மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.2.15

Astrology: quiz number.76 பதில்களை 1,2,3,4 என்று வரிசைப் படுத்தி எழுதுங்கள்!


Astrology: quiz number.76  பதில்களை 1,2,3,4 என்று வரிசைப் படுத்தி எழுதுங்கள்!

Quiz No. 76

புதிர் போட்டி எண்.75 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,3,4 என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

9.2.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு நான்கு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மாவைப்போன்ற பெண்மணிதான் அம்மணி. பெண்களைக் குறித்துச் சொல்வதற்கான உயர்வான சொல்! ஆகவே அம்மணி1

அம்மணியின் ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!


கேள்விகள்:

1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
2. ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா? படித்தார் என்றால் எதுவரை படித்தார்? படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை?
3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா?
4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார்? போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை?

உங்கள் பதில்களையும் இதே வரிசையில் எண் கொடுத்து எழுதுங்கள்

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

  1. வணக்கம் வாத்தியாரே!!!

    Quiz76ற்கான பதில்.

    1. 2ம் வீட்டிற்கு உரிய செவ்வாய் லக்கினத்தில். 6க்கு உடைய சூரியன், வாக்கு ஸ்தானமான 2ல் உச்சம்.
    2. பட்ட படிப்பு படித்தவர்.
    3. வேலைக்கு சென்றார். அவர் பெற்றோர்கள் கனவு நிறைவேறியது.
    4. சொகுசாக, உட்கார்ந்து வேலை பார்க்கும் இன்ஜினியரிங் வேலைக்கு சென்றார்.


    விளக்கம்.
    1. 2ம் வீட்டிற்கு உரிய செவ்வாய் லக்கினத்தில். லக்கினத்தில் செவ்வாய் அமர்ந்தாலே கடும் கோபத்தை வரவழைப்பார்.
    வாக்கு ஸ்தானத்தில், 6ம் இட வில்லனான சூரியன் வந்து அமர்த்து உச்சம் பெற்று, சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போகும், அதிரடியாகப் பேசும் மனோபாவத்தை கொடுத்தார்.

    2. 4,7ற்கு அதிபதி புதன் லக்கினத்தில் அமர்ந்து நீசமானாலும் உச்ச சுக்கிரனுடன் சேர்ந்ததால் நீசபங்கம் அடைந்தார். நல்ல கல்வியை வழங்கினார். உடன் செவ்வாய் சேர்ந்ததால் எந்திரங்கள் சம்பந்தமான இன்ஜினியரிங் படிப்பு படித்தார்.
    அதற்கும் மேல் படிக்க முயற்சி செய்தார். 5ற்கு அதிபதி சந்திரன், 12ல் அமர்ந்ததால் முடியவில்லை.

    3. மீன லக்கின யோகாதிபதி குரு, 1, 10ற்கு உடைய குரு 5ல் உட்சமாகி, 9ம் அதிபதி செவ்வாய் வந்தமர்ந்த லக்கினத்தையும், 9ம் இடத்தையும் பார்கிறார். நல்ல வேலையை வழங்கினார். லக்கினத்தில் அமர்ந்த உச்ச சுக்கிரன் சொகுசான சூழ்நிலையை தந்தார். அவர் பெற்றோர்கள் கனவு நிறைவேறியது.

    4. 9ற்கு அதிபதி செவ்வாய், நீச புதன் மற்றும் உச்ச சுக்கிரனுடன் சேர்ந்ததால் எந்திரங்கள் சம்பந்தமான இன்ஜினியரிங் வேலை, அதுவும் கடின உடல் உழைப்பு தேவையில்லாத வேலையை தந்தார்.



    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  2. வனக்கம் அய்யா ஜாதகர் மீன லக்கனம் கும்பரசி லக்கன அதிபதி குரு 1. இரன்டாம் வீட்டு அதிபதி செவ்வாய் லக்கனதில் அமர்ந்ததால், தன் வீட்டிற்கு 12அமர்ந்ததாலும்,6அதிபதி உச்சம் பெரும் சூரியன் 2ல் அமர்ந்ததால் 2.ஜாதகர் கல்லுரி படிப்பு முடித்தாவர் லக்கன அதிபதி உச்சம் பெற்ரு லக்கணத்தை தன் பர்வையில் வைதுள்ளார்,நான்காம் வீட்டு அதிபதி கல்விக்கு அதிபதி புதன் தன் வீட்டிற்கு 10ம் இடமனா கேந்திரதில் லக்கணத்தில் உள்ளார்
    3.இல்லை 4.10ம் வீட்டிற்கு உரியவன் 8ல் அமர்ந்ததனாலும்,தொழீழூக்கு உரியவன் கர்மக்காரன் சனி லக்கிணதிற்கு 6ல் அமர்ததாலும்




    ReplyDelete
  3. Sir,

    Please find my answers below.

    1. Short temper - Sevvai in Lagnam basically mention native is short temper.Also Second house owner Sevvai sits in Lagnam which is 12th for second house.
    Arguments - Suriyan ucham in second house who is sixth house owner. Second house owner with 3rd and 8th house owner Sukran.
    2. Education - Native is Post graduated. 4th house owner sits in Lagnam with strong Lagnathypathy's 9th aspect even though he is neesam (neesa - bangam here).
    3. Job - Native got good job. 10th house owner Guru ucham (also he is lagnathypaty) he helps native to get good job.
    4. Native got successful teaching profession bcz 10th house owner guru sits in 5th house and aspects Budhan.

    Additionally, Sukran and Sevvai in Lagnam - Native is beautiful, height and colorful. May be unmarried or troubles in married life. combination of Sevvai + sukran in lagnam is not good for native.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  4. அய்யா,
    வணக்கம்.
    பிறந்த நாள் : 22.04.1979 05.00 a.m.
    I
    1. லக்கினத்தில் செவ்வாய்.
    2. சந்திரனுக்கு இரண்டில் செவ்வாய் உள்ளார்.

    3. வாக்கு ஸ்தானத்தில் சூரியன் உச்சம்.
    4. 5 ஆம் அதிபதி சந்திரன் கேது உடன் கூட்டணி சேர்ந்து 12 இல் உள்ளார்.
    II
    நான்காம் அதிபதி புதன் நீச்ச பங்க யோகத்தில் உள்ளார்.
    குரு உச்சத்தில் உள்ளார்.
    ஆகவே பட்ட படிப்பு வரை படிக்கலாம்.
    III
    ஆம்
    IV
    அரசு வேலைக்கு செல்ல வாய்ப்பு உண்டு.
    சூரியன் உச்சம்.
    சூரியன் வீட்டில் காரகன் சனி.
    பத்தாம் அதிபதி குரு உச்சம்.
    இப்படிக்கு
    பாலா

    ReplyDelete
  5. 1. ஜாதகி ப்டு கோபத்திற்கு காரணம் லக்னதிபதி திரிகோணம் பெற்றார் மேலும் உச்சம் 6ல் சனி அதோடு ராகு இது வில்லிதானத்தை காட்டும் அதற்கு அடுத்து வாக்கு ஸ்தானதில் ஆறாம் அதிபதி உச்சம் அது கூட சூரியன் முதல்தரமான கோபகிரகம் அதற்கு அடுததது லக்னதில் செவ்வர்ய் இருகிறார். லக்ன முறைப்படி
    வாக்கு ஸ்தான அதிபதி செவ்வாய் இதுவும் 2ஆம் வீட்டிற்கு 12ல்
    2.நானகாம் அதிபதி புதன் நீசம் நீசபங்கம் பெற்றால் கூட படிக்கவில்லை நான்காம் அதிபதி க்டுமையாக பாதிக்க பெற்றார் புதன் மூன்றாம் அதிபதி மற்றும் 8ஆம் அதிபதியுடன் சேர்ந்து விட்டார் 3ஆம் வீட்டில் சனியின் பார்வை விழுகிறது
    3 பெற்றோர்களின் கனவு நிறைவேறவில்லை காரணம் 10ல் மாந்தி 10ஆம் அதிபதி குரு அந்த வீட்டிற்கு 8ல் ஆனால் ரொம்ப காசு இருக்கும் காரணம் 6ல் சனி ராகு தனக்காரன் குரு 5ல் உச்சம் சந்திரன் சனியின் பார்வை பெற்று விட்டது அம்மா ஸ்தானதிபதி புதன் நீசம் அம்மாவுக்கு சந்தோசம் கொடுக்கமுடியது மேலும் செவ்வாய் சூரியனுக்கு 12ல் சூரியன் தந்தை கிரகம் அது 8ஆம் அதிபதிக்கு பக்கத்தில் சாரம் வாங்கியிருகிறது தந்தைக்கு சந்தோசமளிக்க முடியது.
    4. வேலைக்கு போகவில்லை காரணம் 10ல் மாந்தி 10ஆம் அதிபதி அந்த வீட்டிற்கு 8ல் உச்சம் தனதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு 12ல் கர்ம காரன் சனி 6ல்.

    ReplyDelete
  6. அன்புள்ள அய்யா,
    ஜாதகி மீன லக்னம்.
    1)6ஆம் அதிபதி சூரியன் 2 ஆம் வீட்டில் இருப்பது நல்லதல்ல.2ஆம் வீடு என்பது வாக்கு ஸ்தானம்.சூரியன் வெப்ப கிரஹம்.6ஆம் வீடு எதிரிகளின் வீடு.அதனால் வாயை திறந்தாலே சண்டைதான்.
    2)ஜாதகிக்கு யோக கிறஹமான புதன் (4 மற்றும் 7 க்கு உரியவர்) லக்னத்தில் நீசம் பெற்றாலும் உச்ச சுக்ரனால் நீச்சபங்கம் ஆகிறார்.மேலும் இன்னொரு யோக கிரஹமான குரு (1 மற்றும் 10 க்கு உரியவர் ) 5 இல் இருந்து 9 ஆம் பார்வையை லக்னம் /புதனின் மீது பதிக்கிறார்.ஆதலால் ஜாதகி மெத்தபடித்தவர்.குறைந்த பட்சம் முதுகலை பட்டம் பெற்றவர்.
    3)1 மற்றும் 10 ஆம் அதிபதி உச்சம் பெற்றதனால் ஜாதகி வேலைக்கு போவார்.10 இல் மாந்தி இருப்பதனால் ஒரே வேலையில் இருக்காமல் வேலையை மாற்றி கொண்டு இருப்பார்.வேலை உண்டு.
    4)கர்மகாரகன் சனி (11 மற்றும் 12 க்கு உரியவர் ) 6 ஆம் வீட்டில் இருப்பதனால் விபரீத ராஜ யோகம் உண்டு.6 ஆம் வீட்டில் ராஹு இருப்பதனால் எதிரிகளை ஜாதகி பந்தாடுவார்.எதிரிகளை வெல்லும் திறமை உள்ளவர்.வழக்கறிஞர் வேலை செய்து கொண்டு இருப்பார்.
    நாளை டெல்லி யில் தேர்தல் முடிவுகளோடு இந்த தேர்வு முடிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் மாணவ கண்மணி.
    என்றும் பணிவுடன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  7. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    புதிர் எண் 76க்கான விடைகள்:
    1) ஜாதகி மீன லக்கினகாரர்.இரண்டுக்குறிய செவ்வாய்,நெருப்பு கிரகம் வாக்குஸ்தானாதிபதியாகி லக்கினத்திலேயே அமர்ந்துள்ளார்.இரண்டாமிடமாகிய வாக்குஸ்தானத்தில் அமர்ந்த 6ம் அதிபதி சூரியனும் நெருப்பு கிரகம் ஆனதால் முன்கோபி மற்றும் அதிரடியாக பேசுபவர் ஆவார்.
    2) ஜாதகி மருத்துவ துறையில் முதுகலை பட்டம் பெற்றவராவார்.காரணம் கல்விக்குறிய 4ம் அதிபதி புத்திக்கு காரகனுமாகிய புதன் லக்கினத்திலேயே அமர்ந்து,லக்கினாதிபதி குருவின் பார்வையும் பெற்றதோடல்லாமல்,லக்கினத்தில் அமர்ந்த உச்ச சுக்கிரனால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார்.ரத்த சம்பந்தமான செவ்வாயும் லக்கினத்தில் சேர்க்கை பெற்றுள்ளதால் மருத்துவத்தில் நிபுனத்துவம் பெற்றுள்ளார்.
    3) பெற்றோர்களின் கனவை நனவாக்கி அவர் மருத்துவ துறையில் உயர் பதவியில் அமர்ந்திருப்பார்.
    4) அரசு மருத்துவ துறையில் பணியிலிருப்பார். அரசு துறைக்கு உரிய ராஜ கிரகமான சூரியன் 6ம் அதிபதியானாலும் தன் வீட்டிற்க்கு பாக்கியஸ்தானமாகிய 9மிடத்தில், லக்கினத்திற்க்கு 2ம் வீட்டில் அமர்ந்துள்ளதாலும்,பாக்கியஸ்தானாதிபதி செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்து லக்கினாதிபதி குருவின் பார்வை பெறுவதாலும் அரசு பணியில் உயர் பதவியிலிருப்பார்.
    தாங்கள் முன் பாடங்களில் கற்ப்பித்தபடி, இது இறையருளால் ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகமாகும்.லக்கினாதிபதி குரு திரிகோணமான 5மிடத்தில் அமர்ந்து 9மிடத்தையும், லக்கினத்தையும் தன்வையில் பார்வையில் வைத்துள்ளதோடு, சுபர்களான புதன்,சுக்கிரன் மற்றும் பாக்கியாதிபதி செவ்வாயையும் பார்வையில் வைத்துள்ளார்.12ம் அதிபதி சனி 6ல் ராகுவுடன் கூட்டணி போட்டு அமர்ந்தது இன்னும் சிறப்பு.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  8. புதிர் எண் 76 க்கான அலசல்.

    மீன லக்கினம், கும்ப ராசி ஜாதகி.

    1. அவரின் முன் கோபத்திற்கு காரணம், வாக்கு ஸ்தானத்தில் 6ம் அதிபதி உச்ச சூரியன் அமர்வு. மற்றொரு நெருப்பு கிரகமான 2ம் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் அமர்வு.
    2. ஜாதகி பட்டப் படிப்பு பயின்றவர்.
    3. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றினார்.
    4. அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்.

    காரணங்கள் :
    லக்னாதிபதி குரு கடகத்தில் உச்சமாகி அமர்ந்துள்ளார்.லக்கினத்தை தன் 9ம் தனிப் பார்வையில் வைத்துள்ளார். இது ஒரு நல்ல அமைப்பு.

    நெருப்புக்கிரகங்களான 6ம் அதிபதி சூரியன் உச்சமடைந்து வாக்கு ஸ்தானமான 2ல் அமர்ந்ததும், அதன் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்ததும், அவரின் படுகோபத்திற்கும், எல்லோருடனும் சண்டை போடுவதற்கும் காரணமாகியுள்ளது.

    கல்விக்கு காரகனான புதன் லக்கினத்தில் நீசம். ஆனால் உச்ச சுக்கிரனின் சேர்க்கை காரணமாக நீசபங்கமாகி வலுவுடன் உள்ளார். அவரே நான்காம் அதிபதியும் ஆவார். அவருக்கு லக்னாதிபதி குருவின் பார்வையுள்ளது. நாலம் இடத்திற்கு பாக்கியாதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. ஆனால் ஆரம்பக் கல்வி கற்கும் சமயத்தில் வந்த ராகு தசை கல்வி கற்பதில் சற்றே சிரமத்தை ஏற்படித்தியிருந்தாலும் 17 வயதிற்கு மேல் வந்த லக்கினாதிபதி உச்ச‌ குருவின் தசையில் நன்கு படித்து பட்டதாரியாகியிருப்பார்.

    10ம் அதிபதி குரு உச்சமடைந்து லக்கின திரிகோணமான 5ல் அமர்ந்துள்ளார்.
    கர்ம காரகன் சனி 6ல் மறைந்தாலும், 10மிடத்திற்கு திரிகோணத்திலுள்ளார். அரசுக் கிரகமான சூரியன் உச்சமாகியுள்ளார். அதன் காரணமாக ஜாதகி ஒரு அரசுப் பணியில் அமர்ந்து தன் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றினார்.

    ReplyDelete
  9. 1. ஜாதகி படு கோபக்காரர். சட்டென்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்குப்போய் விடுவார். அதிரடியாகப் பேசி அனுப்பிவிடுவார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

    sixth lord sun in 2nd house. so she will involve in heated arguments with others. Moon is the karaka for temperament. it is in association with ketu. Adding to that 7th aspect from rahu and saturn in sun's home (inimical house). so she will lose her temperament for no reason. also 2nd lord mars in 1st house under paapakartari yoga.
    . ஜாதகி படித்தாரா அல்லது படிக்கவில்லையா? படித்தார் என்றால் எதுவரை படித்தார்? படிக்கவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் படிக்கவில்லை

    lagna lord sun and venus got exalted Mercury got neechbhang raj yoga through venus and all these 4 planets are positioned strongly with 6,7 ashtavarga rekas.so she would have studied something related to law, finance, maths or even medicine.
    3. அவளுடைய பெற்றோர்கள் அவள் படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவர்களுடைய கனவு நிறைவேறியதா அல்லது இல்லையா?

    yes. maandhi in 10th house will give good results too.

    4. வேலைக்குப் போனார் என்றால் என்ன வேலைக்குப் போனார்? போகவில்லை என்றால் ஜாதகப்படி ஏன் போகவில்லை?


    Again lagnalord and 10th lord got exalted. during jupiter mahadasha she would have definitely got placed well. mars in 1st house. jupiter and sun's exaltation. my 1st guess professor/teacher/- govt executive
    2nd guess high profile job in law and finance
    3rd- doctor.







    ReplyDelete
  10. 1.வாக்கு ஸ்தானதிபதி செவ்வாயாக இருந்து அவ‌ர் லக்கின பாவத்தில் தன் வீட்டுக்கு 12ல் அமர்ந்ததும்,லக்கினாதிபதி குரு 5ல் அமர்ந்து உச்சம் பெற்றதும்,பகை ஸ்தானதிபதி சூரியன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்றதும் ஜாதகியை தன் அதிகாரத்தினை(அகங்காரத்தினை)நிலை நாட்ட வைக்கும்.அது கோபமாக அவரைப்பேசவைக்கும்.ராகுவின் தசை 17 1/2 வயதுவரை இருந்ததும் கோபத்திற்கான காரணம்.

    2.ஜாதகி படித்தவர்தான்.பட்ட மேற்படிப்பு கணக்கு/அறிவியல் ஆய்வாளராக பரிமளித்தார்.குரு சுக்கிரன் புதனின் தொடர்பு, சுக்கிரன், குரு உச்சம் ஆகியவை இவரை சரஸ்வதி யோகம் உடையவராக் ஆக்குகிறது.புதன் செவ்வாய் இணைப்பு இவரை அறிவியல் ஆய்வாளர் அளவுக்கு உயர்த்தியது.

    3.வேலைக்குச் சென்றார். கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.10ம் அதிபன் குரு 5ல் உச்சம் பெற்றது, அவர் 9 பாக்கிய ஸ்தானத்தைப் பார்த்தது பத்தாம் இடத்திற்கு 38 பரலும்,பத்தாம் அதிபனுக்கு 6 பரலும் அஷ்டவர்கத்தில் உள்ளது.எனவே வேலை நிச்சயம்.

    4.கல்லூரி வ்ரிவுரையாளராக அரசாங்க சம்பளம் பெற்று இருப்பார்.6ம் அதிப்னையும் வேலைக்கானவராக எடுத்துக்கொள்ள வேண்டும்=அவர் சூரியன். புதன் நீசபங்கம் அடைந்ததும் 2ல் அமர்ந்து உச்சம் பெற்றது அரசாங்க வேலையையும் வாக்கு ஸ்தானதிபதி செவ்வாய் புத்திகாரகன் புதனுடன் அமர்ந்ததும்,குருவின் பார்வை புதன் செவ்வாய்க்கு கிடைத்ததும் இவரை அறிவுரை கூறி வழி நடத்தும் பொறுப்பில் வைத்திருக்கும். எனவே கல்லூரி ஆசிரியர்வேலை.

    எனது இரண்டாம் மகள் பிறந்தது இதே சித்திரை மாதம் ஹஸ்தத்தில் இந்த ஜாதகி சதயம். 22 ஏப்ரல் 1979 விடியற்காலை 5 மணி 19 நிமிடம் 15 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    ReplyDelete
  11. 1.ஜாதகி கோபகாரராக இருக்க காரணம் லக்கினத்தில் உள்ள செவ்வாயும். லக்கினம் பாபகர்த்தாரி யோகதிலும் இருப்பதால்

    2.ஜாதகி படித்தவர்.பட்டப்படிப்பை முடித்தவராக இருப்பார்.காரணம் 4ம் அதிபதி புதன் நீசபங்க யோகத்தில் இருப்பதாலும், உச்சம் பெற்ற லக்கினாதிபதி குருவின் பார்வயை பெருவதாலுமாகும்

    3.ஜாதகி வேலை கிடைக்க மிகுந்த சிரமங்கலை சந்திதிருப்பார் .காரணம் 10இல் மாந்தி இருப்பதும் ,10ம் இடம் சுப கிரகங்களின் பார்வயை பெறாததும் ஆகும்.மேலும் இது காலசர்ப்பதோசம் நிறைந்த ஜாதகம்

    4.காலசர்ப்பதோசம் முடிந்தபின் கலை துறைகலிலோ அல்லது அரசு துறைகலில் வேலை கிடைத்திருக்கும்.காரணம் சுக்கிரன் மற்றும் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால்.

    நன்றியுடன்,
    ஆனந்த் .தமிழ்

    ReplyDelete
  12. Madhippirkuriya Aiya Vanakkam,

    1.) 6-m adhipathy Sooriyan uccham petru, Vakku sthanathil amarvu and chevvai lagnathil. Adhanal kobakarar.

    2.) 4-m adhibathy budhan neesam petralum, Sukranal Neesabangham adaindhullar and Guru paarvai 4-m adhibathy(Budhan). 9-m adhibathy chevai paarvai 4-m veedu. Degree Mudithavarey.

    3.)Petrorgaladhu kanavu niraiveriyadhu.

    4.) 10-m adhibathy Guru Uccham and 6-m adhibathy Sooriyan uccham and Sooriyanukku, Kendhirathil Guru. Government Employee.. May be Teacher or Banking Professional.

    Thank You.

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    மீன லக்ன ஜாதகி. லக்னத்தில் செவ்வாய். உச்ச குருவின் பார்வை. சூரியன் உச்சம். சுக்கிரன் உச்சம்.

    1. கோபக்காரராக இருக்க காரணம் - மன காரகனான சந்திரன் 12ல் கேதுவுடன் அமர்ந்து, சனி மற்றும் ராகுவின் நேரடிப் பார்வையில் இருப்பதால் இவர் எமோசனல் கேரக்டராக இருப்பார். மேலும் லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு, லக்னத்தில் செவ்வாயும் இருப்பதால் இவர் மகா கோபக்காரர்.

    2. ஜாதகி பட்டப் படிப்பு முடித்தவர் - கல்விகாரகனான புதன் 4ம் வீட்டுக்கு அதிபதியாகி, லக்னத்தில் செவ்வாயுடன் சேர்ந்து, குருவின் பார்வையில் இருப்பதால் ஜாதகி உயர் கல்வி முடித்திருப்பார்.

    3. வேலையில் இருப்பார் - புதனும், செவ்வாயும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்திருப்பதாலும், 6ல் சனி இருப்பதாலும் கட்டாயம் வேலை உண்டு.

    4. பொறியியல் சம்பந்தமான வேலை - 6ம் இடத்தில் சனியுடன் ராகு அமர்ந்து இருப்பதால் நிச்சயமற்ற வேலைதான் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கும். ஆனால் சனி திசையில் நிரந்தர வேலை கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  14. அய்யா இனிய வணக்கம். 09/02/2015
    புதிர் போட்டி எண்: 76 க்கான பதிலை தங்களுடைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை .ஆதலால் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.
    கேள்வி எண் 1 க்கான பதில்: கோபம் கொள்ள காரணம்
    லக்னாதிபதி குரு திரிகோண பலம் பெற்று கடகத்தில் உச்சம் பெறுகிறார்.
    குரு அமர்ந்த வீட்டின் அதிபதி மனோகாரகன் சந்திரன் கேதுவுடன் சேர்ந்து பகை பெற்று 12 இல் மறைகிறார். சந்திரன் கேதுவுடன் சேர்ந்ததால் சிந்தனை, அறிவு குறைவதோடு குழப்பமான மனநிலை. இன்னும் சொல்லபோனால் லக்னமும் ராசியும் அடுத்தடுத்த ராசிகளில் அமர்ந்ததால் ஜாதகிக்கு சுய புத்தி வேலை செய்யவில்லை.
    லக்னத்தில் புதன் இருந்ததால் திக் பலம், ஆனால் புதன் நீசம் & கேந்திரதோஷம் பெற்ற அமைப்பினால் புத்திக்காரன் புதன் வலு குறைந்து செவ்வாயின் கரம் ஓங்கி இருப்பதால் ஜாதகி எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளும் அமைப்புள்ளவர்.
    லக்னத்திற்கு 2 வாக்கு ஸ்தான அதிபதியான செவ்வாய் லக்னத்தில் அமர்ந்ததாலும் 6 ம் அதிபதியான வில்லன் சூரியன் வாக்கு ஸ்தானத்தில் உச்சம் பெற்று செவ்வாயின் வீட்டில் அமர்ந்ததாலும் அம்மணி ரெம்பவே கோபபடுவார்கள் ( அசுப கிரகங்கள் லக்னத்தில் அமர்ந்தால் கோபம் அதிகம் வரும் )
    லக்னத்திற்கு இருபுறமும் அசுப கிரகங்கள் .மேலும் லக்னத்தில் கிரக யுத்தம் செவ்வாயின் 4,7,8 பார்வைகள் புதனுக்கும் சுக்கிரனுக்கும் கிடைப்பதும் சிறப்பான அமைப்பு இல்லை. மாந்தியின் 7 ம் பார்வையும் புதனுக்கு கிடைப்பதால் அறிவின் மந்ததன்மையை காட்டுகிறது.
    கேள்வி எண் 2 க்கான பதில்: ஜாதகி படிப்பு :
    ஜாதகி படித்தார் .புதன் நீச பங்க யோகம் பெற்ற அமைப்பினால் 8 ம் வகுப்பு வரை படித்தார்.கல்விகாரன் புதன் லக்னத்திலும் சதுர்த்த கேந்திரதிலும் பலம் பெறாததாலும் மாந்தியின் அசுபபார்வை 4 ம் இடமான கல்வி ஸ்தானத்திற்கு கிடைப்பதாலும், சூரியனின் 3 ம் பார்வை கல்வி ஸ்தானத்திற்கு கிடைப்பதாலும் சூரியன் 2இல் உச்சம் பெற்ற அமைப்பினால் கல்வி நன்றாக அமைந்தது.
    கேள்வி எண் 3 க்கான பதில்: பெற்றோர்கள் கனவு
    பெற்றோரின் கனவு நிறைவேறவில்லை .மீன லக்னத்திற்கு பாதகாதிபதி புதன். மதிகாரகன் சந்திரன் கதிகாரகன் சூரியன் 12/2 என்ற அமைப்பில் அமர்ந்து லக்னத்தை பாழ் படுத்தி விட்டனர். பெற்றோரின் கனவு கானல் நீர் ஆகி விட்டது.
    கேள்வி எண் 4 க்கான பதில்: வேலை
    கர்மகாரகன் சனி லக்னத்திற்கு 12 இல் விரயாதிபதியாகவும் 11 இல் லாபாதிபதியாகவும் இருக்கிறார். தனாதிபதி செவ்வாய் லக்னத்தில் இருப்பதாலும், தன ஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெற்றதாலும் தனகாரகன் குரு 5 இல் உச்சம் பெற்றதாலும் 10 மாந்தி இருப்பதாலும் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை நடத்தவேண்டிய அமைப்பு .
    குரு, சுக்கிரன் ஜல ராசியில் உச்சம் பெற்ற அமைப்பினாலும் ராகு / கேது 6/12 இல் இருப்பதாலும் ஜாதகி வெளிநாட்டு வேலைக்கு செல்லும் அமைப்பு உள்ளது. குரு திசை / சனி திசையில் பணி அமைந்திருக்கும்.
    என்றும் அன்புடன்
    சோம பழனியப்பன்
    மஸ்கட் ( காரைக்குடி-இந்தியா )

    ReplyDelete
  15. 1) 2ம் இடம் வாக்குஸ்தானம். அங்கு பாப கிரகங்கள் குறிப்பாக உஷ்ண கிரகங்களான சூரியனோ செவ்வாயோ இருந்தால் பேச்சு அனல் கக்கும். காரசாரமாகப் பேசுபவராக இருப்பார். அத்துடன் மன காரகன் சந்திரன் பாப கிரகமான கேதுவுடன் இருப்பது.

    2) 4ம் அதிபதியும் வித்யாகாரகனுமான புதன் நீசமானாலும் நீச பங்கம் அடைந்து இருக்கிறார். ஆக ஜாதகி படித்தவராக இருப்பார்.

    3) மற்றும் 4) இதற்கு வாய்ப்பு குறைவு. 10ல் மாந்தி இருப்பது, கர்ம காரகன் சனி 6ல் மறைந்து இன்னொரு பாப கிரகமான ராகுவுடன் இருக்கிறார். 10 அதிபதி குரு அந்த வீட்டிற்கு 8ல் மறைந்து விட்டார். எந்த வேலைக்கும் போகவில்லை. போனாலும் நிலைத்து நிற்க வாய்ப்பில்லை.

    பின் குறிப்பு: எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் வேலை வேறு, பணி வேறு, தொழில் வேறு என்று யாரும் வெறுமனே வியாக்கியானம் மட்டும் சொல்லிக் கொண்டு வராமல் இருப்பார்களாக.

    ReplyDelete
  16. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் :76.
    ஜாதகி ..மீனா லக்னம் .
    கும்ப ராசி..
    1.ஜாதகி மிகவும் கோபக்காரர் .லக்னத்திற்கு 2 ம் வீடான வாகுஸ்தானத்தில் சூரியன் உச்சம் .ஆகவே கோபம் அதிகமாக் வருகிறது .2ம் வீட்டதிபதி செவ்வாய் கோபகாரர் தன வீட்டிற்கு 12ல் .ஆகவே விரயமான [தேவையில்லாது ]கோபம்
    2,ஜாதகி பட்ட மேற்படி வரை படித்திருப்பார்.::கல்விஷ்தானமாகிய 4 ம் வீட்டு அதிபதி புதன் லக்னத்தில் உடன் உச்சமான சுக்கிரன் ,செவ்வாய் ,பக்கியாதிபதி[9].
    3.ஜாதகியின் பெற்றோர் கனவு நிறை வேறி இருக்காது .**கால சர்ப்ப யோகம் உள்ள ஜாதகம் ..ராஹு கொடி பிடிக்கிறார்....3 a ..சந்திரனுடன் கேது .12ம் வீட்டில் .தாயார் ஆகாத பெண்மணி ..இவரால் தாயருக்கு சிரமம் மட்டுமே. அதுவும் மன கஷ்டம்.
    4.வேலைக்கு செல்ல மாட்டார். ..10மிடத்தில் மாந்தி சுபர் பார்வை இல்லை .மேலும் தொழில் காரகனான சனி 6ம் வீட்டில் ராகுவுடன் கூட்டணி. 4.a ...உச்சம் பெற்ற லக்னாதிபதி குரு 10ம் வீட்டிற்க்கும் அவனே அதிபதி ஆனால் ஆவனுடைய பார்வை 10ம் வீட்டை பார்க்க வில்லை .4.b ... கேது சூரியன் என் இரண்டு பாவ கிரகங்களுக்கு நடுவே லக்னம் பாபகர்த்தாரி யோகம் ..மேலும் 2ம் 9ம் வீடதிபதி செவ்வாய் தன வீட்டிற்கு 12ல் .ஆகவே இவர் படித்த மேற்படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காது ??
    5...3 கிரகம் உச்சம் பெற்று இருக்கிறது ஆனாலும் 10 ல் மாந்தி .கால சர்ப்ப தோஷம் ..இருப்பதால் *** இருக்கும் ஆனால் இருக்காது.***.???

    **பட்ட மேற்படிப்பு படித்திருப்பார்** ..

    **வேலைக்கு செல்ல மாட்டார்****. .
    என் சிற்றறிவுக்கு எட்டியவரை அலசி எழுதி இருக்கிறேன் ..
    சரியாக இருந்தால் அது வாத்தியார் அய்யாவின் உபகாரம் .
    சரியில்லை என்றால் என்னுடைய குறைபாடு...

    .

    ReplyDelete
  17. புதிர் 76க்கான விடை

    1) லக்னத்தில் உட்கார்ந்த செவ்வாய் தான் அம்மணியை சண்டைக்காரி ஆகியது.

    2) லக்னாதிபதி குரு உச்சம் அதுவும் திரிகோணத்தில். 9ம் பார்வையில் லக்னததை பார்ப்பது , 1ல் சுக்கிரன் உச்சம், இது போதாதா? 4ம்,7ம் அதிபதி புதனும் 1ல். ஆகவே படிபபு டிகிரிக்கு குறையாம்ல் உண்டு.

    3) & 4) உச்சமான சூரிய்ன், அடிக்கடி மாற்றாலாகும் அரசு வேலை தான்.

    நாராயணன்
    புதுச்சேரி.

    ReplyDelete
  18. DOB 22.04.1979
    1. Sevvai in Lakna. Hence Native is Angry one.
    2. Budhan in Necha Bangam and Guru in 5th place and hence studied well.
    3. Owner of 10th place Guru in 5th place and also Ucham hence went to job.
    4. Went to Government Job.

    ReplyDelete
  19. பதில்கள்:

    1. இரண்டாமிடம் வாக்குஸ்தானம். இரண்டிற்குரியவன் செவ்வாய். செவ்வாய் என்றாலே சண்டை, "போர்" தான். மேலும் இரண்டாம் பாவத்தில் ஆறுக்குரிய சூரியன். secondary malefic planet. மேலும் இரண்டாம் பாவாதிபதியாகிய செவ்வாய் பகையாளி வீட்டில். இது மட்டுமல்ல புத்திகாரகனாகிய சந்திரன் 12ல். யோசனை சற்று குறைவு. அதாவது பேச்சில் நிதானமோ, ஞானமோ இருக்காது. மேலும் புத்திகாரனோடு கேது. மற்றவர்கள் மேல் தன்னைக் கவிழ்க்க வருகிறார்களோ என சந்தேகப்பட்டே முந்திக் கொண்டு விரட்டியடிப்பார்.

    2.நான்குக்குரிய புதன் லக்கினத்தில் நீச்சம். கூடவே எட்டுக்குரிய சுக்கிரன். ஜாதகி பள்ளிப்படிப்பை தாண்டியிருக்க வாய்ப்பில்லை. 5க்குரிய சந்திரன் 12ல் ஆனால் 9க்குரிய செவ்வாய் பகையாளி வீட்டிலானாலும் லக்கினத்தில் இருப்பதால் தொலைதூரப் படிப்பாவது கிடைத்திருக்க வாய்ப்புள்ளதே தவிர regular college ல் படித்திருக்க நிச்சயமாய் வாய்ப்பில்லை.

    3. 10க்குரிய குரு திரிகோணத்தில் உச்சம். ஜாதகி பணிபுரிவார்.குரு பார்வை பாக்கியஸ்தானம்,லாபஸ்தானம் மற்றும் லக்கினத்தில் படுவதாலும் சூரியன் உச்சத்தில் இருப்பதாலும் ஜாதகி அரசு உத்தியோகத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

    4. 2ல் சூரியன் உச்சமென்பதால் ஜாதகிக்கு நிச்சயமாய் அரசு உத்தியோகம்.

    ReplyDelete
  20. வணக்கம். QUIZ 76
    22.04.1979 ஆம் தேதி காலை 5.17.35 மணிக்கு சென்னையில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு மீன லக்கினம். செவ்வாய், குரு யோககாரகன்.
    ராஜ யோகத்தை கொடுப்பவர் குரு.

    1. ஜாதகி படு கோபகாரார் - லக்கினத்தில் செவ்வாய் இருப்பதால் கோபம், சண்டை எற்படும். மேலும், சதய நட்சத்திரம் 2ம் பாதம் உடையவர் கோப குணங்களை பெற்றவராகவும் இருப்பார்.

    2. ஜாதகி படித்தவர். அதீத புத்திசாலி. பட்ட படிப்பு படித்தவர்.

    3. இந்த ஜாதகத்திற்க்கு யோககாரன் செவ்வாயின் 4ம் பார்வை 4ம் வீட்டின் மீதுள்ள புதனுடன் கூட்டு இருப்பதால் அவருடைய பெற்றோர் ஒரு விஞ்ஞானியாக வருவார் என்று கனவு கண்டார். அது நிறைவேற வில்லை.

    4. அவர் ஒரு கலை அல்லது ஆசிரமம் போன்ற தொழிலில் சிறந்த ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

    பலம்
    லக்கினாதிபதி குரு (6 பரல்) கடக ராசியில் உச்சம்.
    லக்கினத்தில் மீன ராசியில் சுக்கிரன் (6 பரல்) உச்சம்
    லக்கினத்தில் புதன் (7 பரல்) நீச பங்க ராஜ யோகம்.
    லக்கினத்தில் செவ்வாய் (3 பரல்) யோககாரன் இந்த ஜாதகத்திற்க்கு.
    மேஷ ராசியில் சூரியன் (4 பரல்) உச்சம்.
    சரஸ்வதி யோகம்

    பலவீனம்
    சனி (4 பரல்) வக்கிரம் இந்த ஜாதகத்தில்
    சந்திரன் (1 பரல்) தேய் பிறை பலமில்லாதவன்.

    லக்கினாதிபதி குரு மூல திருகோணத்தில் 5ம் வீட்டில் கடகத்தில் உச்சம் பெற்று தன்னுடைய 9ம் பார்வையால் லக்கினத்தை பார்த்து, பாபகர்த்தி தோஷத்தை நீக்கி நிவர்த்தி செய்தார்.

    சுக்கிரன் மீனதில் உச்சம் பெற்று நீசமான புதனுடன் சேர்ந்து நிபுனத்துவ யோகம் பெற்று, நீச பங்க ராஜ யோகம் அடைந்துள்ளார்.

    குருவின் 9ம் பார்வை லக்கினத்தில் உள்ள 4ம் வீட்டு அதிபதி புதனுடன் சேர்ந்த சுக்கிரனை (ராஜ யோகம்) பார்ப்பதால் கல்வியில் சிறந்து விளங்கினார்.

    இந்த ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் உள்ளது. புதனுடன் சுக்கிரன் இணைந்து உச்சமான குருவின் பார்வை பெற்றால் இந்த சரஸ்வதி யோகம் உண்டாகிறது. அதனால், கவிஞ்ஞராகவும், எழுத்தாளராகவும், தத்துவவாதியாகவும் சிறப்பு பெற வாய்ப்புள்ளது.

    17வயதில் குரு மாக தசை ஆரம்பமாகிறது. குரு அவருக்கு சிறந்த கல்வியை வழங்கினார்.பட்ட படிப்பு வரை படித்தார். விஞ்ஞான சம்மந்தமான படிப்பில் பட்டம் பெற்று இருக்க வாய்ப்புள்ளது.

    5ம் அதிபதி சந்திரன் 12ல் கேதுவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் பற்றின்மை உண்டாகும். அலைந்து திரிபவர். பல துண்பங்களுக்கு ஆளாக நேரிடும். துறவரம் மேற்கொண்டு கடைசியில் மோட்சம் அடைவார்.

    6ம் அதிபதி சூரியன் 2ம் வீட்டில் இருப்பதால் திக்கு பேச்சு நிலை எற்படும்.பார்வை கோளாறு எற்படும்.கடினமான உழைப்பாளி.

    தனகாரகன் குருவும், மனகாரகன் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் 8/6 நிலையில் உள்ளனர். மகிழ்ச்சி இருக்காது. 10ம்வீட்டு அதிபதி குரு தனகாரகன்.

    10ம் வீட்டில் 38 பரல்கள். தனுசு ராசி. ஆசிரமம், கலை போன்ற தொழிலில் சிறந்த ஆலோசகராக இருப்பார்.

    தொழில் காரகன் சனியின் 10ம் பார்வை 3ம் வீட்டு ரிஷப ராசியை பார்க்கிறது. 3ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம். இயல், இசை, நாடகம் நுண்கலையில் சிறந்த புகழ் பெறும் இடம் இது.

    இந்த ஜாதகத்தில் சனியும், சுக்கிரனும் 8/6 நிலையில் இருப்பதால் நல்ல வேலை கிடைத்தாலும் சுகம் படும்படி இருக்காது.

    இந்த ஜாதகத்தில் மாளவியா யோகம், சுனபா யோகம், காஹாள யோகம்(பிடிவாத குணம்), சதா சஞ்சார யோகம், மாத்ருமூலதன யோகம், சரஸ்வதி யோகம் ஆகிய யோகங்கள் உள்ளன.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  21. வணக்கம் குரு, 

    1. லக்னத்தில் அமர்ந்த செவ்வாய் கோபத்தை உண்டுபண்ணுவார். லக்னாதிபதி குரு பகவான் உச்சமானதால் ஈகோ வேறு இருக்கும். இரண்டாமிடம் செவ்வாயின் வீடு மற்றும் சூரியன் அமர்வின் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் அதிரடியாக பேசுவார். 

    2.  பள்ளி படிப்பு அதாவது 10ஆம் வகுப்புவரை படித்திருப்பார் அல்லது பள்ளி படிப்பையே முடித்திருக்க மாட்டார். காரணம் கல்வி காரகனும் 4மிட அதிபதியுமான புதன் நீசபாங்கம்மாகி சுக்ரனின் சேர்க்கையால் கெட்டார் மற்றும் நான்காமிடத்தை செவ்வாய் பார்வைடுகிறார். காலசர்ப்ப தோஷம், 17 வயது வரை பகை மற்றும் அட்டமாதிபதி சாரம் பெற்று 6இல் நின்ற ராகு தசை,  16 வயதில் ஏழரை சனியும் சேர்ந்துகொண்டது. 

    3. ஜாதகர் கண்டிப்பாக வேலைக்கு சென்றிருப்பார். காரணம் 10ம் அதிபதி குரு உச்சம் மற்றும் பத்தாமிடத்தில் மாந்தி. 

    4. நீர் அல்லது நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை செய்திருப்பார். 

    நன்றி 
    செல்வம் 

    ReplyDelete
  22. 1) ஜாதகியின் கோபத்திற்கு காரணம் 2ம் வீட்டில் உள்ள உச்ச சூரியன் மற்றும் 2ம் வீட்டுக்கார செவ்வாய் அந்த வீட்டிற்கு 12ல் அதாவது இலக்கினத்தில் இருப்பதால். 2ம் வீட்டிற்கு எந்த சுபர் பார்வையும் இல்லை.
    2) 4ம் வீட்டுக்காரரும் கல்வி காரகருமான புதன் நீசம் பெற்றாலும் அவர் உச்ச சுக்கிரனோடு இலக்கினத்தில் இருப்பதால் நீசபங்க இராஜயோகத்தில் உள்ளார். அதோடு இலக்கினாதிபதியான உச்சம் பெற்ற குருபகவானின் சுப பார்வையும் பெற்றிருப்பதால், உடன் பாக்கியாதிபதி செவ்வாயும் இருப்பதால், ஜாதகி நிச்சயம் பட்டப்படிப்பு முடித்திருப்பார்.
    3) பத்தாம் வீட்டுக்காரரான இலக்கினாதிபதி குரு பகவான் 10ம் வீட்டிற்கு 8ல் இருந்தாலும், உச்சம் பெற்றிருப்பதால், மாந்தி பத்தாம் வீட்டில் இருந்தாலும், ஜாதகி வேலைக்கு சென்றிருப்பார். கர்ம காரகரான சனி பகவான் 10ம் வீட்டிற்கு 9ல் இருப்பதும் ஜாதகிக்கு உதவி இருக்கும்.
    4) ஜாதகியின் மற்ற அமைப்புகள் அவரை மிக உயரிய பதவி வகிப்பார் என்று உணர்த்தினாலும், 10ல் உள்ள மாந்தியால் சற்று பின்னடைவு இருக்கத்தான் செய்யும். இதனால் அவர் மிக உயரிய பதவிகளில் இல்லை என்றாலும், உச்சம் பெற்ற குருபகவான் வலுவாக இருப்பதால் ஒரு நல்ல நிலையில் நிச்சயம் இருப்பார்.

    இந்த ஜாதகத்தில் சகட யோகமும் உள்ளது. ஆனால் குரு பகவான் உச்சம் பெற்றிருப்பதால் அந்த (அவ) யோகம் செல்லாது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  23. Dear sir,

    Vanakam,

    Ans: 1 The given native is aggressive , because of the placement of planet Mars in Lagna.

    Ans:2- She is not highly educated. Due to the placement of planet Guru in exaltation she might have finished only schooling and there wont be further education. .

    Ans : 3 The dreams of her parents about her education and career might not have been met with or fulfilled.

    Ans: 4. She might be unemployed . Not gone for job.

    Reasons:

    Ans 1- If there is large number of planets ( more than 4 planets) in 12th house 1 st house and second house u can say the person is full of anger. Most important planet which provokes anger is Mars. When there is Mars and sun in 1 st , second or 12th house, native is prone to anger for sure. Mars in 1 st house, which is head, 2nd house which is tongue, 4th house which denotes heart, 7th house and 8th house (person opposite to you) the native will be aggressive towards others , or open to anger and shouting is related to 12th house. Especially if Mars is in Naksthra of Shani person will be very aggressive.

    Given chart she has lagna Mars with second house Sun .More than 4 planets( here 6 planets) we see occupying so called 12th 1 st and second house here , and 12th house has moon with kethu . So these are the clues for her aggressiveness.

    Ans 2- Guru is karaka of education is exalted placed in 5th house here . So she might have passed basic schooling. 4th and 7th lord mercury is placed neecha here. Though Venus is exalted she is 3 rd and 8th lord so its not a good placement for education. 5 th lord Chandra co joined kethu and placed in 12 th denotes she is not highly educated.

    Ans 3- So the parental dreams are not met with. Above two answers explains answer to this third question.

    Ans: 4- She is not employed . Because Job karak Shani is placed with Rahu in 6th house. ( Moreover 10th house has Mandi too ) 10th house has no benefice aspect too. Here 5th lord co joined ( Jeevana sthanadhi pathi) with kethu and placed in 12 th house denotes she has no career prospects and she is not an earning member .

    Regards,
    Prasanna

    Dubai.

    http://devarshivedicastrology.freeforums.org/

    ReplyDelete
  24. Respected Sir,

    My answer for our Quiz No. 76:-

    1. Sun is in second house (for speech) and Mars is in Lagna. So that she is short temper ( angry girl).

    2. She couldn't study. It means she didn't complete her schooling. 4th house lord is debiliated and in baba kathri yoga and sitting along with 8th house lord and mars. Mars is aspecting 4th house. Rahu dasha also for first seventeen years. Kala sarpa dhosa also. Hence, she couldn't study higher education.

    3. She couldn't go for job. Since 10th house lord is in 8th house from its own house and karmakara position is 2/12.

    4. In second house, Sun is sitting ( sixth house lord) and second house lord Mars is sitting 12th house from its own house. This is not good sign to go job and earn herself. she is not blessed to earn by going job.

    4. her 9th house is blessed and she has family support.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com