மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.2.09

முழுப் பணமும் முக்கால் கிழவியும்!

முழுப் பணமும் முக்கால் கிழவியும்!

மனிதனுக்கு எது முக்கியம்?

மில்லியன் டாலர் கேள்வி இது!

சரியான பதிலை ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு பதில் வரும். ஒருமித்த கருத்து என்பது
இருக்காது

ஏன் இருக்காது?

ஒவ்வொருவரின் புத்தி அளவும், எண்ணங்களும், ஆசாபாசங்களும்,
கண்ணோட்டங்களும் வெவ்வேறானது.

நல்ல பெற்றோர்கள் இருந்தால் வாழ்க்கையின் துவக்கம் நன்றாக இருக்கும்.
துவக்கம் நன்றாக இருந்தால் மற்றதும் நன்றாக இருக்கும் என்பான் ஒருவன்.

நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பான் இன்னொருவன். பிட்ஸ், பிலானியில்
படித்தவனுக்கு எத்தனை வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா?
என்பான் இன்னொருவன்.

படிப்பு என்ன சாமி படிப்பு? நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பான்
இன்னொருவன். நல்ல நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால், சேர்ந்த பிறகு உங்கள்
கல்வியின் அடையாளம் எல்லாம் காணாமல் போய்விடும். உங்களை
எல் அண்ட் டி ஊழியர் என்றோ அல்லது இன்ஃபோசிஸில் பணியாற்றுபவர்
என்றோதான் இந்த உலகம் பெருமையாகப் பார்க்கும். நீங்கள் ஐ.ஐ.டி யில்
படித்திருந்தால் என்ன? இல்லை அமிர்தாவில் படித்திருந்தால் என்ன?
எதுவுமே அங்கே சேர்ந்த பிறகு சொல்லப்படுவதில்லை என்பான் இன்னொருவன்.

அழகான பெண் காதலியாகக் கிடைக்க வேண்டும் என்பான் இளைஞன்.
அனுஷ்கா சர்மாவைப்போன்ற அல்லது நயன்தாராவைப் போன்ற பெண்
காதலியாகக் கிடைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? என்பான்
அவன்.

அதுவும் இவன் ஓமக்குச்சி நரசிம்மனைப்போல சுமாராக இருந்தாலும்,
கிடைக்கின்ற காதலி இவனை உருகி உருகிக் காதலிக்க வேண்டும் என்பான்.

"எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் சிந்தும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம்"

என்று அவள் அனுதினமும் பாட வேண்டும் என்பான்.

முகேஷ் அம்பானி போன்ற செல்வந்தர் வீட்டில் பிறக்க வேண்டும் என்பான்
இன்னொருவன், வாழ்க்கை முழுவதும் வேலை செய்யாமல் சாப்பிடலாம்.
தண்ணி அடிக்கலாம். பணத்தைக் காட்டிப் பலரைச் சாய்க்கலாம்.

இப்படி ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி நம்மைக் குழப்புவார்கள்
--------------------------------------------------------------------------------
சரி, உண்மையில் மனிதனுக்கு முக்கியமாக என்ன வேண்டும்?

புத்தி வேண்டும்!

அதுதான் முக்கியம்!

எந்த நிலையிலும், எந்தச் சுழலிலும் மனிதனைக் காப்பதும், தகுந்தாற்போலச்
செயல்பட வைப்பதும், சந்தோஷமாக இருக்க வைப்பதும் எதுவென்றால்,
சந்தேகமில்லாமல் சர்வ நிச்சயாமகச் சொல்லலாம் - அது புத்தி ஒன்றுதான்!

புத்திக்கு என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது!

அது வாங்கி வந்த வரம்!

ஜாதகப் பலன். ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால் புத்தி நன்றாக இருக்கும்
இல்லையென்றால் இல்லை!

புத்தி என்பது இங்கே knowledge, intelligence and smartnessஐக் குறிக்கும்!

நன்றாக இருப்பது என்பது என்ன?

1. புதன் சொந்த வீட்டில் இருப்பது
2. புதன் உச்சம் பெற்று இருப்பது
3. நட்பு வீடுகளில் இருப்பது.
அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள்
அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர்
ஆகிவிடுவார்.

சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார்

அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்
களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில்
5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரே!
------------------------------------------------------------------------------------------
அஷ்டகவர்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலமுறை நான் உங்களுக்கு
வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.

அதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!

எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா?

உங்களின் பின்னூட்டங்களை வைத்தும், தனிப்பட்ட மின்னஞ்சல்களை வைத்தும்
அது எனக்குத் தெரியும்.

அஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம் ஜாதகத்தின் பலனை, நாமே
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். யாரையும் கேட்க வேண்டாம்.

30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் நன்றாக இருக்கும்
நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும்.

25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக இருக்கும்

20 முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே
தரும்

20ம் அதற்குக் கீழான பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும்
மோசமான பலன்களே கிடைக்கும்.

அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும்

4 பரல்கள் என்பது சராசரி

3 என்பது சுமாரானது

2ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை. மோசமானது. வலிமையில்லாது
போய்விடும்

அனைவருக்கும் 337 பரல்கள்தான். அதை மறந்து விடாதீர்கள்.

அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால்
ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப்
புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி
கரமாகவும் இருக்கும்.

அதேபோல எல்லா வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக்
கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்
--------------------------------------------------------------------------
புதனுடன் கேது சேர்ந்திருந்தால் கிடைக்ககூடிய பலன்:

இன்றையப் பாடம் அதுதான் சுவாமி!

பொதுவாக புதனுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருப்பது நன்மை பயக்கும்.
The native will get positive reults

தீய கிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல!

புதன் புத்திநாதன் என்பதால் ஜாதகனின் புத்தி தீய வழிகளில் நன்றாக
வேலை செய்யும். புதனுடன், சனி அல்லது ராகு அல்லது கேது சேர்ந்தால்
ஜாதகனின் புத்தி கிரிமினல் வேலைகளை நன்றாகச் செய்யும். ஜாதகன்
யாரையும் தந்திரமாக அல்லது நயவஞ்சகமாக அல்லது அசத்தலான
பேச்சால் கவிழ்ப்பதில் சூரனாக இருப்பான்.

எல்லோருமே அப்படியா?

இல்லை!

வீக்காக உள்ள புதனுடன் சேரும் கிரகங்களினால் மட்டுமே ஜாதகன் அப்படி
இருப்பான். வலிமையாக உள்ள புதன் சேரும் தீய கிரகங்களையும் தன்னுடன்
சேர்த்து தன்னுடைய புத்தியை ஆக்க வழியிலேயே செலவழிக்கும். இருந்தாலும்
சேர்கின்ற தீய கிரகத்தால் அவனுடைய செயல்பாடுகள் முழுமையான பலனைத்
தராது.

உதாரணத்திற்கு லக்கினத்தில் புதனும் கேதுவும் இருந்தால் ஜாதகன் மிகவும்
கெட்டிக்காரனாக இருப்பான். highly intellignt ஆக இருப்பான். இருந்தாலும்
அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். செயல்களின் வேகம் குறையும். உடல்
உபத்திரவங்களால் (லக்கினம் உடல் சம்பந்தப்பட்ட வீடு) பல செயல்களைக்
கைவிட நேரிடும்.

வீட்டின் பரலும், புதனின் பரலும் அதிகமாக இருந்தால் மேற்கூறிய தொல்லை
இருக்காது
--------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகனுக்குக் கல்வியில்,
வித்தைகளில், சாஸ்திரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இரண்டாம் வீட்டைப் பார்ப்பதற்கு, இப்படி ஒவ்வொரு கிரகமாக நினைவில்
வைத்துப் பலன் பார்த்து அல்லாடுவதைவிட வேறு ஒரு குறுக்கு வழி
இருக்கிறது.

குறுக்கு வழி என்றால்தான் நமக்குப் பிடிக்குமே!

வாருங்கள் முதலில் அதைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஒருவனுடைய நிதி நிலை தெரியவரும்
It is called as house of finance

இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு
எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது

அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம்
அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு
மகிழ்ச்சியாக இருக்காது.

20 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் குடும்பம்
நடத்த மாட்டான். ஐஷ்வர்யாராயைப் போன்ற அழகான பெண்னைத் திருமணம்
செய்து வைத்தாலும் அவன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே படுக்க
வைத்துவிட்டு அவன் தூர தேசம் ஒன்றிற்குப் பொருள் ஈட்டப் போய்விடுவான்
அல்லது வேலை நிமித்தமாகப் போய்விடுவான்.

பணம் சம்பாதிப்பதற்காக தூர தேசங்களுக்குச் சென்றவர்களில் 90% திரும்பி
வந்ததாகச் சரித்திரம் இல்லை. பணத்தை மட்டுமே பிரதானமாகத் தேடுபவன்
திருப்தியடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே பணத்தின் மேலே மட்டும்
குறியாக இருப்பவன் வாழ்க்கையின் மற்ற சந்தோஷங்களை இழந்துவிடுவான்.

எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகி ஒரு இரண்டுவருட காலம் மட்டுமே
குடும்பம் நடத்தினார். திருமணத்திற்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்தது.
மனைவியும், குழந்தையும் நலமாக வாழ வேண்டும் என்று பொருள் ஈட்டலுக்காக
அரபு தேசத்திற்குச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஆண்டுகள் முப்பது
ஆகிவிட்டன. இன்றுவரை திரும்பவில்லை. என்.ஆர்.ஐக் கணக்கில் இருப்பு
ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் மட்டும் Blank ஆகவே இன்னும் இருக்கிறது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தாயகத்திற்கு வருவார். ஒரு பத்து தினங்கள்
மட்டும் இங்கே இருந்துவிட்டு மீண்டும் விமானம் ஏறிப் பறந்து விடுவார். அதாவது
730 நாட்களுக்கு ஒருமுறை 10 தினங்கள் மட்டுமே இங்கே இருப்பார்.

அதைக் குடும்ப வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்?

சரி, ஈட்டிய பொருள் போதும் என்று இப்போதாவது வரலாமே?

வரமாட்டார்! கிரகங்கள் விட்டால்தானே?

அவருடைய ஐஷ்வர்யாவிற்கு மாதவிடாயெல்லாம் நின்று, மெனோபாசெல்லாம்
தாவிக் குதித்துச் சென்று இப்போது அவர் முக்கால் கிழவியாகிவிட்டார்.
அய்யன் திரும்பி வந்தாலும் அம்மணி பயன் படமாட்டார்.

அவருக்குக் கிடைத்தது பணம். போனது மனையாள் சுகம்!

இரண்டில் எது முக்கியம் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

சிலருடைய இரண்டாம் வீட்டின் அவல நிலைக்கு இது ஒரு சின்ன உதாரணம்.
---------------------------------------------------------------------------------
இதே பரல்களை வைத்து ஒருவருடைய பத்தாம் வீட்டையோ அல்லது ஏழாம்
வீடையோ அலசலாம். அதை எல்லாம் வேறு ஒரு தலைப்பில் தனியாக எழுத
உள்ளேன். அப்போது பார்ப்போம்
---------------------------------------------------------------------------------
புதனும் கேதுவும் சேர்ந்து 3ஆம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு
ஆகிய வீடுகளில் இருந்தால் மட்டுமே சில நற்பயன்கள் கிடைக்கும். மற்ற
வீடுகளில் அவர்களின் சேர்க்கையால் நன்மை இல்லை!

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

86 comments:

  1. உங்களுக்கு மட்டும் எப்படி சார் இப்படி அருமையான தலைப்புகள் கிடைகின்றன.. !!!!!!

    ReplyDelete
  2. தலைப்பு மட்டுமா - படங்களும்தான் ஆசிரியருக்கு அருமையாக கிடைக்கின்றது...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. /////Blogger ஸ்ரீதர்கண்ணன் said...
    உங்களுக்கு மட்டும் எப்படி சார் இப்படி அருமையான தலைப்புகள் கிடைகின்றன.. !!!!!!//////

    எழுதி முடித்துப் படிக்கும் போது, அதுவாகக் கிடைப்பதுதான் தலைப்புக்கள். தனிப்பிரயததனம் ஒன்றுமில்லை!

    தலைப்பை நன்றாகப்போடு;
    தானே வருவார்கள்

    என்று மற்றவர்களுக்குச் சொல்லும் நான், என்னுடைய ஆக்கங்களின் தலைப்பைச் சொதப்புவேனா என்ன?

    ReplyDelete
  4. /////Blogger வேலன். said...
    தலைப்பு மட்டுமா - படங்களும்தான் ஆசிரியருக்கு அருமையாக கிடைக்கின்றது...
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    முதலில் பின்னூட்டமிட்ட இருவருமே, தலைப்பையும், படத்தையும் மட்டும்தான் பார்த்த்திருக்கிறீர்கள்.
    பாடத்தை ஏன் படிக்கவில்லை?:-(((((((((

    ReplyDelete
  5. Thanks for the lesson.Have you heard the saying, "Maraintha Bhuthan niraintha Kalvi", Our family astrologer used to say this.

    ReplyDelete
  6. ஐயா இன்றைய பாடம் மிகவும் அருமை. அஷ்ட வர்க்க பலன்களாக தாங்கள் கூறியுள்ளது (1,9,10,11) ஏற்கனவே தாங்கள் அது பற்றி தெளிவாக பதிவிட்டிருக்கிறிர்கள். நன்றி.

    ReplyDelete
  7. Dear Sir,

    Thank you very much for your hard work. I was little late and need to catchup with your old lessons.

    I was reading in internet about the Pancha Mahapurusha Yoga which is explained as when one of the five planets - Mercury, Venus, Mars, Jupiter and Saturn at their point of exaltation, and are in a Kendra from Moon or Lagna. My lagana is kumbam and mars in 10th house viruchigam. Does in considered pancha mahapurusha yoga? I heard Kalaignar has double pancha maha purusha yoga in his horoscope.

    Could you please write more about the pancha mahapurusha yoga?

    Thanks,
    Monickam

    ReplyDelete
  8. அய்யா,
    பாடம் வழக்கம் போல நன்றாக விளங்கியது.

    அஷ்டவர்க்கம் - நீங்கள் குறிப்பிட்டு உள்ளது போல, நான் அஷ்ட வர்க்க பாடத்தான் விலக்க வில்லை. In general, தசை, புக்தி, கிரகங்கள், அதன் இருப்பிடம், மாற்ற கிரகங்களின் பார்வை, அஸ்தமனம் மற்றும் அஷ்டவர்க்க index number.

    என் கேசில், நான் மிதுன ராசியா அல்லது கடக ராசிய என்பது million dollar question. கேரள பஞ்சாங்க படி, எனக்கு மிதுன ராசி. If I choose Chandra-Hari as ayanamsa, I get mithuna raasi and mithuna lagnam. Somhow, If I choose (any any of the horoscope calculation), I get kataga raasi. And more so, the Ashtavarga. நீங்கள் முன்பு ஒருமுறை இந்த கேள்வி கேட்டதற்கு - கால சுத்தி செய்ய வேண்டும் என பதில் கூறினீர்கள். I tried in net but no result. விளக்கம் தேவை அய்யா.

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  9. அருமையான எளிமையான விளக்கங்கள்! உதாரணங்களும் கூட!

    நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger வேலன். said...
    தலைப்பு மட்டுமா - படங்களும்தான் ஆசிரியருக்கு அருமையாக கிடைக்கின்றது...
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    முதலில் பின்னூட்டமிட்ட இருவருமே, தலைப்பையும், படத்தையும் மட்டும்தான் பார்த்த்திருக்கிறீர்கள்.
    பாடத்தை ஏன் படிக்கவில்லை?:-(((((((((

    சார் நாங்கள் பாடத்தை படிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.படித்து கொண்டுதான் இருக்கிறோம்... இன்று ஐயம் எதுவும் இல்லை :-)

    ReplyDelete
  11. ஸ்ரீதர் கண்ணன் சொல்வதை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  12. அதாவது பின்னூட்ட எண் 10 ஐ நான் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  13. ஐயா,
    தலைபைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று பின்னூட்டப் பெட்டியைத் திறந்தால், எனக்கு முன்பே பலரும் தலைப்பு குறித்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
    தலைப்புக்கான விளக்கம் பாடத்தின் இறுதியில் தான் தெரிகிறது.

    ReplyDelete
  14. வணக்கம் அய்யா

    பாடம் அருமை ஆனால் 3 9 10 11 இடங்களில் இருந்தால் நல்லது என்று மட்டும் கூறிவிட்டு
    சஸ்பென்ஸ் போட்டு வீட்டீர்கள் ஏனென்றால் எனக்கு 11 ல் கேது ,புதன் -7 பரல்கல்

    ReplyDelete
  15. Dear Sir

    Sir oftenly you proof yourself as good writer and attractive heading.

    Nice lesson and it is very interesting... Iam waiting for your next lesson with ashtavargam(Paralkal).

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  16. வணக்கம் அய்யா

    பாடம் அருமை ஆனால் 3 9 10 11 இடங்களில் இருந்தால் நல்லது என்று மட்டும் கூறிவிட்டு
    சஸ்பென்ஸ் போட்டு வீட்டீர்கள் ஏனென்றால் எனக்கு 11 ல் கேது ,புதன் -7 பரல்கல்

    ReplyDelete
  17. மன்னிக்கவும் ஒரே கேள்வியை தெரியாமல் இரண்டுமுறை அனுப்பிவிட்டேன் ...

    ReplyDelete
  18. உள்ளேன் ஐயா,

    பாடம் வழக்கம்போல் அருமை !!

    என்றும் அன்புடன்

    ReplyDelete
  19. * i have dhanusu lagnam.
    budhan[2 paral] in 9th place with suriyan. [10.4 degree difference - almost budhan asthamanam]. 9th place paral 21.

    im following up ur blog regularly and to my calculations i c budhan is not that strong, but i have already finished 2 masters degrees. UG and PG in bannari amman college with gold medal and MS from BITS,Pilani. Just trying to understand what is good with budhan that im lucky enough to get gods grace in terms of knowledge or education.

    ReplyDelete
  20. ///////Blogger krish said...
    Thanks for the lesson.Have you heard the saying, "Maraintha Bhuthan niraintha Kalvi", Our family astrologer used to say this./////

    புதன் மறைந்தால் வித்தை குறைவு. நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது

    ReplyDelete
  21. //////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா இன்றைய பாடம் மிகவும் அருமை. அஷ்ட வர்க்க பலன்களாக தாங்கள் கூறியுள்ளது (1,9,10,11) ஏற்கனவே தாங்கள் அது பற்றி தெளிவாக பதிவிட்டிருக்கிறிர்கள். நன்றி.//////

    உங்கள் பதிலுக்கு நன்றி ஆனந்தன்!

    ReplyDelete
  22. ////////Blogger Monickam said...
    Dear Sir,
    Thank you very much for your hard work. I was little late and need to catchup with your old lessons.
    I was reading in internet about the Pancha Mahapurusha Yoga which is explained as when one of the five planets - Mercury, Venus, Mars, Jupiter and Saturn at their point of exaltation, and are in a Kendra from Moon or Lagna. My lagana is kumbam and mars in 10th house viruchigam. Does in considered pancha mahapurusha yoga? I heard Kalaignar has double pancha maha purusha yoga in his horoscope.
    Could you please write more about the pancha mahapurusha yoga?
    Thanks,
    Monickam///////

    யோகங்களைப் பற்றிய பாடம் பின்னால் உள்ளது. அதை நடத்தும்போது இதெல்லாம் வரும். சற்றுப்பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  23. //////Blogger Sridhar said...
    அய்யா,
    பாடம் வழக்கம் போல நன்றாக விளங்கியது.
    அஷ்டவர்க்கம் - நீங்கள் குறிப்பிட்டு உள்ளது போல, நான் அஷ்ட வர்க்க பாடத்தான் விலக்க வில்லை. In general, தசை, புக்தி, கிரகங்கள், அதன் இருப்பிடம், மாற்ற கிரகங்களின் பார்வை, அஸ்தமனம் மற்றும் அஷ்டவர்க்க index number.
    என் கேசில், நான் மிதுன ராசியா அல்லது கடக ராசிய என்பது million dollar question. கேரள பஞ்சாங்க படி, எனக்கு மிதுன ராசி. If I choose Chandra-Hari as ayanamsa, I get mithuna raasi and mithuna lagnam. Somhow, If I choose (any any of the horoscope calculation), I get kataga raasi. And more so, the Ashtavarga. நீங்கள் முன்பு ஒருமுறை இந்த கேள்வி கேட்டதற்கு - கால சுத்தி செய்ய வேண்டும் என பதில் கூறினீர்கள். I tried in net but no result. விளக்கம் தேவை அய்யா.
    நன்றி,
    ஸ்ரீதர்///////
    கால சுத்தி' என்றால் என்ன? புரியவில்லையே நண்பரே! உங்கள் பிறப்பு விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புங்கள். என்ன லக்கினம் என்று பார்த்துச் சொல்கிறேன்

    ReplyDelete
  24. //////Blogger Namakkal Shibi said...
    அருமையான எளிமையான விளக்கங்கள்! உதாரணங்களும் கூட!
    நன்றி!/////

    நன்றி நாமக்கல்லாரே!

    ReplyDelete
  25. ////////Blogger ஸ்ரீதர்கண்ணன் said...
    /////Blogger வேலன். said...
    தலைப்பு மட்டுமா - படங்களும்தான் ஆசிரியருக்கு அருமையாக கிடைக்கின்றது...
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////
    முதலில் பின்னூட்டமிட்ட இருவருமே, தலைப்பையும், படத்தையும் மட்டும்தான் பார்த்த்திருக்கிறீர்கள்.
    பாடத்தை ஏன் படிக்கவில்லை?:-(((((((((
    சார் நாங்கள் பாடத்தை படிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.படித்து கொண்டுதான் இருக்கிறோம்... இன்று ஐயம் எதுவும் இல்லை :-)///////

    விளக்கத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. //////Blogger Namakkal Shibi said...
    ஸ்ரீதர் கண்ணன் சொல்வதை வழிமொழிகிறேன்!//////

    உங்களுக்கும் நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  27. ////////Blogger Namakkal Shibi said...
    அதாவது பின்னூட்ட எண் 10 ஐ நான் வழிமொழிகிறேன்!//////

    இதற்கும் ஒரு விஷேசமான நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  28. /////////Blogger தியாகராஜன் said...
    ஐயா,
    தலைபைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று பின்னூட்டப் பெட்டியைத் திறந்தால், எனக்கு முன்பே பலரும் தலைப்பு குறித்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
    தலைப்புக்கான விளக்கம் பாடத்தின் இறுதியில் தான் தெரிகிறது.///////

    தலைப்பு பொருத்தமாக இருக்கிறது அல்லவா தியாகராஜன்?

    ReplyDelete
  29. //////Blogger sundar said...
    வணக்கம் அய்யா
    பாடம் அருமை ஆனால் 3 9 10 11 இடங்களில் இருந்தால் நல்லது என்று மட்டும் கூறிவிட்டு
    சஸ்பென்ஸ் போட்டு வீட்டீர்கள் ஏனென்றால் எனக்கு 11 ல் கேது ,புதன் -7 பரல்கள்//////

    நல்லது என்று சொல்லியிருக்கிறேனே ராஜா! அதுவும் புதன் சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருப்பது இன்னும் நல்லதாயிற்றே!
    புதன் திசை அல்லது புதன் புத்தியில் நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும்! போதுமா?

    ReplyDelete
  30. //////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sir oftenly you proof yourself as good writer and attractive heading.
    Nice lesson and it is very interesting... Iam waiting for your next lesson with ashtavargam(Paralkal).
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  31. ///////Blogger sundar said...
    வணக்கம் அய்யா
    பாடம் அருமை ஆனால் 3 9 10 11 இடங்களில் இருந்தால் நல்லது என்று மட்டும் கூறிவிட்டு
    சஸ்பென்ஸ் போட்டு வீட்டீர்கள் ஏனென்றால் எனக்கு 11 ல் கேது ,புதன் -7 பரல்கலள்///////

    முன்பே பதில் சொல்லியுள்ளேன்

    ReplyDelete
  32. //////Blogger sundar said...
    மன்னிக்கவும் ஒரே கேள்வியை தெரியாமல் இரண்டுமுறை அனுப்பிவிட்டேன் ...//////

    அதனால் என்ன? பரவாயில்லை!

    ReplyDelete
  33. ///////Blogger SP Sanjay said...
    உள்ளேன் ஐயா,
    பாடம் வழக்கம்போல் அருமை !!
    என்றும் அன்புடன்///////

    நன்றி சஞ்சய்!

    ReplyDelete
  34. ///////Blogger Arun Kumar. S said...
    * i have dhanusu lagnam.
    budhan[2 paral] in 9th place with suriyan. [10.4 degree difference - almost budhan asthamanam]. 9th place paral 21.
    im following up ur blog regularly and to my calculations i c budhan is not that strong, but i have already finished 2 masters degrees. UG and PG in bannari amman college with gold medal and MS from BITS,Pilani. Just trying to understand what is good with budhan that im lucky enough to get gods grace in terms of knowledge or education.//////

    தனுசு லக்கினத்தற்குப் புதன் ஏழு மற்றும் பத்தாம் இடங்களுக்கு உரியவன். அவன் திரிகோணத்தில் இருப்பது நன்மையளிக்கும்
    அதோடு பாக்கியாதிபதி சூரியனுடன் சேர்ந்துள்ளார். புதஆதித்ய யோகம் உள்ளது. அவைதான் உங்கள் உயர்கல்விக்குக் காரணம். நல்ல வேலையும் கிடைக்கும். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  35. enanthu lagnam dhanushu and rashi dhanushu

    Bhudhan and suryan r in 5 th place. Bhudhan combust with suryan (within 10 deg).But I have done BE.

    2 nd house 28 paralkal

    Can u tell me i will do higher study.

    ReplyDelete
  36. //அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால்
    ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

    அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப்
    புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி
    கரமாகவும் இருக்கும்.//

    ஐயா என்னுடைய 1,4,9,10,11 வீட்டில் 30க்கும் மேற்ப்பட்ட பரல்கள்(அஷ்ட வர்க்கம்).

    \\இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு
    எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும்.

    எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது

    அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம்
    அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு
    மகிழ்ச்சியாக இருக்காது.//

    எனது 2ம் வீட்டில் 23 பரல்களே உள்ளது. பணப் பிரச்சினை இல்லை, எனது குடும்ப வாழ்க்கை நல்ல அமையுமா?

    ReplyDelete
  37. Dear sir,
    Thanks for today lesson..sir one doubt...
    In my jathagam,magara lagnam, budhan in viruchaga with suriyan and chevvai.place astavarga 30. Indivual planet astavarga budhan 6, suriyan 5, chevvai 3. budhan retrograted.No budhan combust.my uncle(mother relation)passed away in my childhood.And also I have only Diploma holder, no more higher study.Whats wrong aspects with my budhan placing in jathagam? pls explain me sir.

    ReplyDelete
  38. Sir I am also heard that as Mr.Krish said. i.e. "Maraintha buthan niraintha Palan". but you have to clear our doubt sir.

    ReplyDelete
  39. மதிப்பிற்கு உரிய அய்யா அவர்களுக்கு,
    பாடம் நன்கு புரிந்தது !

    ஒரு சந்தேகம்

    //2 இம் அதற்க்கு கீழாகவும் இருந்தால் பலனில்லை . மோசமானது .//

    சனி பகவான் சுயவர்க்கத்தில் ஒரு பரல் கொண்டிருந்தால் நல்ல பலன் கிடைக்குமா ?
    அவரால் விழையும் கஷ்டங்கள் குறையுமா ?

    ReplyDelete
  40. மிகவும் நல்ல பதிவு. தொடக்கம் முதல் படித்திட வேண்டும்.

    புதன் சூரியனுடனும் சுக்கிரனுடனும் லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் கூடி இருந்தால் என்ன பலன்?

    அருமை.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. அய்யா!!
    அருமையான விளக்கங்கள்.
    மிகவும் நல்ல பதிவு.

    நன்றி.

    அன்புடன்.

    ReplyDelete
  43. அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே//
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே.//
    ஐயா,
    வணக்கம். அவசர வேலைகாரணமாக சென்னை சென்றதால் விரிவான பதிவிட முடியவில்லை. மேலும் எனக்கு 10-ல் கேதுவுடன் புதன் இருக்கும்பலன் அருமை. பாடங்கள் புரிந்தது. சந்தேகம் இல்லாததால் கேள்விகேட்கவில்லை.
    மனிதனுக்கு தேவை எது என்பதை மேற்கண்ட பாடல்களிலேயே உள்ளது.
    மனிதனுக்கு அதுவே போதும் என நினைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  44. ஐயா,
    எனக்கு 1ல் 36,2ல்33,6ல்30 ,10ல் 35,11 ல்37 பரல்கள். ரோகிணி நட்சத்திரம் காலசர்ப்பதோசம்,4ல் ராகு,10ல் கேது. காலசர்ப்பதோசம் ,4ல் ராகு இருந்தால் என்ன பலன் ,ராகு திசை எல்லாம் சரியாக இருக்கிரது. பரல்கள் மட்டும் பிழைக்கிரது.
    முன் வாழ்க்கை மிக‌ நல்லம்.பின் வாழ்க்கை சோதனை. இன்ரு வரை வேலைக்கு போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.கையில் காசும் இல்லை. 2 ல் 33 பரல் பிழைக்கிரதே.

    ReplyDelete
  45. /////Blogger YOGANANDAM M said...
    enanthu lagnam dhanushu and rashi dhanushu
    Bhudhan and suryan r in 5 th place. Bhudhan combust with suryan (within 10 deg).But I have done BE.
    2 nd house 28 paralkal
    Can u tell me i will do higher study./////

    உங்கள் ஜாதகத்தில் பாக்கியாதிபதி (9th lord) சூரியன் உச்சம் பெற்று மேஷத்தில் அதுவும் திரிகோணத்தில் இருக்கிறாரே சாமி. அவர் எல்லா பாக்கியங்களையும் பெற்றுத்தருவார். சலிக்கும் வரை நீங்கள் படிக்கலாம்!

    ReplyDelete
  46. /////Blogger N.K.S.Anandhan. said...
    //அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால்
    ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.
    அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப்
    புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி
    கரமாகவும் இருக்கும்.//
    ஐயா என்னுடைய 1,4,9,10,11 வீட்டில் 30க்கும் மேற்ப்பட்ட பரல்கள்(அஷ்ட வர்க்கம்).
    \\இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு
    எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும்.
    எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது
    அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம்
    அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு
    மகிழ்ச்சியாக இருக்காது.//
    எனது 2ம் வீட்டில் 23 பரல்களே உள்ளது. பணப் பிரச்சினை இல்லை, எனது குடும்ப வாழ்க்கை நல்ல அமையுமா?//////

    1, 9, 10 & 11ல் பரல்கள் இருந்தால் பொதும் என்று எழுதியுள்ளேனே சுவாமி. வாழ்க்கை சூப்பராக இருக்கும்
    அதில் பாக்கியஸ்தானமும் அடக்கம் (ninth house) ஆகவே குடும்ப பாக்கியத்தை அவர் அமைத்துக்கொடுப்பார்.
    கவலை எதற்கு?

    ReplyDelete
  47. //////Blogger VA P RAJAGOPAL said...
    Dear sir,
    Thanks for today lesson..sir one doubt...
    In my jathagam,magara lagnam, budhan in viruchaga with suriyan and chevvai.place astavarga 30. Indivual planet astavarga budhan 6, suriyan 5, chevvai 3. budhan retrograted.No budhan combust.my uncle(mother relation)passed away in my childhood.And also I have only Diploma holder, no more higher study.Whats wrong aspects with my budhan placing in jathagam? pls explain me sir.//////

    உங்கள் கேள்வி என்ன?
    பிறந்த தேதி, பிறந்த நேரம் & பிறந்த ஊர் மூன்றையும் எழுதுங்கள்

    ReplyDelete
  48. ////////Blogger sridhar said...
    Sir I am also heard that as Mr.Krish said. i.e. "Maraintha buthan niraintha Palan". but you have to clear our doubt sir./////

    6, 8, 12ல் கிரகங்கள் மறைந்தால் பலனில்லை.
    மறைந்த புதன் நிறைந்த பலன் என்பது சரியாக இல்லை!
    நான் அவ்வாறு கேள்விப்பட்டதும் இல்லை!
    என்னைப் பொறுத்தவரை அது தவறான கருத்து!

    ReplyDelete
  49. ///////Blogger பாஸ்கர் said...
    மதிப்பிற்கு உரிய அய்யா அவர்களுக்கு,
    பாடம் நன்கு புரிந்தது !
    ஒரு சந்தேகம்
    //2 இம் அதற்க்கு கீழாகவும் இருந்தால் பலனில்லை . மோசமானது .//
    சனி பகவான் சுயவர்க்கத்தில் ஒரு பரல் கொண்டிருந்தால் நல்ல பலன் கிடைக்குமா ?
    அவரால் விழையும் கஷ்டங்கள் குறையுமா?//////

    சனி கர்மகாரகன் - அவர் ஒரு பரலுடன் இருப்பது நன்மை பயக்காது!

    ReplyDelete
  50. //////Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...
    மிகவும் நல்ல பதிவு. தொடக்கம் முதல் படித்திட வேண்டும்.
    புதன் சூரியனுடனும் சுக்கிரனுடனும் லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் கூடி இருந்தால் என்ன பலன்?
    அருமை.//////

    இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு இடத்தில் கூடியிருப்பது கிரக யுத்தம் என்ற கணக்கில் வரும்!
    அது பற்றிய பாடம் பின்னால் வரும்! சற்றுப் பொறுத்திருங்கள்

    ReplyDelete
  51. //////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா./////

    நன்றி பாரதி!

    ReplyDelete
  52. ///////Blogger Geekay said...
    அய்யா!!
    அருமையான விளக்கங்கள்.
    மிகவும் நல்ல பதிவு.
    நன்றி.
    அன்புடன்.//////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  53. Blogger வேலன். said...
    அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே//
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே.//
    ஐயா,
    வணக்கம். அவசர வேலைகாரணமாக சென்னை சென்றதால் விரிவான பதிவிட முடியவில்லை. மேலும் எனக்கு 10-ல் கேதுவுடன் புதன் இருக்கும்பலன் அருமை. பாடங்கள் புரிந்தது. சந்தேகம் இல்லாததால் கேள்விகேட்கவில்லை.
    மனிதனுக்கு தேவை எது என்பதை மேற்கண்ட பாடல்களிலேயே உள்ளது.
    மனிதனுக்கு அதுவே போதும் என நினைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்!

    ReplyDelete
  54. Blogger vino, canada said...
    ஐயா,
    எனக்கு 1ல் 36,2ல்33,6ல்30 ,10ல் 35,11 ல்37 பரல்கள். ரோகிணி நட்சத்திரம் காலசர்ப்பதோசம்,4ல் ராகு,10ல் கேது. காலசர்ப்பதோசம் ,4ல் ராகு இருந்தால் என்ன பலன் ,ராகு திசை எல்லாம் சரியாக இருக்கிரது. பரல்கள் மட்டும் பிழைக்கிரது.
    முன் வாழ்க்கை மிக‌ நல்லம்.பின் வாழ்க்கை சோதனை. இன்று வரை வேலைக்கு போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.கையில் காசும் இல்லை. 2 ல் 33 பரல் பிழைக்கிரதே.

    உங்கள் கேள்வி என்ன? (Ask only one straight question)
    பிறந்த தேதி, பிறந்த நேரம் & பிறந்த ஊர் மூன்றையும் எழுதுங்கள்

    ReplyDelete
  55. அய்யா வணக்கம்,
    எனக்கு அஸ்டவர்கம் முறையே 35,25,31,33,27,30,21,24,27,29,29,26 என josiam pakrathu software ரிலும், 34,25,32,32,27,30,21,24,27,29,31,25 என Jagannatha Hora7.3 software ரிலும் வருகிறது. இதில் எது சரி.
    (28/02/1970 - 20:05 - 79.26 E, 11.36 N)

    ReplyDelete
  56. Dear Sir,
    Namaskarams.I have no words to praise your efforts to teach Astrology to a common man. For me Astrology was a mystery before joining the classroom. Now I could understand it.
    Regarding Ashtagavarga, the students are not ignoring the importance of it. The thing is confusions in obtaining a correct horoscope chart. I have the following confusions: There are various methods of Calculating one's birth chart. There are two types of Panchanga.(Thirukkanitha and Vakya)I understand from a website that there are 4types of Aynamsa(Lahiri,Chandrahari, B.V.Raman&Western)and two types of Ahtagavarga(Parasara & Varahamihira). In each mode of calculation of Birth chart, there are changes in the planetary positions. In this case which one we can consider as the right one? If the position of planets itself is not clear then how to go with Ashtagavarga?Please clarify.
    Also I would like to know from you about 'Bhava Chart' and it's importance. Thank you.
    SABESAN,Qatar.

    ReplyDelete
  57. பரல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாடம் அருமை.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  58. அய்யா,

    எனக்கு தெரிந்த ஒரு சில குடும்பங்களில் கால் பணமும், முக்கால் கிழவிகளும் கதையும் உண்டு.

    குடும்பத்தை காப்பாற்ற கடல் கடந்து சென்று, money making maching-ஆக கடன் சுமை, கூட பிறந்த சகோதர சகோதரிகளை கரை ஏற்றும் பொறுப்பை சுமந்து - காலம் கடந்து கல்யாண சந்தையில் அடிபெட்ட முக்கால் கிழவிகளும் நம் முன்னே உண்டு.

    நன்றி.

    ஸ்ரீதர்

    ReplyDelete
  59. ///தலைப்பு பொருத்தமாக இருக்கிறது அல்லவா தியாகராஜன்?///

    ஐயா,
    தாங்கள் கனக்கச்சிதமாக அமைத்திருக்கிற தலைப்பு
    மகுடத்தில் சூட்டப்பட்ட
    மாணிக்கம்.

    ReplyDelete
  60. Blogger bash said...
    அய்யா வணக்கம்,
    எனக்கு அஸ்டவர்கம் முறையே 35,25,31,33,27,30,21,24,27,29,29,26 என josiam pakrathu software ரிலும், 34,25,32,32,27,30,21,24,27,29,31,25 என Jagannatha Hora7.3 software ரிலும் வருகிறது. இதில் எது சரி.
    (28/02/1970 - 20:05 - 79.26 E, 11.36 N)

    ஜோசியம் பார்க்கிறது மென்பொருளைப் பயன்படுத்துங்கள்!

    ReplyDelete
  61. Blogger Sabesan said...

    Dear Sir,
    Namaskarams.I have no words to praise your efforts to teach Astrology to a common man. For me Astrology was a mystery before joining the classroom. Now I could understand it.
    Regarding Ashtagavarga, the students are not ignoring the importance of it. The thing is confusions in obtaining a correct horoscope chart. I have the following confusions: There are various methods of Calculating one's birth chart. There are two types of Panchanga.(Thirukkanitha and Vakya)I understand from a website that there are 4types of Aynamsa(Lahiri,Chandrahari, B.V.Raman&Western)and two types of Ahtagavarga(Parasara & Varahamihira). In each mode of calculation of Birth chart, there are changes in the planetary positions. In this case which one we can consider as the right one? If the position of planets itself is not clear then how to go with Ashtagavarga?Please clarify.
    Also I would like to know from you about 'Bhava Chart' and it's importance. Thank you.
    SABESAN,Qatar.

    திருக்கணிதம் சரியானது. அதையே பின்பற்றுங்கள்!
    ஜோசியம் பார்க்கிறது மென்பொருளைப் பயன்படுத்துங்கள்! சுட்டி, பதிவின் சிரசில் உள்ளது

    ReplyDelete
  62. ////Blogger இராசகோபால் said...
    பரல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாடம் அருமை.
    அன்புடன்
    இராசகோபால்/////

    நன்றி கோபால்

    ReplyDelete
  63. ////Blogger Sridhar said...
    அய்யா,
    எனக்கு தெரிந்த ஒரு சில குடும்பங்களில் கால் பணமும், முக்கால் கிழவிகளும் கதையும் உண்டு.
    குடும்பத்தை காப்பாற்ற கடல் கடந்து சென்று, money making maching-ஆக கடன் சுமை, கூட பிறந்த சகோதர சகோதரிகளை கரை ஏற்றும் பொறுப்பை சுமந்து - காலம் கடந்து கல்யாண சந்தையில் அடிபெட்ட முக்கால் கிழவிகளும் நம் முன்னே உண்டு. நன்றி.
    ஸ்ரீதர்/////

    எல்லாமே ஜாதகப் பலன்! வேறென்ன?

    ReplyDelete
  64. ///////Blogger தியாகராஜன் said...
    ///தலைப்பு பொருத்தமாக இருக்கிறது அல்லவா தியாகராஜன்?///
    ஐயா,
    தாங்கள் கனக்கச்சிதமாக அமைத்திருக்கிற தலைப்பு
    மகுடத்தில் சூட்டப்பட்ட
    மாணிக்கம்.////////

    இங்கே மகுடம் இல்லை. தொப்பி மட்டும் உண்டு. அதைத் தொப்பியில் சூட்டிய மயிலிறகு என்று வேண்டுமென்றால் சொல்லலாம்!

    ReplyDelete
  65. /////Blogger VA P RAJAGOPAL said...
    Dear sir,
    Thanks for today lesson..sir one doubt...
    In my jathagam,magara lagnam, budhan in viruchaga with suriyan and chevvai.place astavarga 30. Indivual planet astavarga budhan 6, suriyan 5, chevvai 3. budhan retrograted.No budhan combust.my uncle(mother relation)passed away in my childhood.And also I have only Diploma holder, no more higher study.Whats wrong aspects with my budhan placing in jathagam? pls explain me sir.//////

    உங்கள் கேள்வி என்ன?
    பிறந்த தேதி, பிறந்த நேரம் & பிறந்த ஊர் மூன்றையும் எழுதுங்கள்

    Wednesday, February 11, 2009 10:18:00 PM
    Sorry for your confusion.
    My Date of Birth : 27,November,1978. Time of Birth 10:30 AM. Place of Birth : Thiruchirapalli, TamilNadu, India.
    My question: my point of view, Budhan good position. but why my uncle died in my childhood?And also what about my marriage life? Now marriage making facing some hurdles...
    Thanking you
    RG

    ReplyDelete
  66. எல்லாக் கிரஹங்களும் சூரியனுக்கு மிக அருகில் வரும்பொழுது அஸ்தமனம் ஆகிவிடுகின்றன். இதை அஸ்தங்கம் என்கிறார்கள். ஆனால், புதனுக்கு அஸ்தங்க‌
    தோஷம் கிடையாது என்கிறார்களே !
    மற்றும், புதன் வக்ரமாகவும் இருந்து அஸ்தங்கமாகவும் இருந்தால், அதுவும்
    நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, 1, 4, 5, 10 ல் இருந்து லக்னாதிபதிக்கு நண்பனாகவும்
    இருந்தால், எப்படி ?

    சுப்பு ரத்தினம்.
    ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூ.எஸ்.ஏ.

    ReplyDelete
  67. பரல்களை பற்றிய தெளிவான பாடத்திற்கு மிக்க நன்றி அய்யா. சாலமன் பாப்பையா சொல்வதை போல சொல்வதென்றால் " அருமைய்யா அருமை"

    எனக்கு ஒரு சந்தேகம் :
    // சனி கர்மகாரகன் - அவர் ஒரு பரலுடன் இருப்பது நன்மை பயக்காது!

    இந்த கர்ம காரகன் கர்ம ஸ்தானத்தில் இருந்தால் காராகோ பாவ நாஸ்தி

    இந்த புத்திர காரகன் புத்திர ஸ்தானத்தில் இருந்தால் காராகோ பாவ நாஸ்தி

    என்றெல்லாம் சொல்கிறார்கள்.அது பற்றிய உண்மையன்ன விளக்கம் அளித்தீர்கள் என்றால் மிக்க உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  68. இந்த வாரம்தான் வகுப்பறையை முதன்முதலில் கண்டேன்! வெளி நாட்டில் வசிக்கும் என்னை போன்றோர்க்கு சொந்த ஜாதகத்தை பற்றி தெரிந்துகொள்ள மிக பயனுள்ளதாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை!!

    வணக்கங்கள்.
    ராஜ்

    ReplyDelete
  69. ////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    the way of analysing and story telling is very interesting sir////

    எல்லாம் உங்களைப் போன்ற இளைஞர்களுக்காத்தான். இன்ட்டெரெஸ்ட்டாக இல்லை என்றால் நானே படிக்கமாட்டேன்:-)))))

    ReplyDelete
  70. //////Blogger VA P RAJAGOPAL said...
    /////Blogger VA P RAJAGOPAL said...
    Dear sir,
    Thanks for today lesson..sir one doubt...
    In my jathagam,magara lagnam, budhan in viruchaga with suriyan and chevvai.place astavarga 30. Indivual planet astavarga budhan 6, suriyan 5, chevvai 3. budhan retrograted.No budhan combust.my uncle(mother relation)passed away in my childhood.And also I have only Diploma holder, no more higher study.Whats wrong aspects with my budhan placing in jathagam? pls explain me sir.//////
    உங்கள் கேள்வி என்ன?
    பிறந்த தேதி, பிறந்த நேரம் & பிறந்த ஊர் மூன்றையும் எழுதுங்கள்
    Sorry for your confusion.
    My Date of Birth : 27,November,1978. Time of Birth 10:30 AM. Place of Birth : Thiruchirapalli, TamilNadu, India.
    My question: my point of view, Budhan good position. but why my uncle died in my childhood?And also what about my marriage life? Now marriage making facing some hurdles...
    Thanking you
    RG

    உங்கள் மாமா இறந்துபோனதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? அவருடைய காலம் முடிந்திருக்கும். இறைவனடி சேர்ந்துவிட்டார். அதற்கு நீங்கள் எப்படிக் காரணமாக முடியும்? ஒருவரின் மரணத்திற்கு அவருடைய ஜாதகம்தான் காரணம்
    வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

    உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் குரு இருக்கின்றார். நல்ல பெண் உங்கள் மனைவியாக வந்து சேருவார். கவலையை விடுங்கள். உங்களுக்குத் தற்சமயம் குரு திசையில் சுக்கிர புத்தி நடைபெறுகிறது. அது 4.9.2010 வரை உள்ளது. அதற்குள் திருமணம் நடந்துவிடும். திருமனத்திற்குப் பத்திரிக்கை அனுப்புங்கள்! வந்து வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  71. Blogger sury said.
    எல்லாக் கிரஹங்களும் சூரியனுக்கு மிக அருகில் வரும்பொழுது அஸ்தமனம் ஆகிவிடுகின்றன். இதை அஸ்தங்கம் என்கிறார்கள். ஆனால், புதனுக்கு அஸ்தங்க‌ தோஷம் கிடையாது என்கிறார்களே !
    மற்றும், புதன் வக்ரமாகவும் இருந்து அஸ்தங்கமாகவும் இருந்தால், அதுவும்
    நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, 1, 4, 5, 10 ல் இருந்து லக்னாதிபதிக்கு நண்பனாகவும்
    இருந்தால், எப்படி ?
    சுப்பு ரத்தினம்.
    ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூ.எஸ்.ஏ./////

    உங்கள் கேள்வி என்ன? Be specific in the question!
    பிறந்த தேதி, பிறந்த நேரம் & பிறந்த ஊர் மூன்றையும் எழுதுங்கள்

    ReplyDelete
  72. /////Blogger Ragu Sivanmalai said...
    பரல்களை பற்றிய தெளிவான பாடத்திற்கு மிக்க நன்றி அய்யா. சாலமன் பாப்பையா சொல்வதை போல சொல்வதென்றால் " அருமைய்யா அருமை"
    எனக்கு ஒரு சந்தேகம் :
    // சனி கர்மகாரகன் - அவர் ஒரு பரலுடன் இருப்பது நன்மை பயக்காது!
    இந்த கர்ம காரகன் கர்ம ஸ்தானத்தில் இருந்தால் காராகோ பாவ நாஸ்தி
    இந்த புத்திர காரகன் புத்திர ஸ்தானத்தில் இருந்தால் காராகோ பாவ நாஸ்தி
    என்றெல்லாம் சொல்கிறார்கள்.அது பற்றிய உண்மையன்ன விளக்கம் அளித்தீர்கள் என்றால் மிக்க உதவியாக இருக்கும்.//////

    காரகன் அதாவது அத்தாரிட்டி - தன்னுடைய ஸ்தானத்தில் இருந்தால் தனக்குத்தானே எதுவும் செய்துகொள்ள மாட்டார் என்று சொல்வார்கள். அதெல்லாம் சரியானதாகத் தெரியவில்லை! தன்னுடைய தாச புத்திகளில் அத்தனை கிரகங்களும் தனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிச்சயமாக நிறைவேற்றும்!

    ReplyDelete
  73. //////Blogger opensesame said...
    இந்த வாரம்தான் வகுப்பறையை முதன்முதலில் கண்டேன்! வெளி நாட்டில் வசிக்கும் என்னை போன்றோர்க்கு சொந்த ஜாதகத்தை பற்றி தெரிந்துகொள்ள மிக பயனுள்ளதாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை!!
    வணக்கங்கள்.
    ராஜ்////

    முதலில் பழைய பாடங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் படியுங்கள்! அப்போதுதான் இப்போது நடத்தப்படும் பாடங்கள் பிடிபடும். இல்லையென்றால் ஆட்டம் காட்டும்!

    ReplyDelete
  74. முழுப்பணமும் முக்கால் கிழவியும்
    முழுகி போன வாலிபமும் கடைசியில்
    அழுகி போன வாழைப்பழத்துக்கு சமம்
    எழுதி அசத்திய ஆசானுக்கு நன்றிகள்!

    படம்+பாடம்= பிரமாதம் :))

    ReplyDelete
  75. ///Blogger தமாம் பாலா (dammam bala) said...
    முழுப்பணமும் முக்கால் கிழவியும்
    முழுகி போன வாலிபமும் கடைசியில்
    அழுகி போன வாழைப்பழத்துக்கு சமம்
    எழுதி அசத்திய ஆசானுக்கு நன்றிகள்!
    படம்+பாடம்= பிரமாதம் :))/////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பாலா!

    ReplyDelete
  76. I have Mercury in 8th House in my Horoscope and Jupiter in 6th House. How will this influence my career.

    My DOB: 26th April 1963, 6PM
    Rohini Nakshatram, Rishaba Rasi.

    ReplyDelete
  77. உங்களுக்கு நாக சர்ப்ப தோஷம் மற்றும் யோகம் உள்ளது. மேலும் சுக்கிரன்,சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் உச்சமடைந்து உள்ளன .
    முப்பத்தி ஐந்து வயதுவரை கஷ்டத்தை கொடுத்த நாகசர்ப்ப தோஷம் முடிந்து இப்போது யோக காலமாகும்.
    முக்கியமான கிரகங்கள் ஆறு , எட்டு மற்றும் பத்தாம் இடத்தில் உள்ளதால் மூன்று கிரகங்கள் உச்சத்தினால் அடையக்கூடிய பலன்கள் சற்று குறைவாகவே அடைய முடியும் .
    இருந்தும் எந்த குறையும் உங்களுக்கு இருக்காது !

    சரியா வாத்தியாரையா ,

    அதிக பிரசங்கிதனத்துடன்,
    பாஸ்கர் .

    ReplyDelete
  78. நிச்சயம் முயற்சிக்கிறேன். ஏற்கனவே 1-50 பாடங்களை படித்து விட்டேன். கூர்ந்து படிக்க சற்று அதிக நேரம் தேவைப்படுகிறது.
    வணக்கங்கள்.
    ராஜ்

    ReplyDelete
  79. /////Blogger T.C.R said...
    I have Mercury in 8th House in my Horoscope and Jupiter in 6th House. How will this influence my career.
    My DOB: 26th April 1963, 6PM
    Rohini Nakshatram, Rishaba Rasi./////

    இரண்டுமே முக்கியமான கிரகங்கள். 6 & 8 மறைவிடங்கள். இரண்டும் அவற்றில் இருப்பதால், பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்!

    ReplyDelete
  80. //////Blogger பாஸ்கர் said...
    உங்களுக்கு நாக சர்ப்ப தோஷம் மற்றும் யோகம் உள்ளது. மேலும் சுக்கிரன்,சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் உச்சமடைந்து உள்ளன .
    முப்பத்தி ஐந்து வயதுவரை கஷ்டத்தை கொடுத்த நாகசர்ப்ப தோஷம் முடிந்து இப்போது யோக காலமாகும்.
    முக்கியமான கிரகங்கள் ஆறு , எட்டு மற்றும் பத்தாம் இடத்தில் உள்ளதால் மூன்று கிரகங்கள் உச்சத்தினால் அடையக்கூடிய பலன்கள் சற்று குறைவாகவே அடைய முடியும் .
    இருந்தும் எந்த குறையும் உங்களுக்கு இருக்காது !
    சரியா வாத்தியாரையா ,
    அதிக பிரசங்கிதனத்துடன்,
    பாஸ்கர் ..//////

    நீங்களே அதிகப் பிரசங்கித்தனம் என்று ஒப்புக்கொண்டு எழுதியுள்ளீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

    ReplyDelete
  81. ///////Blogger Raj kumar said...
    நிச்சயம் முயற்சிக்கிறேன். ஏற்கனவே 1-50 பாடங்களை படித்து விட்டேன். கூர்ந்து படிக்க சற்று அதிக நேரம் தேவைப்படுகிறது.
    வணக்கங்கள்.
    ராஜ்/////

    ஒன்றும் அவசரமில்லை. மெதுவாகப் படியுங்கள்!

    ReplyDelete
  82. Respected Sir,
    My lagnam is Taurus. I have 22 paral in second house. Mercury is in the seventh place with 25 paral. Jupiter has 24 paral in the 8th house.i have finished M.C.A & I am working in India.
    Mine:1-26,2-22,3-36,4-34,5-28,6-33,7-25,8-24,9-23,10-25,11-31,12-30
    My husband:1-35,2-21,3-28,4-28,5-25,6-30,7-27,8-26,9-27,10-27,11-29,12-34
    My husband has 21 paral in second house.His lagnam is Cancer. Sun&Venus is in the second house. Jupiter has 26 paral in the 8th house. He has finished M.E & He is working in UK.
    I read 21 to 25 average paral. I wish to know about my second house?
    May I know the second house karagan whether Jupiter or Mercury?
    Thanking you,
    With Regards,
    A.Vanathi.

    ReplyDelete
  83. /////Vanathi said...
    Respected Sir,

    A.Vanathi./////

    Karaka (authority) for the house of finance is Jupiter!

    ReplyDelete
  84. ஆசிரியருக்கு அன்பு வணக்கம் ,

    அய்யா ... ஒவ்வொரு வீட்டிலும் இவ்வளவு பரல்கள் இருந்தால் போதும் என்று நீங்கள் class81-90 இல் பதிவிட்டு இருந்தீர்கள் . அந்த பதிவில் களத்திர ஸ்தானத்தில் 19 பரல்கள் இருந்தால் போதும் என சொல்லியிருந்தீர்கள் . ஆனால் இங்கேயும் சரி , மர்லின் மன்றோ , ஸ்டீவ் ஜாப்ஸ் ஜாதகத்தை அலசும் போதும் சரி 7ம வீட்டில் 25 கு கீழே பரல்கள் இருந்தால் நன்றாக இருக்காது என்று சொல்லியுள்ளீர்கள் .. தயை கூர்ந்து தெளிவு படுத்துங்கள் அய்யா ...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com