மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.2.09

கண்கள் இரண்டு இருந்த போதும் காட்சி ஒன்றுதான்!

கண்கள் இரண்டு இருந்த போதும் காட்சி ஒன்றுதான்!

கண்கள் இரண்டு இருந்தாலும் இரண்டு காட்சிகளா தெரியப்போகிறது?
ஒரு காட்சிதானே காணக் கிடைக்கும்!

அதுபோல இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு வீட்டில்
கூட்டாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன் அந்த கிரகங்களின் அமைப்பிற்கு
ஏற்ப ஒன்று நல்லது அல்லது மிக நல்லது, கெட்டது அல்லது மிகவும் கெட்டது
என்று ஒரு விதமான பலன்தான் கிடைக்கும்.

அந்த வீட்டின் மீது சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால்
மட்டுமே நல்ல பலனை எதிர்பார்க்கலாம்

கேதுவும் செவ்வாயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சக்திகளும் செயல்பாடுகளும்
கொண்டவைகளாகும்.

அவை இரண்டும் சேர்ந்து எதிர்மறையாக செயல் பட்டால் ஜாதகன் கோபக்
காரனாகவும் ஆத்திரக்காரனாகவும் மேலும் சிலர் மூர்க்கத்தனம் மிகுந்தவர்
களாகவும் இருப்பார்கள். பிடிக்காதவற்றை ஒழிக்கக்கூடிய மனப்பான்மை
இருக்கும். விபத்துக்கள், காயங்கள் ஏற்படும்.

இரண்டும் நேராகச் செயல்பட்டால், ஜாதகன் உயந்த நோக்கம், மற்றும்
லட்சியங்கள் உடையவனாகவும், அதற்காகப் பாடுபடுவனாகவும் இருப்பான்.
துணிச்சல் மிகுந்தவனாக இருப்பான். எத்தனை தடைகள் வந்தாலும் அதை
எல்லாம் கடந்து செயலாற்றுபவனாக இருப்பான்.

கேது செவ்வாய் கூட்டணி தொழில் நுட்பக் கல்விக்கு உகந்ததாகும்.
அதுபோல கணிதம் படிப்பவர்களுக்கும் அது உகந்ததாகும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு & கேது ஆகிய ஐந்து கிரகங்களும் தீய
தன்மைகள் அதிகம் உடையவைகள். ஜாதகனின் 6ஆம் வீட்டில் அவைகள்
இருப்பது நன்மை பயக்கும்.

பெண்களின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருக்க வேண்டும். வலிமை
இழந்த குரு பொதுவாகப் பெண்களுக்கு மகிழ்ச்சியான திருமணத்தைக்
கொடுப்பதில்லை. அதைவிட முக்கியமாக சனி, செவ்வாய், ராகு மற்றும்
கேது ஆகிய நான்கும் 7ஆம் வீட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாது
இருத்தலும் மகிழ்ச்சியான திருமணத்திற்கு வழி வகுக்கும்!
-----------------------------------------------------------------------------
கேதுவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள்:

1ல்

நல்லதல்ல!
The native should be careful. அடிக்கடி விபத்துக்கள் நேரிடும்.
அதனால் உடம்பு பாதிக்கப்படலாம். தீக்காயங்களால் உடம்பில்
பாதிப்புக்கள் ஏற்படலாம்.
---------------------------------------------------------------------------
2ல்

Not a good place for this combination
Expense oriented horoscope. ஜாதகனின் சொத்துக்கள் தீய வழிகளில்
கரையும். படிப்பு தடைப்படடும்.
The native may become a school or college drop out!
---------------------------------------------------------------------------
3ல்

The native will be courageious
ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவனாகத் திகழ்வான்.
அடுத்தவர்களுக்குச் ஜாதகன் மேல் ஒரு பய உணர்வு இருக்கும்
சிலர் அந்தத் துணிச்சலை நல்ல வழியில் பயன்படுத்துவார்கள்
சிலர் அதே துணிச்சலைக் கெட்ட வழிகளில் பயன்படுத்துவார்கள்
--------------------------------------------------------------------------
4ல்

The native will be conservative
பழசையே பேசிக்கொண்டிருப்பான். எங்க தாத்தா காலத்தில் என்று
ஆரம்பித்தால் விடமாட்டான். கேட்கிறவன் அவனாக ஓட்டம்பிடித்தால்
மட்டுமே தப்பிக்கலாம். ஜாதகர் பழமையைப் போற்றுபவராக இருப்பார்.
கல்வியில் தடை ஏற்படும்
--------------------------------------------------------------------------
5ல்

This place is called house of mind. This is also not a good place
for this (ketu & Mars) combination
அடிக்கடி மனநிலை பாதிக்கப்படும். தலையில் உபத்திரவம் ஏற்படும்.
சிலர் தங்கள் குழந்தைகளை இழக்க நேரிடும். பெண்களுக்குக் குழந்தை
உண்டாவதில் சிக்கல்கள் இருக்கும். அப்படியே உண்டானலும் பிரசவம்
சிக்கலாக இருக்கும்
--------------------------------------------------------------------------

6ல்

ஜாதகனின் பெயர் ரிப்பேராகி இருக்கும். அல்லது தன் பெயரைக் கெடுத்துக்
கொள்ளும் விதமாக ஜாதகன் நடந்து கொள்வான். எதிர்ப்புக்களை ஜாதகன்
எதிர் கொள்ள நேரிடும். வம்பு வழக்கு, மற்ரும் கட்டைப் பஞ்சாயத்துக்களில்
ஜாதகன் வெற்றி பெறுவான். செவ்வாயும் ஆறாம் இடமும் சேர்ந்திருப்பதால்
ஜாதகன் இரத்த சம்பந்தமான நோய்களுக்கு ஆளாக நேரிடும்
-------------------------------------------------------------------------
7ல்

இந்த அமைப்பு ஏழில் இருந்தால் ஜாதகன் கலப்புத் திருமணம் செய்து
கொள்வான். சிலர் வேற்று மதப் பெண்ணை மணந்து கொள்வார்கள்.
சம்பிரதாயங்களைக் கிலோ என்ன விலை என்று ஜாதகன் கேட்பான்.
இந்த அமைப்பு இருக்கும் பெரும்பான்மையினருக்குக் காதல் திருமணம்
தான் நடைபெறும்!
-------------------------------------------------------------------------
8ல்

இந்த அமைப்பு எட்டாம் இடத்திற்கு நல்லதல்ல. பல பிரச்சினைகள்
துன்பங்கள் ஏற்படும். ஜாதகன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத்
தள்ளப்படுவான். சிலர் அதற்கு முயற்சியும் செய்வர்கள். வாழ்க்கை சர்ச்சைக்கு
உரியதாக இருக்கும்

சுபக்கிரகங்களின் பார்வை இந்த இடத்தில் இருந்தால் இந்த பாதிப்புக்கள்
எதுவும் இருக்காது!
--------------------------------------------------------------------------
9ல்

ஜாதகனுக்குக் கெட்டிக்காரத்தனம் இருக்கும். சிலர் மத போதகராக அல்லது
மதப் பேச்சாளராகச் சிறப்படைவார்கள். மேலும் ஒரு கிரகத்தின் தீய பார்வை
விழுந்தால் ஜாதகன் தீவிரவாதியாகி விடுவான்.
---------------------------------------------------------------------------
10ல்

ஜாதகன் சிறந்த நிர்வாகத் திறமைகள் உடையவனாக இருப்பான்.
அதிகாரத்துடன் கூடிய பெரிய பதவிகள் கிடைக்கும்.
----------------------------------------------------------------------------
11ல்

பொதுவாக ஜாதகன் அரசியலில் அல்லது அரசில் பணிபுரிந்து புகழ் பெறுவான்.
வளமையோடும், செல்வாக்கோடும் இருப்பான்
---------------------------------------------------------------------------
12ல்

ஜாதகன் குணமில்லாதவனாக இருப்பான். எப்போது என்ன செய்வான் என்பது
யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தெரியாது.
--------------------------------------------------------------------------
சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில் உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

47 comments:

  1. Dear Sir

    Nice Lesson Sir. Thanks Sir.

    Theriyamal Potti podum mannidha manidha Singathai "(Lion - Mr.SP.V.S Sir)"
    Velvandhenna Ezhidha Manidha - Vankhozhi - Mayeilin(Mr SP.V.S Sir) Attam Ariyuma.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. இதெல்லாம் ஞாபகம் வைத்து சொல்வார்களா? அல்லது ஜாதகம் கொடுத்து சில மணிநேரம்/நாள் கழித்து எழுதிவைத்து சொல்வார்களா?
    படிக்கும் போதே கொஞ்சம் சுத்துதே அதற்காக கேட்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா

    என் ஜாதகத்தில் கேது 11 ல் செவ்வாய் 2 ல் மகர லகிநம் ஆனால் 11 ல்
    கேது வோடு இருக்கும் சனியொடு செவ்வாய் பரிவர்த்னை பெற்றுளதது அதனால்
    11 ல் கேது,செவ்வாய் இருக்கும் பலன் கிடைக்குமா?

    ReplyDelete
  4. அய்யா,

    பாடமும் விளக்கங்களும் புரிந்தது.

    கேது நீச்ச செவ்வாயுடன் சேர்த்தால் அதன் பவர் குறையும் என நம்புகிறேன். ஆனால் கேதுவிற்கு மற்றும் ராகுவிற்கு அஷ்டவர்க்கம் போடுவதில்லேயே அப்படி இருக்கும் பொது, எப்படி கேது மற்றும் அதுடனுடன் கூடியன் நீச்ச கிரக பவர் கணக்கிடுவது? முன்பு விளக்கியது போல், லக்னம், கிரகங்கள் அமர்த்த வீடு, அதன் பவர், அஷ்டவர்க்கம், combination of plannets, நடக்கும் தசை/புக்தி மற்றும் கோச்சார ரீதியான (Current) பொசிடிஒன் - இவை எல்லாம் எடுக்கும் பொது, கேது நீச்ச செவ்வாயுடன் சேர்த்தால், கேதுவும் நீச்சம் ஆகிவிடும் என எடுத்து கொள்ளலாமா?

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  5. ஐயா,

    பலன்கள் அருமை. எனக்கு 10-ல் கேது உடன் செவ்வாய் கூட்டணி.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. ////Blogger Namakkal Shibi said...
    உள்ளேன் ஐயா!/////

    வகுப்பிற்கு வந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger Arulkumar Rajaraman said..
    Dear Sir
    Nice Lesson Sir. Thanks Sir.
    Theriyamal Potti podum mannidha manidha Singathai "(Lion - Mr.SP.V.S Sir)"
    Velvandhenna Ezhidha Manidha - Vankhozhi - Mayeilin(Mr SP.V.S Sir) Attam Ariyuma.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    என்னன்னமோ எழுதுகிறீர்களே சுவாமி.
    ஒன்றுமே புரியலை உலகத்திலே!

    ReplyDelete
  8. Blogger வடுவூர் குமார் said...
    இதெல்லாம் ஞாபகம் வைத்துச் சொல்வார்களா? அல்லது ஜாதகம் கொடுத்து சில மணிநேரம்/நாள் கழித்து எழுதிவைத்து சொல்வார்களா? படிக்கும் போதே கொஞ்சம் சுத்துதே அதற்காக கேட்கிறேன்.

    நினைவாற்றல் உள்ளவர்களுக்கு எல்லாமே மனதில் நிற்கும். பார்த்தவுடன் கண்ணில் பட்டுவிடும்!

    ReplyDelete
  9. ////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    என் ஜாதகத்தில் கேது 11 ல் செவ்வாய் 2 ல் மகர லக்கினம் ஆனால் 11 ல்
    கேது வோடு இருக்கும் சனியோடு செவ்வாய் பரிவர்த்தனை பெற்றுள்ளது அதனால்
    11 ல் கேது,செவ்வாய் இருக்கும் பலன் கிடைக்குமா?/////

    கிடைக்கும். அதனதன் தசாபுத்திகளில்

    ReplyDelete
  10. ////Blogger Sridhar said...
    அய்யா,
    பாடமும் விளக்கங்களும் புரிந்தது.
    கேது நீச்ச செவ்வாயுடன் சேர்த்தால் அதன் பவர் குறையும் என நம்புகிறேன். ஆனால் கேதுவிற்கு மற்றும் ராகுவிற்கு அஷ்டவர்க்கம் போடுவதில்லேயே அப்படி இருக்கும் பொது, எப்படி கேது மற்றும் அதுடனுடன் கூடியன் நீச்ச கிரக பவர் கணக்கிடுவது? முன்பு விளக்கியது போல், லக்னம், கிரகங்கள் அமர்த்த வீடு, அதன் பவர், அஷ்டவர்க்கம், combination of plannets, நடக்கும் தசை/புக்தி மற்றும் கோச்சார ரீதியான (Current) பொசிடிஒன் - இவை எல்லாம் எடுக்கும் பொது, கேது நீச்ச செவ்வாயுடன் சேர்த்தால், கேதுவும் நீச்சம் ஆகிவிடும் என எடுத்து கொள்ளலாமா?
    நன்றி,
    ஸ்ரீதர்

    நீசனுடன் சேர்வதானல் எந்த கிரகமும் நீசமடையாது. அது தன் வலிமையுடன்தான் இருக்கும்
    கேது, இருக்கும் வீட்டிற்கான சர்வாஷ்டக வர்கத்தைப் பாருங்கள். 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களுடனும் அந்த வீடு இருந்தால் எந்தக் கெடுதலும் குறைவாகவே இருக்கும்

    ReplyDelete
  11. /////Blogger பாஸ்கர் said...
    பாடம் புரிந்தது !//////

    புரிந்தால் எழுதிய எனக்கும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  12. /////Blogger வேலன். said...
    ஐயா,
    பலன்கள் அருமை. எனக்கு 10-ல் கேது உடன் செவ்வாய் கூட்டணி.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    உங்கள் பெயரில் வேலன் இருக்கிறாரே.அதனால் எல்லாம் அருமையாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  13. ஹலோ சார்,

    ஆஹா, எனக்கு கேதுவும் சனியும் தான் கூட்டு. மற்றவர்ளோடு கா விட்டுட்டார் கேது சார். இன்ரைய பாடம் நன்றாக இருந்தது, விளக்கமும் அருமையாக இருந்தது.

    ReplyDelete
  14. Thanks for the lesson. My friend has got Ketu and Mars in 8th House, Scorpio. He has also got Raghu and Moon in 2nd place, Taurus. What will be the effect? He is going through Raghu Dasa and had problems in Ketu Bhuthi, but made fantatic progress in career.

    ReplyDelete
  15. /////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    ஆஹா, எனக்கு கேதுவும் சனியும் தான் கூட்டு. மற்றவர்ளோடு காய் விட்டுட்டார் கேது சார். இன்றைய பாடம் நன்றாக இருந்தது, விளக்கமும் அருமையாக இருந்தது.//////

    அதுதான் இந்த Topicல் கடைசிப் பாடம். ஆகவே பொறுமையோடு இருங்கள் சகோதரி!

    ReplyDelete
  16. ////Blogger dubai saravanan said...
    Nice Lesson Sir./////

    நன்றி சரவணன்!

    ReplyDelete
  17. /////Blogger krish said...
    Thanks for the lesson. My friend has got Ketu and Mars in 8th House, Scorpio. He has also got Raghu and Moon in 2nd place, Taurus. What will be the effect? He is going through Raghu Dasa and had problems in Ketu Bhuthi, but made fantatic progress in career./////

    தொழிலில் மேன்மையெல்லாம் பத்தாம் வீட்டை வைத்து! அது உங்கள் நண்பருக்குச் சிறப்பாக இருக்கும்!

    ReplyDelete
  18. /////Blogger krish said...

    You are correct Sir. He has got 36 points in the 10th House and 32 point in 11th house.

    ReplyDelete
  19. sir iam a newbie to this blog. what about mars ,saturn combination. i have got mars and satrun in lagna and directly aspected by sun in 7 th. going thru satrun dasha last bhukthi. gosh, need i say more.

    ReplyDelete
  20. /////Blogger krish said...
    /////Blogger krish said...
    Thanks for the lesson. My friend has got Ketu and Mars in 8th House, Scorpio. He has also got Raghu and Moon in 2nd place, Taurus. What will be the effect? He is going through Raghu Dasa and had problems in Ketu Bhuthi, but made fantatic progress in career./////
    தொழிலில் மேன்மையெல்லாம் பத்தாம் வீட்டை வைத்து! அது உங்கள் நண்பருக்குச் சிறப்பாக இருக்கும்!
    You are correct Sir. He has got 36 points in the 10th House and 32 point in 11th house./////

    கரெக்ட்டாக இருந்தால் சரிதான்!

    ReplyDelete
  21. //////Blogger sridhar said...
    Present sir!/////

    வருகைக்கே நன்றி சொல்ல வேண்டிய காலம். நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  22. //////Blogger mike said...
    sir iam a newbie to this blog. what about mars ,saturn combination. i have got mars and satrun in lagna and directly aspected by sun in 7 th. going thru Saturn dasha last bhukthi. gosh, need i say more.////

    The particulars are not sufficient to say anything! லக்கினம் எது?

    ReplyDelete
  23. ஐயா, இன்றைய பாடம் வழக்கம்போல் நன்றாக இருந்தது..

    விளக்கமும் அருமையாக இருந்தது.

    நன்றி,

    ReplyDelete
  24. உள்ளேன் ஐயா..

    எனக்கு கேதுவால் எந்தக் கேடும் வராது என்பது தெரிந்துவிட்டது..

    ஏதாவது நல்லது நடந்தால்தானே இனிமேல் கேடு வராதுன்னு சொல்லணும்..

    அதான் ஒட்டு மொத்தமா எல்லா கிரகங்களும் சேர்ந்து அடிக்குதே.. இதுல கேது வந்தா என்ன..? வராமல் இருந்தால் என்ன..?

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. என் ஜாதகத்தில்

    சந்திரன் = சுப கிரஹம்
    சூரியன் = பாவ கிரஹம்
    புதன் = சுப கிரஹம்
    சுக்கிரன் = சுப கிரஹம்
    செவ்வாய் = பாவ கிரஹம்
    வியாழன் = சுப கிரஹம்
    சனி = பாவ கிரஹம்
    ராகு = பாவ கிரஹம்
    கேது = பாவ கிரஹம்

    ஆனால் கிரகங்களின் ஆதிபத்தியம் கொண்டுள்ள ஸ்தான பலன்கள்

    சந்திரன் 10 பாவ கிரஹம்
    சூரியன் 11 பாவ கிரஹம்
    புதன்9 12 சுப கிரஹம்
    சுக்கிரன் 1 8 சுப கிரஹம்
    செவ்வாய் 2 7 சுப கிரஹம்
    வியாழன் 3 6 பாவ கிரஹம்
    சனி 4 5 சுப கிரஹம்

    இவறறில் கிரகங்களின் பலன்கள் எதைப் பொருத்து இருக்கும்
    உதாரன்மாக செவவாயை சுப கிரஹம் ஆக எடுத்துக் கொள்ளலாமா? மேலும் என்க்கு துலா லக்கினம் , இந்த லக்கினதிற்க்கு செவ்வாய் பாவகிரகம் அல்லவா?

    தயவு செய்து விளக்கவும்

    ReplyDelete
  27. கண்கள் இரண்டு இருந்த போதும் காட்சி ஒன்றுதான்

    effective explanation

    ReplyDelete
  28. /////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    ஐயா, இன்றைய பாடம் வழக்கம்போல் நன்றாக இருந்தது..
    விளக்கமும் அருமையாக இருந்தது.
    நன்றி,/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    உள்ளேன் ஐயா..
    எனக்கு கேதுவால் எந்தக் கேடும் வராது என்பது தெரிந்துவிட்டது..
    ஏதாவது நல்லது நடந்தால்தானே இனிமேல் கேடு வராதுன்னு சொல்லணும்..
    அதான் ஒட்டு மொத்தமா எல்லா கிரகங்களும் சேர்ந்து அடிக்குதே.. இதுல கேது வந்தா என்ன..? வராமல் இருந்தால் என்ன..?/////

    அதானே! உங்களுக்கும் எனக்கும் கிரகங்களால் எந்த பாதிப்பும் வராது. நமக்குத்தான் தண்டாயுதத்தான் கூடவே இருக்கிறானே ஊனா தானா!

    ReplyDelete
  30. //////Blogger san said...
    என் ஜாதகத்தில்
    சந்திரன் = சுப கிரஹம்
    சூரியன் = பாவ கிரஹம்
    புதன் = சுப கிரஹம்
    சுக்கிரன் = சுப கிரஹம்
    செவ்வாய் = பாவ கிரஹம்
    வியாழன் = சுப கிரஹம்
    சனி = பாவ கிரஹம்
    ராகு = பாவ கிரஹம்
    கேது = பாவ கிரஹம்
    ஆனால் கிரகங்களின் ஆதிபத்தியம் கொண்டுள்ள ஸ்தான பலன்கள்
    சந்திரன் 10 பாவ கிரஹம்
    சூரியன் 11 பாவ கிரஹம்
    புதன்9 12 சுப கிரஹம்
    சுக்கிரன் 1 8 சுப கிரஹம்
    செவ்வாய் 2 7 சுப கிரஹம்
    வியாழன் 3 6 பாவ கிரஹம்
    சனி 4 5 சுப கிரஹம்
    இவறறில் கிரகங்களின் பலன்கள் எதைப் பொருத்து இருக்கும்
    உதாரணமாக செவ்வாயை சுப கிரஹம் ஆக எடுத்துக் கொள்ளலாமா? மேலும் என்க்கு துலா லக்கினம் , இந்த லக்கினதிற்க்கு செவ்வாய் பாவகிரகம் அல்லவா?
    தயவு செய்து விளக்கவும்//////

    இப்படியெல்லாம் எழுதிப்பார்த்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். இதற்கு முன்பாக நடத்திய அஷ்டகவர்கப் பாடத்தை நன்றாகப் படியுங்கள். அதைவைத்து ஒவ்வொருவீட்டிற்கும் உரிய பலனை சுலபமாக அறியலாம்.

    ReplyDelete
  31. /////Blogger KS said...
    கண்கள் இரண்டு இருந்த போதும் காட்சி ஒன்றுதான்
    effective explanation/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. my lagna is virgo n moonsign is libra.star is vishaka sir. thanx for replyin.

    ReplyDelete
  33. வணக்கம் ஐய்யா,

    கண்கள் இரண்டு என்றாலும் காட்சி ஒன்றுதான் " அப்படி என்றாள் ஒரு
    கட்டத்தில் இரண்டு, மூன்று கிரகங்கள் இருந்தால் அதன் பலன் ஒன்றுதான்
    கிடைக்குமா ? அதாவது மூன்று கிரகங்கள் தனியாக இருந்து மூன்று பலன்
    தருவதுபோல் ஒரே இடத்தில் இருந்து ஒரு பலன்தான் தருமா?

    ReplyDelete
  34. //////Blogger mike said...
    my lagna is virgo n moonsign is libra.star is vishaka sir. thanx for replyin./////

    இன்றையப் (11.2.2009) பாடத்தைப் பாருங்கள்

    ReplyDelete
  35. //////Blogger VA P RAJAGOPAL said...
    Thanks for today lesson.../////

    நன்றி கோபால்!

    ReplyDelete
  36. //////Blogger sundar said...
    வணக்கம் ஐய்யா,
    கண்கள் இரண்டு என்றாலும் காட்சி ஒன்றுதான் " அப்படி என்றாள் ஒரு
    கட்டத்தில் இரண்டு, மூன்று கிரகங்கள் இருந்தால் அதன் பலன் ஒன்றுதான்
    கிடைக்குமா ? அதாவது மூன்று கிரகங்கள் தனியாக இருந்து மூன்று பலன்
    தருவதுபோல் ஒரே இடத்தில் இருந்து ஒரு பலன்தான் தருமா?///////

    ஒரு இடத்தில் இரண்டு கிரகங்களுக்கு மேல் இருந்தால் அது கிரக யுத்தம். Mixed results

    ReplyDelete
  37. sir iam a newbie to this blog. what about mars ,saturn combination. i have got mars and satrun in lagna and directly aspected by sun in 7 th. going thru satrun dasha last bhukthi. gosh, need i say more.

    /////The particulars are not sufficient to say anything! லக்கினம் எது?

    Blogger mike said...
    my lagna is virgo n moonsign is libra.star is vishaka sir. thanx for replyin./////also, guru n moon in libra. thanks again.

    i reallly regret having not learned the basics of astrology much earlier. damn , ive wasted so much time reading worthless novels.sheesh.
    also, sir do you offer consultations personally ?

    ReplyDelete
  38. i have been studying this continuosly for two days because just now i saw ur blog.its great and i have so many doubts can i contact u thru email?

    ReplyDelete
  39. Dear Sir,

    I have Kethu & Saturn in 4th House, Raghu and Mars in 10th House. What will be the effect of these planetary positions in my career and family life

    --T C R Kammalakannon

    ReplyDelete
  40. Dear Sir,

    I have Kethu & Saturn in 4th House, Raghu and Mars in 10th House. What will be the effect of these planetary positions in my career and family life

    --T C R Kammalakannon

    ReplyDelete
  41. Blogger mike said...
    sir iam a newbie to this blog. what about mars ,saturn combination. i have got mars and satrun in lagna and directly aspected by sun in 7 th. going thru satrun dasha last bhukthi. gosh, need i say more.
    /////The particulars are not sufficient to say anything! லக்கினம் எது?
    Blogger mike said...
    my lagna is virgo n moonsign is libra.star is vishaka sir. thanx for replyin./////also, guru n moon in libra. thanks again.
    i reallly regret having not learned the basics of astrology much earlier. damn , ive wasted so much time reading worthless novels.sheesh.
    also, sir do you offer consultations personally ?/////

    I am a businessman and I do not have time for any personal consultation. I am writing in blogs only out of interest

    ReplyDelete
  42. /////Blogger govind said...
    i have been studying this continuosly for two days because just now i saw ur blog.its great and i have so many doubts can i contact u thru email?///////

    I am a businessman and I do not have time for any personal consultation. I am writing in blogs only out of interest
    You can use the comments box for any clarification in the lessons!

    ReplyDelete
  43. //////Blogger T.C.R said...
    Dear Sir,
    I have Kethu & Saturn in 4th House, Raghu and Mars in 10th House. What will be the effect of these planetary positions in my career and family life
    --T C R Kammalakannon/////

    I am a businessman and I do not have time for any personal consultation. I am writing in blogs only out of interest
    Please contact a good astrologer to clear the doubts in your horoscope

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com