எங்கே? எங்கே? இதெல்லாம் எங்கே போனது ராசா?
இயற்கை எங்கே?
பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
கோகோ விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே?
கில்லி எங்கே?
கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே
மட்டை ரெயில் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே?
குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே?
இஞ்சி மரப்பா எங்கே?
கோலி குண்டு எங்கே?
கோலி சோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே
எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?
பனம் பழம் எங்கே?
பழைய சோறு எங்கே?
நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே?
பண்பு எங்கே?
பாசம் எங்கே?
நேசம் எங்கே?
மரியாதை எங்கே?
மருதாணி எங்கே?
சாஸ்திரம் எங்கே?
சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே?
மண் உழுத எருதுகள் எங்கே?
செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே?
சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு எங்கே?
குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே?
ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே?
மண்புழு எங்கே?
வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
பனை ஓலை குடிசைகள் எங்கே ?
தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?
அந்த குளங்களும் எங்கே?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?
அம்மிக்கல் எங்கே?
ஆட்டுக்கல் எங்கே?
மோர் மத்து ?
கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?
தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?
சுத்தமான நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு எங்கே?
இதற்கு பாமரனாலும்,மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,ஏன் கணினியாலும் கூட பதில்
சொல்ல முடியாது.
ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
நேரம் தான் எங்கே? எங்கே
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Like Button இல்லை இருந்து இருந்தால் ஒரு Like போட்ருக்கலாம் :)
ReplyDeleteநல்லா இருக்கு.
ReplyDeleteபதிவைப் புகழும் வார்த்தைகள் எங்கே?
Super.
ReplyDeleteவகுப்பறை ஒன்ற போதுமே
ReplyDeleteவேற எல்லாம் எதற்கு
அருமை ஐயா
ReplyDeleteஇது நமது வேப்பிலை சுவாமிகள் உருவாக்கம் என்று நினைக்கிறேன். ஒருமுறை
ReplyDeleteமின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.
Already you podted this as whatsapp message
ReplyDeletegood post . have to add naattu madu to the list as we are losing indian desi cows which give A2 milk.today 95% indian people are drinking A1 milk from jersey cows which have BCM7 chemical.
ReplyDeletehttp://tamilnaducattle.blogspot.in/ - tamilnadu naattu maadugal
Anbudan vanakkam vathiyar ayya..,
ReplyDeleteEllame artificial.. Now a days mother' s love also artificial..". Why celebrating Mother's Day .....if son or daughter love their mother always no particular day. To wish......????!!!!.???? In future may be son's day... Daughter's day ...??????
//////Blogger Kamban said...
ReplyDeleteLike Button இல்லை இருந்து இருந்தால் ஒரு Like போட்ருக்கலாம் :)/////
Like Buttonஐ உள்ளிட ப்ளாக்கர் HTML Scriptஐப் பிரித்து உள்ளிட வேண்டும். அதற்கு நேரம் இல்லை. சமயங்களில் அது -பிரிக்கும் வேலை- சிக்கலை உண்டாக்கும்
////Blogger பழனி. கந்தசாமி said...
ReplyDeleteநல்லா இருக்கு.
பதிவைப் புகழும் வார்த்தைகள் எங்கே?/////
புகழும் வார்த்தைகள் எதற்கு? உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள், அனுபவஸ்தர்கள் பதிவுகளைப் படித்தால் போதாதா?
////Blogger tamilselvan said...
ReplyDeleteSuper./////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger பழனி. கந்தசாமி said...
ReplyDeleteநல்லா இருக்கு.
பதிவைப் புகழும் வார்த்தைகள் எங்கே?/////
புகழும் வார்த்தைகள் எதற்கு? உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள், அனுபவஸ்தர்கள் பதிவுகளைப் படித்தால் போதாதா?
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteவகுப்பறை ஒன்ற போதுமே
வேற எல்லாம் எதற்கு/////
அப்படியா? நீங்கள் சொன்னால் சரிதான்!
/////Blogger Ganapathi Eswari said...
ReplyDeleteஅருமை ஐயா/////
நல்லது. நன்றி!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇது நமது வேப்பிலை சுவாமிகள் உருவாக்கம் என்று நினைக்கிறேன். ஒருமுறை
மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்./////
எனக்கு வாட்ஸ்அப்பில் வந்தது.
////Blogger SELVARAJ said...
ReplyDeleteAlready you podted this as whatsapp message////
அப்படியா? கவனப் பிசகு! இரண்டாவது முறை படிக்கலாம். சுவாரசியமாகத்தானே உள்ளது சாமி!
//////Blogger arul said...
ReplyDeletegood post . have to add naattu madu to the list as we are losing indian desi cows which give A2 milk.today 95% indian people are drinking A1 milk from jersey cows which have BCM7 chemical.
http://tamilnaducattle.blogspot.in/ - tamilnadu naattu maadugal/////
ஆமாம். தண்ணீரும் இல்லை. விவசாயமும் இல்லை. அதற்கே மக்கள் கவலைப் படவில்லை. நாட்டு மாடுகளுக்கு யார் கவலைப்படப் போகிறார்கள் சாமி?
/////Blogger hamaragana said...
ReplyDeleteAnbudan vanakkam vathiyar ayya..,
Ellame artificial.. Now a days mother' s love also artificial..". Why celebrating Mother's Day .....if son or daughter love their mother always no particular day. To wish......????!!!!.???? In future may be son's day... Daughter's day ...??????////
அப்படியெல்லாம் நடக்கும். என்ன செய்வது? கலி முற்றிக்கொண்டு உள்ளது.