மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.2.09

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்? நிறைவுப் பகுதி

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்? நிறைவுப் பகுதி

இதற்கு முன் உள்ள பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்து விட்டு
வரவும். அப்போதுதான் இந்தப் பதிவு பிடிபடும். அதாவது விளங்கும்!

ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும். அதை
அற்புதமாகச் செய்தார் சனீஷ்வரன் என்று சொன்னேன் இல்லையா?

தேனிக்குச் சென்று வட்டிக் கடைக்காக வீடு பார்க்கும்போதுதான், முத்தப்பன்
மூலம் அதை அவர் ஆரம்பித்துவைத்தார்.

தன் நண்பனிடம் முத்தப்பன் தெளிவாக இப்படிச் சொன்னான்.

"கொள்ளைக்குப் போனாலும் போ, கூட்டுக்குப் போகாதே என்று மாமா
சொல்வார். எந்தக் கூட்டுமே நிலைத்து நிற்காது பகையில் முடியும் என்று
சொல்வார். நாம் இருவரும் கடைசி வரையில் நண்பர்களாகவே இருப்போம்.
நமக்குள் கருத்து வேற்றுமை மற்றும் பகை வரக்கூடாது. அதோடு நான்
சிம்ம லக்கினம். தனியாகத்தான் தொழிலைச் செய்ய வேண்டும் என்றும்
என் மாமா சொல்வார். ஆகவே இருவரும் இதே ஊரிலேயே தொழிலைச்
செய்வோம். ஆனால் தனித்தனியாகச் செய்வோம். நட்பு மற்றும் பாதுகாப்பிற்காக
ஒரே தெருவில் இருந்து கொண்டு அதைச் செய்வோம்"

ஏகப்பன், அதற்கு உடனே சரி என்று சொல்லி விட்டான். அவனுடைய நல்ல
நேரம், பதினொன்றாம் இடத்துச் சனி அவனை அப்படிச் சொல்ல வைத்தது.

என்ன ஆச்சர்யம் பாருங்கள். ஒரே தெருவில் இரண்டு நல்ல வீடுகள்
வாடகைக்குக் கிடைத்தன. இரண்டு வீட்டு அமைப்புக்களுமே வீடு cum கடைக்குச்
சரியாக இருந்தன.

பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. ஆகவே சுருங்கச் சொல்கிறேன். ஒரு
நல்ல நாளில் கடையைத் துவங்கினார்கள். சொந்த ஊரிலிருந்து தத்தம் மனைவி
குழந்தைகள் மற்றும் அத்தியாவசியமான சாமான்களுடன் அங்கே வந்து குடியும்
குடித்தனமாகவும் இருக்கத் துவங்கினார்கள். எல்லாம் மகிழ்ச்சிகரமாக இருந்தது.

வெளி வேலைகள், மற்றும் வீட்டு வேலைகளுக்கு என்று ஊரிலிருந்து ஒரு
இளைஞனைப் பிடித்துக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொண்டான் முத்தப்பன்.
வீட்டிற்குப் பின்புறம் இருந்த அறையில் அவனைத் தங்க வைத்தான். அவன் பெயர்
மாரியப்பன். அவனும் இவன் சொல்கின்ற வேலைகளைச் சலிப்பின்றி செய்தான்

முதலிடு செய்த சொற்ப பணமும் 15 நாட்களிலேயே அடைபட்டது. வங்கியில்
இருந்து மேலும் பணத்தைக் கொண்டு வந்து இறக்கி முத்தப்பன் சுறுசுறுப்பாக
கடையை நடத்தினான். உள்ளூர் ஆசாரி ஒருவர் காலை நேரங்களில் வந்திருந்து
அடகுக்கு வரும் தங்கத்தை உரசிப் பார்த்து, அதன் நம்பகத்தன்மைக்குச் சாண்றிதழ்
வழங்கினார். அதாவது அப்ரைசர் வேலை செய்தார்.

ரோரிங் பிஸினெஸ் என்பார்களே, அப்படி இருவருடைய கடைகளும் பிரபலமாகி
நாளும் வருகிறவர்களின் எண்ணிக்கை, அதிகமாகிக் கொண்டே போனது.

முத்தப்பன் தன்னுடைய இரண்டு லட்ச ரூபாய் பணத்தையும் இறக்கிக் கடையை
நடத்தியதோடு, தன் தந்தையார் உவந்து வந்து கொடுத்த ஒரு லட்ச ரூபாயையும்
அடகில் அடைத்தான்.

அதற்குள் ஊரில் இவன் கடை விபரம் தெரிய, சில பெருசுகள், பத்தாயிரம்,
இருபதாயிரம் என்று இவன் கடைக்கு வைப்பு நிதியாகக் கொடுத்தன. வங்கியை விட
இவன் கடையில் அதிக வட்டி கிடைக்கும் எனும் ஆசையில் அப்படிக் கொடுத்தார்கள்
அந்த வகையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் ரொட்டேசனுக்குக் கிடைத்தது.

முத்தப்பன் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டான். அவனைச் சுற்றி 100 வயலின்களும்
பத்துப் புல்லாங்குழல்களும் எப்போதும் ஒலிக்கத் துவங்கிவிட்டன. பாரதிராஜா
படங்களில் வருவதுபோல அவன் மனதில் எப்போதும் பத்து தேவதைகள்
நடனமாடிக்கொண்டே இருந்தார்கள்.

இரண்டு வருடங்கள் சென்றதே தெரியவில்லை. முத்தப்பன் மகிழ்ச்சிக் கடலில்
தினமும் குளித்துவிட்டு, பணத்தால் தன்னை ஒப்பனை (மேக்கப்) செய்து கொண்டான்.

இதே போல அதே தெருவில் கடை வைத்த ஏகப்பனுக்கும் அசத்தலாக வட்டிக் கடை
நடந்து கொண்டிருந்தது. அவனிடமும் பணம் பல ஆயிரங்களில் புழங்க ஆரம்பித்தது.
இருவரும் மாலை நேரங்களில் ஒரு அரைமணி நேரம் சந்தித்து பேசுவார்கள்.
அவ்வளவுதான். அதற்குமேல் இருவருக்கும் நேரம் இருக்காது. கடை மற்றும் தத்தம்
குடும்பத்திற்கே மொத்த நேரத்தையும் செலவிடும்படியாகிவிட்டது.

இந்த இரண்டு ஆண்டுகளில், நான்கைந்து முறைகள், ஊருக்குச் சென்றவன்
இரண்டு முறைகள் தன் மாமாவைப் போய்ப் பார்த்துவிட்டும் வந்தான்.

மரியாதை நிமித்தம் சென்று பார்த்தவன், ஒவ்வொரு முறையும் ஒரு கூடைப்
பழங்களையும் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டும் வந்தான். அதோடு
சும்மா இருக்காமல் தன் ஜாதகத்தில் ஏதோ கோளாறு இருப்பதாகவும், இல்லை
என்றால் ஏன் இப்படி எதிர்பார்ப்பிற்கு எதிராகவே எல்லாம் நடக்கிறது என்று
சொல்லி விட்டும் வந்தான். மாமா பதில் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே
புன்னகை மட்டும் செய்வார்.

இரண்டு ஆண்டுகளும் ஐந்து மாத காலங்களும் பறந்து சென்று விட்டன. விரையச்
சனி முடிவதற்கு இன்னும் முப்பது நாட்களே பாக்கி இருந்தன.

அந்த நேரத்தில்தான் அது நடந்தது.

முத்தப்பனின் அன்புத் தாயாருக்கு வீட்டில் இடறி விழுந்ததால் மண்டையில் அடிபட்டு
விட்டது. மிகவும் சீரியாக பேச்சு மூச்சு இன்றி இருப்பதாகத் தகவல் வர, முத்தப்பன்
தன் மனைவி, குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஊருக்குச் சென்றான்.

உள்ளூர் மருத்துவர் கையை விரித்துவிட்டார். திருச்சியில் ஒரு பெரிய மருத்துவ
மனையின் பெயரைச் சொல்லி அங்கே சென்று சிகிச்சையளியுங்கள் என்று சொல்லி
விட்டார். முத்தப்பன் மேலும் நான்கு தினங்கள் தாயாருடன் தங்கும்படி ஆகிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------

ஐந்தாம் நாள் காலை தந்தி ஒன்று வந்தது. ஏகப்பன் அனுப்பியிருந்தான். அதில்
இருந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

அப்போதெல்லாம் தொலைபேசி வசதி இல்லாததால் செய்திகள் எல்லாம் தந்தி
மூலமாகத்தான் வரும்

தந்தியில் இருந்த செய்தி இதுதான்.

"உன் கடை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. உடனே புறப்பட்டு வா"
-------------------------------------------------------------------------------------------------------------
முத்தப்பன் அலறியடித்துக் கொண்டு போனான்.

எல்லாம் முடிந்து போய்விட்டிருந்தது.

அவன் வீட்டிலிருந்த பெட்டகம் உடைக்கப்பெற்று, உள்ளேயிருந்த தங்கம் மற்றும்
ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப் பெற்றிருந்தது.

தங்கத்தின் விலை அப்போது பவுன் அறுபது ரூபாய். அடகில் வந்து பெட்டகத்தில்
வைக்கப்பட்டிருந்த தங்கத்தின் மதிப்பு பத்து லட்ச ருபாய். எத்தனை பவுன் தங்கம்
கொள்ளை போயிருக்கும் என்று நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்
உத்தேசமாக மொத்தம் 133 கிலோ தங்கம். அத்துடன் ரொக்கம் ரூபாய் எழுபதாயிரம்

முத்தப்பன் நொடிந்துபோய் தரையில் உட்கார்ந்து அழுக ஆரம்பித்துவிட்டான்.
அவனைச் சமாதானப் படுத்துவது பெரும் பாடாகிவிட்டது.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அவர்கள் வந்து விசாரணையைத்
துவக்கினார்கள்.

வீட்டில் பாதுகாப்பிற்காக வைக்கப்பெற்றிருந்த முத்தப்பனின் வேலைக்காரன்
மாரியப்பனைக் காணவில்லையாதலால், அவனை முதல் குற்றவாளியாக்கி
விசாரனை துவங்கியது.

முத்தப்பனின் வீட்டிற்கு எதிரில் டீக்கடை வைத்திருந்த இரண்டு கேரள இளைஞர்
களையும் காணவில்லையாதலால், அவர்களையும் இணைத்துத் தேடும் படலம்
துவங்கியது.

மொத்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றவர்கள்
அவர்கள்தான் என்று உறுதியாயிற்று.

ஆட்டை போட்டவர்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பார்களா என்ன?

அவர்கள், தேனியில் இருந்து மூணாறு வழியாகக் கேரளாவிற்குத் தப்பிப்
போயிருந்தார்கள். கடைசி வரை பிடிபடவேயில்லை!
---------------------------------------------------------------------------------------------------------
அதற்குள் இங்கே கலவரமாகியிருந்தது. நகைகளை அடகு வைத்திருந்த
மக்கள் வந்து சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அத்தனை பேரும் ஏழை, எளிய
ஜனங்கள். அடகுப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருகிறோம். எங்கள்
நகைகளைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அல்லது நகையின்
அளவிற்கு மிச்சப் பணத்தைக் கொடுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்
சிலர் அடிக்க வந்து விட்டார்கள்.

கடைசியில் கட்டைப் பஞ்சாயத்து வைத்து, அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட
சதவிகிதத்தில் ஈட்டுப் பணம் கொடுக்கப்பெற்றது. அதைக் கொடுப்பதற்கு
முத்தப்பனின் பங்கில் திருவாரூரில் இருந்த நிலங்களைக் காசாக்கிக்கி கொடுக்கும்
படியாகிவிட்டது.

அதையெல்லாம் செய்து முடிக்க ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. மரண
அவஸ்தை வேறு!

மொத்தத்தையும் ஒரு வரியில் சொன்னால், விரையச் சனி முத்தப்பனைக்
கட்டிய வேட்டி சட்டையுடன், தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.
--------------------------------------------------------------------------------
இதைக் கேள்விப்பட்ட முத்தப்பனின் மாமா வேதனையுடன் சொன்னார்:

முதல் மாடியில் இருந்து விழுக வேண்டிய முத்தப்பனை, சனி பத்தாவது
மாடிவரை கூட்டிச்சென்று அங்கிருந்து தள்ளி விட்டிருக்கிறான்!

(முற்றும்)

வாழ்க வளமுடன்!

63 comments:

  1. அய்யா,

    நல்ல பாடம் தான் அந்த முத்தப்பனுக்கு! மாமாவை நம்பாமல் தன் மனதை நம்பியிதால் விரையசனி அவரை விரைந்து, நம்பியார் ஸ்டைலில் மலை உச்சிக்கு அழைத்து சென்று பாதாளத்தில் தள்ளியது!

    விதி தானே அவனை அங்கே அப்படி செய்ய சொல்லியது!

    சனி கொடுக்க யார் கெடுப்பார்? தன் மாமா மட்டும் விதி விலக்கா?

    ஆற்புதமான கதை!

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  2. நடக்கும் என்று சொன்னது
    நடந்தே விட்டது!

    :(

    ReplyDelete
  3. ஐய்யா வணக்கம்

    இந்த கதை ஏழரை சணியின் பயத்தை இன்னும் பலமடங்கு அதிகமாகிவிட்டது
    ஏழரை சனி வந்தால் எதுவுமே செய்ய கூடாத ?இல்லை புது முயற்சிகளில் அதாவது
    பழக்கமிலாத தொழில்களில் முயற்சிகளில் இறங்க கூடாத ?
    ஆனால் சனி 12 வந்து 7 1/2 சனி அரமிகும் முன்பு 11 ல் நின்று நல்லது செய்கிறார்
    அப்போது CHARGE ஏற்றிவிடுகிறார்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐய்யா

    ஏழரை சனி முத்தப்பனை இப்படித்தான் வாழ்கயில் மேலே
    அழைத்து சென்றிருக்கும் "வாராய் ............நீ வாராய் ..............போகுமிடம்
    வெகு தூரமில்லை நீ வாராய்.............................. : -)

    ReplyDelete
  5. /////////Blogger Sridhar said...
    அய்யா,
    நல்ல பாடம் தான் அந்த முத்தப்பனுக்கு! மாமாவை நம்பாமல் தன் மனதை நம்பியிதால் விரையசனி அவரை விரைந்து, நம்பியார் ஸ்டைலில் மலை உச்சிக்கு அழைத்து சென்று பாதாளத்தில் தள்ளியது!
    விதி தானே அவனை அங்கே அப்படி செய்ய சொல்லியது!
    சனி கொடுக்க யார் கெடுப்பார்? தன் மாமா மட்டும் விதி விலக்கா?
    ஆற்புதமான கதை!
    நன்றி,
    ஸ்ரீதர்///////////

    நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  6. "இந்தக் கதையில் வரும் மாமா மிகவும் நல்லவர். கடைசியில் தெரிந்து கொள்வீர்கள்!" என்று சென்ற பகுதியில் சொல்லி இருந்தீர்கள்!

    இந்த பகுதி நிறைவுப் பகுதி என்றும் சொல்லி இருக்கிறீர்கள்!

    இந்த மாமா ரொம்ப நல்லவர் என்று எப்படி தெரிந்து கொள்வது? விளங்கவில்லையே ஐயா!

    ReplyDelete
  7. //////Blogger Namakkal Shibi said...
    நடக்கும் என்று சொன்னது
    நடந்தே விட்டது! :(//////

    ஆமாம், சிபியாரே! இது நடந்த கதை! என் தந்தையார் பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியது. அதை எனது நடையில் விவரித்து எழுதியிருக்கிறேன். முடிவை எழுதும் போது எனக்கும் வருத்தம்தான் - அந்த முததப்பனின் அன்றைய நிலையை
    நினைத்து!

    ReplyDelete
  8. /////Blogger sundar said...
    ஐய்யா வணக்கம்
    இந்த கதை ஏழரை சணியின் பயத்தை இன்னும் பலமடங்கு அதிகமாகிவிட்டது
    ஏழரை சனி வந்தால் எதுவுமே செய்ய கூடாத ?இல்லை புது முயற்சிகளில் அதாவது
    பழக்கமிலாத தொழில்களில் முயற்சிகளில் இறங்க கூடாதா ?
    ஆனால் சனி 12 வந்து 7 1/2 சனி ஆரம்பிக்கும் முன்பு 11 ல் நின்று நல்லது செய்கிறார்
    அப்போது CHARGE ஏற்றிவிடுகிறார்.////

    எதற்கு பயம்? பயமும் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம். அதுதான் இந்தக் கதையில் நான் சொல்ல வந்தது!
    எதுவுமே செய்யாமல் எப்படி இருக்க முடியும்? மாமா வேலைக்குப்போ என்று சொன்னாரே! அதை முத்தப்பன் ஏன் கேட்கவில்லை? விரையச்சனியில் புதுத் தொழிலையோ அல்லது வியாபாரத்தையோ செய்யக்கூடாது. அதே போல திருமணமும் செய்து கொள்ளக்கூடாது. திருமணம் செய்ய இருப்பவர்கள் விரையச் சனிக் காலம் நடைபெறுகிறதா என்று பார்த்து, அது நடந்து கொண்டிருந்தால், திருமனத்தை ஒத்தி வைத்து, அக்காலம் முடிந்த பிறகே செய்து கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  9. மன்னிக்கவும்! புரிதலில் சிறு குழப்பம் ஏற்பட்டதென எண்ணுகிறேன்!

    மாமா என்று குறிப்பிட்டதை ஈஸ்வர பட்டம் பெற்ற மாமாவைச் சொல்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன்!

    ReplyDelete
  10. விதி வலியது என்று இதை தான் கூறுவார்களோ? பணம் போனால் போகிறது முத்தப்பன் விபரீதமாக எதையும் செய்யவில்லையே? அது வரையில் சனீஷ்வரனின் கருணையை பாராட்டலாம்.
    அடுத்து சனீஷ்வரனின் லீலகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  11. இங்கே, பெங்களூரில் சனி பகவானுக்கு மட்டும் என்று பல இடங்களில் கோவில் இருக்கிறது. மக்களும் சனி-மஹாத்மா என்று மிகுந்த பயத்துடன் வழிபடுகிறார்கள்....இப்போது புரிகிறது இவர்களது பயத்திற்கான காரணம். :-)

    ReplyDelete
  12. muthappan simma lagnammaa? I hope he is fine now :)

    ReplyDelete
  13. நல்ல பாடம்
    கும்ப லக்கின காரர்களுக்கு 7 1/2சனி நல்லதுதானே செய்யும் அய்யா ?

    ReplyDelete
  14. ஐயா, இதற்கெல்லாம் பரிகாரமே இல்லையா?

    ReplyDelete
  15. அற்புதமான கதை!

    7 1/2 சனியைபற்றிய இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்,
    இப்போது AR.ரகுமானுக்கு சனி தசை நடப்பதாக எங்கோ படித்தேன் மற்றும் அவரது சனி தசையில் தான நிறைய சாதித்தார் என்று. எந்த அமைப்பில் சனி தசை நல்ல பலன்களை அள்ளி வழங்குவார் ?

    ReplyDelete
  16. It is a story with this moral " Astrology is like weather forecast,we cannot change the weather but we can take precautions". Thanks for the lesson.

    ReplyDelete
  17. //அதே போல திருமணமும் செய்து கொள்ளக்கூடாது. திருமணம் செய்ய இருப்பவர்கள் விரையச் சனிக் காலம் நடைபெறுகிறதா என்று பார்த்து, அது நடந்து கொண்டிருந்தால், திருமனத்தை ஒத்தி வைத்து, அக்காலம் முடிந்த பிறகே செய்து கொள்ள வேண்டும்!//

    Marriage if it happens, what will be the effect??

    ReplyDelete
  18. சனி கிரகத்தைப் பற்றிய பாடத்தில் நள மகாராஜாவின் கதையையும் கொஞ்சம் நினைவுகூர்தல் பாடத்துக்குப் பொறுத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!

    திருநள்ளாறில் நளதீர்த்தம் என்று ஒரு குளம் இருக்கிறது! அதுபற்றிய கதையையும், அதில் நீராடி சனீஸ்வர பகவனை வழிபடுவதன் பலன்கள் பற்றியும் வாத்தியார் அவர்கள் பகர்வாராக!

    ReplyDelete
  19. சனிபகவானிடம் நாம் எவ்வளவு எச்சரிக்கை இருந்தாலும் அவர் தன் வேலையை காட்டாமல் விட மாட்டார் என்ற பாடத்தை கற்று கொண்டேன் !
    அன்புடன்,
    பாஸ்கர் .

    ReplyDelete
  20. ஐயா,

    சனியைப் பற்றி மேலும் தாங்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    விரையச்சனி இரண்டாம் சுற்றில்
    நல்ல பலன் தருமா?

    ReplyDelete
  21. Interesting story.Sani than kaariyathai neravetha Avatharam yedukirar (Yegappanaga)
    parungal...Athannalo Eswara pattam petrar. Fate can not be Late.

    ReplyDelete
  22. அற்புதமான கதை.முத்தப்பனுக்கு நல்லது நடக்கும் போது உண்மையில் ஜாதகத்தில்தான் கோளாறு என்று நினைத்தேன். ஆனால் இறுதியில் சனி அவனை பத்தாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு அவரை நிறுபித்துவிட்டார்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  23. //////Blogger sundar said...
    வணக்கம் ஐய்யா
    ஏழரை சனி முத்தப்பனை இப்படித்தான் வாழ்kகயில் மேலே
    அழைத்து சென்றிருக்கும் "வாராய் ............நீ வாராய் ..............போகுமிடம்
    வெகு தூரமில்லை நீ வாராய்.............................. : -)////

    பாவம் சாமி, நடக்கப்போவது தெரிந்திருந்தால் போயிருக்க மாட்டான் இல்லையா?

    ReplyDelete
  24. /////Blogger Namakkal Shibi said...
    "இந்தக் கதையில் வரும் மாமா மிகவும் நல்லவர். கடைசியில் தெரிந்து கொவீர்கள்!" என்று சென்ற பகுதியில் சொல்லி

    இருந்தீர்கள்! இந்த பகுதி நிறைவுப் பகுதி என்றும் சொல்லி இருக்கிறீர்கள்!
    இந்த மாமா ரொம்ப நல்லவர் என்று எப்படி தெரிந்து கொள்வது? விளங்கவில்லையே ஐயா!//////

    மாமா என்பது முத்தப்பனின் மாமா! ஊர் மக்களுக்கு இலவச ஜோதிட ஆலோசனை வழங்கியவர் நல்லவர்தானே சுவாமி?

    ReplyDelete
  25. /////Blogger Namakkal Shibi said...
    மன்னிக்கவும்! புரிதலில் சிறு குழப்பம் ஏற்பட்டதென எண்ணுகிறேன்!
    மாமா என்று குறிப்பிட்டதை ஈஸ்வர பட்டம் பெற்ற மாமாவைச் சொல்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன்!////

    அதனால் என்ன? பரவாயில்லை!

    ReplyDelete
  26. //////Blogger N.K.S.Anandhan. said...
    விதி வலியது என்று இதை தான் கூறுவார்களோ? பணம் போனால் போகிறது முத்தப்பன் விபரீதமாக எதையும்

    செய்யவில்லையே? அது வரையில் சனீஷ்வரனின் கருணையை பாராட்டலாம்.
    அடுத்து சனீஷ்வரனின் லீலகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.//////

    நன்றி ஆனந்தன்! பாடம் தொடரும்!

    ReplyDelete
  27. //////Blogger மதுரையம்பதி said...
    இங்கே, பெங்களூரில் சனி பகவானுக்கு மட்டும் என்று பல இடங்களில் கோவில் இருக்கிறது. மக்களும் சனி-மஹாத்மா

    என்று மிகுந்த பயத்துடன் வழிபடுகிறார்கள்....இப்போது புரிகிறது இவர்களது பயத்திற்கான காரணம். :-)//////

    உண்மைதான்! அனுபவித்தவர்களுக்கு மட்டுமே சனியின் உக்கிரம் தெரியும்!

    ReplyDelete
  28. /////Blogger Ragu Sivanmalai said...
    muthappan simma lagnammaa? I hope he is fine now :)/////

    இருக்கலாம்:-)))

    ReplyDelete
  29. //////Blogger dubai saravanan said...
    நல்ல பாடம்
    கும்ப லக்கின காரர்களுக்கு 7 1/2சனி நல்லதுதானே செய்யும் அய்யா ?//////

    மகரம், கும்பம் சனியின் சொந்த இடம் என்பதால் நல்லதை மட்டுமே செய்வார் என்று பொருளில்லை. யாராக இருந்தாலும் தன் கடமைப்படி பிழிந்து எடுத்து விடுவார்!

    ReplyDelete
  30. /////Blogger saravana karthikeyan said...
    ஐயா, இதற்கெல்லாம் பரிகாரமே இல்லையா?//////

    ஏன் இல்லை? இறை வழிபாடு பயனளிக்கும். அது ஒன்றுதான் பரிகாரம்!

    ReplyDelete
  31. /////Blogger Geekay said...
    அற்புதமான கதை!
    7 1/2 சனியைபற்றிய இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்,
    இப்போது AR.ரகுமானுக்கு சனி தசை நடப்பதாக எங்கோ படித்தேன் மற்றும் அவரது சனி தசையில் தான நிறைய

    சாதித்தார் என்று. எந்த அமைப்பில் சனி தசை நல்ல பலன்களை அள்ளி வழங்குவார் ?//////

    தொடர்ந்து வரும் கட்டுரைகளைப் படியுங்கள். தெரியவரும்!

    ReplyDelete
  32. //////Blogger krish said...
    It is a story with this moral " Astrology is like weather forecast,we cannot change the weather but we can take

    precautions". Thanks for the lesson.///////

    கரெக்ட். சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் க்ரீஷ்!

    ReplyDelete
  33. ///////Blogger Geekay said...
    //அதே போல திருமணமும் செய்து கொள்ளக்கூடாது. திருமணம் செய்ய இருப்பவர்கள் விரையச் சனிக் காலம்

    நடைபெறுகிறதா என்று பார்த்து, அது நடந்து கொண்டிருந்தால், திருமனத்தை ஒத்தி வைத்து, அக்காலம் முடிந்த பிறகே செய்து

    கொள்ள வேண்டும்!//
    Marriage if it happens, what will be the effect??/////

    தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை, பிரிவு என்று என்ன வேண்டுமென்றாலும் ஜாதகப்படி நடக்கும்!

    ReplyDelete
  34. /////Blogger Namakkal Shibi said...
    சனி கிரகத்தைப் பற்றிய பாடத்தில் நள மகாராஜாவின் கதையையும் கொஞ்சம் நினைவுகூர்தல் பாடத்துக்குப் பொறுத்தமாக

    இருக்கும் என்று எண்ணுகிறேன்!
    திருநள்ளாறில் நளதீர்த்தம் என்று ஒரு குளம் இருக்கிறது! அதுபற்றிய கதையையும், அதில் நீராடி சனீஸ்வர பகவனை

    வழிபடுவதன் பலன்கள் பற்றியும் வாத்தியார் அவர்கள் பகர்வாராக!//////

    ஆகா, செய்தால் போயிற்று!

    ReplyDelete
  35. //////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    சனிபகவானிடம் நாம் எவ்வளவு எச்சரிக்கை இருந்தாலும் அவர் தன் வேலையை காட்டாமல் விட மாட்டார் என்ற

    பாடத்தை கற்று கொண்டேன் !
    அன்புடன்,
    பாஸ்கர் .///////

    நல்லது பாஸ்கர்.நன்றி!

    ReplyDelete
  36. /////Blogger bhaskar said...
    ஐயா,
    சனியைப் பற்றி மேலும் தாங்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    விரையச்சனி இரண்டாம் சுற்றில்
    நல்ல பலன் தருமா?/////

    இரண்டாம் சுற்று பொங்கு சனி. சில சிரமங்களைக் கொடுப்பார். முடிவில் ஜாதகனை ஏற்றி விடுவார். He will elevate the native of the horoscope. முடிவு நன்றாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை வளமாகும்

    ReplyDelete
  37. //////Blogger VA P RAJAGOPAL said...
    Interesting story.Sani than kaariyathai neravetha Avatharam yedukirar (Yegappanaga)
    parungal...Athannalo Eswara pattam petrar. Fate can not be Late.//////

    ஆமாம் கோபால். நன்றி!

    ReplyDelete
  38. ///////Blogger வேலன். said...
    அற்புதமான கதை.முத்தப்பனுக்கு நல்லது நடக்கும் போது உண்மையில் ஜாதகத்தில்தான் கோளாறு என்று நினைத்தேன்.

    ஆனால் இறுதியில் சனி அவனை பத்தாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு அவரை நிறுபித்துவிட்டார்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  39. கூகுள் அபாய எச்சரிக்கை

    பதிவுஉலக நண்பர்களே... நாம் பதிவுகளை பதிவிட்டுவருகின்றோம். அதை தனியேசேமித்து வைத்துள்ளோம் என்றால் இல்லையென்ற பதில்தான் வரும்.
    நமக்கு கூகுள் தரும் இணைய வசதியைஎப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்-மறைக்கலாம்- வெளியிட பணம் கேட்கலாம்.சமீபத்தில் நமது பதிவைதொடர்பவர்களைகுறைத்தார்கள். இப்போது மறைத்துள்ளார்கள்.
    அதுபோல் நமது பதிவுகளை நீக்கிவிடலாம்.எனவே பதிவு நண்பர்கள் இதுவரை பதிவிட்டுள்ளஉங்கள் பதிவுகளை கணிணியில் தனியே
    ஒரு போல்ட்ர்போட்டு சேமித்துவைக்கவும்.
    இன்னும் ஒரு காப்பியை சிடியில் சேமித்துவைக்கவும். வசதியிருந்தால் பதிவுகளைதனியே பிரிண்ட் எடுத்து வைததுக்கொள்ளவும்.பின்னால் வருத்தப்பட்டு பலன்இல்லை.

    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    மேற்படி கட்டுரையை நான் எனது
    வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன்.
    முகவரி:-
    http://velang.blogspot.com/

    நமது வலைபதிவர்கள் அந்த எசசரிக்கையை படித்து பின்பற்ற
    வேண்டுகின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  40. I got married during viraya sani period, in earlier part of 2002. 2nd round pongu sani. So far never had any problem. The only problem I had was, I was posted to one thanni ulla kadu on the name of promotion or career progress or whatever you call it. (I am living in Malaysia and there is no thanni illatha kadu here). On the 6th year of 7½ sani, Sani dasha started or rather all the problem started. Udalai vittu uyir ondruthan (ahthodu manaviyum) pogavillai. Matra ellam ponathu. Now sani dasha sani buthi going towards end. Getting better now.

    ReplyDelete
  41. Iyya,

    I am going to the last phase of 7 1/2 sani period, oh God!! Really it was much stressful and I am feeling little better now.Its my 2nd round, but I faced 3 accidents, loss of job, alineating from friends and relatives.

    Sir, can you explain about ashtama sani? Is it like veriya sani or like 7 1/2 sani? Can one do marriage while undergoing ashtama sani period? What if sani goes through the 4th house from moon? what the effects.

    I would like you to write a lesson regarding one can do while going through 7 1/2 sani...like helping physically challenged people.

    -Shankar

    ReplyDelete
  42. Dear Sir,

    Nice lesson sir. I am expecting your lesson more sir.

    Sir telling: "Wait and See"..

    Thank you
    Regards
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  43. /////Blogger வேலன். said...
    கூகுள் அபாய எச்சரிக்கை
    பதிவுஉலக நண்பர்களே... நாம் பதிவுகளை பதிவிட்டுவருகின்றோம். அதை தனியேசேமித்து வைத்துள்ளோம் என்றால் இல்லையென்ற பதில்தான் வரும்.
    நமக்கு கூகுள் தரும் இணைய வசதியைஎப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்-மறைக்கலாம்- வெளியிட பணம் கேட்கலாம்.சமீபத்தில் நமது பதிவைதொடர்பவர்களைகுறைத்தார்கள். இப்போது மறைத்துள்ளார்கள்.
    அதுபோல் நமது பதிவுகளை நீக்கிவிடலாம்.எனவே பதிவு நண்பர்கள் இதுவரை பதிவிட்டுள்ளஉங்கள் பதிவுகளை கணிணியில் தனியே
    ஒரு போல்ட்ர்போட்டு சேமித்துவைக்கவும்.
    இன்னும் ஒரு காப்பியை சிடியில் சேமித்துவைக்கவும். வசதியிருந்தால் பதிவுகளைதனியே பிரிண்ட் எடுத்து வைததுக்கொள்ளவும்.பின்னால் வருத்தப்பட்டு பலன்இல்லை./////

    எதெதெற்குத்தான் கவலைப் படுவது? நடப்பது நடக்கட்டும். என் வசம் பிரதிகள் உள்ளன!
    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  44. /////Blogger ananth said...
    I got married during viraya sani period, in earlier part of 2002. 2nd round pongu sani. So far never had any problem. The only problem I had was, I was posted to one thanni ulla kadu on the name of promotion or career progress or whatever you call it. (I am living in Malaysia and there is no thanni illatha kadu here). On the 6th year of 7½ sani, Sani dasha started or rather all the problem started. Udalai vittu uyir ondruthan (ahthodu manaviyum) pogavillai. Matra ellam ponathu. Now sani dasha sani buthi going towards end. Getting better now./////

    பொங்கு சனி அதிகமான பிரச்சினையைத் தராது. அதாவது முதல் சுற்றுச் சனி அளவிற்கு இராது!

    ReplyDelete
  45. ////Blogger hotcat said...
    Iyya,
    I am going to the last phase of 7 1/2 sani period, oh God!! Really it was much stressful and I am feeling little better now.Its my 2nd round, but I faced 3 accidents, loss of job, alineating from friends and relatives.
    Sir, can you explain about ashtama sani? Is it like veriya sani or like 7 1/2 sani? Can one do marriage while undergoing ashtama sani period? What if sani goes through the 4th house from moon? what the effects.
    I would like you to write a lesson regarding one can do while going through 7 1/2 sani...like helping physically challenged people.
    -Shankar/////

    எழுதுகிறேன் சங்கர்!

    ReplyDelete
  46. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir,
    Nice lesson sir. I am expecting your lesson more sir.
    Sir telling: "Wait and See"..
    Thank you
    Regards
    Arulkumar Rajaraman/////

    கேள்வியையும் கேட்டு, பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  47. Vanakkam Ayya,
    Ungalin Kadhai Arumai. Melum thaangal Ezhathu ulagil Valara Iraivanidum vendugirom. Intha Muthappan enbavar Yaar ???.

    ReplyDelete
  48. very interesting lesson sir. so the second round (7.5yrs) of shani would generally be better than the first round ? if the first 2.5 yrs is called viraya shani what about the next 5 ? in the first round i escaped my viraya shani period becoz i was born after it got over.

    also sir, i request you to start a frequently asked questions(faq) folder for users doubts regarding astrological sayings n formula. thanx.

    ReplyDelete
  49. it is said that if you got planets in four corners of your chart it is good is it true. and also if you got malefic planets in 1 4 7 10 you are doomed n end up in prison .

    ReplyDelete
  50. ////////Blogger amudkrishnan said...
    Vanakkam Ayya,
    Ungalin Kadhai Arumai. Melum thaangal Ezhathu ulagil Valara Iraivanidum vendugirom. Intha Muthappan enbavar Yaar ???./////

    இந்தக்கதை உண்மையில் நடந்த கதை. என் தந்தையார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை சொன்ன கதை. சிறு சம்பவமாக இதைச் சொன்னார். மனதில் பதிந்து விட்டது. அதை ஊதிப் பெரிதாக்கி என் மொழியில் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். நாயகனின் பெயர் (முத்தப்பன்), ஊர் (தேனி), எல்லாம் நானாகச் சூட்டியவை.கதை என்றால் முழு வடிவம் வேண்டாமா?

    ReplyDelete
  51. Blogger mike said...
    very interesting lesson sir. so the second round (7.5yrs) of shani would generally be better than the first round ? //////

    ஆமாம்! முதல் சுற்று மங்கு சனி, இரண்டாம் சுற்று பொங்கு சனி!
    -------------------------------------------------------------------------------------
    /////if the first 2.5 yrs is called viraya shani what about the next 5 ?/////

    முதல் 2.5 ஆண்டு = விரையச்சனி
    இரண்ண்டவது 2.5 ஆண்டு = ஜன்மச் சனி
    மூன்றாவது 2.5 ஆண்டு = கழிவுச் சனி!

    இதன் பலன்கள் தொடர்ந்து வரும் பாடத்தில் வரும். பொறுத்திருந்து படிக்கவும்

    ReplyDelete
  52. Blogger mike said...
    it is said that if you got planets in four corners of your chart it is good is it true. //////

    அதற்கு கோட்டை கட்டிய ஜாதகம் என்று பெயர். ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும்.
    ------------------------------------------------------------------
    and also if you got malefic planets in 1 4 7 10 you are doomed n end up in prison .///////

    ஒரு நாளாவது சிறைவாசம் அனுபவிக்கும்படி நேரிடும். அந்த வேலையைப் பத்தாம் இடத்தில் இருக்கும் சனியே தனித்துச் செய்வார்

    ReplyDelete
  53. Dear Sir,

    You are great, In web site i searched Many questions about Horoscope Sir, In above all my questions i got my answer throu your website.,,

    You are very useful to this world., i really proud please try to live above 100 years not for ours after ours.,

    ReplyDelete
  54. < Sir I born in 01.12.1980
    naan vidoo kata nirya kadan vangi vidoo katiten.., epa ennala kadan adaika mudiyavillai, vido virkalam endran kadantha 8 madhamaga muyachithum vidai virka mudiya villai, niraiya kadan tholaiyaga erukirathu., enaku please help sir., ethavathu vali erunthan sollavum., vido vitral oralavuku nimmathi anal vadakai vidoku thaan poga vendiya situation ullathu...

    please help me sir>

    ReplyDelete
  55. /////Blogger Senthil said...
    Dear Sir,
    You are great, In web site i searched Many questions about Horoscope Sir, In above all my questions i got my answer throu your website.,,
    You are very useful to this world., i really proud please try to live above 100 years not for ours after ours.,//////

    நூறு ஆண்டுகளா? வேண்டாம் சாமி. எனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்கள் வாழ்ந்தாலே போதும்!:-))))
    உங்கள் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  56. /////Blogger Senthil said...
    < Sir I born in 01.12.1980
    naan vidoo kata nirya kadan vangi vidoo katiten.., epa ennala kadan adaika mudiyavillai, vido virkalam endran kadantha 8 madhamaga muyachithum vidai virka mudiya villai, niraiya kadan tholaiyaga erukirathu., enaku please help sir., ethavathu vali erunthan sollavum., vido vitral oralavuku nimmathi anal vadakai vidoku thaan poga vendiya situation ullathu...
    please help me sir>/////

    யாருக்கு நோயும், கடனும் இல்லையோ அவன்தான் உண்மையிலேயே செல்வந்தன்
    வீட்டை விற்றுக் கடனை அடைத்து விடுங்கள்!
    வீட்டை விற்பதற்கு சுலபமான வழி: அதன் விலையை நீங்கள் நிர்ணயம் செய்யாதீர்கள்.
    சந்தையில் 4 பேர்களைக் கேளுங்கள். நிலவரம் தெரியவரும். அந்த விலைக்கு சம்மதம் தெரிவியுங்கள். வீடு உடனே விலை போய்விடும்
    நிம்மதியைவிட பெரிய சொத்து எதுவும் இல்லை!

    ReplyDelete
  57. சிறப்பான நடையில் அருமையாய் எழுதி இருக்கிறார்கள் அய்யா

    ReplyDelete
  58. /////Blogger chaks said...
    சிறப்பான நடையில் அருமையாய் எழுதி இருக்கிறார்கள் அய்யா/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  59. Sir, if you dont mind, i shall tell what I felt after reading the three parts of the story. Muthappan is none other than your own nephew.

    ReplyDelete
  60. ////Blogger Arul Murugan. S said...
    Sir, if you dont mind, i shall tell what I felt after reading the three parts of the story. Muthappan is none other than your own nephew./////

    தவறு. இந்தக் கதை என் தந்தையார் சொன்ன சம்பவத்தை வைத்து எழுதப்பெற்றது. சிறு சம்பவத்தைக் கதாசிரியார்களுக்கே உரிய கற்பனைகளுடன் ஊதிப் பெரிதாக்கி உள்ளேன். அவ்வளவுதான்!

    ReplyDelete
  61. ஐயா வணக்கம் .
    விரய சனி முத்தப்பனின் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பதை பார்க்கும் போது சில சோதிடம் சொல்பவர்கள் சுப விரயம் செய்யுங்கள் என்பது நமது திருப்தி க்காக தான் என தெரிந்துகொண்டேன் .
    எல்லாம் அவன் செயல்
    அவனின்றி ஓர் அணுவும் அசையாது .
    அடித்த மாதம் வரும் சனிபெயர்ச்சிக்கு என் மனதை திட படித்திக்கொண்டேன் .
    நன்றி ஐயா .
    கண்ணன் .

    ReplyDelete
  62. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  63. The story is clear, but my confusion lies here: although Sani Dasa may not have brought Muthappan prosperity, it provided him with valuable business experience. Rather than staying idle, he gained exposure to a business model and learned about potential issues one might face in business. If he can ignore the noise of people mocking or discussing his failure, I feel he is in a better position than he was seven years ago. If he doesn’t get up, learn from his mistakes, or pursue other jobs or ventures, wouldn’t that imply that any upcoming Dasa would be the actual "villain"?

    I'm curious to know why this perspective might be incorrect if I’ve misunderstood.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com