வருத்தப்படாத வாத்தியார் சங்கம்!
வருத்தப்படாத வாத்தியார் சங்கம்’ என்று ஏதாவது சங்கம் இருக்கிறதா? இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கு அவ்வப்போது, சிலசமயங்களில் வருத்தம் வந்துவிடும். வந்தால் பத்து நிமிடங்களில்
என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். வந்த வருத்தம் விலகிப்போய்விடும்.
ஆனால் வருத்தமே கொள்ளாத நிலை வேண்டும். அதற்குத்தான்
உங்கள் உதவியை நாடியுள்ளேன். அப்படியொரு சங்கம் இருந்தால், அவர்களிடம் கலந்தாலோசித்து, அந்த நிலை, அதாவது வருத்தம்
கொள்ளாத நிலைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ள ஆசை!
எனக்கு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். குறித்த நேரத்தில்
எடுத்த காரியம் முடிந்துவிட வேண்டும். செய்யும் வேலை திருத்தமாக
இருக்க வேண்டும்.
ஆனால் சில சமயங்களில் அவ்வாறு நடப்பதில்லை.
என்னுடைய ஜோதிட நூல் பகுதி ஒன்றை 6.6.2015ற்குள் முடித்து விட வேண்டும். அச்சிட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கடந்த
2 திங்கள்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். அதில் பல
வேலைகள். சில தடங்கல்கள்
புத்தகம் அச்சிற்குப் போகும் நேரத்தில் முழுமையாகப் படித்துப்
பார்த்தவன், புத்தகத்திற்கு அணி சேர்ப்பதற்காக மேலும் சில
முக்கியமான அத்தியாயங்களை (பாடங்களை) சேர்க்கச் சொல்லி
யிருந்தேன். அதனால் அந்த வேலை (அச்சிடும் வேலை) இன்னும் முடியவில்லை.
இன்னும் நாளாகும் போல் உள்ளது. அனேகமாக இந்த மாத
இறுதியில்தான் முடிவுறும்போல் உள்ளது.
ஆகவே மாணவக் கண்மணிகள் அனைவரையும், அதுவரை பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
-----------------------------------------------------------
Delay in the release of the Astro Book Part One
Few important chapters had been added in the first volume.Hence it delays the process. I hope the first volume will be ready for despatch before this month end.
Please bear the delay
-------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Anbudan vathiyar ayyavukku vanakkam...
ReplyDeleteIthil enna sriram am irukkirathu """"""ethuvumeme. Nadakkum neramthaan namakkum""""
வாத்தியார் அய்யா,
ReplyDeleteவெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை எப்படி வாங்குவாது...?
எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
ReplyDeleteவாலிபருக்கு தானே சங்கம் வேண்டும்
ReplyDeleteவயதானவர்களுக்குமா சங்கம்..?
கொடுப்பதை தடுக்கவும்
தடுப்பதை கொடுக்கவும்
அப்பன் பழனியப்பன்
அவனுக்கு மட்டுமே தெரியும்
முருகன் அருள்
முன் நிற்கும்
முயற்சிகள் வெற்றி பெறும்
முன் நிற்கும் மாணவர்களுடன்..
அடியேனும் ஆசிரியர் என்பதால் இப்படி ஒரு சங்கத்தை எங்கள் பொறியியல் கல்லூரியில் வெகு காலமாக நடத்தி வருகின்றோம்.
ReplyDeleteவருத்தப்படாத வாத்தியார் சங்கத்தைப் பார்த்து வருத்தப்படும் மாணவர்கள் யாரும் இல்லையாதலால், உங்கள் சங்கம் செழித்தோங்கட்டும்
ReplyDeleteSir,
ReplyDeleteI have sent a request mail to purchase the book. Please do count me also.
With regards
Sivachandran.B
காத்துக் கிடப்பதில் சுகமுண்டு .....
ReplyDeleteசரி இருக்கட்டும். புத்தகம் வரும் போது பார்த்துக் கொள்கிறோம்.
ReplyDelete//எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.//
ReplyDeleteபார்ரா, லாலா கடைக்கே லட்டு பார்சலா சார் :)
என்ன வேப்பிள்ளயாரே மரத்தில் திரும்பவும் பா(ல்) வரும்போல தெரிகிறதே.. :)
காலத்திற்கும் கெடு உண்டு, காலம் பொண் போண்றது அளவையாரே..
கிருஷ்ணன் அண்ணே சூப்பர்