மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.6.15

Half Quiz: பாதிப் புதிர்: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் நொந்து போன வயதில் கிடைத்தது.

Half Quiz: பாதிப் புதிர்: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் நொந்து போன வயதில் கிடைத்தது.

நேற்றைய புதிரில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகள் கேட்டிருந்தேன்:

1. ஜாதகர் தன் சொந்த ஊரை விட்டு 2,800 கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊரில் வேலை பார்க்கும்படியானது. அதற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
2. ஜாதகர் பணி ஓய்வு பெற்ற பிறகும் தன் விருப்பப்படி தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து இருக்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம்?
3. அவருடைய 70வது வயதில்தான் அவருடைய விருப்பம் நிறைவேறியது. அதாவது 30 வயதில் ஊரைவிட்டுச் சென்றவர், 40 ஆண்டுகள் கழித்துத்தான் தன் எண்ணப்படி சொந்த ஊருக்குத் திரும்பிவந்து மகிழ்ந்தார். அதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சரியான பதில் கீழே உள்ளது.

மேஷ லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன்
பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பலத்துடனும் நான்காம் அதிபதி சந்திரனுடனும், கூடவே ராகுவும் இருக்கிறார்
புதன், சுக்கிரன், மற்றும் சனி கூட்டாக பதினொன்றில்
-------------------------------------------------------------
லக்கினாதிபதியுன் புண்ணியாதிபதியும் 12ல் இருந்தால் ஜாதகனை வெளியூருக்குத் தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள். நம்ம ஜாதகரும், கல்கத்தாவில் அரசு வேலையில் பல்லாண்டுகள் இருந்தவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றதும், தென்காசிக்குப் பக்கத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாக முயன்றார். அது உடனடியாக நடக்கவில்லை. அவருடைய மனைவியும் மக்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுடன் அவரும் தொடர்ந்து கல்கத்தாவிலேயே இருக்கும்படி ஆயிற்று. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது ஏக்கம் தீர்ந்தது. சொந்த ஊருக்குத் திரும்பிவந்து செட்டிலானார்.

1. லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன். செவ்வாய் ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ளார்.
2. பூர்வபுண்ணிய அதிபதி சூரியனும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்

அந்த அமைப்பால், அவர் சொந்த ஊரைவிட்டு தூரமான இடத்திற்குச் சென்று ஜீவிக்க வேண்டியதாயிற்று. அதே அமைப்பு அப்படித் தள்ளிக்கொண்டு சென்றவனைச் சட்டென்று சொந்த மண்ணிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. அவன் ஜீவனம் செய்த ஊரிலேயே இருக்கும்படியாகிவிடும்.

ராகு கொடி காட்டினால்தான் இடமாற்றங்கள் ஏற்படும். Jupiter is the ruling planet for distant places. இந்த ஜாதகத்தில் குரு 9ற்கு உரியவர். அத்துடன் அவர் ஒன்பதாம் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால் அவருடன் கூட்டாக இருக்கும் ராகு, (குரு திசை ராகு புத்தியில்) தன்னுடைய புத்தியில் அவருக்கு இட மாற்றம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தான்

விளக்கம் போதுமா?
--------------------------------
லக்கினாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் 12 மறைந்ததால் தான் தூரப் பிரதேசத்தில் வாசம் என்பது முக்கியமான கணிப்பு
சிலர் லக்கினாதிபதி ஜல ராசியான 12 மறைந்ததால் அந்த அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள்
சிலர் 12ம் அதிபதி 9ல் அமர்ந்ததால், ராகு 9ல் அமர்ந்ததால் அந்த அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அவைக எல்லாமே ஒப்புக்கொள்ளக்கூடிய கணிப்புக்கள்தான்.
கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
--------------------------------------------------------
இரத்தினச் சுருக்கமாக 3 வரிகளில் பதிலை பட்டென்று எழுதியவர் கே.சக்திவேல். அவருக்கு சற்றுக் கூடுதலான பாராட்டுக்கள்
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்.........
அன்பர் ஜாதகத்தில் லக்னாதிபதி12ல்.
5ஆம் அதிபதியும்12ல். இப்படியிருந்தால் சொந்தஊரில் சோபிக்கமுடியாது !!
குரு,சந்திரன்.சனி,சுக்ரன் கைகொடுத்ததால் வெளீயூரில் சுபிட்சமாக வாழ்ந்திருப்பார் !!பாக்யாதிபதி குருதிசையில் சொந்தஊர் வந்திருப்பார்.......
Saturday, June 06, 2015 12:45:00 PM/////
---------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. அருமையான விளக்கம் சார்... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    கூடுதல் வாழ்த்துக்களைப் பெற்ற திரு.கே.சக்திவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நான் எழுதியுள்ள அலசல் தெளிவில்லாமல் இருப்பதற்க்காக வருந்துகின்றேன்.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  3. Dear sir,

    My answer for Second quiz is almost failed so understood two things clearly
    1. Memory power required for good astrologer
    2. Experience with thousand of horoscope must have (seen) for the almost correct prediction
    3. Good analytical skill required to conclude the prediction& lot of chillness required( hot minded are
    apart from reading---- required lot of experience just like Dr( for human body operation or Er( for machine maintenance) to predict horoscope also
    You have told several times through your lessons but seems easy every thing during reading but actual it is difficult
    Thanks
    G.Seenivasan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com