மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

4.6.15

விசித்திரங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!


விசித்திரங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்!

1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
             
2.  வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு
படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு
லிஃப்டகாவும் அமைகிறது..

3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண்
தான் கொள்ளை அழகு.!
 
4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க
ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

 5. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

6. 20. வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!
   
8. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும்
பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை
 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை..

10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. இன்று சங்கம் வைத்து
சாதி வளர்க்கிறார்கள்...

11. கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!
                     
12. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு
லீவு விடுகிறார்கள்..

13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

14.  ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலை
யோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம்
பேசுகிறோம்..

15.  ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்ப சாமி பஸ் விடுவீங்க?

வாட்ஸப்பில் வந்தது. அறியத் தந்துள்ளேன்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

B. Lakshmi Narayanan, Tuticorin said...

அருமை....

SELVARAJ said...

Super Ji

வேப்பிலை said...

5. முதியோர் இல்லத்திற்கு யாரோ பெற்றோரை தந்ததால் தான் இன்று நம்மில் சிலர் பணம் கொடுகிறாங்க, பொருள் கொடுகிறாங்க, உணவு கொடுகிறாங்க, உடை கொடுகிறாங்க..
ஆனா நீங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்கன்னு சொல்றீங்க..

kmr.krishnan said...

எல்லாக் கருத்துக்களுமே புன்னகையுடன் படிக்க வைத்தன‌.

டாக்டருடைய பணி பரிசோதித்து மருந்து எழுதுவதுடன் நின்றுவிடுகிறது.அல்லது
அறுவை சிகிச்சை அறையுடன் முடிந்துவிடுகிறது.அதன் பின்னர் மருத்துவ தாதிகள்,நர்ஸ்தான் நம்மைப் பேணிக் காக்கிறார்கள்.அதுசரி!நர்ஸ் என்றால் பெண் நர்ஸ் மட்டும் தானா? ஆண்களிலும் நர்ஸ் உண்டுதானே!

10, 15ம் பொருள் பொதிந்தவை. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

Ganapathi Eswari said...

அருமை

Kumaresan said...

//எல்லாக் கருத்துக்களுமே புன்னகையுடன் படிக்க வைத்தன‌.//
ஆமாம் கிருஷ்ணன் அண்ணே