மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

28.5.10

நம் கடன் எப்போது தீரும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் கடன் எப்போது தீரும்?

கவியரசர் கண்ணதாசன்: திருமாலின் பெருமைகளைப் பாடியது (2)

வைஷ்ணவத் தலங்களில் மிகவும் பெருமை வாய்ந்ததும், அதிகமான பக்தர்களை ஈர்க்கும் தன்மையுடையதும், எது என்று பார்த்தால் நம் மனதில் மின்னலாக இரண்டு இடங்கள் தென்படும்.

ஒன்று திருமலை என்று புகழப்பெறும் திருப்பதி. மற்றொன்று காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம்.

அவை இரண்டிலும் திருப்பதிக்கு மற்றுமொரு கூடுதலான சிறப்பு உண்டு. அகில இந்திய அளவில் எல்லா மாநிலத்தவரும் அதிகமான எண்ணிக்கையில் வந்து பெருமானைத் தரிசிச்துவிட்டுச் செல்வதால் நமது நாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் முதலிடம் என்ற பெருமையைக் கொண்டது திருமலையில்
உள்ள ஆலயம்!

பெருமாள் சக்ரதாரியாக, நின்ற தோற்றத்துடன் தன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் திருப்பதிக்குச் சென்று திரும்புபவர்கள் மனத்திருப்தியடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் கூட ஒரு முறை திருமலை சென்றுவந்தால், ஈடுபாடு கொள்ளத் துவங்கிவிடுவார்கள். பெருமானின்
வலிமை அப்படி!

அதைத்தான் நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்பார்கள்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் அந்தக் கருத்தை வலியுறுத்தி ஒரு பாடல் எழுதியுள்ளார்.

பாட்டைப் பாருங்கள்:
--------------------------------------
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா - உந்தன்
விருப்பம் கூடுமடா - நீ
திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம்
தானே திறக்குமடா - உன்னை
தர்மம் அணைக்குமடா!....

(திருப்பதி)

ஊருக்கு மறைக்கும் உண்மைக ளெல்லாம்
வேங்கடம் அறியுமடா - அந்த
வேங்கடம் அறியுமடா - நீ
உள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால்
உன்கடன் தீருமடா - செல்வம்
உன்னிடம் சேருமடா!...

(திருப்பதி)

எரிமலை போலே ஆசை வந்தாலும்
திருமலை தணிக்குமடா - நெஞ்சில்
சமநிலை கிடைக்குமடா - உன்
எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும்
நன்மைகள் நடக்குமடா - உள்ளம்
நல்லதே நினைக்குமடா!....

(திருப்பதி)

அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும்
வெங்கடேஸ்வரா!
சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும்
வெங்கடேஸ்வரா!
தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும்
வெங்கடேஸ்வரா! வெங்கடேஸ்வரா!...

(திருப்பதி)

படம்: மூன்று தெய்வங்கள் - வருடம் 1971
----------------------------------------------------------------------
நாம் நினைக்கின்ற நல்ல காரியங்கள் உடனே கைகூடும் என்ற பொருளில் திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம் தானே திறக்குமடா என்று சொன்னதோடு உன்னைத் தர்மம் அணைக்குமடா என்றும் சொன்னார் பாருங்கள் அது ஒரு சிறப்பு.

எதையும் வேங்கடத்தானிடம் மறைக்காமல் உள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால் உன்னிடம் செல்வம் சேருமடா என்று செல்வம் சேர்வதற்குரிய வழியைச் சொன்னதும் ஒரு சிறப்பு.

எரிமலை போலே ஆசை வந்தாலும் திருமலை தணிக்குமடா என்று சொன்னதோடு உன் நெஞ்சில் அளவோடு ஆசை கொள்ளும் சமநிலை கிடைக்கும் என்றும் சொன்னார் பாருங்கள் அதுவும் ஒரு சிறப்பு

இத்தனை சிறப்புக்களையும் உடையது அந்தப் பாடல் என்பதால், அதை இன்று பதிவு செய்தேன்.
--------------------------------------------------
எல்லாமே பாடல்கள்களாகவே உள்ளனவே, பஜனையில் பெருமானின் நாமங்களை மனமுருகிப் பாடும்படியாக பஜனைப் பாடல் வரிகளைக் கவியரசர் எழுதியுள்ளாரா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்காகக் கீழே ஒரு பாடலைக் கொடுத்துள்ளேன்
------------------------------------------------
பக்தரைக் காக்கும் பாண்டுரங்கா
பரந்தாமா ஹரே பாண்டுரங்கா
முக்திக் கடலே பாண்டுரங்கா
மூலப் பொருளே பாண்டுரங்கா
ஜே, ஜே விட்டல் பாண்டுரங்கா
ஜே, ஜே கிருஷ்ணா பாண்டுரங்கா
கிருஷ்ண ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கிருஷ்ண ஹரே ஹரே பாண்டுரங்கா
ஜே, ஜே விட்டல் பாண்டுரங்கா

படம் - கண்ணே பாப்பா - வருடம் 1969
------------------------------------
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவியரசர் அவர்கள் மிகவும் அற்புதமாக எழுதிய கண்ணன் பாடல்களை அடுத்தவாரம் முதல் வாரம் 2 பகுதிகளாகப் பதிவிடுவதாக உள்ளேன்.

கண்ணனிடம் காதல் கொண்ட மங்கை பாடுவதாக உள்ள பாடலும் உள்ளது. கண்ணன் மீது நேயம் கொண்ட பக்தை பாடும் பாடலும் உள்ளது. கண்ணனிடம் தன் மனக்குறையைச் சொல்லிக் கலங்கும் மங்கையின் பாடலும் உள்ளது.

மொத்தம் பதினோரு பாடல்கள். எல்லாவற்றையும் முழுமையாகத் தருவதாக உள்ளேன்.

அந்தப் பாடல்களில் உள்ள பெருஞ்சிறப்பு என்னவென்றால், தேனினும் இனிய தன் குரலால் சகோதரி பி. சுசிலா அவர்களால் பாடப் பெற்றவை அந்த பதினோரு பாடல்களும்.

என்னவொரு உணர்ச்சிப் பிரவாகத்துடன் அவர் பாடியிருக்கிறார் தெரியுமா? பதினொன்றையும் ஒன்றாகக் கேட்டால் கிறங்கிப் போய்விடுவோம்.

இசையமைத்தவர்கள் வெவ்வேறு இசை மேதைகள் என்றாலும், கவியரசரின் சுகமான, இதமான, கருத்தான, முத்தான,வரிகளுக்கும் சுசீலா அம்மையாரின் குரலிற்கும் அப்படியொரு அற்புதமான பொருத்தம்.

இனி அப்படியெல்லாம் பாடல்கள் புதிதாக ஏதாவது வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்றால் சத்தியமாக என் ஆயுசிற்குக் கிடையாது என்று தீர்க்கமாகச் சொல்வேன்.

என் இசையுலக ரசனையைப் பொறுத்தவரை இந்த ஜென்மசாபல்யம் நீங்குவதற்கு அந்தப் பதினோரு பாடல்களே போதும் என்றால் அது மிகையல்ல!
----------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

22 comments:

kmr.krishnan said...

திருப்ப‌தி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது முக்காலும் உண்மை. என் பெண்கள் திருமணம் பல ஜாதகங்களைப் பார்த்தும் தள்ளிக்கொண்டே போகும்போது திருப்பதி சென்று வேண்டிக்கொண்டு,வந்தவுடன் திருமணங்கள் நிச்ச‌யம் ஆயின!ஒருமுறை அல்ல. 3 முறை. கவிஞர் பாடியுள்ளது உண்மை, உண்மை, முக்காலும் உண்மை. வணக்கம்!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Unmaithan Sir...Thirupathiyai ninaithale thirupam varum aiyya...

Valvil Ella Valamum Pera Tirupathiyai Vanaguvom.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
திருப்ப‌தி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது முக்காலும் உண்மை. என் பெண்கள் திருமணம் பல ஜாதகங்களைப் பார்த்தும் தள்ளிக்கொண்டே போகும்போது திருப்பதி சென்று வேண்டிக்கொண்டு,வந்தவுடன் திருமணங்கள் நிச்ச‌யம் ஆயின!ஒருமுறை அல்ல. 3 முறை. கவிஞர் பாடியுள்ளது உண்மை, உண்மை, முக்காலும் உண்மை. வணக்கம்!/////

கவியரசரும் தன் அனுபவத்தைத்தான் பாட்டாகச் சொல்லியுள்ளார். நீங்களும் உங்கள் அனுபவத்தைச் சொல்லியுள்ளீர்கள். நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Unmaithan Sir...Thirupathiyai ninaithale thirupam varum aiyya...
Valvil Ella Valamum Pera Tirupathiyai Vanaguvom.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நல்லது. நன்றி ராஜாராமன்!

Thanuja said...

Vanakam sir,
Thirpathiku kudumbathoda visit panna virupam sir enakku, nalla thirupam varumenda visit panna thaan vendum....evaluvu prepareda pokavenum sir inga vanthu porathenda?

SP.VR. SUBBAIYA said...

///Thanuja said...
Vanakam sir,
Thirpathiku kudumbathoda visit panna virupam sir enakku, nalla thirupam varumenda visit panna thaan vendum....evaluvu prepareda pokavenum sir inga vanthu porathenda?////

அதனாலென்ன? அங்கிருந்தபடியே பிரார்த்தனை செய்யுங்கள்! அருள்புரிவார் அவர்!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

நவக் கிரக ஸ்தலங்களில் திருப்பதி சந்திரன் ஸ்தலமாக உள்ளதால்,முதலில் திருப்பதிக்கு சென்ற பின்பு--ராகு ,கேது ஸ்தலமான காலஹஸ்திக்கும்
சென்று வரவேண்டுமென பெரியோர்கள் கூறுவது உண்டு.

திருப்பதியில் கொங்கணவர் என்ற சித்தர் சமாதிஉள்ளது.அது எந்த இடத்தில இருக்கிறது என்று கேட்டால் அங்கு சரியாக யாருக்கும் கூற இயலவில்லை. அல்லது சொல்வதற்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம்.
நாங்கள் திருப்பதிக்கு செல்லும்போது ஒவ்வொரு முறையும் விசாரிப்பது உண்டு.
அதன்படி, அங்குள்ள குளத்திற்கு மேற்குப் பக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வராகசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளதாக சிலர் சொன்னார்கள்,அதனால் தான் முதலில் அங்கு பூஜை முடித்துவிட்டு பிறகுதான்,அருள்மிகு ஸ்ரீ வெங்கடாச்சலபதிக்கு பூஜை நடை பெறுவதாகவும் தெரிவித்தனர்.
வேறு சிலர்,சிவன் கோவிலில் சண்டிகேஸ்வரர் உள்ளதுபோல் அந்த இடத்தில் கொங்கணவர் சித்தர் சமாதிஉள்ளது என்றும்,--[திருப்பதியில் கோவில் உண்டி இருக்கும் இடத்திற்கு நேர் மேற்குப்பக்கத்தில் உள்ளது, இப்போது அங்கு போக முடியாதவாறு கிரில் அமைத்து பூட்டி வைத்துள்ளனர்.அங்கு இருப்பவரிடம் கேட்டால் சில சமயம் திறந்து விடுவார்.அவ்வாறு எங்களால் பார்க்க முடிந்தது.அங்கிருக்கும் உருவச்சிலை வலது காலை இடது காலின் துடை மீது வைத்துக்கொண்டு சுவாமிப் பக்கம் பார்க்கும் நிலையில் உட்கார்ந்து இருக்கும்.]சமாதியில் இருந்து சித்தர் பார்வை சுவாமியின் பாதத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதால்,திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்யும் போது சுவாமியின் பாதப் பகுதியை நன்கு தரிசிக்க வேண்டும் எனவும்,அதனால் தான் சுவாமியும் தனது பாதத்தை வலது கையால் காண்பிக்கிறார் என்றும் கூறினர்.------------
திருப்பதியில் கொங்கணவர்,
காலஹஸ்தியில் மலையின் மீது, கண்ணப்பர் நாயனார் சமாதி.
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ இராமானுஜர் சமாதி உள்ளது.

புகழ் பெற்ற ஸ்தலங்கள் யாவற்றிலும் சித்தர்கள் சமாதிகள் காண முடிகின்றது.
ஜோதிடம்,மந்திரம்,மருத்துவம் நமக்கு அளித்த (தொடர்புடைய) சித்தர்களின்
வரலாற்றினையும்,
இதர நவக் கிரக ஸ்தலங்களின் வரலாற்றினையும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பாடங்களின் மத்தியில் ஒவ்வொரு நாளைக்கு ஒன்றாக பதிவேற்றம் செய்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.தங்களின் மூலமாக எழுதப் பெற்று அதனைப் படிக்கும் போது திருப்தியும்,மன நிறைவும் கிடைக்கிறது.

நவக்கிரக ஸ்தலங்கள் :-- - - - - - - -

சூரியன்------------ கோனார்க்,(ஒரிஸ்ஸா)
சந்திரன் -----------திருப்பதி,(ஆந்திரா)
செவ்வாய்--------பழனி,
புதன்-----------------மதுரை,
குரு------------------திருச்செந்தூர்,
சுக்கிரன்-----------ஸ்ரீ ரங்கம்,
சனீஸ்வரன்----திருநள்ளார்,
ராகு,கேது------- கால ஹஸ்தி (ஆந்திரா)

* * * * * * * ** * * * * * * * * * * *
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் ஏற்படும்,
கவியரசர் கண்ணதாசன் அவர்களும் அந்தக் கருத்தை வலியுறுத்தி எழுதி
யுள்ள அந்தப் பாடல் என்றும் மனதில் நிலத்து நிற்கும் பாடல்; இதனை நினைவூட்டும் .
தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-05-28

ananth said...

இந்த வரிசையில் எனக்குப் பிடித்த ஒரு சில பாடல்கள் 1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா, 2) கோபியர் கொஞ்சும் ரமணா கோபாலக் கிருஷ்ணா 3) அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் பாரதத்தில் கண்ணன் 4) கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா. இன்னும் இருக்கிறது, உதாரணத்திற்கு சில போதுமானது.

minorwall said...

ஆனந்த் அவர்கள் சொல்லியிருப்பதுபோலே எனக்குப் பிடித்த கண்ணன் பாடல்கள் சில:
கண்ணா வருவாயா?மீரா கேட்கிறாள்...
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே..
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..
கண்ணா கண்ணா நீ எங்கே?ராதா எங்கே நான் எங்கே?
கண்ணனும் பெருமாள் வடிவம்தான் என்பதால் அடுத்த பதிவு Mr .kannan
the great அவர்களைப் பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..ஆசிரியரின் பக்தித் தொடருக்கு நடுவே பலப்பல சுவையான சூடான கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்த தொடராகவும் மாறட்டுமே..அந்த 70 -80
season பாடல்களில் இருந்த கண்ணன் ராதாவை கொண்டு எழுதப்பட்ட romance பாடல்களின் உணர்ச்சித்தாக்கங்கள் ஆண்டாள் திருப்பாவை சுரங்களிலே இருந்திருக்குமா என்பது சந்தேகமே..(ஆண்டாள் திருப்பாவை நான் கேட்டதில்லை.)

Thanjavooraan said...

தங்கள் வகுப்பு அறையில் என்னுடைய "பாரதி இலக்கியப் பயிலகம்" மூலம் வெளியிட்ட அஞ்சல் வழிப் பாடங்கள் குறித்து குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. பாரதி பாடங்களை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்பதே எனது விருப்பம். மேலும் கம்பராமாயணம் முழுவதும் வெளியிட்டிருக்கும் செய்தியையும், நாட்டுக்குழைத்த நல்லவர்களான நமது தமிழ்நாட்டுத் தியாகிகள் சுமார் 85 பேர் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் வெளியிட்டிருக்கிறேன். இது குறித்த உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றி.
தங்கள், வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.
http://ilakkiyapayilagam.blogspot.com. http://kambaramayanam-thanjavooraan.blogspot.com http://privarsh.blogspot.com

SP.VR. SUBBAIYA said...

////////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
நவக் கிரக ஸ்தலங்களில் திருப்பதி சந்திரன் ஸ்தலமாக உள்ளதால்,முதலில் திருப்பதிக்கு சென்ற பின்பு--ராகு ,கேது ஸ்தலமான காலஹஸ்திக்கும்
சென்று வரவேண்டுமென பெரியோர்கள் கூறுவது உண்டு.
திருப்பதியில் கொங்கணவர் என்ற சித்தர் சமாதிஉள்ளது.அது எந்த இடத்தில இருக்கிறது என்று கேட்டால் அங்கு சரியாக யாருக்கும் கூற இயலவில்லை. அல்லது சொல்வதற்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம்.
நாங்கள் திருப்பதிக்கு செல்லும்போது ஒவ்வொரு முறையும் விசாரிப்பது உண்டு.
அதன்படி, அங்குள்ள குளத்திற்கு மேற்குப் பக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வராகசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளதாக சிலர் சொன்னார்கள்,அதனால் தான் முதலில் அங்கு பூஜை முடித்துவிட்டு பிறகுதான்,அருள்மிகு ஸ்ரீ வெங்கடாச்சலபதிக்கு பூஜை நடை பெறுவதாகவும் தெரிவித்தனர்.
வேறு சிலர்,சிவன் கோவிலில் சண்டிகேஸ்வரர் உள்ளதுபோல் அந்த இடத்தில் கொங்கணவர் சித்தர் சமாதிஉள்ளது என்றும்,--[திருப்பதியில் கோவில் உண்டி இருக்கும் இடத்திற்கு நேர் மேற்குப்பக்கத்தில் உள்ளது, இப்போது அங்கு போக முடியாதவாறு கிரில் அமைத்து பூட்டி வைத்துள்ளனர்.அங்கு இருப்பவரிடம் கேட்டால் சில சமயம் திறந்து விடுவார்.அவ்வாறு எங்களால் பார்க்க முடிந்தது.அங்கிருக்கும் உருவச்சிலை வலது காலை இடது காலின் துடை மீது வைத்துக்கொண்டு சுவாமிப் பக்கம் பார்க்கும் நிலையில் உட்கார்ந்து இருக்கும்.]சமாதியில் இருந்து சித்தர் பார்வை சுவாமியின் பாதத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதால்,திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்யும் போது சுவாமியின் பாதப் பகுதியை நன்கு தரிசிக்க வேண்டும் எனவும்,அதனால் தான் சுவாமியும் தனது பாதத்தை வலது கையால் காண்பிக்கிறார் என்றும் கூறினர்.------------
திருப்பதியில் கொங்கணவர்,
காலஹஸ்தியில் மலையின் மீது, கண்ணப்பர் நாயனார் சமாதி.
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ இராமானுஜர் சமாதி உள்ளது.
புகழ் பெற்ற ஸ்தலங்கள் யாவற்றிலும் சித்தர்கள் சமாதிகள் காண முடிகின்றது.
ஜோதிடம்,மந்திரம்,மருத்துவம் நமக்கு அளித்த (தொடர்புடைய) சித்தர்களின்
வரலாற்றினையும்,
இதர நவக் கிரக ஸ்தலங்களின் வரலாற்றினையும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பாடங்களின் மத்தியில் ஒவ்வொரு நாளைக்கு ஒன்றாக பதிவேற்றம் செய்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.தங்களின் மூலமாக எழுதப் பெற்று அதனைப் படிக்கும் போது திருப்தியும்,மன நிறைவும் கிடைக்கிறது.
நவக்கிரக ஸ்தலங்கள் :-- - - - - - - -
சூரியன்------------ கோனார்க்,(ஒரிஸ்ஸா)
சந்திரன் -----------திருப்பதி,(ஆந்திரா)
செவ்வாய்--------பழனி,
புதன்-----------------மதுரை,
குரு------------------திருச்செந்தூர்,
சுக்கிரன்-----------ஸ்ரீ ரங்கம்,
சனீஸ்வரன்----திருநள்ளார்,
ராகு,கேது------- கால ஹஸ்தி (ஆந்திரா)
* * * * * * * ** * * * * * * * * * * *
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் ஏற்படும்,
கவியரசர் கண்ணதாசன் அவர்களும் அந்தக் கருத்தை வலியுறுத்தி எழுதி
யுள்ள அந்தப் பாடல் என்றும் மனதில் நிலத்து நிற்கும் பாடல்; இதனை நினைவூட்டும் .
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////////

உங்களுடைய அனுபவப் பகிர்விற்கும், அரிய தகவல்களுக்கும் நீண்ட.....பின்னூட்டத்திற்கும் நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////ananth said...
இந்த வரிசையில் எனக்குப் பிடித்த ஒரு சில பாடல்கள் 1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா, 2) கோபியர் கொஞ்சும் ரமணா கோபாலக் கிருஷ்ணா 3) அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் பாரதத்தில் கண்ணன் 4) கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா. இன்னும் இருக்கிறது, உதாரணத்திற்கு சில போதுமானது.///////

நீங்கள் குறிப்பிட்டுள்ள 4 பாடல்களுமே சிறப்பான பாடல்கள்தான்! நன்றி!

SP.VR. SUBBAIYA said...

///////minorwall said...
ஆனந்த் அவர்கள் சொல்லியிருப்பதுபோலே எனக்குப் பிடித்த கண்ணன் பாடல்கள் சில:
கண்ணா வருவாயா?மீரா கேட்கிறாள்...
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே..
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..
கண்ணா கண்ணா நீ எங்கே?ராதா எங்கே நான் எங்கே?
கண்ணனும் பெருமாள் வடிவம்தான் என்பதால் அடுத்த பதிவு Mr .kannan
the great அவர்களைப் பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..ஆசிரியரின் பக்தித் தொடருக்கு நடுவே பலப்பல சுவையான சூடான கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்த தொடராகவும் மாறட்டுமே..அந்த 70 -80
season பாடல்களில் இருந்த கண்ணன் ராதாவை கொண்டு எழுதப்பட்ட romance பாடல்களின் உணர்ச்சித்தாக்கங்கள் ஆண்டாள் திருப்பாவை சுரங்களிலே இருந்திருக்குமா என்பது சந்தேகமே..(ஆண்டாள் திருப்பாவை நான் கேட்டதில்லை.)///////////

ஆண்டாள் திருப்பாவையில் இல்லாத உணர்ச்சித் தாக்கங்களா? தேடிப்பிடித்துப் படித்துப்பாருங்கள் மைனர்!

SP.VR. SUBBAIYA said...

/////////Thanjavooraan said...
தங்கள் வகுப்பு அறையில் என்னுடைய "பாரதி இலக்கியப் பயிலகம்" மூலம் வெளியிட்ட அஞ்சல் வழிப் பாடங்கள் குறித்து குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. பாரதி பாடங்களை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்பதே எனது விருப்பம். மேலும் கம்பராமாயணம் முழுவதும் வெளியிட்டிருக்கும் செய்தியையும், நாட்டுக்குழைத்த நல்லவர்களான நமது தமிழ்நாட்டுத் தியாகிகள் சுமார் 85 பேர் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் வெளியிட்டிருக்கிறேன். இது குறித்த உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றி.
தங்கள், வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.
http://ilakkiyapayilagam.blogspot.com. http://kambaramayanam-thanjavooraan.blogspot.com http://privarsh.blogspot.com/////////

உங்களின் தமிழ் ஆர்வத்திற்கும், உங்களுடைய வயதிற்கும் தலை வணங்குகிறேன். உங்கள் பதிவுகளை முழுமையாகப் படித்துவிட்டு எனது கருத்தைச் சொல்கிறேன். நன்றி!

cs said...

ayya vanakkam.

thiruppathi malai vazhum venkatesha

endra paadal aalangudi somu

ezhuthiyathu enbathai theriviththuk

kolgiren.matrapadi ungal sevai

endrendrum thodara antha mayakannan

arul purivaanaaga!

by arjunchandarsingh@gmail.com

sarguru saba said...

திருப்ப‌தி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது முக்காலும் உண்மை
கவியரசரும் தன் அனுபவத்தைத்தான் பாட்டாகச் சொல்லியுள்ளார்

SP.VR. SUBBAIYA said...

////cs said...
ayya vanakkam.
thiruppathi malai vazhum venkatesha
endra paadal aalangudi somu
ezhuthiyathu enbathai theriviththuk
kolgiren.matrapadi ungal sevai
endrendrum thodara antha mayakannan
arul purivaanaaga!
by arjunchandarsingh@gmail.com

இந்தப் பதிவில் அந்தப் பாடல் இல்லையே சுவாமி!

SP.VR. SUBBAIYA said...

/////sarguru saba said...
திருப்ப‌தி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது முக்காலும் உண்மை
கவியரசரும் தன் அனுபவத்தைத்தான் பாட்டாகச் சொல்லியுள்ளார்///////

நல்லது. நன்றி நண்பரே!

minorwall said...

////cs said...
ayya vanakkam.
thiruppathi malai vazhum venkatesha
endra paadal aalangudi somu
ezhuthiyathu enbathai theriviththuk
kolgiren.matrapadi ungal sevai
endrendrum thodara antha mayakannan
arul purivaanaaga!
by arjunchandarsingh@gmail.com////
"திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" போன்ற பக்திப்பாடல்கள் தவிர "பொன்மகள் வந்தாள்", "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்..சுகம்..சுகம்.. " போன்ற பலப்பல பிரபல பாடல்களையும் எழுதிய கவிஞர்தான் ஆலங்குடி சோமு..கவியரசர் அளவுக்கு இவர் போன்ற கலைஞர்கள் நினைவில் கொள்ளப்படாமல் போனதற்கு என்ன காரணமோ (திரையுலக) அரசியலுக்கும் ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்..

SP.VR. SUBBAIYA said...

//////minorwall said...
////cs said...
ayya vanakkam.
thiruppathi malai vazhum venkatesha
endra paadal aalangudi somu
ezhuthiyathu enbathai theriviththuk
kolgiren.matrapadi ungal sevai
endrendrum thodara antha mayakannan
arul purivaanaaga!
by arjunchandarsingh@gmail.com////
"திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" போன்ற பக்திப்பாடல்கள் தவிர "பொன்மகள் வந்தாள்", "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்..சுகம்..சுகம்.. " போன்ற பலப்பல பிரபல பாடல்களையும் எழுதிய கவிஞர்தான் ஆலங்குடி சோமு..கவியரசர் அளவுக்கு இவர் போன்ற கலைஞர்கள் நினைவில் கொள்ளப்படாமல் போனதற்கு என்ன காரணமோ (திரையுலக) அரசியலுக்கும் ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்../////

யாரும் வேண்டுமென்று செய்வதில்லை! ஒவ்வொரு பாடலாசியருக்கும் தனித்தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். பாடல்களின் எண்ணிக்கையை வைத்து ரசிகர்களின் எண்ணிக்கையும் வேறுபடும் மைனர்! இன்றும் பட்டுக்கோட்டையாருக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?

cs said...

ayya vanakkam.,

aalangudi somu ezhuthiya padalil ondraana,
sabash meena endra padaththil varum
chiththiram pesuthadi T.M.S kuralil ketpathrkku migavum inimaiyaga irukkum.
thirumalai then kumari endra thirai padaththil varum anaiththu padalgalum ketpathrkku migavum inimaiyaga irukkum

SP.VR. SUBBAIYA said...

//////cs said...
ayya vanakkam.,
aalangudi somu ezhuthiya padalil ondraana,
sabash meena endra padaththil varum
chiththiram pesuthadi T.M.S kuralil ketpathrkku migavum inimaiyaga irukkum.
thirumalai then kumari endra thirai padaththil varum anaiththu padalgalum ketpathrkku migavum inimaiyaga irukkum////

ஆலங்குடியார் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!