதாசன்

இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இயற்றியது, கண்ணதாசன் அவர்கள் பிள்ளையார்பட்டியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். பிள்ளையார் சுயம்புவாய் ஒரு குகையில் எழுந்தருளியுள்ள பிள்ளையார்பட்டிக் கோவிலுக்குப் பலமுறை சென்று வந்தவர் அவர்.

தனது அனுபவத்தை கண்ணதாசன் அவர்கள் பாட்டில் வடித்துவைத்துள்ளார்.

இயற்கையாகக் குகையில் தோன்றியுள்ள கற்பகவிநாயகர் வலம்புரி விநாயகர். தும்பிக்கை வலப்புறம் வளைந்திருக்கும் நிலைப்பாடு. கற்பக விருட்சமாய் நமது துன்பங்களை துடைத்து எல்லா நலன்களையும் வழங்கக்கூடியவர் அவர். அதன் காரணமாகவே அவருக்குக் கற்பகவிநாயகர் என்னும் பெயர் உள்ளது.
அவர் தாள் பணிவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

24 comments:

 1. ஆசிரியருக்கு வணக்கம்,

  கற்பகமூர்த்தியையும், தொழுங்கால் அவர் அருளும் கீர்த்தியையும்
  மிக நேர்த்தியாக பாடிய கவியரசரின் புகழ் வாழ்கவே!

  நன்றி!

  ReplyDelete
 2. அய்யா பிள்ளையார்பட்டி செல்வது எப்படி?

  அன்புடன்
  கர்ண ரத்தினவேல்

  ReplyDelete
 3. ////Alasiam G said...
  ஆசிரியருக்கு வணக்கம்,
  கற்பகமூர்த்தியையும், தொழுங்கால் அவர் அருளும் கீர்த்தியையும்
  மிக நேர்த்தியாக பாடிய கவியரசரின் புகழ் வாழ்கவே!
  நன்றி!////

  நல்லது. நன்றி ஆலாசியம்!

  ReplyDelete
 4. ////Rathinavel.C said...
  அய்யா பிள்ளையார்பட்டி செல்வது எப்படி?
  அன்புடன்
  கர்ண ரத்தினவேல்///////

  பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள நகரம் காரைக்குடி. காரைக்குடிக்குச் சென்று அங்கிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார்பட்டிக்கு நிறையப்பேருந்துகள் உள்ளன - அதன் மூலம் செல்லலாம். பிள்ளையார் பட்டியிலேயே தேவஸ்தானக்காரர்கள் நிறைய தங்கும் விடுதிகளையும், அறைகளையும் கட்டியுள்ளார்கள். அதனால் தங்குமிடப்பிரச்சினை அங்கே இல்லை!

  சென்னையில் இருந்து காரைக்குடி 420 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது.
  திருச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது
  மதுரையில் இருந்து 80 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது

  காரைக்குடிக்கு நிறையத் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து ரயில் வசதியும் உள்ளது

  ReplyDelete
 5. ஐயா வணக்கம்.

  அடியேன் கண்ட கணபதியில்
  முதலில் வருபவர் பிள்ளையார் பட்டி அதனை போல் ஈட்சனாரியும் வரும்.

  காண்பதீர்க்கு ஆயிரம் கண்கள் வேண்டும் ஐயா! கண்கள் வேண்டும்!

  அத்தனைக்கும் அருமையாக பகவான் அருள் புரியும் இடம் என்பது தான் உண்மை.

  அமைதி என்றால் அத்தனைக்கும் அமைதியான ஸ்தலம்.

  ' அம்மா அப்பா தான் உலகம்'!

  என்று உலகிற்கு எடுத்துரைத்த மூல தெய்வம் அல்லவா!
  --

  ReplyDelete
 6. நல்ல தொடக்கம் எனக்கு...

  நல்ல பதிவு, நன்றிகள் அய்யா

  ReplyDelete
 7. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  கற்பகவிநாயகர் படம் மற்றும் கோபுரங்களுடன் இருக்கும் குளத்தின் படம் இரண்டுமே நன்றாக உள்ளது.

  கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடல் சுலபமாக யாவருக்கும் புரியும்படியாக உள்ளது.

  நன்றி!
  வணக்கம்.

  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-05-14

  ReplyDelete
 8. ////Mayakkanna said...
  ஐயா வணக்கம்.
  அடியேன் கண்ட கணபதியில் முதலில் வருபவர் பிள்ளையார் பட்டி அதனை போல் ஈச்சனாரியும் வரும்.
  காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் ஐயா! கண்கள் வேண்டும்!
  அத்தனைக்கும் அருமையாக பகவான் அருள் புரியும் இடம் என்பது தான் உண்மை.
  அமைதி என்றால் அத்தனைக்கும் அமைதியான ஸ்தலம்.
  ' அம்மா அப்பா தான் உலகம்'!
  என்று உலகிற்கு எடுத்துரைத்த மூல தெய்வம் அல்லவா!//////

  கணங்களுக்கு அதிபதி அவர்! நன்றி கண்ணன்!

  ReplyDelete
 9. /////Sabarinathan TA said...
  நல்ல தொடக்கம் எனக்கு...
  நல்ல பதிவு, நன்றிகள் அய்யா////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. //////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  கற்பகவிநாயகர் படம் மற்றும் கோபுரங்களுடன் இருக்கும் குளத்தின் படம் இரண்டுமே நன்றாக உள்ளது.
  கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடல் சுலபமாக யாவருக்கும் புரியும்படியாக உள்ளது.
  நன்றி!
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி////

  நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

  ReplyDelete
 11. அபிராமி பட்டர் எழுதியதைப் போன்றே இருக்கும் முதல் பாடல் வரிகள்.

  ReplyDelete
 12. மிக்க நன்றி,

  கோவிலில் இந்த பாடலை வைத்துள்ளார்கள். கற்பக பிள்ளையாரை பார்த்தாலே போதும். நெஞ்சம் நிறைந்துவிடும். புதுக்கோட்டை சொந்த ஊர் என்பதால் பிள்ளையார்பட்டி ஈசனை அடிக்கடி சந்தித்து விடுவேன். எந்த ஊருக்கு போனாலும் வருடம் ஒருமுறையாவது தவறாமல் போய்விடுவோம்.

  அதுவும் தங்கக்காப்பு அலங்காரத்தில் தான் தரிசனம் தரவேண்டும் என அடம்பிடிப்பேன். :))

  மே2 ஆம் தேதி கோவிலுக்குச் சென்றிருந்தேன். சங்கடஹர சதுர்த்தி தினமாதலால் அந்தி நேரத்தில் அய்யனின் அபிஷேகம் முடிந்து தங்கக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் தந்த பொழுது மனம் விம்மியது.

  ReplyDelete
 13. புதுக்கோட்டை, திருமயம் சென்று திருப்பத்தூர் செல்லும் சாலையில் நடுவில் வரும் வழியில் சென்றாலும் பிள்ளையார்பட்டி செல்லலாம். 45 நிமிடம் காரில்.அருகிலேயே குன்னக்குடியில் முருகன் தரிசனம்.

  புதுகை-திருப்பத்தூர் சென்று அங்கேயிருந்து காரைக்குடி செல்லும் பஸ்ஸில் பிள்ளையார்பட்டி செல்லலாம்.

  ReplyDelete
 14. அல்லல்போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
  தொல்லை போம் போகா துயரம் போம்
  நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக்கால்

  திருவண்ணாமலையில் உள்ள கணபதியைப் பொற்றும் இப்பாடலை
  என் தகப்பனார் பாட கேட்டிருக்கிறேன்.
  அருணகிரியார் பாடலோ, தெரியவில்லை அய்யா.

  ReplyDelete
 15. ayya. vinayaganai kumbitaal. avanai sikkena patrinaal. thadaigal agalum. arivu,nyanam, matrum avane gathi endru kidanthal...vazhvil endha thunbamum neramal,grahangalil irundu kaakum sakthi avaruku meegavum undu endru koorugindrargale....adu unnmaiya?

  ReplyDelete
 16. தஞ்சை‍ வல்லம் மார்க்கத்தில் மருத்துவக் க‌ல்லூரியில் இருந்து 2 கிலோமீட்டர்
  தூரத்தில் வரும் முதல் கிராமம் மற்றுமோர் பிள்ளையார்பட்டி.
  தஞ்சைப் பெரியந்ந்தி நாயக்கர் காலத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டது.அதைப்போன்றே ஒரேகல்லில் மிகப்பெரிய உருவமாக‌
  செதுக்கப்பட்டு தஞ்சைப் பெரியகோயிலில் வைப்பதற்கு கொண்டு வரும் வழியில், வண்டி அச்சு முறிந்து நடுச் சாலையில் அமர்ந்துவிட்டார் இந்தப் பிள்ளை‌யார்.6 அடி உயரமுள்ள மனிதன் பின்புறம் நின்று கையை உயர்த்தினால் வெளியில் கை தெரியாது. சுமார் 8 அடி உயரத்தில் அமர்ந்த திருக்கோலம் நயக்கர் காலத்திய வழுவழுப்பான கருங்கல் சிற்பம்.

  என் கேதுதசையின் போது வழிபாடு இல்லாமல் இருந்தவருக்கு நானே பூசை செய்யத் தூண்டினார். உட‌னே வாளமர் கோட்டை தவத்திரு காத்தைய்யா சுவாமிகள் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து நித்ய வழிபாட்டுக்கு
  ஏற்பாடு செய்துவிட்டார்கள்.இப்போது மண்டபம் கட்டப்பட்டுவிட்டது.

  ReplyDelete
 17. ////V.Radhakrishnan said...
  அபிராமி பட்டர் எழுதியதைப் போன்றே இருக்கும் முதல் பாடல் வரிகள்.////

  அதன் தாக்கத்தில் கவியரசர் எழுதியிருக்கலாம். நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. ////புதுகைத் தென்றல் said...
  மிக்க நன்றி,
  கோவிலில் இந்த பாடலை வைத்துள்ளார்கள். கற்பக பிள்ளையாரை பார்த்தாலே போதும். நெஞ்சம் நிறைந்துவிடும். புதுக்கோட்டை சொந்த ஊர் என்பதால் பிள்ளையார்பட்டி ஈசனை அடிக்கடி சந்தித்து விடுவேன். எந்த ஊருக்கு போனாலும் வருடம் ஒருமுறையாவது தவறாமல் போய்விடுவோம்.
  அதுவும் தங்கக்காப்பு அலங்காரத்தில் தான் தரிசனம் தரவேண்டும் என அடம்பிடிப்பேன். :))
  மே2 ஆம் தேதி கோவிலுக்குச் சென்றிருந்தேன். சங்கடஹர சதுர்த்தி தினமாதலால் அந்தி நேரத்தில் அய்யனின் அபிஷேகம் முடிந்து தங்கக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் தந்த பொழுது மனம் விம்மியது./////

  உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 19. ////புதுகைத் தென்றல் said...
  புதுக்கோட்டை, திருமயம் சென்று திருப்பத்தூர் செல்லும் சாலையில் நடுவில் வரும் வழியில் சென்றாலும் பிள்ளையார்பட்டி செல்லலாம். 45 நிமிடம் காரில்.அருகிலேயே குன்னக்குடியில் முருகன் தரிசனம்.
  புதுகை-திருப்பத்தூர் சென்று அங்கேயிருந்து காரைக்குடி செல்லும் பஸ்ஸில் பிள்ளையார்பட்டி செல்லலாம்.////

  என்னைப்போலவே நீங்களும் அந்தப் பகுதிக்காரர். அதனால் தடம் எல்லாம் அத்துபடியாகி உள்ளது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 20. /////ARASU said...
  அல்லல்போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
  தொல்லை போம் போகா துயரம் போம்
  நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியைக் கை தொழுதக்கால்
  திருவண்ணாமலையில் உள்ள கணபதியைப் பொற்றும் இப்பாடலை
  என் தகப்பனார் பாட கேட்டிருக்கிறேன்.
  அருணகிரியார் பாடலோ, தெரியவில்லை அய்யா.////

  விவேக சிந்தாமணியில் வரும் படல் இது!

  ReplyDelete
 21. ////Jack Sparrow said...
  ayya. vinayaganai kumbitaal. avanai sikkena patrinaal. thadaigal agalum. arivu,nyanam, matrum avane gathi endru kidanthal...vazhvil endha thunbamum neramal,grahangalil irundu kaakum sakthi avaruku meegavum undu endru koorugindrargale....adu unnmaiya?/////

  அனுபவஸ்தர்கள் கூறியது. தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளலாம்!

  ReplyDelete
 22. ////kmr.krishnan said...
  தஞ்சை‍ வல்லம் மார்க்கத்தில் மருத்துவக் க‌ல்லூரியில் இருந்து 2 கிலோமீட்டர்
  தூரத்தில் வரும் முதல் கிராமம் மற்றுமோர் பிள்ளையார்பட்டி.
  தஞ்சைப் பெரியந்ந்தி நாயக்கர் காலத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டது.அதைப்போன்றே ஒரேகல்லில் மிகப்பெரிய உருவமாக‌ செதுக்கப்பட்டு தஞ்சைப் பெரியகோயிலில் வைப்பதற்கு கொண்டு வரும் வழியில், வண்டி அச்சு முறிந்து நடுச் சாலையில் அமர்ந்துவிட்டார் இந்தப் பிள்ளை‌யார்.6 அடி உயரமுள்ள மனிதன் பின்புறம் நின்று கையை உயர்த்தினால் வெளியில் கை தெரியாது. சுமார் 8 அடி உயரத்தில் அமர்ந்த திருக்கோலம் நயக்கர் காலத்திய வழுவழுப்பான கருங்கல் சிற்பம்.
  என் கேதுதசையின் போது வழிபாடு இல்லாமல் இருந்தவருக்கு நானே பூசை செய்யத் தூண்டினார். உட‌னே வாளமர் கோட்டை தவத்திரு காத்தைய்யா சுவாமிகள் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து நித்ய வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.இப்போது மண்டபம் கட்டப்பட்டுவிட்டது.//////

  அடுத்தமுறை தஞ்சைக்கு வரும்போது சென்று வணங்க வேண்டியதுதான். தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
  கேது திசைக்கு வணங்க வேண்டிய தெய்வம் கணபதிதான்!

  ReplyDelete
 23. கோவை செம்மொழி மாநாட்டில் சந்திப்போம், அண்ணா!

  கற்பகக் களிறின் கருணையால்
  தமிழுக்கும், கோவைக்கும் நல்லது
  நடக்கட்டும்.

  தமிழின், தொல்காப்பியனின்
  முக்கியமான கண்டுபிடிப்பு புள்ளி.
  தமிழ் கணினியில் ஏறவும், இந்தியர் பூஜ்யம் அத்தோடு தொடர்புடைய தசமக் கணக்குமுறை (டெசிமல் நொட்டேசன்) கண்டறியப் புள்ளி முக்கியம்.

  புள்ளியின் மூலம் காண பிள்ளையார்பட்டிக் கணபதி
  ஒரு காரணம் ஆவார்.
  படிக்க ஐராவதம் மகாதேவன் கட்டுரை:
  புள்ளி தந்த பிள்ளையார்
  http://www.varalaaru.com/Default.asp?articleid=607

  அன்புடன்,
  நா. கணேசன்

  ReplyDelete
 24. ////நா. கணேசன் said...
  கோவை செம்மொழி மாநாட்டில் சந்திப்போம், அண்ணா!
  கற்பகக் களிறின் கருணையால்
  தமிழுக்கும், கோவைக்கும் நல்லது
  நடக்கட்டும்.
  தமிழின், தொல்காப்பியனின்
  முக்கியமான கண்டுபிடிப்பு புள்ளி.
  தமிழ் கணினியில் ஏறவும், இந்தியர் பூஜ்யம் அத்தோடு தொடர்புடைய தசமக் கணக்குமுறை (டெசிமல் நொட்டேசன்) கண்டறியப் புள்ளி முக்கியம்.
  புள்ளியின் மூலம் காண பிள்ளையார்பட்டிக் கணபதி
  ஒரு காரணம் ஆவார்.
  படிக்க ஐராவதம் மகாதேவன் கட்டுரை:
  புள்ளி தந்த பிள்ளையார்
  http://www.varalaaru.com/Default.asp?articleid=607
  அன்புடன்,
  நா. கணேசன்/////

  கணேசன் சார், நானும் மிக்க ஆவலாக உள்ளேன். சந்திப்போம்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com