மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

10.6.15

நகைச்சுவை: ஆண்களால் மறக்கமுடியாத தண்டச் செலவு எது?

நகைச்சுவை: ஆண்களால் மறக்கமுடியாத தண்டச் செலவு எது?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
அப்பா இங்க வந்து பாருங்களேன்...
அம்மா வச்ச குழம்பக் குடிச்சிட்டு மீனெல்லாம்
செத்துக் கிடக்குது சட்டிக்குள்ள!!

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

யாருக்காவது குழிதோண்டவும்
மண்ணள்ளிப் போடவும் விரும்பினால்
அதை விதைகளுக்குச் செய்யுங்கள்....

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

பிய்த்து எடுத்தாலும் பீரோவை விட்டு
வர மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில்
ஒட்டியிருக்கிறது என் பால்யம்...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

உச்சிக்குப் போய்விட்டால் எல்லாப்
பக்கமும் சரிவுதான்...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ஆம்பளைங்க பண்ற தண்டச்செலவுல
 மறக்கமுடியாதது கல்யாணத்துக்கு
வாங்குன கோட்டு...
 எப்பப் பாத்தாலும்
எரிச்சலா வேற இருக்கும்..

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

இனி ஒரு விவசாயி இன்னொரு
விவசாயிக்கு இப்படி கடிதம் எழுதுவார்...
"இங்கு நான் நிலத்துடன் இருக்கிறேன்,
அங்குநீ நிலத்துடன் இருக்கிறாயா என
அறிய ஆவல்"

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

நம் புகைப்படத்தைப் பார்த்து
"ஆ!... இது யாரு!" என திகைப்பதன்
சுருக்கமே ஆதார்..

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ரெய்னாவுக்கு 28 வயசுதான்.
கல்யாணம் முடிஞ்சுடுச்சுன்னு
அம்மாகிட்ட சொன்னேன். அவன்
சம்பளம் எவ்வளவுன்னு டான்னு
பதிலுக்குக் கேக்கறாங்க..

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ஒரு உண்மையில் சமாதானம்
ஆகாமல் பல பொய்களால் சமாதானமடைபவள்
மனைவி...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

பிளாட்பார டிக்கெட் பத்து ரூபாய்க்கு  வாங்கியே
பிளாட்பாரத்துக்கு வந்துடுவோம் போல..!!

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

பிளாட்பாரத்துல நின்னாதான் கட்டணம்
 10 ரூபாயாம். அப்படியே கீழ உக்காந்துட்டா
கேட்கமாட்டாங்களாம். பிச்சைக்காரன்
சொன்னான்...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

தொட்டாச் சிணுங்கியைத் தொட்டு
விளையாடிய குழந்தையின் கரங்கள்
இன்று தொடு திரையில் சிக்கிக் கொண்டன...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

ஒரு கிரகத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த்
ன்னு பேர் வச்சிருக்காங்களாம்...
எனக்கு
எங்கவீட்ல 'கெரகம்' ன்னு பேர் வச்சு
ரொம்ப வருஷமாச்சு...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

மழுங்கிப் போன அப்பாவின் கண்ணாடியை
அணிந்தபோது பூதாகரமாகத் தெரிந்தது,
எங்களுக்காகத் தொலைத்த வாழ்க்கை.!!

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

உன் அப்பா ஏழையென்றால்
அது உன் விதி.
உன் மாமனார் ஏழையென்றால்
அது உன் இளிச்சவாய்த்தனம்...

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

”வாத்தியார் பதிவை வலை ஏத்திறதில இன்னிக்கு ஏன் லேட்டு?”
”காலையில் போன மின்சாரம் இப்பத்தான் வந்தது ராசா!”

அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

Chandrasekaran Suryanarayana said...

நன்றாக உள்ளது நகைச்சுவை.

ipan said...

Marriage coat Joke super!!!

slmsanuma said...

உச்சிக்குப் போய்விட்டால் எல்லாப்
பக்கமும் சரிவுதான்..

Great and true so we should be cautious when we are growing