மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.8.14

Short story: சிறுகதை: அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!


Short story: சிறுகதை: அதிரடிக் கதை: காத்திருந்த சிக்கல்!

இந்தக் கதையை கடைசி வரி வரை விடாமல் படியுங்கள் ஒரு அதிர்ச்சியும், ஒரு ஆச்சரியமும் ஒருசேரக் காத்திருக்கிறது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவி ஊரில் இல்லை. மேல் பயிற்சி வகுப்பிற்காக புதுதில்லி சென்றிருக்கிறாள். திரும்பி வர 15 தினங்களாகும். அவள் வேலை பார்க்கும் தனியார் நிறுவனம் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருந்தது.

அவளைச் செம்பட்டு விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டுத் திரும்பிய அவளுடைய கணவன் கனகராஜன் ஒரு குறுகுறுப்போடு இருந்தான்.

ஒருவருடமாக அடக்கி வைத்திருந்த தன்னுடைய ஆசையை இன்று நிறைவேற்றிக் கொள்வது என்று முடிவு செய்திருந்தான்.

என்ன ஆசை?

வேறு என்ன? ஆசை தீரத் தண்ணியடிக்க வேண்டும், அவ்வளவுதான்!

திருமணத்திற்கு முன்பு விளையாட்டாக எல்லாத் தப்புக்களையும் செய்து கொண்டிருந்தவனை பெண்போலீஸ் போல மிரட்டிக் களை எடுத்து வைத்திருந்தாள் அவன் மனைவி சாரதா!

அவளுக்குத் தெரிந்தால் கண்ணை நோண்டி விடுவாள்

இப்போதுதான் அவள் இல்லையே!

வீட்டிற்கு வந்தவன் நன்றாக ஒரு குளியல் போட்டான். பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு புறப்பட்டான். அலமாரியில் இருந்த நூறு ரூபாய்க் கட்டில் பத்து நோட்டுக்களை உருவி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.மணி இரவு 8.30ஐத் தொட்டிருந்தது.

வீட்டைப் பூட்டும் போதுதான் யோசித்தான்.

காரை எடுத்துக் கொண்டு போகலாமா? வேண்டாம் என்று முடிவு செய்தான்.

திரும்பி வரும்போது வழியில் காக்கிகள் நின்று, வாயை ஊதிக்காட்டு என்றால் வம்பாகிவிடும்!

சரி வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து அடித்தால்? அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பக்கத்துவீட்டு டாபர்மேன் பெரிசு எப்போது வேண்டு மென்றாலும் வுந்து கதவைத் தட்டி ”இந்த சி.டியைப் பாருங்கள். பானா ஸீரிசில் வந்த படம் - சூப்பராக இருக்கும்” என்று சொல்லி மோப்பம் பிடித்துப் பற்ற வைத்துவிடும் அபாயம் உண்டு!

அதனால் போனோமா, அடித்தோமா, வந்து கவுந்தடித்துப் படுத்தோமா என்று இருப்பதே நல்லது!

புறப்பட்டான், காத்திருக்கும் சிக்கலை அறியாமல்!

                                    ***************************

கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் அவனுடைய வீடு. ஒரு பர்லாங் தூரம் நடந்து வந்தால் பிரதான சாலை குறுக்கிடும். ஆட்டோ வைத்துப் போய்க் கொள்ளலாம் என்று நடந்தான்.

பிரதான சாலைக்கு வந்த பிறகுதான் முடிவு மாறியது.

எதற்கு ரெம்ப தூரம் போக வேண்டும். பேருந்து நிலையம் அருகில்தான். அந்தப் பகுதியில் இல்லாதா பார்களா?

ராஜாளி ஹோட்டல் அருகில் ஒரு பாரைத் தேர்ந்தெடுத்து உள்ளே போனான். சற்று இருட்டாக இருந்த டேபிளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான்.

அவனுடைய பேஃவரைட் ஸ்காட்ச் விஸ்கிதான். மெதுவாக ரசித்துக் குடித்தான். சைட் டிஷ் வறுத்த முந்திரி. சிக்கன் கபாப்.

மூன்று லார்ஜ்கள் முடிந்து, ஒரு ஸ்மாலுக்கு ஆர்டர் கொடுக்கும்போதுதான் பியரெர் சொன்னார்.” சார், எங்கள் பார் ஆரம்பித்து, இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது!”

"அதெற்கென்ன?”

“இன்று இங்கே வரும் கஸ்டமர்கள் அனைவருக்கும் ஒரு லார்ஜ் ஃப்ரீ!”

“அடப்பாவி, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கொண்டு வா!” என்றவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து முழுதாக ஊதி முடிப்பதற்குள் அடுத்த லார்ஜ் வந்துவிட்டது. அதையும் குடித்து முடித்தான். மணி 10.30ஐத் தொட்டிருந்தது.

இனியும் உட்கார்ந்திருக்கக் கூடாது என்று நினைத்தவன் எழுந்தான். அதற்குள் அங்கே ரெஸ்டாரென்ட்டில் ஆர்டர் கொடுத்திருந்த உணவுப் பொட்டலங்கள் நீட்டாக பேக் செய்யப்பட்டு அவன் கைக்கு வந்து சேர்ந்தது. பில்லை செட்டில் பண்ணிவிட்டு, அதைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே காற்று இதமாக இருந்தது. மழை வரும்போல இருந்தது வந்தால் வரட்டும்.

எதிரே ஒரு டாஸ்மாக் கடையைப் பார்த்தவன், எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குவாட்டர் பேக்பைப்பர் விஸ்கியை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான்.

அதற்குள் ஊர் அடங்கிப் போயிருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை! வலது பக்கம் உள்ள சாலையில் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்தால் வில்லியம்ஸ் சாலை வந்து விடும்

உடம்பெல்லாம் முறுக்கேறி ஜிவ்வென்றிருந்தது. நடந்தவன் வில்லியம்ஸ் சாலை கிராஸிற்கு வந்து விட்டான்.

இரண்டு பக்கமும் சாலையை அடைத்துக்கொண்டு ஏராளமான மரங்கள்.

கருங்'கும்மென்றிருந்தது.

அப்போதுதான் அது நடந்தது.

ஒரு மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி இரண்டு அடிகள் முன்னே வைத்து, இவனை நோக்கித் திரும்பி உற்றுப் பார்த்தாள். இவனும் அப்போது தான் அவளைக் கண்டவன் உற்று நோக்கினான்.

பெண் சூப்பராக இருந்தாள். செக்கச் செவேல் என்று சிவந்த நிறம். திரைப்பட நடிகையின் தோற்றத்தில் இருந்தாள். வயது 23 அல்லது 24 இருக்கலாம். காற்றில் அவளுடைய ஷிபான் சேலை படபடத்துக் கொண்டிருந்தது. மிதமான மேக்கப்பில் இருந்தாள்.உதட்டுச் சாயம் அசத்தலாக இருந்தது. கையில் லெதர் ஹாண்ட்பேக் வைத்திருந்தாள். பெரிய இடத்துப் பெண்னைப் போன்றும் தோன்றினாள். நெறிகெட்ட பெண்னைப் போன்றும் தோன்றினாள்.

சரக்கு உள்ளே போன முறுக்கில், அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே உடம்பும் மனதும் கனகராஜனைப் படுத்த ஆரம்பித்தன!.

பழைய வாலிப நினைப்பில் அவனையும் அறியாமல் சட்டென்று கேட்டுவிட்டான்:

“வர்றியா?”

அவள் மறு பேச்சில்லாமல் ‘ம்' என்று சொன்னதுதான் அதைவிடப் பெரிய அதிர்ச்சி.

கனகராஜனுக்கு நம்ப முடியாத அதிர்ச்சியாக அது இருந்தது

வீட்டில் ஒன்பதாயிரம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு வந்தது நினைவிற்கு வர, சும்மா கேட்டு வைத்தான்.

“எவ்வளவு பணம் வேண்டும்?”

“பணமெல்லாம் வேண்டாம். நன்றாகக் கம்பெனி கொடுத்தால் போதும்”

“படு குஷியாகி விட்ட கனகராஜன், கேட்டான்,“சாப்பிட்டாயா?”

“இல்லை, இனிமேல்தான்!”

“என்னிடம் இருக்கிறது, வீடு அருகில் தான், வா முதலில் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மற்றதைப் பேசுவோம்”

தழையத் தழைய அவனைத் தொட்டவாறு அவள் நடக்க, தன் மனதிற்குள் ஆயிரம் நிலவுகள் கண் சிமிட்ட கனராஜனும் அவளுடன் சேர்ந்து நடந்தான்.

ஆமாம், எதிர் கொள்ளப் போகும் ஆபத்தை அறியாதவனாக நடந்தான் கனகராஜன்!
   
      **************************
வீடெங்கும் மல்லிகை வாசம் ஆளைக் கிறங்கடித்தது.

அவள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 11.30ஐத் தொட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் எல்லோருமே off ஆகியிருந்தார்கள். இருந்தாலும் கனகராஜன் முன்னெச்சரிக்கையாக பூனையைப்போல சத்தமின்றி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தான்.

அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள், சமையலறைக்குச் சென்று, கையில் இருந்த குவாட்டரை வைத்து மேலும் ஒரு சுற்று சுருதி ஏற்றிக் கொண்டான்.

தன் மனைவியின் நைட்டியொன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் சமையலறைக்குச் சென்று திரும்புவதற்குள், அவள் நைட்டிக்கு மாறியிருந்தாள்

நைட்டியில் அவள் இன்னமும் அழகாக இருந்தாள். தேவதைபோல இருந்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் சொர்க்கமே தன் வசப்படப் போகும் மகிழ்ச்சியில் இருந்த கனகராஜன், அடுத்த காட்சிக்குப் போகும் முனைப்பில் செயல்பட்டான்.

தன்னுடைய படுக்கையறைக்கு அவளை அழைத்துச் சென்றவன் கட்டிலைக் காட்டி உட்கார் என்றான்.

படுக்கை அறை 11 x 15 பெரிய அறை. ஸ்பிளிட் ஏர்கண்டிஷனாரால் குளிரூட்டப் பட்டிருந்தது.

உட்கார்ந்தவள் அருகில் அவனும் சென்று அமர்ந்தான்.

அவள் முகம் இன்னும் சிவந்திருந்தது. கூச்சமாக இருக்கும் என்று நினைத்தவன் கேட்டான்:

”விளக்கை அனைத்து விடட்டுமா?”

“ம்” என்றாள்

எழுந்தவனைத் தடுத்து உட்கார வைத்துவிட்டு “நான் அனைக்கிறேன்!” என்று சொன்னவள், அதை இருந்த இடத்தில் இருந்தே செயல் படுத்தினாள்.

அவளுடைய வலது கை பதினைந்தடி நீளம் நீண்ண்ண்ண்ண்டு... அறையின் குறுக்காகச் சென்று, கோடியில் இருந்த ஸ்விட்சை அனைத்தது!

(முற்றும்)
--------------------------------------------------------------------
35 ஆண்டுகளுக்கு முன்பு என் இனிய நண்பர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு பக்கப் பேய்க் கதை இது. ஸ்டோரி ஒன் லைனராக என் மனதில் இருந்தது. அதை உங்களுக்காக எனது நடையில் விவரித்து எழுதியுள்ளேன்.

இது எனது Star Posting வாரத்தில் வந்திருக்க வேண்டியது. அப்போது நேரமின்மையால் எழுதவில்லை. 15.6.2008 அன்று இதை எழுதி எனது பல்சுவைப் பதிவில் வெளியிட்டேன். இப்போது உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

எப்படி உள்ளது?

ஒரு வரி பின்னூட்டத்தில் எழுதுங்கள்!

அன்புடன்
SP.VR.சுப்பையா
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

38 comments:

  1. ராஜேஷ்குமார் என்றால்
    கொலைக் கதை என்பது போல

    இரவு நேரத்தில்
    இப்படி பேய் கதையா?

    இன்று காலையில்
    இருந்தே என்னவோ....

    சரி.. சரி..
    சாம்பிராணி புகை போடுங்க..

    ReplyDelete
  2. சிறுகதையை படித்ததும் "SPECIES"என்ற ஆங்கிலப் படத்தின் நினைவு வந்தது. திரில்லர் கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  3. இன்னும் பல சுவையான கற்பனைகளை சேர்த்து கிளைமாக்சை கடைசியில் வைத்திருக்கலாம்....

    எப்படியோ, இன்னிக்கி பாடம் போச்சு, நாளைகாட்சும் உண்டோ?...

    சதா கதையும் பாட்டும் என் கவனத்தை சிதரடிக்கிறது வாத்தியாரே...

    அன்புள்ள ஆர்வகோளாறு மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.

    ReplyDelete
  4. வணக்கம் வாத்தியாரே...

    இன்று எங்கள் குலதெய்வ சாஸ்த வழிபாட்டிற்கு சென்று விட்டேன், quiz 66ஐ miss பண்ணி விட்டேன்... ஆப்படி என்னதான் சமூக பிரச்சனை ஏற்படுமோ இந்த quizஆல், எனக்கு புரியவில்லை... எத்தனையோ புராணங்கள் இறந்தவர்களின் வாழ்கை வரலாறுகள் அவர்களின் மரணத்திற்கு பின்னேதான் எழுத பெற்றுள்ளன(அவர்கள் பிறப்பு இறப்பு நேரம் மற்றும் ரகசியம் உட்பட)

    இந்த வகுப்பறையில் பிரேதங்களை வைத்து பாடம் நடத்த வில்லையே ஒழிய, ஜோதிடமும் டாக்டர் படிப்பு தான், ஆயிரம் நாச விஷேச ஜாதகங்களை பார்த்த பின்புதான் சில யோக, அவ யோகங்களே புரிகிறது...

    இது ஜோதிட டாக்டர் படிப்பு, விருப்பு வெறுப்பு, காழ்புணர்ச்சிக்கு அப்பாற்பட்டது. பெயரை மட்டும் மறைத்து விட்டு உண்மை பதிவை ஏற்றுங்கள். இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ் அவர்களின் வாரிசுகளுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல்தான் அவர்கள் ஜாதகமும். முன் வினை மற்றும் தீய குடும்ப சாபங்களை அறிய நல்ல வழியும் கூட.. இறந்தவர்க்கு எதிர் கால பலன் இல்லை இதை ஏற்றுகொள்கிறேன்.. ஆனால் அதில் கற்றுகொள்வதற்கு ஒன்றுமில்லை என்று எவ்வாறு கூற முடியும்.

    தயவு செய்து அந்த quiz66ஐ எனக்கு ஈமெயில் செய்யுங்கள்.

    blaknar@gmail.com

    அன்புள்ள ஆர்வகோளாறு மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.

    ReplyDelete
  5. அதிகமாக குடிப்பது எப்படி தெரியுமா
    அந்த பேயோடு உறவு கொள்வது போல்

    என குடிப்பவர்களுக்காக வந்த கதை
    எப்படியோ இவர்களை திருத்தினால்

    சரி தான்..
    சரி அது பேய் தான் என எப்படி

    அந்த குடிமகனால்
    அறிந்து கொள்ள முடிந்தது..

    இன்னமும் போதை ஏறவில்லை
    இதற்கு வேறு ஏதாவது இருக்கா

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    ராஜேஷ்குமார் என்றால்
    கொலைக் கதை என்பது போல
    இரவு நேரத்தில்
    இப்படி பேய் கதையா?
    இன்று காலையில்
    இருந்தே என்னவோ....
    சரி.. சரி..
    சாம்பிராணி புகை போடுங்க..////

    அதெல்லாம் அப்பவே போட்டாயிற்று வேப்பிலையாரே!

    ReplyDelete
  7. /////Blogger venkatesh r said...
    சிறுகதையை படித்ததும் "SPECIES"என்ற ஆங்கிலப் படத்தின் நினைவு வந்தது. திரில்லர் கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!/////

    நல்லது. நன்றி. உங்களுடைய ரசிப்புத் தன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger BLAKNAR said...
    இன்னும் பல சுவையான கற்பனைகளை சேர்த்து கிளைமாக்சை கடைசியில் வைத்திருக்கலாம்....
    எப்படியோ, இன்னிக்கி பாடம் போச்சு, நாளைகாட்சும் உண்டோ?...
    சதா கதையும் பாட்டும் என் கவனத்தை சிதரடிக்கிறது வாத்தியாரே...
    அன்புள்ள ஆர்வகோளாறு மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி./////

    இதுவரை கடந்த 7ஆண்டுகளாக சுமார் 800 பாடங்களை எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படித்தீர்களா?

    ReplyDelete
  9. ////Blogger BLAKNAR said...
    வணக்கம் வாத்தியாரே...
    இன்று எங்கள் குலதெய்வ சாஸ்த வழிபாட்டிற்கு சென்று விட்டேன், quiz 66ஐ miss பண்ணி விட்டேன்... ஆப்படி என்னதான் சமூக பிரச்சனை ஏற்படுமோ இந்த quizஆல், எனக்கு புரியவில்லை... எத்தனையோ புராணங்கள் இறந்தவர்களின் வாழ்கை வரலாறுகள் அவர்களின் மரணத்திற்கு பின்னேதான் எழுத பெற்றுள்ளன(அவர்கள் பிறப்பு இறப்பு நேரம் மற்றும் ரகசியம் உட்பட)
    இந்த வகுப்பறையில் பிரேதங்களை வைத்து பாடம் நடத்த வில்லையே ஒழிய, ஜோதிடமும் டாக்டர் படிப்பு தான், ஆயிரம் நாச விஷேச ஜாதகங்களை பார்த்த பின்புதான் சில யோக, அவ யோகங்களே புரிகிறது...
    இது ஜோதிட டாக்டர் படிப்பு, விருப்பு வெறுப்பு, காழ்புணர்ச்சிக்கு அப்பாற்பட்டது. பெயரை மட்டும் மறைத்து விட்டு உண்மை பதிவை ஏற்றுங்கள். இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ் அவர்களின் வாரிசுகளுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல்தான் அவர்கள் ஜாதகமும். முன் வினை மற்றும் தீய குடும்ப சாபங்களை அறிய நல்ல வழியும் கூட.. இறந்தவர்க்கு எதிர் கால பலன் இல்லை இதை ஏற்றுகொள்கிறேன்.. ஆனால் அதில் கற்றுகொள்வதற்கு ஒன்றுமில்லை என்று எவ்வாறு கூற முடியும்.
    தயவு செய்து அந்த quiz66ஐ எனக்கு ஈமெயில் செய்யுங்கள்.
    blaknar@gmail.com
    அன்புள்ள ஆர்வகோளாறு மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி./////

    இல்லை. பெரியவரின் கடிதத்தில் ஒரு feel இருக்கிறது. அது உண்மையும் கூட. அதனால்தான் பதிவை நீக்கினேன். நீக்கிய பதிவை எதற்காகக் கேட்கிறீர்கள்? வேறு ஜாதகங்கள் இல்லையா என்ன? பின்னால் நிறைய வரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    அதிகமாக குடிப்பது எப்படி தெரியுமா
    அந்த பேயோடு உறவு கொள்வது போல்
    என குடிப்பவர்களுக்காக வந்த கதை
    எப்படியோ இவர்களை திருத்தினால்
    சரி தான்..
    சரி அது பேய் தான் என எப்படி
    அந்த குடிமகனால்
    அறிந்து கொள்ள முடிந்தது..
    இன்னமும் போதை ஏறவில்லை
    இதற்கு வேறு ஏதாவது இருக்கா/////

    கை நீண்ண்ண்ண்டு சுவிட்சை அனைக்கும்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. அப்போது தெரிந்து என்ன பயன்? பேய் விட்டு விடுமா என்ன? அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விட்டு, கதையை நிறைவு செய்தேன்!

    ReplyDelete
  11. சுப்புத்தாத்தாவின் பின்னூட்டங்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே அவர் தயங்காமல் தினசரி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. 800 பாடங்களையும், ஓரளவு படித்து விட்டேன். அனைத்து பாடங்களும் 1,2,3 என்றே தொகுக்கப்பட்டுள்ளது, மேலும் அவை கீழிருந்து மேலாக உள்ளது. படிக்கும் போது புக் மார்க் செய்யும் வசதி இல்லாததால் எதில் நிறுத்தினோம், எங்கு மீண்டும் தொடங்க வேண்டும் என் குழப்பம் வருகிறது. ஓரளவு 200 பாடங்கலாவது படித்திருப்பேன். எல்லா பாடங்களின் தலைப்பு அருமை. இன்னும் தெளிவான index page வைத்து அவற்றை தொகுத்து தாருங்கள்.


    மிக்க நன்றி.

    தவறுகளை என்றும் மன்னிக்கும் வாத்தியாருக்கு மீண்டும் ஒரு வணக்கம்...

    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.

    ReplyDelete
  13. நீங்கள் நீங்கள்தானா? நான் நான்தானா? இது வாத்தியார்தானா? குடும்பக் கதைகள் மட்டும்தான் வாத்தியார் எழுதுவார் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். பல்சுவைகளில் இது திகில்சுவை என்று எடுத்துக் கொள்கிறேன். கதை நன்று.

    ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை. ஏனோ தெரியவில்லை. எனக்கு காதல்/குடும்ப கதைகளை விட இது போன்ற கதைகள்தான் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  14. //பேய் விட்டு விடுமா என்ன? அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விட்டு, கதையை நிறைவு செய்தேன்!//

    பேய் என்றால் கெடுதல் மட்டும்தான் செய்யுமா? இது நல்ல பேயாக இருக்கலாமல்லவா. "பணமெல்லாம் வேண்டாம். நன்றாகக் கம்பெனி கொடுத்தால் போதும்" என்று அந்த பேய் சொன்னதல்லவா. அவன் மனைவி திரும்பி வரும் வரை ஒருவருக்கொருவர் தினமும் பரஸ்பர கம்பெனி கொடுத்துக் கொண்டார்கள். இப்படிதான் நாங்கள் கற்பனை செய்வோம்ல. இன்னும் கற்பனை செய்தோம். ____________ தணிக்கை செய்யப்பட்டு விட்டது.

    ReplyDelete
  15. dear sir....
    கை நீண்டாலும் !!!
    கம்பெனி கொடுத்தால் சரி !!!
    K.சக்திவேல்

    ReplyDelete
  16. ayya,

    Drinks seidhaal enna enna naan seiveno athai ellam
    migavum swarasyamaaga ezhuthiulleergal. Ennai pazhaiya ninaivugalukku kondupoivittu vitteergal. Enakkum intha anubangal adhigam undu. Aanal, matra pen sagavaasathai thavira.

    Thanni adikkumbodhu, 1 quarter or 2 beg podhum endru thaan aarambippom. Adhaimuditha piraguthaan thondrum, Innum oru quarter adithaal nandraaga irukkum endru. Andha idathil thaan naam nam arivai izhakkirom. Ivai anaithaiyum anubavithu (pen sagavaasathai thavira), adipattu tharpothu odhungikondavan naan. Ippozhuthu thaan vaazhkkayin artham purigiradhu. Manaivi matrum Kunzhanthaigalin paasam purigiradhu. Thanni adippavargalukku ore oru vendukol. Mudinthavarai kuraithukkollungal. Avvaaru seidhaal, viraivil adhai niruthavum mudiyum.

    Anbudan,

    Mu.Prakaash.

    ReplyDelete
  17. Twist is very great. unpreditable climax. 1 page is grt.

    ReplyDelete
  18. anbudan vanakkam vaathiyaar ayya

    kathai arumai...!!!naanum browser allam change seithu paarthu vitten .opera..firebox..safari.. mmhum onnum galaxy 2007 varalai.. paarppom.. varum ...enakku nalla vithi irunthaal..

    ReplyDelete
  19. /////Blogger kmr.krishnan said...
    சுப்புத்தாத்தாவின் பின்னூட்டங்களுக்கு நான் பதில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே அவர் தயங்காமல் தினசரி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.////

    யாரையும் நாம் கட்டாயப் படுத்த முடியாது. அவர் விருப்பம்போல் செய்யட்டும். நானும் அவருடைய பின்னூட்டங்களை வரவேற்கிறேன். பின்னூட்டங்கள் டானிக் போல. அவர் அனுபவஸ்தர். அவருடைய பின்னூட்டங்கள் சிறந்த மருத்துவர் கொடுக்கும் டானிக்கைப் போல இருக்கும் என்பது என் கருத்து!

    ReplyDelete
  20. ////Blogger BLAKNAR said...
    800 பாடங்களையும், ஓரளவு படித்து விட்டேன். அனைத்து பாடங்களும் 1,2,3 என்றே தொகுக்கப்பட்டுள்ளது, மேலும் அவை கீழிருந்து மேலாக உள்ளது. படிக்கும் போது புக் மார்க் செய்யும் வசதி இல்லாததால் எதில் நிறுத்தினோம், எங்கு மீண்டும் தொடங்க வேண்டும் என் குழப்பம் வருகிறது. ஓரளவு 200 பாடங்கலாவது படித்திருப்பேன். எல்லா பாடங்களின் தலைப்பு அருமை. இன்னும் தெளிவான index page வைத்து அவற்றை தொகுத்து தாருங்கள்.
    மிக்க நன்றி.
    தவறுகளை என்றும் மன்னிக்கும் வாத்தியாருக்கு மீண்டும் ஒரு வணக்கம்...
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.////

    பல பதிவுகளைத் திருடிக் கொண்டு போய் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் போல தொகுத்துக் கொடுத்தால் திருடர்களுக்கு இன்னும் வசதியாகிவிடும். சாவிகளை கதவிலேயே வைத்துவிட்டுப் போவதைப்போல!

    ReplyDelete
  21. ////Blogger S.Namasu said...
    கதை மிக அருமை...////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. கதையின் தொடர்ச்சி: பேய் அவனை கொல்றதுனா லைட்டை போட்டுக்கிட்டே கொண்ணுருக்கும். லைட்டை எதுக்கு அமர்த்தனும். அப்போ அது மோகினி பேய். அவன் நினைச்சது எல்லாம் நடந்திருக்கும். எல்லாரும் கவலைய விடுங்க. தண்ணி அடிச்சவனுக்கு கை நீண்டது எங்க தெரியபோகுது. :)

    ReplyDelete
  23. /////Blogger Kirupanandan A said...
    நீங்கள் நீங்கள்தானா? நான் நான்தானா? இது வாத்தியார்தானா? குடும்பக் கதைகள் மட்டும்தான் வாத்தியார் எழுதுவார் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். பல்சுவைகளில் இது திகில்சுவை என்று எடுத்துக் கொள்கிறேன். கதை நன்று.
    ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை. ஏனோ தெரியவில்லை. எனக்கு காதல்/குடும்ப கதைகளை விட இது போன்ற கதைகள்தான் பிடித்திருக்கிறது.////

    எனக்கு மேடைகளில் பேசும்போது கதைகள் சொல்வதிலும் எழுத்தில் கதைகளை எழுதுவதும்தான் மிகவும் பிடிக்கும். கதை எழுதுவது என்னும்போது எல்லாக் கதைகளையும் எழுத வேண்டுமல்லவா? எழுதியிருக்கிறேன். அவ்வப்போது எடுத்துத் தருகிறேன்.
    உங்கள் ரசனை உணர்விற்கு நன்றி!

    ReplyDelete
  24. ///Blogger Kirupanandan A said...
    //பேய் விட்டு விடுமா என்ன? அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விட்டு, கதையை நிறைவு செய்தேன்!//
    பேய் என்றால் கெடுதல் மட்டும்தான் செய்யுமா? இது நல்ல பேயாக இருக்கலாமல்லவா. "பணமெல்லாம் வேண்டாம். நன்றாகக் கம்பெனி கொடுத்தால் போதும்" என்று அந்த பேய் சொன்னதல்லவா. அவன் மனைவி திரும்பி வரும் வரை ஒருவருக்கொருவர் தினமும் பரஸ்பர கம்பெனி கொடுத்துக் கொண்டார்கள். இப்படிதான் நாங்கள் கற்பனை செய்வோம்ல. இன்னும் கற்பனை செய்தோம். ____________ தணிக்கை செய்யப்பட்டு விட்டது./////

    நீங்கள் கற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ”கம்பெனி கொடுத்தால் போதும்” என்ற வரியைச் சேர்த்து பேயை நல்ல பேயாகக் காட்டியுள்ளேன்!

    ReplyDelete
  25. /////Blogger Sakthivel K said...
    dear sir....
    கை நீண்டாலும் !!!
    கம்பெனி கொடுத்தால் சரி !!!
    K.சக்திவேல்////

    அடடா, என்ன ஒரு பக்குவம்! நன்றி சக்திவேல்!

    ReplyDelete
  26. /////Blogger Muthukrishnan Prakash said...
    ayya,
    Drinks seidhaal enna enna naan seiveno athai ellam
    migavum swarasyamaaga ezhuthiulleergal. Ennai pazhaiya ninaivugalukku kondupoivittu vitteergal. Enakkum intha anubangal adhigam undu. Aanal, matra pen sagavaasathai thavira.
    Thanni adikkumbodhu, 1 quarter or 2 beg podhum endru thaan aarambippom. Adhaimuditha piraguthaan thondrum, Innum oru quarter adithaal nandraaga irukkum endru. Andha idathil thaan naam nam arivai izhakkirom. Ivai anaithaiyum anubavithu (pen sagavaasathai thavira), adipattu tharpothu odhungikondavan naan. Ippozhuthu thaan vaazhkkayin artham purigiradhu. Manaivi matrum Kunzhanthaigalin paasam purigiradhu. Thanni adippavargalukku ore oru vendukol. Mudinthavarai kuraithukkollungal. Avvaaru seidhaal, viraivil adhai niruthavum mudiyum.
    Anbudan,
    Mu.Prakaash.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. ////Blogger Karthikraja K said...
    Twist is very great. unpreditable climax. 1 page is grt.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. ////Blogger hamaragana said...
    anbudan vanakkam vaathiyaar ayya
    kathai arumai...!!!naanum browser allam change seithu paarthu vitten .opera..firebox..safari.. mmhum onnum galaxy 2007 varalai.. paarppom.. varum ...enakku nalla vithi irunthaal../////

    சரி கவலையை விடுங்கள். வேறு வழியில் உங்களுக்கு உதவுகிறேன். மின்னஞ்சல் வரும் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  29. உலகெங்கும் பள்ளி மாணவர்களை தன கதை சொல்லும் திறனால் கட்டிப்போட்ட எங்கள் (மாணவர்களின்) அன்புக்குரிய திரு. ரஸ்கின் பாண்டு அவர்கள் எழுதிய The trouble with Jins என்ற சிறுகதையை நினைவூட்டுகிறது, இக்கதை.

    நிற்க.
    கற்பு நெறி தவறியவனுக்கு தண்டனை கிடைத்ததா? ;)

    நன்றி,
    புவனேஷ்

    ReplyDelete
  30. வாத்தியாருக்கு வணக்கம்.

    இப்பவும் உங்கள் பதிவுகளை மிக எளிதாகவே திருட முடிகிறது. அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லை. பதிவுகள் திருடு போகாமல் இருக்கத்தான் index page இப்படி உள்ளது என சமாளிக்கிறீர்கள். உங்களது ஓட்டு மொத்த blogஐயும் download செய்யமுடியும் என்பது என் கருத்து.

    சிதறிக்கிடந்த வேதத்தை வேதவியாசர் தொகுத்து வழங்கினார். அதனால் தவறான கற்பிதங்கள்/அர்த்தங்கள்/தான்தோன்றி விளக்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    4வேதத்தின் தன்மையும் கெடாமல் பாதுகாக்கப்பட்டது. கால மாற்றத்தினால் அர்த்தங்கள் மருகவே, அதை போக்க மத்வர், ஸ்ரீமத் ராமானுஜர் தோன்ற முடிந்தது.

    திருடனுக்கு பயந்து சாவியை மறைக்க முற்பட்டு, இப்போது சாவியே தொலையும் நிலை ஆகிவிட்டது.

    எங்கு படித்தாலும் உங்களுடைய எழுத்து நடையை நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். copy & paste செய்து உங்கள் பதிவுகளை திருடினாலும், அந்த திருடனால் என்னை போன்ற கத்துகுட்டியின் குறுக்கு கேள்விக்கு பதில் தர இயலாது. உண்மை பதிவரை சாமானிய வாசகனால் கண்டறிய முடியும். நம்புங்கள்.

    ஆகவே திருடனை கண்டு வாத்தியார் கவலை பட தேவை இல்லை.

    நீங்கள் தாராளமாகவே index page தயார் செய்யலாம். திருடனுக்கு என்னை போன்ற கத்துகுட்டிகள் பாடம் சொல்லி கொடுப்போம்.

    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.

    ReplyDelete
  31. vanakam sir,

    nice story fwar..........
    due to 12am

    ReplyDelete
  32. தாங்கள் எழுதிய பேய் கதை மிகவும் நன்றாக இருந்தது.
    இருட்டில் பெண் தனியாக நின்று கொண்டு இருக்கும் பொழுது பேய் என்று தெரியவில்லையா.
    சிந்திக்க சில ...

    ReplyDelete
  33. /////Blogger பெரியவாதாசன் said...
    உலகெங்கும் பள்ளி மாணவர்களை தன கதை சொல்லும் திறனால் கட்டிப்போட்ட எங்கள் (மாணவர்களின்) அன்புக்குரிய திரு. ரஸ்கின் பாண்டு அவர்கள் எழுதிய The trouble with Jins என்ற சிறுகதையை நினைவூட்டுகிறது, இக்கதை.
    நிற்க.
    கற்பு நெறி தவறியவனுக்கு தண்டனை கிடைத்ததா? ;)
    நன்றி,
    புவனேஷ்//////

    இது கலியுகம். ஆகவே அவனுக்கு என்ன தண்டனை கிடைத்திருக்கும்? அதையும் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!

    ReplyDelete
  34. /////Blogger BLAKNAR said...
    வாத்தியாருக்கு வணக்கம்.
    இப்பவும் உங்கள் பதிவுகளை மிக எளிதாகவே திருட முடிகிறது. அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லை. பதிவுகள் திருடு போகாமல் இருக்கத்தான் index page இப்படி உள்ளது என சமாளிக்கிறீர்கள். உங்களது ஓட்டு மொத்த blogஐயும் download செய்யமுடியும் என்பது என் கருத்து.
    சிதறிக்கிடந்த வேதத்தை வேதவியாசர் தொகுத்து வழங்கினார். அதனால் தவறான கற்பிதங்கள்/அர்த்தங்கள்/தான்தோன்றி விளக்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
    4வேதத்தின் தன்மையும் கெடாமல் பாதுகாக்கப்பட்டது. கால மாற்றத்தினால் அர்த்தங்கள் மருகவே, அதை போக்க மத்வர், ஸ்ரீமத் ராமானுஜர் தோன்ற முடிந்தது.
    திருடனுக்கு பயந்து சாவியை மறைக்க முற்பட்டு, இப்போது சாவியே தொலையும் நிலை ஆகிவிட்டது.
    எங்கு படித்தாலும் உங்களுடைய எழுத்து நடையை நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். copy & paste செய்து உங்கள் பதிவுகளை திருடினாலும், அந்த திருடனால் என்னை போன்ற கத்துகுட்டியின் குறுக்கு கேள்விக்கு பதில் தர இயலாது. உண்மை பதிவரை சாமானிய வாசகனால் கண்டறிய முடியும். நம்புங்கள்.
    ஆகவே திருடனை கண்டு வாத்தியார் கவலை பட தேவை இல்லை.
    நீங்கள் தாராளமாகவே index page தயார் செய்யலாம். திருடனுக்கு என்னை போன்ற கத்துகுட்டிகள் பாடம் சொல்லி கொடுப்போம்.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி./////

    ஜோதிடம் தனிப்பட்ட சொத்து அல்ல! எல்லோருக்கும் பொதுவான சொத்து. பிறக்கும்போது யாரும் ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. அனைவரும் கற்றுத் தேர்கிறார்கள். அத்துடன் அனுபவ அறிவும் பெற்றவர்களால்தான் அக்கலையில் பிரகாசிக்கமுடியும்.

    ஒருவர் தன் அரிய நேரத்தைச் செலவழித்துத் தன் நடையில் எழுதியவற்றை கட் & பேஸ்ட் செய்து கொண்டு போய் தாங்கள் எழுதியதைப் போல பதிவு செய்யும் மன நோயாளிகளை மறந்துவிடலாம். ஆனால் திருட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? மனவலி இருக்காதா?

    இணையம் என்பது ஒரு திறந்தவெளி. இங்கே எழுதுவது என்பது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதைப் போன்றது, கவலைப் பட்டால் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதுவேனா?

    பதிவுகள் அனைத்தும் மொத்தம் (3,000 பக்கங்கள்) முறைப்படி தொகுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், ஏன் அதற்கு முன்பாகவே எனது நூல்களின் 3 பாகங்கள் வெளிவர உள்ளன. அப்போது நீங்கள் படிக்கலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  35. ////Blogger sundari said...
    vanakam sir,
    nice story fwar..........
    due to 12am/////

    காய்ச்சலா? அல்லது என்ன சொல்கிறீர்கள்? எதுவாக இருந்தாலும் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் சகோதரி!.

    ReplyDelete
  36. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    தாங்கள் எழுதிய பேய் கதை மிகவும் நன்றாக இருந்தது.
    இருட்டில் பெண் தனியாக நின்று கொண்டு இருக்கும் பொழுது பேய் என்று தெரியவில்லையா.
    சிந்திக்க சில .../////

    தண்ணியடித்துவிட்டு மப்பில் வந்து கொண்டிருந்தவனுக்கு, அது தெரிய வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் நண்பரே?

    ReplyDelete
  37. சார் வணக்கம்,
    பேய் கையை நீட்டிச்சா ரொம்ப பயமா இருந்தது ரொம்ப நல்லாயிருந்தது இன்னும் இந்த மாதரி கதை வேண்டும் அப்புறம் ஜாதகபுத்தகம் வேண்டும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com