மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

5.6.15

Half Quiz: பாதி புதிர்: “சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா?


Half Quiz: பாதி புதிர்: “சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா?

Quiz No.86

5.6.2015

சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்

ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர்
வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க
நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்
படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.

அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச்
சென்று, எவ்வளவு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர்
தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக
இருப்பார்கள்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா 
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”

என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும்
அறியப் பாடலாகச் சொன்னார்.

மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.

தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒரு
முறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட
மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற
தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று
ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது
வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே
செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே
அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல்
போய்விடும்.

வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது
மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அதைத் தெரிந்துகொள்ளும் முகமாக ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்
---------------------------------------------------


மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்

1. ஜாதகர் தன் சொந்த ஊரை விட்டு 2,800 கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊரில் வேலை பார்க்கும்படியானது. அதற்கு ஜாதகப்படி என்ன காரணம்?

2. ஜாதகர் பணி ஓய்வு பெற்ற பிறகும் தன் விருப்பப்படி தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து இருக்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம்?

3. அவருடைய 70வது வயதில்தான் அவருடைய விருப்பம் நிறைவேறியது. அதாவது 30 வயதில் ஊரைவிட்டுச் சென்றவர், 40 ஆண்டுகள் கழித்துத்தான் தன் எண்ணப்படி சொந்த ஊருக்குத் திரும்பிவந்து மகிழ்ந்தார். அதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30 comments:

SSS CONSTRUCTION said...

1. LAGNA LORD MARS IS IN 12TH HOUSE SO HIS LIFE IS NOT USE FOR HIM
2. COMPARING 4TH AND 9TH LORD 4TH LORD IS IN 6TH PLACE FROM KADAGAM AND 9TH LORD IS GURU IS IN HIS OWN HOUSE SO THE 9TH LORD IS STRONG COMPARING 4TH LORD SO HE WAS NOT ABLE TO STAY IN HIS OWN PLACE HE MUST LIVE ON SOME OTHER PLACE FROM HIS OWN PLACE

3.RAGU DASA PERIOD HE CAME IN HIS OWN PLACE.

Chandrasekaran Suryanarayana said...

QUIZ NO: 86 வணக்கம்.
17/03/1936 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை காலை 9.35.20 மணிக்கு தனுர் ராசி மூல நட்சத்திரத்தில், மேஷ லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார்.(இடம்: கோயம்பத்தூர்)
யோககார்கள் : குரு, சூரியன்.

இந்த ஜாதகம் கால சர்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. 30 வருடங்களுக்கு பிறகுதான் நல்ல பலன்கள் உண்டாகும்.
மேஷ லக்கினம் 30 பரல். குருவின்(6 பரல்) 5ம் பார்வை லக்கினத்தை பார்பதால் லக்கினம் பலம் பொருந்தியுள்ளது.
லக்கினாதிபதி செவ்வாய்(1 பரல்)12ம் வீட்டில் பலவீனமாக உள்ளது.

1.வெளி ஊரில் வேலை பார்க்கும்படியானதற்க்கு காரணம் :
36 வயதில் லக்கினாதிபதி செவ்வாய் தசை ஆரம்பம். யோககாரர் சூரியனுடன் லக்கினாதிபதி 12ம் வீட்டில் கூட்டு.
9 வீட்டில் 36 பரல் பலம் பொருந்தியுள்ளது.
9ம் வீட்டு அதிபதி பாக்கியாதிபதி 9ம் வீட்டிலேயே இருப்பதாலும், 12ம் வீட்டிற்க்கும்(அயனம், சயனம், போகம்) அவரே அதிபதியாகையால் மேலும் குரு இந்த ஜாதகருக்கு யோகத்தை தரகூடியவர், 12ம் வீட்டில் வந்து அமர்ந்து இருக்கும் சூரியனும் யோககாரர்.
9ம் வீட்டில் ராகு இருந்தால் ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும்.
10 வீட்டில் 31 பரல்.
நவாம்சத்தில் 10ம்வீட்டு அதிபதி சனியுடன் 9ம் வீட்டு அதிபதி குரு மேஷ ராசியில் கூட்டு.

2. ஊருக்கு திரும்பி வந்து இருக்க முடியவில்லை காரணம் :
10ம் வீட்டு அதிபதி சனி(3 பரல்) இந்த ஜாதகத்தில் அஸ்தங்கதம். 10ம் வீடு பாப கர்தாரி
யோகம் (ஒரு பக்கம் சனி, மறுபக்கம் ராகு).
6ம் வீட்டு அதிபதி புதனுடன் கூட்டு.
சனியின் 3ம் பார்வை லக்கினத்தின் மீது.
ராகு தசை 43 வயது முதல் 61 வயது வரை. குருவுடன் ராகு கூட்டு இருப்பதால் குரு தசை ராகு புக்தி முடியும் வரை ஊருக்கு திரும்பி வந்து இருக்க முடியவில்லை.

3. 70 வயதில் குரு தசை சூரிய புக்தியில் அவருடைய விருப்பம் நிறைவேறியது.
9ம் வீடு, 12ம் வீடு அதிபதி குருதசை 61 வயதில் ஆரம்பம்.
9ம் வீட்டில் சந்திரன் (7 பரல்) குருவுடன் கூட்டு. கஜகேசரியோகம் இருப்பதாலும், 12வீட்டில் வந்து அமர்ந்து இருக்கும் சூரியன் குருவிற்க்கு கேந்திரத்தில் இருப்பதாலும்,
அவருடைய விருப்பம் நிறைவேறியது.
சந்திரசேகரன் சூரியநாராயணன்

amuthavel murugesan said...

Respected Sir,

Sorry sir,I don't Know which house want to see.

even though I tried

1. This is his like. For wishes related to Chandran.

2. Chandran is the 4th lord.It sit in 6th place from 4th place

3. After 70th Age Guru with the chandran do his desire in the Guru Dasa.

With respected,
M.Santhi

Govindasamy said...

1. லக்கினாதிபதி செவ்வாய் 12ல் சூரியனுடன்

2. ஒன்பதுக்குரிய குரு 9ல் ஆட்சியுடன் இருப்பது. பாக்கியாதிபதி வலுத்து இருப்பதால் ஜாதகர் தொலைவில் இருந்தாலும் கஷ்டப்படவேண்டியிருக்காது.

3.4க்குரிய சந்திரனும் பாக்கியாதிபதியுடன் கூட்டு. அதுமட்டுமல்ல 9 ம் இடம் தொலைதூரப்பயணம் மற்றும் Higher education ஐ குறிப்பது என்பதால் வலுத்த ஒன்பதாம் இடம் இதை சாதகமாக்கியது. மேலும் அதில் இருந்த ராகுவும் துணையானது.

4. 12 ல் உள்ள சூரியதிசையில் சென்றவர் 9ல் உள்ள குருதிசையில் ஊருக்கு திரும்பியிருக்கிறார்.

murali krishna g said...

அய்யா ,
லக்னதையும் 3-ம் இடத்தையும் , பூர்வ புண்ய ஸ்தானத்தையும் நோக்கும் யோக ஜாதகன். குரு 9-ல் ஆட்சி. 12-ம் இட அதிபதியும் குரு. வெளி நாடு, வெளி இடத்தில பணி புரியும் யோகம்.. 9-ல் சந்திரனும் ராகுவும். 12-ல் சூரியனும் செவாயும் . வெளி இட வேலைக்கு 9-ம் இடம் பன்னிரண்டாம் இடமும் வலு பெற்று பரிவர்தனை அல்லது வேறு வகையில் வலுவாக இருக்க வேண்டும். 9-ம் 12-ம் இட அதிபதி குரு ஆட்சி. ஓடி போனவனுக்கு ஒன்பதில் குரு என்பதற்கு ஏற்ப வெளி மாநிலம் அல்லது வெளி நாடு சென்றார். சூரிய தசை. சந்திர தசை, செவ்வாய் தசை, ராகு தசை என தொடர்ந்து வந்த தசைகளில் வெளி இட உத்தியோகம் . லக்னாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருந்ததும் காரணம்.

குரு தசையின் சுய புக்தி முடிந்து சனி புதன் பக்தியும் முடிந்த பின் மூன்றாம் இட கேதுவின் புக்தியிலும் அதன் பின்னர் வந்த (11ம் இட) சுகர புக்தியிலும் சொந்த இடம் வந்து சேரும் பாக்கியம், பாக்ய ஸ்தான ஆட்சி குருவே இதற்கும் காரணம்.

sorna sekar said...

laknathipathy 12il maraivu, poorvapunniyathipathi(5th place) 12il maraivu so durathil vachithar, 70 vayathukumael kuruthisaiyil (pakkiyathipathi 9thplace)ooruku vara mudinthatu.thank you sir

kmr.krishnan said...

ஜாதகர் 17 மார்ச் 1936, காலை 9 மணி 35 நிமிட்ம் 30 வினாடிக்குப் பிறந்தவர்.
பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

கால சர்பதோஷம்.எனவே வாழ்க்கையில் 30 வயதுவரை தவளிப்பு.பின்னர் புலிப் பாய்ச்சல்.

1. பன்னிரெண்டாம் வீட்டு அதிபதி குருபகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்ததால் தூரதேசத்தில் பணி செய்யப் போனார்.நான்காம் அதிபதி சந்திரன் 9ல் அமர்ந்தது.9,12 ம் அதிபதி குருஜி லக்கினத்தைப் பார்த்தது.5ம் அதிபதி சூரியன் 12ல் அமர்ந்தது.இவையும் அவர் பணி நிமித்தம் தூர தேசம் போவதைத் தூண்டின‌. மேஷ லக்கினம் சர லக்கினம். தூர தேசம் போக வைக்கும்.

2.ராகு தசா ஓய்வு பெறும் வரை நடந்தது அதாவது 1997வரை, 61 வயதுவரை நடந்தது. ராகுவும் கூட‌ வெளிநாட்டு வாசத்தைத் தரக்கூடியவர்.அவர் திசை முடியும் வரை ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

3.குருதசா சுக்கிரபுக்தியில் (சுக்கிரன்2,7க்கு உடையவர்) 2005ம் ஆண்டுக்குப்பின்னர் 70 வயது நெருங்கும் போது மீண்டும் ஊருக்கு வர வாய்ப்புக் கிட்டியது.

kmrk1949@gmail.com

Chandrasekharan said...

மதிப்பிற்குரிய ஐயா.. வணக்கம்.

வாழ்க்கையே மிகவும் போறாட்டமாக செல்கிறது. அதித மனஉளைச்சல் காரணத்தினால் கடந்த 3 புதிர்கலளுக்கு என்னால் விடையளிக்க முடியவில்லை. அதனை மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்த புதிர்க்கான விடை.
***********************
1.) 2800கி.மீ தொலைவில் பணிக்கு சென்றது எல்லாமே கிரகத்தின் பார்வை மற்றும் தசா புக்திகலால்தான்.

2.) கேது திசை 1 மாதம் 25 நாட்கள் கடந்து, 20 ஆண்டுகள் சுக்ரன் திசை.

3.) சூரிய திசை 6 ஆண்டுகள்.

4.) 26 வயது கடந்து, 3-ம் இடம் பார்வை செய்யும் சந்திரன் திசை. 4-ம் அதிபதி சந்திரன் 3-ம் இடம் பார்பதால், சொந்த ஊரை விட்டு செல்ல வேண்டும்.

5.) 27 வயதில் வந்த செவ்வாய் புக்தி, 4-ம் பார்வையாக 3-ம் இட்த்தை பார்த்தாலும், தனது திசை முழுக்க (7 ஆண்டுகள்) ஜாதகர் வெளி நாட்டில்தான் இருக்க போகிறார் என்ற காரணத்தினால், தனது புக்தியில் ஒன்றும் செய்ய்யவில்லை. ஜாதகரை வெளிநாட்டிற்க்கு, அனுப்பவில்லை. அதற்கு அடுத்து வந்த ராகு புக்தியும் அவ்வாரே செய்தது.

6.) 11/04/1965-இல் வந்த, 4-ம் அதிபதியுடன், இனைந்த குருவின் பார்வை 3-ம் இட்திற்கு கிடைப்பதால், சந்திரன் தசை குரு புக்தியில், ஜாதகர் வெளிநாட்டிற்கு சென்று விட்டர்.

7.) சந்திரன் திசை பிறகு, 3-ம் இட்த்தை பார்த்த செவ்வாய் திசை அடுத்து, 3-ம் இடத்தை பார்க்கும் ராகு திசை, அடுத்து 3-ம் இடத்தை பார்க்கும் குரு திசை. குரு திசை தொடங்கும்பொழுது அவரது வயது 61. இந்த ஜாதகத்தில் எந்த கிரகமும் 4-ம் அதிபதி (சந்திரன்) சாரம் பெறவில்லை என்பது சிரப்பு அம்சம். சுக்ரன் மட்டும் உப நட்சத்திரமாக சந்திரனை பெற்றுள்ளார். அதனால் குரு தசை சுக்ர புக்தியில், 2006-இல், 70வது வயதில் அல்லது குரு திசை சந்திரன் புக்தியில் 72வது வயதில் ஊர் திரும்பியிருப்பார்.

நன்றி.

seenivasan said...

Dear sir,
The reasons are as under
1.It is kala sarpa dosa Jhadam , after 30 years during moon dasa which is placed 9th place along with yogathipathi jubitor ( lord of ninth house had given a chance to move out of the country & and Mars also placed in 12 th house along with sun
2.mainly 9 th house placed planet along with 9th house lord has given the chance to stay in the abroad
3.after moon dasa9 placed in 9th house, maras dasa(placed in 12 th house, ragu dasa (placed in 9th house and Jubitor das (placed in 9th house and 9th house lord) stayed abroad.
4.During 11 th house lord dasa and mercury sub period the man could back to India.
thanks
G.Seenivasan, Bharuch, Gujarat

Ravichandran said...

Ayya,

1. 9th house Chandran did moving him to go away for work. Normally 9th house owner/sitting planet in 9th house will move him to another place for work/anything. That happened during Chandra desa.

2. During retirement life time, he was undergoing Guru desa. Even Guru is 9th house owner and he will make sure to stay away from home town.

3. If 5th house owner sitting in 12th house(viraya) means then 5th house benefits Poorva Punya staty will not be allowed. So he got chance of staying at home later life.

Your Student,
Trichy Ravi

kothanda ramar said...

வணக்கம்,
1)குரு சந்திரன் 9ல் அமைந்து உத்யோக காரகன் சனி சந்திரனுக்கு 3ல் அமைந்து வெளி மாநிலத்தில் வேளை அமைய காரணம்,
2)சனி 3ம் பார்வையாக லக்னத்தை பார்பப்பதாலும் 7ம் பார்வையாக 5ம் இடத்தை பார்ப்பதாலும் சொந்த ஊர் திரும்ப தாமத பட வைத்திருக்கும்.
3)குருவின் 12ம் வீட்டில் உள்ள 5ம் வீட்டதிபன் மற்றும் லக்ன அதிபன் செவ்வாய் மற்றும் குரு இவர்களால் வாழ்வின் இருதி நாட்களை தன் சொந்த ஊரில் க்ளைமாக்ஸ்க்கான அன்புடன் சொந்த ஊருக்கு வரவேற்பு நிகழ்த்தியிருக்கும்.
நன்றி

Sivachandran Balasubramaniam said...

மதிப்பிற்குரிய ஐயா !!!

புதிர் எண்: 86 இற்கான பதில் !!!

ஜாதகர் தணு ராசி, மூல நட்சத்திரம், மேஷ லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி செவ்வாய் 1 பரல்களுடன் விரைய ஸ்தானத்தில். கேது மற்றும் மாந்தி மூன்றாம் இடத்தில், கேது கொடிபிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம். லக்கினம் 30 பரல்கள். 30 வயது வரை தோஷம்.

ஒன்பதாம் அதிபதி ஒன்பதில் " ஒடரவனக்கு ஒன்பதில் குரு" ஒன்பதாம் வீடு 36 பரல். குரு ராகுவின் பிடியில். குரு சண்டாள யோகம். இந்த அமைப்பு, ஜாதகரை தன் சுய விருப்பங்களையும் மீறி வெளிதேசதிர்க்கு அனுப்பும். சந்திர திசை, குரு புத்தியில் ஜாதகர் வெளிநாடு சென்று இருக்க வேண்டும் !!! பத்தாம் அதிபதி சனி, லாபஸ்தானத்தில் !!! அவருடன் வெளிதேசம் அனுப்பும் காரகன் புதன் !!!!

30 வயது முதல் 70 வயது வரை நடந்த சந்திர, செவ்வாய், ராகு திசைகள் ஒன்பதாம் வீடு, மற்றும் அதன் அதிபதிகளுடன் சம்பந்தம் இருப்பதால் ஜாதகர் வெளிதேசத்தில் வாழ வேண்டிவந்தது. அயன சயன ஸ்தானத்தில் சூரியன் மற்றும் செவ்வாய். உற்றார், உறவினர்களை பிரிந்து வாழவேண்டி வந்தது.

61 ஆம் வயதில் வந்த குரு திசையில் சுக்கிர புத்தியில் சொந்த ஊர் திரும்ப வந்தார்.

இப்படிக்கு

சிவச்சந்திரன்.பா

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
பாதி புதிர் எண 3.
1, மேஷ லக்னம் .தனுசு ராசி.
2, கேது கொடிபிடிக்கும்** காள சர்ப்ப யோகம்** எல்லா கிரகங்களும் ராஹு கேதுவுக்கு வெளியே...
3. பூர்வீக இடத்தை விட்டு வெளியில் இருந்து பணம் சம்பாதிக்க சூரியன் & 9 மிடம் நன்றாக இருத்தல் வேண்டும் .
,,அதன்படி 9ம் வீட்டதிபதி குரு 9லே ஆட்சி பலத்துடன் உடன் மனகாரஹன் சந்திரன் &போக காரஹன் ராஹு .கர்ம தொழில் காரகனான சனி தனது வீடான கும்பத்தில் 11ம் வீட்டில் ஆதாயம்...
4. சூரியன் 12 ல் இருந்தாலும் உடன் 8ம் வீட்டதிபதி [அவனே லகனாதிபதியாகும் ]சேர்ந்து இருப்பதால் விபரீத ராஜ யோகம் ..

5.ஆகவே 30 வயதில் பூர்வீக இடத்தை விட்டு வேறு இடத்தில வேலையில் சம்பாதித்து 70 வயதில் மீண்டும் தனது ஊருக்கு வந்தார்
.
6.அதாவது .சந்திரா திசையில் சனி புக்தி ராஹு அந்தரத்தில் 30 வயது வெளிஊர் சென்று 70 வயதில் குரு திசை சுக்கிர புக்தி ராஹு அந்தரத்தில் மீண்டும் தனது ஊர் திரும்பினார். ..குரு 9ம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை [5 ஐ] தன் பார்வையில் வைத்துள்ளார் .
7..ஒரு விதத்தில் ராஹு இவருக்கு நல்லது செய்திருக்கிறார் அதாவது குரு சண்டாள யோகத்தில் இருப்பதால் ...சந்திரனும் 9மிடத்தில் இருப்பதால் இவரது மனோரதம் நிறைவேறி இருக்கிறது

Jaya Prakash said...

1.பிறந்த தேதி 16-3-1936 காலை லக்னம் மேஷம்.
9ம் வீடு நீண்ட பயண வீடு.அங்கு 9, 12 க்குஅதிபதி குரு,4ம் அதிபதி சந்திரன் இருவரும் கேது சாரம்+ராகு சேர்க்கை.10 ம் வீடும் சரம்,9,12 க்குஅதிபதி குரு சரலக்னத்தை பார்க்கிறார்.10 ம் வீடு சுப கர்த்தாரி, அசுப கர்த்தாரி யோகம் உள்ளது. 30 வது வயதில் சந்திர தசை குரு புத்தி கேது அந்தரத்தில் வெளியூர் பயணம்.
2.சந்திர தசை 6 வருடம், செவ்வாய் 7 வருடம்(சரலக்னாதிபதி 12ல் ஜலராசியில்), ராகு 18 வருடம்(9ம் வீட்டில்),. குரு தசையில் குரு புத்தி சூரிய அந்தரத்தில் ஒய்வு.. அதன் பிறகு குரு தசை கேது புத்தி வரை வெளியூரில்..(9,12க்கு அதிபதி 10க்கு 12ம் வீட்டில் வலுவாக இருந்தது மிக முக்கிய காரணம்)...
3.3.ஜாதகர் குரு தசை சுக்கிர புத்தியில் சூரிய அந்தரத்தில் பூர்வீக சொந்த இடத்திற்கு வந்திருப்பார்...(சுக்கிரன் 7ஆம் பார்வையால் 5 ஆம் வீட்டை பார்க்கிறார்)...bye bye

asbvsri said...

Answer to Quiz No: 86
ஜாதகர் 17/03/1936 ல் காலை 9.30 க்கு பிறந்தவர். 9 ஆம் வீட்டில் குரு ஆட்சியில், ராஹுவுடன். மேலும் 5 ஆம் அதிபதி சூரியன் 12ல் லக்னாதிபதியுடன். ஒன்று, ஐந்து, ஒன்பதாம் அதிபதிகள் ஜாதகரை தன் இருப்பிடத்தைவிட்டு கடல் கடந்து வெகு தூரத்தில் கொண்டு நிருத்தினார்கள்.
2ஆம் அதிபதி சுக்கிரன் 11ல் கும்பத்தில் நண்பர்கள் சனி, புதனுடன் – செல்வம் கொடுத்தார்கள். (11 ஆம் இடம் பாதகஸ்தானம் கூட). தன காரகன் 9ல். பரம்பரை பணக்காரர். குட்டி சுக்கிரன் குழந்தை பருவத்தில் கெடுத்தார். 5 ஆம் அதிபதி 12ல் மரணகாரகஸ்தானத்தில் நன்மை செய்யவில்லை. 4 ஆம் அதிபதி சந்த்ரன் தசையில் (1972 வரை - தாங்கள் 30 வயதுவரை என்று கூறியுள்ளீர்கள் - மன்னிக்கவும்) தாய் நாட்டில் வாழ வைத்தார். பின்னர் லக்னாதிபதி செவ்வாய் வெளியில் அழைத்து சென்றுவிட்டார்.
பின்னர் வந்த ராஹுவும் குருவும் (9ஆம் இடம்) வெளி நாட்டில் வாழவைத்தார்கள். குரு தசையில் சந்த்ர புக்தியில் தாய் நாடு திரும்பினார்.
K R Ananthakrishnan, Chennai

GANAMURUGU said...

Respected Sir,
1) 9th Lord GURU well placed in 9th house, own house, gave opportunity to the jatagar to go abroad and to stay there.
2) Further Chandran, Rahu combination in 9th place, which is also a powerful yogam, made the jatagar to stay in the foreign country.
3) This jatagar may went to foreign country in Sani pukthi of Chandra Dasa.
4) Kethu and Maanthi in 3rd house looking at 9th house made the jatagar to return to home town in Guru dasa.
G.Murugan

Manikandan said...

1. லக்கினாதிபதி செவ்வாய் + சூரியன் 12-ல் மறைவு. லக்கினாதிபதி 12ம் இடம் ஏறினால் வெளியூர் வாசம் .
2. ஜாதகரின் 30-ம் வயது வாக்கில் 7 1/2 சனி தொடங்கி இருக்கும். அதே சமயம் 9-ம் இடத்தியில் (9-ம் இடம் தூர தேசம் செல்வதிற்கானது )இருக்கும் சந்திரன் திசையும் நடைபெறுகிறது. இவை இரண்டும் சொந்த ஊரை விட்டு ஜாதகரை வெளியேற்றும். தொடர்ந்து வந்த செவ்வாய் மற்றும் ராகு திசைகளும் சொந்த ஊர் கனவை கனவாகவே வைத்திருந்திருக்கும்.
3. பின்பு வரும் குரு திசை சுக்கிரன் புக்தியில் சொந்த ஊர் திரும்பி இருப்பார்.
4. கால சர்ப்ப தோஷம் , 30 வயதிற்கு மேல் ஜாதகருக்கு தொழில் மேன்மைக்காக (நன்மை தரும் பொருட்டு) வெளியூர் செல்ல நிர்பந்தத்திற்கும் .

daya nidhi said...

(1).
4 ஆம் அதிபதி சந்திரன் 9 ல் இருக்கிறார்.குரு ஆட்சி,ராகுவும் உடன் இருக்கிரார். 9 ஆம் இடம் நீண்ட தூரம் செல்வதை குறீக்கும்.
ராகு வெளீ நாட்டை குறீக்கும்
ஆகவே சந்திர தசா , குரு புத்தியில் வெளி நாடு சென்று ஜீவனம் செய்தார்

(2)
பணி மூப்பு அடைந்த பிறகும் நாடு திரும்ப முடியாமல் போனதன் காரணம்
ராகு தசா நடந்ததே ஆகும்.(ராகு வெளி நாட்டை குறீப்பதால்)
(3)
2,7 க்குரிய சுக்ர தசா, 9, 12 க்குரிய குரு புத்தியில் சொந்த நாடு திரும்பினார்.9 ஆம் இடம் பாக்யம் மற்றும் அயன சயன ஸ்தானம்

வாய்ப்புக்கு நன்றி, தயாநிதி,அவியனூர்

Sakthivel K said...

வணக்கம் சார்.........
அன்பர் ஜாதகத்தில் லக்னாதிபதி12ல்.
5ஆம் அதிபதியும்12ல். இப்படியிருந்தால் சொந்தஊரில் சோபிக்கமுடியாது !!
குரு,சந்திரன்.சனி,சுக்ரன் கைகொடுத்ததால் வெளீயூரில் சுபிட்சமாக வாழ்ந்திருப்பார் !!
பாக்யாதிபதி குருதிசையில் சொந்தஊர் வந்திருப்பார்.......

bala said...

Vanakkam Iyya,

Intha puthir nandraaga ullathu. Pala naatkaluku piragu 9 aam idathai alasuvatharuku oru vaaipu alithatharku nandri :) :)

Veliyur, ullur idatham + velai paarpatharku 9 aam idam, athan athipathi aagiyavatrai paarka vendum

Jaathagar Mesha lagna kaarar. Lagnathipathi 12il.


9 aam athipathi - subha gramana Guru :) :)

Intha jaathagathil - 9 aam athipathi aatchi + 4 aam athipathi chandran + Raaaguvum ullargal

Ketu + Maandiyin paarvaiyum 9 aam idathirku

Oru pathivil neengal kuripitu irundhadhu nyabagathirku ullathu -- Enna thaan 10aam athipathi velai vaangi kuduthalum, 9aam athipathi kodi asaithaal thaan veliyur sella mudiyum endru.

Intha jaathagathil 9 aam athipathi sontha veetil nandraga amarnthu kodi asaikiraar.

Jathagaruku avarudaya moopathu vayathil - Chandra dasai Guru bukthi - Iru grahangalum 9 aam idathil. Ithuve avar velinadu sella kaaranamaaga irundhathu

Chandra dasai ku piragu lagnathipathi sevai dasai. Sevai 12il ullar avarum velinatile jathagarai iruka seithaar.

atharku aduthu vandtha 18 varuda ragu dasaai um avarai velinaatil iruka veithathu.

6 varudam chandra dasa(chandra dasa guru bukthiyil irundhu)
7 varudam sevai dasa
18 varudam ragu dasa

Pinnar vantha guru dasaium avaruku velinatile iruka veithathu.

Guru dasa sukira buthiyil jathagar thanathu sonnatha manirku thirumbinar.

Sukiran intha lagnathiruku 2 matrum 7 aam idathiruku athipathi.

nandri,
Bala

ARIMALAM said...

ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹா

யுவ வருஷம் பங்குனி மாதம் 4உ 16.3.1936 ல் பிறந்தவர்.

1. லக்னாதிபதி செவ்வாய் 12ல் ஜலராசியில் மறைவு. மிக தொலைவில்/வெளிநாட்டில் வாசம். 9/12ம் அதிபதி குருவும் ராஹுவும் (காரகன்) 10அதிபதி சனியும் லக்னத்தை பார்க்கிறார்கள். ராஹு/கேதுவின் பிடியில் ஜாதகர்.
2. 4ம்பதி - வாசம் இருப்பிடம் -சந்திரன்- 9ல் - மிக தொலைவில்/வெளிநாட்டில். ராஹு மற்றும் 9/12 அதிபதி குரு சேர்க்கை தனுசில்.
3. 7ம்பதி சுக்கிரன் கர்மகாரகன் சனி கூட்டு.
4. 30 வயதில் சந்திரதிசையில் ஏழரை சனியில் வெளிநாட்டுப் பயணம். செவ்வாய் (12ல்) திசை, 9ல் வெளிநாடு காரகன் ராஹு திசைகளில் வெளியிட வாசம். 9/12 ம்பதி குருதிசையில் பிரயாணம் தாய்நாட்டிற்கு.

வணக்கம்

Sankar Hariharan said...

Answer for the recent quiz
Respected sir
This is my First attempt and would request you to comment on my approach whether Iam atleast reaching a little of your expectation-
Guru is in 9th place ia an indication for the person to go abroad-The planet for skill Bhudan along with his freinds Sukran and the job provider Saturn , are in 11th place, the labha stanam, which provided the person a good job-Ketu dasa at birth is for a short time and after that Sukra dasa has further pushed his advancement-Mars, in the 12th place has never allowed a smooth going with the relatives and again when the Guru dasa started after the age, has bestowed the person to come back to his natives

h sankar-Kalyan -Maharashtra

slmsanuma said...

Kala Sarbha Thosa Jathagam
Laknathipathy is in 12th place to Laknam
Moon in 9th Place with Guru and Raghu.
This association causes foreign journey.
During Chandran Thisa He went to Foreign
During Guru Thasa he returned to Native Place

Dallas Kannan said...

Respected Sir
Hope I am not late to participate in the puzzle.

Respected Sir
1. 9th lord is n 9th place itself and with Moon.
2. Laknathipathi in 12 place from itself.
3. The dasas, Sun, Moon, Mars and Guru all in either 9th or 12 place did not allow him to return.

Anonymous said...

Lagna lord mars and 5th lord sun in 12th house. 4th and 9th lord in rahu's company. also 4th lord is 6th to the 4th house. Saturn debilitated in navamsa. so he might have faced some trouble times related to job.
Native might have returned to his place during jupiter dasha -moon sub period.

Thanks
sree

ponnusamy gowda said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
”எந்த ஊர் என்றவனே!, இருந்த ஊரைச் சொல்லவா, அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா!”
1).அன்பரின் ஜாதகத்தில் மேஷ லக்கினாதிபதி செவ்வாய் 12ல்.விரையத்தில் லக்னாதிபதி அவருக்கு பயன்படாது.5ம் பதி பூர்வபுண்ணியாதிபதி சூரியனும் லக்னாதிபதியுடன் கூட்டு.1+5 ம் பதிகள் கூட்டு யோகமான அமைப்பு 12ல் ஏற்ப்பட்டுள்ளதால் சொந்த ஊரை விட்டு வெளியே சென்று வாழ்ந்தாக வேண்டும்.
2). ஜாதகர் ராகு தசை முடிவில் பணிநிறைவு பெற்றதும் 61 வயதில் குரு தசை ஆரம்பம்.
குரு பகவான் 9 & 12க்கு அதிபதியானதால் முதல் 8 வருடங்கள் விரையாதிபதி பலனையும் கொடுத்து 70 வயதுவரை வெளியூரிலேயே இருத்திவைத்து, 9 மிட பாக்கிய ஸ்தான பலன் கொடுக்க ஆரம்பித்ததும் ஜாதகரை சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தது.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.

Kirupanandan A said...

1) 10ம் இடம் சர ராசியானது. சொந்த ஊரிலோ அல்லது அருகில் உள்ள ஊரிலோ வேலை கிடைப்பது கடினம். லக்கினாதிபதி 12ல் மறைந்துள்ளார். அது ஜல ராசியாகவும் ஆனது. (தொழில் சம்பந்தமாகப் பார்க்க லக்கினாதிபதியின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்)

2) 10ம் அதிபதி சனி 2,7ம் அதிபதி சுக்கிரனுடன் இருக்கிறார். வாழ்க்கைத் துணை, குடும்பம் இவை காரணம்.

3) ஆட்சி பெற்ற பாக்கியாதிபதி குரு தனது தசையில் ஜாதகருக்கு இந்த பாக்கியத்தைத் தந்தார்.

இவை பதிலுக்காக எழுதியது. எனக்கு முழு திருப்தி இல்லை. பின்னொரு நாளில் இதைப் பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்துக் கொள்கிறேன். உங்கள் விளக்கத்தையும் பார்த்த பிறகு.

Maripandian Gani said...

1. லக்னாதிபதி செவ்வாய், 5ம் அதிபதி சூரியன் இருவரும் 12ல் மறைந்ததால் ஜாதகர் தன் சொந்த ஊரில் வசிக்க முடியாது.

2. ஜாதகர் சந்திர தசை குரு புத்தியில் ஊரைவிட்டுச் சென்றிருப்பார். சந்திரன் 9ல், 12ம் அதிபதி குருவுடன் சேர்க்கை. இந்த ஜாதகருக்கு குரு 9/12ம் அதிபதியாகி 9ல் ஆட்சி மற்றும் மூலத்திரிகோணம் பெற்று வலுப்பெற்றது.

3. அடுத்து வந்த செவ்வாய் தசை (செவ்வாய் 12ல்), இராகு தசை (இராகு 9ல், 12ம் அதிபதி குருவுடன் சேர்க்கை), குரு தசை (12ம் அதிபதி) ஜாதகரை சொந்த ஊருக்கே வரவிடவில்லை.

4. இறுதியில், குரு தசை 2ம் பாதியில் குரு 9ம் அதிபதியாக செயல்பட்டு, 5ம் பார்வை லக்னத்திலும், 9ம் பார்வை 5ம் இடத்திலும் விழுவதால் அவருடைய விருப்பம் நிறைவேறி சொந்த ஊருக்குத் திரும்பி இருப்பார்.

kamal said...

is this applicable ifthis combination was there in 8th place

kannan Seetha Raman said...

வணக்கம் ஆசானே !

எட்டு வருடத்தை ( 8 ம் எண்ணுக்கு உரிய "சனி பகவானியின்", ஆசிவததால் ) கடக்க போகும் "குரு குலத்தில்", ( பள்ளி கூடத்தில் ) அதாம் ஐயா! வகுப்பறையில் இது வரை எத்தனையோ வகையான ஜாதகத்தை உதாரணமாக வகுப்பறையில் பாடம் ஆக சொல்லி தரும் தாங்கள் .

இந்த கலியுகத்தில் எம்முடைய அறிவிற்கு "நகைசுவைக்கு', கூட கேட்டு இல்லாத ஒரு கூத்தை பற்றிய 'ஜாதகத்தை", தாங்கள் எப்பொழுது சொல்லி தர உள்ளீர்கள் ஐயா .

யாம் தங்களுடைய மாணவன் அடியான் கூறுவது எல்லாம் உம்மை :-))

பெரிய பெரிய கடையில் "வியாபார நுணுக்கதினால்" இலவசமாக தருவார்களே

ஒரு பொருளை வாங்கினால்

"ஒன்று இலவசம்",

என்று அதனை போலவே ஒரு கூத்து நடந்து கொண்டு உள்ளது .

சரி புரியும் படி கூறுகின்றேன் சுப்பு ஐயா !

ஒரு "பெண்ணை கட்டியவனுக்கு", "இலவசமாக", மற்றும் ஒரு "பெண்ணை தருகின்றேன்", என்று "ஊர் மற்றும் உலகம் அறிய பிடிவாதம்", செய்கின்றார்கள் ஐயா !


இந்த கொடுமையை தங்களுடைய அனுபவத்தினால் ஆவது அறிந்து உள்ளீர்களா என்பதனை தங்களுடைய "சீடனுக்கு", கூற வேண்டி விருப்பி கேட்டு கொள்கின்றேன் ஐயா! .

யாரிடம் போகி இந்த கொடுமையை சொல்ல ஐயா ?


நன்றி! சுபம் ! மங்களம் உண்டாகட்டும் எம்பெருமான் அருளால்