மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.12.09

கோவிலுக்கு ஏன் போக வேண்டும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோவிலுக்கு ஏன் போக வேண்டும்?

நொந்துபோன பக்தன் ஒருவன் பத்திரிக்கை ஒன்றிற்குக் கடிதம் எழுதினான்.(வாசகர் பகுதிக்குத்தான் சாமிகளா!)

“முப்பது ஆண்டுகளாகக் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட, மந்திரங்களாக ஒலிக்கப்படும் இறைவணக்கப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். இருந்தும் என்ன பயன்? என்னால் ஒரு மந்திரப் பாட்டைக் கூட முழுமையாகச் சொல்ல முடியவில்லை. நினைவில் இல்லை. ஆகவே கோவிலுக்குப் போவதும், அங்கே பிரார்த்தனைக்காக ஒலிக்கப்படும் படல்களைக் கேட்பதும் வீண்! வீணானது என்பது என்னுடைய கருத்து!”

இக்கடிதம் வாசகர்கள் கடிதப் பகுதியில் புயலைக் கிளப்பியது. இதை ஆதரித்தும், மறுத்தும் ஏராளமான பதில் கடிதங்கள். பத்திரிக்கையில் பாரபட்சமின்றி அனைத்தும் வெளிவந்தன! ஒரு வாரம் தொடர்ந்தது!

இறுதியில் முத்தாய்ப்பாய்வந்த வாசகர் ஒருவரின் கடிதம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

அதைக் கீழே கொடுத்துள்ளேன்:

“எனக்குத் திருமணமாகி முப்பது ஆண்டுகள் ஆகின்றன. என்னுடைய மனைவி எனக்கு இதுவரை 32,000 தடவைகள் சோறாக்கிப் போட்டிருக்கிறாள் (சமைத்துப் போட்டிருக்கிறாள்) ஒரு குறிப்பிட்ட நாளில் சமைத்துப்போட்ட சமையலின் மெனுவைச் சொல் என்றால் எனக்குச் சொல்ல வராது. சொல்ல வராவிட்டால்
என்ன? அவளுடைய சமையல்தான் என்னுடைய பசியைப் போக்கியிருக்கிறது. சோர்ந்து விடாமல் வேலைசெய்யும் ஆற்றத் தந்திருக்கிறது. (அதாவது உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுத்திருக்கிறது) அதை மறுக்க முடியுமா? அப்படி சமைத்துக் கொட்ட ஆளில்லாமல் இருந்திருந்தால், என் நிலைமை
என்னவாகியிருக்கும் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுப்பதற்கு உணவு முக்கியமில்லையா? அதுபோல மனதிற்குப் புத்துணர்ச்சியைக் கொடுப்பதற்காகத்தான் இறைவழிபாடும்,
கோவில்களும், இறைவணக்கப் பாடல்களும் (So called mantras) மனப் புத்துணர்ச்சி உங்களுக்கு வேறு வழிகளில் கிடைக்குமென்றால், நீங்கள் கோவிலுக்குப் போக வேண்டாம். இறைவனை வழிபட வேண்டாம். இறைவணக்கப் பாடல்களைக் காதால் கேட்க வேண்டாம்!”
+++++++++++++++++++++++++++++
When you are DOWN to nothing.... God is UP to something!

ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான். அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்






வாழ்க வளமுடன்!

57 comments:

  1. வணக்கம் ஐயா...

    கடந்த மூன்று நாட்கள் வெளியூர் பயணத்தினால் வகுப்புக்கு வரயிலவில்லை....

    ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான்.

    இதை மனதில் வைத்தேன்.....

    நன்றி...

    ReplyDelete
  2. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

    அற்புதமான விசயம்.
    எதார்த்தமான விளக்கம்,
    சிப்பிக்குள் உள்ள முத்துப் போல்
    மிகச் சிறந்தக் கருத்து.

    பலக் கற்றும் பயனேது பரமனைத்
    துதிக்காத போது - என்னும்
    முப்பாலகரின் வாக்குக்கு ஒப்ப.
    இனிப்பை விளக்க முடியாததைப் போல்,
    பக்தி என்னும் உணர்வும் உணர்ந்து,
    உய்யப்படுதல் வேண்டும் என்பதன்
    உயரிய விளக்கம்.

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. "ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான்"

    உண்மைதான் வாத்தியார்,கண் களைங்கிருச்சு...

    ReplyDelete
  4. கலக்கிட்டிங்க வாத்தியாரே...
    - சேர்மராஜ்

    ReplyDelete
  5. Dear Sir

    Kalayil Elundhadhum Kannadi parkavendum or Khaigalai ondragha serthu iravanai vananga vendum (Ondraga serumpodhu Chandra Kuri Theriyum) or Goburathai parkavendum endru Solvargal. indru Koburamum. Andha madalal oru needhi kadhai kidaithathu sandhosam.

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  6. மிக அருமை. மனப்புத்துணர்ச்சி வேறு வழிகளில் கிடைத்தாலும், அவை நிரந்தரமானவை அல்ல. அதை உணர்பவர்கள் கண்டிப்பாக ஆன்மீகம் பக்கம் திரும்புவார்கள். இது நீங்கள் எழுதியதா?

    ReplyDelete
  7. good morning,

    a real explantion about god belief.

    thanks for the story.

    ReplyDelete
  8. //ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான். அதை மனதில் வையுங்கள்//

    இதை விட அழகாக, அழுத்தமாக, ஆதரவாக, கனிவாகச்
    சொல்ல இயலுமா எனத் தெரியவில்லை.

    எல்லாக்கதவுகளும் மூடியபின், கடவுள் தன் கதவைத் திறக்கிறார் என வேதம் சொல்கிறது.
    When all the doors are closed, God opens His.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  9. இனிய காலை வணக்கம் ....
    இறை நம்பிக்கை ,ஏன்,எதற்க்கு என்று நாத்திகம் பேசுபவர்களுக்கு தக்க பதில் வழக்கமான உங்கள் பஞ்ச் டயலாகில்....
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  10. ஆசானே ,
    அருமை.
    என்ன ஒரு எளிமையான, நயமான, தேளிவான விளக்கம்-
    அந்த ”முத்தாய்பாய்வந்த முற்றுப்புள்ளி வைத்த வாசகர்” வாதியார் அவர்காளாக இருக்குமோ ?
    என்று எனக்கு தோன்றுகிறது :-)

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்

    இன்றைய பதிவு மிகவும் ஆழமான கருத்துடையது. நானும் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி வருகிறேன். கோவிலுக்கு எதற்கு போகிறாய், விரதம் எதற்கு என்று சிலர் என்னை கேட்பதுண்டு.
    அதற்க்கு நான் சொன்ன விளக்கம் : கோவிலுக்கு போனால் நல்லது என்று எனக்கு என் தாயார் சொன்னார்கள். போகிறேன். எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கோவிலுக்கு போய் கேட்பதில்லை. எனக்கு எது நல்லது என்று கடவுளுக்கு தெரியும். அதை அவர் அளித்தால் போதுமானது. அவ்வளவுதான்.

    நன்றி

    வணக்கம்

    ReplyDelete
  12. Aiya,

    I am very sorry to say this. your referece to this context is not convincing. If any one think for 10 minutes they can easily bring out a list of eatable a wife gave to him over 25 years, approximately 50 itmes. But the case here is not like that.

    ReplyDelete
  13. Dear Sir

    I like the explanation for Temple visit.

    I would like to inform you that I did not get any lessons sofar. Please send it to me. I am eagerly waiting for the lessons. I hope you will send it to my email address. Is it not?

    Also
    I have a doubt for long time. If a person born on Amavasai, is the Moon malefic? If so,that moon is on 6th place (4th owner) is good or bad? Please explain me.

    Thanks and regards,
    Padma

    ReplyDelete
  14. Success said...
    வணக்கம் ஐயா...
    கடந்த மூன்று நாட்கள் வெளியூர் பயணத்தினால் வகுப்புக்கு வரயிலவில்லை....
    ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான்.
    இதை மனதில் வைத்தேன்.....
    நன்றி.../////

    நல்லது. அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  15. /////Alasiam G said...
    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    அற்புதமான விசயம். எதார்த்தமான விளக்கம், சிப்பிக்குள் உள்ள முத்துப் போல்
    மிகச் சிறந்தக் கருத்து. பலக் கற்றும் பயனேது பரமனைத் துதிக்காத போது - என்னும்
    முப்பாலகரின் வாக்குக்கு ஒப்ப. இனிப்பை விளக்க முடியாததைப் போல்,
    பக்தி என்னும் உணர்வும் உணர்ந்து, உய்யப்படுதல் வேண்டும் என்பதன்
    உயரிய விளக்கம்.
    நன்றிகள் குருவே!////

    நல்லது.நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  16. ///மதி said...
    "ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான்"
    உண்மைதான் வாத்தியார்,கண் கலங்கியிருச்சு...////

    நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  17. //////DHANA said...
    உள்ளேன் ஐயா!////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  18. //////tamiltemples said...
    கலக்கிட்டிங்க வாத்தியாரே...
    - சேர்மராஜ்/////

    அதிகமாகக் கலக்கவில்லை ராஜா. எப்பவும் போலவே - வழக்கமான நடையிலேயே எழுதியுள்ளேன். நன்றி!

    ReplyDelete
  19. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kalayil Elundhadhum Kannadi parkavendum or Khaigalai ondragha serthu iravanai vananga vendum (Ondraga serumpodhu Chandra Kuri Theriyum) or Goburathai parkavendum endru Solvargal. indru Koburamum. Andha madalal oru needhi kadhai kidaithathu sandhosam.
    Thank u
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  20. ////Uma said...
    மிக அருமை. மனப்புத்துணர்ச்சி வேறு வழிகளில் கிடைத்தாலும், அவை நிரந்தரமானவை அல்ல. அதை உணர்பவர்கள் கண்டிப்பாக ஆன்மீகம் பக்கம் திரும்புவார்கள். இது நீங்கள் எழுதியதா?////

    இல்லை. மின்னஞ்சலில் வந்தது. தமிழாக்கம் மட்டும் அடியேனுடையது!

    ReplyDelete
  21. //////rama said...
    good morning,
    a real explantion about god belief.
    thanks for the story./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  22. ////sury said...
    //ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான். அதை மனதில் வையுங்கள்//
    இதை விட அழகாக, அழுத்தமாக, ஆதரவாக, கனிவாகச்
    சொல்ல இயலுமா எனத் தெரியவில்லை.
    எல்லாக்கதவுகளும் மூடியபின், கடவுள் தன் கதவைத் திறக்கிறார் என வேதம் சொல்கிறது.
    When all the doors are closed, God opens His.
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. //////astroadhi said...
    இனிய காலை வணக்கம் ....
    இறை நம்பிக்கை ,ஏன்,எதற்கு என்று நாத்திகம் பேசுபவர்களுக்கு தக்க பதில் வழக்கமான உங்கள் பஞ்ச் டயலாக்கில்.... நன்றி வணக்கம்////

    இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இதை நான் பதிவிடவில்லை! இருப்பவர்களுக்குக் குறையக்கூடாது என்பதற்காக எழுதினேன்!

    ReplyDelete
  24. /////Blogger சிங்கைசூரி said...
    ஆசானே ,
    அருமை.
    என்ன ஒரு எளிமையான, நயமான, தேளிவான விளக்கம்-
    அந்த ”முத்தாய்பாய்வந்த முற்றுப்புள்ளி வைத்த வாசகர்” வாத்தியார் அவர்காளாக இருக்குமோ ?
    என்று எனக்கு தோன்றுகிறது :-)/////

    இல்லை. மின்னஞ்சலில் வந்தது. தமிழாக்கம் மட்டும் அடியேனுடையது!

    ReplyDelete
  25. ////Blogger T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    இன்றைய பதிவு மிகவும் ஆழமான கருத்துடையது. நானும் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி வருகிறேன். கோவிலுக்கு எதற்கு போகிறாய், விரதம் எதற்கு என்று சிலர் என்னை கேட்பதுண்டு.
    அதற்க்கு நான் சொன்ன விளக்கம் : கோவிலுக்கு போனால் நல்லது என்று எனக்கு என் தாயார் சொன்னார்கள். போகிறேன். எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கோவிலுக்கு போய் கேட்பதில்லை. எனக்கு எது நல்லது என்று கடவுளுக்கு தெரியும். அதை அவர் அளித்தால் போதுமானது. அவ்வளவுதான்.
    நன்றி
    வணக்கம்/////

    நல்லது. நன்றி ஆறுமுகனாரே!

    ReplyDelete
  26. /////Blogger mekala said...
    Aiya,
    I am very sorry to say this. your referece to this context is not convincing. If any one think for 10 minutes they can easily bring out a list of eatable a wife gave to him over 25 years, approximately 50 itmes. But the case here is not like that.//////

    சரி, சென்ற ஜனவரி ஒன்றாம் தேதி காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் என்னென்ன உணவு சாப்பிட்டீர்கள். பட்டியல் இட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  27. அய்யா

    உங்கள் விளக்கம், மனம் சோர்வடைந்த என்னை, டானிக் கொடுத்து தட்டி எழுப்பியது
    மிக்க நன்றி

    ஸ்ரீதர்

    ReplyDelete
  28. பாவம் வாத்தியார், அவரைப் படுத்தாதீர்கள், பிறாண்டதீர்கள்
    பாடத்தை மட்டும், அது வெளியிடப்படும்போது மட்டும் படித்துத்
    திருப்தி கொள்ளூங்கள்! மகிழ்ச்சி கொள்ளூங்கள்

    பானை செய்கிறவனுக்குப் பத்து நாட்கள் வேலை
    போட்டு உடைக்கிறவனுக்கு ஒரு நொடி போதும்.
    பதிவு எழுதிகிறவனுக்கு இரண்டு மணி நேரம் வேலை.
    பதிவைப் படிக்கிறவனுக்கு ஐந்து நிமிடம் போதும்.///
    ஐயா நீங்க பாவம் இதை நான திருமப நினைவுக்கு கொண்டுவ்ந்தேன்.
    வணக்கம் ஐயா.
    சுந்தரி

    ReplyDelete
  29. `சுங்கம் தவிர்த்த சோழனை கர்வம் தவிர்க்கச்சொல்..`
    என்ற தசாவதாரம் கமலின் வசனத்துக்கு காரணமான சோழனின் கர்வத்தின் அடையாளமாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் snap மிகவும் அருமை.

    ReplyDelete
  30. ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான்.
    சத்தியமான வரிகள். மனதில் பதிக்க வேண்டிய வரிகள்.

    ReplyDelete
  31. Dear Sir,
    After reading your post, I read another post. The author says
    ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கும் திருப்பதி பெருமாளுக்கும் உள்ள விஷேச குண நலன் பற்றி கல்யாண் குமார் சொன்ன சுவாரசியமான விஷயம் - ஸ்ரீரங்கப் பெருமான் பக்தர்கள் சொல்லும் கஷ்ட நஷ்டங்களுக்கு காது கொடுத்து கேட்பார் . ' சரி . அதனாலே என்ன . கஷ்டப்படத்தானே மனுஷப்பிறப்பு.சொல்லிட்டே .போயிட்டு வா ' என்பாராம் . திருப்பதி சாமி கொஞ்சம் வித்தியாசமானவர் . பக்தன் தன் துயரத்தை சொல்லி அழுதவுடன் ' அப்படியா . இந்த கஷ்டம் சிரமாயிருக்கோ . சரி இனி இந்த வழி உனக்கு ' என்று ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விடுவார் . பழைய கஷ்டம் போய்விடும் . புதிய திருப்பு முனையில் புதிய பிரச்னை, சிரமம் காத்திருக்கும்! '

    link:http://rprajanayahem.blogspot.com/

    உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான் - True

    ReplyDelete
  32. /////Sridhar Subramaniam said...
    அய்யா
    உங்கள் விளக்கம், மனம் சோர்வடைந்த என்னை, டானிக் கொடுத்து தட்டி எழுப்பியது
    மிக்க நன்றி
    ஸ்ரீதர்////

    எனக்கும் அது டானிக்தான்! அதனால்தான் உங்களுக்குப் (மாணவக் கண்மணிகளுக்கு) பரிந்துரைத்தேன்!

    ReplyDelete
  33. /////sundari said...
    பாவம் வாத்தியார், அவரைப் படுத்தாதீர்கள், பிறாண்டதீர்கள்
    பாடத்தை மட்டும், அது வெளியிடப்படும்போது மட்டும் படித்துத்
    திருப்தி கொள்ளூங்கள்! மகிழ்ச்சி கொள்ளூங்கள்
    பானை செய்கிறவனுக்குப் பத்து நாட்கள் வேலை
    போட்டு உடைக்கிறவனுக்கு ஒரு நொடி போதும்.
    பதிவு எழுதிகிறவனுக்கு இரண்டு மணி நேரம் வேலை.
    பதிவைப் படிக்கிறவனுக்கு ஐந்து நிமிடம் போதும்.///
    ஐயா நீங்க பாவம் இதை நான திருமப நினைவுக்கு கொண்டுவ்ந்தேன்.
    வணக்கம் ஐயா.
    சுந்தரி////

    These are all the part of the game/part of the write up. யதார்த்தமாகத்தான் எடுத்துக்கொள்வேன். உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  34. ///////minorwall said...
    `சுங்கம் தவிர்த்த சோழனை கர்வம் தவிர்க்கச்சொல்..`
    என்ற தசாவதாரம் கமலின் வசனத்துக்கு காரணமான சோழனின் கர்வத்தின் அடையாளமாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் snap மிகவும் அருமை.//////

    உங்களின் ரசனை உணர்விற்கு நன்றி, மைனர்வாள்!

    ReplyDelete
  35. /////rajesh said...
    vanakkam ayya./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  36. krish said...
    ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான்.
    சத்தியமான வரிகள். மனதில் பதிக்க வேண்டிய வரிகள்.//////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  37. //////Neela Narayanan Venkataram said...
    Dear Sir,
    After reading your post, I read another post. The author says
    ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கும் திருப்பதி பெருமாளுக்கும் உள்ள விஷேச குண நலன் பற்றி கல்யாண் குமார் சொன்ன சுவாரசியமான விஷயம் - ஸ்ரீரங்கப் பெருமான் பக்தர்கள் சொல்லும் கஷ்ட நஷ்டங்களுக்கு காது கொடுத்து கேட்பார் . ' சரி . அதனாலே என்ன . கஷ்டப்படத்தானே மனுஷப்பிறப்பு.சொல்லிட்டே .போயிட்டு வா ' என்பாராம் . திருப்பதி சாமி கொஞ்சம் வித்தியாசமானவர் . பக்தன் தன் துயரத்தை சொல்லி அழுதவுடன் ' அப்படியா . இந்த கஷ்டம் சிரமாயிருக்கோ . சரி இனி இந்த வழி உனக்கு ' என்று ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விடுவார் . பழைய கஷ்டம் போய்விடும் . புதிய திருப்பு முனையில் புதிய பிரச்னை, சிரமம் காத்திருக்கும்! '
    link:http://rprajanayahem.blogspot.com/
    உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான் - True/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. ஐயா!

    வணக்கம் ஐயா!

    தாங்கள் குருநாதர் வாழ்க்கையில் நல்ல பக்குவம் அடைந்து விட்டீர்கள்

    ஆனால்! நானோ மாணவனாக தான் ஐயா உள்ளேன்

    தாய்! தந்தை யையே விட ( சொல்லை கேக்காமல் ) இறைவனே அனைத்தும் என்று மூடனாக வாழ்த்து விட்டமே என்று இன்று

    கண்ணீர் வடிக்கும் ஒரு ஒழுக்கமான ( பிரம்ம சுத்தத்துடன் @ மனதார ஐயா ) மாணவன் ஐயா!

    வாழ்ல்க்கையை இறைவனே முன்னால் தொலைத்துவிட்டு இன்று இரத்தகண்ணீர் @ வேதனை
    படும் மாணவன் ஐயா

    தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்க விதித்து விட்டான் இறைவன் ஐயா

    வேதனை தாங்கமுடியவில்லை ஐயா

    என்னை நான் என்ன என்று சொல்வேன் ஐயஹோ ஐயா!

    ReplyDelete
  39. /////kannan said...
    ஐயா!
    வணக்கம் ஐயா!
    தாங்கள் குருநாதர் வாழ்க்கையில் நல்ல பக்குவம் அடைந்து விட்டீர்கள்
    ஆனால்! நானோ மாணவனாக தான் ஐயா உள்ளேன்
    தாய்! தந்தை யையே விட ( சொல்லை கேக்காமல் ) இறைவனே அனைத்தும் என்று மூடனாக வாழ்த்து விட்டமே என்று இன்று கண்ணீர் வடிக்கும் ஒரு ஒழுக்கமான ( பிரம்ம சுத்தத்துடன் @ மனதார ஐயா ) மாணவன் ஐயா! வாழ்க்கையை இறைவனே முன்னால் தொலைத்துவிட்டு இன்று இரத்தகண்ணீர் @ வேதனை
    படும் மாணவன் ஐயா தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்க விதித்து விட்டான் இறைவன் ஐயா/////

    என்ன குழப்பம் ராசா? வாலைப் பிடிக்கவைத்தவன் இறைவனா? இத்தனை கோடி மக்கள் இருக்கும்போது, உங்களை மட்டும் பிடிக்கவைப்பானா அவன்? எங்கோ இடிக்கிறது! அது என்னவென்று யோசித்து அதை நிவர்த்தி செய்யுங்கள். இறைவன் கருணைமிக்கவர். ”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என்று அய்யன் வள்ளுவன் சொன்னதை மனதில் வையுங்கள்.

    ReplyDelete
  40. அய்யா வண‌க்கம்!எங்கள் ஊர் பிரகதீஸ்வ‌ரர் கோவிலின் விமானத்தை வெளீயிட்டு கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் தேடிக்கொடுத்துவிட்டீர்கள்.நன்றி!

    தமிழகத்தில் வாழ்ந்த கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஒரு மூத்த‌
    நாத்திகவாதத் தலைவர் ஒருமுறை கேட்டார்: "உன்னை மட்டும் ஒருதரம்தான் திருமண‌ம் செய்துகொள்ளவேண்டும் என்று கட்டுப்பாடு செய்துவிட்டு திருப்பதிசாமிக்குமட்டும் தினமும் கல்யாணமா?"

    அவர் கேள்விக்கு இன்னொரு 'பெரிசு'இப்படி பதில் அளித்தது:"திருப்பதிசாமி
    தினமும் ஒரேபெண்ணான பத்மாவதித் தாயாரைத்தான் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்கிறார்.நீங்களும் அப்படி நித்யகல்யாண கோலத்தில்
    உங்கள் துணைவியாரை மட்டும் மீண்டும் மீண்டும் க்ல்யாணம் செய்து கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை".

    ReplyDelete
  41. ///////kmr.krishnan said...
    அய்யா வண‌க்கம்!எங்கள் ஊர் பிரகதீஸ்வ‌ரர் கோவிலின் விமானத்தை வெளீயிட்டு கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் தேடிக்கொடுத்துவிட்டீர்கள்.நன்றி!
    தமிழகத்தில் வாழ்ந்த கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஒரு மூத்த‌
    நாத்திகவாதத் தலைவர் ஒருமுறை கேட்டார்: "உன்னை மட்டும் ஒருதரம்தான் திருமண‌ம் செய்துகொள்ளவேண்டும் என்று கட்டுப்பாடு செய்துவிட்டு திருப்பதிசாமிக்குமட்டும் தினமும் கல்யாணமா?"
    அவர் கேள்விக்கு இன்னொரு 'பெரிசு'இப்படி பதில் அளித்தது:"திருப்பதிசாமி
    தினமும் ஒரேபெண்ணான பத்மாவதித் தாயாரைத்தான் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்கிறார்.நீங்களும் அப்படி நித்யகல்யாண கோலத்தில்
    உங்கள் துணைவியாரை மட்டும் மீண்டும் மீண்டும் கல்யாணம் செய்து கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை"./////

    நெத்தியடியான பதில். அறியத்தந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  42. வணக்கம் ஐயா,
    டிசம்பர் மாதம் 15ந் தேதிக்கு மேல் ஜாதக புத்தகம் கிடைக்கும் என்று சொன்னீங்களே அனுப்பி வையிங்கள் ஐயா.
    சுந்தரி.

    ReplyDelete
  43. ஐயா!

    தாங்கள் என்ன சொல்ல வருகின்றிக்கள் என்று இந்த சிறுவனுக்கு புரியவில்லை குருவே!
    விதி என்று சொல்ல வருகின்றிகளா அல்லது இறைவனையே (குருவாக) முழுவதும் நம்பி நல்ல லட்சியத்தில் சென்று கடைசிவரை
    விடை தெரியாமல் அல்லது முடியாமல் அல்லது திறன்மை இல்லாமல் சென்றது அடியேன் தவறு என்று சொல்ல வருகின்றிகளா அச்சனே!
    சுமார் இருபது வருடம் எப்படி போனது என்றேய் தெரியவில்லை மாசே!
    மற்றவரை ( கீல் நிலையில் ) ஒப்பிடும் போது சீரழிந்து போகாமல் ஒழுக்கமாக இளமை வயதை காக்கும் தைரியம் தந்து, கடைசில் என்னை விழிக்க வைத்தது இறைவன்தான் என்று சொல்ல வருகின்றிகளா அப்பா!
    அல்லது வாழ்க்கை என்னும் கரையை கடக்க வழி தந்து உள்ளார் என்று சொல்ல வருகின்றிகளா நைனா!
    எல்லாமே இறைவனின் ஆணை என்று சொல்ல வருகின்றிகளா மகானே
    ஒன்றையாவது உணர்துக்கள் dad!

    ReplyDelete
  44. sir i have one doubt.
    If kethu and guru are occupying the 12th place,will that person have next birth?

    ReplyDelete
  45. வணக்கம் ஐயா!
    ஒன்றும் இல்லாத நிலைக்கு
    நீங்கள் இறங்கும்போது,
    எல்லாம் நிறைந்த நிலைக்கு
    உங்களை உயர்த்துவது
    இறைநம்பிக்கை ஒன்றுதான்.

    உண்மைதான் ஐயா....

    இணைய வசதி இல்லாததால் சில நாட்கள் வகுப்பு வர முடியாமல் ஆகிவிட்டது ஐயா....
    முயற்சி தொடர்கிறது :-))

    ReplyDelete
  46. ஐயா நச் ன்னு சொல்லிடீங்க . இந்தியால இருக்கும்போது அப்பா கோவில் கோவில டூர் போகும் பொது கேலி பன்னுவோம் , ஆனால் இப்பொது தான் அதன் அருமை தெரிகிறது . கோவில் பொய் வரும்போது கெடைக்கும் திருப்தி எங்கேயும் இல்லை..

    ReplyDelete
  47. /////sundari said...
    வணக்கம் ஐயா,
    டிசம்பர் மாதம் 15ந் தேதிக்கு மேல் ஜாதக புத்தகம் கிடைக்கும் என்று சொன்னீங்களே அனுப்பி வையிங்கள் ஐயா. சுந்தரி.////

    கழுத்தில் அணியும் அணிகலனைப்போல, புத்தகத்தின் ஆக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முடிந்தவுடன் முறையான அறிவிப்பு பதிவில் வரும். பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  48. /////kannan said...
    ஐயா!
    தாங்கள் என்ன சொல்ல வருகின்றிக்கள் என்று இந்த சிறுவனுக்கு புரியவில்லை குருவே!
    விதி என்று சொல்ல வருகின்றிகளா அல்லது இறைவனையே (குருவாக) முழுவதும் நம்பி நல்ல லட்சியத்தில் சென்று கடைசிவரை விடை தெரியாமல் அல்லது முடியாமல் அல்லது திறன்மை இல்லாமல் சென்றது அடியேன் தவறு என்று சொல்ல வருகின்றிகளா அச்சனே! சுமார் இருபது வருடம் எப்படி போனது என்றேய் தெரியவில்லை மாசே!மற்றவரை ( கீழ் நிலையில் ) ஒப்பிடும் போது சீரழிந்து போகாமல் ஒழுக்கமாக இளமை வயதை காக்கும் தைரியம் தந்து, கடைசில் என்னை விழிக்க வைத்தது இறைவன்தான் என்று சொல்ல வருகின்றிகளா அப்பா!
    அல்லது வாழ்க்கை என்னும் கரையை கடக்க வழி தந்து உள்ளார் என்று சொல்ல வருகின்றிகளா நைனா!
    எல்லாமே இறைவனின் ஆணை என்று சொல்ல வருகின்றிகளா மகானே
    ஒன்றையாவது உணர்துக்கள் dad!//////

    நான் எளியவன். எனக்குத் தெரிந்தவரை யாரும் யாருக்கும் எதையும் உணர்த்த முடியாது. அவரவர்களாக
    உணர்ந்தால்தான் உண்டு. நீங்கள் உணரும் காலம் வரும். அல்லது வராது போகலாம். அது நீங்கள் வாங்கிவந்த வரத்தைப் பொறுத்தது. பொறுத்திருங்கள். இப்போது எதைச் சொன்னாலும் உங்கள் மனம் ஏற்காது. வரம் என்பது அரசாங்கம் கொடுக்கும் ரேசன்கார்டைப் போன்றது அல்ல! மனுச் செய்து பெற முடியாது.அதை மட்டும் நினைவில் வையுங்கள்!

    ReplyDelete
  49. /////rajesh said...
    sir i have one doubt.
    If kethu and guru are occupying the 12th place,will that person have next birth?////

    அடுத்த பிறவியைப் பற்றி எதற்குக் கவலை! இந்தப் பிறவியை தர்ம சிந்தனையுடன் நிறைவு செய்யுங்கள்.
    மற்றதை எல்லாம் வல்லவனிடம் விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  50. //////Kumares said...
    வணக்கம் ஐயா! ஒன்றும் இல்லாத நிலைக்கு நீங்கள் இறங்கும்போது, எல்லாம் நிறைந்த நிலைக்கு
    உங்களை உயர்த்துவது இறைநம்பிக்கை ஒன்றுதான்.
    உண்மைதான் ஐயா....
    இணைய வசதி இல்லாததால் சில நாட்கள் வகுப்பு வர முடியாமல் ஆகிவிட்டது ஐயா....
    முயற்சி தொடர்கிறது :-))///////

    நன்றி, முருகா!

    ReplyDelete
  51. ////Priya said...
    ஐயா நச் ன்னு சொல்லிடீங்க . இந்தியால இருக்கும்போது அப்பா கோவில் கோவில டூர் போகும் பொது கேலி பன்னுவோம் , ஆனால் இப்பொது தான் அதன் அருமை தெரிகிறது . கோவில் பொய் வரும்போது கெடைக்கும் திருப்தி எங்கேயும் இல்லை../////

    நீங்களும் நச்’சென்று மனதில் ஏற்றிக்கொண்டுள்ளீர்கள். அது போதும். நன்றி சகோதரி!

    ReplyDelete
  52. உண்மையிலேயே அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete
  53. /////Blogger padma said...
    Dear Sir
    I like the explanation for Temple visit.
    I would like to inform you that I did not get any lessons sofar. Please send it to me. I am eagerly waiting for the lessons. I hope you will send it to my email address. Is it not?/////

    உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள். சோதித்துப் பார்க்கிறேன்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////Also
    I have a doubt for long time. If a person born on Amavasai, is the Moon malefic? If so,that moon is on 6th place (4th owner) is good or bad? Please explain me.
    Thanks and regards,
    Padma//////

    உங்களுக்காக இன்று பதிவில் அமாவாசையைப் பற்றி எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள்

    ReplyDelete
  54. காஸ்மிக் படலத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் எப்போதும் பூமியினை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. இதனை ஈர்க்கும் வண்ணமாக நமது கோவில்களின் கலசங்கள் வடிவமைக்கபட்டுள்ளன. இந்த காஸ்மிக் கதிர்கள் மனிதனுக்கு நன்மை தரக்கூடியவை. எனவே நம் முன்னோர்கள் மனிதர்களின் கோவிலுக்கு சென்று வழிபட சொன்னதற்கு இதுவும் காரணம். இறைவனை நாளும் ஆலயத்தில் வழிபடுவோம். உடல், உள்ளம் நலம் பெற்று சிறப்போம். நன்றி

    ReplyDelete
  55. ////Udhaya said...
    காஸ்மிக் படலத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் எப்போதும் பூமியினை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. இதனை ஈர்க்கும் வண்ணமாக நமது கோவில்களின் கலசங்கள் வடிவமைக்கபட்டுள்ளன. இந்த காஸ்மிக் கதிர்கள் மனிதனுக்கு நன்மை தரக்கூடியவை. எனவே நம் முன்னோர்கள் மனிதர்களின் கோவிலுக்கு சென்று வழிபட சொன்னதற்கு இதுவும் காரணம். இறைவனை நாளும் ஆலயத்தில் வழிபடுவோம். உடல், உள்ளம் நலம் பெற்று சிறப்போம். நன்றி////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com