மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.12.09

Lessons on Astrology: Births on Amavasa Thithi: அமாவாசையன்று பிறந்தவர்கள்


++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: Births on Amavasa Thithi: அமாவாசையன்று பிறந்தவர்கள்

ஒரு திரைப்படத்தில் நம்ம மணியண்ணன், செந்திலைப் பார்த்து அடிக்கடி இப்படிச் சொல்வார்:

“அட, அமாவாசைக்குப் பொறந்தவனே!”

அமாவாசையன்று பிறந்தால் இழிவா? இல்லை.

எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான். அதை உணர்த்தத்தான் கோகுல கிருஷ்ணன் அஷ்டமித் திதியில் பிறந்தார். ஸ்ரீராமபிரான் நவமித் திதியில் அவதரித்தார்.

சூரியனும் சந்திரனும் ஒரு ராசியின் 12 பாகைகளுக்குள் இருக்கும் தினம் அமாவாசை. அதுவும் ஒரு பாகை வித்தியாசத்தில் இருக்கும் நேரம் முழு அமாவாசை. அமாவாசையன்று சூரியனின் நெருக்கத்தால் சந்திரன் அஸ்தமனமாகிவிடும். அமாவாசை திதியில் பிறப்பது அவயோகமாகக் கருதப்படுகிறது.

அந்த தினத்தில் பிறக்கும் ஜாதகனின் வாழ்க்கை (மனப்) போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும். சந்திரன் மனதிற்கு உரிய காரகன். அதை நினைவில் வையுங்கள்.

ஒரு கவிஞன் சொன்னான்:

”சுற்றும்வரை பூமி
எரியும்வரை நெருப்பு
போராடும்வரை மனிதன்!”

ஆகவே போராட்டம் இல்லாத வாழ்க்கை இரசிக்காது. அமாவாசையன்று பிறந்தவர்கள் கவலைப் பட வேண்டாம். உங்கள் வாழ்க்கை ரசனைக்குரியதாக இருக்கும். பலவிதமான உணர்வுகள் நிரம்பியதாக இருக்கும்.

அதோடு (மனப்) போராட்டங்களுக்கான ஆயுதங்களும் உங்களுக்கு வழங்கப்பெற்றிருக்கும். அதவது உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பெற்றிருக்கும். இல்லையென்றால் உங்களுடைய ஜாதகத்தின் மதிப்பெண் எப்படி 337ஆக வரும் - சொல்லுங்கள்?

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

60 comments:

  1. நான், எனது மனைவி, என் மாமனார் - மூவரும் அமாவாசை அன்று பிறந்தவர்களே (:-

    நிஜமாகத்தான்.

    உங்கள் பதிவைப் படித்தவுடன் ஒரு பூஸ்ட் கிடைத்தது - காலையில் பூஸ்ட் கிடைப்பது அரிது. நன்றி

    ReplyDelete
  2. என் மனைவி இதற்கு நேர் மாறாக பௌர்ணமியன்று பிறந்தவர். இதற்கு பலன் அடுத்த பதிவில் வெளியிட்டால் தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  3. எனது ஜாதகத்திலும் சந்திரன் அஸ்தமனமாகிவிட்டார் எனகும் பல மனப் போராட்டங்கள் ஒன்று மாறி ஒன்று வருவதுண்டு. எனது அனுபவத்தில் நான் இதை உனர்கிறேன்.

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசானே,
    பாடத்துக்கு நன்றி

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா

    என் தந்தையார் அமாவாசை அன்று பிறந்தவர். ஆனால் அவர் தற்போது இந்த பூவுலகில் இல்லை.

    நான் வளர்பிறை நவமியில் பிறந்தேன். நான் உண்மையில் ராமன் தான்.

    நன்றி..

    ReplyDelete
  6. ஆசானே! காலை வணக்கம்
    கண்ணன் அஷ்டமித் திதியில் பிறத்ததின் காரணம் என்ன என்பதனை
    சொல்ல
    முடியுமா குருவே

    ReplyDelete
  7. குருநாதருக்கு பணிவான வணக்கங்கள் பல,

    உண்மைதான் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான் மனப்போராட்டத்தோடுதான் வாழ்நாட்களை தள்ளிக்கொண்டு வருகிறேன். என்னுடைய சில போராட்டங்கள் காலவெள்ளத்தில் சிறிதாகி விட்டன, சில விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன, சில தோன்றிய நாள் முதல் எப்பொழுதாவது விஸ்வரூபம் எடுத்து கொஞ்ச நேரம் அல்லது நாட்கள் என்னை, எனது செயல்பாட்டை முடக்கி விடுகின்றன.


    தவறாமல் நித்ய அலுவல்களை செய்கிறேனோ இல்லையோ ஆனால் தவறியும் எனக்குள் ஒரு மனப்போராட்டம் நிகழாமல் போவதில்லை. நான் வாங்கி வந்த சாபம் போலும்.

    ஆனால் தாங்கள் கூறியபடி எவ்வாறு ஈடு செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தெரியவில்லை.

    ReplyDelete
  8. guru avarkaley, srinivasan avargaley, en thanthaiyar amvasaiyil piranthavar. ungalai polavey pala manaporattangalil kaalathai kalippavar. amavasaiyil piranthavarkal ariyappadum pirabala varthaigakalukku maaraaga, engal oor paguthiyil, nyayavan , neethi man enru peyar eduthirukkirar. sollonnaatha pala thuyargalai anubavithaalum,avar kadaipidikkum, neethi nermaiyil vazhuvathu irunthu varukirar. avarukku avar vaazhkaiyail kidaitha parisu, poradi vazhakaiyil kuzhanthaigalai nalla nailamaikku konduvantha avar manaiviyum, kuzhanthaikal thaan. engalin gunam matrum, vaazhkai valarchiyai parthu, oru kaalathil avarai keli seythavarhal kooda, koduthuvaithavan engirargal. enavey 337 oru athisaya en. nambikkaiyodu irungal.

    ReplyDelete
  9. Dear Sir,

    Thanks for the lessons.

    Balakumaran.

    ReplyDelete
  10. ஆசிரியருக்கு வணக்கம்,

    பெருந்தகையே, பாடத்திற்கு நன்றிகள்.
    ஒரே ஒரு ஐய வினா!

    கிராமங்களில் கூறுவார்கள்,
    அமாவாசையன்ற்றுப் பிறந்தவன் அவன் கை
    சும்மா இருக்காது என்று.

    நினைத்தாலே இனிக்கும் (பழைய) படத்தில்,
    கலையுலக பாரதி பாலச்சந்தர் கூட ரஜினி காந்த அவர்களின்
    கதாப்பாத்திரத்தை அப்படி காட்டி இருந்ததாக ஞாபகம்.

    அமாவாசைக்கும் திருடும் குணத்திற்கும்
    தொடர்பு உண்டா இல்லை
    அது வேறு ஒரு அமைப்பில் வருமா?

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  11. இருளில் இருந்து ஒளிக்குச் செல்லும் அமாவாசையை, முன்னேற்றத்திற்கான‌
    முதல்படி என்று எடுத்துக்கொண்டு மகிழ்வோம்.

    ReplyDelete
  12. Is there any effect when Moon and Sun in the same House ( Born in normal days other than 12 degree so it is not a Ammavasai day)

    I have heard that male who born in ammavasai will have a thief mindset.

    Thanks

    ReplyDelete
  13. ஐயா மன்னிக்கவும்
    உங்கள் கவனத்தை கவர்வதற்காக இந்த கேள்வியை இரண்டு தடவை வேறு வேறு இடங்களில் கேட்டுள்ளேன். மன்னிக்கவும்
    ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதை விட,மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தம த்தில் பலன்கள் இரட்டிப்பாகும். தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமை களும் இரட்டிப்பாகும் என்று குறிப்பிடுகிறீர்கள்

    ஆனால் வர்கோத்தமம் பாடத்தில் வர்கோத்தமம் பெறும் கிரகம் இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.

    ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்
    கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
    சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்
    செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்
    சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

    என்று குறிப்பிட்டிருந்தீர்களே
    சற்று குழப்பமாக உள்ளது தெளிவு படுத்தவும் ஐயா

    என் சந்தேகம் தவறாக இருந்தால் உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும் ஐயா

    ReplyDelete
  14. பண்டைய ஜோதிட நூலான பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் (இந்நூலை சிலர் ஜோதிட சாஸ்திரத்தின் பைபிள் என்றும் அழைக்கிறார்கள்) அமாவசையில் பிறப்பவர்கள் லக்னமும் மற்ற கிரக நிலைகளும் நன்றாக இருந்தாலும் ஏழ்மையில் வாட வேண்டி வரும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதிலேயே அதற்கும் பரிகாரமும் சொல்லப் பட்டுள்ளது. இது பொது பலனாகவும் இருக்கலாம். அவரவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  15. ஆதிரைக்கு, தங்களுடைய ட்ரான்ஸ்லிடெரேடெட் தமிழ் படிக்க மிகவும் கடினமாக உள்ளது.வகுப்பறை பதிவில் வலதுபக்கம் கீழ்க்கோடியில் தமிழ் எழுதிஎன்ற சுட்டி உள்ளது. அதன்மீது கர்சரை அழுத்தினால் தகடூர் எழுதி திறக்கும்.
    அதிl தமிழ்‍ஆங்கிலம் தெரிவு செய்து தமிழ்ச் சொற்களை
    ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும்.
    அ=a;ஆ=aa;இ=i;ஈ=iiஉ=u;ஊ=uu;எ=எ;ஏ=எஎ;
    ஐ=ai;ஒ=oஓ=oo;ஒள=oLa
    க்=k ங்=ng ச்=s ஞ்=ஞ்
    ட்=t ண்=N த்=th ந்=ந்
    ப்=p ம்=m ய்=y ர்=ர்
    ல்=l வ்=v ழ்=z ள்=L ற்=R ன்=n
    k+a=க‌ s+aa=சா t+i= டி
    v+ii= வீ th+u=து
    p+uu= பூ
    w+ee=நே;v+0=வொ

    பின்னர் தட்டச்சு செய்த அனைத்தையும்
    செலக்ட் செய்துகொண்டு காபி அழுத்தி பேக்
    பட்டனைத் தட்டி வகுப்பறைக்கு வரவும்.
    அங்கு கமெண்ட்ஸ்க்குப் போய் பேஸ்ட் பண்ணவும்

    ReplyDelete
  16. இந்த topic ஐ பார்த்தவுடனே எனக்கு தோன்றியது செந்தில் கவுண்டமணி காமெடிதான்.
    எங்கே எந்த படம் என்று ஞாபகம் இல்லையே தவிர செந்திலை கவுண்டமணி `அடேய் அமாவாசை` என்று வாஞ்சையுடன் அழைக்கும் ஸ்டைலே தனிதான்.(அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்ன்னு பார்க்குறீங்களா? - பாடத்துக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போகுதோன்னு நினைக்குரீங்களான்னு கேட்டேன்.)
    ஆமாம். அமாவாசையிலே பிறந்தவர்கள் கருப்பாக இருப்பார்களா என்ன?செந்தில் மாதிரி.
    எங்கேயோ சுத்தி பாடத்துக்கு முடிச்சு போட்டுட்டேனா?

    ReplyDelete
  17. /////Tech Shankar said...
    நான், எனது மனைவி, என் மாமனார் - மூவரும் அமாவாசை அன்று பிறந்தவர்களே (:-
    நிஜமாகத்தான்.
    உங்கள் பதிவைப் படித்தவுடன் ஒரு பூஸ்ட் கிடைத்தது - காலையில் பூஸ்ட் கிடைப்பது அரிது. நன்றி////

    பூஸ்ட் இலவசம்தான். காசு கிடையாது. திரும்பத் திரும்ப எத்தனை கோப்பைகள் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  18. ////ananth said...
    என் மனைவி இதற்கு நேர் மாறாக பௌர்ணமியன்று பிறந்தவர். இதற்கு பலன் அடுத்த பதிவில் வெளியிட்டால் தெரிந்து கொள்கிறேன்.////

    நன்றி. அடுத்த பதிவில் எழுதுகிறேன் ஆனந்த்! இந்தப் பதிவே, சென்ற பதிவின் பின்னூடத்தில் நமது வகுப்பறை மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதியதுதான்.

    ReplyDelete
  19. /////RaaKul said...
    எனது ஜாதகத்திலும் சந்திரன் அஸ்தமனமாகிவிட்டார் எனகும் பல மனப் போராட்டங்கள் ஒன்று மாறி ஒன்று வருவதுண்டு. எனது அனுபவத்தில் நான் இதை உணர்கிறேன்./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  20. ////சிங்கைசூரி said...
    அன்புள்ள ஆசானே,
    பாடத்துக்கு நன்றி////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  21. /////Success said...
    வணக்கம் ஐயா
    என் தந்தையார் அமாவாசை அன்று பிறந்தவர். ஆனால் அவர் தற்போது இந்த பூவுலகில் இல்லை.
    நான் வளர்பிறை நவமியில் பிறந்தேன். நான் உண்மையில் ராமன் தான்.
    நன்றி..////

    நல்லது. உங்களுடன் லக்குமணனும் பிறந்திருக்கிறாரா? அதாவது அவரைப் போன்ற சகோதரர் இருக்கிறாரா?

    ReplyDelete
  22. /////kannan said...
    ஆசானே! காலை வணக்கம்
    கண்ணன் அஷ்டமித் திதியில் பிறந்ததின் காரணம் என்ன என்பதனை
    சொல்ல
    முடியுமா குருவே/////

    அஷ்டமியில் பிறந்தவர்கள் துஷ்டர்களாக (சேஷ்டைகள் மிகுந்தவர்களாக) இருப்பார்கள். அந்த மாயக்கண்ணனும் அப்படித்தானே இருந்தார் சாமி! அஷ்டமித் திதியில் பிறந்ததின் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது! கிருஷ்ணன் சார் வந்து சொல்வார். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  23. /////Sreenivasan said...
    குருநாதருக்கு பணிவான வணக்கங்கள் பல,
    உண்மைதான் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான் மனப்போராட்டத்தோடுதான் வாழ்நாட்களை தள்ளிக்கொண்டு வருகிறேன். என்னுடைய சில போராட்டங்கள் காலவெள்ளத்தில் சிறிதாகி விட்டன, சில விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன, சில தோன்றிய நாள் முதல் எப்பொழுதாவது விஸ்வரூபம் எடுத்து கொஞ்ச நேரம் அல்லது நாட்கள் என்னை, எனது செயல்பாட்டை முடக்கி விடுகின்றன.
    தவறாமல் நித்ய அலுவல்களை செய்கிறேனோ இல்லையோ ஆனால் தவறியும் எனக்குள் ஒரு மனப்போராட்டம் நிகழாமல் போவதில்லை. நான் வாங்கி வந்த சாபம் போலும்.
    ஆனால் தாங்கள் கூறியபடி எவ்வாறு ஈடு செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தெரியவில்லை.//////

    சிலவற்றைத் தெரியாமல் வைத்துக்கொள்வதில் சுவாரசியம் இருக்கும். அப்படியே இருங்கள்!
    எதற்காக சுவாரசியத்தை இழக்க வேண்டும்?

    ReplyDelete
  24. //////aadhirai said...
    guru avarkaley, srinivasan avargaley, en thanthaiyar amvasaiyil piranthavar. ungalai polavey pala manaporattangalil kaalathai kalippavar. amavasaiyil piranthavarkal ariyappadum pirabala varthaigakalukku maaraaga, engal oor paguthiyil, nyayavan , neethi man enru peyar eduthirukkirar. sollonnaatha pala thuyargalai anubavithaalum,avar kadaipidikkum, neethi nermaiyil vazhuvathu irunthu varukirar. avarukku avar vaazhkaiyail kidaitha parisu, poradi vazhakaiyil kuzhanthaigalai nalla nailamaikku konduvantha avar manaiviyum, kuzhanthaikal thaan. engalin gunam matrum, vaazhkai valarchiyai parthu, oru kaalathil avarai keli seythavarhal kooda, koduthuvaithavan engirargal. enavey 337 oru athisaya en. nambikkaiyodu irungal./////

    நன்று. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. /////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the lessons.
    Balakumaran.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  26. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    பெருந்தகையே, பாடத்திற்கு நன்றிகள். ஒரே ஒரு ஐய வினா!
    கிராமங்களில் கூறுவார்கள், அமாவாசையன்று பிறந்தவன் அவன் கை
    சும்மா இருக்காது என்று நினைத்தாலே இனிக்கும் (பழைய) படத்தில்,
    கலையுலக பாரதி பாலச்சந்தர் கூட ரஜினி காந்த அவர்களின்
    கதாப்பாத்திரத்தை அப்படி காட்டி இருந்ததாக ஞாபகம்.
    அமாவாசைக்கும் திருடும் குணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லை
    அது வேறு ஒரு அமைப்பில் வருமா? நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    திதியில் பிறந்த ஒரு விதியை (Rule) வைத்து ஒருவனுக்கு எப்படி குணமும் சூழ்நிலைகளும் அமையும்? அதற்கு வேறு பல அமைப்புக்கள் உள்ளன.அதெல்லாம் சொல்லடை. பெளர்ணமியில் பிறந்தவர்கள் திருட்டு எண்ணம் இல்லாதவர்களா என்ன?திருட்டு, மோசடி இதற்கெல்லாம் உரிய நிலைப்பாடுகளைப் பற்றி பிறகு ஒரு நாள் தனிப் பதிவு ஒன்று எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  27. /////kmr.krishnan said...
    இருளில் இருந்து ஒளிக்குச் செல்லும் அமாவாசையை, முன்னேற்றத்திற்கான‌
    முதல்படி என்று எடுத்துக்கொண்டு மகிழ்வோம்./////

    அதானே, முதல்படி என்று பாசிட்டிவாக எடுத்துக்கொள்வோம். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  28. /////Rajan said...
    Is there any effect when Moon and Sun in the same House ( Born in normal days other than 12 degree so it is not a Ammavasai day)
    I have heard that male who born in ammavasai will have a thief mindset.
    Thanks////

    அதெல்லாம் சொல்லடை. பெளர்ணமியில் பிறந்தவர்கள் திருட்டு எண்ணம் இல்லாதவர்களா என்ன?
    திருட்டு, மோசடி இதற்கெல்லாம் உரிய நிலைப்பாடுகளைப் பற்றி பிறகு ஒரு நாள் தனிப் பதிவு ஒன்று எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  29. /////Kumares said...
    ஐயா மன்னிக்கவும்
    உங்கள் கவனத்தை கவர்வதற்காக இந்த கேள்வியை இரண்டு தடவை வேறு வேறு இடங்களில் கேட்டுள்ளேன். மன்னிக்கவும் ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதை விட,மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தம த்தில் பலன்கள் இரட்டிப்பாகும். தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமை களும் இரட்டிப்பாகும் என்று குறிப்பிடுகிறீர்கள்
    ஆனால் வர்கோத்தமம் பாடத்தில் வர்கோத்தமம் பெறும் கிரகம் இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.
    ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்
    கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
    சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும் செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும் சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.
    என்று குறிப்பிட்டிருந்தீர்களே
    சற்று குழப்பமாக உள்ளது தெளிவு படுத்தவும் ஐயா
    என் சந்தேகம் தவறாக இருந்தால் உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும் ஐயா/////

    நமக்கு நன்மை என்பது பணத்தையும், செல்வத்தையும் வைத்துத்தானே?அதீதத் துணிச்சல், அதீத ஞானம்,
    அதீதப் பொறுமை, சகிப்புத்தன்மை என்பதெல்லாம் (உங்களைப் பொறுத்தவரை) கவைக்கு ஆகுமா?
    ஆகவேதான் இரட்டை நிலைப்பாடு. சனி தீய கிரகம்தான். ஆனாலும் அவன் வர்கோத்தமம் பெற்றால் நல்ல ஸ்திரமான வேலையை வாங்கித்தருவானே? அது நன்மையில்லையா? இரட்டை நிலைப்பாடு அனைத்திற்கும் , மனிதனுக்கும் சேர்த்து உண்டு. கடவுளுக்கு மட்டும்தான் ஒரே நிலைப்பாடு. புரிகிறதா முருகா?

    ReplyDelete
  30. /////ananth said...
    பண்டைய ஜோதிட நூலான பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் (இந்நூலை சிலர் ஜோதிட சாஸ்திரத்தின் பைபிள் என்றும் அழைக்கிறார்கள்) அமாவசையில் பிறப்பவர்கள் லக்னமும் மற்ற கிரக நிலைகளும் நன்றாக இருந்தாலும் ஏழ்மையில் வாட வேண்டி வரும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதிலேயே அதற்கும் பரிகாரமும் சொல்லப் பட்டுள்ளது. இது பொது பலனாகவும் இருக்கலாம். அவரவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்./////

    தகவலுக்கு நன்றி ஆனந்த்! அமாவாசையில் பிறந்திருந்தாலும், லக்கினம் மற்றும் இரண்டு, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருந்தால் ஏழ்மை இருக்காது. சொல்லிக்கொண்டு போய்விடும்!

    ReplyDelete
  31. //////kmr.krishnan said...
    ஆதிரைக்கு, தங்களுடைய ட்ரான்ஸ்லிடெரேடெட் தமிழ் படிக்க மிகவும் கடினமாக உள்ளது.வகுப்பறை பதிவில் வலதுபக்கம் கீழ்க்கோடியில் தமிழ் எழுதிஎன்ற சுட்டி உள்ளது. அதன்மீது கர்சரை அழுத்தினால் தகடூர் எழுதி திறக்கும். அதிl தமிழ்‍ஆங்கிலம் தெரிவு செய்து தமிழ்ச் சொற்களை
    ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும். அ=a;ஆ=aa;இ=i;ஈ=iiஉ=u;ஊ=uu;எ=எ;ஏ=எஎ;
    ஐ=ai;ஒ=oஓ=oo;ஒள=oLa க்=k ங்=ng ச்=s ஞ்=ஞ்
    ட்=t ண்=N த்=th ந்=ந் ப்=p ம்=m ய்=y ர்=ர்
    ல்=l வ்=v ழ்=z ள்=L ற்=R ன்=n k+a=க‌ s+aa=சா t+i= டி
    v+ii= வீ th+u=து p+uu= பூ w+ee=நே;v+0=வொ
    பின்னர் தட்டச்சு செய்த அனைத்தையும் செலக்ட் செய்துகொண்டு காபி அழுத்தி பேக்
    பட்டனைத் தட்டி வகுப்பறைக்கு வரவும். அங்கு கமெண்ட்ஸ்க்குப் போய் பேஸ்ட் பண்ணவும்/////

    உங்கள் பரிந்துரைக்கும், உதவிக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
    அப்படியே nhm writer மென்பொருளை இணையத்தில் இருந்து (இலவசமாக) இறக்கி கணினியில் நிறுவிவிட்டாலும் எளிதில் தமிழில் தட்டச்சலாம்

    ReplyDelete
  32. /////Blogger minorwall said...
    இந்த topic ஐ பார்த்தவுடனே எனக்கு தோன்றியது செந்தில் கவுண்டமணி காமெடிதான்.
    எங்கே எந்த படம் என்று ஞாபகம் இல்லையே தவிர செந்திலை கவுண்டமணி `அடேய் அமாவாசை` என்று வாஞ்சையுடன் அழைக்கும் ஸ்டைலே தனிதான்.(அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்ன்னு பார்க்குறீங்களா? - பாடத்துக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போகுதோன்னு நினைக்குரீங்களான்னு கேட்டேன்.)
    ஆமாம். அமாவாசையிலே பிறந்தவர்கள் கருப்பாக இருப்பார்களா என்ன?செந்தில் மாதிரி.
    எங்கேயோ சுத்தி பாடத்துக்கு முடிச்சு போட்டுட்டேனா?////

    அமாவாசையன்று இரவில்’ கருங்கும்மென்று இருள் சூழ்ந்திருக்கும், அதை வைத்துக் கருப்பான நிறத்துடன் இருப்பவர்களை அமாவாசை என்று நக்கலடிப்பது சிலருக்குப் பழக்கம். அதைத்தான் அப்படத்தில் மணியண்ணன் செய்திருப்பார். பலருக்கும் நிறம், பெற்றோர்களிடமிருந்து கிடைப்பது. ஜீன்! அமாவாசைப் பிறப்பிற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை!

    ReplyDelete
  33. Dear sir,
    Thankyou for the lesson today about Amavasai. So it is an Avayogam. But Moon will not be considered as Malefic. Is it not? I am still in confusion| Sorry to bother you again. Will you please explain me about that.

    Thanks

    Padma

    ReplyDelete
  34. /////Kumares said...
    ஐயா மன்னிக்கவும்
    ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதை விட,மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தம த்தில் பலன்கள் இரட்டிப்பாகும். தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமை களும் இரட்டிப்பாகும் என்று குறிப்பிடுகிறீர்கள்........................ /////
    ////உங்கள் கவனத்தை கவர்வதற்காக இந்த கேள்வியை இரண்டு தடவை வேறு வேறு இடங்களில் கேட்டுள்ளேன். மன்னிக்கவும் /////

    ஒரு இடத்தில் - அதாவது சம்பந்தப்பட்ட பதிவில் கேட்டால் போதும். இப்படி ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் கேட்டுக் குழப்பினால் - டெலீட் செய்வதைத்தவிர என்க்கு வேறு வழியில்லை! அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்

    ReplyDelete
  35. ////padma said...
    Dear sir,
    Thankyou for the lesson today about Amavasai. So it is an Avayogam. But Moon will not be considered as Malefic. Is it not? I am still in confusion| Sorry to bother you again. Will you please explain me about that.
    Thanks
    Padma/////

    சந்திரன் சுபக்கிரகம் Moon will not be considered as Malefic

    ReplyDelete
  36. ஆசிரியரே ,
    சந்திரன் மாந்திஉடன் மூலத்த்ரிகோணம் பெற்று மூன்றாம் வீட்டில் இருந்தால் பலன் என்ன..அந்த வீட்டில் 37 பரல்கள் உள்ளன.என்ன பலன் ஆசிரியரே .

    ReplyDelete
  37. அம்மாவாசை பிறக்கவில்லை , ஆனால் நீச சந்திரன் என்றும் மனபோரடம் மட்டும் தருகிறான் . வாத்தியார் ஐயா வகுபிற்க்கு வந்து இது இப்படி தான், மற்ற முடியாது என்று புரிந்த பின்னே , take it easy policy...

    ReplyDelete
  38. அம்மாவாசை பிறக்கவில்லை , ஆனால் நீச சந்திரன் என்றும் மனபோரடம் மட்டும் தருகிறான் . வாத்தியார் ஐயா வகுபிற்க்கு வந்து இது இப்படி தான், மற்ற முடியாது என்று புரிந்த பின்னே , take it easy policய்...///
    சகோதரி பிரியா, விருச்சிகராசியில் நீச சந்திரனை தாங்கள் பெற்றிருந்தலும்
    செவ்வாய்க்கு சொந்தவீடு அல்லவா? தாங்கள் வீரத்திலும் பண்புகளிலும் சிறந்தவர்
    தானே ஆனால் லக்கனம் தெரியது.
    சுந்தரி.

    ReplyDelete
  39. http://www.google.com/transliterate/indic

    I am using this easy link for typing in Tamil

    ReplyDelete
  40. வணக்கம் ஐயா,
    இது போல், பூரண கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு ஏதேனும் விதிகள் உண்டா?
    நன்றி

    ReplyDelete
  41. vaathiyaar avarkal nagaisuvaiyodu nandraaga ezhuthukiraar mikka nandru

    ReplyDelete
  42. வணக்கம் வாத்தியாரே..
    பாடம் அருமை..அஷ்டக வர்க்கம் நன்றாக இருந்தாலும் அமாவாசை சந்திரன் அவுட் தானா..
    சில நாட்களாக மின் அஞ்சல் பாடம் வரலியே ஆசானே..
    அன்புடன் ,
    ராஜ்

    ReplyDelete
  43. /////prithvi said...
    ஆசிரியரே ,
    சந்திரன் மாந்திஉடன் மூலத்திரிகோணம் பெற்று மூன்றாம் வீட்டில் இருந்தால் பலன் என்ன..அந்த வீட்டில் 37 பரல்கள் உள்ளன.என்ன பலன் ஆசிரியரே .//////

    சந்திரன் மாந்தியுடன் சேர்ந்ததால் பெரிய நன்மைகள் எதுவும் இல்லை. இருந்தாலும் அந்த வீட்டின் பரல்கள் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு அசாத்திய துணிச்சலை அது கொடுக்கும்

    ReplyDelete
  44. /////Priya said...
    அம்மாவாசை பிறக்கவில்லை , ஆனால் நீச சந்திரன் என்றும் மனப்போராட்டம் மட்டும் தருகிறான் . வாத்தியார் ஐயா வகுபிற்கு வந்து இது இப்படி தான், மற்ற முடியாது என்று புரிந்த பின்னே , take it easy policy...

    புரிதலுக்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  45. /////minorwall said...
    http://www.google.com/transliterate/indic
    I am using this easy link for typing in Tamil/////

    தகவலுக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  46. ////மதி வேங்கை said...
    வணக்கம் ஐயா,
    இது போல், பூரண கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு ஏதேனும் விதிகள் உண்டா?
    நன்றி////

    பின்னால் பாடம் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  47. //////rubamathisurenthiran said...
    vaathiyaar avarkal nagaisuvaiyodu nandraaga ezhuthukiraar mikka nandru///////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  48. /////Gresilz said...
    வணக்கம் வாத்தியாரே..
    பாடம் அருமை..அஷ்டக வர்க்கம் நன்றாக இருந்தாலும் அமாவாசை சந்திரன் அவுட் தானா..
    சில நாட்களாக மின் அஞ்சல் பாடம் வரலியே ஆசானே..
    அன்புடன் ,
    ராஜ்//////

    ஒரு நாளைக்கு ஒரு பாடம் வந்தால் போதாதா? இங்கே தொடர்ந்து எழுதுகிறேனே!
    இரண்டு குதிரைகளை எப்படி ஒன்றாக ஓட்ட முடியும்? அங்கே தேவைப்படும்போது மட்டும் எழுதுவேன். எழுதும்போது, இங்கே பதிவில் தகவல் அளிப்பேன். கவலை வேண்டாம்!

    ReplyDelete
  49. Dear Sir

    Unmai than porattam illadha valkai rasanai illadha valkai(Uppilladha pandam).

    Migavum Arumayana Varigal.

    Poradanum Poradanum Jeyikiravaraikkum Poradanum.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  50. ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நான் தங்களின் அன்பு மாணவன் என்பதனால் கேக்கிறேன் ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    சுமார் 12 . 5 வருடம் என்னை வாட வைத்த சந்தேகம் தாங்கள் தயவ் செய்து தீர்க்க வேண்டும் ஆசானே !!!!!!!!!!!!!!!!!!!!

    1 உண்மை மேலும் உம்மை என்பதும் ஒரே
    பொருளா அல்லது வேறு வேறு பொருளா ( விளக்கம் தேவை ஐயா )

    2. ஒரு சில நபர்கள் (சந்நியாசி, சடுகுடுகாரர்கள், உண்மையான சாமியார்கள் @ இல்லறத்தில் உள்ளவர்கள்) ஒரு சிலரை மட்டும் பார்த்து இது நடக்கும் என்று சொல்லுவது அப்படியே நடக்கின்றதே எப்படி சாத்தியமாகின்றது. அவர்களுக்கு எங்கு இருந்து சரியாக சொல்லகூடிய சக்தி கிடைக்கின்றது. ஒரு சிலருக்கு மட்டும் எதனால் கூறுகின்றனர் ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    3. மாதா, பிதா, குரு , அதன் பின்னர்தானே இறைவன் . நாம் இறைவனுக்கும் மட்டும் முதலில் தலை வணக்குகிறோம் அல்லது பயப்படுகின்றோம் எதனால் ஐயா!!!! நமது இந்து தர்மம் சொல்லுவதும் அதைத்தானே ஐயா!!! பழனி ஆண்டவர் தத்துவவெம் அதுதானே, நாம் எதனால் நடைமுறை செய்வது இல்லை இறைவன் மேல் உள்ளபயமா ஐயா அல்லது தனது சுயநலத்தால் தான் தானா

    4. மாதா, பிதா, குரு , அதன் பின்னர்தான் இறைவன் என்பதனை இந்த
    உலகில் வேறு சமயம் ஒத்து கொள்ளுகின்றதா ஐயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    5. மாதா, பிதாவிற்கு அடுத்த நிலைய்ல் உள்ள குருநாதர் கிடைத்து உள்ளார் என்கின்ற சொல்லமுடியாத சந்தோஷத்தில் கேக்கின்றேன் ஐயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

    ReplyDelete
  51. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Unmai than porattam illadha valkai rasanai illadha valkai(Uppilladha pandam).
    Migavum Arumayana Varigal.
    Poradanum Poradanum Jeyikiravaraikkum Poradanum.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது.நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  52. kannan said...
    ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    நான் தங்களின் அன்பு மாணவன் என்பதனால் கேட்கிறேன் ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    சுமார் 12 . 5 வருடம் என்னை வாட வைத்த சந்தேகம் தாங்கள் தயவு செய்து தீர்க்க வேண்டும் ஆசானே !!!!!!!!!!!!!!!!!!!!
    ////// 1 உண்மை மேலும் உம்மை என்பதும் ஒரே
    பொருளா அல்லது வேறு வேறு பொருளா ( விளக்கம் தேவை ஐயா )//////

    உண்மை ஒன்றுதான். உண்மைக்கு ஒரே வடிவம்தான். வடிவேலன் கையில் இருக்கும் வேலைப் போல!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////2. ஒரு சில நபர்கள் (சந்நியாசி, சடுகுடுகாரர்கள், உண்மையான சாமியார்கள் @ இல்லறத்தில் உள்ளவர்கள்) ஒரு சிலரை மட்டும் பார்த்து இது நடக்கும் என்று சொல்லுவது அப்படியே நடக்கின்றதே எப்படி சாத்தியமாகின்றது. அவர்களுக்கு எங்கு இருந்து சரியாக சொல்லகூடிய சக்தி கிடைக்கின்றது. ஒரு சிலருக்கு மட்டும் எதனால் கூறுகின்றனர் ஐயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!/////

    சிலருக்கு intution power இருக்கும். அதனால் அவர்கள் சொல்வது சரியாக இருக்கும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////3. மாதா, பிதா, குரு , அதன் பின்னர்தானே இறைவன் . நாம் இறைவனுக்கும் மட்டும் முதலில் தலை வணக்குகிறோம் அல்லது பயப்படுகின்றோம் எதனால் ஐயா!!!! நமது இந்து தர்மம் சொல்லுவதும் அதைத்தானே ஐயா!!! பழனி ஆண்டவர் தத்துவவெம் அதுதானே, நாம் எதனால் நடைமுறை செய்வது இல்லை இறைவன் மேல் உள்ளபயமா ஐயா அல்லது தனது சுயநலத்தால் தான் தானா///////

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் நமது (தமிழர்களின்) வாழ்க்கை நேறி. அதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. அன்னையையும் தந்தையையும் போற்றி வணங்குங்கள் தெய்வம் உங்களைத் தேடிவரும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //// 4. மாதா, பிதா, குரு , அதன் பின்னர்தான் இறைவன் என்பதனை இந்த
    உலகில் வேறு சமயம் ஒத்து கொள்ளுகின்றதா ஐயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//////

    வேறு சமயங்களைப் பற்றி பேசுவதற்கு நமக்கு உரிமை இல்லை. லைசென்ஸ் இல்லை. ஆகவே அதை மறந்து விடுங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
    //// 5. மாதா, பிதாவிற்கு அடுத்த நிலையில் உள்ள குருநாதர் கிடைத்து உள்ளார் என்கின்ற சொல்லமுடியாத சந்தோஷத்தில் கேக்கின்றேன் ஐயா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//////

    குருவென்று யாரைச் சொல்கிறீர்கள்? என்னையா? உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். நான் எளியவன்.ஜோதிடத்தை ஒரளவிற்கு அறிந்தவன். எழுத்தாளன். அறிந்த ஜோதிடக் கலையை மற்றவர்களுடன்
    பகிர்ந்துகொள்ளும் முகமாகப் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறென். அவ்வளவுதான்!

    குரு அது இது என்று சொல்லி என் கையில் கமண்டலத்தைக் கொடுத்துவிடாதீர்கள்!:-))))))

    வேறு ஒரு நல்ல குருவைத் தேடிப் பிடியுங்கள்!

    எனக்கு நண்பன், ஆசான், குரு என்பதெல்லாம் ஒரு ஒரு ஆசாமிதான். அவன் கையில் தண்டத்துடன் பழநி மலை மீது இருக்கின்றான்.

    விளக்கங்கள் போதுமா அன்பரே?

    ReplyDelete
  53. மிக்க நன்றி ஆசிரியரே

    //
    பூஸ்ட் இலவசம்தான். காசு கிடையாது. திரும்பத் திரும்ப எத்தனை கோப்பைகள் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  54. அய்யா வணக்கம்

    அடியேன் வெளியூர் சென்று இருந்தேன் அதனால் தான் தாமதம் அய்யா ..

    எனக்கு தெரிந்து அமாவாசை இல் பிறந்தவர்கள் (2 பேர்) இதய திருடர் களாக உள்ளார் ....அவர்கள் அதீத காதல் உணர்ச்சி உடன் காணபடுகிரார்கள்(இருவரும் என் நணபர்கள் )அமாவசை இது போன்ற பலனை ஏற்படுத்துமா?அதே நேரத்தில் மனபோராட்டம் காணப்படுகிரது

    அருமயான பாடத்திற்க்கு நன்றிகள் வணக்கம் .....

    ReplyDelete
  55. Dear Sir,

    Thankyou very much for the clarification. Todays lesson is good and useful. Thanks a lot.

    Padma

    ReplyDelete
  56. ///Tech Shankar said...
    மிக்க நன்றி ஆசிரியரே //
    பூஸ்ட் இலவசம்தான். காசு கிடையாது. திரும்பத் திரும்ப எத்தனை கோப்பைகள் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! உங்களின் பாராட்டிற்கு நன்றி!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  57. ////astroadhi said...
    அய்யா வணக்கம்
    அடியேன் வெளியூர் சென்று இருந்தேன் அதனால் தான் தாமதம் அய்யா ..
    எனக்கு தெரிந்து அமாவாசை இல் பிறந்தவர்கள் (2 பேர்) இதயத் திருடர்களாக உள்ளார் ....அவர்கள் அதீத காதல் உணர்ச்சி உடன் காணபடுகிறார்கள்(இருவரும் என் நணபர்கள் )அமாவசை இது போன்ற பலனை ஏற்படுத்துமா?அதே நேரத்தில் மனபோராட்டம் காணப்படுகிறது
    அருமையான பாடத்திற்க்கு நன்றிகள் வணக்கம் .....////

    பெண்களாக இருந்தால் இதயத்திருடி என்பீர்களா? அல்லது உள்ளம் கவர் கள்ளி என்பீர்களா?

    ReplyDelete
  58. ////padma said...
    Dear Sir,
    Thankyou very much for the clarification. Todays lesson is good and useful. Thanks a lot.
    Padma////

    உங்களுக்கு உபயோகமாக இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே! நன்றி சகோதரி!

    ReplyDelete
  59. கோகுல கிருஷ்ணன் அஷ்டமித் திதியில் பிறந்தாலும் பிறந்தவுடன்
    பெற்றோரை பிரீந்து வளர நேர்ந்தது நவமியில் ஸ்ரீராமபிரானே பிறந்தாலும் வாலிப பருவத்தில் பெற்றோரை பிரீந்து கஷ்டபட நேர்ந்தது.நீங்கள் சொன்ன சில விசயங்களை positive வாகவே இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  60. ////jey said...
    கோகுல கிருஷ்ணன் அஷ்டமித் திதியில் பிறந்தாலும் பிறந்தவுடன்
    பெற்றோரை பிரீந்து வளர நேர்ந்தது நவமியில் ஸ்ரீராமபிரானே பிறந்தாலும் வாலிப பருவத்தில் பெற்றோரை பிரீந்து கஷ்டபட நேர்ந்தது.நீங்கள் சொன்ன சில விசயங்களை positive வாகவே இருக்கிறது. நன்றி////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com