மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

17.2.09

விதியை மதியால் வெல்ல முடியுமா?


-------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!
-------------------------------------------------------------------------------------------

விதியை மதியால் வெல்ல முடியுமா?

வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்
ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.

அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே
அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று
உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக்
கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும்
கிடையாது"

Nothing is stronger than destiny!

மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள்
அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.
அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின்
முடிவில் உள்ள அதிகாரம்

திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி
அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே
சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"
---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில்
பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும்
பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே
பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே
சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ
ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"
...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன?
அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும்
வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ்
வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும்
அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும்.
இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது
- ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.

இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை
எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு
இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து
முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப்
படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா
என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
The Almighty will give standing power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண
குருவின் சரித்திரம் (அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய
மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று
சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த
உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து,
வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின் துகள்களைத்
தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில்
உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது எப்படி இயங்குகிறது?
உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம்
இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன் அதைச் செய்யவில்லை?

விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை
விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?

ஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்!

அதைப் படியுங்கள்!

என்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு
முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்

ஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்
கொள்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------
இளைஞன் ஒருவன் ஆலமரத்தடியில் படுத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

அந்த வழியே சென்ற ஞானி ஒருவர் அவனைப் பார்த்தவுடன் நின்று விட்டார்

இப்படிப் பகல் நேரத்தில் சுகமாகப் படுத்துத் தூங்கினால், அவன் கெட்டுச்
சீரழிந்து விடுவானே என்று நினைத்தவர், அவனைத் தட்டி எழுப்பினார்.

எழுந்தவன், கேட்டான்,"யோவ் பெரிசு, எதுக்கு எழுப்பினே?"

"பகலில் உறங்குவது நல்லதல்ல!"

"சும்மா உக்காந்திருப்பதும் நல்லதல்ல! அதனால்தான் தூங்குகிறேன்"

"ஏன் வேலைக்குச் செல்லலாமே?"

"ஒரு வேலையும் கிடைக்கவில்லை!"

"வேலை அதுவாகக் கிடைக்காது. நீயாகத்தான் தேடிப்பிடிக்க வேண்டும்"

"தேடிப்பிடித்துச் செய்தால்?"

"நான்கு காசு கிடைக்கும். அதுவே சில ஆண்டுகளில் நான்காயிரம்
காசுகளாகும்"

"அதை வைத்து என்ன செய்வது?"

"சொந்தமாகத் தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டலாம்"

"ஈட்டி....?"

"வீடு வாசல் என்று சொந்தமாகக் கட்டிக்கொள்ளலாம்"

"சொந்தமாகக் கட்டி...?"

"சுகமாக வாழலாம்!"

"இப்போது, அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என்னை அறுக்காமல்
நீர் உம் ஜோலியைப் பாரும்!" என்று கத்திச் சொன்னவன், மீண்டும் படுத்து
உறங்க ஆரம்பித்துவிட்டான்.

இந்த மாதிரிப் பிறவிகளுக்குச் சொன்ன மொழிகள் ஏராளம்.

"சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்"
என்று பட்டுக்கோட்டையார் சொன்னது மறக்க முடியாத ஒன்றாகும்
------------------------------------------------------------------------------
மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப்
பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது
முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.
எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே வாழ்ந்த
அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ்
உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச் சென்ற கவிதைகளை
எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக்
கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எப்படி எடுத்துக்
கொள்ள முடியும்? அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின
உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய வைத்தன!


இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும்
என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே
அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப்
படும்!"

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு
காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம்.
வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த
இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே
செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்?
உழைப்பின் அருமை எப்படித் தெரியும்? பணத்தின் அருமை எப்படித்
தெரியும்?
--------------------------------------------------------------------------------------------------
The Road to Success is not straight:

There is a curve called failure, a loop called confusion, speed bumps
called friends, caution lights called family, and you will have flats
called jobs.

But, if you have a spare called determination, an engine called
perseverance, insurance called faith, and a driver called God,
you will make it to a place called success!

Do good, and leave behind you a monument of virtue that the
storms of time can never destroy.
---------------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா?
ஆசைப்படக்கூடாதா?!"

"நியாயமான ஆசைகளில் தவறில்லை!"

"எது நியாயமான ஆசை?"

"சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது
நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா?"

"நியாயமில்லாத ஆசை எது?"

"குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல
பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு
அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும்.
ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது
நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது!
காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா? குயில் மயிலுக்கு ஆசைப்படலாமா?
அது நியாயமில்லாத ஆசை!"
--------------------------------------------------------------------------------------------
புதிய கீதை

எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!

அன்புடன்
வகுப்பறை,
வாத்தியார்!


வாழ்க வளமுடன்!

49 comments:

govind said...

ur defintion for geethai is good sir.

govind said...

this is true also ...i felt it many times

மதி said...

குருஜீ...

கலக்கிடிங்கள் பொங்க....
நச்சினு இருந்திச்சு...

இதப் படிச்சி என் கண்ணு கலகிரிச்சி..

கண்ணதசன் பாட்டு மாதிரி நறுக்குனு (என்ன பொல)பாமரனுக்கு புரியர தெளிவா இருதுச்சு....

நன்றி குருஜி...எத்திக்கும் பரவட்டும் உங்கள் புகழ்.

ஸ்ரீதர்கண்ணன் said...

சார் சும்மா பின்னீடீங்க. அருமை...

sridhar said...

அய்யா சரணம் சரணம். இந்த பதிவை வார்த்தைகளால் விமர்சிக்க முயல்வதை விட மனதால் வாழ்த்துவது சிறந்தது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.

திருநெல்வேலி கார்த்திக் said...

புதிய கீதை அற்புதம்.
பாராட்டுக்கள்.


இதை கொள்கையாய் வைத்துக் கொண்டால் நிம்மதியாய் சுகமாய் உலகில் வாழலாம்.

1.இந்த உலகில் நமக்கு நடக்க வேண்டியது நடந்தே தீரும்

2.நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.

3.நம்மை விட்டு போக வேண்டியது போயே தீரும்.

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
இறையாற்றல்
கருணை புரியட்டும்.

கார்த்திக்

Arul said...

Dear Sir,

Really today you forgot yourself and given " lot of information" to all students(Fate and cause effect).

Ungalaai pugalamal ennal irukkamudiyadhu sir(Because that is true)...you are always great.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arul said...

Dear Sir

Yaar Tharuvar Indha Ariyasanam
Ivarae pervuvar Andha Sariyasanam"
- Kalidhasar.
"Theivathal Agatheninum muyarchi than meyivaruttha koolitharum"
-- ThirukuralThank you

Loving Student
Arulkumar Rajaraman

நாமக்கல் சிபி said...

கிடைக்குறது கிடைக்காம இருக்காது!
கிடைக்காம இருக்குறது கிடைக்காது!

எங்க அப்பா கீழ்க்கண்டவாறு அடிக்கடி சொல்லுவார்

"கடவுளாள் கொடுக்கப் பட்டதை யாராலும் பறிக்க முடியாது. கடவுளால் பறிக்கப் பட்டதை யாராலும் கொடுக்க முடியாது"ன்னு!

வேலன். said...

விதியை மதியால் வெல்ல முடியுமா?
நான் படித்த் ஒரு சிறு கதையை இங்கு
பதிவிட விரும்புகின்றேன்.
ஒரு பால்வியாபாரி இருந்தான். இரண்டு பசு மாடுகளில் வரும் வருமானம்தான் அவனுக்கு. ஆனால் கடவுள் பக்தி மிக அதிகம் அவனுக்கு. கடவுளை கும்பிடாமல் இருக்க மாட்டான். ஆனால் இரண்டு மாடுகள் என்பதால் வறுமையில் வாழ்ந்துவந்தான். அவன் நிலையை பார்த்து நாரதர் பிரம்மாவிடம் சென்று அவன் நிலையை எடுத்துரைத்தார். அவர் அவனுடைய ஓலைச்சுவடியைப்
பார்த்து - நாரதா அவன் தலையெழுத்து அவனுக்கு இரண்டு பசு மாடுகள் தான் என்பது - அதை மாற்ற முடியாது என்றார். நாரதர் யோசித்தார். நேரே நமது பால்வியாபாரியிடம் வந்தார். அவனுடைய இரண்டு மாடுகளையும் வி்ற்று அதனால் வரும் காசுகளை செலவு செய்திட சொன்னார். பால் வியாபாரி முதலில் தயங்கினார். இருப்பினும் நாரதர் கலகம் இறுதியில் நன்மையில்தான் முடியும் என்பதால்
துணிந்து மாடுகளை விற்று செலவு செய்துவிட்டார். அடுத்தநாள் பிழைப்புக்கு மாடுகள் இல்லை.
கவலையுடன் உறங்க சென்றார்.
மறுநாள் எழந்து பார்த்தால் அவர்
மாட்டுகொட்டடியில் வேறு இரண்டு
மாடுகள் இருந்தன. மிகவும் மகிழந்தார்.அன்று மீண்டும் அவரிடம்
நாரதர் வந்தார் மாடுகளை விற்று செலவு செய்ய சொன்னார்.இதுபோல் தினம் வரும் மாடுகளை தினமும் விற்று செலவு செய்திட சொன்னார்.
பால் வியாபாரியும் அதன்படியெ செய்து பெரும் பணக்காரணக மாறினார். அவருக்கு விதிக்கப்பட்டது
இரண்டு மாடுகள் என்பது தலையெழுத்து. ஆனால் அவர் நாரதர் மதியால் விதியை வென்றார்.

விதியை மதியால் வெல்ல முடியாமா?

வாழ்க வளமுடன்,
வேலன்.

Subbiah Veerappan said...

//////Blogger govind said...
ur defintion for geethai is good sir.//////

நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger govind said...
this is true also ...i felt it many times//////

உங்கள் கருத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

///////Blogger மதி said...
குருஜீ...
கலக்கிடீங்க போங்க....
நச்சினு இருந்திச்சு...
இதைப் படிச்சி என் கண்ணு கலங்கிரிச்சி..
கண்ணதாசன் பாட்டு மாதிரி நறுக்குனு (என்னைப் பொல)பாமரனுக்கு புரியரமாதிரி தெளிவா இருதுச்சு....
நன்றி குருஜி...எத்திக்கும் பரவட்டும் உங்கள் புகழ்.//////

புகழெல்லாம் வேண்டாம். எனக்கு உங்களைப்போன்றோரின் அன்பு ஒன்று போதும்!

Subbiah Veerappan said...

/////Blogger ஸ்ரீதர்கண்ணன் said...
சார் சும்மா பின்னிட்டீங்க. அருமை...//////

நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////////////Blogger sridhar said...
அய்யா சரணம் சரணம். இந்த பதிவை வார்த்தைகளால் விமர்சிக்க முயல்வதை விட மனதால் வாழ்த்துவது சிறந்தது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.///////////

உங்கள் மன வாழ்த்துக்களுக்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
புதிய கீதை அற்புதம்.
பாராட்டுக்கள்.
இதை கொள்கையாய் வைத்துக் கொண்டால் நிம்மதியாய் சுகமாய் உலகில் வாழலாம்.
1.இந்த உலகில் நமக்கு நடக்க வேண்டியது நடந்தே தீரும்
2.நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்
3.நம்மை விட்டு போக வேண்டியது போயே தீரும்.
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
இறையாற்றல்
கருணை புரியட்டும்.
கார்த்திக்/////////////////

ஆகா, இறைவனின் கருணை எப்போதும் உண்டு. கருணையின் வடிவல்லவா அவன்!

Subbiah Veerappan said...

/////////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir,
Really today you forgot yourself and given " lot of information" to all students(Fate and cause effect).
Ungalaai pugalamal ennal irukkamudiyadhu sir(Because that is true)...you are always great.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////////

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ராஜாராமன்!

N.K.S.Anandhan. said...

ஐயா மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் தலைப்பும் தலைப்பை பற்றிய விளக்கமும் ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்தீர்கள் போல் உள்ளதே?

ராவணன் said...

அங்க தொட்டு இங்க தொட்டு ஆத்திகர்களின் தலையில் கையை வைக்கிறீர்கள்,அவர்கள் தான் விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுவார்கள்.

மற்றபடி எவருடைய வாழ்நாள் முடிவினையும் யாராலும் கூறமுடியாது.
அது அறிவியலாகட்டும்,
ஆன்மீகமாகட்டும் இல்லை நீங்கள் கொண்டாடும் ஜோதிடமாகட்டும்.
நமக்குத் தெரியாதது நடந்தால்,
யாரும் எதிர்பாராதது நடந்தால் அப்போது அது விதியாக பெயர் சூட்டப்படுகின்றது.

மனிதனுக்கு...ஏன் உயிர்களுக்கு அனைத்தும் தெரியவேண்டிய அவசியம் இல்லை,அதற்காக மேலிருந்து யாரும் சுவிட்ச் போடுகிறார்கள் என்று நம்புவது எந்த வகை விதியோ.

எந்த அறிவாளிக்கும் உயிர் எங்கே உள்ளது என்று தெரியாது.ஏன் உங்களால் கூறமுடியுமா?இல்லை நீங்களும் மதிவாணர்தானா?

ஜோதிடப்பாடம் என்று கூறி வெறும் கதை மட்டுமே கூறுகிறீர்கள்.
ஜோதிடம் கற்றவர்கள் அதை எண்ணி பெருமை கொள்ள ஒன்றும் இல்லை.
இதுவும் ஒரு கலை.
நானும் ஓரளவிற்கு சோதிடம் கற்றவன்.

உங்களுக்குப் புகழ்ச்சி மட்டுமே பிடிக்கும் என நினைக்கின்றேன்.
நான் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலோ,கோபத்தை வரவைத்தாலோ இந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

விதியின் தன்மையை நன்கு புரியும்படியாக எடுத்து சொன்ன வாத்தியாரய்யாவிர்க்கு நன்றி ! நன்றி ! ! நன்றி !!!

Sanjai said...

ஊழ் மற்றும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை இணைத்த விதம் நன்று!

Final touchingஆக கொடுத்த புதிய கீதையின் விளக்கம் மெருகு ஏற்றி விட்டது.

//"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ்
வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும்
அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும்.
இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது
- ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!//

உண்மை, நான் இதை அனுபவித்து இருக்கேன்.

என்றும் அன்புடன்

krish said...

இன்னைக்கு கிடைச்சது நாளைக்கு வெறுத்துடும் Super Statement.

இராகவன் நைஜிரியா said...

கவியரசு கண்ணதாசனின் வரிகளில்...

”விதியை மதியால் வெல்லலாம் அப்படி என்கிற விதி இருந்தால்”

விதியை மீறி எதுவும் இயலாது..

sundaresan p said...

வணக்கம் ஐயா

உங்கள் புதிய கீதை வியக்க வைத்துவிட்டது.இந்த கதைகளும் அருமை.
அய்யா ஜோதிடமும் , விண்வெளி பற்றி ஆராயும் அறிவியலும் ஒன்றா ?

Subbiah Veerappan said...

////////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Yaar Tharuvar Indha Ariyasanam
Ivarae pervuvar Andha Sariyasanam"
- Kalidhasar.
"Theivathal Agatheninum muyarchi than meyivaruttha koolitharum"
-- Thirukural
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

முயற்சியால் பலன் உண்டு என்பதைக் கவியரசரை உதாரணம் காட்டி நான் இதே பதிவில் எழுதியுள்ளேன் ராஜாராமன்!

Subbiah Veerappan said...

/////Blogger Namakkal Shibi said...
கிடைக்குறது கிடைக்காம இருக்காது!
கிடைக்காம இருக்குறது கிடைக்காது!
எங்க அப்பா கீழ்க்கண்டவாறு அடிக்கடி சொல்லுவார்
"கடவுளாள் கொடுக்கப் பட்டதை யாராலும் பறிக்க முடியாது. கடவுளால் பறிக்கப் பட்டதை யாராலும் கொடுக்க முடியாது"ன்னு!//////

கரெக்ட்! வாழ்க உங்கள் தந்தையார். வளர்க சிபியார்!

Subbiah Veerappan said...

////////Blogger வேலன். said...
விதியை மதியால் வெல்ல முடியுமா?
நான் படித்த் ஒரு சிறு கதையை இங்கு
பதிவிட விரும்புகின்றேன்.
ஒரு பால்வியாபாரி இருந்தான். இரண்டு பசு மாடுகளில் வரும் வருமானம்தான் அவனுக்கு. ஆனால் கடவுள் பக்தி மிக அதிகம் அவனுக்கு. கடவுளை கும்பிடாமல் இருக்க மாட்டான். ஆனால் இரண்டு மாடுகள் என்பதால் வறுமையில் வாழ்ந்துவந்தான். அவன் நிலையை பார்த்து நாரதர் பிரம்மாவிடம் சென்று அவன் நிலையை எடுத்துரைத்தார். அவர் அவனுடைய ஓலைச்சுவடியைப்
பார்த்து - நாரதா அவன் தலையெழுத்து அவனுக்கு இரண்டு பசு மாடுகள் தான் என்பது - அதை மாற்ற முடியாது என்றார். நாரதர் யோசித்தார். நேரே நமது பால்வியாபாரியிடம் வந்தார். அவனுடைய இரண்டு மாடுகளையும் வி்ற்று அதனால் வரும் காசுகளை செலவு செய்திட சொன்னார். பால் வியாபாரி முதலில் தயங்கினார். இருப்பினும் நாரதர் கலகம் இறுதியில் நன்மையில்தான் முடியும் என்பதால்
துணிந்து மாடுகளை விற்று செலவு செய்துவிட்டார். அடுத்தநாள் பிழைப்புக்கு மாடுகள் இல்லை.
கவலையுடன் உறங்க சென்றார்.
மறுநாள் எழந்து பார்த்தால் அவர்
மாட்டுகொட்டடியில் வேறு இரண்டு
மாடுகள் இருந்தன. மிகவும் மகிழந்தார்.அன்று மீண்டும் அவரிடம்
நாரதர் வந்தார் மாடுகளை விற்று செலவு செய்ய சொன்னார்.இதுபோல் தினம் வரும் மாடுகளை தினமும் விற்று செலவு செய்திட சொன்னார்.
பால் வியாபாரியும் அதன்படியெ செய்து பெரும் பணக்காரணக மாறினார். அவருக்கு விதிக்கப்பட்டது
இரண்டு மாடுகள் என்பது தலையெழுத்து. ஆனால் அவர் நாரதர் மதியால் விதியை வென்றார்.
விதியை மதியால் வெல்ல முடியாமா?
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

இதைத்தான் பதிவில் "மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப்
பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது
முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!" என்று எழுதியுள்ளேனே வேலன்!

Subbiah Veerappan said...

///////Blogger N.K.S.Anandhan. said...
ஐயா மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் தலைப்பும் தலைப்பை பற்றிய விளக்கமும் ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்தீர்கள் போல் உள்ளதே?/////

இதில் ஒரு பகுதி, முன்பு வேறு ஒரு கட்டுரையில் எழுதியதுதான்! நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger ராவணன் said...
அங்க தொட்டு இங்க தொட்டு ஆத்திகர்களின் தலையில் கையை வைக்கிறீர்கள்,அவர்கள் தான் விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுவார்கள்.
மற்றபடி எவருடைய வாழ்நாள் முடிவினையும் யாராலும் கூறமுடியாது.
அது அறிவியலாகட்டும்,
ஆன்மீகமாகட்டும் இல்லை நீங்கள் கொண்டாடும் ஜோதிடமாகட்டும்.
நமக்குத் தெரியாதது நடந்தால்,
யாரும் எதிர்பாராதது நடந்தால் அப்போது அது விதியாக பெயர் சூட்டப்படுகின்றது.
மனிதனுக்கு...ஏன் உயிர்களுக்கு அனைத்தும் தெரியவேண்டிய அவசியம் இல்லை,அதற்காக மேலிருந்து யாரும் சுவிட்ச் போடுகிறார்கள் என்று நம்புவது எந்த வகை விதியோ.
எந்த அறிவாளிக்கும் உயிர் எங்கே உள்ளது என்று தெரியாது.ஏன் உங்களால் கூறமுடியுமா?இல்லை நீங்களும் மதிவாணர்தானா?
ஜோதிடப்பாடம் என்று கூறி வெறும் கதை மட்டுமே கூறுகிறீர்கள்.
ஜோதிடம் கற்றவர்கள் அதை எண்ணி பெருமை கொள்ள ஒன்றும் இல்லை.
இதுவும் ஒரு கலை.
நானும் ஓரளவிற்கு சோதிடம் கற்றவன்.
உங்களுக்குப் புகழ்ச்சி மட்டுமே பிடிக்கும் என நினைக்கின்றேன்.
நான் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலோ,கோபத்தை வரவைத்தாலோ இந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள்.///////

உங்களுக்கும் ஜோதிடம் தெரியும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!
வலைப்பதிவில் எழுதினால் புகழ் கிடைக்குமா? அதிசயமாக இருக்கிறது!
எனக்குப் புகழின் மீது காதல் இல்லை!
இந்த வயதில் புகழ்பெற்று ஆகப்போவது ஒன்றும் இல்லை!
நான் நானாகவே கடைசிவரை இருக்க விரும்புகிறேன்
அரசியல் அல்லது சினிமாத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே மக்களிடம் (ஏழு கோடி தமிழர்களிடம்) பெயர் பெற
முடியும். என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என் எண்ணம் தவறோ என்று தோன்றுகிறது!

Subbiah Veerappan said...

////////Blogger பாஸ்கர் said...
விதியின் தன்மையை நன்கு புரியும்படியாக எடுத்து சொன்ன வாத்தியாரய்யாவிற்கு நன்றி ! நன்றி ! ! நன்றி !!!///////

உங்களுக்குப் புரிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே!

Subbiah Veerappan said...

//////Blogger SP Sanjay said...
ஊழ் மற்றும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை இணைத்த விதம் நன்று!
Final touchingஆக கொடுத்த புதிய கீதையின் விளக்கம் மெருகு ஏற்றி விட்டது.
//"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
...குறள் எண்.372
பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ்
வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும்
அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும்.
இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது
- ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!//
உண்மை, நான் இதை அனுபவித்து இருக்கேன்.
என்றும் அன்புடன்//////

நானும் பலவற்றை அனுபவித்திருக்கிறேன். அனுபவம்தான் என்னை இங்கே எழுதவைக்கிறது!

Subbiah Veerappan said...

/////Blogger krish said...
இன்னைக்கு கிடைச்சது நாளைக்கு வெறுத்துடும் Super Statement.//////

சில காதல் திருமணங்கள் தோல்வியடைவதற்கு இந்த உளவியல் மனப்பான்மைதான் காரணம்

Subbiah Veerappan said...

//////Blogger இராகவன் நைஜிரியா said...
கவியரசு கண்ணதாசனின் வரிகளில்...
”விதியை மதியால் வெல்லலாம் அப்படி என்கிற விதி இருந்தால்”
விதியை மீறி எதுவும் இயலாது..//////

ஆமாம், கவியரசரின் இந்த வரிகளை நானும் படித்திருக்கிறேன்.

Subbiah Veerappan said...

///////Blogger sundar said...
வணக்கம் ஐயா
உங்கள் புதிய கீதை வியக்க வைத்துவிட்டது.இந்த கதைகளும் அருமை.
அய்யா ஜோதிடமும் , விண்வெளி பற்றி ஆராயும் அறிவியலும் ஒன்றா?/////////

பாராட்டுக்களுக்கு நன்றி!
வின்வெளியை ஆதாரமாகக் கொண்டுதான் ஜோதிடம். 1,400 வருடங்களுக்கு முன்பே விற்பன்னர்கள் எழுதிவைத்துவிட்டுப்போனது.

ஆனால் இன்றைய வின்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஜோதிடத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
அவர்களுக்கென்று தனி ரூட் உள்ளது. ஆனால் ஜோதிடத்தில் உள்ள புள்ளி விவரங்கள் சரியாக உள்ளதை மட்டும் அவர்கள் மறுப்பதில்லை!

திவாண்ணா said...

புதிய கீதை நல்லா இருக்கு!
விதி மதி? ம்ம்ம்ம்ம்ம்ம். சத்தியவான் சாவித்ரி?

கோவி.கண்ணன் said...

//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"//

ம். நொந்துகொள்ளாமல் இருந்தால்

'நிம்மதியால்' வெல்லமுடியும்.

:)

sundaresan p said...

ஐயா வணக்கம்
அய்யா ஒரு (personal) கேள்வி நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு படிப்பதற்காக CA(Charted Accountant)
அப்லை செய்தேன் ஆனால் ஒரு காரணத்தால் கல்வியை தொடரவில்லை.இப்போது
கல்வியை தொடர்வதற்காக Entrence Exam preparation செய்து வருகிறேன்.
இப்போது synes problem surjery செய்யசொல்லி மருத்துவர் கூறுகிறார்
கல்வியில் தடைகள் வருவது கொஞ்சம் கவலைதான்.என் கேள்வி என்னவென்றாள் எனக்கு உயர் கல்வி கற்கும் யோகம் என் ஜாதகத்தில் உள்ளதா ?
என் பிறந்த தேதி 01-01-1985 நேரம் காலை 08:20 பிறந்த இடம் கோவை.
அய்யா உங்கள் பதிழுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்...

Subbiah Veerappan said...

Blogger திவா said...
புதிய கீதை நல்லா இருக்கு!
விதி மதி? ம்ம்ம்ம்ம்ம்ம். சத்தியவான் சாவித்ரி?//////

அதெல்லாம் தெய்வ அருள்!

Subbiah Veerappan said...

Blogger கோவி.கண்ணன் said...
//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"//
ம். நொந்துகொள்ளாமல் இருந்தால்
'நிம்மதியால்' வெல்லமுடியும். :)/////

அதென்னவோ உண்மை கோவியாரே!

Subbiah Veerappan said...

Blogger sundar said...
ஐயா வணக்கம்
அய்யா ஒரு (personal) கேள்வி நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு படிப்பதற்காக CA(Charted Accountant)
அப்லை செய்தேன் ஆனால் ஒரு காரணத்தால் கல்வியை தொடரவில்லை.இப்போது
கல்வியை தொடர்வதற்காக Entrence Exam preparation செய்து வருகிறேன்.
இப்போது synes problem surjery செய்யசொல்லி மருத்துவர் கூறுகிறார்
கல்வியில் தடைகள் வருவது கொஞ்சம் கவலைதான்.என் கேள்வி என்னவென்றால் எனக்கு உயர் கல்வி கற்கும் யோகம் என் ஜாதகத்தில் உள்ளதா ?
என் பிறந்த தேதி 01-01-1985 நேரம் காலை 08:20 பிறந்த இடம் கோவை.
அய்யா உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்...//////


நீங்கள் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசிக்காரர்.லக்கினம் மகரம். நான்கில் மாந்தி உள்ளது. 4ற்குரிய செவ்வாய் இரண்டில் , வித்யாகாரகன் புதன் 11ல் லக்கினத்தில் 26 பரல்கள், 4ல் 27 பரல்கள் செவ்வாய் சுயவர்க்கத்தில் 4 பரல்கள். புதன் சுயவர்க்கத்தில் 4 பரல்கள்.

தடைகளுக்குக் காரணம் 4ல் உள்ள மாந்தி மற்றும் சாராசரி நிலைமையில் உள்ள செவ்வாய், மற்றும் புதன்.
லக்கினாதிபதி 3 பரல்கள். குரு 6 பரல்கள். குருவின் பரல்கள் நல்லதைச் செய்யும்.

கடும் முயற்சி செய்தால் நீங்கள் நினைப்பது நிறைவேறும். 50/50 வாய்ப்பு மட்டுமே உள்ளது. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள்

Sumathi. said...

ஹலோ சார்,

உங்கள் கதைகலை விட "புதிய கீதை"
அதி அற்புதம் போங்க.ஆமாம், நான் கூட விதியை மதியால வெல்லலாம், சதியால வெல்லலாம் னு லாம் ஒரு காலத்துல கோட்டை கட்டிட்டு அது இப்ப தரைமட்டமாய் போனதுக்கப்பறம் தான் தெரிஞ்சது எல்லாம் விதிப்படி தான் னு.அது மட்டும் இல்ல, நானும் அரம்பத்தில் இந்த ஜாதகம் ஜோசியம் லாம் நம்பாதவள் தான். ஆனா இப்ப பட்டதுக்கப்பறம் தான் எல்லாத்தையும் நினைக்கத் தோனுது. நீங்க சொன்னது 100% கரெக்ட்.விதியை வெல்லவும் முடியாது, தள்ளவும் முடியாது.

Rathinavel.C said...

can anyone give geekay email id? or his phone no.....i m in bangalore and would like to visit matheswaran,so i need some advise.

உண்மைத்தமிழன் said...

வாத்தியாரே..

தாமததத்திற்கு முதலில் மன்னிக்கவும். மன்னிக்கணும்..

பாடத்தைப் படித்தேன்.. புரிந்து கொண்டேன்.. விதி வலியது.. வினைப் பயனைப் புரிந்து கொண்டு விதியை நொந்து அடுத்த வேலையில் ஈடுபடுவது அனைவருக்குமே நல்லது.. புரியாமல் சண்டையிடுவது காற்றுடன் மோதுவதற்குச் சமம்..

எளிய தமிழில் மிக அழகாக புரிய வைக்கிறீர்..

புதிய கீதை பல விஷயங்களையும் புரிய வைக்கிறது. புன்னகைக்கவும் செய்கிறது..

நன்றி.. நன்றி..நன்றி..

Subbiah Veerappan said...

//////Blogger Sumathi. said...
ஹலோ சார்,
உங்கள் கதைகளை விட "புதிய கீதை" அதி அற்புதம் போங்க.ஆமாம், நான் கூட விதியை மதியால வெல்லலாம், சதியால வெல்லலாம்னுலாம் ஒரு காலத்துல கோட்டை கட்டிட்டு அது இப்ப தரைமட்டமாய் போனதுக்கப்பறம் தான் தெரிஞ்சது எல்லாம் விதிப்படி தான்னு.அது மட்டும் இல்ல, நானும் அரம்பத்தில் இந்த ஜாதகம் ஜோசியம்லாம் நம்பாதவள்தான். ஆனா இப்ப பட்டதுக்கப்பறம் தான் எல்லாத்தையும் நினைக்கத்தோனுது. நீங்க சொன்னது 100% கரெக்ட்.விதியை வெல்லவும் முடியாது, தள்ளவும் முடியாது.//////

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி

Subbiah Veerappan said...

Blogger Rathinavel.C said...
can anyone give geekay email id? or his phone no.....i m in bangalore and would like to visit matheswaran,so i need some advise.

ஜீக்கேயே வந்து சொல்வார்!

Subbiah Veerappan said...

/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
தாமததத்திற்கு முதலில் மன்னிக்கவும். மன்னிக்கணும்..
பாடத்தைப் படித்தேன்.. புரிந்து கொண்டேன்.. விதி வலியது.. வினைப் பயனைப் புரிந்து கொண்டு விதியை நொந்து அடுத்த வேலையில் ஈடுபடுவது அனைவருக்குமே நல்லது.. புரியாமல் சண்டையிடுவது காற்றுடன் மோதுவதற்குச் சமம்..
எளிய தமிழில் மிக அழகாக புரிய வைக்கிறீர்..
புதிய கீதை பல விஷயங்களையும் புரிய வைக்கிறது. புன்னகைக்கவும் செய்கிறது..
நன்றி.. நன்றி..நன்றி../////

புரிதலுடன் கூடிய பின்னூட்டம். நன்றி தமிழரே!

prince said...

vaathiyaare kalakureenga

Puthiya geethai,
appuram paadam sollum vitham miga nerungi vanthu solli kodupathu pol ullathu.
vaazhtha vayathillai.
Vanangugiren

Amuthan Sekar said...

ஐயா, ஜோதிடப் பாடங்கள் மிகவும் அருமை.

புதிய கீதை மிகவும் அருமை.

நீங்கள் வாத்தியாராக கிடைத்ததற்கு, நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம். உங்களுடைய சேவைக்கு நன்றிகள் பல.

நன்றி,
அமுதன் சேகர்.

Sathish Kumar said...

நிச்சியமாய் விதியை மதியால் வெல்ல முடியும்..!!

ஒருவனுக்கு பிணக்கு வரும் என்றால் அது விதி, அதற்கான மருந்து எடுத்து கொண்டு பிணக்கை நீக்கினால் அது மதி.

மேலும் ஒரு உதாரணம்
அரிசி என்பது விதி அதை உணவாக மாற்றுவது மதி.


“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ”

நாம் நம் முன்னோர் செய்த வினை இருபினும் அதை முறையான பயிற்சி கொண்டு திருத்திக் கொள்ளலாம்.அப்பயிற்சியே அத்தவம் ஆகும்.