மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.2.09

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..?

இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..?

அசத்தலான பாடல் வரிகள் என்றால் சட்டென்று என் கண்முன் வந்து
நிற்பவர்கள் இருவர். அற்புதமான வாழ்க்கைத் தத்துவங்கள் என்றால்
நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்பவர்களும் அந்த இருவரே!
ஒருவர் பட்டினத்தார். இன்னொருவர் கவியரசர் கண்ணதாசன்.

"அடேய், எதற்கு இந்தப் பொருள் குவிப்பு,எதற்கு இந்தப் பொருள் சேர்ப்பு?
இந்தப் பிறவி நிலையில்லாதது. வீடு, வாசல், சொத்து, சுகம், மனைவி, மக்கள்,
வங்கி இருப்பு, வைப்புத்தொகைகள் (Bank Deposits) பங்குப் பத்திரங்கள்
(Share Cetificates),நகை நட்டுக்கள், வைரம், வெள்ளிச் சாமானகள், வாகனங்கள்
ரேசன்கார்டு, வோட்டர்ஸ் கார்டு, இன்கம்டாக்ஸ் பான் கார்டு, பாஸ்போர்ட்
மற்றும் இதுபோன்ற பிற புண்ணாக்குகள் (கழிவுகள், விடுபட்டவைகள்)
அனைத்தையும் போட்டது போட்டபடி ஒரு நாள் நீ போய்ச்சேரப் போகிறாய்.
தெரியுமா? என்றாவது நினைத்துப் பார்த்தாயா? ஒரு துரும்புகூட உன்னுடன்
வராது. ஒரு ஒடிந்து போன ஊசிகூட உன்னுடன் வராது!" என்று வாழ்க்கையின்
அவலத்தை, திடீரென ஆக அது முடிந்துவிடும் கோலத்தை அடித்துச் சொன்னவர்
பட்டினத்தார்.

அவ்வளவு பெரிய விஷயத்தை, ஆறே வார்த்தைகளில் சொன்ன ஞானி அவர்

"காதறுந்த ஊசியும் வராது காணும் கடை வழிக்கே!" என்றார்

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் வாழ்க்கையின் அவலத்தை ஏராளமான
பாடல் வரிகளில் கொட்டிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

"வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!" என்று ஏழே வார்த்தைகளில் சொன்னார் அவர்.

கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்வரிகள் அனைத்துமே அவர் அனுபவித்து
எழுதியதாகும். அதோடு அவர் பட்ட அனுபவங்களை வைத்து எழுதியதாகும்

அவர் சந்திக்காத பெண்களா, அவர் பார்க்காத குடும்பங்களா? அவர் பார்க்காத
மனிதர்களா? அவர் சந்திக்காத துரோகங்களா அல்லது துன்பங்களா? எல்லாவற்றையும்
பார்த்தவர் அவர். அவற்றைப் பாட்டாக்கி விட்டுப் போனவர் அவர்.

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக"

என்று எழுதியவர் அவர். என்னவொரு உற்சாகம், மற்றும் உத்வேகம் மிகுந்த
பாடல் வரிகள் பாருங்கள்

"நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி, நடந்த இளம் தென்றலே!"

என்று இயற்கை அன்னைக்கே தலைவாரி விட்டவர் அவர்

"வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்"

என்று படைத்தவனின் பெருமையைச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்

"ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....."

என்று பெண்மையின் சிறப்பைச் சொன்னவர் அவர்

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
நான் காணும் பொருள் எல்லாம் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் எல்லாம் நானாக வேண்டும்"

என்று காதலின் சிறப்பைச் சொன்னவர் அவர்.

"ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.."

என்று பெண்ணின் தவிப்பை, ஏக்கத்தைச் சொல்லிவிட்டுப்போனவர் அவர்

"கல் எல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா"

என்று பெண்ணால் கிடைக்கும் சுவையை, பெண்ணைத் தவிர வேறெங்கும்
கிடைக்காத சுவையைச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!

"அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்"

என்று மயங்கி நிற்கும் மனிதனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப்போனவர் அவர்

"முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்"

என்று மொத்த வாழ்க்கையும் ஆறு வரிகளில் சொன்னவர் அவர்.

இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி
சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன்

எதற்காகச் சொன்னேன்?

மனிதனுக்கு வேண்டியது ஞானம். ஞானம் இல்லாத வாழ்க்கை சலித்துவிடும்
இன்பம், துன்பம் இரண்டையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்
வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சலிப்பின்றி இருக்கும். அந்தப் பக்குவ
நிலைதான் ஞானம்.

ஒரு புதுக்கவிஞன் எழுதினான்:

"அனைக்க ஒரு அன்பில்லாத மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
பிழைக்க ஒரு பிடிப்பில்லாத தொழில்
ஆனாலும்
உலகம் ஏனோ இன்னும் கசக்கவில்லை!"

அதுதான் ஞானம்!

அந்த ஞானத்தைத் தருவது கேது!

சிலருக்குச் சின்ன வயதிலேயே அவர் ஞானத்தைத் தருவார்.
சிலருக்கு நடு வயதில் தருவார்
சிலருக்கு வயதான பிறகு தருவார்
சிலருக்குக் கட்டையில் போகிற வயதில் தருவார்.

சிலருக்குத் தராமல் விட்டு விடுவார். அவனுக்கு அது carry forward ஆகும்
அதாவது அடுத்த பிறவியில் கிடைக்கும். சும்மா கிடைக்காது. Right from the
birth அடித்துத் துவைக்கப்பட்டுக் கிடைக்கும். கிடைக்கும். கிடைத்துக் கொண்டே
இருக்கும்!!!!!!!!!!!!!!!!
--------------------------------------------------------------------------------------------------
கேதுவைப் பற்றிய பாடம்

முக்திக்கு வழிகாட்டுபவர் கேது. மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க
வழி காட்டுபவர் கேது. இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய
அனைத்தையும் அனுபவிக்க முடியமா என்று தெரியவில்லை.ஆகவே
இன்னுமொரு பிறவியிருந்தால் நல்லது என்று நினைப்பவர்கள்
கேதுவை வணங்க வேண்டாம்.

உங்கள் வாழ்க்கைப் பாதையைக் கடினமாக்குபவர் கேது. பாதையில் பல
தடைகளை உண்டாக்கி, உங்களுக்கு பல மனக்கவலையை ஏற்படுத்தி,
பல துன்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மனதைப் பக்குபவப்படுத்துபவர்
அவர். முன் ஜன்மப் பாவச் சுமைகளைப் போக்க உதவுபவர் அவர்.

கேது செவ்வாயைப் போல செயல்படுபவர். அவருடைய திசா புத்திகளில்
விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அனேகமாக அது நெருப்பு சம்பந்தப்பட்ட
விபத்தாக இருக்கும்.

நமது முன் மற்றும் நடப்புக் கர்ம வினைகளை எல்லாம் கணக்காக
வைத்திருக்கும் கணக்கப் பிள்ளை அவர்.

சுபக்கிரகங்களோடு சேர்ந்திருக்கும் கேது, நாம் எதிர்பாராத நன்மைகளைச்
செய்யக்கூடியவர்.

கேது ராகுவைப் போன்றவர். பல செயல்களில் அவரை ஒத்திருப்பார்.

சொந்த வீடு இல்லாதவர். இருக்கின்ற வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வார்.
ராகு சனியைப் போல செயல் படக்கூடியவர் என்றால், கேது செவ்வாயைப்
போல செயல்படக்கூடியவர்.

பல சமயங்களில் கேது, செவ்வாயின் எதிர்மறையான செயல்களைப் போல
தீயவற்றைச் செய்யக்கூடியவர் (Ketu in certain way resembles Mars. But
many times,activates only the negative side of Mars)

கேது, சூரியன், மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், வான வெளியில்
ஒரே பாகைக்கு வரும்போது சந்திரகிரணம் நிகழும்.

இன்றைய விஞ்ஞானம் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு
முன்பே, எந்தவித உபகரணங்களும் இன்றி இதை நம் முன்னோர்கள் கணித்து
எழுதிவைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

மருந்து தொழில், மருத்துவத்தொழில் ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி
பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்க வேண்டும்.

The two imaginary nodes (சாயாக் கிரகங்கள்) Rahu and Ketu are the mysterious
forces and show in the birth chart both karmic and spiritual influences.

Like Rahu, Ketu is also not a real luminary and therefore doesn't rule any
zodiac sign. (சொந்த வீடு இல்லாமல் போனது)
========================================================
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

1ல்
லக்கினத்தில் கேது

ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்

மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு
எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
-----------------------------------------------------------------------------------------
2ல்
இரண்டில் கேது!

ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk)
படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.

குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்

சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள்
மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
3ல்
மூன்றில் கேது.

ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.
-----------------------------------------------------------------------------------
4ல்
நான்கில் கேது

இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு
உகந்தது அல்ல!

நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது
சேர்க்கை இருந்தால் வராது.

ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.

சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
---------------------------------------------------------------------------------------
5
ஐந்தில் கேது

ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.

இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக
மாறிவிடும்.
----------------------------------------------------------------------------------------
6
ஆறில் கேது

ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக
இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக
இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.

வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்

----------------------------------------------------------------------------------------
7
ஏழில் கேது

ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்

இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
கணவன் அமையக்கூடும்
------------------------------------------------------------------------------------
8
எட்டில் கேது

ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்

சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்

சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன்
சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.

சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் கேது

ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு,
பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன்.

சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி
விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.

சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்
--------------------------------------------------------------------------------
10
பத்தில் கேது

மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன்
உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services,
time and/or effort to support a socially beneficial cause, with a defined objective
and with no financial or material reward to the donor. In a more general sense,
activity intended to promote good or improve human quality of life.

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்
ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.

திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான்.
கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.
This is the best place for professional enhancement.
---------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் கேது

ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்

பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
---------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் கேது

இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.

ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு
என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்

பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.

சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்

சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்
---------------------------------------------------------------------------------------
இங்கே எழுதப்பெற்றுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்டவர்களுக்கு
அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களினால் இவைகள் கூடலாம்
அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம். அதைக் கவனத்தில்
கொள்ளவும்!

அலசல் தொடரும்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், நேரம் கருதியும் இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

63 comments:

  1. Welcome Back.

    கேது பகவானின் பாடம் எளிமையாக இருந்தது.

    4ல்
    நான்கில் கேது

    //ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
    எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும்.//

    இது உண்மை.

    கேதுவை செவ்வாய் 8ம் பார்வையாக பார்த்தால் அதன் (கேதுவின்) உக்கிரம் கூடுமா?

    ReplyDelete
  2. ஐயா ஞான காரகன் பதிவு அருமை. பொருள் குவிப்பதை அரசியல்வாதிகள் நிருத்தும் ஞானத்தை கேது அவர்களுக்கு(அரசியல்வாதிகளுக்கு) தருவரா?

    ReplyDelete
  3. அய்யா,

    கேதுவை பற்றிய பாடம் மற்றும் ஞான சம்பந்தமான விளக்கமும் நல்ல தொடக்கம். பொது. ஒரு சந்தேகம், எப்பொழுது போதுப்பலங்களை எடுத்து கொள்வது? எப்பொழுது combined effects of other plannets, their position, lagna, power of the house, aspects, combustion and astavarga scores களை எடுத்து கொள்வது?

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  4. Ketu intro super.

    Nayagan kelvi ketu vukku porunthum.Adhan "neenga Nallavara Illa Kettavara"

    Few doubts.

    1.YOu have written Ketu with Subha Grahas give good result.venus,jupiter and moon are benefics.If ketu is with moon will it give good effects as they are forever enemies?

    eg.Ketu+moon in vrischika rasi

    2.Ketu in 5th house is putra dosham generally.you have also mentioned not so good results for 5th house placement of ketu.5th house is also poorva punya sthana for horoscope.you told ketu is responsible for poorva punyam .So why does it give negative results here when he is placed in such a house(own department)

    3.If ketu is in 5th automatically Rahu will be in 11th.General results for rahu in 11th is

    ++++++++++++ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்:
    பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,
    அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக
    இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக
    இருப்பான்.

    செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும்
    தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு
    செயல்படுபவனாக இருப்பான்.

    வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும்
    அல்லது அமையும்.

    அததனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன்
    இருப்பான்++++++++++++ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்:
    பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,
    அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக
    இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக
    இருப்பான்.

    செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும்
    தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு
    செயல்படுபவனாக இருப்பான்.

    வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும்
    அல்லது அமையும்.

    அததனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன்
    இருப்பான்


    Both the general results are contradictory.very confusing sir.whose results will manifest in life time sir?

    thanks

    Dr.vinoth

    ReplyDelete
  5. The lesson is good. If kethu is there in the 8th house ( Scorpio)with Mars, what will be effect. For Mars it is own house and for kethu it is neechsm.

    ReplyDelete
  6. Blogger SP Sanjay said...
    Welcome Back.
    கேது பகவானின் பாடம் எளிமையாக இருந்தது.
    4ல்
    நான்கில் கேது
    //ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
    எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும்.//
    இது உண்மை.
    கேதுவை செவ்வாய் 8ம் பார்வையாக பார்த்தால் அதன் (கேதுவின்) உக்கிரம் கூடுமா?/////

    நன்றி சஞ்சய்! கேது & செவ்வாய் சேர்க்கை, பார்வை பற்றிய பாடம் பின்னால் வர இருக்கிறது. அதுவரை சற்றுப் பொறுமை காக்கவும்!

    ReplyDelete
  7. /////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா ஞான காரகன் பதிவு அருமை. பொருள் குவிப்பதை அரசியல்வாதிகள் நிறுத்தும் ஞானத்தை கேது அவர்களுக்கு(அரசியல்வாதிகளுக்கு) தருவரா?//////

    தரமாட்டார். அவர்கள் இன்னும் சில பிறவிகள் எடுத்துக் கடனைக் கட்டவேண்டியதிருக்கும்:-)))))

    ReplyDelete
  8. /////Blogger Sridhar said...
    அய்யா,
    கேதுவை பற்றிய பாடம் மற்றும் ஞான சம்பந்தமான விளக்கமும் நல்ல தொடக்கம். பொது. ஒரு சந்தேகம், எப்பொழுது போதுப்பலன்களை எடுத்து கொள்வது? எப்பொழுது combined effects of other plannets, their position, lagna, power of the house, aspects, combustion and astavarga scores களை எடுத்து கொள்வது?
    நன்றி,
    ஸ்ரீதர் S//////

    கரெக்ட், இப்போது பட்டியல் இட்டுள்ளீர்கள் பாருங்கள், அது அனைத்தையும் சேர்த்துத்தான் பலனை எடுத்துக்கொள்ள வேண்டும். There is no short cut for prediction! பெண்ணை எப்படித் தேர்ந்தெடுக்கிறோம்? தோற்றம், உயரம், அழகு, அறிவு, படிப்பு, திறமை, குணம், குடும்பப் பின்னணி என்று எல்லாம் சேரும்போதுதானே பெண்ணின் தகுதி முழுமை பெறுகிறது.
    அப்படித்தான் இதுவும்!

    ReplyDelete
  9. /////Blogger Prabhu said...
    Ayya padam arumai////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //////Blogger Dr.Vinothkumar said...
    Ketu intro super.
    Nayagan kelvi ketu vukku porunthum.Adhan "neenga Nallavara Illa Kettavara"//////

    துவக்கத்தில் கெட்டவர். முடிவில் நல்லவர் அவர்!:-)))))
    ---------------------------------------------------------------------
    Few doubts.

    1.YOu have written Ketu with Subha Grahas give good result. venus,jupiter and moon are benefics.If ketu is with moon will it give good effects as they are forever enemies?
    eg.Ketu+moon in vrischika rasi///////

    தீய கிரகங்களுடன் சேரும் சந்திரன் நல்ல பலன்களைத் தரமாட்டார். வாழ்க்கை மனப்போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்
    -------------------------------------------------------------------------------------------
    2.Ketu in 5th house is putra dosham generally.you have also mentioned not so good results for 5th house placement of ketu.5th house is also poorva punya sthana for horoscope.you told ketu is responsible for poorva punyam//////

    ஐந்தாம் இடத்து அதிபதியும், குருவும் மட்டுமே பூர்வ புண்ணியத்தைத் தரக்கூடியவர்கள். கேது அல்ல!

    3.If ketu is in 5th automatically Rahu will be in 11th.General results for rahu in 11th is
    ++++++++++++ ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான்.
    செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அததனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன்
    இருப்பான்++++++++++++

    5 ஐந்தில் கேது
    ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
    இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
    இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
    உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.
    Both the general results are contradictory.very confusing sir.whose results will manifest in life time sir?/////

    இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக மாறிவிடும்.

    கேதுவிற்கு உரிய பலனிலேயே முரண்பாடு இருக்கிறது பாருங்கள். சந்நியாசி அல்லது சாம்ராஜ்ய அதிபதி!
    It is due to the placement or aspect of other planets in the horoscope

    நீங்கள் சொல்லும் 5ஆம் இடம், 11ஆம் இடத்துப் பலன்கள், கேது & ராகுவிற்கு எதிரும் புதிருமாக உள்ளதல்லவா?
    அந்த இருவரில் யார் வலுவாக இருக்கிறார்களோ, அவர்களுக்கான பலன்தான் ஜாதகனை வந்தடையும்!

    ReplyDelete
  11. /////Blogger krish said...
    The lesson is good. If kethu is there in the 8th house ( Scorpio)with Mars, what will be effect. For Mars it is own house and for kethu it is neechsm./////

    கேது & செவ்வாய் கூட்டணிக்கான பாடம் பின்னால் வரும். சற்றுப் பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  12. //நன்றி சஞ்சய்! கேது & செவ்வாய் சேர்க்கை, பார்வை பற்றிய பாடம் பின்னால் வர இருக்கிறது. அதுவரை சற்றுப் பொறுமை காக்கவும்!//


    நன்றி, என்னுடைய கேள்வி சேர்க்கையை பற்றி அல்ல, பார்வையை பற்றியது.
    எனினும் பொறுமையாக காத்துகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  13. ஐயா,
    எனக்கு பத்தில் கேது. பலன்கள் சூப்பர்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. எனக்கு 12ல கேது...

    //
    இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
    பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
    பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.//

    இதை தான் ரெண்டு இடத்துல சொன்னாங்க :)

    ReplyDelete
  15. ஹலோ சார்,
    கரெக்ட், நீங்க சொன்னது ரொம்ம்ம்ம்ப கரெக்ட். ஆனா எனக்கு இதயம் மட்டும் ரொம்ம்ப STRONG.மத்ததெல்லாம் சரியா இருக்கு.என்ன பண்ணலாம், அவ்ளோதான் எனக்கு விதிச்சது.

    ReplyDelete
  16. வணக்கம் அய்யா

    கேது பற்றிய பாடம் அருமை இன்னும் கேது பற்றி அறிய காத்திருக்கிறேன்.
    என் ஜாதகத்தில் 11 ல் கேது சனியொடும்,புதன்னொடும் இருக்கிறார். மகர லக்கிணம்
    5 ல் ராகு தனித்து இருக்கிறார்.எனக்கு ராகுவிந் 5 ம் இட கெட்ட பலன் அதிகமாக
    இருக்குமா இல்லை கேது 11 ல் இருக்கும் நற்பலன் அதிகமாக இருக்குமா?

    ReplyDelete
  17. நன்றி ஐயா.. தெளிவான பாடத்திர்க்கு

    >>ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
    இருக்கும்<< :((

    34 பரல்கள் இருந்தால்,விலக்கு உண்டோ...!!

    ReplyDelete
  18. ayya

    ketu patriya paadam miga sirapaaga ullathu

    ReplyDelete
  19. Todays class super.

    Awaited topic and finally was able to learn. Thanks.

    Whether there will be seperate class for Kethu in Different Lagnas? if not please tell me for Kethu in Lagna in Meena Rasi.

    One doubt... on old topic..

    Regarding Kala Sarpa Dosham -

    SAVYA KALA SARPA DOSHAM (Rahu to kethu ) and APASAVYA KALA SARPA DOSHAM (Kethu to Rahu) you have told earlier that palangal will vary accordingly.
    What will be the varrious affects of both kind of dosha/yogam?

    ReplyDelete
  20. hello,

    ennakku 1 il ketu and moon. lagnam dhanusu.

    what will be the effects

    ReplyDelete
  21. //////Blogger SP Sanjay said...
    //நன்றி சஞ்சய்! கேது & செவ்வாய் சேர்க்கை, பார்வை பற்றிய பாடம் பின்னால் வர இருக்கிறது. அதுவரை சற்றுப் பொறுமை காக்கவும்!//
    நன்றி, என்னுடைய கேள்வி சேர்க்கையை பற்றி அல்ல, பார்வையை பற்றியது.
    எனினும் பொறுமையாக காத்துகொண்டிருக்கிறோம்.////////

    சேர்க்கையின்போது கிரகயுத்தம் மட்டும் உபரியாக இருக்கலாம். மற்றபடி சேர்க்கைக்கும், பார்வைக்கும் கேதுவிற்கான பலன்கள் ஒன்றாகத்தான் வரும்!

    ReplyDelete
  22. ////Blogger வேலன். said...
    ஐயா,
    எனக்கு பத்தில் கேது. பலன்கள் சூப்பர்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    பெயரில் வேல் இருக்கிறது அல்லவா, அதனால்தான்!

    ReplyDelete
  23. //////Blogger வெட்டிப்பயல் said...
    எனக்கு 12ல கேது...
    //
    இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
    பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
    பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.//
    இதை தான் ரெண்டு இடத்துல சொன்னாங்க :)///////

    பார்க்க வேண்டிய தெலுங்கு படங்களையெல்லாம் இந்தப் பிறவியிலேயே பார்த்து விடுங்கள்!:-)))))

    ReplyDelete
  24. /////Blogger sumathi said...
    ஹலோ சார்,
    கரெக்ட், நீங்க சொன்னது ரொம்ம்ம்ம்ப கரெக்ட். ஆனா எனக்கு இதயம் மட்டும் ரொம்ம்ப STRONG.மத்ததெல்லாம் சரியா இருக்கு.என்ன பண்ணலாம், அவ்ளோதான் எனக்கு விதிச்சது.//////

    டேக் இட் ஈஸி பாலிஸி. அதுதான் பிரச்சினை இல்லாதது!

    ReplyDelete
  25. //////Blogger ashokbandu said...
    வணக்கம் அய்யா
    கேது பற்றிய பாடம் அருமை இன்னும் கேது பற்றி அறிய காத்திருக்கிறேன்.
    என் ஜாதகத்தில் 11 ல் கேது சனியொடும்,புதன்னொடும் இருக்கிறார். மகர லக்கிணம்
    5 ல் ராகு தனித்து இருக்கிறார். எனக்கு ராகுவின் 5 ம் இட கெட்ட பலன் அதிகமாக
    இருக்குமா இல்லை கேது 11 ல் இருக்கும் நற்பலன் அதிகமாக இருக்குமா?///////

    எல்லாம் mixed ஆக இருக்கும்! இரவும் பகலும் போல!

    ReplyDelete
  26. Blogger மதி said...
    நன்றி ஐயா.. தெளிவான பாடத்திற்க்கு
    >>ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
    இருக்கும்<< :((
    34 பரல்கள் இருந்தால்,விலக்கு உண்டோ...!!//////

    ஆமாம், விதி விலக்கு உண்டு! அதற்குத்தானே ஜாதகத்தின் பிற அம்சங்களையும் பாருங்கள் என்று எழுதியுள்ளேன்!

    ReplyDelete
  27. ////Blogger sundar said...
    ayya
    ketu patriya paadam miga sirapaaga ullathu/////

    நன்றி, எந்த ஊர் சுந்தர் நீங்கள்?

    ReplyDelete
  28. ///////Blogger Kamesh said...
    Todays class super.
    Awaited topic and finally was able to learn. Thanks.
    Whether there will be seperate class for Kethu in Different Lagnas? if not please tell me for Kethu in Lagna in Meena Rasi.//// எழுதுகிறேன்

    ////One doubt... on old topic..
    Regarding Kala Sarpa Dosham -
    SAVYA KALA SARPA DOSHAM (Rahu to kethu ) and APASAVYA KALA SARPA DOSHAM (Kethu to Rahu) you have told earlier that palangal will vary accordingly.
    What will be the varrious affects of both kind of dosha/yogam?//////

    அந்தப் பாடத்திலேயே கொடுத்துள்ளேனே சுவாமி.! மறுபடியும் பாருங்கள்

    ReplyDelete
  29. ////Blogger YOGANANDAM M said...
    hello,
    ennakku 1 il ketu and moon. lagnam dhanusu.
    what will be the effects/////

    கேது + சந்திரனின் கூட்டணியைப் பற்றிய பாடம் அடுத்து வர உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள்!

    ReplyDelete
  30. Hello sir

    Thanks for the lesson about ketu..I am eagerly waiting for the lesson about Jupiter Kethu combination.

    ReplyDelete
  31. வணக்கம் ஐய்யா

    நான் உங்கள் பாடங்களை படித்துக்கொன்டுருக்கிறேன்,உங்கள் எழுத்து நடை
    மற்றும் கதையுடன் கூடிய விளக்கங்கள் மிக அருமை .நான் கோவை மாவட்டம்,
    கணபதி.

    ReplyDelete
  32. வாத்தியாரையா,

    இன்றைய பாடம் அருமை. எளிமையாக இருந்தது. 11ல் கேது எனக்கு, அதனால் சந்தோஷமாகவும் இருந்தது.

    ReplyDelete
  33. வாத்தியாரே..

    பின்னிட்டீங்க போங்க..

    தலைப்பை சொல்றேன்.. எங்களுக்கே தோணாத விஷயம்..

    அப்புறம் எனக்கு 4-ல நிக்குறான் கேது..

    உங்களுடைய பலன் படிச்சேன்.. இதய நோயாம்.. ரொம்ப சந்தோஷம்.. ஒரே நிமிஷத்துல முருகன்கிட்ட போய்ச் சேர்ந்திரலாம்..

    இன்னிக்குத்தான் எனக்கு உருப்படியான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கீங்க..

    நன்றி.. நன்றி.. நன்றி..

    ReplyDelete
  34. /////Blogger Ragu Sivanmalai said...
    Hello sir
    Thanks for the lesson about ketu..I am eagerly waiting for the lesson about Jupiter Kethu combination./////

    தொடர்ந்து வரும் சிவன்மலையாரே!

    ReplyDelete
  35. ////Blogger sundar said...
    வணக்கம் ஐய்யா
    நான் உங்கள் பாடங்களை படித்துக்கொன்டுருக்கிறேன்,உங்கள் எழுத்து நடை
    மற்றும் கதையுடன் கூடிய விளக்கங்கள் மிக அருமை .நான் கோவை மாவட்டம்,
    கணபதி./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  36. /////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    இன்றைய பாடம் அருமை. எளிமையாக இருந்தது. 11ல் கேது எனக்கு, அதனால் சந்தோஷமாகவும் இருந்தது.////

    உங்களுக்குக் கேது 11ல் இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான் பாரதி!

    ReplyDelete
  37. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    பின்னிட்டீங்க போங்க..
    தலைப்பை சொல்றேன்.. எங்களுக்கே தோனாத விஷயம்..////

    அதெல்லாம் தோன்றாமல் இருக்குமா? நினைப்பதற்கு நேரமில்லை என்று வேண்டுமென்றால் சொல்லுங்கள்!
    -----------------------------------------------------------------------------------------------
    /////அப்புறம் எனக்கு 4-ல நிக்குறான் கேது..
    உங்களுடைய பலன் படிச்சேன்.. இதய நோயாம்.. ரொம்ப சந்தோஷம்.. ஒரே நிமிஷத்துல முருகன்கிட்ட போய்ச் சேர்ந்திரலாம்..
    இன்னிக்குத்தான் எனக்கு உருப்படியான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கீங்க..
    நன்றி.. நன்றி.. நன்றி../////

    அதற்கெல்லாம் இன்னும் காலம் இருக்கிறது. இன்னும் ஒரு 40 வருடங்களாவது பதிவுகள் எழுதிவிட்டு அப்புறம் போகலாம்
    முருகன் எங்கே போய்விடப் போகிறார்?

    ReplyDelete
  38. அரும்யான பதிவு. எனக்கு 6 & 12 இல் கேது & ராகு தனித்த நில்ய்யில்.

    ReplyDelete
  39. //////Blogger வெட்டிப்பயல் said...
    எனக்கு 12ல கேது...
    //
    இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
    பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
    பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.//
    இதை தான் ரெண்டு இடத்துல சொன்னாங்க :)///////

    பார்க்க வேண்டிய தெலுங்கு படங்களையெல்லாம் இந்தப் பிறவியிலேயே பார்த்து விடுங்கள்!:-)))))

    செம காமெடி சார் நீங்க :)))))

    ReplyDelete
  40. கேது செவ்வாயைப் போல் பலன் தருபவர் சரி.....செவ்வாயுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருந்தால்?,,,,,கவனிக்கத் தகுந்த ஒரு விஷயம், ராகுவைப் போல பயமுறுத்தாமல் கேது பலன்களை பதவிசாகத் தருவார் போலிருக்கிறதே....வகுப்பறையை மீண்டும் திறந்த வாத்தியாருக்கு நேரம் கழித்து நுழையும் மாணவனின் வணக்கங்கள்... பெஞ்சு மேல் எற்றிவிடாதீர்கள் ஐயா....

    ReplyDelete
  41. //நன்றி சஞ்சய்! கேது & செவ்வாய் சேர்க்கை, பார்வை பற்றிய பாடம் பின்னால் வர இருக்கிறது. அதுவரை சற்றுப் பொறுமை காக்கவும்!//
    நன்றி, என்னுடைய கேள்வி சேர்க்கையை பற்றி அல்ல, பார்வையை பற்றியது.
    எனினும் பொறுமையாக காத்துகொண்டிருக்கிறோம்.////////

    சேர்க்கையின்போது கிரகயுத்தம் மட்டும் உபரியாக இருக்கலாம். மற்றபடி சேர்க்கைக்கும், பார்வைக்கும் கேதுவிற்கான பலன்கள் ஒன்றாகத்தான் வரும்!//

    எனக்கு புரியாவைத்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  42. ////Blogger citizen said...
    அருமையான பதிவு. எனக்கு 6 & 12 இல் கேது & ராகு தனித்த நிலையில்.////

    தனித்து இருப்பது ஒருவகையில் நல்லதுதான். மொத்த பாடத்தையும் படித்தபிறகு உங்களுகே அது புரியும்

    ReplyDelete
  43. ////Blogger ஸ்ரீதர்கண்ணன் said...
    //////Blogger வெட்டிப்பயல் said...
    எனக்கு 12ல கேது...
    //
    இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
    பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
    பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.//
    இதை தான் ரெண்டு இடத்துல சொன்னாங்க :)///////
    பார்க்க வேண்டிய தெலுங்கு படங்களையெல்லாம் இந்தப் பிறவியிலேயே பார்த்து விடுங்கள்!:-)))))
    செம காமெடி சார் நீங்க :)))))

    காமெடி இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்துவிடும் நண்பரே!

    ReplyDelete
  44. /////Blogger படித்துறை.கணேஷ் said...
    கேது செவ்வாயைப் போல் பலன் தருபவர் சரி.....செவ்வாயுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருந்தால்?,,,,,கவனிக்கத் தகுந்த ஒரு விஷயம், ராகுவைப் போல பயமுறுத்தாமல் கேது பலன்களை பதவிசாகத் தருவார் போலிருக்கிறதே....வகுப்பறையை மீண்டும் திறந்த வாத்தியாருக்கு நேரம் கழித்து நுழையும் மாணவனின் வணக்கங்கள்... பெஞ்சு மேல் எற்றிவிடாதீர்கள் ஐயா....//////

    நீங்கள் தொலைக் காட்சியில் பணி புரிந்து மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறீர்கள். உங்களை யாராவது பெஞ்சின் மேல் நிற்க வைப்பார்களா? நோ சான்ஸ்!

    ReplyDelete
  45. /////Blogger SP Sanjay said...
    //நன்றி சஞ்சய்! கேது & செவ்வாய் சேர்க்கை, பார்வை பற்றிய பாடம் பின்னால் வர இருக்கிறது. அதுவரை சற்றுப் பொறுமை காக்கவும்!//
    நன்றி, என்னுடைய கேள்வி சேர்க்கையை பற்றி அல்ல, பார்வையை பற்றியது.
    எனினும் பொறுமையாக காத்துகொண்டிருக்கிறோம்.////////
    சேர்க்கையின்போது கிரகயுத்தம் மட்டும் உபரியாக இருக்கலாம். மற்றபடி சேர்க்கைக்கும், பார்வைக்கும் கேதுவிற்கான பலன்கள் ஒன்றாகத்தான் வரும்!//
    எனக்கு புரியாவைத்தமைக்கு நன்றி ஐயா!/////

    இதற்கெதற்கு நன்றி நண்பரே? வாத்தியாரின் பணிகளில் அதுவும் ஒன்றல்லவா?

    ReplyDelete
  46. Dear Sir


    For me Lagnadhibhadhi (Sevvai) 1,6 (Viruchiga Lagna) Sitting in 11th Place(Sevvai - Alone) and 6th place is Kethu(Alone)in Rasi Chart
    Sir.

    What about my Lagnadhibhadhi palan and Kethu Palan ?

    Iam expecting your kethu combination with moon and saturn?

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  47. Dear Sir

    For me: Lagna(Viruchiga),

    6th place Kethu(Mesam)-Alone
    7th plae Guru -Alone
    8th place Moon-Alone
    9th place Saturn -Alone
    10th place Suryan Sukkiran and Bhudhan
    11th Place Sevvai(Lagnadhibadhi)-Alone
    12th place Rahu -Alone

    Looking Very nice chart(it is like Malai). I feel my life also going nice..

    I Sincere thanks to your lesson. Please take this chart and anlayse.

    Thank you

    Loving Student
    Aulkumar Rajaraman

    ReplyDelete
  48. ///////Blogger SP Sanjay said...
    //நன்றி சஞ்சய்! கேது & செவ்வாய் சேர்க்கை, பார்வை பற்றிய பாடம் பின்னால் வர இருக்கிறது. அதுவரை சற்றுப் பொறுமை காக்கவும்!//
    நன்றி, என்னுடைய கேள்வி சேர்க்கையை பற்றி அல்ல, பார்வையை பற்றியது.
    எனினும் பொறுமையாக காத்துகொண்டிருக்கிறோம்.////////
    சேர்க்கையின்போது கிரகயுத்தம் மட்டும் உபரியாக இருக்கலாம். மற்றபடி சேர்க்கைக்கும், பார்வைக்கும் கேதுவிற்கான பலன்கள் ஒன்றாகத்தான் வரும்!//
    எனக்கு புரியாவைத்தமைக்கு நன்றி ஐயா!/////

    இதற்கெதற்கு நன்றி நண்பரே? வாத்தியாரின் பணிகளில் அதுவும் ஒன்றல்லவா?//

    ஆமாம்.
    நெகிழ்ந்தேன், உங்கள் பாசத்தைக் கண்டு!
    வியந்தேன், உங்கள் புலமையை கண்டு!

    ReplyDelete
  49. காலை வணக்கம்.
    எனக்கு மேஷத்தில் (4-ல் ) கேது குருவுடன். 4-ம் வீட்டின் பரல் 36 . குரு தனித்து 6 பரல்களுடன் உள்ளார்.
    மேஷ அதிபதி செவ்வாய் நீசம்.
    எனக்கு கேது தசை சுக்ர புக்தி நடக்கிறது.பலன்கள் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  50. ஐயா,
    செவ்வாயுடன் கேது அஸ்தன்கம் ஆகிடும் போது , அவரால் விளையும் கெடுபலன்கள் குறையுமா ?
    அஸ்தந்கம் லகினத்திற்கும் பார்க்க வேண்டுமா ? அதாவது லக்கினத்திற்கும் அதற்க்கு அடுத்து உள்ள கிரகமும் ஐந்து பாகைக்குள் இருந்தால் அதுவும் அஸ்தந்கம் தானா ?

    அஸ்தந்கம் ஆகும் போது முதலில் உள்ள கிரகத்தின் பலனை நாம் அடைய முடியுமா ?

    ReplyDelete
  51. 11ல் கேது இருந்தால் மூத்த சகோதரர்களால் எந்த நன்மையும் இருக்காது. தொந்தரவுகள் இருக்கும். சில சோதிடர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்..
    தெளிவுபடுத்துங்கள்...

    ReplyDelete
  52. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    For me Lagnadhibhadhi (Sevvai) 1,6 (Viruchiga Lagna) Sitting in 11th Place(Sevvai - Alone) and 6th place is Kethu(Alone)in Rasi Chart
    Sir.
    What about my Lagnadhibhadhi palan and Kethu Palan ?
    Iam expecting your kethu combination with moon and saturn?
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தால் (லாபஸ்தானம் அது) குறைந்த முயற்சி; அதிகப் பலன் (Minimum efforts:Maximum benefits)

    ReplyDelete
  53. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    For me: Lagna(Viruchiga),
    6th place Kethu(Mesam)-Alone
    7th plae Guru -Alone
    8th place Moon-Alone
    9th place Saturn -Alone
    10th place Suryan Sukkiran and Bhudhan
    11th Place Sevvai(Lagnadhibadhi)-Alone
    12th place Rahu -Alone
    Looking Very nice chart(it is like Malai). I feel my life also going nice..//////

    பிறகென்ன? லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தால் வாழ்க்கை நைஸாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  54. /////Blogger Sakkubai said...
    காலை வணக்கம்.
    எனக்கு மேஷத்தில் (4-ல் ) கேது குருவுடன். 4-ம் வீட்டின் பரல் 36 . குரு தனித்து 6 பரல்களுடன் உள்ளார்.
    மேஷ அதிபதி செவ்வாய் நீசம்.
    எனக்கு கேது தசை சுக்ர புக்தி நடக்கிறது.பலன்கள் எப்படி இருக்கும் ?/////

    என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்? பலன் என்ற சொல்லிற்கு எத்தனை அர்த்தம் உள்ளது தெரியுமா?

    மிட்டாய் கிடைத்தால் ஒரு குழந்தைக்கு அது நல்ல பலன்
    திருமணம் நிச்சயமானால் ஒரு பெண்ணிற்கு அது நல்ல பலன்
    கைநிறையச் சம்பளத்துடன் ஒரு வேலை கிடைத்தால் ஒரு இளைஞனுக்கு அது நல்லபலன்
    இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

    ReplyDelete
  55. Blogger பாஸ்கர் said...
    ஐயா,
    செவ்வாயுடன் கேது அஸ்தன்கம் ஆகிடும் போது , அவரால் விளையும் கெடுபலன்கள் குறையுமா ?
    அஸ்தந்கம் லகினத்திற்கும் பார்க்க வேண்டுமா ? அதாவது லக்கினத்திற்கும் அதற்க்கு அடுத்து உள்ள கிரகமும் ஐந்து பாகைக்குள் இருந்தால் அதுவும் அஸ்தந்கம் தானா ?
    அஸ்தந்கம் ஆகும் போது முதலில் உள்ள கிரகத்தின் பலனை நாம் அடைய முடியுமா ?//////

    அஸ்தமனம் என்பது கிரகங்களுக்குத்தான். எல்லா இடங்களுக்கும் அது பொருந்தும்.

    முதலில் உள்ள கிரகத்திற்கு ஏது அஸ்தமனம்? அதோடு உரசும் கிரகத்திற்குத்தான் உண்டு

    அஸ்தமணம் ஆன கிரகங்களினால் முழுப்பலனும் கிடைக்காது. ஒரளவு கிடைக்கும். அது அவர்களுடைய தசாபுத்திகளில் கிடைக்கும்!

    ReplyDelete
  56. //////Blogger தங்ஸ் said...
    11ல் கேது இருந்தால் மூத்த சகோதரர்களால் எந்த நன்மையும் இருக்காது. தொந்தரவுகள் இருக்கும். சில சோதிடர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்..
    தெளிவுபடுத்துங்கள்...///////

    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா என்று தெரியவில்லை. பட்டு அனுபவித்தவர்கள் சொல்லுங்கள்!

    ReplyDelete
  57. Hello sir
    எனக்கு எட்டில் கேது ஆனால் நாளிலிருக்கும் குரூ பார்க்கிறார்.எனக்கு ஆயுள் தோஷமா.ஆனால் நான் எழுபது வயதிற்கு மேல் வாழ்வேன் என்கிறார்கள்.
    இரண்டில் ராகுவுடன் செவாயும்

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. karunanidthi also have kethu in eighth place...but he is still living!!!

    ReplyDelete
  60. ///Blogger Mano said...
    Hello sir
    எனக்கு எட்டில் கேது ஆனால் நாலிலிருக்கும் குரூ பார்க்கிறார்.எனக்கு ஆயுள் தோஷமா.ஆனால் நான் எழுபது வயதிற்கு மேல் வாழ்வேன் என்கிறார்கள்.
    இரண்டில் ராகுவுடன் செவ்வாயும்////

    குரு பார்த்தால் ஏது தோஷம்? கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  61. ////Blogger Mano said...
    karunanidthi also have kethu in eighth place...but he is still living!!!/////

    மகா புருஷ ஜாதகம் அவருடையது. ஆகவே அதையெல்லாம் தாண்டி அவர் இருக்கிறார். இருப்பார்!

    ReplyDelete
  62. ஐயா,
    மன்னிக்கவும் நான் தான் தவறாகச் சொல்லிவிட்டேன்.கருணாநிதி ஜாதகத்தில் கேது 8-ல் தான்,ஆர்வக் கோளாறு தவறாகிவிட்டது மன்னிக்கவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com