மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

25.6.15

Humour நகைச்சுவை: கனவில் தோன்றிய பூதம் என்ன செய்தது?


Humour நகைச்சுவை: கனவில் தோன்றிய பூதம் என்ன செய்தது?

ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதைக் கேள்?” என்றது.

“என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது.”

“அப்புறம்?”

“அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்.”

“அப்புறம்..?”

“ அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது.”

“அப்புறம்..?”

“எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்.”

“அப்புறம்..?”

“அவ்வளவுதான்.”

உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு ‘சாம்சங் s6’ ஸ்மார்ட் மொபைல் போனாக மாற்றியது!
-------------------------------------------------------------
2

நடுநிசியில் நடந்த கதை

நடுநிசியில் விழித்துப் பார்த்த மனைவிக்குத் திக்கென்றிருந்தது. பக்கத்தில் படுத்திருந்த கணவனைக் காணவில்லை.

நைட்டியை நன்றாகக் கட்டிக்கொண்டவள், படியிறங்கி வந்து வீட்டின் கீழ்த் தளத்தில் அவனைத் தேடத்துவங்கினாள்.

அவன் சமையல் அறையில் உள்ள மேஜை ஒன்றின் மீது அமர்ந்திருந்தான். சூடான காப்பி டம்ளரில் எதிரே இருந்தது.

அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். எதிரில் இருந்த சுவற்றை வெரிச்சிட்டுப் பார்த்துக் கொண்டும் இருந்தான்.

கண்ணில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டான். பிறகு காப்பி டம்ளரை எடுத்துக் குடிக்கத் துவங்கினான்.

சமையல் அறைக்குள் நுழைந்த மனைவி, “என்ன கண்ணா விஷயம்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

காப்பி டம்ளரை பக்த்தில் வைத்தவன் சொன்னான்,  “இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாம் சந்தித்தையும், காதலிக்கத் துவங்கியதையும் நினைத்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த சந்திப்புக்கள் உனக்கு நினைவில் இருக்கிறதா?”

மனைவி ஒரு நொடியில் உணர்ச்சி வயமானாள். நம் கணவன் எவ்வளவு சாதுவானன் என்று நினைத்ததோடு சொன்னாள்:” எப்படி மறக்க முடியும்?
எல்லாம் என் நினைவில் பசுமையாக உள்ளது!”

கணவன் மெளனமானான். வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை!

ஒரு நிமிடம் கழித்துப் பேசத்துவங்கினான்.

“எனது காரில் நாம் இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருக்கும்போது உன் அப்பாவிடம் மாட்டிக்கொண்டோமே - அது நினைவில் இருக்கிறதா?”

“ஆஹா...நினைவில் இருக்கிறது!” என்று சொன்னவள் அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவன் தொடர்ந்து சொன்னான்: “ அப்போது உன் தந்தை என்ன செய்தார்?
என் நெற்றிப் பொட்டில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்து அழுத்திப்
பிடித்தவாறு, என் பெண்ணை உடனே நீ கல்யாணம் செய்துகொள்.
இல்லை என்றால் 20 வருடம் நீ ஜெயிலில் கிடக்கும்படி செய்துவிடுவேன்.
அது என்னால் முடியும் - என்று சொன்னாரில்லையா?”

”அதுவும் என் நினைவில் இருக்கிறது கண்ணா!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் அவள்.

கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த நீரைத் துடைத்துக்கொண்டு அவன் சொன்னான்:

“அப்படி அவர் செய்திருந்தால், இன்று நான் விடுதலையாகியிருப்பேன்!

(பின் குறிப்பு: இதை படிக்கும் போது உங்களுக்கு உங்கள் சொந்தக்கதை ஏதாவது நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல)
==============================================
இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

kmr.krishnan said...

இரண்டுமே நன்றாக இருந்தாலும் முதல் நகைச்சுவைதான் அம்சம்.

என் இல்லத்தரசி என் கைபேசி ஒலிக்கும் போதெல்லாம் 'உங்கள் ஆசை மனைவி சிணுங்குகிறாள்' என்றுதான் கூப்பிட்டுச் சொல்வார்கள்.

வேப்பிலை said...

1 சாம்சுங் விளம்பரம்
2 நைட்டியை கட்டிக்க முடியாது போட்டுக்கத்தான் முடியும் (மாற்றி சொல்லிவிட்டீர்களோ என நினைத்தேன்)

மறுபடியும்
மன்னிக்க இரண்டும்

ருசிக்கவில்லை அதனால்
ரசிக்கவில்லை

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
இரண்டுமே நன்றாக இருந்தாலும் முதல் நகைச்சுவைதான் அம்சம்.
என் இல்லத்தரசி என் கைபேசி ஒலிக்கும் போதெல்லாம் 'உங்கள் ஆசை மனைவி சிணுங்குகிறாள்' என்றுதான் கூப்பிட்டுச் சொல்வார்கள்./////

உங்களுடைய ரசனை உணர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
1 சாம்சுங் விளம்பரம்
2 நைட்டியை கட்டிக்க முடியாது போட்டுக்கத்தான் முடியும் (மாற்றி சொல்லிவிட்டீர்களோ என நினைத்தேன்)
மறுபடியும்
மன்னிக்க இரண்டும்
ருசிக்கவில்லை அதனால்
ரசிக்கவில்லை //////

இடுப்புப் பகுதியில் நாடாவைத்த நைட்டிகள் உள்ளன. அது தெரியுமா? தெரியாதா?

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
சாம்சங் விளக்கம் அருமை.
கணவனின் உரையாடல் மறைந்த திரு.சஞ்சய் காந்தியை நினைவு படுத்தியது. அவர் மறைவதற்க்கு முன் நடந்த உரையாடலோ?
இன்று வெள்ளிக்கிழமை ராமசாமி வர மறந்து விட்டாரோ?-பாதிப் புதிர்?
நன்றியுடன்,
-பொன்னுசாமி.