எதை எதை அவன் கொடுத்தான்!
பக்தி மலர்
இன்றைய பக்திமலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகன் பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
ஞானம் கொடுத்தான் ... மிக நல்லதெல்லாம் கொடுத்தான்
கானம் தொடுக்க எந்தன் ... கவிதைக்கு உயிர் கொடுத்தான்
குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
ஆவினன்குடியில் வீற்றிருக்கும் அழகனவன்
(ஞானம் கொடுத்தான் ... )
பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
அமுத ... பானம் கொடுத்தான் ... அதில் பாலொடுதேன் மடுத்தான்
பஞ்சாமிருதம் கொடுத்தான் ... நெஞ்சாரவே நிலைத்தான்
குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
பேரன்பு வடிவாக வந்த அமரனவன்
(ஞானம் கொடுத்தான் ... )
மோனம் கொடுத்தான் ... என்னை முற்றும் நான் உணர
முன்னே வேல் விடுத்தான் ... பின்னே மயில் தொடர
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான் - குமரன்
ஆனமட்டும் எனக்கு ... அறிவுறைகள் கொடுத்தான்
ஆறெழுத்தை ஓதி ... ஆறுதலைக் கொடுத்தான்
குன்றக்குடி வாழ்கின்ற குமரனவன்
என்னை சந்ததமும் காத்து நிற்கும் கந்தன் குகன்
(ஞானம் கொடுத்தான் ... )
கானம் தொடுக்க ... எந்தன் கவிதைக்கு உயிர் கொடுத்தான்
(ஞானம் கொடுத்தான் ... ).
பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்.
------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================
ஒம் சரவணபவாய நம:
ReplyDeleteஒம் சரவணபவாய நம:
ஒம் சரவணபவாய நம:
Murugane senthil murugane mayon marumane easan magane oru kai mugan thambi un thandai kal patri kai tholuven naan
ReplyDeleteமுருகா..
ReplyDeleteமுருகா..
நல்ல பாடல் பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஒம் சரவணபவாய நம:
ஒம் சரவணபவாய நம:
ஒம் சரவணபவாய நம://////
ஆமாம். முருகப்பெருமானின் பக்தர்களுக்கான மந்திரம் இது. நன்றி நண்பரே!
//////Blogger Regunathan Srinivasan said...
ReplyDeleteMurugane senthil murugane mayon marumane easan magane oru kai mugan thambi un thandai kal patri kai tholuven naan////
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே உன் தண்டைக்கால் எப்போதும்
நம்பியே கைதொழுவேன் நான்!
- நக்கீரர் எழுதிய திருமுறுகாற்றுப்படை பாடல்களில் ஒன்று. வெண்பா இலக்கணத்திற்கு நல்ல சான்றாகத் திகழும் பாடல் இது!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா..
முருகா..////
உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!
//////Blogger சே. குமார் said...
ReplyDeleteநல்ல பாடல் பகிர்வு...
வாழ்த்துக்கள் ஐயா...////
நல்லது. நன்றி நண்பரே!