மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.5.10

நோய்க்கான முதல் மருந்து எது?


வைத்தீஸ்வரன் கோவில் படம் ஒன்று!

வைத்தீஸ்வரன் கோவில் படம் இரண்டு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நோய்க்கான முதல் மருந்து எது?

வைத்தீஸ்வரன் கோவில்.

செவ்வாய் கிரகத்திற்கான ஸ்தலம்!

காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில்.

அங்கே உறையும் சிவனாரின் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்மனின் பெயர் தையல்நாயகி அம்மன். ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம்.

கோயில் அமைப்பு: நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

செவ்வாயின் நாயகன் தனக்கு ஏற்பட்ட தொழுநோயைப் (Leprosy) போக்கிக்கொள்ள இக்கோவிலில் உறையும் சிவனாரிடம் அடைக்கலம் அடைந்ததாகவும், நோய் நீங்கப்பெற்று உய்வு பெற்றதாகவும் வரலாறு. இறைவனுக்கு இங்கே வைத்தியநாதன் என்று பெயர்வந்ததற்கு முக்கிய காரணமே அந்நிகழ்வுதான்! அதை மனதில் கொள்க!

வரலாற்றை எல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் பதில் சொல்ல ஆளில்லை. ஆகவே அப்படியே நம்ப வேண்டும். அல்லது கடாசிவிட்டு நடையைக் கட்ட வேண்டும். அதை உங்கள் விருப்பம்போல் நீங்கள் செய்துகொள்ளலாம்.

இக்கோவிலில் உறையும் சிவபெருமானை மனமுருகி வேண்டுபவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட நோய் இருந்தாலும் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே நோய்களால் வாடுபவர்கள், இத்தலத்திற்கு சென்று வரலாம்.

திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு, தன் சகோதரியின் அறிவுரையின் பேரில் இக்கோவில்லுக்குச் சென்று வைத்தியசாமி நாதர் என்னும் பெயர் பெற்ற சிவனாரை வணங்க, அதிசயத் தக்க முறையில் வயிற்றுவலி நீங்கிக் குணம் பெற, அன்றிலிருந்து அவர் இக்கோவிலின் அதீத பக்தரானார் என்பதும் வரலாறு!

இங்கே குமரக் கடவுளுக்கு (அதாங்க, நம்ம வேலனுக்கு) அருமையானதொரு சந்நிதானம் உள்ளது. இங்கே உறையும் வேலனுக்கு செல்வமுத்துக்குமாரசுவாமி என்று பெயர்.

இங்கே கோவிலின் உட்புறம் உள்ள சித்த அமிர்ததீர்த்தம் என்னும் குளம் சக்தி வாய்ந்தது என்பது வரலாறு. எண்ணற்ற மகான்கள் நீராடிய பெருமையை உடையது. இராமபிரானே இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்கே நீராடிச் சென்றதாக ஒரு தலவரலாறும் உள்ளது.

வைத்தியத்திற்கு அதிபதியான தன்வந்திரி நாதருக்கும் இங்கே சன்னிதானம் உள்ளது.

கோவிலின் சிற்பங்களிலும், தூண்களிலும் , மண்டபங்களிலும் பல்லவர்காலச் சிற்பக்கலையின் சிறப்பைக் காணலாம்.

இக்கோவில்லுக்கு பக்தர்கள் காலம் காலமாக அளித்த தானங்களாலும், கொடைகளாலும், ஏராளமான செல்வமும், நிலங்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இப்போது அதன் நிலைமை (நிலங்களின் நிலமை - குத்தகைதாரர் களுக்கு வெளிச்சம்) சரியாகத் தெரியவில்லை!

சென்னை மைலாடுதுறை புகைவண்டிப்பாதையில், இக்கோவிலுக்கான நிறுத்தமும், இரயில் நிலையமும் உள்ளது. சிதம்பரத்தில் இருந்தும், மைலாடுதுறையில் இருந்தும் நிறைந்த பேருந்து வசதிகளும் உள்ளன. இந்த ஊரில் ஏராளமான தர்ம சத்திரங்களும் தங்கும் விடுதிகளும் உள்ளன.

இன்னொரு சிறப்பு. ஒரு காலத்தில் நாடி ஜோதிடம் என்னும் ஏட்டு ஜோதிடத்திற்குப் பெயர் பெற்ற ஊர் இது. உங்கள் கட்டைவிரல் ரேகையை மட்டும் கொடுத்தால் போதும். உங்கள் ஜாதகத்தை எழுதிக் கொடுத்து விடுவார்கள். ஓலைச் சுவடிகளை வைத்து அசத்தலாக உங்கள் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்திற்கும் பலன்களைச் சொல்லிவிடுவார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஓலைச் சுவடிகளை வைத்திருந்த குடும்பங்களுக்குள் ஏற்பட்ட வாரிசுச் சண்டைகளில் ஓலைச் சுவடிகளையும் பங்கு வைத்துக் கொண்டு விட்டதாகவும், அதனால் முழுமையான பலன்களைச் சொல்ல இப்போது ஆட்கள் இல்லை என்பதும், சென்று, பார்த்து வந்தவர்கள் சொல்லும் குறைபாடு. அதையும் நம்பத்தான் வேண்டியதாக உள்ளது. உண்மையான அனுபவம் வேண்டுபவர்கள் ஒருமுறை சென்று பார்த்துவந்து தங்கள் அனுபவத்தைச் சொல்லலாம்.

சிதம்பரத்தில் இருந்து இந்த ஊரின் தூரம் 22 கிலோ மீட்டர் (தெற்கே)
மைலாடுதுறையில் இருந்து 16 கிலோ மீட்டர் (வடக்கே)
தஞ்சையில் இருந்து 110 கிலோ மீட்டர் (வடக்கே)

கோவிலின் அருகில் ஜடாயு குளம் என்னும் தீர்த்தம் உண்டு. இராமாயண காலத்தில், இராவணனால் கொல்லப்பட்ட ஜாடாயுவின் அந்திம கிரியைகளை இராமரும், அவருடைய சகோதரரும், இத்தலத்தில் செய்ததாகவும். அதன் பொருட்டே இந்தக் குளம் அந்த இடத்தில் உருவாக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு உள்ளது.

மிளகு, உப்பு, நாட்டுச்சர்க்கரை முதலியன இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள கொண்டுவரும் நிவேதனப் பொருட்களாகும். நோய் நீங்கப் பெற்று இத்திருக்கோவிலுக்கு வரும் மக்கள் வெள்ளியில் செய்யப்பெற்ற உடல் உறுப்புக்களை இக்கோவிலில் உள்ள உண்டியல்களில் தானமாகப் போடுவது காலம் காலமாக உள்ள வழக்கம்

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் பாடல்கள் பாடப்பெற்ற தலம் இது!

திருவிழாக்காலம்: கார்த்திகை மாதம், தைமாதம், பங்குனி மாதங்களில் கோவில் விழாக்கோலம் பூணும். ஷஷ்டித் திதி நாட்களில் முத்துக்குமாரசாமி சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் உண்டு.

ஜாதகத்தில் செவ்வாய் வலுவில்லாமல் இருந்து, செவ்வாய் திசையை எதிர்கொள்ள இருப்பவர்கள், இந்த ஸ்தலத்திற்கு ஒரு முறை சென்று வருவது நன்மை பயக்கும். என்ன, தீமைகள் நீங்கி விடுமா? தீமைகள் விலகாவிட்டாலும் அவற்றை எதிகொள்ளும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். அதாவது தாக்குப்பிடிக்கும் சக்தி கிடைக்கும்! அது போதாதா?

எங்கள் பகுதி மக்களுக்கு இக்கோவிலின் மேல் ஆதீத பக்தி உண்டு. சாதாரணமாக ஒரு மாத்திரை அல்லது மருந்தை வீட்டில் இருந்தபடியே உட்கொள்ளும் போதுகூட வைத்தியநாதா’ என்று சொல்லிவிட்டுத்தான் உட்கொள்வார்கள். அதை நான் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ஆகவே நோயில்லாப் பெருவாழ்வு வாழ அனைவரும் ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு, நம்பிக்கையோடு சென்று, அங்கே உறையும் இறைவனையும், தேவியையும், செவ்வாய் பகவானையும் வணங்கி வாருங்கள்.

’அந்த’ நம்பிக்கைதான் நோய்க்கான முதல் மருந்து!

ஆமாம், நமக்கு நோய் தீரும் எனும் நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் சிகிச்சை அல்லது முயற்சிதான் நோய்க்கான முதல் மருந்து!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

46 comments:

Dr.P.Kandaswamy said...

நம்பிக்கைதான் முதல் மருந்து, நூற்றுக்கு நூறு உண்மை.

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
அரியதொரு தகவல் எனக்கு,
அருகில் இருந்த காலத்தில்
அருமை தெரிந்தும், ஆராதிக்கவில்லை.
அப்பனைச் சென்று அருள் பெற
எத்தனித்திருந்த நேரத்தில்.........
ஏற்றமிகு தகவல் ஐயா!
நன்றி! நன்றி!!

nerkuppai thumbi said...

பல முறை போயிருந்தாலும் தெரியாத தகவல்கள். பதிவுக்கு நன்றி.

Ram said...

Dear Sir,

Excellent lessons.

Those who want to build houses please visit the temple.

- Ram

Jayashree said...

புள்ளிருக்குவேலுர்.( புள் , ரிக் வேதம், சுப்ரமண்யர், சூரியனார்) இன்னும் பல பெயர்களும் உண்டுன்னு நினைக்கிறேன்.
சண்டு குளிகையினால் அங்காரகன் நோய் தீர்த்த இடம்.சுந்தரருக்கு ஜடாயு தீர்த்ததில் தொழுனோய் தீர்த்த இடம். ஸ்வாமி தோளில் ஒரு சின்ன ஓலை ஜோல்னா பை ஒன்று குறுக்க போட்டிருப்பதை சின்ன வயதில் பார்த்திருக்கிறன்
சமீபத்தில் சென்றபோது புது விஷயம் தெரிந்தது. original வைதீஸ்வரன் லிங்கேஸ்வரர் இப்ப இருக்கும் கோவிலில் இருந்து 5 கி மீ தொலைவில் சாதாரண எளிமையான, ஏழ்மையில் இருக்கும் மக்களின் நடுவில் இருக்கிறார் என்று. போய்ப் பார்த்தோம் .கோபுர இடுக்குகளில் புதர் மண்டி மரம் எல்லாம் முளைச்சிருக்கு:(( எவ்வளவு அழகான லிங்கம்!! பெரியது, உயர்ந்த கல்லில் ஆனது!! மண்பாண்டம் செய்பவர்கள், சலவை தொழிலாளி குடும்பம் அன்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ரொம்ப அமைதியான சூழல். வன்னி மரமும் ஸ்தல வ்ருக்ஷமா என்று சரியாதெரியல்லை.ஆனா ராம தீர்த்தத்தில் வன்னி மரம் உண்டு

Shyam Prasad said...

புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.

astroadhi said...

dear sir good morning .....

nice lesson ....thanking you.....

govind said...

aiyya, athu jadaayu kundam yendru ninaikiraen !

Arulkumar Rajaraman said...

Dear Sir

Arumayagavum porumayagavum ungal eluthai jolikkavaikiradhu. Nalladhu Asiriyare.

Innalum Nannale. En Nalum Nannale.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Mayakkanna said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

சிறு சிறு வண்ண வண்ண மீன்கள் தன்னையே மறந்து துள்ளி விளையாடும் தாய் காவேரியின் கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்தலம்.

திருவில்லிபுத்தூர்.
ஆண்டாள் கோவிலின் தெற்கில் மிகவும் அருமையாக குளத்தின் கீழ்புறம் திரு வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

'ஜோதிடத்திக்கு வந்த அவலம்'!

அடுத்த நபர்கள்! துன்பம் என்று வருபவரை, நம்பிக்கை வரும் அளவில் நன்றாக பேசி,

நம்பவைத்து, கழுத்தை அறுக்கும் கூட்டங்கள் நிறைய உண்டு!

பாவத்தை தீர்ப்போம் என்று வரும் நபர்களிடம், பாவத்தை சம்பாதிக்கும் இவர்கள், இவர்கள் சம்பாதித்த பாவத்தை எங்கு போகி தீர்க்க போகின்றார்களோ அதான் தெரிய வில்லை

உள்ளதை கொண்டு மனதார தெய்வைத்தை மட்டும் வேண்டி கொண்டு மனநிம்மதியுடன் வாருங்கள்.

விஞ்ஞான உலகில் 'சர் இசைக் நீவ்டன்'! விதி கூட சொல்லுகின்றது

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று
விஞ்ஞான பூர்வமாக

தெய்வம் என்று ஒன்று இருக்கின்றது என்றாலும் சரி!

இல்லை என்றாலும் சரி

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

அடுத்த ஜீவனை கண்ணீர் வடிக்க வைப்பவன் கண்ணீர் வடித்தே ஆகவண்டும்

'புனரபி மரணம், புனரபி ஜனனம்!' என்றார் ஆதிசங்கரர்.

அப்படியென்றால் என்ன?

நாம் செத்துச் செத்துப் பிறக்கிறோம்;

பிறந்துப் பிறந்து சாகிறோமாம்!

அப்படியிருக்கையில், எதற்க்காக மரணபயம்

சொல்லி சென்றவர் மகான் அல்லவா!

சரிதானே ஐயா!

Arul said...

ஐயா!!!

அரிய தகவல்கள் மூலம் தெய்வத்தை கண்முன் நிறுத்தியதை போன்ற உணர்வு. தற்போது சென்று வர முடியா தூரத்தில் இருப்பினும் இதை படித்து முடித்து 10 நிமிடத்திற்கு கடவுளை மனதில் நினைத்தொழுக வைத்தீர்கள். இறைவனை பாடி, மனமுருகி வழிபட்டு, அடுத்தவர் மனம் புண்படாமல், இல்லாதோருக்கு உதவுவது ஒரு இறைத்தொண்டு என்றாலும் இறைவனை பற்றிய தகவல்களை தெரியாதோர்க்கு தெரியவைப்பதும் ஒரு தொண்டே.நேற்று ஒரு அன்பருக்கு பதில் அளிக்கையில் சனி 2 மிட அதிபதியாகி அதில் இருந்து 11ல் (12 ல் 5,12ம் அதிபதி செவ்வாயுடன்)இருப்பதால் சனி,செவ்வாய் திசைகளில் பணம் வரும், வந்தால் அடுத்தவர்க்கு உதவுங்கள் என்ற final touch. உங்களுக்கே உரித்தான ஒன்று.

வளர்க உமது மன வள கட்டுரைகள்...வாழிய உமது தொண்டு...

iyer said...

ஆமாம்... ஆமாம் . .

அய்யா நீங்கள் சொல்வது சரி . .
சரியான நேரத்தில் நினைவூட்டியது
அந்த இறைவனே வந்து சொன்னது போல் இருந்தது . .

ஆண்டு தோறும் செல்லும் நமக்கு . .
ஆமூருக்கு வா என ஆண்டவன் அழைத்து போல்
இதோ செல் என சொல்வது போல் இருந்தது . . .
இதோ இந்த வாரம் செல்ல தயாராகிறேன் . .

நன்றி

நேசன்..., said...

அய்யா,செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது பரிகாரத் தலமா?...எனக்கு தற்போது செவ்வாய் தசை நடக்கிறது!...எனக்கு லக்கினகாரகன் அவன் ஆனால் 6ல் மறைந்திருக்கிறான்!எனவே இங்கு செல்லலாம் என நினைக்கிறேன்!...தங்கள் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்!...நன்றி!

Alasiam G said...

தென்றலும், திங்களும்
வீதியும், சாதியையும் பார்ப்பதில்லை
தன் விருப்பம் போல் அது புகுந்துவிடும்
அதன் சொரூபமான அப்பனும் விரும்பிய இடத்தில்
விரும்பிய வண்ணமாக இருப்பதுதானே
நிதர்சனமான உண்மை!
வர்த்தக உலகில் படைத்தவனிடமே வர்த்தகம் பேசும்,
பக்தி எது என்று கூட உண்மை அறியாதவர்கள் புரிந்து கொள்ளத்தானோ??....
பக்தி என்பது தாயன்பைப் போல் கலப்படம் இல்லாத அன்பு நெறிப்பட்டதே
அன்றி ஆடம்பரத்திற்கு ஆட்ப்பட்டது அன்று என்று. ஆயுள் முழுவதும் மனக்கதவை
திறந்துவைத்துக் காத்திருந்தாலும் அம்; மனம் அன்பால் அழங்கரிக்கப்படும் போது தானே இறைவன் வந்தமர்வான்.

SP.VR. SUBBAIYA said...

///Dr.P.Kandaswamy said...
நம்பிக்கைதான் முதல் மருந்து, நூற்றுக்கு நூறு உண்மை./////

அடடா, என்னே ஒரு பின்னூட்டம்! மருத்துவர் ஒருவரே வந்து ”நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை”
எனும்போது, தட்டச்சி பதிவிட்டமைக்கு ஒரு மலர்ச்செண்டு கிடைத்ததுபோல உள்ளது. நன்றி டாக்டர்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம், அரியதொரு தகவல் எனக்கு,
அருகில் இருந்த காலத்தில் அருமை தெரிந்தும், ஆராதிக்கவில்லை.
அப்பனைச் சென்று அருள் பெற எத்தனித்திருந்த நேரத்தில்......... ஏற்றமிகு தகவல் ஐயா!
நன்றி! நன்றி!!////////

நன்றி ஆலாசியம்! சென்று வாருங்கள். செழுமை பெறுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////nerkuppai thumbi said...
பல முறை போயிருந்தாலும் தெரியாத தகவல்கள். பதிவுக்கு நன்றி./////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Ram said...
Dear Sir,
Excellent lessons.
Those who want to build houses please visit the temple.
- Ram/////

Yes, mars is the authority for landed properties!

SP.VR. SUBBAIYA said...

/////Jayashree said...
புள்ளிருக்குவேலுர்.( புள் , ரிக் வேதம், சுப்ரமண்யர், சூரியனார்) இன்னும் பல பெயர்களும் உண்டுன்னு நினைக்கிறேன்.
சண்டு குளிகையினால் அங்காரகன் நோய் தீர்த்த இடம்.சுந்தரருக்கு ஜடாயு தீர்த்ததில் தொழுனோய் தீர்த்த இடம். ஸ்வாமி தோளில் ஒரு சின்ன ஓலை ஜோல்னா பை ஒன்று குறுக்க போட்டிருப்பதை சின்ன வயதில் பார்த்திருக்கிறன்
சமீபத்தில் சென்றபோது புது விஷயம் தெரிந்தது. original வைதீஸ்வரன் லிங்கேஸ்வரர் இப்ப இருக்கும் கோவிலில் இருந்து 5 கி மீ தொலைவில் சாதாரண எளிமையான, ஏழ்மையில் இருக்கும் மக்களின் நடுவில் இருக்கிறார் என்று. போய்ப் பார்த்தோம் .கோபுர இடுக்குகளில் புதர் மண்டி மரம் எல்லாம் முளைச்சிருக்கு:(( எவ்வளவு அழகான லிங்கம்!! பெரியது, உயர்ந்த கல்லில் ஆனது!! மண்பாண்டம் செய்பவர்கள், சலவை தொழிலாளி குடும்பம் அன்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ரொம்ப அமைதியான சூழல். வன்னி மரமும் ஸ்தல வ்ருக்ஷமா என்று சரியாதெரியல்லை.ஆனா ராம தீர்த்தத்தில் வன்னி மரம் உண்டு//////

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Shyam Prasad said...
புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.//////

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!!

SP.VR. SUBBAIYA said...

////astroadhi said...
dear sir good morning .....
nice lesson ....thanking you...../////

நல்லது. நன்றி ஆதிராஜ்!

SP.VR. SUBBAIYA said...

//////govind said...
aiyya, athu jadaayu kundam yendru ninaikiraen !///

கரெக்ட்! அதன் பெயர் ஜடாயு குண்டம்தான்! நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Arumayagavum porumayagavum ungal eluthai jolikkavaikiradhu. Nalladhu Asiriyare.
Innalum Nannale. En Nalum Nannale.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

அவனருள் இருக்கின்றவரையில் ஒவ்வொரு நாளும் இனியநாளே!

SP.VR. SUBBAIYA said...

////Mayakkanna said...
வாத்தியார் ஐயா வணக்கம்.
சிறு சிறு வண்ண வண்ண மீன்கள் தன்னையே மறந்து துள்ளி விளையாடும் தாய் காவேரியின் கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்தலம்.
திருவில்லிபுத்தூர்.
ஆண்டாள் கோவிலின் தெற்கில் மிகவும் அருமையாக குளத்தின் கீழ்புறம் திரு வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
'ஜோதிடத்திக்கு வந்த அவலம்'!
அடுத்த நபர்கள்! துன்பம் என்று வருபவரை, நம்பிக்கை வரும் அளவில் நன்றாக பேசி,
நம்பவைத்து, கழுத்தை அறுக்கும் கூட்டங்கள் நிறைய உண்டு!
பாவத்தை தீர்ப்போம் என்று வரும் நபர்களிடம், பாவத்தை சம்பாதிக்கும் இவர்கள், இவர்கள் சம்பாதித்த பாவத்தை எங்கு போகி தீர்க்க போகின்றார்களோ அதான் தெரிய வில்லை
உள்ளதை கொண்டு மனதார தெய்வைத்தை மட்டும் வேண்டி கொண்டு மனநிம்மதியுடன் வாருங்கள்.
விஞ்ஞான உலகில் 'சர் இசைக் நீவ்டன்'! விதி கூட சொல்லுகின்றது
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று
விஞ்ஞான பூர்வமாக தெய்வம் என்று ஒன்று இருக்கின்றது என்றாலும் சரி! இல்லை என்றாலும் சரி
உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.
அடுத்த ஜீவனை கண்ணீர் வடிக்க வைப்பவன் கண்ணீர் வடித்தே ஆகவேண்டும்
'புனரபி மரணம், புனரபி ஜனனம்!' என்றார் ஆதிசங்கரர்.
அப்படியென்றால் என்ன?
நாம் செத்துச் செத்துப் பிறக்கிறோம்;
பிறந்துப் பிறந்து சாகிறோமாம்!
அப்படியிருக்கையில், எதற்காக மரணபயம்
சொல்லி சென்றவர் மகான் அல்லவா!
சரிதானே ஐயா!////

சரிதான் முருகா! நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Arul said...
ஐயா!!!
அரிய தகவல்கள் மூலம் தெய்வத்தை கண்முன் நிறுத்தியதை போன்ற உணர்வு. தற்போது சென்று வர முடியா தூரத்தில் இருப்பினும் இதை படித்து முடித்து 10 நிமிடத்திற்கு கடவுளை மனதில் நினைத்தொழுக வைத்தீர்கள். இறைவனை பாடி, மனமுருகி வழிபட்டு, அடுத்தவர் மனம் புண்படாமல், இல்லாதோருக்கு உதவுவது ஒரு இறைத்தொண்டு என்றாலும் இறைவனை பற்றிய தகவல்களை தெரியாதோர்க்கு தெரியவைப்பதும் ஒரு தொண்டே.நேற்று ஒரு அன்பருக்கு பதில் அளிக்கையில் சனி 2 மிட அதிபதியாகி அதில் இருந்து 11ல் (12 ல் 5,12ம் அதிபதி செவ்வாயுடன்)இருப்பதால் சனி,செவ்வாய் திசைகளில் பணம் வரும், வந்தால் அடுத்தவர்க்கு உதவுங்கள் என்ற final touch. உங்களுக்கே உரித்தான ஒன்று.
வளர்க உமது மன வள கட்டுரைகள்...வாழிய உமது தொண்டு...//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

///iyer said...
ஆமாம்... ஆமாம் . .
அய்யா நீங்கள் சொல்வது சரி . .
சரியான நேரத்தில் நினைவூட்டியது
அந்த இறைவனே வந்து சொன்னது போல் இருந்தது . .
ஆண்டு தோறும் செல்லும் நமக்கு . .
ஆமூருக்கு வா என ஆண்டவன் அழைத்து போல்
இதோ செல் என சொல்வது போல் இருந்தது . . .
இதோ இந்த வாரம் செல்ல தயாராகிறேன் . .
நன்றி////

ஆகா, சென்று வாருங்கள். அப்ப்டியே எங்களுக்கும் சேர்த்துப் பிரார்த்தனை செய்யுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

//////நேசன்..., said...
அய்யா,செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது பரிகாரத் தலமா?...எனக்கு தற்போது செவ்வாய் தசை நடக்கிறது!...எனக்கு லக்கினகாரகன் அவன் ஆனால் 6ல் மறைந்திருக்கிறான்!எனவே இங்கு செல்லலாம் என நினைக்கிறேன்!...தங்கள் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்!...நன்றி!///////

முத்துக்குமாரசாமியின் ஆசி நம் அனைவருக்கும் உண்டு. சென்று வாருங்கள். சென்று வந்த பிறகு ஒருவரி எழுதுங்கள்!

Loga said...

Ayya Vanakkam

namathu vaguparai kalai kattuvathe intha Pinnotta vasathiyalthan..

Oppukolluveergal endru ninaigirean

Sevvai giragathukku uriyathu Vaitheeswaran kovil enbathu enakku pothiya thagaval... Nandri

kmr.krishnan said...

வைத்தீஸ்வர‌ன் கோவிலுக்குச் செல்வோர் சீர்காழியைச் சுற்றி உள்ள திருநாங்கூர் திவ்ய தேசங்களையும் தரிசித்துவிடலாம்.108ல் ஒரேநாளில்
11 திவ்ய தேச‌ங்களை தரிசிக்க வாய்ப்புக்கிடைக்கும். இதற்கென்றே ஒரு ஆட்டோ ஒட்டுனர் உள்ளார்.

நாடி சோதிட‌த்தைப்ப‌ற்றி ப‌ல‌ர் ப‌ல க‌ருத்துக்க‌ளைச் சொன்னாலும் த‌ற்கால‌ ந‌ட‌ப்பு நாடிசோதிட‌த்தில் ச‌ரியாக‌ச் சொல்கிறார்க‌ள்.எந்த கஷ்ட காலத்தில்"நாடி"வந்துள்ளோம் என்பதை துல்லியமாகச் சொல்வார்கள்.400/=ரூபாய் செலவில் பல கோவில் பரிகாரங்க‌ளைச் சொல்வார்கள். ராசி சக்கரத்தில் இருக்கும் கிரஹங்கள் மீது கோச்சார கிரஹம்
வரும் போது ஏற்படும் மாற்றங்களை வைத்துப் பலன் சொல்வார்கள்.30 பாடல்களாக வரும். விளக்கம் சுவடி படிப்பவர் சொல்வார்

ananth said...

பல காலமாக என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. தோஷம் என்பது உதாரணமாக செவ்வாய் தோஷம், நாக தொஷம் போன்றவை. உண்மையிலேயே இருக்கினவா. ஏன் கேட்கிறேன் என்றால் ஜோதிடத்தைக் கண்டுபிடித்த முனிவர்களும் சரி, பின்னாளில் ஜோதிடத்தைப் பற்றி எழுதிய வராஹ மிஹிரர் போன்றவர்களும் சரி இந்த தோஷத்தைப் பற்றி ஒன்றும் எழுத வில்லை. ஏன் தமிழில் இருக்கும் புராதாண ஜோதிட நூல்களான குமார சுவாமியம், ஜாதக அலங்காரம், ராவண காவியம் போன்ற நூல்களிலும் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லப் படவில்லை. இது எப்படி யாரால் கண்டுபிடிக்கப் பட்டது என்பது ஒரே மர்மமாக இருக்கிறது. இல்லாத தோஷத்தைக் கழிப்பதாக சொல்லி பணம் பறிக்கும் ஒரு கூட்டம் பல காலமாகவே இருக்கிறது. ஜோதிடமே பித்தலாட்டம் என்று சொல்பவர்களுக்கு இவையெல்லாம் ஒரு வாய்ப்பாக போய்விடுகிறது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்/எத்தன்மையதாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தை அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து விடுகிறது.

SP.VR. SUBBAIYA said...

///Alasiam G said...
தென்றலும், திங்களும் வீதியும், சாதியையும் பார்ப்பதில்லை
தன் விருப்பம் போல் அது புகுந்துவிடும்
அதன் சொரூபமான அப்பனும் விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணமாக இருப்பதுதானே
நிதர்சனமான உண்மை!
வர்த்தக உலகில் படைத்தவனிடமே வர்த்தகம் பேசும், பக்தி எது என்று கூட உண்மை அறியாதவர்கள் புரிந்து கொள்ளத்தானோ??.... பக்தி என்பது தாயன்பைப் போல் கலப்படம் இல்லாத அன்பு நெறிப்பட்டதே
அன்றி ஆடம்பரத்திற்கு ஆட்ப்பட்டது அன்று என்று. ஆயுள் முழுவதும் மனக்கதவை
திறந்துவைத்துக் காத்திருந்தாலும் அம்மனம் அன்பால் அழங்கரிக்கப்படும் போது தானே இறைவன் வந்தமர்வான்.////

உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Loga said...
Ayya Vanakkam
namathu vaguparai kalai kattuvathe intha Pinnotta vasathiyalthan..
Oppukolluveergal endru ninaigirean
Sevvai giragathukku uriyathu Vaitheeswaran kovil enbathu enakku pothiya thagaval... Nandri///////

ஆமாம், பின்னூட்டம்தான், ஒரு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது! அதில் சந்தேகமில்லை!

SP.VR. SUBBAIYA said...

kmr.krishnan said...
வைத்தீஸ்வர‌ன் கோவிலுக்குச் செல்வோர் சீர்காழியைச் சுற்றி உள்ள திருநாங்கூர் திவ்ய தேசங்களையும் தரிசித்துவிடலாம்.108ல் ஒரேநாளில்
11 திவ்ய தேச‌ங்களை தரிசிக்க வாய்ப்புக்கிடைக்கும். இதற்கென்றே ஒரு ஆட்டோ ஒட்டுனர் உள்ளார்.
நாடி சோதிட‌த்தைப்ப‌ற்றி ப‌ல‌ர் ப‌ல க‌ருத்துக்க‌ளைச் சொன்னாலும் த‌ற்கால‌ ந‌ட‌ப்பு நாடிசோதிட‌த்தில் ச‌ரியாக‌ச் சொல்கிறார்க‌ள்.எந்த கஷ்ட காலத்தில்"நாடி"வந்துள்ளோம் என்பதை துல்லியமாகச் சொல்வார்கள்.400/=ரூபாய் செலவில் பல கோவில் பரிகாரங்க‌ளைச் சொல்வார்கள். ராசி சக்கரத்தில் இருக்கும் கிரஹங்கள் மீது கோச்சார கிரஹம்
வரும் போது ஏற்படும் மாற்றங்களை வைத்துப் பலன் சொல்வார்கள்.30 பாடல்களாக வரும். விளக்கம் சுவடி படிப்பவர் சொல்வார்///////

11 திவ்ய தேச‌ங்களைப்பற்றியும், நாடி ஜோதிடத்தைப் பற்றியும் சற்றுத் தெளிவு படுத்தியதற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
பல காலமாக என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. தோஷம் என்பது உதாரணமாக செவ்வாய் தோஷம், நாக தொஷம் போன்றவை. உண்மையிலேயே இருக்கினவா. ஏன் கேட்கிறேன் என்றால் ஜோதிடத்தைக் கண்டுபிடித்த முனிவர்களும் சரி, பின்னாளில் ஜோதிடத்தைப் பற்றி எழுதிய வராஹ மிஹிரர் போன்றவர்களும் சரி இந்த தோஷத்தைப் பற்றி ஒன்றும் எழுத வில்லை. ஏன் தமிழில் இருக்கும் புராதாண ஜோதிட நூல்களான குமார சுவாமியம், ஜாதக அலங்காரம், ராவண காவியம் போன்ற நூல்களிலும் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லப் படவில்லை. இது எப்படி யாரால் கண்டுபிடிக்கப் பட்டது என்பது ஒரே மர்மமாக இருக்கிறது. இல்லாத தோஷத்தைக் கழிப்பதாக சொல்லி பணம் பறிக்கும் ஒரு கூட்டம் பல காலமாகவே இருக்கிறது. ஜோதிடமே பித்தலாட்டம் என்று சொல்பவர்களுக்கு இவையெல்லாம் ஒரு வாய்ப்பாக போய்விடுகிறது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்/எத்தன்மையதாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தை அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து விடுகிறது.///////

என்ன சுவாமி, அஸ்திவாரத்தையே அசைத்துப்பார்க்கிறீர்கள்? தோஷங்கள் (afflictions) உண்மை. காசைக்கொடுத்து அதைக் கழிக்க முடியாது. அது பொய். காசைவைத்துப் பரிகாரம் என்பது பொய். நாம் கொடுக்கும் காசு யாருக்குப்போகிறது? உண்மையிலேயே பரிகாரம் உண்டு என்றால் அது பிரார்த்தனை மட்டுமே! இதை நான் ஆரம்பம் முதலே எழுதிவருகிறேன் நண்பரே!

ஜோதிடம் உண்மை. ஜோதிடர்களில் பலர் பொய்யானவர்கள். அரைகுறை அறிவு உள்ளவர்கள். போலி மருத்துவர்கள், போலி மருந்துகள் போல, போலி ஜோதிடர்களும் உண்டு. போலிப் பரிகாரங்களும் உண்டு. நாம்தான் ஏமாறமல் இருக்க வேண்டும் நண்பரே!

லக்கினத்தில் சனி என்பது விதவை தோஷம். எந்த வயதில் விதவை என்பது ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களைவைத்து மாறுபடும். பணத்தைவைத்து பரிகாரம் எனும் பெயரில் அதை மாற்ற முடியாது.

காலசர்ப்ப தோஷம் என்பது 30 வயது வரைக்கும் உண்டு என்றால் உண்டு. இருக்கும். காசைக் கொடுத்து அதை எப்படி விரட்டி அடிக்க முடியும்?. அதற்குப் பரிகாரம் பிரார்த்தனை மட்டுமே. பிரார்த்தனையால் தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும். நல்லதோ அல்லது கெட்டதோ, அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே ஆகவேண்டும்!
பரிகாரம் எல்லாம் செல்லுபடியாகாது!

அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

ananth said...

Planetary affliction என்பது ஒரு கிரகம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை குறிக்கும். தாங்கள் முந்தைய பாடத்தில் கொடுத்த கிரகங்களுக்கு 9 நிலைகள் என்பதை உதாரணமாக சொல்லலாம். அதற்கும் தோஷத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே என் கருத்து. செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்று அர்த்தமாகாது. அவர் குறிப்பிட்ட சில வீட்டில் இருக்கும் நிலை. அவ்வளவுதான். ஜோதிடத்தில் Afflicted Sun, Moon என்கிறார்கள். அவர்களுக்கு ஏது ஐயா தோஷம். செவ்வாய் தோஷம் என்பதற்கு ஜோதிடத்தில் எந்த அடிப்படையும் இருப்பதாக தெரியவில்லை. செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கு செவ்வாய் தோஷம் என்றால் சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கு சனி தோஷம் என்று ஆகிவிடும்.

என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். இதை இதற்கு மேல் தொடர விரும்பவில்லை. இதை தாங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
தாங்கள் தெரிவித்திருந்தது போல்,

"நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது."-----

" நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்"!-----

" நமக்கு நோய் தீரும் எனும் நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் நம்பிக்கைதான் முதல் மருந்து"!---------
மேற்கண்டுள்ளவைகள் யாவும். வேத வாக்குகள்.

இன்றைய நவக்கிரகக் கோவில்கள் பகுதியில்,
வைத்தீஸ்வரன் கோவில் படங்கள் மிக அருமை.
மற்றும் விளக்கமும் மிக நன்றாக உள்ளது.

மிக்க நன்றி.
வணக்கம்.

தங்களன்புள்ள மாணவன்

வ.தட்சணாமூர்த்தி

2010-05-12

குறும்பன் said...

\\திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு, தன் சகோதரியின் அறிவுரையின் பேரில் இக்கோவில்லுக்குச் சென்று வைத்தியசாமி நாதர் என்னும் பெயர் பெற்ற சிவனாரை வணங்க, அதிசயத் தக்க முறையில் வயிற்றுவலி நீங்கிக் குணம் பெற, அன்றிலிருந்து அவர் இக்கோவிலின் அதீத பக்தரானார் என்பதும் வரலாறு!\\

புதிய செய்தி.
சூலை நோயை நீக்க வேண்டி அக்கா திலகவதியின் அறிவுரையால் திருவட்டானையில் உறைகின்ற சிவனை வழிபட்டு சூலை நோய் நீங்கப்பெற்றார் என்பதே இதுவரை நான் அறிந்தது. நாவுக்கரசர் பெயரும் அப்போது தான் கிடைத்தது.

SP.VR. SUBBAIYA said...

////ananth said...
Planetary affliction என்பது ஒரு கிரகம் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை குறிக்கும். தாங்கள் முந்தைய பாடத்தில் கொடுத்த கிரகங்களுக்கு 9 நிலைகள் என்பதை உதாரணமாக சொல்லலாம். அதற்கும் தோஷத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே என் கருத்து. செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்று அர்த்தமாகாது. அவர் குறிப்பிட்ட சில வீட்டில் இருக்கும் நிலை. அவ்வளவுதான். ஜோதிடத்தில் Afflicted Sun, Moon என்கிறார்கள். அவர்களுக்கு ஏது ஐயா தோஷம். செவ்வாய் தோஷம் என்பதற்கு ஜோதிடத்தில் எந்த அடிப்படையும் இருப்பதாக தெரியவில்லை. செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கு செவ்வாய் தோஷம் என்றால் சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கு சனி தோஷம் என்று ஆகிவிடும்.
என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். இதை இதற்கு மேல் தொடர விரும்பவில்லை. இதை தாங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி.//////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே! கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. அனைவரின் கருத்தும் வரவேற்கப்படுகிறது!

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
தாங்கள் தெரிவித்திருந்தது போல்,
"நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது."-----
" நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்"!-----
" நமக்கு நோய் தீரும் எனும் நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் நம்பிக்கைதான் முதல் மருந்து"!---------
மேற்கண்டுள்ளவைகள் யாவும். வேத வாக்குகள்.
இன்றைய நவக்கிரகக் கோவில்கள் பகுதியில்,
வைத்தீஸ்வரன் கோவில் படங்கள் மிக அருமை. மற்றும் விளக்கமும் மிக நன்றாக உள்ளது.
மிக்க நன்றி. வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////குறும்பன் said...
\\திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு, தன் சகோதரியின் அறிவுரையின் பேரில் இக்கோவில்லுக்குச் சென்று வைத்தியசாமி நாதர் என்னும் பெயர் பெற்ற சிவனாரை வணங்க, அதிசயத் தக்க முறையில் வயிற்றுவலி நீங்கிக் குணம் பெற, அன்றிலிருந்து அவர் இக்கோவிலின் அதீத பக்தரானார் என்பதும் வரலாறு!\\
புதிய செய்தி.
சூலை நோயை நீக்க வேண்டி அக்கா திலகவதியின் அறிவுரையால் திருவட்டானையில் உறைகின்ற சிவனை வழிபட்டு சூலை நோய் நீங்கப்பெற்றார் என்பதே இதுவரை நான் அறிந்தது. நாவுக்கரசர் பெயரும் அப்போது தான் கிடைத்தது.////////

உங்களின் மேலதிகத்தகவல்களுக்கு நன்றி குறும்பன்!

ramanes said...

Anbin Vaathiyar avargaluku

Thangalin padivu arumai.. manavanin thazmayana vendukoal. ean thangal naadi sodidam patri oru padivu ezuda koodadu? naadi sodidam patri sariyana vizakam eduvarai kidaika villai anda kurayai thangal padividuvadan moolam pokalame..?

thangalin melana karuthai edir paarkum maanavan
Ramanes

SP.VR. SUBBAIYA said...

/////ramanes said...
Anbin Vaathiyar avargaluku
Thangalin padivu arumai.. manavanin thazmayana vendukoal. ean thangal naadi sodidam patri oru padivu ezuda koodadu? naadi sodidam patri sariyana vizakam eduvarai kidaika villai anda kurayai thangal padividuvadan moolam pokalame..?
thangalin melana karuthai edir paarkum maanavan
Ramanes///////

நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். நன்றி!

hamaragana said...

அன்புடன் வணக்கம் ...12.5.2010.... வைதீஸ்வரன் கோவில் பற்றிய பதிவில் ஸ்ரீ திருநாவுக்கரசர் பற்றிய செய்தி .:::;;;அடியார் பிறந்த ஊர் திருவாமூர் ;அவ்ருடிய தமக்கையார் திலகவதியார் ...அடியார் சமண சமயத்தில் சேர்ந்து தருமசேனர் என்ற பெயருடன் இருக்கும் காலத்தில் குன்ம வலி வந்தது.. தமக்க்யர் திருநீறணிந்து திருவதிகை வீரட்டானம் கோவில் கொண்டருளும் எம்பெர்மனிடம் ""கூர்ரையனவாறு விளக்களீர் என்று சாமிகள் பாடியது முதல் தேவாரம் அந்த பத்து பாடல்கள் படித்த பின் குன்ம வலி நீங்கியது... சான்றுகள் எல்லா தேவார நூல்களில் பார்க்கலாம்.

SP.VR. SUBBAIYA said...

//////hamaragana said...
அன்புடன் வணக்கம் ...12.5.2010.... வைதீஸ்வரன் கோவில் பற்றிய பதிவில் ஸ்ரீ திருநாவுக்கரசர் பற்றிய செய்தி .:::;;;அடியார் பிறந்த ஊர் திருவாமூர் ;அவ்ருடிய தமக்கையார் திலகவதியார் ...அடியார் சமண சமயத்தில் சேர்ந்து தருமசேனர் என்ற பெயருடன் இருக்கும் காலத்தில் குன்ம வலி வந்தது.. தமக்க்யர் திருநீறணிந்து திருவதிகை வீரட்டானம் கோவில் கொண்டருளும் எம்பெர்மனிடம் ""கூர்ரையனவாறு விளக்களீர் என்று சாமிகள் பாடியது முதல் தேவாரம் அந்த பத்து பாடல்கள் படித்த பின் குன்ம வலி நீங்கியது... சான்றுகள் எல்லா தேவார நூல்களில் பார்க்கலாம்.///////

மேலதிகத்தகவல்களுக்கு நன்றி நண்பரே!

Mayakkanna said...

ஐயா வணக்கம்.

தெய்வத்தை கண்ணால் கண்டதில்லை ஆனால் தாயிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து எங்களை காப்பாற்றிய (வைத்தீயலிங்கம் ) எனது தாத்தாவை கண்முன்னர் கொண்டுவது விட்டீர்கள் ஐயா.

SP.VR. SUBBAIYA said...

/////Mayakkanna said...
ஐயா வணக்கம்.
தெய்வத்தை கண்ணால் கண்டதில்லை ஆனால் தாயிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து எங்களை காப்பாற்றிய (வைத்தீயலிங்கம் ) எனது தாத்தாவை கண்முன்னர் கொண்டுவது விட்டீர்கள் ஐயா.//////

கண்முன் கொண்டு வந்ததற்கு தட்சணை உண்டா?:-)))))))))))))