மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.2.09

ஜோதிடப் பாடம் எண்.175

ஜோதிடப் பாடம் எண்.175

சென்ற மூன்று வகுப்புக்களாக வேண்டிய அளவு கதைகளைச் சொல்லிவிட்டேன்.
ஆகவே இன்று கதை எதுவும் இல்லை.
நேரடியாகப் பாடங்கள். பாடங்கள். பாடங்களே!
----------------------------------------------------------------------------------
கேது & குரு

குரு தன்னுணர்விற்கு உரிய கிரகம். கேது தன்னைப்பற்றி முழுமையாக அறிவதற்கு
உள்ள கிரகம். இரண்டும் சேரும்போது, ஜாதகன் மனித வாழ்வின் அமைப்பையும்,
மனித வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக உணர்வான். அதாவது அவனுக்கு
ஞானம் கிடைக்கும். இறுதியில் பிறப்பிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவான்.

சில ஜாதகர்களுக்கு இதே கூட்டணி (குரு வக்கிரம் பெற்று இருப்பின்) சமுதாயத்
திற்கு எதிரான சிந்தனையை ஜாதகனுக்குக் கொடுக்கும். போதைப் பொருட்
களுக்கு அடிமைப்படுத்தும், கீழானவர்களுடன், தீய சக்திகளுடனும் ஜாதகனுக்குப்
பழக்கத்தை உண்டு பண்ணும்.

1, 4, 5, 9 or 12 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி அமைவது நல்லது. எட்டாம்
வீட்டில் இக்கூட்டணி இருப்பது மட்டும் நன்மை இல்லை.

எட்டாம் இடத்துக் கூட்டணி ஜாதகனுக்கு பல நோய்களை உண்டாக்கக்கூடும்.

2,3,6,10 or 11 ஆகிய வீடுகளில் இக்கூட்டணி இருந்தாலும் ஓரளவிற்கு நன்மை
செய்யும். தீமை இல்லை! 7ல் இருப்பது சராசரி. நல்லதும் கெட்டதும் கலந்தது.

----------------------------------------------------------------------------------
கேது & சுக்கிரன்

venus & ketu have opposite gunas and on physical level,
ketu does hammer (curtail) venus's natural significations.

சுக்கிரன் கேது கூட்டணி 1ல் இருந்தால் ஜாதகனுக்கு இல்லற வாழ்வில்,
குறிப்பாக மனைவியால் பிரச்சனைகள் உண்டாகும்.

சுக்கிரன் கேது கூட்டணி 2ல் இருந்தால் ஜாதகனுக்கு இரு தாரங்கள்
அமையும். இரண்டு குடும்பங்கள் அமையும். இரண்டு குடும்பங்களிலும்
மாட்டிக்கொண்டு, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர்
இடம் வேண்டும்" என்று பாடுவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 3ல் இருந்தால் ஜாதகன் செய்யக்கூடாத செயல்களைச்
செய்துவிட்டு அடிக்கடி அவதிப்படுவான். இந்த அமைப்பிலுள்ள சிலர் போதைப்
பொருட்களுக்கு அடிமைப்பட நேரிடலாம்.
அது என்ன சிலர்? சரியாகச் சொல்லுங்கள்!
அதாவது இந்தக் கூட்டணி 3ல் இருக்க லக்கினாதிபதி வீக்காக இருப்பவர்கள்
மட்டும்தான் அந்தச் சிலர். போதுமா?

சுக்கிரன் கேது கூட்டணி 4ல் இருந்தால் ஜாதகனின் நடத்தைகள் சரியாக இருக்காது.
அவனுடைய நட்புகளும் சரியாக இருக்காது.

சுக்கிரன் கேது கூட்டணி 5ல் இருந்தால் ஜாதகன் காதல், கத்திரிக்காய் என்று
அலைந்து துன்பப்படுவான். திருப்தியான காதலி கிடைக்க மாட்டாள்.
எவளையாவது காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டு அவள்
கையால் நித்தமும் அடி வாங்குவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 6ல் இருந்தால் ஜாதகனுக்கு தன்னைவிட வயதில் மூத்த
பெண்கள் அல்லது விதவைகள் போன்றோருடன் முறையில்லாத உறவுகள் ஏற்படும்.
'அந்த' விஷயத்தில் ஜாதகன் அவதிப்படவே பிறந்தவன்.

சுக்கிரன் கேது கூட்டணி 7ல் இருந்தால் ஜாதகனுக்கு அவன் மனைவியுடன்
ஒத்துப்போகும் வாழ்க்கை அமையாது. விவகாரமான, வில்லங்கமான வாழ்க்கை
அமையும்.

சுக்கிரன் கேது கூட்டணி 8ல் இருந்தால் ஜாதகன் சொத்து, சுகங்களை இழந்து
அவதிப்பட நேரிடும். வண்டி வகனங்களைத் தொலைத்துவிட்டு நடந்துபோக நேரிடும்.
அவைகள் இருந்தாலும், நிம்மதி இருக்காது.

+++சுக்கிரன் கேது கூட்டணி 9ல் இருந்தால் ஜாதகனுக்குப் பல யோகங்கள்
உண்டாகும். ஜாதகனுக்கு அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும்.

+++சுக்கிரன் கேது கூட்டணி 10ல் இருந்தால் ஜாதகன் நிதி நிறுவனங்களை
நடத்திப் பெரும்பொருள் ஈட்டுவான்.

+++சுக்கிரன் கேது கூட்டணி 11ல் இருந்தால் ஜாதகன் மருத்துவத்துறையில்
அல்லது ரசாயனத்துறையில் ஈடுபட்டு பெரும் புகழ் பெறுவான்.

சுக்கிரன் கேது கூட்டணி 12ல் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை போர்க்களமாக
இருக்கும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் எதிரிகளாக
இருப்பார்கள்.

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

52 comments:

 1. ஜோதிடப்பாடம் 175 - ஆவது பதிவிற்கு வாழ்ததுக்கள் அய்யா...

  கேது - குரு கூட்டணி பற்றி ஆரம்பித்து கேது - சுக்ரன் கூட்டணிபற்றி விவரித்துள்ளீர்கள்.
  படத்தில் உள்ள அம்மணியின் கணவருக்கு 2-ல் சுக்ரனுடன் கேது உள்ளதால் உள்ள பலன் இந்த பதிவை படித்ததால் இப்போதுதான் தெரிந்திருக்கும் என எண்ணுகின்றேன். எப்படி கோபப்படுகிறார்கள் பாருங்கள்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 2. படம் சற்று வில்லங்கமாக உள்ளதே! படத்திற்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?

  ReplyDelete
 3. 175-வது பாடத்திற்கு வாழ்த்துக்கள்..

  வரவேற்கிறேன்.. கை தட்டுகிறேன்..

  வாத்தியாரின் மகிழ்ச்சியில் நானும் பங்கு பெறுகிறேன..

  எனக்கு கேதுவும், சுக்கிரமும் ஒன்றாக இல்லை என்பதால் கொஞ்சம் சந்தோஷம்..

  ReplyDelete
 4. //N.K.S.Anandhan. said...
  படம் சற்று வில்லங்கமாக உள்ளதே! படத்திற்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?//

  அதான.. நியாயமான கேள்வி..

  படத்துக்கும், பாடத்துக்கும் என்ன சம்பந்தம்..?

  ReplyDelete
 5. குரு கேது கூட்டணி பற்றி விரிவாக பாடம் இருக்கும் என்று எதிர்பார்த்து படிக்க ஆரம்பித்த எனக்கு இது பற்றி சுருக்கமாக முடித்துவிட்டு சுக்கிரன் கேது பற்றி இதே பாடத்தில் விரிவாக எழுதியது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது .

  ReplyDelete
 6. Dear Sir,
  Good start with ketu with guru. If Ketu is with exalted mars and venus, in 5th house? what the effect?

  Thank you for 175th blog.

  With Cheers
  Shankar

  ReplyDelete
 7. வணக்கம்
  குரு கேது பற்றிய பாடத்தை வெகு ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆனால் சுருக்கமாக முடித்து விட்டீர்கள். எனக்கு குரு கேது 4-ல் (மேஷத்தில்) உள்ளது . 4-ல் இக்கூட்டணி இருந்தால் என்ன பலன் என்று சற்று விரிவான விளக்கம் தேவை ப்ளீஸ் ஐயா.

  ReplyDelete
 8. Dear Sir,

  Lesson - Kethu - guru, Kethu - Sukkiran Lesson is nice.

  1) Aiyya Enakku Kethu 6 il -Separate,
  10il Suriyan(Atchi), Bhudhan(11ikkuriyavan) and Sukkiran(7ikkuriyavan) ---What about the result?
  No Graha Yudhham,No Retordation..please explain sir.

  2) What about my shani(3,4ikkuriyavan - 9th place(pusham -3 kalil) dasa ?

  Please answer this Question. Please dont refuse sir..

  Iam eagerly waiting for your reply sir...

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 9. 175ஆவது பாடத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. ஐயா வணக்கம்
  உங்கள் 175 வது பதிவுக்கு வாழ்த்துகள் உங்கள் பாடங்கள் தொடரவேண்டும்
  தினமும் நாங்கள் உங்கள் பாடங்களுக்காகவும்,ஞான கதைகளுக்காகவும்
  காத்துகொண்டிருக்கிறோம்.

  சிரமம் கருதாமல் என் ஜாதகத்தை கணித்து பலன் கூறியத்துக்கு மிக்க நன்றி
  ஆனால் ஐயா ஒரு சிறு சந்தேகம் என் ஜாதகத்தில் புதன் சுய வர்கதில் 4 பரல்கல்
  என்று கூறினீர்கள் ஆனால் 7 பரல்கல் என jagannatha horo software காட்டுகிறது.

  ஐயா சூரியன் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் அதுவும் ஒன்று
  ஆனால் அதை ஏன் "கிரகம்" என ஜோதிடம் சொல்கிறது ?

  ReplyDelete
 11. can anyone give geekay's email id or his contact number?

  i would like to meeet mr.madheeswaran from salem,as he met him,i would like to know his experience.....waiting for contact details

  thanks

  ReplyDelete
 12. நூற்றி எழுபத்தி ஐந்தாவது பதிவு பாடத்திற்கு வாழ்த்த வயதில்லை . வணங்குகின்றேன் !

  ReplyDelete
 13. //////Blogger வேலன். said...
  ஜோதிடப்பாடம் 175 - ஆவது பதிவிற்கு வாழ்ததுக்கள் அய்யா...
  கேது - குரு கூட்டணி பற்றி ஆரம்பித்து கேது - சுக்ரன் கூட்டணிபற்றி விவரித்துள்ளீர்கள்.
  படத்தில் உள்ள அம்மணியின் கணவருக்கு 2-ல் சுக்ரனுடன் கேது உள்ளதால் உள்ள பலன் இந்த பதிவை படித்ததால் இப்போதுதான் தெரிந்திருக்கும் என எண்ணுகின்றேன். எப்படி கோபப்படுகிறார்கள் பாருங்கள்.
  வாழ்க வளமுடன்,
  வேலன்./////

  கரெக்ட். நன்றி வேலன்!

  ReplyDelete
 14. /////Blogger krish said...
  Thanks for the lesson./////

  நன்று கிரீஷ்!

  ReplyDelete
 15. //////Blogger N.K.S.Anandhan. said...
  படம் சற்று வில்லங்கமாக உள்ளதே! படத்திற்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?/////

  பாடங்களுக்குத் தகுந்தாற்போல படங்களைப் போட வேண்டுமென்றால் நான் கலைஞர்கள், ஒப்பனையாளர்கள், ஸ்டுடியோ என்று சகல வசதிகளுடன் இருந்து படம் எடுத்துப் பதிவில் ஏற்றவேண்டும்:-)))

  சுக்கிரனும், கேதுவும் சேர்ந்த இளைஞனின் காதலி அல்லது தோழி அல்லது மனைவி, அவனுக்கு உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்புகளில் ஒன்றைப் பார்க்கும்போது என்ன முகபாவம் இருக்குமோ அதைப்போட்டிருக்கிறேன். Okayயா?

  ReplyDelete
 16. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  175-வது பாடத்திற்கு வாழ்த்துக்கள்..
  வரவேற்கிறேன்.. கை தட்டுகிறேன்..
  வாத்தியாரின் மகிழ்ச்சியில் நானும் பங்கு பெறுகிறேன்..
  எனக்கு கேதுவும், சுக்கிரமும் ஒன்றாக இல்லை என்பதால் கொஞ்சம் சந்தோஷம்..//////

  நன்றி உண்மைத் தமிழரே!

  ReplyDelete
 17. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  //N.K.S.Anandhan. said...
  படம் சற்று வில்லங்கமாக உள்ளதே! படத்திற்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?//
  அதான.. நியாயமான கேள்வி..
  படத்துக்கும், பாடத்துக்கும் என்ன சம்பந்தம்..?

  பாடங்களுக்குத் தகுந்தாற்போல படங்களைப் போட வேண்டுமென்றால் நான் கலைஞர்கள், ஒப்பனையாளர்கள், ஸ்டுடியோ என்று சகல வசதிகளுடன் இருந்து படம் எடுத்துப் பதிவில் ஏற்றவேண்டும்:-)))

  சுக்கிரனும், கேதுவும் சேர்ந்த இளைஞனின் காதலி அல்லது தோழி அல்லது மனைவி, அவனுக்கு உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்புகளில் ஒன்றைப் பார்க்கும்போது என்ன முகபாவம் இருக்குமோ அதைப்போட்டிருக்கிறேன். Okayயா தமிழரே?

  ReplyDelete
 18. ///////Blogger Ragu Sivanmalai said...
  குரு கேது கூட்டணி பற்றி விரிவாக பாடம் இருக்கும் என்று எதிர்பார்த்து படிக்க ஆரம்பித்த எனக்கு இது பற்றி சுருக்கமாக முடித்துவிட்டு சுக்கிரன் கேது பற்றி இதே பாடத்தில் விரிவாக எழுதியது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது /////.

  குரு, ராகுவைப்போல (சண்டாள யோகத்தைப்போல) குரு கேதுவின் சேர்க்கையும் பொதுவாக நன்மைதான் பயக்கும்
  அந்தந்த வீடுகளுக்கு உரிய பலன் இரட்டிக்கும். வீடுகளின் பலனை திருப்பித் திருப்பி எதற்கு எழுத வேண்டும் என்று எழுதவில்லை. குரு கேது லக்கினத்தில் இருந்தால் ஜாதகன் by birthதே அறிவாளியாக இருப்பான்.

  ReplyDelete
 19. //////Blogger hotcat said...
  Dear Sir,
  Good start with ketu with guru. If Ketu is with exalted mars and venus, in 5th house? what the effect?
  Thank you for 175th blog.
  With Cheers
  Shankar/////

  செவ்வாயும், சுக்கிரனும் எந்த பாவத்திற்கு உரியவர்கள் என்பதைவைத்தும், ஐந்தின் மேல் விழும் பார்வைகளை வைத்தும் பலன்கள் மாறுபடும் There is no short cut or easy way

  ReplyDelete
 20. ////Blogger Valaipookkal said...
  Hi
  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்
  நட்புடன்
  வலைபூக்கள் குழுவினர்/////

  பதிவு செய்து விட்டேன்!

  ReplyDelete
 21. //////Blogger Sakkubai said...
  வணக்கம்
  குரு கேது பற்றிய பாடத்தை வெகு ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆனால் சுருக்கமாக முடித்து விட்டீர்கள். எனக்கு குரு கேது 4-ல் (மேஷத்தில்) உள்ளது . 4-ல் இக்கூட்டணி இருந்தால் என்ன பலன் என்று சற்று விரிவான விளக்கம் தேவை ப்ளீஸ் ஐயா.//////

  4ல் இருக்கும் கேது குரு தீவிர இறை நம்பிக்கையை உண்டாக்கும். சாஸ்திரங்களில் ஆர்வத்தை உண்டாக்கும். அதில் நிபுணத்துவத்தை ஏற்படுத்தும். மேஷம் இருவருக்குமே உகந்த வீடுதான்

  ReplyDelete
 22. ///////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir,
  Lesson - Kethu - guru, Kethu - Sukkiran Lesson is nice.
  1) Aiyya Enakku Kethu 6 il -Separate,
  10il Suriyan(Atchi), Bhudhan(11ikkuriyavan) and Sukkiran(7ikkuriyavan) ---What about the result?
  No Graha Yudhham,No Retordation..please explain sir.
  2) What about my shani(3,4ikkuriyavan - 9th place(pusham -3 kalil) dasa ?
  Please answer this Question. Please dont refuse sir..
  Iam eagerly waiting for your reply sir...
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman///////

  Give your birth details along with one (only one) straight question

  ReplyDelete
 23. //////Blogger புதுகைத் தென்றல் said...
  175ஆவது பாடத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்//////

  நன்றி சகோதரி!

  ReplyDelete
 24. //////Blogger sundar said...
  ஐயா வணக்கம்
  உங்கள் 175 வது பதிவுக்கு வாழ்த்துகள் உங்கள் பாடங்கள் தொடரவேண்டும்
  தினமும் நாங்கள் உங்கள் பாடங்களுக்காகவும்,ஞான கதைகளுக்காகவும்
  காத்துகொண்டிருக்கிறோம்.
  சிரமம் கருதாமல் என் ஜாதகத்தை கணித்து பலன் கூறியத்துக்கு மிக்க நன்றி
  ஆனால் ஐயா ஒரு சிறு சந்தேகம் என் ஜாதகத்தில் புதன் சுய வர்கதில் 4 பரல்கல்
  என்று கூறினீர்கள் ஆனால் 7 பரல்கல் என jagannatha horo software காட்டுகிறது.
  ஐயா சூரியன் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் அதுவும் ஒன்று
  ஆனால் அதை ஏன் "கிரகம்" என ஜோதிடம் சொல்கிறது?//////

  பதிவின் தலைப்பில் உள்ள மென்பொருளைப் பயன் படுத்திப் பாருங்கள்

  ReplyDelete
 25. ///////Blogger Rathinavel.C said...
  can anyone give geekay's email id or his contact number?
  i would like to meeet mr.madheeswaran from salem,as he met him,i would like to know his experience.....waiting for contact details
  thanks/////

  ஜீக்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை இவருக்காகக் கொடுங்கள். சீக்கிரம். அர்ஜென்ட்!

  ReplyDelete
 26. //////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said..
  நூற்றி எழுபத்தி ஐந்தாவது பதிவு பாடத்திற்கு வாழ்த்த வயதில்லை.வணங்குகின்றேன்!/////

  நன்றி பாஸ்கர்!

  ReplyDelete
 27. ///////Blogger Rathinavel.C said...
  can anyone give geekay's email id or his contact number?
  i would like to meeet mr.madheeswaran from salem,as he met him,i would like to know his experience.....waiting for contact details
  thanks/////

  ஜீக்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை இவருக்காகக் கொடுங்கள். சீக்கிரம். அர்ஜென்ட்!//

  மு. மாதேஸ்வரன் அவர்களின் ஜோதிட ஆய்வு என்னை மிகவும் கவர்ந்தது. He will see only one or two clients per day. So be prepared with your questions.

  Good Luck.

  ReplyDelete
 28. 175 ஐ தொட்ட எங்கள் வாத்தியரை வாழ்த்துகிறோம்.

  உங்கள் பணி மேலும் தொடரட்டும்!

  ReplyDelete
 29. Dear Sir,

  May god shower you best!

  Congrats for achieving 175th lession.

  You will touch 1000 .. 2000 and so on!

  Best wishes from

  Sridhar
  (PS - In haste and that is why in English)

  ReplyDelete
 30. //////Blogger VA P RAJAGOPAL said...
  Thanks for today lesson./////

  நன்றி கோபால்

  ReplyDelete
 31. /////Blogger SP Sanjay said...
  ///////Blogger Rathinavel.C said...
  can anyone give geekay's email id or his contact number?
  i would like to meeet mr.madheeswaran from salem,as he met him,i would like to know his experience.....waiting for contact details
  thanks/////
  ஜீக்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை இவருக்காகக் கொடுங்கள். சீக்கிரம். அர்ஜென்ட்!//
  மு. மாதேஸ்வரன் அவர்களின் ஜோதிட ஆய்வு என்னை மிகவும் கவர்ந்தது. He will see only one or two clients per day. So be prepared with your questions.
  Good Luck./////

  மேலதிகத் தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 32. ///////Blogger SP Sanjay said...
  175 ஐ தொட்ட எங்கள் வாத்தியரை வாழ்த்துகிறோம்.
  உங்கள் பணி மேலும் தொடரட்டும்!//////

  நன்றி சஞ்சய்!

  ReplyDelete
 33. ///////Blogger Sridhar said...
  Dear Sir,
  May god shower you best!
  Congrats for achieving 175th lession.
  You will touch 1000 .. 2000 and so on!
  Best wishes from
  Sridhar
  (PS - In haste and that is why in English)//////

  நன்றி ஸ்ரீதர். கடைசி வரி மட்டும் புரியவில்லை! என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

  ReplyDelete
 34. Dear Sir

  Date of Birth: 20 -August -1976
  Time of Birth: 12:27: 56(P.M.-Afternoon)
  Place: Ambasamudram(Tirunelveli District)

  1) What about my shani(3,4ikkuriyavan - 9th place(pusham -3 kalil) dasa ? When Shani dasa -How about my career and Life(wife and Children)?

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 35. /////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Date of Birth: 20 -August -1976
  Time of Birth: 12:27: 56(P.M.-Afternoon)
  Place: Ambasamudram(Tirunelveli District)
  1) What about my shani(3,4ikkuriyavan - 9th place(pusham -3 kalil) dasa ? When Shani dasa -How about my career and Life(wife and Children)?
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  மிருகசீர்ஷம் நட்சத்திரம். லக்கினம் விருச்சிகம். 7ல் குருவும், சந்திரனும் அமர்ந்து லக்கினத்தை நேராகப் பார்க்கிறார்கள். குரு 5 பரல்கள் சந்திரன் 6 பரல்கள்.சந்திரன் பாக்கிய்த்திற்கு உரியவன். குரு பூர்வ புண்ணியம் & குடும்பத்திற்கு உரியவன். பாக்ய ஸ்தானத்தில் 30 பரல்கள். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. சனியும் தன் சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் இருக்கிறார்.

  கவலையைக் கடாசிவிட்டு வேறு வேலையைப் பாருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்

  ReplyDelete
 36. Dear Sir,

  Free E Book on Astrology

  http://chestofbooks.com/new-age/astrology/Brihat-Jataka/index.html

  Regards
  Dhamodharan

  ReplyDelete
 37. Lesson is nice.

  How to find anthiram in bukthi?


  By
  S.Senthil Murugan

  ReplyDelete
 38. /////Blogger viji said...
  தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.///////

  தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 39. Blogger மிஸ்டர் அரட்டை said...
  Dear Sir,
  Free E Book on Astrology
  http://chestofbooks.com/new-age/astrology/Brihat-Jataka/index.html
  Regards
  Dhamodharan//////

  தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 40. //////Blogger Senthil Murugan said...
  Lesson is nice.
  How to find anthiram in bukthi?
  By
  S.Senthil Murugan///////

  பஞ்சாங்கத்தில் இருக்கிறது!

  ReplyDelete
 41. Dear Sir

  Iam waiting for your lession continuation....Sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 42. //////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Iam waiting for your lession continuation....Sir.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  ஏப்ரல் மாதம் எனது கதைகளின் தொகுப்பு நூல்கள் இரண்டு வெளிவர இருக்கின்றன. அவற்றின் அச்சாக்க வேலைகளில் அடியேன் சற்று மும்மரமாக உள்ளதால், வேலைப்பளு அதிகம். தொடர்ந்து எழுத நேரமில்லை. எனினும் வாரம் இரண்டு வகுப்புக்கள் உண்டு! அடுத்த வகுப்பு 23.2.2009 திங்களன்று

  ReplyDelete
 43. மகா ‌சிவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் கிரக நிலை சிற‌ப்பு என்ன? அன்று பிறப்பது சிற‌ப்பானதா?

  ReplyDelete
 44. ///////Blogger citizen said...
  மகா ‌சிவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் கிரக நிலை சிற‌ப்பு என்ன? அன்று பிறப்பது சிற‌ப்பானதா?/////

  அப்படி ஒன்றும் தனிச் சிறப்பு இல்லை. எந்த நாளில் வேண்டும் என்றாலும் பிறக்கலாம். கிரக அமைப்புகள் நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். அமாவாசையன்று பிறப்பவர்களுக்குச் சந்திரன் சூரியனுடன் அஸ்தமணமாகிவிடும் அபாயம் உண்டு. ஆகவே அமாவாசைப் பிறப்புக்களுக்கு மனப் போராட்டம் மிகுந்த வாழ்க்கை அமைந்துவிடும்!

  ReplyDelete
 45. ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
  செம்மொழி மாநாட்டில் தாங்கள் உரை நிகழ்த்தி இருந்தால் கூட இவ்வளவு
  விரைவில் தங்கள் உரை எங்களுக்கு கிடைத்து இருக்குமா அய்யா?
  இணையத்திற்க்கு மீன்டும் நன்றி.
  அரசு.

  ReplyDelete
 46. My baby birth day was on 16/07/2009, eve 6.10 P.M on thursday, In her horoscope In 6th palce, sukaran is in a position of Atchi, Will it effect her. tell me the palan for it.

  ReplyDelete
 47. ////ARASU said...
  ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
  செம்மொழி மாநாட்டில் தாங்கள் உரை நிகழ்த்தி இருந்தால் கூட இவ்வளவு
  விரைவில் தங்கள் உரை எங்களுக்கு கிடைத்து இருக்குமா அய்யா?
  இணையத்திற்க்கு மீன்டும் நன்றி.
  அரசு.////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 48. /////gemini said...
  My baby birth day was on 16/07/2009, eve 6.10 P.M on thursday, In her horoscope In 6th palce, sukaran is in a position of Atchi, Will it effect her. tell me the palan for it. //////

  ஜோதிடப் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், தங்கள் சொந்த ஜாதகத்தில் ஏற்படுகின்ற சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதுபோல் வந்த மின்னஞ்சல்கள் அனைத்திற்கும் (100ற்கும் மேலாக) ஒரு தொடர் விளக்கத்தை முன்பு எழுதினேன். அது போல மீண்டும் ஒரு கேள்வி-பதில் sessionஐ வைக்க உள்ளேன். தற்சமயம் நேரம் இல்லை. இரண்டுமாதங்கள் பொறுத்திருங்கள்.
  அந்தச் சமயம் பதிவில் அறிவிப்பு வரும். அப்போது உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். அனைத்திற்கும் பதில் பதிவிலேயே (in the blog) கிடைக்கும்

  ReplyDelete
 49. sir Dr.B.V.Raman's books you have recommended are available for free downloading in the website "www.gigapedia.com".Those who want to download have to signup free by providing userid and password.This site has enourmous books mostly international(high standard technical books).

  ReplyDelete
 50. /////Lokes said...
  sir Dr.B.V.Raman's books you have recommended are available for free downloading in the website "www.gigapedia.com".Those who want to download have to sign up free by providing user id and password.This site has enormous books mostly international(high standard technical books). /////

  நல்லது. தகவலுக்கு நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com