மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.2.09

கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்!

கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்!

வாழ்க்கையை இரண்டு இரண்டாகப் பிரித்து, இரவு,பகல், உறவு, பகை
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அற்புதமாகப் பாடலை
எழுதிய கவியரசர் கண்ணதாசன் அவர்கள், அந்தப் பாடலை முடிக்கும்போது
இப்படி எழுதினார்.

"இளமைவரும் முதுமைவரும் உடலும் ஒன்றுதான்
தனிமைவரும் துணையும்வரும் பயணம் ஒன்றுதான்"

இரண்டு இரண்டாக விளக்கம் சொன்னவர், பிறகு இரண்டை ஒன்றாகக்
காட்டி எழுதினார் அது அவருக்கு மட்டுமே சாத்தியமான எழுத்து.

அதாவது பெண்டாட்டி, பிள்ளை என்று கூட்டாக வாழ்க்கைப் பயணத்தைத்
தொடரலாம் அல்லது எல்லாவற்றையும் துறந்துவிட்டு அல்லது இழந்து தனியாக
வாழவும் நேரிடலாம் என்று பொருள்படும்படி "தனிமைவரும் துணையும்வரும்
பயணம் ஒன்றுதான்" என்று சொன்னவர், தொடர்ந்து சொல்கிறார்.

"கண்கள்இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்!
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"

அருமை! அருமை! அதுதான் கவியரசர்!
--------------------------------------------------------------------------------
காட்சி ஒன்றாக இருந்தாலும், அதாவது கிரகங்கள் ஒருவீட்டில் இருக்கும்
காட்சி ஒன்றாக இருந்தாலும் பலன்கள் ஒன்று இல்லை. வெவ்வேறாகும்
அவைகள் தங்களின் தசா புத்திகளில் அததற்கு உரிய பலன்களையே
தரும்

கேதுவும் சனியும் ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது அல்ல! இருவருமே
தீய கிரகங்கள். ஒன்றாக இருப்பதால் என்ன நன்மை கிடைத்துவிடும்?
கேது செவ்வாயைப் போன்று செயல் படக்கூடியவர். சனியுடன் அவர்
சேர்ந்து இருப்பது ஜாதகனுக்கு அதிகமான தீமைகளே விளையும்.
-------------------------------------------------------------------------------
நேரமின்மையால் இன்று அரட்டைக் கச்சேரி இத்துடன் முடிகிறது.
அடுத்துப் பாடம்! படித்துப் பயனுறுக!

கேதுவுடன் சனி சேர்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள்.

1ல் அதாவது லக்கினத்தில்

லக்கினம் என்பது தோற்றம், உடல் சம்பந்தப்பட்ட இடம். இங்கே இந்த
வில்லன்கள் இருவரும் இருப்பது நல்லதல்ல. உடல் உபாதைகள், உடற்
குறைபாடுகள் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். இங்கே கேதுவுடன் சேரும்
சனீஷ்வரன் வக்கிரகதியில் இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்
The native will suffer with chronic diseases
----------------------------------------------------------------------------
2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால்

கையில் காசு தங்காது. எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். எவ்வளவு
பணம் வந்தாலும் பத்தாது. அதற்குமேல் செலவு உண்டாகும். பூர்விக
சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் கரைந்துவிடும்.
----------------------------------------------------------------------------------
3ல் அதாவது மூன்றாம் வீட்டில் இருந்தால்

உடன்பிறப்புக்களால், குறிப்பாக சகோதரர்களால் ஜாதகனுக்கு எந்த நன்மையும்
இருக்காது. தொல்லைகள் அதிகமாக இருக்கும். There won't be cordial
relationship!
--------------------------------------------------------------------------------------------
4ல் அதாவது நான்காம் வீட்டில் இருந்தால்

ஜாதகரின் நடத்தை சரியாக இருக்காது. மெச்சும்படியாக இருக்காது. அவரைச்
சூழ்ந்திருப்பவர்களுக்கு, அவரால் நன்மைகள் எதுவும் இருக்காது. மேற்கொண்டு
ஜாதகனால், அவனுடைய குடும்பத்தினர்களும், நண்பர்களும் அவதிப்படவே
நேரிடும்.

பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான். யாருக்கும் கட்டுப்படாதவளாக
இருப்பாள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மட்டுமே அதற்கு
விதிவிலக்காகும். அவப்பெயர்களில் இருந்து விடுபடமுடியும்.
-----------------------------------------------------------------------------------------------
5ல் அதாவது ஐந்தாம் வீட்டில் இருந்தால்

ஜாதகனுக்கு இல்லற வாழ்வில் அக்கறை இருக்காது. எதிலும் பிடிப்பு இருக்காது
துறவு மனப்பான்மை மேலோங்கியிருக்கும். புராணங்கள், வேதங்களில் அதிக
ஈடுபாடு இருக்கும். சிலர் மடங்களில் போய்ச் சேர்ந்து விடுவார்கள்
------------------------------------------------------------------------------------------------
6ல் அதாவது ஆறாம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் ஏமாற்றம், திருட்டு, துரோகம் என்று பலவழிகளிலும் தன் பொருட்களை
செல்வத்தைப், பணத்தைப் பறிகொடுக்க நேரிடும். அல்லது இழக்க நேரிடும்.
சிலருக்கு கடுமையான நோய்கள் ஏற்பட்டு, உடல் செயல் இழந்து போகும்.

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூரிய தொல்லைகள்
இருக்காது. ஜாதகன் பொதுச் சேவைகளில் ஈடுபடுவான்.

இந்த அமைப்பு பன்னிரெண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பலவிதமான விரயங்களும்
ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------------------
7ல் அதாவது ஏழாம் வீட்டில் இருந்தால்

ஜாதகன் அதீதமான உடல் இச்சைகளை உடையவன். பல பெண்களிடம் உறவு
கொள்வான். உறவுமுறைகள், வயது முறைகள் எதுவுமின்றி உறவு சொள்வான்
சிலர் தங்கள் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். இளமையிலேயே வயதான
தோற்றம் உண்டாகும். இந்த அமைப்பு லக்கினத்தைப் பார்ப்பதால் அந்த நிலை
உண்டாகும்
-------------------------------------------------------------------------------------------------
8ல் அதாவது எட்டாம் வீட்டில் இருந்தால்

இந்த அமைப்பினால், எட்டாம் வீட்டிற்கும் பாதிப்பு, அதே நேரத்தில் இவர்கள்
இருவரின் பார்வையினால் இரண்டாம் வீட்டிற்கும் பாதிப்பு.

ஜாதகருக்குப் பல தடைகள், செயல்பாடுகளில் அவதிகள் உண்டாகும். குடும்ப
வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்.
இறுதியில் ஜாதகர் பெரிய ஞானியாகிவிடுவார். அது ஒன்றுதான் நன்மை
ஞானம் பெறுவது நன்மைதானே?
-------------------------------------------------------------------------------------------------
9ல் அதாவது ஒன்பதாம் வீட்டில் இருந்தால்

ஜாதகர் தீவிர இறை நம்பிக்கைகளை உடையவாராகி விடுவார். பல இறைப்
பணிகள், மற்றும் அறப்பணிகளை மேற்கொள்வார். பாதி நாட்கள் கோவில்
குளம், புனித நதியில் நீராடுதல் என்று ஊர் ஊராகச் சுற்றுவார்
-------------------------------------------------------------------------------------------------
10ல் அதாவது பத்தாம் வீட்டில் இருந்தால்

ஜாதகர் தன்னுடைய இறுதிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறித் துறவியாக
வாழ்வார். ஆன்மிகத்தில் ஈடுபட்டு, பெரிய பேச்சாளராக அல்லது மத போதகராக
அல்லது இறையடியாராகத் தன் வாழ்நாட்களைக் கழிப்பார்.
-------------------------------------------------------------------------------------------------
11ல் அதாவது பதினொன்றாம் வீட்டில் இருந்தால்

ஜாதகர் துறவு மேற்கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபடுவார். புகழ் பெறுவார்
நாடறிந்த துறவியாக இருப்பார். தனக்குத் தெரிந்த நல்வழிகளைப் பிறருக்குச்
சொல்லும் வாழ்க்கையை மேற்கொள்வார்
-------------------------------------------------------------------------------------------------
12ல் அதாவது பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்

உடல் வியாதிகள், சிறைவாசம், தனித்த வாழ்க்கை என்று ஜாதகனின் வாழ்க்கை
மகிழும்படியாக இருக்காது. சுபக்கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் இதுவே
அரங்கேறும். வயதான காலத்தில் தன் சொந்த ஊரைவிட்டு வெளி இடங்களில்
வாசம் செய்ய நேரிடும்
-------------------------------------------------------------------------------------------------
கேது திசைப் பலன்கள்.

முன் பாடத்தில் விவரமாக உள்ளது. அதைப் படியுங்கள்

சுருக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்காகக் கீழ் கொடுத்துள்ளேன்

கேதுவின் மகா திசையில், குரு புக்திக் காலம் (sub period of Jupiter)
11மாதம் 6 நாட்கள் மற்றும்
கேதுவின் மகா திசையில், புதன் புத்திக் காலம் (sub period of Mercury)
11 மாதம் 27 நாட்கள்

ஆகிய நாட்கள் மட்டுமே நன்மையாக இருக்கும். அதாவது ஏழாண்டு
காலப்பலனில் சுமார் இரண்டாண்டு காலம் மட்டுமே நன்மை பயக்கூடியதாக
இருக்கும்
----------------------------------------------------------------------------------------
கேதுவின் கோச்சாரப் பலன்கள். அதாவது கோள்சாரத்தில், தனது சுற்றில்
ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் காலத்தில் கேதுவால்
உண்டாகும் பலாபலன்கள். கோள்சாரம் சந்திர ராசியை வைத்துத்தான் கணக்கில்
வரும். அதை நினைவில் கொள்க!

1ல்: * Loss, ill-health or disease
2ல்: * Loss of money
3ல்: * Happiness, gain, increase
4ல்: * Fear, trouble both physical or mental
5ல்: * Sorrow, loss of money
6ல்: * Happiness, gain of money
7ல்: * Evil state of affairs, illness
8ல்: * Loss, threatened trouble
9ல்: * Sinful actions, humility
10ல்: * Fear, sorrow
11ல்: * Good name and fame, gain of money
12ல்: * Physical ill-health or mental distress, enmity
-------------------------------------------------------------------------------------------
இங்கே கூறியிருப்பவை அனைத்துமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களில்
உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து, இவைகள் கூடலாம் அல்லது குறையலாம்
அல்லது இல்லாமலும் போகலாம்.

கேதுவைப் பற்றிய பாடம் இத்துடன் நிறைவுறுகிறது.

பொறுமையாகப் பாடங்களைப் படித்த அத்தனை மாணவக் கண்மணிகளுக்கும்
நன்றி உரித்தாகுக!

வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

40 comments:

Sridhar said...

அய்யா,

கேதுவுடன் சனி - விளக்கம் அருமை.

கேது தசை பற்றிய snapshot - நான் அனுபவ பட்டு இருக்கிறேன். எனக்கு ஒன்பதில் கேது.

நன்றி,

ஸ்ரீதர்

Arulkumar Rajaraman said...

Dear Sir,

Arumayana Padathai Arumayaga Mutithuvittergal.

Arumayana Asiriyarukku Arumayana Nadri

Arupudhamana Asiririyarukku Amaidhiyana Aduttha Padathai Ethir Parkum Adakkamana Manavan "Arulkumar Rajaraman".

Thanks Sir.

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

Sonnadhai Seivar Namma Sir..

Sila Neram Solladhadhyum Seivar Namma Sir...

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

பொறுமையாக பாடம் நடத்திய ஆசிரியருக்கு எங்கள் நன்றிகள் !

sundar said...

வணக்கம் அய்யா

கேது சனி சேர்க்கை தீமை உண்டாகும்.எனக்கு 11 ல்இரண்டு வில்லன் இருவரும் கூடிவிட்டர்கள். கேது பற்றிய பாடம் இன்றோடு முடிவடைகிறது அடுத்த பாடம் தொடங்கும்
வரைக்கும் கேது பாடத்தை revice செய்கிறேன்....

krish said...

Thanks for the lesson. I have kethu in langnam. Kethu dasa from the age 21 took me to the downside of my life, but made me spiritual.

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...

ஐயா!! கேது பற்றிய அனைத்து பாடங்களும் அருமை!!

உங்களது அபிமான பாடமான சனிக்காக காத்திருக்கிறோம்..

வேலன். said...

பாடம் அருமை. எனக்கு கேது செவ்வாயுடன் 10-ல் கூட்டணி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Ragu Sivanmalai said...

Hello Sir

Thanks for the lesson about Kethu...What will be the effect of Kethu dasha if kethu is positioned at 12 th house for a simma lagna horoscope.

Geekay said...

Present Sir,

Raj kumar said...

காலை வணக்கங்கள் sir!

ஆஹா, எனக்கு சனியும் கேதுவும் மூன்றாம் வீட்டில் உள்ளார்கள். நீங்கள் மேலே தவிர குறிப்பிட்டு உள்ளதை தவிர தீய பலன்கள் வேறு ஏதும் உள்ளதா என கூற இயலுமா sir?

ராஜ்
16Oct1973~7.35PM~Vellore

vino, canada said...

ஐயா,
பாடம்அருமை.தமிழில்ஜாதகம்கணிக்கும்மென்பொருளை,எப்படி,டவுன்லோட்செய்வது,யாராவதுதெரிந்தால்உதவவும்.

senthil said...

அன்புள்ள ஆசிரியர்க்கு,

கேது தொடர்பான பாடம் அருமை. முற்றும் உண்மை. எனக்கு
ஏழில் கேது. கேது திசை, புதன் புத்தி. வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன்.
தாங்கள் கூறியது 100% சரியே.

இறைவா! இனி ஒரு பிறவி வேண்டாம். உன் பாதமே போதும்.

தங்கள் பணிக்கு என் நன்றிகள்.

அன்புடன்,

செந்தில் முருகன்.வே

Arulkumar Rajaraman said...

Dear Sir

11il Theeya Graham Irundhalum Nanmai Seiyum enbhadhu En Thalmayana Karuthu..

Could you please reply Sir.. Whether Iam giving the correct suggestion or not?

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

Ashubha Grahangal Subha Balam Petrirundhal Subha Balane Seiyyum.

It may be Shani or Suriyan.. This is also Adiyenin Small Karuthu.

+ Natchathira kal + veetukaran subha balam - Andha Veetukaranum Nalla nilayil irukka vendum. Appodhu than Nalladhu seiyum..

Say For Example "Makhara Lagnam - Viruchiga Rasi - 7ill Guru Uncham anal andha veetukaran 11il Neecham -- Idhu (Chandiran) --- Marriage will definitely delay". Please give me some suggestion?? ...Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

"Uchhadhai Uchham Nokin Pichai Eduppan" endpadhu Ennal Otthukolla Mudiyadhu...

That Dhasa or Bhuddhi definitely normal. Definetly not bad(Again We have to look in to that Natchatthira kal -- again again ...).

This is also one small Karuthu..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

1) Lagnadhibhadhi 12il Maraindhum Irukkindran - Analum Nalla Life Irukkiriadhu.?

2) Bhagya isthana Adhibhadhi kettu poyirundhalum - Sotthukkal Amaivadhu Eppadi?

3) Labhasthanam kettu poyirundalaum - Tholilai vida Labham Adhigamaga irukka karanam enna?

4) 2ikkuriyavanum and 5thukkuriyavanum kettupoyirundhalum - Good Family and Good Children Amaivadhu Eppadi?

Please give suggestion..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

Tips of the day:

Mithuna Lagnam:
*** 5il theeya graham irundhalum (like Saturn, Kethu and Combination)with Moon), Andha 5th place karan 10 il(Sukkiran) Uchham Petral definitely Kulandhai Bhagyam undu.

Thank you

Loving Student
Arulkumar

sumathi said...

ஹலோ சார்,

பாடம் நன்றாக இருந்தது. ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை.எனக்கு 4ல் கேது வக்கிர சனியுடனும் சந்திரனுடனும் இருக்கிறாரே,
ஆனாலும் நீங்க சொன்ன பலன்கள் மாறாக உள்ளது.என்னாலே மற்றவர்களுக்கு தான் ஏகப்பட்ட நன்மைகளே தவிர ஏனோ தெரியலை மற்றவர்கள் எனக்கு உதவி செய்யவே வரமாட்டேங்கறாங்க.
எதுவாயிருந்தாலும் நல்லாதாக இருந்தால் சரியே என நினைக்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sridhar said...
அய்யா,
கேதுவுடன் சனி - விளக்கம் அருமை.
கேது தசை பற்றிய snapshot - நான் அனுபவ பட்டு இருக்கிறேன். எனக்கு ஒன்பதில் கேது.
நன்றி,
ஸ்ரீதர்/////

நன்றி ஸ்ரீதர்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir,
Arumayana Padathai Arumayaga Mutithuvittergal.
Arumayana Asiriyarukku Arumayana Nadri
Arupudhamana Asiririyarukku Amaidhiyana Aduttha Padathai Ethir Parkum Adakkamana Manavan "Arulkumar Rajaraman".
Thanks Sir.
Loving Student
Arulkumar Rajaraman//////

அடுத்தபாடம் தொடர்ந்து வரும்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Sonnadhai Seivar Namma Sir..
Sila Neram Solladhadhyum Seivar Namma Sir...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

:-))))

SP.VR. SUBBIAH said...

///////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
பொறுமையாக பாடம் நடத்திய ஆசிரியருக்கு எங்கள் நன்றிகள் !

நன்றி பாஸ்கர்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger sundar said...
வணக்கம் அய்யா
கேது சனி சேர்க்கை தீமை உண்டாகும்.எனக்கு 11 ல்இரண்டு வில்லன் இருவரும் கூடிவிட்டர்கள். கேது பற்றிய பாடம் இன்றோடு முடிவடைகிறது அடுத்த பாடம் தொடங்கும்
வரைக்கும் கேது பாடத்தை revice செய்கிறேன்....//////

அப்படியே செய்யுங்கள்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger krish said...
Thanks for the lesson. I have kethu in langnam. Kethu dasa from the age 21 took me to the downside of my life, but made me spiritual.//////

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
ஐயா!! கேது பற்றிய அனைத்து பாடங்களும் அருமை!!
உங்களது அபிமான பாடமான சனிக்காக காத்திருக்கிறோம்../////

சனி எனக்கு மிகவும் பிடித்த கிரகம். அவன் கர்மகாரகன் அல்லவா? பாடம் சிறப்பாக இருக்கும்! தொடர்ந்து வரும்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger வேலன். said...
பாடம் அருமை. எனக்கு கேது செவ்வாயுடன் 10-ல் கூட்டணி.
வாழ்க வளமுடன்,
வேலன்.////

நன்றி வேலன்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Ragu Sivanmalai said...
Hello Sir
Thanks for the lesson about Kethu...What will be the effect of Kethu dasha if kethu is positioned at 12th house for a simma lagna horoscope.//////

பொதுவாக விரயத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் திசைகள் நன்மை அளிக்காது. விரையம்தான் அதிகமாக இருக்கும்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Geekay said...
Present Sir,//////

நன்றி ஜீக்கே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Raj kumar said...
காலை வணக்கங்கள் sir!
ஆஹா, எனக்கு சனியும் கேதுவும் மூன்றாம் வீட்டில் உள்ளார்கள். நீங்கள் மேலே தவிர குறிப்பிட்டு உள்ளதை தவிர தீய பலன்கள் வேறு ஏதும் உள்ளதா என கூற இயலுமா sir?
ராஜ்
16Oct1973~7.35PM~Vellore//////

குறிப்பிட்டுள்ள பலன்கள்தான்.

SP.VR. SUBBIAH said...

//////////Blogger vino, canada said...
ஐயா,
பாடம் அருமை.தமிழில்ஜாதகம்கணிக்கும்மென்பொருளை,எப்படி,டவுன்லோட்செய்வது,யாராவதுதெரிந்தால்உதவவும்.//////

அதன் சுட்டியைக் க்ளிக் செய்து, கிடைக்கும் தொடர்பு தளத்தில் இருந்து உங்கள் கணினிக்கு இறக்கிக்கொள்ளலாம். சிரமம் ஒன்றும் இருக்காது! முயன்று பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger senthil said...
அன்புள்ள ஆசிரியர்க்கு,
கேது தொடர்பான பாடம் அருமை. முற்றும் உண்மை. எனக்கு
ஏழில் கேது. கேது திசை, புதன் புத்தி. வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன்.
தாங்கள் கூறியது 100% சரியே.
இறைவா! இனி ஒரு பிறவி வேண்டாம். உன் பாதமே போதும்.
தங்கள் பணிக்கு என் நன்றிகள்.
அன்புடன்,
செந்தில் முருகன்.வே//////

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
11il Theeya Graham Irundhalum Nanmai Seiyum enbhadhu En Thalmayana Karuthu..
Could you please reply Sir.. Whether Iam giving the correct suggestion or not?
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////////

ஆமாம், நீங்கள் சொல்வது சரி!

SP.VR. SUBBIAH said...

//////////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Ashubha Grahangal Subha Balam Petrirundhal Subha Balane Seiyyum.
It may be Shani or Suriyan.. This is also Adiyenin Small Karuthu.
+ Natchathira kal + veetukaran subha balam - Andha Veetukaranum Nalla nilayil irukka vendum. Appodhu than Nalladhu seiyum..
Say For Example "Makhara Lagnam - Viruchiga Rasi - 7ill Guru Uncham anal andha veetukaran 11il Neecham -- Idhu (Chandiran) --- Marriage will definitely delay". Please give me some suggestion?? ...Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///////////

ஏழிற்கு உரியவன் நீசமாவது, திருமண வாழ்க்கையைப் பாதிக்கும்!

SP.VR. SUBBIAH said...

////////////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
"Uchhadhai Uchham Nokin Pichai Eduppan" endpadhu Ennal Otthukolla Mudiyadhu...
That Dhasa or Bhuddhi definitely normal. Definetly not bad(Again We have to look in to that Natchatthira kal -- again again ...).
This is also one small Karuthu..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

அது சும்மா சொல்லடை அவ்வளவுதான்!

SP.VR. SUBBIAH said...

///////////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
1) Lagnadhibhadhi 12il Maraindhum Irukkindran - Analum Nalla Life Irukkiriadhu.?
2) Bhagya isthana Adhibhadhi kettu poyirundhalum - Sotthukkal Amaivadhu Eppadi?
3) Labhasthanam kettu poyirundalaum - Tholilai vida Labham Adhigamaga irukka karanam enna?
4) 2ikkuriyavanum and 5thukkuriyavanum kettupoyirundhalum - Good Family and Good Children Amaivadhu Eppadi?
Please give suggestion..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////////

இந்தப் பதிவிற்கு சம்பந்தப் பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள் ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

//////////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Tips of the day:
Mithuna Lagnam:
*** 5il theeya graham irundhalum (like Saturn, Kethu and Combination)with Moon), Andha 5th place karan 10 il(Sukkiran) Uchham Petral definitely Kulandhai Bhagyam undu.
Thank you
Loving Student
Arulkumar///////////

இந்தப் பதிவிற்கு சம்பந்தப் பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள் ராஜாராமன்!
அடுத்த பாடத்தை நான் நடத்த வேண்டாமா?

SP.VR. SUBBIAH said...

////////////Blogger sumathi said...
ஹலோ சார்,
பாடம் நன்றாக இருந்தது. ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை.எனக்கு 4ல் கேது வக்கிர சனியுடனும் சந்திரனுடனும் இருக்கிறாரே,
ஆனாலும் நீங்க சொன்ன பலன்கள் மாறாக உள்ளது.என்னாலே மற்றவர்களுக்கு தான் ஏகப்பட்ட நன்மைகளே தவிர ஏனோ தெரியலை மற்றவர்கள் எனக்கு உதவி செய்யவே வரமாட்டேங்கறாங்க.
எதுவாயிருந்தாலும் நல்லாதாக இருந்தால் சரியே என நினைக்கிறேன்.//////

ஆமாம் சகோதரி!

ராஜ நடராஜன் said...

எங்கிருந்துங்கய்யா பாட்டு வரிகளைப் பிடிக்கிறீங்க.பழைய பாட்டுப் புத்தகங்கள் ஏதாவது கைவசம்?அல்லது தலைக்குள்ள அத்தனையையும் திணித்து வைத்துள்ளீர்களா?

SP.VR. SUBBIAH said...

///////Blogger ராஜ நடராஜன் said...
எங்கிருந்துங்கய்யா பாட்டு வரிகளைப் பிடிக்கிறீங்க? பழைய பாட்டுப் புத்தகங்கள் ஏதாவது கைவசம்? அல்லது தலைக்குள்ள அத்தனையையும் திணித்து வைத்துள்ளீர்களா?/////

பழைய பாடல் வரிகள் நிறையவே மனதிற்குள் இருக்கின்றன. மூளைக்குள் உள்ள Hard Discல் எல்லாம் பதிந்து வைக்கப்பட்டுள்ளது:-)))

அதனால்தான் எழுதும்போது தோதான வரிகள் அதுவாகவே வந்து நிற்கும். மனித மூளையைவிடப் பெரிய System எங்கே இருக்கிறது நண்பரே?