மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.2.09

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!

"அட கெரகம் புடிச்சவனே!"

யாரையாவது திட்டும்போது இப்படித்தான் திட்டுவோம்: இப்படியும் திட்டுவோம்

"அவனுக்கு நாக்கில சனிடா. அவன் சொன்னான்னா, அந்தக் காரியம் ஊத்திக்கும்டா"

"சனிப்பயல்டா அவன், குறுக்க வந்தான்னா, போற காரியம் உருப்படாதுடா"

அதே போல வீடுகளில் தாய்மார்கள், கோபத்தில் தங்கள் குழந்தைகளை
இப்படித்தான் திட்டுவார்கள்

"சனியனே, வந்து கொட்டிக்கிட்டுப் போய் அப்புறமா விளையாடு.
நான் இட்லிக் கடையை எப்ப முடிக்கிறதாம்?"

கிராமங்களில் பெண்கள் சர்வசாதரணமாக இப்படிச் சொல்வார்கள்

"கெரகம், வந்து வாய்ச்சுது பாருடி எனக்குப் புருஷன்கிற பேர்ல ஒரு சனீஷ்வரன்.
படுத்தி எடுக்குதுடி. எதுக்குமே அதுக்கு நேரம் காலம் கிடையாதுடி. கண்டதே
காட்சி, கொண்டதே கோலம்ன்னு திரியுதுடி. முச்சூடும் அக்கறையே இல்லாத
ஜென்மம். போன ஜென்மத்தில எருமை மாடா இருந்திச்சோ என்னமோ. எங்க
அப்பாரு எனக்கு அதைப் புடிச்சுக் கட்டிவச்சுட்டாருடி"

ஆகா, கை பிடித்தவனைப்பற்றி என்னவொரு அசத்தலான விளக்கம்!

சில ஆசாமிகள் அப்படித்தான் இருப்பார்கள். மனைவிமார்கள் அலுத்துக்
கொள்வதில் தவறில்லை!

பார்த்தீர்களா?

இப்படி எல்லோர் வாயிலும் சம்பந்தமில்லாமல் திட்டு வாங்குகிறார் சனீஷ்வரன்.

யாரும் இனிமேல் அவரைத் திட்டாதீர்கள். அவரைப் போலக் கொடுப்பார்
இல்லை (கெடுப்பாரும் இல்லைதான்) அவர் தன்னிச்சையாக எதையும் செய்வதில்லை.
ஜாதகனின் முன்கர்மவினைகளுக்கு ஏற்றபடி, அதற்குரிய பலன்களையே அவர்
கொடுப்பார்.
-----------------------------------------------------------------------------------------
யோசித்துப் பாருங்கள். பிறப்பில் ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் ?

எல்லாக் குழந்தைகளுமே ஒரு தாயின் வயிற்றில் 280 நாட்கள் இருக்கின்றன
ஆனால் ஒன்று செல்வந்தர் வீட்டிலும் மற்றொன்று ஒரு பரம ஏழை வீட்டிலும்
பிறப்பதேன்?

ஒன்று அறிவாளியாகவும்,மற்றொன்று அடி முட்டாளாகவும் பிறப்பதேன்?

சில குழந்தைகள் மட்டும் உடல் ஊனத்தோடு பிறப்பதேன்?

ஒன்று ஏஸி. முத்தையா செட்டியார் வீட்டிலும், ஒன்று ஓசி முத்தையா வீட்டிலும்
பிறப்பதேன்?

பிறப்பில் ஏன் இத்தனை பேதமைகள்?

எல்லாம் கர்மவினை. முற்பிறவியில் செய்த பாவங்கள்.

சிலர் தாங்கள் செய்யும் பாவங்களுக்கு இப்பிறவியிலேயே தண்டனைகளை
அனுபவிக்க நேரிடும். சிலருக்குப் பாவங்கள் carry forward ஆகும்.

கவியரசர் ஒருமுறை இப்படிச் சொன்னார்:

"தட்டோடு கோவில் வாசல்களில் உட்கார்ந்து இன்று பிச்சையெடுப்பவர்கள் எல்லாம்
சென்ற பிறவியில் இறைவன் இல்லை என்று சொன்னவர்கள். முற்பிறவியில் தாயைப்
புறக்கணித்தவனுக்கு இந்தப் பிறவியில் தாய்ப்பாசம் மறுக்கப்பட்டுவிடும். தந்தையைப்
புறக்கணித்தவன் தந்தையாக முடியாது. வயதான மாமியாரைப் புறக்கணித்தவள்
மாமியாராக முடியாது. செல்வத்தைச் சீரழித்தவன் சீமான் வீட்டில் பிறக்கமுடியாது."

இதெல்லாம் இருவினைப் பயன்கள் எனும் கணக்கில் மனிதன் பிறக்கும்போது கூடவே
வரும். அது எப்படி pro gramme செய்யப்பட்டு வருகிறது என்பது மட்டும் யாருக்கும்
தெரியாது. எந்த சர்வரில் இருந்து செயல் படுத்தப்படுகிறது என்பதும் தெரியாது.
தெரிந்தால் மனிதன் சும்மா இருப்பானா?

பட்டினத்தடிகளும் அதை இப்படிச் சொன்னார்

"பற்றி தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும்"
------------------------------------------------------------------------------
வடமொழியில் சனி என்றால் மெதுவாக செயல் படுபவன் என்று பொருள்.

வானவெளியில் ஒரு சுற்றை முடிக்க அவர் சுமார் முப்பது ஆண்டு காலத்தைச் சனி
எடுத்துக் கொள்வதால் அப்படி சொல்லியிருக்கலாம்

தீயவர்களில், முதன்மையான தீயவன் என்று பெயர் பெற்றவர் சனீஷ்வரன்
(malefic amongst the malefics)

வில்லன்களில் Top rated villain என்று வைத்துக்கொள்ளுங்கள்

சனி தான் சென்றமரும் வீட்டை சேதப்படுத்தி விடுவார். அதே போல அவர்
பார்வையைப் பெறும் வீடு சேதத்திற்கு உள்ளாகும். அதே நிலைமைதான் அவருடன்
சேரும் கிரகத்திற்கும் ஏற்படும். அல்லது அவர் பார்வையைப் பெறும் கிரகத்திற்கும்
ஏற்படும்.

ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது. இந்த விதிகளில்
ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு.
Saturn destroys the house it occupies. The seventh place position is exempted
since Saturn receives directional strength.

ஜாதகத்தில் வலுவாக இருக்கும் சனி, அனுசரித்துச் செயலாற்றும் தன்மை, புகழ்,
பொறுமை, தலைமை ஏற்கும் சக்தி, அதிகாரம், நீண்ட ஆயுள், நிர்வாகத்திறமை,
உண்மையாக இருத்தல், விசுவாசம், நேர்மை, நியாயமாக இருத்தல், தவறு எது
சரி எது என்று உணர்ந்து செயல்படும் தன்மை ஆகியவற்றைச் ஜாதகனுக்குக்
கொடுப்பார்.

ஜாதகத்தில் வலுவில்லாமல் தீமை பயக்கும் நிலையில் இருக்கும் சனி
துன்பம், துயரம், தாமதம், தடைகள், ஏமாற்றங்கள், வம்பு, வழக்குகள்,வெறுப்பு,
கஷ்டங்கள் என்று வரிசையாக தொல்லைப் படுத்தும், அவதிப்படும் சூழலையே
ஜாதகனுக்குக் கொடுப்பார். ஜாதகன் நம்பிக்கையின்மையோடும், உணர்ச்சி
வசப்படும் நிலைமையோடும், ரகசியமாகவும் செயல்படும் நிலைமைக்கும்
தள்ளப்படுவான். இந்த categoryயில் (miseries, sorrows, delay, obstruction,
disappointment, disputes, dejection, difficulties)ஏதாவது விடுபட்டிருக்கிறதா?
விடுபட்டிருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
--------------------------------------------------------------------------------------------
சனிக்கு உரிய கிழமை சனிக்கிழமை. உலகில் அது எந்த நாடாக இருந்தாலும்
சனிக்கிழமைதான். (Saturday is for Saturn)

வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் அகிய மூன்றும் உலகிற்கு இந்தியர்கள்
அளித்த கொடை. இந்தியாவில் இருந்து வணிகத்திற்காக அக்காலத்தில் வந்து
சென்ற கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாக, அது உலகெங்கும் பரவியது

சனியின் ஆதிக்க திசை மேற்கு
சனிக்கு உரிய நிறம்: கறுப்பு
சனிக்கு உரிய நவரத்தினக் கல்: நீலக் கல் (blue sapphire)
சனிக்கு உரிய எண்: 8
--------------------------------------------------------------------------
சனிக்குச் சொந்த வீடுகள்: மகரம், கும்பம்
சனிக்கு நட்பு வீடுகள்: ரிஷபம், மிதுனம், கன்னி
சனிக்குச் சம வீடுகள்: தனுசு, மீனம்
சனிக்குப் பகை வீடுகள்; கடகம், சிம்மம், விருச்சிகம்
சனிக்கு உச்ச வீடு: துலாம்
சனிக்கு நீச வீடு: மேஷம்

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சனிக்கு 100%
வலிமை இருக்கும்.

சனியுடன் சூரியன் சேரக்கூடாது. அதுவும் ஜாதகனின் லக்கினத்தில்
சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில் ஒருவர் இருக்கக்கூடாது.
உடல் நோய்கள், உடல் உபாதைகள் உடல் ஊனங்கள் ஏற்படும்
அபாயம் உண்டு. அதோடு ஜாதகனுக்கும், அவனுடைய தந்தைக்கும்
சுமூகமான உறவு இருக்காது. இருவரும் எலியையும் பூனையையும்
போல ஒற்றுமையாக இருப்பார்கள்:-))))

சம வீட்டில் இருக்கும் சனிக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் சனிக்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் சனிக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த சனிக்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த சனிக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் Avery Company தராசை வைத்து
எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன்.
அதை மனதில் கொள்க!
-----------------------------------------------------------------------
The second biggest planet in the solar system,
Saturn is also one of the the most important planets.
700 earths can be fit into Saturn.

சுருக்கமாகச் சொன்னால்:
Saturn is the indicator of Sorrow and if he is in good position in the horoscope,
the native will be a Wise One freed from sorrow. If he is weak, the native will
be depressed and unable to come out of the sorrow.

(சனியைப்பற்றிய அலசல் தொடரும்)
---------------------------------------------------------------------
சனிதான் எனக்குப் பிடித்த கிரகம். என் ராசிநாதன் அவன்தான்
நான் மகரராசிக்காரன். மகர ராசிக்காரர்கள் எல்லாம் கடுமையான
உழைப்பாளிகள். என் உழைப்பு உங்களுத் தெரிந்திருக்கும்!:-))))

இன்று சனிக்கிழமை. ஆகவே சனீஷ்வரனைப் பற்றிய பாடத்தை இன்று வலை
ஏற்றுவோம் என்று உவந்து வலை ஏற்றியிருக்கிறேன்.

வரிசைப்படி இதைத் திங்கட்கிழமைதான் ஏற்றியிருக்க வேண்டும். சணீஷ்வரனின்
சனிக்கிழமைக்காக இரண்டு நாட்கள் முன்பாகவே வலையில் ஏற்றியிருக்கிறேன்.

இதைப் படித்துவிட்டு உடனே, அடுத்த பாடம் திங்கட்கிழமை வரும் என்று
யாரும் நினத்துக்கொள்ள வேண்டாம். அடியேன் திங்கள் & செவ்வாய்க்
கிழமைகளில் வெளியூர் செல்ல இருப்பதால், அடுத்த பாடம் 4.3.2009 புதன்கிழமை
அன்று பதிவிடப் பெறும்.

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

47 comments:

N.K.S.Anandhan. said...

வாத்தியாரின் அபிமான கிரகத்தின் பாடம் ஆரம்பித்தாகி விட்டது.சனீஷ்வரா நீ தான் காப்பற்ற வேண்டும்.

நாமக்கல் சிபி said...

பிரசெண்ட் சார்!

ananth said...

Enakku sani, suriyan onbatham idathil (rishaba rasi) sernthu irukirathu. In 3rd place is Guru. Enakkum en thanthaikum pirachai ethuvum illai. Irunthalum siru vayathilunthe relation vithil valarnthen (Granfather then later uncle). Mika-mika sila varudangale parents udan irunthirukkiren.

SP.VR. SUBBIAH said...

/////Blogger N.K.S.Anandhan. said...
வாத்தியாரின் அபிமான கிரகத்தின் பாடம் ஆரம்பித்தாகி விட்டது.சனீஷ்வரா நீ தான் காப்பற்ற வேண்டும்.//////

யாரை? வாத்தியாரையா? அல்லது அவரது வகுப்பறைக் கண்(ணின்)மணிகளையா?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
This comment has been removed by the author.
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இன்றைய பாடத்திற்கு நன்றி ,
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்

KC said...

அன்பின் அண்ணன்,

பத்தில் சனி வக்ரம் என்பது நல்ல நிலையா? (Is it good position in the horoscope or is it weak?)

நன்றி,
KC

N.K.S.Anandhan. said...

///யாரை? வாத்தியாரையா? அல்லது அவரது வகுப்பறைக் கண்(ணின்)மணிகளையா?///

வேறு யாரை வகுப்பறை கண்மணிகளைத்தான். உங்களுக்குத்தான் சனீஷ்வரன் பரிபூரண சுப கிரகமாச்சே(லக்கினாதிபதி).

KS said...

வணக்கம் ஆசானே

எனக்கு சனீஷ்வரன் 10 இல் ,அத்துடன் நீசம் வேறு ,சுய வர்க்கத்திலும் 2 பரல்கள், படுத்தி எடுக்கிறார் ,மீள முடியவில்லை.
என்செய்வேன்

நாமக்கல் சிபி said...

இந்த பதிவில் (எனக்கு வந்தது என்னால் சொல்ல முடியாததால்)உங்களுக்கு ஒரு கேள்வி வந்திருக்கு!

http://shibispadaippugal.blogspot.com/2009/02/1.html

நாமக்கல் சிபி said...

//உங்களுக்குத்தான் சனீஷ்வரன் பரிபூரண சுப கிரகமாச்சே(லக்கினாதிபதி).//

லக்னாதிபதி அல்ல!

ராசி நாதன்!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Shani lesson is started... Starting onwards very interesting.

Really you are a Hardworking person. Idhai Yaralum Marukkamudiyadhu. Ungalidam Ulla ellam unmayana ulaippu.

Oru Pakkam Marketing irundhalum marupakkam Elutthupaniyaye Asaramal Eludhikondirikireergal..."

"Valgha Unga Elutthu Pani
Valargha Ungal Pugal"

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

வேலன். said...

சனிக்கிழமை - சனியை பற்றி பாடம்.

வரவேற்கின்றோம். அவர் தயவால்தான் நாம் மனிதர்களைப்பற்றி
அறிந்துகொள்ள முடியும்(நமக்கு கஷ்டங்களை கொடுப்பார். அதன் மூலம் நமது கஷ்ட நேரத்தில் யார் நமக்கு உதவுபவர்கள் என நாம் அறிந்து கொள்ளலாம்)
வாழ்க வளமுடன்,
வேலன்.

sundar said...

வணக்கம் ஐய்யா

சனி பகவான் பார்வை பட்ட வீடுகளுக்கு தீமை செய்வார். ஆனால் தனது வீடுகலான மகரம் ,கும்பம் ஆகிய ராசிகளை
பார்ப்பத்தினால் அந்த வீடுகளுக்கு துன்பம் செய்வாரா இல்லை நன்மை செய்வார...

இராகவன் நைஜிரியா said...

நானும் மகரராசிதான். மேலும் எனக்கு லக்னத்திற்கு (மிதுன லக்னம்) 10 இடத்தில் சனி இருக்கின்றார். இப்போது சனிதசையில் சனி புக்தி நடக்கின்றது.

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்பது சரியாகத்தான் இருக்கின்றது. ஆனால் இதுவரை எனக்கு சனியால் எந்த கஷ்டமும் வந்ததில்லை.

என்னை ரொம்ப படுத்தியது, ராகு தசை, சூரிய புக்திதான்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger நாமக்கல் சிபி said...
பிரசெண்ட் சார்!/////

வருகைப் பதிவு போட்டாச்சு சார்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger ananth said...
Enakku sani, suriyan onbatham idathil (rishaba rasi) sernthu irukirathu. In 3rd place is Guru. Enakkum en thanthaikum pirachai ethuvum illai. Irunthalum siru vayathilunthe relation vithil valarnthen (Granfather then later uncle). Mika-mika sila varudangale parents udan irunthirukkiren./////

மூன்றாம் இடத்துக் குருவின் பார்வை ஒன்பதில் விழுவதால் அவர்களின் சேர்க்கையால் ஏற்படும் தீமைகள் குறையும்.
சிறுவயதில் பெற்றோர்கலைப் பிரிந்து இருந்திருக்கிறேன் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்களே! அது அந்த அமைப்பினால்தான்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
இன்றைய பாடத்திற்கு நன்றி ,
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்/////

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பாஸ்கர்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger KC said...
அன்பின் அண்ணன்,
பத்தில் சனி வக்ரம் என்பது நல்ல நிலையா? (Is it good position in the horoscope or is it weak?)
நன்றி,
KC//////

தீயகிரகங்கள் வக்கிரம் பெற்றிருந்தால் நல்லது. தீய பலன்கள் குறையும்

SP.VR. SUBBIAH said...

//////Blogger N.K.S.Anandhan. said...
///யாரை? வாத்தியாரையா? அல்லது அவரது வகுப்பறைக் கண்(ணின்)மணிகளையா?///
வேறு யாரை வகுப்பறை கண்மணிகளைத்தான். உங்களுக்குத்தான் சனீஷ்வரன் பரிபூரண சுப கிரகமாச்சே(லக்கினாதிபதி).//////

ராசிநாதன் அவர். என்னுடைய லக்கினம் சிம்மம். அதன் அதிபதி சூரியன்! என்ன வேடிக்கை பாருங்கள்
என்னுடைய லக்கின அதிபதியும், ராசி அதிபதியும் ஒருவருக்கொருவர் பகைவர்கள். இருவரையும் சமாளித்து நான் குப்பை கொட்ட வேண்டும்:-)))

SP.VR. SUBBIAH said...

/////Blogger KS said...
வணக்கம் ஆசானே
எனக்கு சனீஷ்வரன் 10 இல் ,அத்துடன் நீசம் வேறு ,சுய வர்க்கத்திலும் 2 பரல்கள், படுத்தி எடுக்கிறார் ,மீள முடியவில்லை.
என்செய்வேன்//////

இருக்கும் இடைத்தில் இருந்து தினமும் சனியை வழிபடுங்கள். பலன் கிடைக்கும்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger நாமக்கல் சிபி said...
இந்த பதிவில் (எனக்கு வந்தது என்னால் சொல்ல முடியாததால்)உங்களுக்கு ஒரு கேள்வி வந்திருக்கு!
http://shibispadaippugal.blogspot.com/2009/02/1.html//////

அந்தக் கேள்விக்குப் பதில் இதோ:

ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருப்பது நல்லதல்ல. 4 கிரகங்கள் என்றால் குழப்பம்தான். கிரகயுத்தம். அதில் யார் யார் அஸ்தமணமகின்றார்களோ?
ஏழாம் வீட்டிற்கு அதிபதி, ஏழாம் வீட்டில் உள்ள பரல்கள்,
ஏழாம் வீட்டு அதிபதி சுயவர்கத்தில் உள்ள பரல்கள். என்று அனைத்தையும் அலசித்தான் வரப்போகும் மணாளனைத் தீர்மானிக்க முடியும்

சுருக்கமாகச் சொன்னால் லக்கினத்தை விட ஏழில் அதிகப் பரல்கள் இருந்தால் தகுதி உடைய கணவன் கிடைப்பான். குறைந்திருந்தால் எதிர்பார்க்கும் அளவிற்கு அல்லது ஆசைப்படும் அளவிற்கு உரிய கணவன் அமைவது கஷ்டம்!

விளக்கம் போதுமா?

SP.VR. SUBBIAH said...

//////Blogger நாமக்கல் சிபி said...
//உங்களுக்குத்தான் சனீஷ்வரன் பரிபூரண சுப கிரகமாச்சே(லக்கினாதிபதி).//
லக்னாதிபதி அல்ல!
ராசி நாதன்!/////

கரெக்ட். இதற்குத்தான் உங்களைப்போன்ற சீடர்கள் அவசியம்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Shani lesson is started... Starting onwards very interesting.
Really you are a Hardworking person. Idhai Yaralum Marukkamudiyadhu. Ungalidam Ulla ellam unmayana ulaippu.
Oru Pakkam Marketing irundhalum marupakkam Elutthupaniyaye Asaramal Eludhikondirikireergal..."
"Valgha Unga Elutthu Pani
Valargha Ungal Pugal"
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

வழக்கம்போல பாராட்டு மழையில் முக்கி எடுத்திருக்கிறீர்கள்! நன்றி ராஜாராமன்

SP.VR. SUBBIAH said...

//////Blogger வேலன். said...
சனிக்கிழமை - சனியை பற்றி பாடம்.
வரவேற்கின்றோம். அவர் தயவால்தான் நாம் மனிதர்களைப்பற்றி
அறிந்துகொள்ள முடியும்(நமக்கு கஷ்டங்களை கொடுப்பார். அதன் மூலம் நமது கஷ்ட நேரத்தில் யார் நமக்கு உதவுபவர்கள் என நாம் அறிந்து கொள்ளலாம்)
வாழ்க வளமுடன்,
வேலன்./////

அதென்னவோ உண்மைதான்! கஷ்டங்களில்தான் நமக்குப் பல உண்மைகள் தெரிய வருகிறது!

SP.VR. SUBBIAH said...

//////Blogger sundar said...
வணக்கம் ஐய்யா
சனி பகவான் பார்வை பட்ட வீடுகளுக்கு தீமை செய்வார். ஆனால் தனது வீடுகலான மகரம் ,கும்பம் ஆகிய ராசிகளை
பார்ப்பத்தினால் அந்த வீடுகளுக்கு துன்பம் செய்வாரா இல்லை நன்மை செய்வாரா?////

சொந்த வீடு என்பதால் நன்மைகளைச் செய்வார். அதேபோல சொந்த வீடு என்பதால் தீமைகளைச் செய்யாமல் விடமாட்டார்.
தர்மப்படி என்ன உள்ளதோ அதைக் கொடுத்து விடுவார்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger இராகவன் நைஜிரியா said...
நானும் மகரராசிதான். மேலும் எனக்கு லக்னத்திற்கு (மிதுன லக்னம்) 10 இடத்தில் சனி இருக்கின்றார். இப்போது சனிதசையில் சனி புக்தி நடக்கின்றது.
சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்பது சரியாகத்தான் இருக்கின்றது. ஆனால் இதுவரை எனக்கு சனியால் எந்த கஷ்டமும் வந்ததில்லை.
என்னை ரொம்ப படுத்தியது, ராகு தசை, சூரிய புக்திதான்.//////

தகவலுக்கு நன்றி நண்பரே!

sundar said...

சொந்த வீடு என்பதால் நன்மைகளைச் செய்வார். அதேபோல சொந்த வீடு என்பதால் தீமைகளைச் செய்யாமல் விடமாட்டார்.
தர்மப்படி என்ன உள்ளதோ அதைக் கொடுத்து விடுவார்!

நன்றி ஐய்யா :-)))......

krish said...

Northindians believe that chanting or hearing Hanuman Chalisa of Tulasi Das everyday will remove sani's evil effects. The Hanuman Chalisa is available in Youtube. Thanks for the lesson.

hotcat said...

Sir,

In my horoscope, simha lagna is with sun, sani and mercury.

I am really scared. I had no big issues with my dad so far.

Is there anyway that you can look my horoscope and let me know whether there is the possibility of me getting handicap?

-Shankar

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
Northindians believe that chanting or hearing Hanuman Chalisa of Tulasi Das everyday will remove sani's evil effects. The Hanuman Chalisa is available in Youtube. Thanks for the lesson./////

இங்கேயும் அந்த வழக்கம் உண்டு நண்பரே. அனுமனைத் துதிப்போர் உண்டு.அனுமன் கவசம் எனும் பாடலும் உண்டு!

SP.VR. SUBBIAH said...

/////Blogger hotcat said...
Sir,
In my horoscope, simha lagna is with sun, sani and mercury.
I am really scared. I had no big issues with my dad so far.
Is there anyway that you can look my horoscope and let me know whether there is the possibility of me getting handicap?
-Shankar/////

ஒரே ஒரு விதியை (rule) வைத்து எத்ற்குக் குழப்பிக் கொள்கிறீர்கள்? பார்வை, அஷ்டகவர்க்கம் என்று எத்தனையோ அம்சங்கள் இருக்கும். பொறுமையாக மற்றவற்றையும் பாருங்கள். அதற்கும் மேலாக இறைவனருள் என்று ஒன்றும் உண்டே!

ananth said...

By putting my earlier comments I'm not challenging you or saying you are wrong. Just share my experience. Through my experience I have seen that if Sani and sun together, father and son either cannot get along, separated from family since young age (my experience) or lost father in early childhood or at least in early twenties. I have one relation who has sun and saturn in 10th. He is a graduate government school teacher but lost his father in his earlier age. Thank you for your comments.

Sridhar said...

அய்யா,

சனிஸ்வர பகவானின் பாட தொடக்கம் மிகவும் அருமை.

"தட்டோடு கோவில் வாசல்களில் உட்கார்ந்து இன்று பிச்சையெடுப்பவர்கள் எல்லாம்
சென்ற பிறவியில் இறைவன் இல்லை என்று சொன்னவர்கள். முற்பிறவியில் தாயைப் புறக்கணித்தவனுக்கு இந்தப் பிறவியில் தாய்ப்பாசம் மறுக்கப்பட்டுவிடும். தந்தையைப் புறக்கணித்தவன் தந்தையாக முடியாது. வயதான மாமியாரைப் புறக்கணித்தவள் மாமியாராக முடியாது. செல்வத்தைச் சீரழித்தவன் சீமான் வீட்டில் பிறக்கமுடியாது." - மனதை தொட்டது!

ஒரு சந்தேகம் -

சனி தான் சென்றமரும் வீட்டை சேதப்படுத்தி விடுவார். அதே போல அவர்
பார்வையைப் பெறும் வீடு சேதத்திற்கு உள்ளாகும். அதே நிலைமைதான் அவருடன்
சேரும் கிரகத்திற்கும் ஏற்படும். அல்லது அவர் பார்வையைப் பெறும் கிரகத்திற்கும்
ஏற்படும்.

ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது. இந்த விதிகளில்
ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு. -

இந்த கணக்கு லக்னத்தில் இருந்து தானே அய்யா?

நன்றி,

ஸ்ரீதர்

Sakkubai said...

வணக்கம்
சனியை பற்றிய பாடம் மிக அருமை.
எனக்கு மகர லக்னம் .லக்னாதிபதி சனீஸ்வரன் 7-ஆம் இடத்தில செவ்வாயுடன் .சனி 1 பரல். 7-ஆம் வீட்டின் பரல் 23 .7 -ஆம் வீடு அதிபதி சந்திரன் சுயவர்கத்தில் 7 பரல் .
எனக்கு சனி நல்லது செய்வாரா அல்லது கெடுதல் செய்வாரா ?
எனக்கு திருமணம் தாமதமாக தான் நடந்தது.

Vinodh said...

Dear sir,
nice blog

In my horoscope, Saturn and mars combines in thulam lagna, is it nice combination...?

Regards
Vinod

hotcat said...

////ஒரே ஒரு விதியை (rule) வைத்து எத்ற்குக் குழப்பிக் கொள்கிறீர்கள்? பார்வை, அஷ்டகவர்க்கம் என்று எத்தனையோ அம்சங்கள் இருக்கும். பொறுமையாக மற்றவற்றையும் பாருங்கள். அதற்கும் மேலாக இறைவனருள் என்று ஒன்றும் உண்டே!////

11th jupiter with mars, 12th - venus with moon, 1st house -sani, mercury, sun, 2nd -ragu, and 8th -ketu.

So no good planet aspect for lagna. In ashtavarga, sun got 2 points, saturn - 3points, and ascedent has 3 points. That is what making me worry.

God's Grace surely everyone needs at every point of time.

Thanks
Shankar

அமர பாரதி said...

வாத்தியாரையா,

எனக்கு ஏழில் நீச சனி, லக்னத்தில் சூரியன். இப்போதுதான் தெரிகிறது என்னுடைய பல சிரமங்களுக்கு விளக்கங்கள். நன்றி.

//ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது. இந்த விதிகளில்
ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு. அதோடு ஜாதகனுக்கும், அவனுடைய தந்தைக்கும்
சுமூகமான உறவு இருக்காது. இருவரும் எலியையும் பூனையையும்
போல ஒற்றுமையாக இருப்பார்கள்//

நல்ல சேதி அய்யா. தலையெழுத்தை எப்படி மாற்ற இயலும்?

SP.VR. SUBBIAH said...

Blogger ananth said...
By putting my earlier comments I'm not challenging you or saying you are wrong. Just share my experience. Through my experience I have seen that if Sani and sun together, father and son either cannot get along, separated from family since young age (my experience) or lost father in early childhood or at least in early twenties. I have one relation who has sun and saturn in 10th. He is a graduate government school teacher but lost his father in his earlier age. Thank you for your comments.

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Blogger Sridhar said...
அய்யா,
சனிஸ்வர பகவானின் பாட தொடக்கம் மிகவும் அருமை.
"தட்டோடு கோவில் வாசல்களில் உட்கார்ந்து இன்று பிச்சையெடுப்பவர்கள் எல்லாம்
சென்ற பிறவியில் இறைவன் இல்லை என்று சொன்னவர்கள். முற்பிறவியில் தாயைப் புறக்கணித்தவனுக்கு இந்தப் பிறவியில் தாய்ப்பாசம் மறுக்கப்பட்டுவிடும். தந்தையைப் புறக்கணித்தவன் தந்தையாக முடியாது. வயதான மாமியாரைப் புறக்கணித்தவள் மாமியாராக முடியாது. செல்வத்தைச் சீரழித்தவன் சீமான் வீட்டில் பிறக்கமுடியாது." - மனதை தொட்டது!
ஒரு சந்தேகம் -
சனி தான் சென்றமரும் வீட்டை சேதப்படுத்தி விடுவார். அதே போல அவர்
பார்வையைப் பெறும் வீடு சேதத்திற்கு உள்ளாகும். அதே நிலைமைதான் அவருடன்
சேரும் கிரகத்திற்கும் ஏற்படும். அல்லது அவர் பார்வையைப் பெறும் கிரகத்திற்கும்
ஏற்படும்.
ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது. இந்த விதிகளில்
ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு. -
இந்த கணக்கு லக்னத்தில் இருந்து தானே அய்யா?
நன்றி,
ஸ்ரீதர்//////

ஆமாம் நமது கணக்குகள் எப்போழுதுமே லக்கினத்தில் இருந்துதான், unless if it is specified!

SP.VR. SUBBIAH said...

Blogger Sakkubai said...
வணக்கம்
சனியை பற்றிய பாடம் மிக அருமை.
எனக்கு மகர லக்னம் .லக்னாதிபதி சனீஸ்வரன் 7-ஆம் இடத்தில செவ்வாயுடன் .சனி 1 பரல். 7-ஆம் வீட்டின் பரல் 23 .7 -ஆம் வீடு அதிபதி சந்திரன் சுயவர்கத்தில் 7 பரல் .
எனக்கு சனி நல்லது செய்வாரா அல்லது கெடுதல் செய்வாரா ?
எனக்கு திருமணம் தாமதமாக தான் நடந்தது.///////

மகர லக்கினத்திற்கு சனி லக்கினநாதன் அவன் தனக்குத்தானே கெடுதல் செய்து கொள்ள மாட்டான். கவலையை விடுங்கள்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Vinodh said...
Dear sir,
nice blog
In my horoscope, Saturn and mars combines in thulam lagna, is it nice combination...?
Regards
Vinod//////

துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அதுவும் உச்சம் பெற்று லக்கினத்தில் உள்ளான். நல்லது. செவ்வாய் 2 & 7 க்கு உரியவன். அவன் சனியுடன் சேர்வது நல்லதல்ல. கம்பஸ்ட் ஆகாமல் இருக்க வேண்டும். மிக்ஸட் ரிசல்ட்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger hotcat said...
////ஒரே ஒரு விதியை (rule) வைத்து எத்ற்குக் குழப்பிக் கொள்கிறீர்கள்? பார்வை, அஷ்டகவர்க்கம் என்று எத்தனையோ அம்சங்கள் இருக்கும். பொறுமையாக மற்றவற்றையும் பாருங்கள். அதற்கும் மேலாக இறைவனருள் என்று ஒன்றும் உண்டே!////
11th jupiter with mars, 12th - venus with moon, 1st house -sani, mercury, sun, 2nd -ragu, and 8th -ketu.
So no good planet aspect for lagna. In ashtavarga, sun got 2 points, saturn - 3points, and ascedent has 3 points. That is what making me worry.
God's Grace surely everyone needs at every point of time.
Thanks
Shankar/////

ஆமாம் சங்கர் அவரின் அருள் முக்கியம்!

SP.VR. SUBBIAH said...

Blogger அமர பாரதி said...
வாத்தியாரையா,
எனக்கு ஏழில் நீச சனி, லக்னத்தில் சூரியன். இப்போதுதான் தெரிகிறது என்னுடைய பல சிரமங்களுக்கு விளக்கங்கள். நன்றி.
//ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது. இந்த விதிகளில்
ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு. அதோடு ஜாதகனுக்கும், அவனுடைய தந்தைக்கும்
சுமூகமான உறவு இருக்காது. இருவரும் எலியையும் பூனையையும்
போல ஒற்றுமையாக இருப்பார்கள்//
நல்ல சேதி அய்யா. தலையெழுத்தை எப்படி மாற்ற இயலும்?//////

ஏழில் அமர்ந்தும் நீசம் பெற்றதால் பலனில்லை!

myson_sanjay05 said...

this is Raja from chennai

I want to know about more about me to handle office, family, which i have earn i could not save anything in my life.

please help me.

Raja
DoB--07-07-1972
time 2:45pm
Madurai

SP.VR. SUBBIAH said...

////Blogger myson_sanjay05 said...
this is Raja from chennai
I want to know about more about me to handle office, family, which i have earn i could not save anything in my life.
please help me.
Raja
DoB--07-07-1972
time 2:45pm
Madurai////

துலா லக்கினம்.கார்த்திகை நட்சத்திரம்.
2ஆம் வீடு (House of finance) வலுவாக இல்லை.
24 பரல்கள் மட்டுமே உள்ளன. வீட்டுக்காரன் செவ்வாய் தன் சுயவர்க்கத்தில் 3 பரல்கள்
குரு 3 பரல்கள். ஆகவே கையில் தங்குவதில்லை. கவலைப் படாதீர்கள்.
இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். He will give you standing power!

myson_sanjay05 said...

thanks for your reply,

I am praying god daily. there is no way to improve my economical status.

Raja