மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.2.09

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்?

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்?

1953ஆம் ஆண்டு. மிஸ்ஸியம்மா' எனும் திரைப்படம் வெளிவந்து சக்கை போடு
போட்டுக்கொண்டிருந்த காலம். நாயகன் ஜெமினி கணேசன். நாயகி சாவித்திரி.
இசை ராஜேஷ்வர ராவ். பாடல்கள் எல்லாம் பிரபலம். "பிருந்தாவனமும்
நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ' என்கின்ற பாடல் பட்டி
தொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த காலம்.

பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களை நமது கதையின்
நாயகனும் கேட்டுப் பரவசமடைந்து கொண்டிருந்தான். சுக ஜீவனம். அதனால்
அது அவனுக்குச் சாத்தியமாயிற்று.

நாயகன் என்றால் பெயர் என்ன?

பெயர் இல்லாமலா? அவனுடைய பெயர் முத்தப்பன்.

பின்னாளில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் செட்டி நாட்டைப் பற்றி,
"முருகப்பன் இல்லாத வீடும் இல்லை; முத்தப்பன் இல்லாத தெருவுமில்லை" என்று
சிலாகித்துச் சொல்வார். அந்தப் பகுதியில் உள்ளவர்களின் பெயர்கள் எல்லாம்
குன்றில் வாசம் செய்யும் குமரனின் பெயராகவே இருக்கும்.

முருகப்பன், முத்தப்பன், பழநியப்பன், சுப்பிரமணியன், செந்தில்நாதன் என்பதுபோன்ற
பெயர்களே அதிகமாக இருக்கும்.

கவியரசரின் இயற்பெயர் முத்தையா. அதுவும் குமரக் கடவுளின் பெயர்களில் ஒன்றுதான்

நமது நாயகனுக்கு அப்போது வயது 21. பள்ளி இறுதியாண்டுவரை படித்திருந்தான்.
அதுவரை படித்தாலே போதும். அப்போதெல்லாம் சட்டென்று வேலை கிடைத்துவிடும்.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, மதுரை வங்கி (Bank of Madura
தற்போதைய பெயர் ICICI Bank) ஆகிய வங்கிகளின் நிறுவனர்கள், இயக்குனர்கள்,
நிர்வாக இயக்குனர்கள், அதிகாரிகள், குமாஸ்தாக்கள் என்று அத்தனை பேர்களும்
செட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதியில் இருந்து யார் போனாலும் உடனே
வேலை கிடைத்துவிடும். குமாஸ்தாவிற்குச் சம்பளம் நூறு ரூபாய். Sub-staffற்குச்
சம்பளம் 75 ரூபாய். அப்போது அது பெரிய தொகை.

கணவன் மனைவி வெறும் 50 ரூபாயில் குடும்பம் நடத்தலாம். விலைவாசி அந்த
அளவிற்குத்தான் இருந்தது.

சென்னை மொழியில் சொன்னால் நாஷ்டாவை நாலணாவில் முடித்து விடலாம்.
அதாவது காலைப் பலகாரத்தை (Morning Tiffen) 25 பைசாவிற்குள் முடித்துவிடலாம்.

ஆனால் நமது நாயகன் வேலைக்குச் செல்லவில்லை. செல்வந்தர் வீட்டுப் பையன்.
எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று செல்லவில்லை.

பதினேழு வயதில் படிப்பை முடித்தவனுக்கு, அடுத்த ஆண்டிலேயே திருமணத்தைச்
செய்து வைத்து விட்டார்கள். அவனும் வேறு வேலை இல்லாதாதால், அடுத்தடுத்த
ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிக் குடும்பஸ்தனாகி
விட்டான்.

21வது வயதில்தான் பிரச்சினை ஆரம்பமானது. முதல் மூன்று ஆண்டுகள் வாயை
மூடிக்கொண்டிருந்த அவன் மனைவி, இப்போது நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.

எந்த வேலைக்கும் போகாமல் அல்லது எந்தத் தொழிலையும் செய்யாமல் வீட்டில்
சும்மா இருந்தால் எப்படி? மனிதன் கெட்டு விடமாட்டானா? அந்தக் கவலை
அவளுக்கு. அதோடு எத்தனை நாட்களுக்குத்தான் அந்தச் சிற்றூரிலேயே
இருப்பது?

அவளுக்கு, மதுரை, திருச்சி அல்லது சென்னை போன்ற பெரிய ஊர்களில் சென்று
வசிக்க ஆசை. அதனால் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

முத்தப்பனுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். மூவரும் இளையவர்கள்.
அவர்கள் குடும்பத்திற்கு திருவாரூர் அருகே 100 ஏக்கர் நிலம் இருந்தது. காவேரி
செழிப்பாக ஓடிக் கொண்டிருந்த காலம் அது. ஆண்டிற்கு முப்போகம். நிலங்களை
நான்கு பகுதிகளாகப் பிரித்து நான்கு பேர்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்
திருந்தார்கள். குத்தகைக்காரர்களும் அந்தக் கால வழக்கப்படி சத்தியத்திற்குக்
கட்டுப்பட்டுக் குத்தகைப் பணத்தை ஒழுங்காகக் கொடுத்து வந்ததோடு, ஆண்டிற்குப்
பத்து மூட்டை அரிசியையும் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அதோடு உள்ளூரில் இருந்த நான்கு சிறு வீடுகளில் இருந்து மாத வாடகையும்
வந்து கொண்டிருந்தது.

முத்தப்பனுக்குத் திருமணம் முடிந்த கையோடு, அவனுடைய தந்தை குடும்பச்
சொத்தில் அவன் பங்கைப் பிரித்துக் கொடுத்துவிட்டார். வசிக்கும் பெரிய வீட்டுப்
பங்கும் திருவாரூர் நிலமும் பொது. அனுபவப் பாத்தியம் மட்டும். நான்கு
சிறுவீடுகளில் ஒன்றையும், அருகே ராமேஸ்வரம் செல்லும் சாலையில் இருந்த
ஐந்து ஏக்கர் நிலத்தையும் அவன் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல், எதாவது செய்ய வேண்டுமென்று நினைத்த
முத்தப்பன், தன் தந்தையிடம் பேசினான். "எனக்கு வேலைக்குச் செல்ல விருப்பம்
இல்லை. ஏதாவது தொழில் செய்ய விரும்புகிறேன். என்ன தொழில் செய்யலாம்?"
என்று கேட்டான்

"தொழில் செய்வதற்கெல்லாம அனுபவம் வேண்டும். நினைத்தவுடன் நினைத்த
தொழிலைச் செய்ய ஆசைப்படக்கூடாது. ஆகவே எந்தத் தொழிலை அல்லது
வியாபாரத்தை செய்ய விரும்பினாலும், அதில் உள்ள நெளிவு சுழிவுகளைத்
தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு வியாபாரியிடம் முதலில் வேலைக்குச்
சேர்ந்து பணியாற்று. அல்லது ஒரு சிறு தொழிற்சாலையில் சேர்ந்து பணியாற்று,
ஒரு ஐந்து அல்லது ஆறு வருட அனுபவங்களுக்குப் பிறகு அதை நீ தனியாகச்
செய்யலாம்"

முருகப்பனுக்கு அதில் விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த
போதுதான் அவனுக்குப் பளீரென்று அவனுடைய தாய் மாமாவின் நினைவு வந்தது.

அவனுடைய மாமா ஜோதிடத்தில் விற்பன்னர். தொழில் முறை ஜோதிடர் அல்ல!
ஜோதிடத்தைக் கற்றுத் தேறியவர் கற்றுத் தெளிந்தவர். அந்தச் சிற்றூர்
மக்களெல்லாம் தங்களுடைய பிரச்சினைகளுக்கு அவரைத்தான் சென்று
பார்ப்பார்கள்.

அவர் பைசாக் கூடப் பணம் வாங்கிக் கொள்ளாமல் வருகிறவர்களுக்கு
இலவசமாகப் பார்த்துச் சொல்வார். வழவழா கொழ கொழா வெல்லாம் இருக்காது.
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவார். ஒரு கேள்விக்கு மேல் பார்த்துப்
பலன் சொல்ல மாட்டார். மீறிக்கேட்டால், பிறகு வாருங்கள் பார்க்கலாம் என்று
கூறி அனுப்பி விடுவார்.

'அடடா, மாமாவைக் கேட்டால் போதுமே' என்று நினைத்தவன், உடனே
செயலில் இறங்கினான்

**********************************************************

காலை மணி ஒன்பது. அவனைப் பார்த்தவுடன் மாமா அன்புடன் வரவேற்றார்.

தான் வந்த விஷயத்தை அவன் சொன்னவுடன், மாமா ஜாதகத்தைக் கையில்
வாங்கிப் பார்த்தார்.

அவர் முன்பே இரண்டொருமுறை பார்த்திருந்தாலும், நடப்பு திசை, நடப்பு
கோள்சாரத்தை வைத்துப் பலன் சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு காகிதத்தில்
குறிப்பெடுத்துக் கொண்டவர், அவனை நோக்கி அதிரடியாகச் சொன்னார்.

"கண்ணா, இன்னும் மூன்று நாட்களில் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
சனீஷ்வரன் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இடம் பெயறுகிறார்.
நீ கேட்டை நட்சத்திரக்காரன். உனக்கு விரையச் சனி ஆரம்பம். நல்ல
நேரத்திற்குத்தான் ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு என்னைப் பார்க்க
வந்திருக்கிறாய். பணத்தைப்போட்டு எந்தவிதமான வியாபாரத்தையும் நீ
இப்போது செய்யாதே! உனக்கு இது முதல் சுற்றுச் சனி. அதாவது மங்குசனி.
அதோடு சணீஷ்வரன் ராசிக்குப் பன்னிரெண்டில் சஞ்சாரம் செய்யும் காலம்
நன்மையாக இருக்காது. ஆகவே புது முயற்சி எதுவும் வேண்டாம். முடிந்தால்
வேலைக்குப்போ. இல்லையென்றால், வீட்டில் இப்போது இருப்பதைப்
போலவே சாப்பிட்டுவிட்டு சும்மா இரு. மற்றதை இரண்டரை ஆண்டு காலம்
சென்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம். நான் சொன்னதை நன்றாக நினைவில்
வைத்துக் கொள். தவறினால் விரையச் சனி உன்னைக் கொட்டிக் கவிழ்த்து
விட்டுப் போய் விடும். அதை நினைவில் வை. போய் வா!"

மாமா சொன்னால் அது வேதவாக்கு. அதை மனதில் ஏற்றிக் கொண்டவன்,
அவரை விழுந்து வணங்கி விட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

மூன்று நாட்கள் சென்றது. சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு சென்று,
கூட்டத்தோடு கூட்டமாக சனிக்குளத்தில் முங்கிக் குளித்தெழுந்து,
சனீஷ்வரனையும் திவ்யமாக வணங்கி விட்டுத் திரும்பினான்.

மாமா சொன்னதை அட்சரம் பிசகாமல் கேட்பவன் முத்தப்பன் என்பதால்
சனீஷ்வரன் அவனை விட்டுவிடுவாரா என்ன?

சனீஷ்வரனும் தனக்குள்ள கர்மக் கணக்குப்படி, ஏழரைச் சனிக் கணக்கில்
அவன் பெயரைச் சேர்த்துக் கொண்டு திருநள்ளாறிலிருந்து அவனை அனுப்பி
வைத்தார்.

சனிக் கணக்கும் சென்னை ஆட்டோ மீட்டர் போல ஓட ஆரம்பித்தது.

அவன் மாமாவின் சொற்களை நினைத்துக் கொண்டு, மன உறுதியோடு
இருக்க முடிவு செய்தான்.

எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் சனீஷ்வரன்? எத்தனை முத்தப்பன்களைப்
பார்த்தவர்
சனீஷ்வரன்?

யாரை எப்படிப் பிடிக்க வேண்டும்? யாரை எப்படி மடக்க வேண்டும்?
யாரை எப்படித் துவைக்க
வேண்டும்? என்று அறியாதவரா அவர்?

முத்தப்பன் தன் வழியில் செல்ல, முத்தப்பனின் ஆத்மார்த்தமான நண்பன் வடிவில்
வந்து நின்றார் அவர். வந்து நின்றவர் புன்னகைக்கவும் செய்தார்

(தொடரும்)


வாழ்க வளமுடன்!

54 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. My Name is also another Murugan Name :- Velan.

    valga valamudan
    velan

    ReplyDelete
  3. 7 1/2 சனி என்றாலே எல்லோரும் பயப்படும் சப்ஜெக்ட் .
    பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. i guess i know who the native is. should i go for the guess here , sir ?

    ReplyDelete
  5. also..sir how is the coming tamil new year(virothi??) going to be in general? anything major ?anyother good tamil astro websites u might know of ?thanx

    ReplyDelete
  6. தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
    அன்புடன்,
    பாஸ்கர்

    ReplyDelete
  7. அய்யா,

    நீங்கள் ஒரு கை தேர்ந்த கதை நடத்துனர்! தக்க சமயத்தில் "தொடரும்" என போட்டது, ஒரு பக்கம் ஆவலை துண்டினாலும், மறு பக்கம் இந்த கதை கமலஹாசன் அவர்களின் "மஹாநதி" என்ற படத்தை நினைவு படுத்துகிறது.

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  8. பதிவு எழுதும் நளினம் மிக அருமை. தொடர்ச்சியை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. இன்றைக்கு கதை அருமை வாத்யாரே.

    ReplyDelete
  10. ஐயா, நீங்கள் கதை சொல்லும் அழகே தனி! நான் சனி-இன் பாடாதிக்காக காத்திருந்தேன்.நானும் கதை-இன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  11. வாத்யாரே,

    சனியின் பாடத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங். எனக்கு கடந்த 6 வருடங்களாக ஏழரை துவைத்து காயப்போட்டு விட்டது. சனி வாத்யார் பிரம்பெடுத்து துளி நகர்ந்தாலும் தட்டியெடுத்து விட்டார். அவரை மறக்கவே முடியாது. அவரின் பாடத்தில் எனக்கு பிடித்தது மற்றவர்களின் உண்மையாக நிறத்தை புரிய வைத்தது தான். பேரதிர்ச்சியுடன் மற்றவர்களை புரிய வைத்தார்.

    ReplyDelete
  12. // "பிருந்தாவனமும்
    நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ' //

    இன்றும் என் விருப்ப பாடல்களில் இதுவும் ஒன்றுங்க.

    தங்களின் சனி பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  13. Dear Sir

    Neengal Jhodhida Asan Mattumalla. Sirandha Kadha Asiriyar Enpadhai Avvapodhu Prove Pannikondirukkirgal.

    Ungalidam Kuttu Vanguvadhu "Modhira Kayyal Kuttu Vanguvadhu Pondradhu".

    "Neenagal Thodaralam Nangal Thavikkalam(Sudden Break -Story)". Idhuvum oru Sugamae...

    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  14. /////Blogger புதுகைச் சாரல் said...
    நானே 1st/////

    சாரல் எப்போது வந்தாலும் நல்லதே!

    ReplyDelete
  15. //////Blogger வேலன். said...
    My Name is also another Murugan Name :- Velan.
    valga valamudan
    velan/////

    கந்தன், கடம்பன், வேலன் என்று இன்னும் எத்தனையோ பெயர்கள் உண்டு சாமி!

    ReplyDelete
  16. /////Blogger Geekay said...
    7 1/2 சனி என்றாலே எல்லோரும் பயப்படும் சப்ஜெக்ட் .
    பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்./////

    பயப்படக்கூடாது என்றுதான் விளக்கமாகப் பதிவு எழுத முனைந்துள்ளேன்.

    ReplyDelete
  17. ///////Blogger mike said...
    i guess i know who the native is. should i go for the guess here , sir ?////

    உங்களால் ஊகிக்க முடியாது. இது உண்மையில் நடந்த கதை. என் தந்தையார் சொல்லிக் கேட்டு மனதில் பதிந்து வைத்துள்ள கதை!

    ReplyDelete
  18. ///////Blogger mike said...
    also..sir how is the coming tamil new year(virothi??) going to be in general? anything major ?anyother good tamil astro websites u might know of ?thanx/////

    விரோதி எனும் பெயரைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள், மற்ற ஆண்டுகளைப் போலத்தான் இதுவும் இருக்கும்

    ReplyDelete
  19. //////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
    அன்புடன்,
    பாஸ்கர்///////

    நன்றி பாஸ்கர்!

    ReplyDelete
  20. //////////Blogger Sridhar said...
    அய்யா,
    நீங்கள் ஒரு கை தேர்ந்த கதை நடத்துனர்! தக்க சமயத்தில் "தொடரும்" என போட்டது, ஒரு பக்கம் ஆவலை துண்டினாலும், மறு பக்கம் இந்த கதை கமலஹாசன் அவர்களின் "மஹாநதி" என்ற படத்தை நினைவு படுத்துகிறது.
    நன்றி,
    ஸ்ரீதர்//////

    இது உண்மையில் நடந்த கதை. என் தந்தையார் சொல்லிக் கேட்டு மனதில் பதிந்து வைத்துள்ள கதை!

    ReplyDelete
  21. ///////Blogger bhaskar said...
    பதிவு எழுதும் நளினம் மிக அருமை. தொடர்ச்சியை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.///////

    பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////////Blogger அமர பாரதி said...
    இன்றைக்கு கதை அருமை வாத்யாரே.////////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ///////////Blogger citizen said...
    ஐயா, நீங்கள் கதை சொல்லும் அழகே தனி! நான் சனியின் பாடத்திற்காகக் காத்திருந்தேன். நானும் கதையின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!//////

    தொடர்ந்து வரும் நண்பரே! உங்களைப்போன்றவர்களுக்காகத்தான் சுவாரசியமாக இருக்கும் கதைகளாக எழுதுகிறேன்

    ReplyDelete
  24. //////Blogger அமர பாரதி said...
    வாத்யாரே,
    சனியின் பாடத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங். எனக்கு கடந்த 6 வருடங்களாக ஏழரை துவைத்து காயப்போட்டு விட்டது. சனி வாத்யார் பிரம்பெடுத்து துளி நகர்ந்தாலும் தட்டியெடுத்து விட்டார். அவரை மறக்கவே முடியாது. அவரின் பாடத்தில் எனக்கு பிடித்தது மற்றவர்களின் உண்மையாக நிறத்தை புரிய வைத்தது தான். பேரதிர்ச்சியுடன் மற்றவர்களை புரிய வைத்தார்.//////

    ஆமாம் கஷ்டங்களில்தான் உண்மையான அனுபவம் கிடைக்கும்!

    ReplyDelete
  25. ///////////Blogger இராகவன் நைஜிரியா said...
    // "பிருந்தாவனமும்
    நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ' //
    இன்றும் என் விருப்ப பாடல்களில் இதுவும் ஒன்றுங்க.
    தங்களின் சனி பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்///////////

    ஆகா, தொடர்ந்துவரும் நண்பரே! உங்களின் ஆவலுக்குத் தகுந்தபடி சிறப்பாகவே வரும்!

    ReplyDelete
  26. //////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Neengal Jhodhida Asan Mattumalla. Sirandha Kadha Asiriyar Enpadhai Avvapodhu Prove Pannikondirukkirgal.
    Ungalidam Kuttu Vanguvadhu "Modhira Kayyal Kuttu Vanguvadhu Pondradhu".
    "Neenagal Thodaralam Nangal Thavikkalam(Sudden Break -Story)". Idhuvum oru Sugamae...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////////

    தவிப்பிலும் சுகம் இருக்கும். உண்மைதான். ஆனால் உங்களை அதிகம் தவிக்க விடாமல் அடுத்த பதிவு தொடர்ந்து வரும்!

    ReplyDelete
  27. //////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Neengal Jhodhida Asan Mattumalla. Sirandha Kadha Asiriyar Enpadhai Avvapodhu Prove Pannikondirukkirgal.
    Ungalidam Kuttu Vanguvadhu "Modhira Kayyal Kuttu Vanguvadhu Pondradhu".
    "Neenagal Thodaralam Nangal Thavikkalam(Sudden Break -Story)". Idhuvum oru Sugamae...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////////

    தவிப்பிலும் சுகம் இருக்கும். உண்மைதான். ஆனால் உங்களை அதிகம் தவிக்க விடாமல் அடுத்த பதிவு தொடர்ந்து வரும்!

    ReplyDelete
  28. Interesting way to teach astrology. You are a real teacher. Thanks.

    ReplyDelete
  29. வாத்தியாரே..

    இந்தப் பாடம் நடத்தும் ஸ்டைலில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.. சூப்பர்.. சூப்பர்..

    ReplyDelete
  30. ஐயோ சனி பாடமா..?

    முதலில் சட்டென்று கவனத்துக்கு வரவில்லை..

    ஐயோ முருகா.. நீயே துணை..

    ReplyDelete
  31. வாத்தியாரே அருமையான ஆரம்பம். தொடர்ந்து ஒரு கலக்கு கலக்குவீர்கள்(சனீஸ்வரனை பற்றி)என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  32. //////Blogger krish said...
    Interesting way to teach astrology. You are a real teacher. Thanks.////

    அடிப்படையில் எழுத்தின்மேல் காதல் கொண்டவன். எப்படி எழுதினால் சுவையாக இருக்கும் என்பது வசப்பட்டு விட்டது.
    அதனால் பாடங்களையும் உங்களுக்குச் சுவையாகத் தர முடிகிறது. சுவையாக இல்லாவிட்டால் யார் படிப்பார்கள்? நானே படிக்க மாட்டேன்:-)))))

    ReplyDelete
  33. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    இந்தப் பாடம் நடத்தும் ஸ்டைலில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.. சூப்பர்.. சூப்பர்../////

    எல்லாம் உங்கள் அன்புதான் உண்மைத் தமிழரே! எத்தனை பேர்கள் படிக்கிறீர்கள். அத்தனை பேர்களுக்கும் புரியும்படியாக எழுத வேண்டும் எனும் அக்கறையால் பாடங்களைச் சுவைபட எழுதுகிறேன். அவ்வளவுதான்.

    ReplyDelete
  34. Well, you are very good story teller....amazing, eagerly waiting for the next episode about saneeswar!!!!

    Muruga names are also popular in tirunelveli side. Senthil, velmurugan, Bala, muthukumara, kumaresn, kumar are some to mention.

    nandri,
    shankar

    ReplyDelete
  35. /////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஐயோ சனி பாடமா..?
    முதலில் சட்டென்று கவனத்துக்கு வரவில்லை..
    ஐயோ முருகா.. நீயே துணை..//////

    அட, ஏன் கவலைப்படுகிறீர்கள். ராகு & கேதுவுடன் ஒப்பிடும்போது சனி மிகவும் நல்லவர். அவர் கர்மகாரகன் அதோடு ஆயுளுக்கும் அவர்தான் காரகர். தன்னை வணங்குபவர்களுக்கு, அவர் எப்போதும் ஆதரவாகவே இருப்பார்

    ReplyDelete
  36. /////Blogger N.K.S.Anandhan. said...
    வாத்தியாரே அருமையான ஆரம்பம். தொடர்ந்து ஒரு கலக்கு கலக்குவீர்கள்(சனீஸ்வரனை பற்றி)என்று எதிர்ப்பார்க்கிறேன்./////

    என் அபிமான கிரகம் சனீஷ்வரன். அதனால்தான் அவரைப்பற்றிச் சிறப்பாக எழுத வேண்டும் என்று மற்ற கிரகங்களை எல்லாம் எழுதி முடித்துவிட்டுக் கடைசியில் அவரைக எழுதக் கையில் எடுத்திருக்கிறேன். நிச்சயம் நல்ல படியாக முழு விவரங்களுடன் எழுதுவேன்!

    ReplyDelete
  37. ////Blogger hotcat said...
    Well, you are very good story teller....amazing, eagerly waiting for the next episode about saneeswar!!!!
    Muruga names are also popular in tirunelveli side. Senthil, velmurugan, Bala, muthukumara, kumaresn, kumar are some to mention.
    nandri,
    shankar////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சங்கர்!

    ReplyDelete
  38. ஒரே வரியில்....

    அட்டகாச ஆரம்பம்!
    ஆசானுக்குப் பாடம் சொல்ல சொல்லியா தரவேண்டும்!

    படிக்கிறேன் ஐயா!

    ReplyDelete
  39. ஒரே வார்த்தைதான்.

    சூப்பர்...

    ReplyDelete
  40. வணக்கம்
    எனக்கு லக்கின (மகரம் ) அதிபதியே சனீஸ்வரன். அதுவும் கடகத்தில் 1 பரல் செவ்வாயுடன் . என்ன செய்ய ? என்னை எப்படி துவைப்பாரோ தெரிய வில்லை ?

    ReplyDelete
  41. //////Blogger VSK said...
    ஒரே வரியில்....
    அட்டகாச ஆரம்பம்!
    ஆசானுக்குப் பாடம் சொல்ல சொல்லியா தரவேண்டும்!
    படிக்கிறேன் ஐயா!/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி வி.எஸ்.கே சார்! உங்கள் பாராட்டுக்கள் எனக்கு டானிக் மாதிரி. இன்னும் உற்சாகத்துடன் எழுதுவேன்!

    ReplyDelete
  42. /////Blogger இளைய பல்லவன் said...
    ஒரே வார்த்தைதான்.
    சூப்பர்...//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. /////Blogger Sakkubai said...
    வணக்கம்
    எனக்கு லக்கின (மகரம் ) அதிபதியே சனீஸ்வரன். அதுவும் கடகத்தில் 1 பரல் செவ்வாயுடன் . என்ன செய்ய ? என்னை எப்படி துவைப்பாரோ தெரிய வில்லை ?//////

    மகரம், கும்ப லக்கினங்கள், மற்றும் ராசிகளுக்கு சனீஷ்வரன் அதிபதி. தன் ராசிக்காரர்களுக்கும், லக்கினத்தை உடையவர்களுக்கும் சனீஷ்வரன் அதிக தொல்லைகள் கொடுக்கமாட்டான். ஆகவே கவலைப் படாதீர்கள் சகோதரி!

    ReplyDelete
  44. Jhotida Pazhamozhi. Perum sani, pambirandum pirbalanai seyyum. So as for saturn, rahu and kethu, if they do bad, definitely only for 1st half. They give back whatever you lose during 1st half of their be it dasa period or aspect.

    ReplyDelete
  45. ஐயா!
    வணக்கம். தாங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு சாப்டுவேர்களையும் உபயோக படுத்தி பார்த்தேன். Jaganatha Hora Software-ல் தசா முடியும் காலத்தை ஒரு மாதம் அதிகமாக காட்டுகிறது, அதுவே தமிழ் சாப்டுவேர் தசா முடியும் காலத்தை ஒரு மாதம் குறைவாக காட்டுகிறது. உங்களுடைய அனுபவத்தில் எது சரி? ஏனென்றால் அந்தரத்தை வைத்து பார்க்கும்போது ஒரு மாதம் என்பது அதிகமான கால அளவாக இருப்பதால் கேட்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    Thanks & Regards,

    ராஜ்குமரேசன்

    ReplyDelete
  46. I don't know about others but for me both the software shows almost the same dates. To be accurate only one day difference. To get accurate reading/prediction you must update to latest version of Jagannatha Hora. Some older versions shows different reading/predictions. Hope this helps you.

    ReplyDelete
  47. Saniswaran padathuvakam arumai...
    waiting for next episode...

    ReplyDelete
  48. நல்லா திகில்ல கெளப்புராப்பா வாத்தியாரு

    ReplyDelete
  49. ////Blogger ananth said...
    Jhotida Pazhamozhi. Perum sani, pambirandum pirbalanai seyyum. So as for saturn, rahu and kethu, if they do bad, definitely only for 1st half. They give back whatever you lose during 1st half of their be it dasa period or aspect.//////

    அவையெல்லாம் சொல்லடைகள். ஜாதகத்தில் உள்ள பலன்கள் உரிய திசையில்/புத்தியில் நடக்கும். அது நன்மையென்றாலும் சரி,, அல்லது தீமை என்றாலும் சரி

    ReplyDelete
  50. /////Blogger Kumaresan said...
    ஐயா!
    வணக்கம். தாங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு சாப்டுவேர்களையும் உபயோக படுத்தி பார்த்தேன். Jaganatha Hora Software-ல் தசா முடியும் காலத்தை ஒரு மாதம் அதிகமாக காட்டுகிறது, அதுவே தமிழ் சாப்டுவேர் தசா முடியும் காலத்தை ஒரு மாதம் குறைவாக காட்டுகிறது. உங்களுடைய அனுபவத்தில் எது சரி? ஏனென்றால் அந்தரத்தை வைத்து பார்க்கும்போது ஒரு மாதம் என்பது அதிகமான கால அளவாக இருப்பதால் கேட்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
    Thanks & Regards,
    ராஜ்குமரேசன்//////

    தமிழ் மென்பொருளையே பயன் படுத்துங்கள். அது சரியாகவே உள்ளது!

    ReplyDelete
  51. //////Blogger ananth said...
    I don't know about others but for me both the software shows almost the same dates. To be accurate only one day difference. To get accurate reading/prediction you must update to latest version of Jagannatha Hora. Some older versions shows different reading/predictions. Hope this helps you./////

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  52. ///////Blogger VA P RAJAGOPAL said...
    Saniswaran padathuvakam arumai...
    waiting for next episode...///////

    இதோ, பதிவில் ஏற்றிவிட்டேன்.சென்று பாருங்கள்

    ReplyDelete
  53. //////Blogger KaveriGanesh said...
    நல்லா திகிலைக் கெளப்புராப்பா வாத்தியாரு//////

    முதலில் திகிலாக இருந்தாலும், முடிவில் தில்லாக இருக்கும்
    பொறுமையாகப் படியுங்கள். சனியைப் பற்றிய எண்ணம் மாறிவிடும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com