மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.6.15

Half Quiz: பாதிப் புதிர்: கலங்காதிரு மனமே; காலம் மாறும் ஒரு தினமே!


Half Quiz: பாதிப் புதிர்: கலங்காதிரு மனமே; காலம் மாறும் ஒரு தினமே!

Quiz 87 Answer

14.6.2015

நேற்றைய புதிரில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகள் கேட்டிருந்தேன்:

1. ஜாதகரின் பணப் பிரச்சினைக்கு என்ன காரணம்?
2. அந்தப் பிரச்சினையில் இருந்து ஜாதகர் மீண்டாரா அல்லது இல்லையா?

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சரியான பதில் கீழே உள்ளது.

1. ஜாதகரின் பணப்பிரச்சினைக்கு, அதாவது பண இழப்பிற்கு சின்ன வயதில் நடந்த 12ம் இடத்து அதிபதியின் மகாதிசைதான் காரணம். அத்துடன் பணத்திற்குக் காரகனான குரு பகவான் ஜாதகத்தில் நீசமாகி உள்ளார்.

2. மீண்டார். அடுத்து வந்த சனி திசை அதற்கு உதவியது.


ஜாதகத்தைப் பாருங்கள்

மகர லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி சனீஷ்வரன் 5ம் வீட்டில் உடன் எட்டாம் அதிபதி சூரியன்
குரு பகவான் நீசமாகியுள்ளார். மேலும் அவர் 12ஆம் இடத்து அதிபதி.
-------------------------------------------------------------
சனீஷ்வரன் லக்கினத்திற்கு மட்டுமல்ல, இரண்டாம் இடத்திற்கும் அவர்தான் அதிபதி  (House of finance) அவர் லக்கினத்திற்கு 5ம் இடத்தில் திரிகோண ஸ்தானத்தில் வலுவாக உள்ளார்.மேலும் 2ம் வீட்டிற்கு அதிபதி என்ற கணக்கில் அந்த வீட்டிற்கு 4ல் கேந்திரத்தில் உள்ளார்.அவருடன் 9ம் அதிபதி (பாக்கியாதிபதி) புதனும், 10ம் அதிபதி சுக்கிரனும் கூட்டாக உள்ளனர்
11ம் அதிபதி (லாபாதிபதி) செவ்வாயின் பார்வையும் அவர்கள் மேல் உள்ளது.
அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஜாதகனை அடுத்து வந்த சனி திசையில் மீட்டுக் கொண்டு வந்தனர்.

விளக்கம் போதுமா?
--------------------------------
மொத்தம் 28 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 16 பேர்கள் மட்டும் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களுடைய கணிப்புக்களைக் கீழேகொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்லுங்கள்
லால்குடிக்காரரை இந்த வாரம் காணவில்லை. ஆர்வத்துடன் கலந்து கொள்வார் அவர். அதனால் குறிப்பிட்டுள்ளேன்
---------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
============================================
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Half Quiz: பாதி புதிர்: கையில வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியலை!
Quiz.87 ற்கான பதில்.
1. விரையதிபதி குரு லக்கினத்தில், ஆகவே குரு திசையில் ஆரம்பித்த வியாபாரம் கடனில் சிக்கிக் கொண்டது. 2ல் மாந்தி இருந்தால் சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
2. பின்பு வந்த லக்கினாதிபதி சனியின் திசையில் ஜாதகர் கடின உழைப்பினால் கடனிலிருந்து மீண்டார். 7ம் இடத்தை சனியும் குருவும் பார்ப்பதால் ஜாதகரை ஆதித கட்டுபாடுகளை கொடுத்து அங்கே இங்கே வேடிக்கை பார்க்க விடாமல் வேலை செய்ய வைத்தனர்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, June 12, 2015 9:28:00 AM Delete/////
--------------------------------------------
2
/////Blogger graajkumar kumar said...
குரு திசைக்குபிறகு சனி திசையில் கஷ்டத்தில் இருந்து மீண்டிருப்பார்
Friday, June 12, 2015 9:54:00 AM Delete////
-----------------------------------------
3
//////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.87
1, செவ்வாய் மற்றும் மாந்தி இரண்டாம் இடத்தில்,விரயதிபதி குரு பகவான்
லக்கினாதில்,அடுத்து வந்த குரு திசையில் பணப் பிரச்சினை.
2. லக்கினாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதி சனி 5ஆம் இடத்தில். சனி திசையில் ஜாதகர் பிரச்சினையில் இருந்து மிளூவார்.
நன்றி
மு.சாந்தி
Friday, June 12, 2015 10:03:00 AM Delete//////
------------------------------------------------
4
/////Blogger Raja R said...
iya ,
nan neenda natkalaka thankalathu padankalai padithu l.
muthan muraiyaha pudir potiyil kalanthu kolkiren
ithil 3,12-m athipathi guru lakanathil irunthu thisai nadthiya kalagalil
pana viryam nadandirukkum , sani thisail athu mudivukku vanthirukkum
Friday, June 12, 2015 11:46:00 AM Delete//////
---------------------------------------------
5
/////Blogger Govindasamy said...
1). 10க்குடைய சுக்கிரனுடன் ஆறாம் அதிபதியும் (புதன்), எட்டாம் அதிபதியும் (சூரியன்) கூட்டு. அதனால் தொழில் விருத்தியடையவில்லை.
2). 2ல் மாந்தி ஜாதகருக்கு செலவினத்தைப் பற்றிய ஒரு அக்கரையை கொடுக்கமாட்டார். எனவே செலவை கட்டுக்குள் வைக்க முடியாது. மேலும் விரயாதிபதி குரு லக்கினத்தில். ஜாதகர் செலவு செய்ய அஞ்சமாட்டார்.
3). தசா புத்தியைப் பொருத்த மட்டில் 12ல் இருக்கும் ராகு திசை முடிந்து வரும் குரு திசையும் விரயாதிபதி திசையாகிறது. ஜாதகரின் 39 வயதுக்கு மேல் சனிதசை சுக்கிர புத்தியில் பணப் பிரச்சினையிலிருந்து மீண்டு வருவார்.
Friday, June 12, 2015 12:50:00 PM Delete/////
------------------------------------------------
6
////========Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
பாதிபுதிர் எண்: 87 இற்கான பதில் !!!
ஜாதகர் கும்ப ராசி,சதயம் நட்சத்திரம், மகர லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில். உடன் பூர்வ புண்ணியாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன். வில்லன் ஆறாமதிபதி புதன், அஷ்டமாதிபதி சூரியன். அவர்களின் பிடியில். கடுமையான கிரக யுத்தத்தில். 5 டிகிரி இடைவெளியில். கேது கொடிபிடித்து செல்லும் காலசர்ப்ப தோஷம். லக்கினத்தில் விராயதிபதி குரு. லக்கினாதிபதி, தன ஸ்தானாதிபதி, மற்றும் தொழில் காரகன் சனி, தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் இவைகள் அனைத்தும் கிரக யுத்தத்தால் கெட்டு போயுள்ளதால் (இரண்டு பரல்கள்) வேலைக்கு செல்ல வேண்டிய ஜாதகம். மேலும் லாபம் மற்றும் விரைய ஸ்தான பரல்கள் வித்தியாசம் வெறும் 1( ஒன்று மட்டுமே). மேலும் தன காரகன் குரு நீசம். ராசி அம்சத்தில் 6/8 அமைப்பில். இரண்டாமிடத்தில் மாந்தி. இவற்றின் காரணமாக ஜாதகர் கடுமையான பணபிரச்சனையில் மாட்டி இருப்பார். ஸ்டாக் trading இல் பணம் விட்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது .
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, June 12, 2015 1:30:00 PM Delete/////

பாதி பதில்தானே உள்ளது. எப்போது மீண்டிருப்பார்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
---------------------------------------------
7
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா
1. 5,10 க்கும் உடைய யோககாரகன் சுக்கிரன் 5ல் ஆச்சி பலத்துடன், ஆனாலும் 10 க்கு அவர் 8 ல்.
2. 10 ம் வீடு சுத்தமாக உள்ளது.
3. 2 ல் மாந்தி, அத்துடன் செவ்வாய் பாதகாதிபதி.
4. குரு நீசம், அத்துடன் அவர் 12, 3 க்கு உடையவர்.
5. குரு திசையில் ஜாதகருக்கு தொழில் விரையம் ஏற்பட்டிருகும்.
6. பிறகு சனி திசையில் சரியாகிருக்கும்.
நன்றி
Friday, June 12, 2015 2:38:00 PM Delete//////
---------------------------------------------
8
//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
1*****ஜாதகரின் பணப் பிரச்சினைக்கு என்ன காரணம்?
1 தனஸ்தானத்தில் மாந்தி உட்கார்ந்து அந்த வீட்டை கெடுத்து இருக்கிிறார் .
2 2 ஆம் இடத்து அதிபதி யை செவ்வாய் பார்வை.
3 6ஆம் இடத்து அதிபதி , அந்த இடத்துக்கு 12 ல் உள்ளார்
4. 12 ல. ராகு பகவான் உள்ளார்
.2**** அந்தப் பிரச்சினையில் இருந்து ஜாதகர் மீண்டாரா அல்லது இல்லையா?
கால சர்ப்பத்தில் உள்ளார்
30 வயதுக்கு பின் நிலமை மாறும்.ஜாதகர் மீண்டு வருவார்.
நன்றி
கண்ணன்.
Friday, June 12, 2015 10:08:00 PM Delete/////
-----------------------------------------------------
9
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 87 வணக்கம்.
25/05/1973 ஆம் ஆண்டு வெள்ளி கிழமை மாலை 10.49.58 மணிக்கு சதய நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகர் பிறந்தவர். (இடம்: சென்னை)
யோககாரர்கள் : புதன், சுக்கிரன் (இந்த ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம்).
ராஜ யோகத்தை கொடுப்பவர் : சனி, சுக்கிரனும்.
1. ஜாதகரின் பணபிரச்சனைக்கு காரணம்:
இந்த ஜாதகம் காலசர்ப தோஷம் உள்ள ஜாதகம். 6வயதில் ராகு தசை முடிந்து விடுகிறது. 30 வயதிற்கு மேல்தான் யோகங்கள் வேலை செய்யும்.
லக்கினம் பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் ராகு, மறுபக்கம் செவ்வாய்) - ஜாதகர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். ஏதாவது ஒரு மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.
லக்கினத்தில் குரு(5 பரல்) மகர ராசியில் நீசம். ஆனால் நீசபங்க ராஜ யோகம் பெற்றுள்ளது.
குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டில் உள்ள சனி, சுக்கிரன், சூரியன், புதன் மீது இருந்தும் உபயோகபடவில்லை.காரணம் குரு பாபகர்தாரி தோஷத்தில் உள்ளார். 6 வயது முதல் 22 வயது வரை குரு தசை.
2ல் இருக்கும் செவ்வாய்யின் 4ம் பார்வை 5ம் வீட்டின் மீது இருக்கும் சனி, சுக்கிரன் மீதும், 6ம் அதிபதி, 8ம் அதிபதி மீதும் இருப்பதால்.
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல.
லக்கினாதிபதி சனி(2 பரல்) 5ம் வீட்டில் திரிகோணத்தில் நட்பு வீட்டில் உள்ளார். மகர ராசிக்கு சனியும், சுக்கிரனும்(4 பரல்) சேர்ந்து இருப்பது ராஜ யோகத்தை கொடுக்ககூடியது. ஆனால் மேலும் இந்த வீட்டில் இவர்களுடன் 6ம் வீட்டு அதிபதி புதனும், 8ம் வீட்டு அதிபதி சூரியனும் சேர்ந்து ஜாதகருக்கு பண பிரச்சனை உண்டாக்கினார்கள்.(கூட இருந்து குழிபறிப்பது).
சூரியன், புதன், இவர்களின் 7ம் பார்வை 11ம் வீட்டின் மீது இருப்பதை பார்க்கலாம்.
9ம் வீட்டு பாக்கியஸ்தான அதிபதி புதன் அஸ்தங்கம் ஆகிவிட்டார்.
5ம் வீட்டில் சனி- பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர். 22 வயது முதல் 41 வயது வரை சனி தசை.
2. பணபிரச்சனையிலிருந்து ஜாதகர் மீண்டு வந்தார்
41 வயது முதல் 58 வயது வரை பாக்கியஸ்தான அதிபதி யோககாரருடைய புதன் தசை ஆரம்பம்.
5ம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரன், புதன் தன்னுடைய 7ம் பார்வையால் 11ம் வீட்டை பார்க்கிறார்.
11ம் வீட்டில் 33 பரல்கள்.
11ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
லக்கினாதிபதியின் 10ம் பார்வை 2ம் வீட்டில் அமர்ந்துள்ள செவ்வாய், சந்திரனுடன் சசிமங்கள யோகத்தின்மீது.
2ம் வீட்டில் கும்ப ராசியில் சந்திரன் (4 பரல்) வர்கோதமும். நவாம்சத்திலும் கும்ப ராசியில் சந்திரன்.
2ல் சந்திரன் இருந்தால் பணக்காரன். இளவயதில் திருமணம் நடைபெறும்.
மேலும் 4ம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து சசிமங்கல யோகம்.பணதட்டுபாடு இருக்காது.
ஆகையால் ராஜ யோகத்தினால் ஜாதகரை பணபிரச்சனையில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.
இந்த ஜாதத்தில் உள்ள யோகங்கள்: சசிமங்களம், மாத்ரு மூலதணம், சரஸ்வதி யோகம்.
Saturday, June 13, 2015 3:40:00 AM Delete/////
-----------------------------------------------------
10
////Blogger Manikandan said...
1. ஜாதகரின் பணப் பிரச்சினைக்கு என்ன காரணம்?
1. மகர இலக்கின விரயாதிபதி குரு பகவான் , லக்கினமேறியிருகிறார் . ( அதுவ்வும் நீசமாக)
2. தன ஸ்தானத்தில் மாந்தி.
3. தனாதிபதி + லக்கினாதிபதி சனி பகவன் 6-ம் அதிபதி புதன் உடன் சேர்க்கை.
2. அந்தப் பிரச்சினையில் இருந்து ஜாதகர் மீண்டாரா அல்லது இல்லையா?
1. யோகாதி பதி சுக்கிரன் தசையில்  பணப் பிரச்சினையில் இருந்து மீண்டுருப்பர்.
Saturday, June 13, 2015 3:44:00 AM Delete/////
--------------------------------------------
11
//////Blogger daya nidhi said...
1.தன காரகன் குரு லக்னத்தில் நீசம், அம்சத்திலும் பகை. 2 ல் மாந்தி
ஆகவே குரு தசா முழுவதும் பன விரயம்.
2.சிரமத்திலிருந்து மீண்டார்.
கேந்திர , கோண அதிபதிகளான புதன், சுக்ரன் ராஜயோகம் பெற்று, லக்னாதிபதி சனியுடன் 5 ஆம் இடத்தில் இருப்ப்தால் சனி தசா புதன் புத்தியில் 27 வது வயதில் நிலமை சரியானது
நன்றி, தயாநிதி,அவியனுர்
Saturday, June 13, 2015 3:18:00 PM Delete/////
---------------------------------------------------------
12
Blogger vignesh.t Kumar said...
dhanakarakan guru (authority of money) laknathil neecham .
12 palnet ( virayathipathi) is in laknam
all planets under raagu kethu
2 nd place sevvai & chandhiran & maandhi . paanai kula ootai pondradhu.
11 th place 4 planets been seen , in which 6 am adhipathi puthan is also been seen .
these are the reasons for the loss of money
Saturday, June 13, 2015 4:15:00 PM Delete//////

2வது கேள்விக்கான பதில் எங்கே? ஜாதகர் எப்போது மீண்டார்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
----------------------------------------------------------
13
/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Reason for Financial Trouble:
1.Kethu starts the Kalasharba dosam
2. Laknam is in papakarthari yogam (ragu at 12 and Mars mandi at 2)
3. Mandi and Mandi at 2nd place
4. 12th lord in laknam denots persons life is not very usefull to anyone.
Did he come out of Financial Truble:
Recovery started slowly after Sani dasa Budhan buthi and he came out of it in Sanidasa Sukra buthi.
Cheers
P.Kannan
Sunday, June 14, 2015 3:12:00 AM Delete/////
------------------------------------------------
/////Blogger kannan Seetha Raman said...
வணக்கம் வாத்தியார் ஐயா
பல வகுப்பறை மாணவர்கள் பாதயாத்திரையில் பங்கு பெரும் பொருட்டு 2015 ஆண்டு ஜூலை மாதம் ( தமிழுக்கு ஆடி மாதம்) நடைபெற உள்ள சென்னை டு திருமலா திருப்பதி (திருப்பதி) பாத யாத்திரை அழைப்பிதல் மடலை தங்களுடைய (வலையில் ) வகுப்பறையில் ஏற்றுவதக்கு சம்மதமா என்பதினை தெரிய படுத்துகின்றேன் ஐயா
Sunday, June 14, 2015 11:54:00 AM Delete///////

அனுப்புங்கள்!
---------------------------------
14
//////Blogger Kirupanandan A said...
1)லக்கினத்திற்கு 2ல் மாந்தி, செவ்வாய். ஓட்டை வாளி. பணம் எப்படி சேமிக்க முயற்சி செய்தாலும் தங்காது. உடன் இருக்கும் தேய் பிறைச் சந்திரனும் பாபர்தான். அவரும் உதவ முடியாது. அத்துடன் சந்திரனுக்கு 2ம் அதிபதி குரு. அவரும் சந்திரனுக்கு 12ல் நீசம். இதுவும் எதற்கும் உதவாது.
2) நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டார் எனலாம். லக்கினத்திற்கு 2ம் அதிபதி சனி, 11ம் அதிபதி செவ்வாய் பரஸ்பர பார்வையில் இருக்கிறார்கள். பலவீனமான என்றாலும் இந்த தன யோகம் கை கொடுத்திருக்கும்.
Sunday, June 14, 2015 2:57:00 PM Delete/////
-----------------------------------------------
15
/////Blogger venkatesh r said...
மகர லக்கினம், கும்ப ராசி ஜாதகர். கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷமுள்ள ஜாதகம்.
1. விரையாதிபதி நீச குருவின் தசை மற்றும் கால சர்ப்ப தோசத்தின் காரணமாக 30 வயது வரை பணப்பிரச்சினை இருந்துள்ளது.
2. லக்கினாதிபதி சனியின் தசை ஆரம்பமான பிறகு, சனிதசை, சுக்கிர புத்தியில் அதிலிருந்து மீண்டு வந்தார்.
லக்கினாதிபதி சனி 5ல் கிரக யுத்தத்திலுள்ளார். விரையாதிபதி குரு லக்கினத்தில் நீசமடைந்துள்ளார். கால சர்ப்ப தோசம் மற்றும் குருவின் தசாகாலத்தில் ஜாதகர் நிறைய பணத்தை வியாபாரத்தில் தொலைத்துவிட்டார்.
காலசர்ப்ப தோசம் 26 வயதில் (லக்கின புள்ளிகள்) முடிவிற்கு வந்தது. லக்கினாதிபதியும் தனாதிபதியுமான சனியின் தசை ஆரம்பமான பிறகு படிப்படியாக முன்னேறி 30 வயதில் சுக்கிரனின் புத்தியில் எல்லாப் பிரச்சினைகளிலும் இருந்து மீண்டு வந்தார்.
Sunday, June 14, 2015 3:03:00 PM Delete//////
-----------------------------------------------------
16
//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
புதிர் 87க் கான அலசல்:
1). ஜாதகரின் பணப் பிரச்னைக்கு காரணம் கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷஜாதகம்,இரண்டாமிடம் தன ஸ்தானத்தில் மாந்தியும், 11ம் இடத்துக்காரனான பாதகாதிபதி செவ்வாயும் சேர்க்கை பெற்று அமர்ந்தது.லக்கினத்தில் அமர்ந்த தன காரகன் குரு நீச்சம் பெற்று அமர்ந்தது.லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டது.
2).பணப் பிரச்னைகளிலிருந்து தனது 29 வயதில் அதாவது சனி தசை கேது புத்தி முடிவில் 15-07-2002க்குப் பின்னர் மீண்டு இருப்பார்.
சுருக்கமான அலசல்:
கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷ ஜாதகம்.
மகர லக்கினம்.லக்கினாதிபதி சனி 5மிடமான திரிகோணம் ஏறி,நட்பு வீட்டில் அமர்ந்துள்ளார்.லக்கினத்தில் குரு நீச்சம்(ஆனாலும் சுபர்).லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில்.லக்கினம் சுபர் பார்வையின்றி கெட்டுப் போயுள்ளது.
லக்கினாதிபதி சனி 5ல், அதன் அதிபதியும்,யோககாரகனுமாகிய ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று மகாலட்சுமி யோகம் உண்டாகிறது.9ம் வீட்டுக்காரன் புதனுடன் சேர்க்கை.சுபகிரகம் மட்டுமின்றி லக்கினாதிபதிக்கும், 5மிடத்துக்கும்,அதன் அதிபதி சுக்கிரனுக்கும் நண்மையை செய்ய கடமைப் பட்டுள்ளார்.5மிடத்தில் 8ம் அதிபதி சூரியன் அமர்ந்து இருப்பினும்,5மிட வலிமையாலும், 5மிடத்துக்கு குரு பார்வையினாலும், ராஜ கிரகமான சூரியன் புதாத்திய யோகத்தை தருகின்றார்.5மிடம் வலுப் பெற்றுள்ளது.
2ம் வீடு தனஸ்தானம்:
2ம் அதிபதியும் சனீஷ்வரனாகி தன் வீட்டிற்கு கேந்திர வீடாகிய 4ம் வீட்டிலமர்ந்து, தன் வீடாகிய தனஸ்தானத்தை தன் பார்வையில் வைத்துள்ளார்.2ம் வீட்டில் 7ம் அதிபதி சந்திரனும்+11ம் அதிபதி செவ்வாயும்(லாப ஸ்தானாதிபதி மட்டுமல்லாமல் பாதகாதிபதியும் கூட) சேர்க்கை சந்திர மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது.கூடவே மாந்தியும் சேர்ந்து நின்று தன ஸ்தானத்தை கெடுத்துவிட்டது.
9ம் வீடு பாக்கியஸ்தானம்:
இரண்டாம் வீட்டிலமர்ந்த செவ்வாயின் பார்வை 9மிடத்தை கெடுக்க முயன்றாலும்,லக்கினத்திலிருந்து நம்பர் ஒன் சுபராகிய குரு 9மிடத்தையும், தனது விசேஷ பார்வையால் 9ம் அதிபதி புதனையும்(அடிதடியில் இருந்தாலும்,அஸ்தங்கத்தில் இருந்தாலும்,பாக்கியாதிபதியாயிற்றே!)பார்த்ததால் பாதிப்பிலிருந்து விடுதலை.
9மிட ஆதிபதி புதன் தன் வீட்டிற்கு உச்சத்திரிகோண வீடான (9க்கு 9மிடம்) 5ம் வீட்டிலமர்ந்ததால் நண்மை செய்ய வேண்டிய நிலை பெற்றுள்ளார்.
11ம் வீடு லாபஸ்தானம்:
11ம் அதிபதி செவ்வாய் (பாதாகாதிபதியுமாவார்) இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் (தன்னுடைய வீட்டிற்கு 4 ல்) அமர்ந்து, மாந்தியையும், 7ம் அதிபதி சந்திரனையும் துணைக்கு இருத்திக்கொண்டு,அந்த இடத்தை துவம்சம் செய்கிறார். 5மிடத்தில் அடிதடியில் உள்ள 3 சுபர்களும் ராஜ கிரகமான சூரியனும் ஒரு சேர 11ம் இடத்தைப் பார்ப்பதால் அந்த இடம் பலம் அடைந்துள்ளது.
மொத்தத்தில்:
லக்கினம் கெட்டுள்ளது.
தனஸ்தானம் கெட்டாலும் இரட்சிக்கப் படுகிறது, ஸ்தானாதிபதியின் பார்னையால்.
5மிடம் பலமடைகிறது, குரு பார்வை,சுக்கிரன்+சனி சேர்க்கையால் மகாலஷ்மி யோகம்,சூரியன்+புதன் சேர்க்கையால் புதாத்திய யோகம், சனியும் செவ்வாயும் பரஸ்பர பார்வையால் சசிமங்கள யோகம்.அத்தனையையும் மீறி, அஸ்தங்கம் அடையாமல் ஆட்சி பெற்ற சுக்கிரன் பஞ்ச மஹா யோகங்களில் ஒன்றான மாளவியா யோகம் பெற்றுள்ளது.
9மிடம் பாக்கியஸ்தானம்
செவ்வாயால் பாதிப்படைந்தாலும் குருவின் பார்வையால் நண்மை அடைகிறது.
11மிடம்:
வலுவாக உள்ளது.
குரு தசை பயன் தரவில்லை.--23 வ.
சனி தசை சுக்கிர புத்தியில் 15-07-2002 இருந்து ஜாதகர் மீண்டு வந்து சாதித்திருப்பார்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Sunday, June 14, 2015 3:04:00 PM Delete//////
------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

  1. தாங்கள் சொன்னதையும் கவனத்தில் வைத்து என் பதிலில் சொல்ல நினைத்தேன். எங்கே நேரமும், உடல் நிலையும் ஒத்துழைத்தால் தானே. எனக்கே அவசர கோலத்தில் பதிலைச் சொன்னது போல்தான் இருந்தது. ஒன்றும் பிரச்சினையில்லை. மேலே சொன்னவை ஒத்துழைத்தால் அடுத்தடுத்த புதிர்களில் என் திறமைக் காட்டுகிறேன்.

    ReplyDelete
  2. 10 ஜூன் முதல் 14 ஜூன் வரை சென்னையில் இருந்தேன். மின் அஞ்சல் பார்க்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே புதிரில் கலந்துகொள்ள முடியவில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com