மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.12.09

Doubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்!

..............................................................................................................
Doubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்!

வகுப்பறையில் இன்றையத் தேதியில் 1,131 மாணவர்கள் இருக்கிறார்கள். 5 மாதங்களுக்கு முன்பு, அதாவது 15.7.2009 அன்று இருந்தவர்களின் எண்ணிக்கை 300 மட்டுமே. அதற்கு ஒரு ஆண்டு முன்பு இருந்தவர்களின் எண்ணிக்கை 60 மட்டுமே!

புது முகங்களுக்கு, பழைய பாடங்களில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சிலருக்கு அத்தனை பாடங்களையும் சரியாகப் படிக்காததால் சந்தேகங்கள். சிலருக்குப் படித்தும் சந்தேகங்கள். உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம் என்று உள்ளேன். ஆகவே உங்களது சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

மின்னஞ்சலின் Subject பெட்டியில் Doubts in Lessons என்று மறக்காமல் குறிப்பிடவும்.

ஒரு மின்னஞ்சலில் அதிகபட்சமாக ஐந்து கேள்விகள் கேட்கலாம். அதற்கும் மேலாகக் கேள்விகளை வைத்திருப்பவர்கள் மற்றொரு மின்னஞ்சல் மூலமாகக் கேளுங்கள்.
-------------------------------------------------
இரண்டு இளைஞர்கள் தேவாலத்திற்குச் சென்றார்கள். இருவரில் ஒருவன் ஈடுபாட்டுடன் சென்றவன்.

அடுத்தவன், நண்பனின் வற்புறுத்தலுக்காகச் சென்றவன்.

பாதிரியார் அருமையாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். துவங்கி 2 மணி நேரமாகியும், உற்சாகமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

வற்புறுத்தலுக்காகச் சென்றவன் புகை வண்டி ஆசாமி (அதாவது chain smoker) அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.தன் நண்பனிடம் கிசுகிசுத்தான்:

“டேய் மெல்ல எழுந்து போய், ஒரு தம் அடித்து விட்டு வருகிறேன்”

”அதெல்லாம் கூடாது. சும்மா உட்கார், எழுந்து சென்றால், பாதிரியாரின் கண்ணில் படும்.”

”அப்படியென்றால், இங்கேயே சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிடவா?”

”அதெல்லாம், கூடாது. கொன்று விடுவேன். பாதியார் பார்த்தால் கோபம் கொள்வார்!”

”கோபம் கொண்டால் அவர் எப்படிப் பாதிரியாராக இருக்க முடியும்? நீ எழுந்து அவரையே கேள். இல்லையென்றால் நான் எழுந்து கேட்கிறேன்”

அவனுடைய நச்சரிப்புத் தாங்காமல், கூட்டிக்கொண்டு போன நண்பன், எழுந்து நின்று கேட்டான்” Father, பிரார்த்தனையின் போது, புகை பிடிக்கலாமா?”

பாதிரியார் பதில் சொன்னார்,” இல்லை, கூடாது!”

நம்ம ஆள் சொன்னான், உனக்குக் கேட்கத் தெரியவில்லை. நான் கேட்கிறேன் பார் என்று கிசுகிசுத்தவன், எழுந்து நின்று, கணீரென்ற குரலில் கேட்டான். “Father, புகைபிடிக்கும் போது பிரார்த்தனை செய்யலாமா?”

“செய்யலாம். இறைவனைப் பிரார்த்திப்பதற்கு எதுவும் தடையில்லை!”
---------------------------------------------------------------------
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?

”அகடவிகட சாமர்த்தியம் எப்படி இருக்கும் என்பதற்காக இதைச் சொன்னேன்”

”அது சரி, வகுப்பறையில், எதற்காகச் சொன்னீர்கள்?

”சந்தேகத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாரே, வாத்தியார் என்று தங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களை, பொதுச் சந்தேகம் போல தோற்றமளிக்கும்படி யாரும் கேட்க வேண்டாம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்”
---------------------------------------------------------------------
அடுத்துவரும் 21 நாட்களும் சந்தேகங்கள் தீர்க்கப்படும் நாட்கள். அரசில் குறை கேட்கும் வாரம் என்று நடத்துவார்களே. அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

தினமும், இரண்டு அல்லது மூன்று சந்தேகங்களுக்கு (பதில்களின் அளவைப் பொறுத்து) பதில் அளிக்கப்படும்.ஆகவே எழுதிவிட்டு, அதற்கு அடுத்த நாளே பதில் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். வரிசைப்படி வரும்

முதல் சந்தேகத்தை மாணவி ஒருவர் கேட்டு இந்தத் தொடர் பதிவைத் துவக்கி வைத்துள்ளார். அவர் கேட்டுள்ள கேள்வி: “சுயவர்க்கம் என்றால் என்ன? அதை எப்படித் தெரிந்துகொள்வது?” அதற்கான விரிவான பதில் நாளையப் பதிவில்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

46 comments:

  1. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    இதுவும் நன்றே!
    வாய்ப்புக்கு நன்றி கூறி
    வருகிறேன் இன்றே!!
    நன்றிகள் குருவே!!!

    ReplyDelete
  2. அய்யா இனிய காலை வணக்கம்.

    பாடத்திட்டத்தில் புது யுக்தி ஆரம்பித்துள்ளீர்கள் அய்யா உங்கள் முயற்சியை நாங்கள் சரியாக பயன் படுத்திகொள்வோம் பயன் பெருவோம் நன்றி வணக்கம்

    ReplyDelete
  3. ஐயா!!!!

    இத!

    இத!!

    இததான்!!!

    எதிர்பார்த்தேன்.

    ஹா!!!!!!!!

    ஹா !!!!!!!!!!!!!!!

    ஹா !!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. vanakam ayya,

    Another thiruvilayadal?
    indha thiruvilayadalil tharumigal pala. so, kaylvigalum pala pala!

    porkizhi thangalukay kidaikatum.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா..

    நேற்று மாலை நான் ஊர் திரும்பினேன்..

    மின்னஞ்சல் பாடம் வந்தது..மிக்கநன்றி.

    நீங்களும், உங்கள் சந்தேகங்களும்! வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. அய்யா,

    I was expecting this from you. Thanks a lot!!! .
    I just sent a mail with 5 questions.

    Thanks
    Saravana

    ReplyDelete
  7. ///Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், இதுவும் நன்றே! வாய்ப்புக்கு நன்றி கூறி வருகிறேன் இன்றே!!
    நன்றிகள் குருவே!!!/////

    மட்டையுடன் நான் மைதானத்தில் இறங்கிவிட்டேன். ஆளாளுக்கு ஒரு ஓவர். நீங்கள் ஸ்பின் பெளலிங்கா? ஃபாஸ்ட் பெளலிங்கா?
    வாருங்கள் காத்திருக்கிறேன் ஆலாசியம்!

    ReplyDelete
  8. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்.
    பாடத்திட்டத்தில் புது யுக்தி ஆரம்பித்துள்ளீர்கள் அய்யா உங்கள் முயற்சியை நாங்கள் சரியாக பயன் படுத்திகொள்வோம் பயன் பெருவோம் நன்றி வணக்கம்////

    பயனடைந்தால் சரிதான்! எனக்கும் அதுதான் விருப்பம்!

    ReplyDelete
  9. /////kannan said...
    ஐயா!!!! இத! இத!! இதைத்தான்!!! எதிர்பார்த்தேன்.
    ஹா!!!!!!!! ஹா !!!!!!!!!!!!!!! ஹா !!!!!!!!!!!!!!!!!!!!!!

    ஹி..ஹி..ஹீ...நானும் தயார்!

    ReplyDelete
  10. ////ramakrishnan said...
    vanakam ayya,
    Another thiruvilayadal?
    indha thiruvilayadalil tharumigal pala. so, kellvigalum pala pala!
    porkizhi thangalukay kidaikatum.////

    கிடைத்தால் அதைப் பழநி அப்பனிடம் கொடுத்து விடுவேன்.

    ReplyDelete
  11. எல்லா சந்தேகங்களையும் உங்கள் விளக்கங்களையும் பதிவில் வெளியிடவீர்கள் என நினைக்கிறன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. /////Success said...
    வணக்கம் ஐயா..
    நேற்று மாலை நான் ஊர் திரும்பினேன்..
    மின்னஞ்சல் பாடம் வந்தது..மிக்கநன்றி.
    நீங்களும், உங்கள் சந்தேகங்களும்! வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன்/////

    பாடத்தில் தெரியாதவற்றை, வித்தியாசமாகக் கேளுங்கள். உங்கள் கேள்வி பலருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கட்டும்!

    ReplyDelete
  13. Dear Sir,

    Thanks for the lessons,

    Balakumaran.

    ReplyDelete
  14. Present Sir,

    We got good opportunity!
    We have to learn something special 21 days.

    Thanks

    ReplyDelete
  15. பரமஹம்சரைப்போலவே அவருடைய துணைவியார் சாரதாமணி அன்னையும்
    பல சீடர்களை உருவாக்கினார்கள். ஒருமுறை பெண் சீடர் ஒருவர், "தூய அன்னையே! மாதத்தின் அந்த சங்கடமான 3 நாட்களில் தாங்க‌ள் உபதேசித்த‌
    புனித மந்திரங்க‌ளை ஜ‌பிக்கத் தயக்கமாக உள்ளது. ஏனெனில் அப்போது எனக்கு அசுத்தமாக இருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்குகிறது. எனவே
    நான் அப்போது ஜபிப்பதில்லை.இது சரியா? தவறா?"என்று கேட்டார்.அன்னை
    அவர்கள் சற்றும் தயங்காமல்,"நீ எப்போதெல்லாம் தூய்மையாக உணர்கிறாயோ அப்போது மட்டும் ஜபம் செய்.மற்ற நேரங்களில் ஜபம் செய்யா
    விட்டாலும் உனக்காக நான் அதிக அள‌வில் ஜபம் செய்வேன். கவலைப் படாதே"என்று ஆறுதல் கூறினார்கள்.இதே கேள்வியை இன்னொரு அம்மணி
    இப்படிக் கேட்டார்:"தூய அன்னையே! அந்த மூன்று நாட்களிலும் கூட நான்
    ஜபம் செய்கிறேனே;அவ்வாறே தொடரட்டுமா?இல்லை என் பழக்கத்தில் மாற்றம் தேவையா?"தூய‌ அன்னையார் ச‌ற்றும் த‌‌ய‌ங்காம‌ல்,"உன் ப‌ழ‌க்க‌த்தை
    மாற்ற‌ வேண்டிய‌ தேவை என்ன‌?த‌ய‌க்க‌மில்லாம‌ல் எல்லா நாட்க‌ளிலும் தைல தாரைபோல‌ இறைச் சிந்த‌னையிலேயே இரு. அத‌ற்கு தொட‌ர் ஜ‌ப‌ம் ந‌ல்ல‌
    சாத‌ன‌மாகும்!"என்றார்க‌ள்.அன்னையிட‌ம் இந்த‌ முர‌‌ண்பாடான‌ அறிவுரையைப்
    ப‌ற்றி வின‌விய‌போது,"என் குழ‌ந்தைக‌ளின் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம், ஆன்மீக‌ வ‌ள‌ர்ச்சியைப் பொறுத்து என் உப‌தேச‌ம் அவ‌ர‌வ‌ருக்கும் எற்ற‌ப‌டி அமைகிற‌து".
    த‌ங்க‌ளின் பாதிரியார் க‌ற்ப‌னைக் க‌தைக்கு இசைவான‌ உண்மைக் க‌தை இது.

    ReplyDelete
  16. ////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the lessons,
    Balakumaran./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  17. /////jadam said...
    Present Sir,
    We got good opportunity!
    We have to learn something special 21 days.
    Thanks////

    வாத்தியார் கிரவுண்டில் மட்டையுடன் (with bat) தயாராக நிற்கிறார். எங்கே பவுன்சராகப் போடுங்கள் பார்க்கலாம்!

    ReplyDelete
  18. /////kmr.krishnan said...
    பரமஹம்சரைப்போலவே அவருடைய துணைவியார் சாரதாமணி அன்னையும்
    பல சீடர்களை உருவாக்கினார்கள். ஒருமுறை பெண் சீடர் ஒருவர், "தூய அன்னையே! மாதத்தின் அந்த சங்கடமான 3 நாட்களில் தாங்க‌ள் உபதேசித்த‌
    புனித மந்திரங்க‌ளை ஜ‌பிக்கத் தயக்கமாக உள்ளது. ஏனெனில் அப்போது எனக்கு அசுத்தமாக இருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்குகிறது. எனவே
    நான் அப்போது ஜபிப்பதில்லை.இது சரியா? தவறா?"என்று கேட்டார்.அன்னை
    அவர்கள் சற்றும் தயங்காமல்,"நீ எப்போதெல்லாம் தூய்மையாக உணர்கிறாயோ அப்போது மட்டும் ஜபம் செய்.மற்ற நேரங்களில் ஜபம் செய்யா
    விட்டாலும் உனக்காக நான் அதிக அள‌வில் ஜபம் செய்வேன். கவலைப் படாதே"என்று ஆறுதல் கூறினார்கள்.இதே கேள்வியை இன்னொரு அம்மணி
    இப்படிக் கேட்டார்:"தூய அன்னையே! அந்த மூன்று நாட்களிலும் கூட நான்
    ஜபம் செய்கிறேனே;அவ்வாறே தொடரட்டுமா?இல்லை என் பழக்கத்தில் மாற்றம் தேவையா?"தூய‌ அன்னையார் ச‌ற்றும் த‌‌ய‌ங்காம‌ல்,"உன் ப‌ழ‌க்க‌த்தை
    மாற்ற‌ வேண்டிய‌ தேவை என்ன‌?த‌ய‌க்க‌மில்லாம‌ல் எல்லா நாட்க‌ளிலும் தைல தாரைபோல‌ இறைச் சிந்த‌னையிலேயே இரு. அத‌ற்கு தொட‌ர் ஜ‌ப‌ம் ந‌ல்ல‌
    சாத‌ன‌மாகும்!"என்றார்க‌ள்.அன்னையிட‌ம் இந்த‌ முர‌‌ண்பாடான‌ அறிவுரையைப்
    ப‌ற்றி வின‌விய‌போது,"என் குழ‌ந்தைக‌ளின் ம‌ன‌ப்ப‌க்குவ‌ம், ஆன்மீக‌ வ‌ள‌ர்ச்சியைப் பொறுத்து என் உப‌தேச‌ம் அவ‌ர‌வ‌ருக்கும் எற்ற‌ப‌டி அமைகிற‌து".
    த‌ங்க‌ளின் பாதிரியார் க‌ற்ப‌னைக் க‌தைக்கு இசைவான‌ உண்மைக் க‌தை இது.////

    நல்ல கதை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  19. ////Saravana said...
    அய்யா,
    I was expecting this from you. Thanks a lot!!! .
    I just sent a mail with 5 questions.////

    ஐந்தில் மூன்று No ball ஆக இருக்கிறதே சாமி! சரி பார்க்கலாம்!

    ReplyDelete
  20. ////Uma said...
    எல்லா சந்தேகங்களையும் உங்கள் விளக்கங்களையும் பதிவில் வெளியிடவீர்கள் என நினைக்கிறன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.////

    ஆமாம். எல்லாம் வெளிப்படையாகத்தான். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  21. Good afternoon sir,

    i would like to receive mail lessons from you. can you please guide me what should i do to get mail lessons.

    Thank you sir..

    ReplyDelete
  22. நல்லதொரு வாய்ப்பு. நம் மாணவர்கள் இதை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். நான் எதுவும் கேட்க மாட்டேன். என் பெரும்பாலான கேள்விகளுக்கு வகுப்பறை பாடத்திலேயே பதில்கள் உள்ளன. அல்லது நான் தனிப்பட்ட முறையில் படித்த புத்தகங்களில் உள்ளன. இன்னும் படிக்க வேண்டியது நிறைய உள்ளன. என்னிடம் இல்லாதது போதிய நேரம் மட்டும்தான்

    ReplyDelete
  23. Sir,

    Thanks for acknowledging my questions.
    ///
    I was expecting this from you. Thanks a lot!!! .
    I just sent a mail with 5 questions.////

    ஐந்தில் மூன்று No ball ஆக இருக்கிறதே சாமி! சரி பார்க்கலாம்!///

    Those all 5 questions clarifies me lot of doubts. I reuest you to please answer them. I was waiting for so many day for this session.

    Thanks
    Saravana

    ReplyDelete
  24. ////Arun said...
    Good afternoon sir,
    i would like to receive mail lessons from you. can you please guide me what should i do to get mail lessons.
    Thank you sir..///

    Please inform your mail ID.

    ReplyDelete
  25. ////ananth said...
    நல்லதொரு வாய்ப்பு. நம் மாணவர்கள் இதை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். நான் எதுவும் கேட்க மாட்டேன். என் பெரும்பாலான கேள்விகளுக்கு வகுப்பறை பாடத்திலேயே பதில்கள் உள்ளன. அல்லது நான் தனிப்பட்ட முறையில் படித்த புத்தகங்களில் உள்ளன. இன்னும் படிக்க வேண்டியது நிறைய உள்ளன. என்னிடம் இல்லாதது போதிய நேரம் மட்டும்தான்////

    உங்களிடம் இருந்து இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன். அதையே எழுதியிருக்கிறீர்கள். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  26. ////Saravana said...
    Sir,
    Thanks for acknowledging my questions.
    ///
    I was expecting this from you. Thanks a lot!!! .
    I just sent a mail with 5 questions.////
    ஐந்தில் மூன்று No ball ஆக இருக்கிறதே சாமி! சரி பார்க்கலாம்!///
    Those all 5 questions clarifies me lot of doubts. I reuest you to please answer them. I was waiting for so many day for this session.
    Thanks
    Saravana//////

    Okay! But, no more personal questions in this session. Your quota for personal question is over!

    ReplyDelete
  27. Dear Sir

    Kelvi Kanaikal Kazhai Katta Thuvankividum.. Padhilum Arumayaga Irukkum.

    Kelvi Kanaikal Thodukkava Asiriyare?

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  28. Dear Sir

    What Happen sir?

    my comments is not yet approve? Is there any priority.

    more than 1 1/2 years blog reader..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  29. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    பாடங்களுக்கு நன்றி.
    10ஆம் இடத்தின் மீதான கிரக பார்வை பற்றியும், 10ஆம் ஆதி உடனான கிரக சேர்க்கை பலன் பற்றியும் விரிவான விளக்கப்பாடம் (13ஆம் பாடம் போன்றே) வந்தால் அடுத்த கட்ட அலசலுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  30. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kelvi Kanaikal Kazhai Katta Thuvankividum.. Padhilum Arumayaga Irukkum.
    Kelvi Kanaikal Thodukkava Asiriyare?
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    I am ready with my bat, You have to bowl your overs

    ReplyDelete
  31. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    What Happen sir?
    my comments is not yet approve? Is there any priority.
    more than 1 1/2 years blog reader..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///

    There is no priority or seniority! The comment box is locked and I am opening it as and when I find time.

    ReplyDelete
  32. ////minorwall said...
    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    பாடங்களுக்கு நன்றி.
    10ஆம் இடத்தின் மீதான கிரக பார்வை பற்றியும், 10ஆம் அதிபதி உடனான கிரக சேர்க்கை பலன் பற்றியும் விரிவான விளக்கப்பாடம் (13ஆம் பாடம் போன்றே) வந்தால் அடுத்த கட்ட அலசலுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்./////

    செய்துவிடுவோம் மைனர்!

    ReplyDelete
  33. மேனிலை பாடங்கள் வந்து விட்டன ஐயா. மிக்க நன்றி
    சேர்மராஜ்

    ReplyDelete
  34. ஐயா வணக்கம்
    மின்அஞ்சல் பாடம் கிடைத்தது ஐயா
    அளிதிருக்கும் சந்தற்பதிற்கு நன்றி

    ReplyDelete
  35. kalai Vanakkam Iiya,

    Kodikal nandri pala, to approved my Request.. below is my mail id.

    aruns.hai@gmail.com

    i hope, i will get all mail lessons,which was already completed.

    Thank you sir...

    ReplyDelete
  36. Dear Sir,

    You have given us very good opportunity to clear some of our doubts. First of all my thanks for that.

    I have also sent few questions. If you find some no balls ( extra balls available for free hit!!!) you may please excuse me.

    ReplyDelete
  37. Dear Guruji,
    Thanks for this opportunity. I have also sent my queries, but with 6 questions, which I noticed later. Of the 6, 1 is not a question. I pray the almighty to have your reply to all the points in my email, either personally or in this blog. I am yet to go a long way. May God bless you for this activity.
    With best regards,
    BALASUBRAMANIAN P. RIYADH.

    ReplyDelete
  38. ////JS said...
    படம் அருமை ஐயா.////

    எல்லாம் உங்களைப் போன்ற பட/பாட ரசிகர்களுக்காத்தான்!

    ReplyDelete
  39. /////tamil temples said...
    மேனிலை பாடங்கள் வந்து விட்டன ஐயா. மிக்க நன்றி
    சேர்மராஜ்/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  40. ////Kumares said...
    ஐயா வணக்கம்
    மின்அஞ்சல் பாடம் கிடைத்தது ஐயா
    அளித்திருக்கும் சந்தர்ப்பதிற்கு நன்றி////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  41. ////rajesh said...
    vanakkam ayya./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  42. ////Arun said...
    kalai Vanakkam Iiya,
    Kodikal nandri pala, to approved my Request.. below is my mail id.
    aruns.hai@gmail.com
    i hope, i will get all mail lessons,which was already completed.
    Thank you sir.../////

    உங்களுக்கு மின்னஞ்சல் வரும்! பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  43. /////Sekar said...
    Dear Sir,
    You have given us very good opportunity to clear some of our doubts. First of all my thanks for that.
    I have also sent few questions. If you find some no balls ( extra balls available for free hit!!!) you may please excuse me.////

    உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் வரிசைப்படி வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  44. /////Balasubramanian Pulicat said...
    Dear Guruji,
    Thanks for this opportunity. I have also sent my queries, but with 6 questions, which I noticed later. Of the 6, 1 is not a question. I pray the almighty to have your reply to all the points in my email, either personally or in this blog. I am yet to go a long way. May God bless you for this activity.
    With best regards,
    BALASUBRAMANIAN P. RIYADH.////

    உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் வரிசைப்படி வரும். பொறுத்திருங்கள்!
    (இதற்கெல்லாம் almightyயைப் போய் உபத்திரவம் செய்யலாமா?)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com