மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.2.15

Astrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு?


Astrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு?

”அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு?”
என்றொரு பழைய பாடல் - மனதை இதமாக்கும் பாடல் உண்டு. அமுதும் தேனும் என்பதை ஒரு பெண்ணின் துணையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார் கவிஞர். எல்லோருக்கும் அமுதும் தேனும் கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை! பலருக்குக்குக் கிடைக்கிறது. சிலருக்குக் கிடைப்பதில்லை. அதுதான் அவலம். எல்லாம் வாங்கி வந்த வரம்!

Quiz No. 78

புதிர் போட்டி எண்.78 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

24.2.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

                                         
  நவாம்சத்திற்கான அட்டவணை


மேலே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா?
2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

33 comments:

  1. இலக்கினாதிபதி சனி இலக்கினத்தில் 2ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். 7ம் அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 12ல், இலக்கினத்திற்கும், இலக்கினாதிபதிக்கும், 6ம் வீட்டில், மறைந்தார். களத்திரகாரகன் சுக்கிரன் இலக்கினத்திக்கு 3ல் 7ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். சந்திர இலக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் மாந்தி. 7ம் வீட்டில் பாதகாதிபதி செவ்வாய் நீசம் பெற்று இராகுவுடன் கூட்டணி. 7ம் வீட்டிற்கும், களத்திரகாரகர் மற்றும் குடும்பகாரகருக்கும் சனி பார்வை. ஆனால் அவர் இலக்கினாதிபதியாக இருப்பதால், குரு தசையில் திருமணம் நடந்திருக்கும். சங்கடங்கள் நிறைந்த திருமண வாழ்க்கை. பிரிவில் முடிந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  2. DOB : 29.04.1963
    Midhuna Rasi--------Magara Laknam
    1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?
    a) Laknathipathi Sneeswaran is in Laknam itself naturally in his own house.
    b) Karagan Sukiran Ucham associated with Guru who is in his own house Meenam.
    c) 7th house lord Manakkaragan Chandiran is in 12 house to 7th house, and he is in 6th house to Lakna (Hidden house) this is negative.
    d) 7th house has Saneeswaran/Guru Parvai.
    e) Laknathipathi Saneeswaran looks Sukkiran and Guru.
    f) Laknathipathi Saneeswaran looks 7th house and Sevvai Raghu in 7th House also looks Laknam. But Guru looks 7th house which is good.
    g) Sukkiran and Manakkaragan Chandiran have 6Parals and Laknathipathi has 5 Parals. 7th house has 26 Parals and 2nd house has 30 parals.
    h) 2nd house lord Saneeswaran in Laknam and in his own house.

    FINDINGS:So on the above observations the native has the marriage during Sani Thisai and Guru Bukthi around his age of 30 and above during and after the year of 1993 and at that time it was called belated marriage and this is due to Saneeswaran, Kethu, Sevvai and Raghu.
    2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது?
    a) Laknathipathi Sneeswaran is in Laknam itself naturally in his own house.
    b) Guru who is in his own house Meenam. 2nd house has sevvai parvai.
    c) 2nd house has 30 parals. Manakkaragan Chandiran has 6Parals and Laknathipathi has 5 Parals.
    d) 2nd house lord Saneeswaran in Laknam and in his own house.

    FINDINGS:So on the above observations, his marriage life is good.

    ReplyDelete
  3. before 29 marrige he got divioce . 7 th house athipathi moon in oopaya rasiyil nirga many parter, but sani 7m parvai in 7 th place is not good, delay marriage. parter was elder. marriage was done 35 old. that was good.

    ReplyDelete
  4. Ans to Quiz number:78

    1. He married
    2. His life is good after marriage.

    Reason:

    Guru parvai on 7th place.7th lord is in 4th place with Ucham.

    This horoscope has kalasarpa dosha.After that period his life is smooth.

    M.Santhi

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா திருமனம் ஆகாது ஆகாமல் இருப்பது நல்லது
    1.7 ஆம் அதிபதி சந்திரன் 6 இல் அது 7உக்கு 8 இல்
    2.2 ஆம் அதிபதி சனி 2உக்கு 12 இல் .
    3.7ஆம் இடத்தில் ராகு செவ்வாய்.
    4.சனி செவ்வாய் பார்வை வேரு
    5.ஒரே ஒரு நன்மை குரு பார்வை இருந்தாலும் ஸ்தான அதிபதிகள் சரி இல்லை.

    ReplyDelete
  6. 1. Ayya, Jaadhagarukku Guru dhasa Chandra Buthiyil Thirumanam Aaanadhu. Guru Meshathilum, Sani Thulaathilum irukkumbodhu thirumanam nadanthirukkum.

    2. Thirumana Vaazhkkai Santhoshamaagave Irukkum. Kaaranam, Lagnathipathy saniyin paarvai 7m veettil. Matrum, Guruvin Paarvai 7m veettil. Kalathirakaaragar sukkiran 7m veettirkku 9il guruvudan Ucham. Idharkku valu serthaarpol, Ashtakavargathil, Lagnathipathy, 7m Athibathy matrum Kalathirakaaragar Sukkiranin suyavarka paralgal 5,6, 6. Bakkiya sthaanathirkku Subargalaana, Guru matrum Sukkiranin Paarvai. Idhil Oruvar Magara Lagnathirkku, yogakaaragar. Aduthu varum dhasa lagnathipathy dhasavaaga iruppadhaal kandippaaga thirumana vaazhkkai sandhoshamaaga irukkum.
    Thanks, TRM.Prakaash

    ReplyDelete
  7. before 29 marrige he got divioce . 7 th house athipathi moon in oopaya rasiyil nirga many parter, but sani 7m parvai in 7 th place is not good, delay marriage. parter was elder. marriage was done 35 old. that was good.

    once he went to jail in his life.beacuse sani sevai raghu ner parvai.

    but when he born he was richman, after 12 age his property going to disappear. beacusee sevai nesam.
    totally marriage life was not good.
    serpa kala thosam vera. after 35 only better life.

    ReplyDelete
  8. நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்குமிடத்தில் நானில்லை

    ReplyDelete
  9. 1.இரண்டாம் வீட்டதிபதி லக்கினத்தில் ஆட்சி. களத்திரகாரகன் சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சம்பெற்று குருவுடன் அமர்ந்திருக்கிறான். குரு மூன்றாம் வீட்டில் இருப்பதால் குருவின் பார்வை ஏழமிடத்தில். ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் நடக்கும். குரு திசை சனி புத்தியில் திருமணம் நடக்கும்.

    2. ஏழில் ராகு மற்றும் செவ்வாய்,லக்கினத்தில் கேது. ஏழுக்குரிய சந்திரன் ஆறில். ஜாதகருக்கு கலப்பு திருமணத்திற்கான வாய்ப்பு அதிகம். இரண்டிற்குரிய சனி தனது வீட்டில் ஆட்சியாய் இருந்தாலும் கேதுவுடன் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிச்சயம் நிலைக்கும்.மனைவி நோயாளியாக இருக்கவும் வாய்ப்புண்டு.குடும்ப வாழ்க்கை சுகப்படாது

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,

    1)
    7ம் வீடு களத்திர ஸ்தானம்
    7ம் வீட்டு அதிபதி அந்த வீட்டில் இருந்து 12ல் மறைந்து விட்டார்.
    7ல் செவ்வாய்+ராகு கூட்டு.
    (யோககாரகன் + களத்திரகாரகன்) சுக்கிரன் உச்சம்+ 3ம் அதிபதி குரு கூட்டு - 3ம் வீட்டில் .
    குருவின் 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது.விழுகிறது.

    குரு மற்றும் சுக்கிரன் கை கோர்த்து திருமணத்தை நடத்தி வைத்திருப்பார்கள். திருமணம் ஆகும்.


    2)
    2ம் வீடு திருமண வாழ்க்கை ஸ்தானம்
    இரண்டாம் வீட்டு அதிபதி அந்த வீட்டில் இருந்து 12ல் மறைந்து விட்டார்.
    2ம் வீட்டிற்கு செவ்வாய் 8ம் பார்வை.
    திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது.

    ReplyDelete
  11. Dear Guruji,

    1.Mars in Neechabanga raja yogam,
    2.Mars is 4 and 11 lord.
    3.Saturn and ketu aspect and rahu present in 7th house is bad.
    4.7th lord in moon in 12th house from its house.
    5.guru aspects 7th house.
    6. venus yogarakara in good poistion.

    definitely there is marriage but it may not be happy or spouse may die

    ReplyDelete
  12. அய்யா அவர்களுக்கு,

    வணக்கம்.ஜாதகருக்கு மகர லக்னம் .7 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டில் உள்ளார்.இது நல்லதல்ல.ஆனாலும் பொதுவாக ஜாதகத்தை பார்க்கும் போது யோக கிரகங்கள் சனி ஆட்சி பெற்றும் ,சுக்ரன் உச்சம் பெற்றும்,குரு ஆட்சி பெற்றும் ,சூரியன் உச்சம் பெற்றும் உள்ளனர்.செவ்வாய் கடகத்தில் நீசம் அடைதிருந்தாலும் நவாம்சத்தில் உச்சம் அடைதிருக்கிறார்.குருவின் பார்வை 7 ஆம் வீட்டில் விழுகிறது.சனியின் பார்வையும் 7 ஆம் வீட்டில் விழுகிறது.திருமணம் உண்டு.குரு தசை சந்திரன் புத்தியில் சுமார் 26-27 வயதில் நடந்து இருக்கும்.7 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தாலும் ,பின்வரும் தசா புத்திகள் சாதகமாக உள்ளதால் (சனி ,புதன் ,சுக்ரன் தசைகள் ) திருமண வாழ்க்கை நன்றாக ஓடிகொண்டிருக்கும்.மகர லக்னத்திற்கு no .1 யோக கிரகமான சுக்ரன் ராசி மற்றும் நவாம்ச கட்டத்தில் அம்சமாக அமர்ந்து இருப்பது தனிச்சிறப்பு.

    உங்கள் மாணவன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  13. 1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா?
    this horoscope has rahu-ketu(kalasarpa) dosha. also mars in 7th house. (exalted in navamsa chart)
    lagna lord saturn is in his own house. capricorn lagna yogakaraka venus is exalted and with saturn's 3rd aspect sitting strong in horoscope. Jupiter in own house. jupiter's 5th aspect falls in 7th house which is very good.
    definitely marriage might have happened during jupiter dasha possibly during moon or mars sub period.

    2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?
    rahu and mars in 7th house with saturn and ketu's aspect. its not that good for happy married life. generally rahu in 7th house will make him over possessive. he will try to control his spouse's activities in day to day life. sun which is the 2nd lord from 7th house is exalted which is good. i don't see separation in this horoscope.

    thanks
    sree

    ReplyDelete
  14. மகர லக்னம், லக்னாதிபதி சனி லக்னத்திலே ஆட்சி. கேதுவுடன் கூட்டு. யோகாதிபதி சுக்ரன் 3-ல் உச்சம். ஆட்சி பெற்ற குருவுடன் கூட்டு. குருவின் பார்வை ஏழாம் வீட்டில் இருக்கிறது. ஏழாம் வீட்டில் நீசம் பெற்ற செவ்வாய் ராகுவுடன் கூட்டு. லக்னத்தின் மேல் பார்வை. ஏழாம் வீட்டு அதிபதியோ அதற்கு பன்னிரண்டாம் வீட்டில், அதாவது ஆறில் சந்திரன். வித்தியாசமான ஜாதகம் !.
    லக்னாதிபதியான சனியின் ஆட்சி பார்வையினாலும், களத்தீரக்காரகனோடு சேர்ந்த குருவின் பார்வையினாலும், ஜாதகருக்கு குரு தசையில் நிச்சயம் திருமணம் நடந்திருக்கும். ஏழாம் வீட்டில் செவ்வாய் ராகுவினால் அது காதல் அல்லது கலப்பு திருமணம். ஆனால் திருமணம் கசந்திருக்கும். நீச செவ்வாய் ராகுவுடன் சேர்க்கை. ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டிற்கு விரய ஸ்தானத்தில். அதனால் இந்த பலன் !. அய்யா ! விடை அறிய ஆவலாக இருக்கிறது !.

    ReplyDelete
  15. அய்யா,
    வணக்கம்.
    பிறந்த நாள் : 28.04.1963 ( app time 01.00 a.m.)

    திருமணம் நடைபெறும்.
    சுக்கிரன் உச்சம்.
    உடன் குரு உள்ளார்.
    ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். (ஐந்தாம் பார்வையாக)
    சந்திர ராசியில் இருந்து ஏழாம் வீட்டு அதிபர் குரு கேந்திரத்தில் உள்ளார்.
    பத்தாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ளார்.
    உடன் உச்ச சுக்கிரன் கூட்டணி.
    குரு திசையில் நடைபெறும்.
    திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

    நன்றி.
    இவன்
    பாலமுருகன்

    ReplyDelete
  16. 1.ஜாதகருக்கு திருமண‌ம் ஆகிவிட்டது.
    2.திருமண‌ வாழ்க்கை சிறப்பாக இல்லை. தோல்வியில் முடியும்.
    இருவரும் பிரிந்து வாழ்வர் .

    காரணங்கள்:
    1.7ம் வீட்டின் மேல் லக்கினாதிபதி சனி மற்றும் குருவின் பார்வை.
    களத்திரக்காரன் சுக்கிரனும் , குருவும் லக்கினாதிபதி சனியின் பிடியில். மேலும் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால்
    2.7ம் வீட்டின் அதிபதி சந்திரன் 6இல் மறைவு.இது 7ம் வீட்டிற்க்கு 12ம் வீடு. மேலும் சந்திரன் மேல் சுப கிரகங்களின் பார்வை இல்லை.
    7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு ஆதிக்கம் .

    ReplyDelete
  17. 1.ஜாதகருக்கு திருமண‌ம் ஆகிவிட்டது.
    2.திருமண‌ வாழ்க்கை சிறப்பாக இல்லை. தோல்வியில் முடியும்.
    இருவரும் பிரிந்து வாழ்வர் .

    காரணங்கள்:
    1.7ம் வீட்டின் மேல் லக்கினாதிபதி சனி மற்றும் குருவின் பார்வை.
    களத்திரக்காரன் சுக்கிரனும் , குருவும் லக்கினாதிபதி சனியின் பிடியில். மேலும் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால்
    2.7ம் வீட்டின் அதிபதி சந்திரன் 6இல் மறைவு.இது 7ம் வீட்டிற்க்கு 12ம் வீடு. மேலும் சந்திரன் மேல் சுப கிரகங்களின் பார்வை இல்லை.
    7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு ஆதிக்கம் .

    ReplyDelete
  18. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ”அமுதும் தேனும் எதற்க்கு?” கேள்விக்கு பதில் “சட்டி சுட்டதடா, கை விட்டதடா” என்பதுதான்.
    1).அன்பருக்கு 34 வயதில் சனி தசை புதன் புத்தியில் திருமணம் நடந்தது.
    2).திருமண வாழ்வு துயரத்தில் முடிந்தது. மனைவி,அவரது 43 வது வயதில் இறந்திருப்பார்.சனி தசா-சந் புத்தி-சனி அந்தரம்.
    1).மகர லக்னம்.லக்னாதிபதி சனி ஆட்சி,கேதுவுடன் கூட்டணி.7ம் வீடான கடகத்தில் அமர்ந்த நீச்ச செவ்வாய்+ராகு கூட்டணியின் நேரடி பார்வை லக்கினத்தின் மேல்.மகர லக்கின பாதகாதிபதி செவ்வாய். 7ம் பதி சந்திரனோ 6ல் அமர்வு.தன் வீட்டிற்க்கு 12ல் (நோய் ஸ்தானம்).
    மூன்றில் அமர்ந்த உச்ச குருவின் 5ம் பார்வையும், அவருடன் கூட்டு சேர்ந்த உச்ச களத்திர காரகன் சுக்கிரனின் அமர்வும் களத்திர ஸ்தானத்தின் மீது லக்னாதி சனியின் பார்வையும் திருமணம் நடத்தியது.
    2). குடும்ப ஸ்தான பதி சனி தன் வீட்டிற்கு 12ல் மறைவு.7ல் அமர்ந்த பாதகாதிபதி நீச்ச செவ்வாயின் 8ம் பார்வை. 4 மிட சுக ஸ்தானாத்தில் உச்சம் பெற்ற 8மாதி சூரியன் அமர்வு.7ம் பதி சந்திரன் (தன் வீட்டிற்கு 12மிடமான 6ல் இருந்து) 12மிடத்தை பார்வை செய்கின்றார்.
    2மிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
    அன்பருக்கு திருமண வாழ்வு பயனின்றி விரயமாகி விட்டது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  19. Respected Sir Vanakkam,

    1.) Sani dhasavil, Sukra bukthiyil tirumanam nadandhirukkum.

    2.) Thirumana valkai magilchigaramaga irukkadhu.

    Kaaranangal,

    7-il neecham petra chevvai and raagu, Saniyin neradhi paarvayil 7-m veedu. Raaghu dhasa mudindhu, 12-m adhipathy dahasa (Guru) mudindhu sani dhasa(Lagnadhipathi dhasavil) kalathirakaragan sukran bukthiyil thirumanan nadandhirukkum. 38 vayadhil.

    2-m adhipathy sani avar veetirku 12-il kethuvudan. Neecham petra chevvaiyin 8-m paarvai 2-m veedu. adhanal kudumbathil prechanaigaldhan.

    Thank You.

    ReplyDelete
  20. வணக்கம் குரு,

    1. ஜாதகருக்கு கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும். குரு தசை சந்திர புக்தி அல்லது தாமதமாகவாது 34 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும். அதாவது சனி தசை புதன் அல்லது சுக்கிர புக்தியில் நடந்திருக்கும். திருமணம் நடக்க காரணங்கள். களத்திர ஸ்தானத்திற்கு குரு மற்றும் லக்னாதிபதி சனியின் பார்வை, களத்திர காரகனும் லக்ன யோககாரனுமாகிய சுக்கிரன் உச்சம். சந்திரா லக்னத்திற்கு ஏழாமிட அதிபதி குரு 10ல் ஆட்சி பலத்துடன் சுக்கினுடன் சேர்க்கை பெற்றுள்ளார். களத்திர காரகன் சுக்கிரனுக்கு 4இல் சந்திரன் மற்றும் 7குடைய புதன் அந்த வீட்டிற்கு 9ல். நவாம்ச லக்னாதிபதி சூரியன் லக்னதிலேயே உள்ளார் மற்றும் 7மிடத்தில் புதன் உள்ளார்.

    2. குடும்ப வாழ்க்கை சற்று சச்சரவாக இருக்கும். காரணம் இரண்டாம் வீட்டிற்குடைய சனி அந்த வீட்டிற்கு 12ல். இரண்டாமிடத்து அதிபதி சனியை செவ்வாய் & ராகு பார்கிறார்கள். இரண்டாமிடத்தை செவ்வாய் 8ம் பார்வையாக பார்க்கிறார். சந்திரா லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு கூட்டணி.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete

  21. Quiz No 78: Answer
    ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
    ஜாதகர் கால சர்ப யோகத்தில் உள்ளவர். லக்னாதிபதி நல்ல நிலையில் ஆட்சியில் வலுவாக பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளார்.
    5 ஆம் அதிபதி சுக்ரன் யோககாரகன், களத்திரகாரகன் ராசியில் உச்சம் – நவாம்சத்தில் ஆட்சி. கேந்திரம் / கோணாதிபதி
    3க்கும் 12க்கும் (போகஸ்தானம்) அதிபதி குரு ஆட்சி. அவர் களத்திரஸ்தானத்தை 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஆனால் 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது.
    7 ஆம் இடத்தில் செவ்வாய் ராசியில் நீச்சம். ஆனால் நவாம்சத்தில் உச்சம். ராஹு வர்க்கோத்தமம்.
    ஜாதகருக்கு கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும்.
    ராஹு தசை 15 வயது வரை. பிறகு குரு தசையில் யோககாரகன் சுக்ரன் புக்தியில் 26 வது வயதில் திருமணம் நடந்திருக்கும். இது தவறியிருந்தால் 36 வது வயதில் சனி தசையில் சுக்ர புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
    களத்திரஸ்தானாதிபதி சந்த்ரன் 6 ஆம் இடத்தில் – ரோக ஸ்தானம். ஆதலால் மனைவி நோய்வாய்ப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது. ஆதலால் திருமணமாகி சில காலங்களுக்குப்பிறகு சன்யாசி மாதிரி துறவி வாழ்க்கை வாழ வேண்டிய நிலையில் இருந்திருப்பார்.
    K R Ananthakrishnan, Chennai

    ReplyDelete
  22. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் .78.
    மகர லக்னம் ..மிதுன ராசி .
    1. கேது கொடிபிடித்து ராகுவிற்குள் எல்லா கிரகங்களும் அமைந்த தோஷமுள்ள ஜாதகம் .கால சர்ப்ப தோஷம் .
    2...லக்னத்தில் சனி ஆட்சி கூடவே கேது இருவரும் சேர்ந்து 7 ம் வீட்டை பார்வை .கேடு..1
    3...7ம் வீடான கடகத்தில் நீசமான செவ்வாய் உடன் ராஹு இருவரும் சேர்ந்து லக்னத்தை பார்த்து ஆக சனி செவ்வாய் சம சப்தம பார்வை கேடு .2
    4.,,12..&3ம் வீட்டதிபதியான குரு தன வீடான மீனத்தில் இருந்து 7 ம் வீட்டை 5ம் பார்வையாக பார்ப்பது ஒரு சிறப்பு மேலும் 3ல் சுக்கிரன் உச்சம் ..
    5. களஷ்திரகாரகன் உச்சம் பெற்றுள்ளான் .
    6...8ம் வீடுகாரனான சூரியன் உச்சம் பெற்றுள்ளான்
    7...பாக்யஷ்தானமான 9ம் மிடத்தை சுபர்களான சுக்கிரன் குரு பார்வை சிறப்பு.
    **திருமணம் கண்டிப்பாக ஆகும் **

    ஆனால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது
    .
    காரணம் .அயன சயன சுக போக இடமான 12மிடத்தில் மாந்தி அமர்ந்து கெடுத்தான் .சந்திரன் பார்வை இருந்தாலும் மொத்த கிரகங்களும் சர்ப்ப தோஷத்தில் இருப்பதாலும் .1&2மிடத்தை செவ்வாய் பார்வை 7&8 ஆக இருப்பதாலும் குடும்பத்தில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் நிம்மதியான இல்லறம் இருக்காது.
    வாத்தியார் அய்யா தீர்ப்பு ...

    ReplyDelete
  23. சார் வணக்கம்,

    1. திருமணமாயிற்று.
    2. திருமணவாழ்க்கை நல்லாயிருக்கும்.
    லகனதிபதி சனி ஆட்சி பெற்று ஏழாமிடத்தை தன் பார்வையில் வைத்துகொள்கிறார் வியாழன் ஆட்சிபெற்று 7யை பார்கிறார் 7ல் சுபகிறக பார்வையிருகிறது மேலும் 3ல் சுக்கிரன் உச்சம் வியாழன் ஆட்சி நாலில் உச்ச சூரியன் மேலும் செவ்வாய் தன் உச்ச வீட்டை தன் பார்வையில் வைத்துகொள்கிறார். 7ல் இரண்டு கிறகம் இரண்டு மனைவி
    மணவாழ்க்கை நல்லாயிருக்கும் சுகஸ்தானத்தில் சுக்கிரன் குரு ஆட்சி உச்சத்திலிருக்கிறது 7 கிரகங்கல் தொடர்ந்திருக்கிறது இது ஒரு யோகம சசயோகம்
    மாள்விய யோகம் அம்சயோகமிருகிறது எனவே சந்தோசமானவாழ்க்கை

    ReplyDelete
  24. மதிப்பிற்குரிய ஐயா,
    1. லக்னாதிபதி சனி லக்னத்தில் இருப்பதும், 7ம் வீட்டில் ராகுவும் செவ்வாயும் இருப்பதும் திருமணத்தைத் தாமதப் படுத்தும் அமைப்பு. ஆனால் களத்திரகாரகன் சுக்கிரன் யோககாரகனும் ஆகிறான். சுக்கிரன் உச்சம் பெற்று, ஆட்சி பெற்ற குருவுடன் சேர்ந்து இருப்பதாலும், களத்திர ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் திருமணம் ஆகி இருக்கும்.
    2. களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் 6ல் இருப்பது விரும்பத் தக்கது அல்ல. செவ்வாயின் பார்வையும் குடும்ப ஸ்தானத்தில் விழுகிறது. அதனால் ஜாதகரது குடும்ப வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்காது.

    ReplyDelete
  25. புதிர் எண் 78க்கான அலசல் :

    மகர லக்கினம், மிதுன ராசி ஜாதகர். கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம். அவருக்கு

    1.திருமணம் தாமதமாக 35 வயதில் ஆனது.
    2.குடும்ப‌ வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை.

    காரணங்கள் :
    1.லக்னாதிபதியும், குடும்பாதிபதியுமான சனி லக்னத்தில் வலுவுடன் இருக்கிறார்.
    2.களத்திராதிபதி சந்திரன் 6ல் மறைவு.
    3.களத்திரகாரகன் மற்றும் யோகாதிபதி உச்சமாகி குருவுடன் சேர்ந்து கிரக யத்தத்திலுள்ளார்.
    4.7ல் ராகு மற்றும் நீச செவ்வாய் உள்ளனர்.ல்க்னாதிபதி சனி மற்றும் குருவின் பார்வையுள்ளது.
    அத்னால் திருமணம் சனி தசை, சுக்கிர புத்தியில் ஆயிற்று.

    4மிடமான சுக ஸ்தானத்தில் 8ம் அதிபதி சூரியன் உச்சம். அதன் அதிபதி செவ்வாய் 7ல் நீசம் அடைந்து ராகுவுடன் சேர்ந்து உள்ளார். சயன ஸ்தானமான‌ 12ல் மாந்தி வேறு. அதனால் குடும்ப வாழ்க்கை இனிக்கவில்லை.

    ReplyDelete
  26. ஜாதகர் திருமனமாகவதவர்

    1) மகர லக்னம் மற்றும் மிதுன ராசி. கால சர்ப்ப தோஷ ஜாதகம்
    2) களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 12ல்
    3) களத்திர காரகன் சுக்கிரன் குடும்ப காரகன் குருவுடன் கிரஹ யுத்தத்தில் இருக்கிறார். மேலும் குடும்ப காரகன் குரு விரையாதிபதியும் ஆகிறார்
    4) அஷ்டமாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில்
    5) லக்ன அதிபதியும், குடும்ப ஸ்தான அதிபதியும் நீச செவ்வாயின் பார்வையில்
    6) போக ஸ்தானத்தில் இருக்கும் 'மாந்தியும்' திருமணத்தை தடுக்கும் ஒரு அமைப்பு

    ReplyDelete
  27. 1) திருமணம் நடந்தது. களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாகி இன்னொரு சுப கிரகமான ஆட்சி பெற்ற குருவுடன் இருக்கிறார்.

    2) மிகவும் சண்டை சச்சரவு மிகுந்த திருமண வாழ்க்கை. முடிவில் விவாகரத்தானது. 7ம் அதிபதி 6ல் மறைந்துள்ளார். 7ல் 2 பாப கிரகங்கள். இதில் செவ்வாய் நீசமாகி இருக்கிறார்.

    ReplyDelete
  28. ஜாதகர் 28 ஏப்ரல் 1963 அன்று அதிகாலை 1 மணி 30 நிமிடம் 10 நொடிக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    (ஒரு மாறுதலுக்காக நாடி சோதிட விதிகளை எடுத்துக்கொண்டு புதிருக்குப் பதில் கூறியுள்ளேன்.கிரகங்களின் பார்வை என்பது நாடி சோதிடத்தில் மாறுபடும். எனவே இங்கே பார்வை என்று சொல்வதை சாதாரணமாக நாம் பயன் படுத்தும் பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.)
    1.திருமணம் ஆயிற்று.
    2. பிரிவினைவரை சென்று சமாதானம் ஆனது.
    3. மிகுந்த காலதமதமாக குழந்தை பிறந்த‌து

    சுக்கிரன், குரு அல்லது சனியைப் பார்த்தால் திருமணம் கட்டாயம் நடக்கும்.
    சுக்கிரன்,ராகு, செவ்வாய் ஒரே பாவத்தில் இருந்தாலோ ஒரே திசையில் இருந்தாலோ பிரிவினை ஆகும். ஆனால் குருவின் பார்வை இருந்தால் சமாதான்ம் ஆகிவிடும்.
    சுக்ரனை இரண்டுக்கு மேற்பட்ட மெதுவான கிரகங்கள் சனி, ராகு, கேது பார்த்தால் திருமணமே நடக்காது.இங்கே மூன்று கிரகங்களும் சுக்கிரனைப் பார்க்கின்றன.ஆனால் குரு பார்வை இருந்தால் பரிஹாரம் செய்து திருமணம் நடக்கும்.எனவே பரிஹாரம் செய்து திருமண்ம கைகூடியது.

    சுக்ரனை குரு பார்த்தால் பெண் குழந்தை உண்டு. ஆனால் சுக்கிரனை ராகு
    பார்த்தால் குழந்தை பேறு இருக்காது.இரண்டும் இங்கே இருப்பதால் குரு தன் வீட்டில் இருந்து பலமாக இருப்பதால் சிரமத்தின் பேரில், வைத்தியம் மூலம் குழந்தை பிறந்தது

    ReplyDelete
  29. Respected Sir,

    1. Native will get late marraige as Saniswaran aspects seventh house, also he is Lagna lord who sits strong in
    his own house apsects Sukran (authority of marraige and owner of fifth house).
    2. Second house owner also Lagnathypathy in his own house with Kethu. Here kethu wont do much bad things for native.
    Family life will be good with some minor troubles often.
    3. Possiblity of children but with some delay as Budhan sits in fifth also he is sixth house owner. But Karagan Guru sits
    with strong fifth house owner and aspecting ninth house is good sign for Kid.

    Additionally, there are so many good signs in this horo.
    4.Lagna lord sits in own house and hold 5th and 10th house owner and 10th house in this aspect is very good sign for his
    luck and profession.
    5.Guru aspects 11th house from his own house shows very good for profit.
    6. Powerful Suriyan aspects tenth house meant native could be in high position in Government side or politician.


    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  30. 1. ஜாதகர் திருமணம் ஆனவர்.

    2.திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும். மனைவியை பிரிந்தவராய் இருப்பார்.

    1.laknaathipathi சனிஸ்வரன் laknaththil amarnthu 7 ம் வீட்டை தன பார்வையில் வைத்துள்ளார். maylum 7 ம் veettiRku guru'vin paarvai. sukkiran ucham. சந்திரன்க்கு 7 ம் அதிபன் 'குரு' ஆட்சி.sevvaai ,sani பார்வை..மற்றும் 7ல் செவ்வாய் ராகு சேர்க்கை ஆகியவற்றால் ஜாதகருக்கு 31 வயதில் குரு thisai ,ராகு புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.

    2. 2ம் அதிபன் சனி 2க்கு 12ல் மறைவு. 2ம் விட்டிற்கு செவ்வாயின் 8ம் பார்வை.7ம் அதிபன் சந்திரன் laknathiRku 6ல் ,7க்கு 12ல் மறைவு. 7ல் தீய கிரகங்களான செவ்வாய் ,ராகு கூட்டணி.சந்திரனுக்கு 2ல் செவ்வாய் ,ராகு சேர்க்கை . ஆகையால் ஜாதகரின் திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும்.மனைவியை பிரிந்தவராய் இருப்பார்.

    Sivarajan (pondicherry)

    ReplyDelete
  31. QUIZ NO. 78 வணக்கம்.
    28/04/1963 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 1.30.35 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:சென்னை)

    1. ஜாதகருக்கு திருமணம் 23 வயதில் நடைபெற்றது.
    2. 42வயதில் திருமணம் விவாகரத்து எற்பட்டது.

    மகர லக்கினத்திற்கு யோககாரகன் புதன்,சுக்கிரன். இந்த ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம்.மகர லக்கினத்திற்கு 5 மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன்.


    1. லக்கினாதிபதி சனி மகர ராசியில் லக்கினத்திலேயே உள்ளார். லக்கினம் 37 பரல். கேதுவுடன் கூட்டு. துரதிர்ஷ்ட்டம். உடல் நல கேடு. உடல் குறைபாடுகள், வியாதி, ஜாதகரை ஒரு வழி ஆக்கிவிடும்.

    2. மகர லக்கினதிற்க்கு ராஜ யோககாரன் செவ்வாய் 7ல் ராகுவுடன் கூட்டு சேர்ந்து இருப்பதால் கெட்டு போய் இருக்கிறார்.

    3. ஆரம்ப ராகு தசையில் ஜாதகர் மிகவும் கஷ்ட்டப்ப்ட்டு இருப்பார்.

    4. இந்த ஜாதகத்தில் யோககாரனான சுக்கிரன் உச்சம்(4 பரல்) 3ம் வீட்டில் மீன‌ ராசியில். மேலும், குருவுடன் கூட்டு.

    5. குருவின்(3 பரல்) 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது உள்ளது.

    6. உச்சமான சுக்கிரனின் 7ம் பார்வையும், குருவின் 7ம் பார்வையும் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டின் மீது உள்ளது. 9ம் வீட்டின் அதிபதி புதன் மூல திருகோணத்தில் 5ம் வீட்டில் இருக்கிறார்.

    7. சந்திர லக்கினதிலிருந்து 7ம் வீடு தனூர் ராசி. அதாவது 12ம் வீடு.அதன் அதிபதி குரு 3வீட்டில் சுக்கிரனுடன் கூட்டு.அந்த வீடு சந்திரனிருந்து கேந்திரத்தில் இருப்பதால் அது கஜகேசரி யோகம் பெற்றுள்ளது.

    8.மேலும், லக்கினாதிபதி சனியின் 3ம் பார்வை 3ம் வீட்டில் உள்ள சுக்கிரன், குருவின் மீது உள்ளது.

    9. குருதசை சுக்கிர புக்தியில் 23 வயதில் திருமணம் நடைபெற்று இருக்கும்.

    10. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்து இருப்பதால் அவருக்கு ஒரு பெண் குழந்தை அதே சுக்கிர தசையில் கிடைத்தது.

    11. 2ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அதவது அந்த வீட்டிற்க்கு 12ல்.வீட்டின் மீது செவ்வாயின் 8ம் பார்வை உள்ள‌து.அந்த வீட்டில் 30 பரல்கள் உள்ளன.

    12. குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தது.காரணம், 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்துள்ளதால் திருமணம் பிரிவில் முடியும். மேலும், சனி, சந்திரனின் 8/6 நிலைமை.

    சனி தசையில் சந்திர புக்தியில் 42 வயதில் விவாக ரத்து எற்பட்டது.

    13. நவாம்சத்திலும் ராகு 7ம் வீட்டில் உள்ளார்.

    14. சூரியனுக்கு 4ம் வீட்டில் ராகு இருப்பதால் ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், பெயர் எல்லம் கிடைக்காமல் போய்விட்டது.

    15. 7ல் ராகு இருப்பதால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெண்னினால் அவமானம் எற்படும்., கேதுவின் 7ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதாலும்,திருமணம் பிரிவில் முடியும்.

    சந்திரசேகரன் சூரியநாரயணன்

    ReplyDelete
  32. வணக்கம் ஐயா 1.திருமனம் ஆனது 2.குடும்ப வழ்க்கை மகிழ்ச்சி தரவில்லை 1.7ஆம் வீடு களத்திர ஸ்தானம் அதிபதி 6ல் மரைவு குருவின் 5ம் பர்வையல் செவ்வாய் பலம் அதனல் திருமனம் நடகும் 2ஆம் வீடு அதிபதி சனி பகவான் தன் வீடிற்கு 12ல் 2ஆஆம் வீட்டீற்கு சுப பாற்வைகல் இல்லை லக்கனதில் பவ கிரகம் சனி மட்ரும் கேது

    ReplyDelete
  33. Respected sir,

    My answer for our Quiz No. 78:-

    1. He has married but delayed marriage.

    2. His marriage life was not happy and ended with divorce or other reason.

    Reasons for Delayed marriage:

    i) Kala sarpa dhosa horoscope as well as seventh house and seventh house lord is affected. seventh house lord is sitting 12th place from its own house.

    ii) kalathra karaga as well as yoga karaga Venus is exalted and associated with Jupiter and Jupiter is aspecting seventh house.

    iii) Bagyathipathi is in good position and lagna lord is in own house.

    Hence, He married but delayed ( after his 36th age) might be Saturn dasa, Venus bhuthi.

    Reasons for unhappy married life:

    i) Mars and Rahu is in seventh place and kethu aspecting.

    ii) Lagna lord and seventh house lord is in 6/8 position as well as both are enemies.

    iii) Second house lord is sitting 12th place from its own house and mars is aspecting second house.

    iv) In 12th place Manthi is there.

    v) From seventh house, eitgth house( i.e. second house) is indicating life partner's life. Here affected.

    Hence, marriage life was not happy and ended with divorce or other reason.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com