மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.6.15

அதிரடி: அப்படிப் போடு ராசா!


அதிரடி: அப்படிப் போடு ராசா!

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தார்.

காலம் அந்தக் காலம். ஆண்டு சரியாகத் தெரியவில்லை. உத்தேசமாக
1931ம் ஆண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படிச் சென்றிருந்த பொழுது, சாதரண உடையில் இங்கிலாந்து
தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார். வழியில் அவர்
ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமைப் பார்த்தார். அங்கே சென்று
கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மதிப்புள்ள விலை உயர்ந்த கார்களாகும்.
காரை வைத்திருப்பதே பெருமைக்குரிய விஷயமாகும்.

அந்த சமயத்தில் ஷோரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை
அறியாமலும், ஏன் இவரைப் பற்றிக் கவலைப் படாமலும், ஷோரூம்
வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தியக்
குடிமகன் ஒருவனை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
அதைக் கண்ணுற்ற ராஜா தனது ஓட்டல் அறைக்குத் திரும்பி வந்து
விட்டார்.

பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச
உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமை அடைந்தார்.
ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையையும்
செலுத்தி வாங்கினார்.அவருடன் கார்களும் கப்பலில் உடன் வந்தன.

இந்தியா திரும்பிய பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய அந்தக்
கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும்  செய்தி ,விரைவில்
உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.


யாராவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்
கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்திகொண்டால்.
இது இந்தியாவில் குப்பை அள்ளப் பயன்படுகிறது என்று மக்கள்
ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது. அதன் காரணமாக
நிறுவனத்தின் மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத் தலைவர் ராஜா விஜய் சிங்கிற்கு ஒரு
அவசர தந்தி அனுப்பினார் அதில் தாங்கள் உடனடியாக எங்கள்
கார்களை குப்பை அள்ளப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்
.அதற்குப் பதிலாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை
இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

அதற்கு ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார்கள் மேல்
வெறுப்பு இல்லை உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை
போல் வெளியே வீசினார்கள். அதற்கு பதில்தான் நான் உங்கள்
கார்களை குப்பை அல்ல உபயோகித்தேன். முதலில் மக்களை
மதியுங்கள் என்று பதில் அனுப்பினார்.


வெள்ளைக்காரனுக்கு செவிட்டில்
அறைந்ததைப் போன்றிருந்தது.

இதல்லவா மனித நேயம். அதைச் செய்த ராஜா விஜய சிங்கை (இப்போது அவர் இருந்தால்) அப்படிப் போடு ராசா’ என்று சொல்லத் தோன்றுகிறது!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

hamaragana said...

Anbudan vanakkam vathiyar ayya
It was happened truly.. A royal salute to the king raja vijay Singh .....

daya nidhi said...

ராஜா விஜய்சிங் போன்றவர்கள் ,நமக்கு முதல்வராகவோ, பிரதமராகவோ வந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள்.
மிக உயர்ந்த பண்புள்ள மன்னர்கள் நம்மை ஆடசி செய்திருக்கிறார்களென நினைக்கும் போது மக்ழ்ச்சி அடைகிறேன்
நன்றி,
தயாநிதி, அவியனுர்

வேப்பிலை said...

மதிப்பா...
அப்படின்னா என்ன ...

இப்படித்தான்
இன்றைய இந்தியா

kannan Seetha Raman said...

வணக்கம் வாத்தியார் ஐயா!

இந்த அழைப்பிதல் பாதயாத்திரை நடத்திவரும்

"குருசாமி"

மற்றும்

"வாத்தியாரின்"

அனுமதியுடன் தான் அணைத்து வகுப்பறை மாணவர்கள் திருமலா திருப்பதி பாதயாத்திரையில் பங்கு பெரும் பொருட்டு அடியேன் தெரியபடுத்துகின்றேன் .


உலகம் முழுவதும் உள்ள வாத்தியாரின் வகுப்பறை மாணவர்களுக்காக மட்டும் இந்த சிறப்பு அழைப்பிதல்.

{வாத்தியாரின் வகுப்பறை மூலம் ( வலைமூலம்) ஆகும்.}

ஏழு குண்டலவாளா! வேங்கட ரமணா! கோவிந்தா கோவிந்தா!

சென்னை நங்கநல்லூர் - திருப்பதி திருமலை பாதயாத்திரை 13 ம் ஆண்டு உத்சவப் பத்திரிகை

மாலை அணிதல் மற்றும் விரதம் மேற்கொள்ளல் அழைப்பிதல் மடல் .

{ பாத யாத்திரையின் முழு விபரம் கொண்ட அழைப்பிதல் பின்னர் (இன்னும் ஒரு வாரத்தில்) முறைப்படி தெரிவிக்க படும்.}

பாதயாத்திரை தொடங்கும் நாள் ஜூலை 18 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு
நங்கநல்லூர் (சென்னை ).

திருமலா திருப்பதியை நடை பயணம் மூலம் சென்று அடையும் நாள் 22 ம் தேதி மாலை வேளையில் ஆகும்.

மொத்தம் 5 நாள்கள் நடை பயணம் ( ஜூலை - 18,19,20,21,22). ஆண்கள் , பெண்கள், குழைந்தைகள், சிறியவர் , பெரியவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம்.

பாதயாத்திரையில் பங்கு பெறனும் என்னும் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் .

பாதயாத்திரை ஸ்வாமிகள் தங்களுடைய பயணத்தை நல்ல முறையில்

"ஏழுமலையானின் அருளால்",

மிகவும் சிறப்பாக நிறைவு செய்யும் பொருட்டு ( தங்களுடைய உடல் ஒத்துழைக்கும் பொருட்டு ) மிதியடி இல்லாமலும், மிதியடி உடனும் , மிதிவண்டி உடனும், Two Wheeler, Four Wheeler ல் வரலாம் .

பாதயாத்திரைக்கு வேண்டிய சாமான்கள், உணவு வகைகள், (மூன்று வேலைக்கும்) வழங்கப்படும். துணி மணிகள், பூஜை சாமான்கள், குடிநீர் , குளிர்பானம், தங்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டு உள்ளன .

கருணை வள்ளல்கள் மூலம் மிகவும் சிறப்பாக செய்ய பட்டு உள்ளன .

41 நாள்கள் விரதம் இருத்தல் வேண்டும் . இந்த பாக்கியம் இல்லாதவர்கள் ஒவ்வொரு சனி கிழமையும் தங்களுடைய பகுதில் உள்ள "ஸ்ரீ விஷ்ணு", கோவிலில் துளசி மாலை அணிந்து விரதத்தை மேற்கொள்ளுங்கள் அடியார்களே

ஒரு அடியார்களுக்கு அனைத்து வகையான பயண செலவுகளுக்கு

" ரூபாய் 500.00", FIVE HUNDRED ONLY.

செலுத்த வேண்டும் . சிரியவர்க்களுக்கு, வயது முதிந்தவர்களுக்கு கண்டனம் தளர்த்த படும்.

மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெரிய பெரிய பொறுப்பில் உள்ள நல்ல கருணை வள்ளல்கள் மூலம் மிகவும் சிறப்பாக செய்ய பட்டு உள்ளன .

நன்கொடையாளர்கள் மற்றும் பாதயாத்திரை சுவாமிகளுக்கு உதவவேண்டும் என்ற பெரும் மனம் கொண்டு உலகம் முழுவதும் உள்ள புண்ணியவான்கள் தாங்கள் முறைப்படி தொடர்பு கொள்ளவேண்டி கீழே கண்ட E-MAIL - எ-மெயில் மூலம் சம்மந்த பட்ட அடியார்களை தொடர்பு கொள்ளலாம் என்பதனையும் வகுப்பறை மாணவர்களுக்கு தெரியபடுத்துகின்றோம் சுவாமிகளே !

பாதயாத்திரையில் பங்கு பெரும் வகுப்பறை மாணவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் அனைத்து விதமான முகவரிகள் கொண்ட அடையாள சான்றிதழ்கள் (அட்ரஸ் ப்ரோப்) ADDRESS PROOF ஏதானும் கொண்டு வரவேண்டுகின்றோம் .இது பாதயாத்திரை சுவாமிகளின் பாதுகாப்புக்காக ஆகும் சுவாமிகளே !

பாத யாத்திரை புறப்படும் இடம்.

தொடர்ப்புக்கு.


ஸ்ரீ மங்கைவேந்தன் ராமானுஜக் கூடம்

124 எ கல்லூரி சாலை, நங்கநல்லூர் சென்னை . 600 061.

Mobile no- +91 9585719249

E-mail - tirupathipadayaththirai2015@gmail.com.


குறிப்பு :-

பாத யாத்திரையில் பங்கு பெரும் மற்றும் நன்கொடையாளர்கள் தாங்கள் நேரிடையாகவும் மற்றும் மற்ற வகையிலும் சம்மந்த பட்டவர்களை தொடர்பு கொள்ள வசதியாக எ-மெயில் Id மற்றும் மொபைல் No ( Mobile No) கொடுக்க பட்டு உள்ளது என்பதனையும் தெரியபடுத்துகின்றோம் அடியார்களே !

அனைத்து வகையான ஏற்பாடுகள் செய்ய வேண்டி உள்ளதால் பாத யாத்திரையில் ஏதேனும் ஒரு வகையில் பங்கு பெறனும் என்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் தயவு செய்து இன்னும் பதினைந்து நாள்களுக்குள் கீழே கண்ட அட்ரஸ் ல் தங்களை முன் பதிவு செய்யும் படி மிகவும் பணிவுடன் சிரசு பணிந்து வேண்டி விருப்பி கேட்டு கொள்கின்றோம் சுவாமிகளே !

ஏழு குண்டலவாளா! வேங்கட ரமணா! கோவிந்தா கோவிந்தா!

நன்றி! வணக்கம்! வந்தனம்!

Sabareesh Muralidharan said...

Hello vaadhiyaar
Every man's Greatness can only be seen by their actions shown by raja vijaysingh

Then " Awaiting for your lessons on jathakam "

Thanking you
M.Sabareesh

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
Anbudan vanakkam vathiyar ayya
It was happened truly.. A royal salute to the king raja vijay Singh .....//////

என்ன சந்தேகம் கணபதியாரே? நடந்ததுதான்.நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger daya nidhi said...
ராஜா விஜய்சிங் போன்றவர்கள் ,நமக்கு முதல்வராகவோ, பிரதமராகவோ வந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள்.
மிக உயர்ந்த பண்புள்ள மன்னர்கள் நம்மை ஆடசி செய்திருக்கிறார்களென நினைக்கும் போது மக்ழ்ச்சி அடைகிறேன்
நன்றி,
தயாநிதி, அவியனுர்//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
மதிப்பா...
அப்படின்னா என்ன ...
இப்படித்தான்
இன்றைய இந்தியா/////

உண்மைதான். எல்லோரும் பணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். காசுதான் கடவுள்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
மதிப்பா...
அப்படின்னா என்ன ...
இப்படித்தான்
இன்றைய இந்தியா/////

உண்மைதான். எல்லோரும் பணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். காசுதான் கடவுள்!

Subbiah Veerappan said...

/////Blogger Sabareesh Muralidharan said...
Hello vaadhiyaar
Every man's Greatness can only be seen by their actions shown by raja vijaysingh
Then " Awaiting for your lessons on jathakam "
Thanking you
M.Sabareesh//////

எதற்குக் காத்திருக்கிறீர்கள்? பதிவில் சுமார் 800 பாடங்கள் உள்ளனவே. அனைத்தையும் படித்துவிட்டீர்களா?