மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.2.09

மண் பானையும் மதியிழந்த குரங்கும்!

வானை முத்தமிடும் மரங்கள் நிரம்பிய பெரிய காடு அது. சூரியனே
வெட்கப்பட்டு ஒதுங்குபடியாக எங்கும் பசுமை. மனித நடமாட்டமே
இல்லாத அமைதியான சூழ்நிலை!

அந்தக்காட்டில் குரங்கு ஒன்று மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தது.
அதற்குத் தேவையான உணவு, தட்டுப்பாடு இன்றி, விலை இல்லாமல்,
ரேசன் கார்டு தொல்லை இல்லாமல், தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது.

அந்தக் குரங்கு தான் உண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல் அவ்வப்போது
பல சேட்டைகளைச் செய்து தானும் மகிழ்ந்து தன் சக வன நண்பர்களையும்
மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன!

நாட்கள் மட்டும் நகர்ந்தால், குரங்கின் வாழ்க்கையில் மட்டுமில்லை, படிக்கும்
உங்களுக்கும் ஒரு சுவாரசியமில்லாமல் போய்விடும் இல்லையா?

அதனால் காலதேவன் அந்தக்குரங்கின் வாழ்க்கையில் ஒரு சறுக்கலை
ஏற்படுத்தி அதை அல்லல் படவைக்க வழி வகுத்திருந்தார்.
---------------------------------------------------------------------------------------------------
அல்லல் படுவதில் ஒரு சுகமா?

ஆமாம், சோகத்தில் ஒரு சுகம் இருப்பதைப்போல, அல்லல் படுவதிலும் ஒரு
சுகம் இருக்கும்!

ஒரு பெண்ணிற்காக அல்லல் படுவதைக் காதல் என்கிறோம். அவளை அடைவதை
லட்சியமாகக் கொண்டு எதற்கும் துணிந்து போராடுவதை உண்மையான காதல்
என்கிறோம்.

அதைப்போல வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் எதிர்
கொண்டு போராடி வெற்றி பெறுவதுதான் உண்மையான வாழ்க்கை!

போராட்டம் இல்லாத வாழ்க்கை, உப்பு, புளி, காரம் இல்லாத சாப்பாட்டைப் போன்றது
---------------------------------------------------------------------------------------------------
கதையை விட்ட இடத்திற்கு வாருங்கள்.

காலதேவன் அந்தக்குரங்கின் வாழ்க்கையில் ஒரு சறுக்கலை ஏற்படுத்தி அதை
அல்லல் படவைக்க வழி வகுத்திருந்தார்.

அதை விதி - அல்லது விதிக்கப்பட்டிருந்தது என்று என்று எடுத்துக் கொள்ளலாம்.

காலதேவன் அதை எந்த மொழியில் (C++/ Oracle/JAWA Script போன்று)
எழுதி வைத்திருப்பார் என்று தெரியவில்லை! அதே போல எந்த சர்வரில்
இணைக்கப்பெற்று அது. செயல் படுத்தப்படுகிறது என்றும் தெரியவில்லை!

சுருக்கமாகச் சொன்னால் அந்தக் குரங்குக்குக் கெட்ட நேரம் வந்துவிட்டது.

கெட்ட நேரம் வந்தவுடன், அந்தக்குரங்கு தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு
அருகிலிருந்த பல இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக ஒரு குன்றின்
மீது ஏறி, அங்கிருந்து எதிர்ப் பக்கத்தில் என்ன தெரிகிறது என்று எட்டிப் பார்த்தது.

அங்கே இதுவரை அந்தக் குரங்கு பார்த்திராத காட்சிகள் தென்பட்டன.

ஆமாம்! அங்கே மலை அடிவாரத்தில் கிராமம் ஒன்று இருந்தது. ஓட்டு
வீடுகளும், குடிசை வீடுகளூம், நடுவில் முற்றம் வைத்துக் கட்டப்பெற்ற
பெரிய வீடுகளும் நிறைந்து இருந்தன.மனித நடமாட்டமும் இருந்தது.

தன் வாழ்க்கையில் இப்படிப்பட்ட புதிய, அரிய காட்சிகளைப் பார்த்திராத
குரங்கு அவற்றையெல்லாம் இன்னும் அருகில் சென்று பார்க்கும் ஆசையுடன்
அந்தக் குன்றை விட்டு இறங்கி அந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது.

அதுதான் அந்தக் குரங்கு செய்த முதல் தவறு!

முதலில் ஒரு பெரிய வீட்டின் மீது ஏறி, வீட்டின் முற்றத்திற்குள் எட்டிப்
பார்த்தது. அந்த நேரத்தில் அந்த வீட்டில் பெரிய விருந்துபசாரம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது.

வீட்டில் பல பெரியவர்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
அதைப்பார்த்து அதிசயித்த குரங்கு வீட்டின் பின் புறத்தில் பலத்த இரைச்சல்
கேட்பதைக் கேட்டு, அதை முதலில் பார்த்து விட்டு வரலாம் என்று வீட்டின்
பின் கட்டிற்கு வந்தது. அங்கே பல சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சில சிறுவர்கள் தட்டுக்களில் அப்பம், வடைகளை வைத்துச் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சிகளைப் பார்த்த குரங்கு மிகவும் உற்சாகமாகி விட்டது.
சிறுவர்களுக்குத் தன் திறமையை காட்டும் விதமாக வாரத்தில் குதித்து பல்டி
அடித்துக்காட்டியது. குறுக்கே கட்டியிருந்த்த கம்பியின் மீது ஏறி இந்தக்கோடியில்
இருந்து அந்தக் கோடிவரை ஓடிக் காட்டியது. சிறுவர்களும் குஷியாகி, தாங்கள்
சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பம், வடைகளைக் குரங்கிடம் வீசி மகிழ்ந்தார்கள்.

குரங்கும் அதை எடுத்து சுவைத்துப் பார்த்தது. மெய் மறந்துபோய் விட்டது.
அடடா, இது போன்ற பதார்த்தங்கள் எல்லாம் இதுவரை கண்ணில் படாமல்
போய் விட்டதே என்று எண்ணியது. இனி இந்த ஊரிலேயே தங்கி விடுவோம்
என்று முடிவு செய்தது.

முதல் நாள் சிறுவர்கள் விரும்பித் தூக்கி எறிந்த பதார்த்தங்கள் அடுத்தநாள் முதல்
அதற்குத் தருவார் யாருமில்லை. விசேடம் முடிந்து அனைவரும் தத்தம்
வீடுகளுக்குப் போய்விட்டதால், அனைவரும் வீட்டுக்கூடங்களிலேயே உட்கார்ந்து
சாப்பிட ஆரம்பித்தார்கள்.

குரங்கு நடு முற்றங்கள் வழியாக வீடுகளுக்குள் நுழைந்து, உணவைத் தேடித் திங்க
ஆரம்பித்தது. பிறகு சிறுவர்கள் கையில் வைத்திருப்பதைப் பறித்துத் திங்க
ஆரம்பித்தது. தர மறுத்த இரண்டொருவரை கடித்தும் வைத்து விட்டது.

ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்த குரங்கின் சேஷ்டைகள் ஒருவார
காலத்திற்குள் தொல்லையாக மாறிவிட்டது. கிராமத்தில் இருந்த பெரியவர்கள்
ஒன்றுகூடிக் கூட்டம் நடத்தி விவாதிக்க ஆரம்பித்தார்கள். இந்தக் குரங்கை
இப்படியே விட்டால் இது மேலும் பல குரங்குகளை ஊருக்குள் கூட்டிக்கொண்டு
வந்துவிடும். ஆகவே இதை ஊரைவிட்டே ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

எப்படி ஓட்டுவது? சும்மா போ என்று சொன்னால் அது போகுமா?

ஒரு குரங்கு பிடிக்கும் ஆசாமியை ஏற்பாடு செய்தார்கள். அவன் பேரம் பேசி,
ஐநூறு ரூபாய் கொடுத்தால் அதைப் பிடித்துக் கொண்டு போய் விடுகிறேன் என்றான்.
சரி என்றார்கள்.

வந்த குரங்காட்டி, ஊருக்கு மையத்தில் இருக்கும், ஆலமரத்தடியில், வாய்ப்பகுதி
குறுகலாகவும் கழுத்துப் பகுதி உயரமாகவும், அடிப்பகுதி பெரிதாகவும் இருக்கும்
பானை ஒன்றை வைத்தான்.

அதில் நிலக்கடலைக் கொத்துக்களை உட்பகுதியில் போட்டு வைத்தான். அதோடு
நான்கைந்து கொத்துக்களை பானையைச் சுற்றி இருக்கும் பகுதியிலும் போட்டு
வைத்தான்.

அப்படிச் செய்ததோடு, பக்கத்தில் இருந்த சின்னக் கோவிலுக்குள் சென்று ஒளிந்து
கொண்டு, பானையைக் கண்காணிக்க ஆரம்பித்தான். யாரையும், அந்தப் பகுதிக்குச்
சற்று நேரம் வரவேண்டாம் என்று சொல்லி விட்டான்.
---------------------------------------------------------------------------------------------------------
கிராமத்தில் தனது காலை ரவுண்ட்ஸை முடித்துக் கொண்டு, ஆலமரத்திற்குத்
திரும்பிய நமது நாயகன் குரங்காரின் கண்ணில் பானையும், அதைச் சுற்றிக்
கிடந்த கடலைக் கொத்துக்களும், கண்ணில் பட்டன.

ஒரு கொத்தைத் தனது கைகளால் லாவகமாகப் பற்றி, வாயில் வைத்துக்
கடித்துப்பார்த்தார். அதன் தோல் பகுதி உடைந்து, கடலை வாய்க்குள் சென்றதும்,
சுவையாக இருந்தது. உடனே அடுத்துக் கைகளாலேயே தோலை உடைத்துப்
பருப்பைக் கையில் எடுத்து சுவைத்துப் பார்த்தார்.

அமிர்தமாக இருந்தது. பச்சைக்கடைலை, அதுவும் சற்று நேரத்திற்கு முன்புதான்
நிலத்தில் இருந்து பறித்துக் கொண்டு வரப்பட்ட கடலை. மிகவும் சுவையாக
இருந்தது.

"அடப் பாவி உலகமே!", இது என் கண்ணில் இத்தனை நாட்களாகப் படாமல்
போனது என்று நம்மைப் போலக் கேட்காமல், மள மளவென்று கீழே சிதறிக்
கிடந்த நான்கைந்து கொத்துக்களையும் முதலில் காலி செய்தார்.

அடுத்து, பானைக்குள் எட்டிப் பார்த்தார். அதில் அரைப்பானை அளவுக்குக்
கடலை இருப்பது தெரிய வந்தது.

உடனே பானைக்குள் தன் திருக்கரத்தை விட்டுப் பார்த்தார். கடலை இருக்கும்
இடம் வரை கை சற்றுப் பிரயத்துடன் சென்றது. கடலைக் கொத்தை அள்ளிக்
கொண்டு கையை மேலே எடுக்க முயன்றார். கை எடுக்க வரவில்லை.

ஏன் எடுக்க வரவில்லை? கொத்துடன், மணிக்கட்டுப் பகுதி சற்று விரிவடைந்ததால்
எடுக்கவரவில்லை.

கடலைக் கொத்தை விட்டு விட்டுக் கையை வெளியே எடுத்துவிடலாமா? அப்படி
எடுத்தால் வந்து விடும். ஆனால் மனம் வரவில்லை. கொத்தை எடுக்காமல்
விடுவதா?

கை வெளியே வரவில்லை. பானை மட்டும் கையுடன் வந்தது.

அப்போதுதான் அது நடந்தது.

அங்கே ஒரு சுறுக்குக் கயிறு, மட்டும் ஒரு பெரிய சாக்குப் பையுடன் வந்த
குரங்காட்டி, குரங்கின் கழுத்தில் சுருக்கை மாட்டி லாவகமாகக் குரங்கைப்
பிடித்ததோடு, சாக்குப் பைக்குள் அதைப் பிடித்தும் போட்டார்.

சாக்குப்பையை இறுக்கக் கட்டினார். குரங்காரின் அடுத்த கட்ட வாழ்க்கை
துவங்கியது.

கையில் மாட்டிய பானையால், ஓடவும் முடியாமல், போராடவும் முடியாமல்
ஏன் எந்தவித எதிர்ப்பையும் காட்ட முடியாமல், குரங்கார் வசமாகச் சிக்கிக்
கொண்டார்

அதற்குப் பிறகு என்ன நடந்தது?

அந்தக் குரங்கைத் தன்னுடன் தூக்கிச் சென்ற குரங்கு பிடிப்பவர், பத்து நாட்களுக்கு
அதைப் பட்டினி போட்டதுடன், புளிய விளாரால், அதை அடித்துத் துவைத்து தன்
வழிக்குக் கொண்டு வந்தார்.

பிறகு அதற்குப் பல பயிற்சிகளைக் கொடுத்தார்.

முதல் பயிற்சி சொன்னதைச் செய்யும் பயிற்சி.

மூன்று மாதப் பயிற்சிகளுக்குப் பிறகு, ஒரு குரங்காட்டியிடம் ஆயிரம் ரூபாய்க்கு
அதை விற்று விட்டார்
------------------------------------------------------------------------------------------
இப்போது அந்தக் குரங்கு, சென்னை சிந்தாரிப்பேட்டையிலும், தி.நகரிலும்
வடபழனிக் கோவில் அருகிலும் நின்று பலரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

"ராமா, தண்ணி எடு" என்றால் தன் தோளில் ஒரு குடத்தை வைத்துக் கொண்டு
தண்ணி எடுக்கும். "ராமா, இந்தக் கயிற்றைத் தாண்டு" என்றால் கயிற்றைத் தாண்டும்.

சுடிதார் போட்ட இளம் பெண்களைக் கண்டவுடன், "ராமா ஸ்கிப்பிங் ஆடு " என்றால்
குரங்கு ஸ்கிப்பிங் ஆடி அவர்களை மகிழ்விக்கும்.

மொத்தத்தில் குரங்கு ஒரு நாளைக்குப் பன்னிரெண்டு மணி நேரம் உழைத்தது.
அரை வயிற்றிற்கு மட்டுமே அதற்கு உணவு கிடைத்தது. பிக் அப் அண்ட் டிராப்பிங்
வசதி மட்டும் அதற்கு இலவசம். குரங்காட்டியின் தோளில் அமர்ந்து கொண்டே
சிங்காரச் சென்னையை அது வலம் வந்தது.

சென்னை வெய்யிலில் கறுத்தும் போய்விட்டது. மெலிந்தும் போய்விட்டது.

சந்தோஷம் என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது

துவக்கத்தில் அரசனாக இருந்த குரங்கு, பானைக்குள் கைவிட்ட ஒரே காரணத்தினால்
இன்று ஆண்டியாகிப் போய் விட்டது
---------------------------------------------------------------------------------
மனித வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான்!

பானை என்பது ஆசை!

வாழ்க்கைச் சூழ்நிலை, ஆசையால் ஏற்படுத்திக் கொண்ட பொறுப்புக்கள்,
(Circumstances, commitments) குரங்காட்டியாகும்!
--------------------------------------------------------------------------------
ஆசைதான் உன் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்கிறது மெய்ஞானம்.

ஆசைப்படுவதை நிறுத்ததே, உன் வளர்ச்சி நின்று போய் விடும் என்கிறது விஞ்ஞானம்.

எதைக் கடைப்பிடிப்பது?

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்!

(தொடரும்)வாழ்க வளமுடன்!

45 comments:

Arulkumar Rajaraman said...

Dear Sir,

Nice Story. Sir Iam waiting for your lesson sir.

Again Iam waiting for your next lesson sir..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

you are a fast reader and fast writer.

JavaScript sir..typo mistake JAWA Script. and Vanathil instead of Varathil...

Asai Enpadhu irukkavedum..(Achiever)
Perasai Enpadhu Irukkakoodadhu..
(Looser)

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

வேலன். said...

கதை அருமை அய்யா,

மனம் ஒரு குரங்கு - மனித மனம் ஒரு குரங்கு என பாடினார்கள்.அந்த குரங்குக்கு மனிதனின் மனம் வந்ததால் வந்த வினை அனுபவிக்கிறது.இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டால் பின்னர் அவதிப்பட வேண்டியது தான்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஸ்ரீதர்கண்ணன் said...

சார் ஆசை இல்லை என்றால் வாழ்க்கை சுவாரசியம் அற்றதாக ஆகி விடும்.

krish said...

Good story.

Arulkumar Rajaraman said...

Dear Sir

"Asai Illa Manithar thammai Thunpam Engae Nerungum
Ponnil Inbam Pugalil Inbum Endrea Nenjam Mayangum"
--- Kannadhasan

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

Ondre Solvar Ondre Seivar Ullathil Ulladhu Amaidhi
"Asai", Kalavu enpadhu manitha vadivil pesa therindha mirugam

--- Kannadhasan

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

SP.VR. SUBBIAH said...

////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir,
Nice Story. Sir Iam waiting for your lesson sir.
Again Iam waiting for your next lesson sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

இதுவும் பாடம்தான். அடுத்த பாடத்திற்கான முன்னோட்டம்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
you are a fast reader and fast writer.
JavaScript sir..typo mistake JAWA Script. and Vanathil instead of Varathil...
Asai Enpadhu irukkavedum..(Achiever)
Perasai Enpadhu Irukkakoodadhu..
(Looser)
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

தட்டச்சுப் பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன்!

sridhar said...

சார் ஆசைப்படுவதை நிறுத்த வேண்டும் என நினைப்பதும் ஒரு விதமான ஆசைதானே?
பிறகு எப்படி நிம்மதியாக வாழ முடியும்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger வேலன். said...
கதை அருமை அய்யா,
மனம் ஒரு குரங்கு - மனித மனம் ஒரு குரங்கு என பாடினார்கள்.அந்த குரங்குக்கு மனிதனின் மனம் வந்ததால் வந்த வினை அனுபவிக்கிறது.இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டால் பின்னர் அவதிப்பட வேண்டியது தான்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

நன்றி வேலன்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger ஸ்ரீதர்கண்ணன் said...
சார் ஆசை இல்லை என்றால் வாழ்க்கை சுவாரசியம் அற்றதாக ஆகி விடும்.//////

உண்மைதான். ஆசைப்படுவதில் தவறில்லை!
அதிகம் ஆசைப்பட்டால் என்ன ஆகும்? சுவாரசியம் அதிகமாகுமா?:-)))))
அதுதான் கேள்வி!

SP.VR. SUBBIAH said...

//////Blogger krish said...
Good story./////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
"Asai Illa Manithar thammai Thunpam Engae Nerungum
Ponnil Inbam Pugalil Inbum Endrea Nenjam Mayangum"
--- Kannadhasan
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///////

பதிவிற்குத் தொடர்புடைய கவியரசரின் வைர வரிகளை எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Ondre Solvar Ondre Seivar Ullathil Ulladhu Amaidhi
"Asai", Kalavu enpadhu manitha vadivil pesa therindha mirugam
--- Kannadhasan
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////////

பதிவிற்குத் தொடர்புடைய கவியரசரின் வைர வரிகளை எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger sridhar said...
சார் ஆசைப்படுவதை நிறுத்த வேண்டும் என நினைப்பதும் ஒரு விதமான ஆசைதானே?
பிறகு எப்படி நிம்மதியாக வாழ முடியும்?////////

கேள்வி நிம்மதியைப் பற்றியதல்ல! வாழ்வியல் துன்பத்தைப் பற்றியது!
ஆசைப்படுவதை நிறுத்த வேண்டும் என்பதில் துன்பம் இருக்கிறதா? என்ன?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

அருமை.. அருமை..

வாழ்க்கையில் அனைவருமே கேட்டுக் கொண்டு விடை தெரியாமல் முழிக்கும் ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்..

தங்களது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

விதியா..? மதியா..? எது வெல்லும்..

ஆசைப்பட வேண்டுமா? வேண்டாமா..? இதில் எது மனித வாழ்வை உய்விக்கும்..

பதில் சொல்லுங்கள்..

Ragu Sivanmalai said...

கதையின் ஒரு முக்கியமான பாராவில், உங்கள் கதையின் மறைமுக பொருளை கண்டு கொண்டேன்.

govind said...

good story...i am also waiting for ur next lesson

Sridhar said...

அய்யா,

ஆசை தான் மனிதனை ஆழ்ந்த துன்பத்தில் தள்ளி விடுகிறது.

நீங்கள் குறுப்பிட்டு உள்ளது போல் ஆசையினால் மனிதன் பானைக்குள் (Machine) போனது போல் சித்தரிக்க பட்ட சுமார் ஒரு நிமிடம் ஓடும் படம் உள்ளது. சக மாணவ செல்வங்களுடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு மின்-அஞ்சல் செய்யவா?

நன்றி,

ஸ்ரீதர்

மதி said...

>>>ஆசைதான் உன் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்கிறது மெய்ஞானம்.

ஆசைப்படுவதை நிறுத்ததே, உன் வளர்ச்சி நின்று போய் விடும் என்கிறது விஞ்ஞானம்.<<<<

அளவாக ஆசைப்படுங்கள்..... வாழ்வியல் துன்பம் கட்டுபட்டில் இருக்கும்..

SP.VR. SUBBIAH said...

///////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
அருமை.. அருமை..
வாழ்க்கையில் அனைவருமே கேட்டுக் கொண்டு விடை தெரியாமல் முழிக்கும் ஒரு விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்..
தங்களது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
விதியா..? மதியா..? எது வெல்லும்..
ஆசைப்பட வேண்டுமா? வேண்டாமா..? இதில் எது மனித வாழ்வை உய்விக்கும்..
பதில் சொல்லுங்கள்..//////

நாளை வரை பொறுத்திருங்கள் தமிழரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Ragu Sivanmalai said...
கதையின் ஒரு முக்கியமான பாராவில், உங்கள் கதையின் மறைமுக பொருளை கண்டு கொண்டேன்./////

நீங்கள் சிவன்மலைக்காரர் கண்டுபிடிக்காமல் இருப்பீர்களா?

SP.VR. SUBBIAH said...

///////Blogger govind said...
good story...i am also waiting for ur next lesson////

அடுத்த பாடம் தொடர்ந்து வரும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger Sridhar said...
அய்யா,
ஆசை தான் மனிதனை ஆழ்ந்த துன்பத்தில் தள்ளி விடுகிறது.
நீங்கள் குறுப்பிட்டு உள்ளது போல் ஆசையினால் மனிதன் பானைக்குள் (Machine) போனது போல் சித்தரிக்க பட்ட சுமார் ஒரு நிமிடம் ஓடும் படம் உள்ளது. சக மாணவ செல்வங்களுடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு மின்-அஞ்சல் செய்யவா?
நன்றி,
ஸ்ரீதர்/////

ஆகா, செய்யுங்கள்! அதில் தயக்கத்திற்கு என்ன இருக்கிறது?

SP.VR. SUBBIAH said...

//////Blogger மதி said...
>>>ஆசைதான் உன் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்கிறது மெய்ஞானம்.
ஆசைப்படுவதை நிறுத்ததே, உன் வளர்ச்சி நின்று போய் விடும் என்கிறது விஞ்ஞானம்.<<<<
அளவாக ஆசைப்படுங்கள்..... வாழ்வியல் துன்பம் கட்டுபட்டில் இருக்கும்../////

அந்த அளவு என்ன என்பதில்தான் முதல் பிரச்சினை! நாளைய பதிவில் சொல்கிறேன்!

Geekay said...

கதை அருமை அய்யா,

மனித வாழ்க்கையில் நடப்பதை அழகாக கதையாக கூறியுலீர்கள்
பாடத்தை எதிர்பார்க்கும் மாணவன்.

GK,BLR

anna said...
This comment has been removed by a blog administrator.
Sumathi. said...

ஹலோ சார்,

அது சரி, ஆசையே இல்லாத வாழ்வா? ம்ஹூம் நல்லாவே இருக்காது, ஆசைவேண்டியது தான் ஆனா அளவோட இருந்தா எந்த பிரச்சனையும் வராது.உதாரணதுக்கு என்னையே எடுத்துக்கோங்க, நீங்க நம்பித்தான் ஆகனும் எனக்கு தங்கத்து மேலயும், பட்டு மேலயும் ஷேர் மார்க்கட்டுலயும் ஆசையே வரவே மாட்டேங்குது.அதனாலயே என்ன என் கணவருக்கு பிடிக்கும், இந்த விஷயங்கள்ல மட்டும்.எனக்கு தீபாவளிக்கு என்னோட நலம்விரும்பும் நண்பர் பரிசா 2 தங்க காசு வாங்கி குடுத்தாரு,மறுபடியும் நம்புங்க நான் அத வாங்கிக்கவே இல்ல.அதுக்கு பதிலா நான் கேட்டது என்னை நல்ல அழகான நான் பார்க்காத ஊருக்கு கூட்டிட்டு போங்க என்று.அவருக்கு ரொம்பவே ஆச்சர்யமாயிடுச்சு, இப்படியும் ஒரு பெண்ணா என்று.எனக்கு ஆசை அளவோடு தான்.

பாஸ்கர் said...

நாளைய பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !
இன்றைய பாடத்திற்கு வந்தனங்கள்

Namakkal Shibi said...

//நாளைய பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !
இன்றைய பாடத்திற்கு வந்தனங்கள்//

நானும்!

வடிவேலன் .ஆர் said...

அட என்னா மாதிரி பதிவு நல்லா இருந்தது கதையும் கதையும் நாயகனும்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger Geekay said..
கதை அருமை அய்யா,
மனித வாழ்க்கையில் நடப்பதை அழகாக கதையாக கூறியுலீர்கள்
பாடத்தை எதிர்பார்க்கும் மாணவன்.
GK,BLR//////

நன்றி ஜீக்கே! பாடம் தொடர்ந்து வரும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sumathi. said...
ஹலோ சார்,
அது சரி, ஆசையே இல்லாத வாழ்வா? ம்ஹூம் நல்லாவே இருக்காது, ஆசைவேண்டியது தான் ஆனா அளவோட இருந்தா எந்த பிரச்சனையும் வராது.உதாரணதுக்கு என்னையே எடுத்துக்கோங்க, நீங்க நம்பித்தான் ஆகனும் எனக்கு தங்கத்து மேலயும், பட்டு மேலயும் ஷேர் மார்க்கட்டுலயும் ஆசையே வரவே மாட்டேங்குது.அதனாலயே என்ன என் கணவருக்கு பிடிக்கும், இந்த விஷயங்கள்ல மட்டும்.எனக்கு தீபாவளிக்கு என்னோட நலம்விரும்பும் நண்பர் பரிசா 2 தங்க காசு வாங்கி குடுத்தாரு,மறுபடியும் நம்புங்க நான் அத வாங்கிக்கவே இல்ல.அதுக்கு பதிலா நான் கேட்டது என்னை நல்ல அழகான நான் பார்க்காத ஊருக்கு கூட்டிட்டு போங்க என்று.அவருக்கு ரொம்பவே ஆச்சர்யமாயிடுச்சு, இப்படியும் ஒரு பெண்ணா என்று.எனக்கு ஆசை அளவோடு தான்.//////

நீங்கள் உதாரணப் பெண்மணி! வாழ்த்துக்கள் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

//////Blogger பாஸ்கர் said...
நாளைய பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !
இன்றைய பாடத்திற்கு வந்தனங்கள்//////

பாடம் தொடர்ந்து வரும்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger Namakkal Shibi said...
//நாளைய பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் !
இன்றைய பாடத்திற்கு வந்தனங்கள்//
நானும்!//////

பாடம் தொடர்ந்து வரும் சிபியாரே

SP.VR. SUBBIAH said...

/////Blogger வடிவேலன் .ஆர் said...
அட என்னா மாதிரி பதிவு நல்லா இருந்தது கதையும் கதையும் நாயகனும்./////

நன்றாக இருந்தால் மகிழ்ச்சிதான்!

Sridhar said...

//////Blogger Sridhar said...
அய்யா,
ஆசை தான் மனிதனை ஆழ்ந்த துன்பத்தில் தள்ளி விடுகிறது.
நீங்கள் குறுப்பிட்டு உள்ளது போல் ஆசையினால் மனிதன் பானைக்குள் (Machine) போனது போல் சித்தரிக்க பட்ட சுமார் ஒரு நிமிடம் ஓடும் படம் உள்ளது. சக மாணவ செல்வங்களுடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு மின்-அஞ்சல் செய்யவா?
நன்றி,
ஸ்ரீதர்/////

ஆகா, செய்யுங்கள்! அதில் தயக்கத்திற்கு என்ன இருக்கிறது?

///

I have already sent to your mail id sir.

Best Wishes,

Sridhar

KS said...

நாளைய பதிவைப் படிக்க ஆசைப்படலாமா ,ஆசைபடக்கூடாதா

VA P RAJAGOPAL said...

Nice story.. prolonged meaning

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sridhar said...
//////Blogger Sridhar said... அய்யா,
ஆசை தான் மனிதனை ஆழ்ந்த துன்பத்தில் தள்ளி விடுகிறது.
நீங்கள் குறுப்பிட்டு உள்ளது போல் ஆசையினால் மனிதன் பானைக்குள் (Machine) போனது போல் சித்தரிக்க பட்ட சுமார் ஒரு நிமிடம் ஓடும் படம் உள்ளது. சக மாணவ செல்வங்களுடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு மின்-அஞ்சல் செய்யவா?
நன்றி,
ஸ்ரீதர்/////
ஆகா, செய்யுங்கள்! அதில் தயக்கத்திற்கு என்ன இருக்கிறது?
///
I have already sent to your mail id sir.
Best Wishes,
Sridhar/////

வந்தது நண்பரே! தனிப் பதிவாக வலையில் ஏற்றியுள்ளேன்!
நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger KS said...
நாளைய பதிவைப் படிக்க ஆசைப்படலாமா ,ஆசைபடக்கூடாதா/////

இது நக்கலா? நக்கல் இல்லையா?
படிக்க வேண்டாம் என்றால் படிப்பீர்களா? படிக்க மாட்டீர்களா?

SP.VR. SUBBIAH said...

//////Blogger VA P RAJAGOPAL said...
Nice story.. prolonged meaning////

நன்றி கோபால்!

Prasanna said...

Dear sir
One of my friend veeran asked me to go thro your blog and i found it very interesting . This story is really good and the moral is applicable to all of us . Yes , many times we too behave like this monkey only .Thanks for sharing .,

Prasan

SP.VR. SUBBIAH said...

/////Blogger Prasanna said...
Dear sir
One of my friend veeran asked me to go thro your blog and i found it very interesting . This story is really good and the moral is applicable to all of us . Yes , many times we too behave like this monkey only .Thanks for sharing .,
Prasan//////

உங்கள் வரவு நல்வரவாகட்டும்! முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் படியுங்கள்!